Advertisement

*19*

கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே!

நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே!!

“சர் நீங்க கேட்டது ரெடி பண்ணியாச்சு!!” மதன் ஒரு கவரை கொண்டு வந்து இனியனின் டேபிளில் வைத்தான்.

“குட்! நீங்க ஒருமுறை செக் பண்ணீங்களா? டு யூ ஆல் ஹேவ் எனி டவுட்!?” கவரை திறந்து உள்ளிருந்த டிவிடியை எடுத்தான் இனியன்.  

முஸ்தபா, “அமைச்சர் வீட்டுல கொலை நடந்த அன்னைக்கான சிசிடிவி புட்டேஜ் ஒன்னுமே கிடைக்கல சர்! யாரோ எரேஸ் பண்ணிட்டாங்க!” என்றான்.

இனியன், “கொலை பண்றவன் கேமராவ ஆன் பண்ணி வச்சுட்டா பண்ணுவான்?! நான் உங்ககிட்ட கேட்டது லாஸ்ட் ஒரு மாசத்துக்கான புட்டேஜ்! இருக்கா?” என்றிட, அவர்கள் எடுத்து வைத்த காட்சிகளை ஓட விட்டனர். பாஸ்ட் பார்வேர்ட் மூலம் அத்தனை காட்சிகளையும் சில மணி நேரங்களில் பார்த்து முடித்தவன், “நிறைய பேரு வீட்டுக்கு வந்து போக இருந்துருக்காங்க, கட்சிக்காரங்க, தொண்டர்கள், தொழிலதிபர்கள்ன்னு!! ஆனா அடிக்கடி அதிகமா வந்து போன சிலர் இருக்காங்க, முதல்ல அவங்களை லிஸ்ட் அவுட் பண்ணுங்க!!” இனியன் சொன்னவுடன் அதற்கெனவே காத்திருந்ததை போல ஒரு பேப்பரை அவன் முன் நீட்டினாள் ஐஷூ.

அதை பார்த்தவனின் புருவங்கள் வியப்பில் உயர்ந்தது.      

ஐஷூ, “சர் இதுல்லாம் அமைச்சரை கடந்த ஒரு மாசத்துல அடிக்கடி பார்க்க வந்தவங்களோட லிஸ்ட்! அவங்க பேரு, அட்ரெஸ் எல்லாம் அல்மோஸ்ட் கலேகட் பண்ணிட்டோம்! இன்னும் கொஞ்சம் டைம் குடுத்தா அவங்க எல்லோரும் எதுக்காக அமைச்சரை பார்க்க வந்தாங்கன்னு விசாரிச்சு சொல்லிடுவோம்!!” என்றிட, “என்னமா திடீர்னு இப்படி மாறிட்டீங்க?” விளையாட்டாய் கேட்டாலும், அவள் கொடுத்த ரிப்போர்டை பார்த்தவன் மெச்சுதலோடு “கிரேட் ஜாப்” என்றான்.  

சிவா, “இனி நீங்க எள்ளுன்னா எண்ணையா இருக்கனும்ன்னு ரேசல்யூஷன் எடுத்துருக்கோம் சர்!!” சல்யூட் அடித்து விரைப்புடன் சொல்ல, “நான் சொல்றதை மட்டும் செய்கப்பா போதும்!!” என்றான் பயந்தவன் போல்.

ரிப்போர்டை சிறிது நேரம் பார்த்தவனின் முகத்தில் இருந்து எதுவுமே படிக்க முடியவில்லை. “கடைசி ரெண்டு நாள்ல வந்தவங்களை காட்டுங்க!” இனியன் சொன்னதும் மதன் காட்சிகளை ஓட விட, முழுமையாய் அதை பார்த்தவன், ஓரிடத்தில், நிறுத்த சொன்னான். 

