Advertisement

*18*

என் கண்ணில் உனைவைத்தே காட்சிகளை பார்ப்பேன்!

ஒரு நிமிடம் உனைமறக்க முயன்றதிலே தோற்றேன்!

நீயே என் இதயமடி! நீயே என் ஜீவனடி!

“என்னை இங்க விட்டுட்டு காலைல கிளம்பி போனவரு இன்னும் வரலை! அவர் சொல்லாமையா நீ சாப்பாடு கொண்டு வந்து குடுத்துருக்க? உண்மைய சொல்லு, இல்லனா ட்ரிப்ஸ் பாட்டில்ல உடைச்சு மூஞ்சில ஊத்திருவேன்!!” கட்டிலில் அமர்ந்தபடியே கோகுலின் சட்டையை கொத்தாய் பிடித்து மிரட்டிக்கொண்டிருந்தாள் இன்பநிலா.

“ஏய் சத்தியமா பாஸ் எங்க போனாருன்னு தெரியாது நிலா, அவர் எனக்கு புருஷனா இருந்தா நான் போகும்போதே எங்க போறீங்கன்னு கேட்டுருப்பேனே!” கோகுல் சொல்ல, அவனை முறைத்தவள், “எனக்கு என்ன பண்ணுவியோ தெரியாது, இனியனை உடனே போய் கூட்டிட்டு வா!!” என்றாள் முடிவாய்.

“எங்க இருக்காருன்னே தெரியாதவர நான் எங்கன்னு போய் தேடுவேன்!?” புலம்ப, அடுத்து அவள் திட்டுவதற்குள் அறையின் கதவு திறக்கப்பட்டது. இனியனை கண்டதுமே, “தெய்வமே!! தெய்வமே! நன்றி சொல்வேன் தெய்வமே!!” தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்ட கோகுல், ‘ஆள விடுறா சாமி’ என அங்கிருந்து தெரித்துவிட்டான்.

உள்ளே வந்தவன், “சாப்டலாமா குட்டி” என்று தட்டில் உணவை வைத்து கொண்டு வந்து அவள் அருகே அமர்ந்தான். முதல் கவளத்தை உருட்டி அவள் வாயருகே கொண்டு செல்ல, இதழ்பிரிக்காமல் அவனையே முறைத்துக்கொண்டிருந்தாள் நிலா.

“ஆ காட்டு”

“எங்க போனேன்னு சொல்லு!!”

“ஐஷூவை பார்க்க போனேன்!” அவள் ‘எதுக்கு?’ என தொடங்கும்முன்னே “பெங்களூர்ல கோச்சிங் கிளாஸ் வச்சுருக்குற மாதிரி சென்னைலயும் ஒரு பிரான்ச் ஆரம்பிக்கனும்ன்னு சொன்னா! அதான் இடம் பார்க்க போயிருந்தோம்!” என்றிட, “சோ அவ இப்போ சென்னைல தான் இருக்காலா?” என்றாள் நிலா.

இனியன், “ஆம்” என்றதும், “எனக்கு டிஸ்சார்ஜ் எப்போ?” என்றாள். “இன்னைக்கு எவனிங்” என இனியன் சொன்னதும், “இன்னைக்கு டின்னருக்கு அவளை இன்வைட் பண்ணு, நான் அவளை மீட் பண்ணனும்!” என்றாள் சற்றும் யோசிக்காமல்.

“ஐயையோ அவ எவனிங்கே பெங்களூர் கிளம்புறா!”

“அப்படின்னா இப்போவே வர சொல்லு, நான் பாக்கணும்!!” அவள் குரலே நான் சொன்னதை செய் என அவனுக்கு உத்தரவிட, வேறுவழியின்றி அவளை டின்னருக்கு அழைப்பதாய் சொன்னான் இனியன்.