“இது யாரு? காவி ட்ரெஸ்ல கூட்டத்தோட வீட்டுக்குள்ள போறாரு?” அவன் கேட்டதும், “ஏதோ சாமியார் போல இருக்கு சர்! அவர பத்தின எந்த தகவலுமே கிடைக்கல, அவர் வந்த கார் கூட அவரோடது இல்ல!” சிவா சொல்ல, அவன் முகம் சற்று தெளிந்தது. 

இனியன், “அப்போ நம்ம அந்த சாமியார் பத்தி தான் முதல்ல விசாரிக்கணும்!! என்றதும், “சர் சாமியார விசாரிச்சா என்ன கிடைக்க போது?!!” என்றாள் ஐஷூ. 

“எது வேணாலும் கிடைக்கலாம்! ஏன் அமைச்சரை கொன்னது கூட அவரா இருக்கலாம், நம்ம எல்லாத்தையும் சந்தேகத்தோட தான் பார்க்கணும்!”  லிஸ்டில் ஏதோ தேடினான். பின்னே, “கருப்பசாமி….” என வாசிக்க, “சர் அவன் ஒரு ப்ளம்பர், ஏதோ ரிப்பேர் வேலைக்காக போயிருக்கான்!” என்றான் முஸ்தபா.

“அவனையும் விசாரிங்க, என்ன வேலை செஞ்சு குடுத்தான்னு கேளுங்க!!!” என்ற இனியன், எழுந்துக்கொள்ள, “கேஸ் கோர்டுக்கு வர இன்னும் பத்தே நாள் தான் இருக்கு!! அதுக்குள்ள நம்மளால ஆதாரங்களை கலேக்ட் பண்ணிட முடியுமா?” மதன் ஐயத்துடன் கேட்க, மெலிதாய் சிரித்தவன், “பத்தே நாள் இல்ல!! பத்த்த்து நாள் இருக்கு! நம்பிக்கையோட இருந்தாதான் எதுவுமே நடக்கும் மதன்!!” என்றான் இனியன்.

மேலும், “எல்லாரும் ஆதாரத்தை வச்சு குற்றவாளியை தேடுவாங்க!! நாம குற்றவாளி யாருன்னு தெரிஞ்சு ஆதாரத்தை தேடுறோம்!!” என்று மென்னகை செய்தான்.

“சர், உங்களுக்கு ஜெயானந்தன் கால் பண்ணுன ஒரே காரணத்துக்காக அவர்தான் குற்றவாளின்னு எப்டி சொல்றீங்க?” என்றான் முஸ்தபா.

“அவன் அண்ணனை யார் கொன்னதுன்னு கண்டுபிடிக்குறதுக்கு அவனே தடையா நிக்குறான்னா வேற என்ன காரணமா இருக்க முடியும்?” இனியனை முந்திக்கொண்டு பதில் சொன்னான் சிவா.

ஐஷூ, “நிலா மேம் சொன்னதை என்னால நம்பவே முடில சர்! அமைச்சரே தன்னோட குடும்பத்தை கொன்னுருக்காரு கேட்டப்போ கனவு தான் காணுறேனோனு நினைச்சேன்!!!”

சிவா, “சர், மேடம்க்கு உதவி செஞ்சதா சொன்ன அந்த குடிகாரனை விசாரிச்சா நமக்கு ஏதாது டீடைல்ஸ் கிடைக்கும்ல?”

முஸ்தபா, “அவன் ஏரியால போய் விசாரிக்கவா சர்!?”

தலையை இடவலமாக ஆட்டிய இனியன், “நீங்க தேடுனாலும் அவன் கிடைக்க மாட்டான்!!” என்றுதோடு அவர்களை ‘ஏன்?’ என மறுகேள்வி கேட்க விடாமல், “அந்த சாமியார் போட்டோவ நம்ம ஸ்டேட் அக்யூஸ்ட் லிஸ்ட்லயும் மேட்ச் பண்ணி தேடுங்க!! கிடைச்சாலும் கிடைக்கலாம்” தன் யூகத்தை சொல்லிவிட்டு அங்கிருந்து  மறைந்தான்.  

தன் வீட்டில் எரிமலை குழம்பாய் கனன்றுக்கொண்டிருந்தார் ஜெயானந்தன். மேலிடத்தில் வரும்தேர்தலுக்கான எம்.பி சீட்டு அவருக்கு வழங்க போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்தும் அவர் கனல் குன்றவில்லை.  

“என்னா தலீவா! இம்மா ரிஸ்க் எடுத்து டகால்ட்டி பண்ணி ஒருவழியா எம்.பி சீட் வாங்கியாந்தா, அந்த சந்தோசமே உன் முகத்துல இல்லீயே!” அவரை சுற்றி நின்றிருந்த ஆஜானுபாகுக்களில் ஒருவன் கேட்க, 

“சும்மா இருடா, அவரே கோவமா இருக்காரு!!” என்று அடக்கினார் குமரேசன், ஜெயானந்தனின் பி.ஏ.

“உன் மொவத்துல சந்தோசத்தை பாக்கனும்னு தானே இவ்ளோவும் பண்ணுனோம், அப்பவும் இப்படியே இருந்தியாக்கா, எங்களுக்கு நோவாகுது தலீவா!” –இன்னொருவன்.

ஜெயானந்தன், “முழுசா சிரிக்க முடியாம ஒரு கொசு என்னை தொல்லை பண்ணுது!!!” 

“யானையவே சாச்சுட்டோம் உனக்காவ, கொசு எம்மாத்ரம்? ‘ம்ம்’னு சொல்லு தலீவா, நசுக்கிடுறோம்!!” விசுவாசமாய் சொன்னவனை அர்த்தமாய் நிமிர்ந்து பார்த்தார் ஜெயானந்தன். அவர் கண்கள் சொன்ன மொழி வார்த்தையின்றி அர்த்தம் பெறப்பட்டது. 

***

நடுக்கூடத்தில் சிந்தனை சிற்பியாய் போஸ் கொடுத்து அமர்ந்திருந்தான் கோகுல். அவனுக்கருகே இருந்த இனியனும் அவனுக்கு குறையாமல் போஸ் கொடுக்க, ‘யார் உண்மையில் சிந்தனையில் உள்ளனர்’ என கண்டறிவதே சிரமமாய் போனது. அந்த வார ஆர்டிகளுக்கான தொகுப்பை நிலா கோகுலிடம் கொடுத்திருக்க, அதை வாங்கி படித்தவன் சிந்தனையில் மூழ்கினான். அதற்க்கு முன்பிருந்தே இனியன் ஏதோ யோசனையில் இருக்க, அவன் சிந்திப்பது நிச்சயமாய் வழக்கு சார்ந்தது அல்ல.

“ஏய் என்னடா போஸ் குடுத்துட்டு இருக்க?” நிலா கோகுலை அதட்ட, “இல்ல நிலா உனக்கு அக்சிடென்ட் ஆனப்போ நீ ஹெல்மெட் போட்டுருந்த, அதனால தலைல அடிபடலன்னு நினச்சு டாக்டர்ஸ் டெஸ்ட் பண்ணல போல! ஐ திங்க் உள்காயம் ஏதும் ஆகிருக்குமோ?” படு சீரியசாய் பேசினான் கோகுல்.

அவன் சொல்ல வருவதன் அர்த்தம் உணர்ந்த இனியன், சிரித்து விடாமல் இருக்க முயற்சிக்க, நிலாவோ, “எதுக்குடா லூசு மாறி சம்பந்தம் இல்லாம பேசுற?” என்றாள் கடுப்பாய்.

“நீ லூசு மாறி எழுதிருக்குறதை விடவா நான் லூசா பேசுறேன்?” –கோகுல்.

“அப்போ என்னை லூசுங்குரியா? நான் பைத்தியமாடா? நான் மென்டலா? சொல்லுடா சொல்லு!!!” அவன் தலைமுடியை கொத்தாய் பிடித்து ஆட்டிக்கொண்டே அவள் உறும, “கரெக்டு! பைத்தியம்னா இப்டிதான் பண்ணணும்!!” அடங்காமல் வாயை விட்டான் கோகுல். 

இன்னும் கோவமானவள், கையில் கிடைத்ததை எடுத்து அவனை அடிக்க போக, அவன் தப்பி ஓட சிறிது நேரத்தில் வீடே கலவரமானது. கோவிலுக்கு சென்றிருந்த வேணியும் தேவியும் இன்னமும் வீட்டிற்க்கு வராததால் தனியாளாய் நிலாவை அடக்க திண்டாடிக்கொண்டிருந்தான் இனியன். ஒரு கட்டத்தில் அவள் ஓய்ந்து போய், “பாரு அத்து, அவன் என்னை பைத்தியம் சொல்றான்!” சிறுகுழந்தையாய் சிணுங்கிக்கொண்டே இனியனின் தோள் சாய்ந்த நிலாவை ஆதரவாய் அணைத்துக்கொண்டான்.

“விடுடா குட்டி, அவன்தான் பைத்தியம்” இதில் சமாதானம் வேறு. அக்காட்சியை கண்ட கோகுலுக்கு மனதில் சந்தோஷ சாரல் அடித்தாலும், கர்மமே கண்ணாய், “அமைச்சரே அவர் குடும்பத்தை கொன்னுட்டாருன்னு எழுதிருக்க! இந்த நியூஸ் வெளில வந்தா எவ்ளோ பெரிய பிரச்சனை கிளம்பும் தெரியுமா? எல்லா டிவிலயும் மேடை போட்டு விவாதம் பண்ணுவானுங்க, ‘எந்த ஆதாரத்தை வச்சு இப்படி எழுதுனீங்கன்னு’ கேட்டு நம்ம ஆபிஸ்க்கு போலிஸ் கூட்டம் கூட்டமா வரும்! அந்த ஜெயானந்தன், சமூக அவமதிப்பு, மானநஷ்டம்ன்னு இஷ்டத்துக்கு நம்ம பத்திரிக்கை மேல கேஸ் போடுவான்! அடுத்த வாரமே அட்டைபடத்தில ‘ரிப்போர்ட்டர் இதழி பகிரங்க மன்னிப்பு’ன்னு செய்தி போட்டாகனும்! இதெல்லாம் நமக்கு தேவையா சொல்லு!!” ஒரே மூச்சில் கொட்டினான் கோகுல்.

நிலா, “அதுக்காக தெரிஞ்ச உண்மையை மறைக்க சொல்றியா?” 

“உண்மையை கண்டுபிடிக்கவும், நிரூபிக்கவும் போலிஸ் இருக்கு, சிபிஐ இருக்கு! நீ எதுக்கு அதிகபிரசங்கிதனமா நடந்துக்குற? முதல்ல யாருக்கும் சொல்லாம ஒரு குடிகாரன நம்பி அமைச்சர் வீட்டுக்கு திருட்டுத்தனமா போனதே தப்பு! அதுக்கே உன்னை நாலு அரை விட்டுருக்கனும்!” இதுநாள் வரை அவன் இந்த தொவனியில் பேசியதே இல்லை என்பதை நிலாவின் முகமே இனியனுக்கு காட்டிகொடுத்தது.

அவனை ஒன்றும் சொல்லாத நிலா, முகத்தை அப்பாவியாய் வைத்துகொண்டு, சிறிய விசும்பலோடு இனியனை நிமிர்ந்து பார்த்தாள். “பாரு அத்து, உன்முன்னாடியே உன் பொண்டாட்டியை அடிச்சுடுவேன்னு சொல்றான்!!” உதட்டை சுருக்கி, பாவமாய் அவன்மீது குற்றம் சொல்ல, கோகுலுக்கு ‘சுருக்’கென்றிருந்தது.

என்னதான் உற்ற தோழியாய் இருந்தாலும், அவள் நலம்வேண்டி, அக்கறையினாலே கோவம் கொண்டு பேசியிருந்தாலும் ஒருத்தனுக்கு மனைவியாய் அவள் ஆனபின்னே, உரிமை கொண்டு பேசவதையே கணவனாய் வந்தவன் விரும்பமாட்டான் என்றபோது, இவன் உரிமையாய் அதட்டியதை எப்படி விரும்புவான்? இத்தனைக்கும் அவன் நடத்தையை நிலாவே புரிந்துக்கொள்ளாது இனியனிடம் குறை படிக்கும்போது, மனதின் ஓரம் வலித்தது அவனுக்கு. 

இனியன் கடிந்துகொள்வான் என கோகுல் காத்திருக்க, அவன் நினைத்ததுபோலவே கடிந்துகொண்டான், ஆனால் நிலாவை!!

“அவன் சொல்றதுல என்ன தப்பு? நீ செஞ்சது சரியா? சொல்லு? உனக்கு அக்சிடென்ட் ஆனதால சும்மா விட்டேன்! இல்லான அவன் சொன்ன நாலு அரை அன்னைக்கே உனக்கு கிடைச்சுருக்கும், என் கையால!!” இனியனும் சொல்லிவிட மூக்கை சுருக்கிக்கொண்டு தன் அறைக்குள் சென்றாள் நிலா.

கோகுல் நின்ற இடத்தை விட்டு நகரவில்லை. “நீ வா கோகுல், அவ கொஞ்ச நேரத்துல சரியாகிடுவா!!” இனியன் இலகுவாய் பேச, கோகுலுக்கு தான் சங்கடமாய் போனது. மீண்டும் அவன் அழைக்க, பால்கனியில் சென்று அவனோடு நின்றவன் சற்று தயங்கிக்கொண்டே, “சாரி பாஸ்! கொஞ்சம் அதிகமா பேசிட்டேன், இனி பார்த்து இருந்துக்குறேன்!” சொல்லிவிட, “நீ சரியா தானே பேசுன?” என்றான் இனியன்.

“இருந்தாலும் இப்போ அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு, நீங்க இருக்கீங்க! இப்பவும் நான் முன்னமாறியே உரிமை எடுத்துக்கிறது தப்பு பாஸ்!” 

அவன் சொன்னது இனியனுக்கு அபத்தமாய் தோன்றியதோ, சற்று சத்தமாய் சிரித்தான்!

“கோகுல்…..!! எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா! அவளை உனக்கு நான் கல்யாணம் செஞ்சு குடுக்குறேன்!!” இனியன் சொல்ல, பிரகாசமான கோகுல் முகமெல்லாம் பல்லாய், “உண்மையாவா பாஸ்!!!” என்றான்.         

அவனை முறைத்த இனியன், “எனக்கு தங்கச்சி இல்ல!!” என்றதும் புஷ்சென்றானது கோகுலுக்கு. “கதையை மட்டும் கேளு! என் தங்கச்சியை உனக்கு நான் கட்டிகுடுத்த பின்னாடி அவளை நான் திட்டவோ, அவகிட்ட சண்ட போடவோ எனக்கு உரிமை இல்லன்னு நீ சொல்லுவியா?” இனியன் கேட்க உடனே, “அதெப்படி பாஸ் சொல்லுவேன், எனக்கு கட்டிகுடுத்தாலும் அவ உங்க தங்கச்சி தானே! அண்ணன்குற உரிமை உங்களுக்கு எப்பவும் உண்டு!” என்றிட, “அப்போ நான் மட்டும் நீ நிலாவை திட்டுனா கோச்சுப்பேனா?” என்றான் இனியன்.

கோகுலுக்கு வார்த்தை எழவில்லை. கண்கள் வேர்த்திடும் நிலையில் இருந்தான். 

அவன் தோள் மேல் ஆதரவாய் தன் கரத்தை படர விட்ட இனியன், “நீ அவளுக்கு வெறும் நண்பனா மட்டும் இல்லன்னு எனக்கு தெரியும்! நீ வேலைல எவ்ளோ பிசியா இருந்தாலும் உன் ஒரு கண்ணு அவமேல தான் இருக்கும்! இத்தனை வருஷம் யார் பாதுகாப்பும் இல்லாம ஆதரவும் இல்லாம தனியாள வாழ்ந்துருகோம்ன்னு அந்த லூசு நினச்சுட்டு இருக்கும்!  ஆனா உண்மை அது இல்லையே! அவளுக்கு எல்லா விதத்துலயும் பக்கபலமா நீ இருந்துருக்க! இந்த கேஸ் அவ எடுக்குறான்னு தெரிஞ்சதும் அவ ஆசையை கெடுக்காம, அவளுக்கு துணையா, ஒரு அரணா நீ நின்னா பாரு!!! இதுக்குமேல ஒரு நல்ல பிரண்டு என்னடா செய்ய முடியும்!!!” என்றிட அவனை கட்டிக்கொண்டான் கோகுல். உணர்ச்சிமிகுதியில் அவன் கண்கள் கசிந்தது.

அவனை அணைத்தவாக்கிலே, “நிலாக்கு பார்த்த மாப்பிளை வேலைக்கு போகலைன்னு தெரிஞ்சதும், நிலாவை விட, தேவி அம்மாவ விட வருத்தப்பட்டது நீதானே?  என்னதான் தெரிஞ்ச குடும்பம்ன்னு தேவிம்மா சொல்லிருந்தாலும், எங்க ஊருக்கே ஆள் விட்டு என்னைபத்தி விசாரிச்சவன் தானே நீ!!?” கிண்டலாய் முடிக்க, “பாஸ்!!! உங்களுக்கு…..!?” மெலிதாய் அதிர்ந்து பின் அசடு வழிந்தான் கோகுல். 

அந்நேரம் தன் அறையில் இருந்து வெளிவந்த நிலா, இவர்கள் அணைத்தவாக்கில் நின்று பேசிக்கொண்டிருக்கும் காட்சியை கண்டதும் தன்னைமீறி, “ச்சீய்” என்றாள் சத்தமாய். அதில் இருவரும் அவள் புறம் திரும்ப, உதடு முனகலாய், ‘பொண்டாட்டியை கட்டிபிடிக்க சொன்னா இழுத்து போர்த்திட்டு தூங்குற, இங்க இந்த பன்னியை பிடிச்சுகிட்டு நிக்குற!’ முனகியவள் இறுதியாய் ‘த்தூ’ என்று சத்தமாய் துப்பிவிட்டு நகர்ந்தாள்.

கோகுல், “என்னமோ சொன்னாலே!?”  

இனியன், “என்ன சொன்னான்னு சரியா புரியல! ஆனா என்னை கேவலமா திட்டிருப்பான்னு மட்டும் புரியுது!!” என்று சரியாய் சொன்னான்.

கோகுலிடம் கொடுத்திருந்த பைலை எடுத்துக்கொண்டு வந்த நிலா, “இப்போ இந்த வார ஆர்டிகிள்க்கு என்ன எழுதுறதாம்?” என்றாள். அவள் கேள்வியே இதற்குமுன் தயார் செய்திருந்த தொகுப்பை பதிப்புக்கு கொடுக்க போவதில்லை என மறைமுகமாய் சொல்லிவிட, “அமைச்சர் பொண்டாட்டி சாவும்போது நூறு பவுன் போட்டுருந்தாங்கலாம், ஆனா போலிஸ் அதை பத்தி இதுவரை எதுவுமே சொல்லயாம், அப்போ அந்த நூறு பவும் நகை எங்கே போச்சுன்னு’ இழுத்து இழுத்து நாலு பக்கம் எழுது… இதுவும் சென்சேஷனல் நியூஸ் தான்” என்றான் கோகுல்.  

புசுபுசுவென மூச்சுவிட்டவள், தன் மடிகணினியோடு சென்றுவிட்டாள். இனியன் மெலிதாய் சிரித்துக்கொண்டான்.  

தடைபட்ட பேச்சை தொடர்ந்தான் கோகுல். “தேவிம்மா என்னை சொந்த பிள்ளையாதான் பார்க்குறாங்க பாஸ்! நிலா எவ்ளோ வெறுப்பை காட்டுனாலும் தூக்கி எரிஞ்சு பேசுனாலும் அவளை ‘எப்படியோ போ’ன்னு விட்டு போக தோணல! ஆனா இப்போ ரொம்ப மாறிட்டா பாஸ்! இதே முன்னாடி இருந்த நிலாவா இருந்தா ‘நீ சொன்னதை நான் ஏன் கேக்கணும்? ஐ க்நொவ் வாட் ஐயம் டூயிங்’ன்னு சொல்லிருப்பா!! எனக்கே ஆச்சர்யமா இருக்கு, நம்ம நிலாவா இதுன்னு! எல்லாம் உங்களால தான்!!” உற்சாகாய் சொன்ன அவனை விட்டு தள்ளி சென்றான் இனியன்.

“அவ எப்பவுமே இப்படிதான் கோகுல். நடுவுல அவ மாறிபோனதுக்கு காரணமே நாந்தான்! என்னால பழுதானதை நான்தானே சரி செய்யணும்!? பாதி சரி பண்ணிட்டேன்,  இன்னும் கொஞ்சம் மட்டும் இருக்கு, அதையும் சரியா பண்ணிட்டேன்னா, என்னோட இதழியை எந்த குற்றவுணர்வும் இல்லாம நான் ஏத்துக்குவேன்!”  தன்போக்கில் பேசிக்கொண்டிருந்த இனியனின் பேச்சு கோகுலுக்கு பிடிபடவில்லை. 

“நீங்க என்ன செஞ்சீங்க பாஸ்?” புரியாமல் அவன் கேட்க, பெருமூச்சு விட்டவன், “உனக்கு புரியாது கோகுல் விடு” என்றான். அங்கே பல நிமிடங்களுக்கு அமைதி ஆட்சி செய்தது.

இனியனே மௌனம் கலைத்தான். “நாளைக்கு விடியல் எப்படி இருக்கபோதுன்னு நினைச்சா உள்ளுக்குள்ள பயமா இருக்கு!!”

“ஏன்?”

“நாளைக்கு நிலாவோட பிறந்தநாள்…” வாடிய முகத்துடன் அவன் சொல்ல, “சூப்பர் பாஸ், கல்யாணத்துக்கு பிறகு வர முதல் பிறந்தநாள், கண்டிப்பா பெருசா கொண்டாடனும்” சந்தோசமாய் சொன்னான் கோகுல். ஆனால் அவன் உற்சாகம் துளியும் இனியனை சீண்டவில்லை. 

“அவ கொண்டாட மாட்டா” ஒரு வரியில் இனியன் நிறுத்த, கோகுலிடம் இதுவரை நிலா தன் பிறந்தநாளை சொன்னது கூட இல்லையென்பதால், ‘ஏன் கொண்டாடுவது இல்லை’ என்ற கேள்வி அவனை அறியாமல் வெளி வந்தது.

“நாளைக்கு அவ பிறந்தநாள் மட்டும் இல்ல, அவ அப்பாவோட நினைவுநாளும் கூட” கசந்த முறுவலுடன் இனியன் சொன்னதில் என்ன பதில் சொல்வது என தெரியாமல் நின்றான் கோகுல்.

பின்பு, “அதனால என்ன பாஸ், இப்போதான் நீங்க இருக்கீங்களே! இந்த பிறந்தநாளுக்காது அவ சந்தோஷமா இருக்கட்டும்!!” 

இனியனின் கண்கள் வானில் நிலைகுத்தின. தன் சிகையை அழுந்த கோதியவன், “அவ சந்தோசம் தொலைஞ்சதே என்னால தான்!!” என்றான். 

“புரியல….!!!!”

“அவ அப்பா இறந்ததே என்னால தான்!!!” என்றவன் ஒரு நொடி நிறுத்தி, “அப்டிதான் அவ சொல்லுவா” என்றான். கோகுலுக்கு திக்கு தெரியாத காட்டில் திரிவதை போல இருந்தது. 

Advertisement