உணவு வேளை முடிந்ததும், இறுதியாய் சில பரிசோதனைகளுக்கு பின், மாலை ஐந்து மணிக்கு டிஷார்ஜ் ஆகிக்கொள்ளலாம் என சொல்லப்பட்டது. பில் செட்டில்மென்ட் முடித்து ஆட்டோவில் தங்கள் வீடு நோக்கி பயணமாயினர் இனியனும் நிலாவும்.

“நாளைக்கே வேலைக்கு போணுமா?” இனியன் கேட்க, “கண்டிப்பா போனும்! இந்த வார ஆர்டிகிள் ரெடி பண்ணனுமே! இப்போ வீட்டுக்கு போனதும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு நைட்டே வேலையை ஆரம்பிக்கலாம்ன்னு திங்கிங்!” நிலா சொன்னாள்.

அதற்குமேல் இனியன் பேசவில்லை. வீடு வந்துசேர்ந்ததும், எதிர்வீட்டு மாமி ஆரத்தி எடுத்து, “இதுக்குதான் அடக்கஒடுக்கமா பார்த்து போகணுங்கறது! விழுந்த வேகத்துக்கு ரெண்டு பல்லு போயிருந்தா என்ன ஆகிருக்கும் சொல்லு!!” என்று அறிவுரையை தொடங்க, ‘பல்லு இருந்த இடம் காலியா இருந்துருக்கும்!’ என மனதில் நினைத்தவள், ‘விட்டாள் போதும்’ என தன்னறைக்குள் புகுந்துகொண்டாள்.

மாலை மறைந்து இருள் சூழ, பிரெஷாக குளித்து முடித்து கிளிபச்சை நிற சல்வாரில் வெளியே வந்தாள் நிலா. ஹாலில் இனியன் தன் லேப்டாப்பில் ஏதோ செய்துக்கொண்டிருக்க, அவளை கவனித்த தேவி, “எங்கடி கிளம்பி நிக்குற? இன்னைக்கு தான் வீட்டுக்கே வந்த, அதுக்குள்ள கிளம்பிட்டியா?” என்று ஆரம்பித்தார்.

அவர் பேச்சில் திரும்பிய வேணியும் இனியனும் அதே கேள்வியுடன் அவளை பார்த்தனர். வேணி, “வெளில வேலை இருக்காம்மா?” என்று கேட்க, “இல்ல அத்தே, நம்ம வீட்டுக்கு தான் கெஸ்ட் வராங்க, அவங்களை ரிசீவ் பண்ணதான் கிளம்பி நிக்குறேன்” என்றாள்.

“யாருமா வராங்க?”

“இனியனோட பிரன்ட் ஐஷூ! அவங்க கிளம்பிட்டாங்களா இனியா?!” என்று அவனை பார்த்தாள் நிலா. அவள் சொன்னதும் தான் ‘ஐயோ’ என்று இருந்தது அவனுக்கு. ‘மறந்துடுவான்னு நினைச்சா கரெட்டா கேக்குறாலே!” உள்ளுக்குள் புலம்பியவன், “அவங்களை இன்வைட் பண்ண மறந்துட்டேன் நிலா” என்றான் சோகமாய்.

“சோ வாட்! இப்போ கூப்டு! இன்னும் டைம் இருக்கே!!” என்றாள் விடாமல். வேணியும் தன் மருமகளுடன் சேர்ந்து, “புள்ளதான் ஆசைபடுதே! கூப்டுப்பா!” என்றான்.

தயக்கமாய் போனை எடுத்து காதில் வைத்தவன், ‘ஐயோ நாட் ரீச்சபிள்ன்னு வருதே!’ என்றிட, “எங்க என்கிட்ட குடு” என போனை வெடுக்கென பிடுங்கினாள் நிலா.

“இப்போ ரிங் போகுது பாரு!” நிலா சிரிக்க, அவள் சிரிப்பில் முதல்முறையாய் கடுப்பானான் இனியன்.

“குடு, நான் பேசுறேன்!!” இனியன் எழுந்து அவள் அருகே செல்ல, அதற்குள் அழைப்பு எடுக்கப்பட்டது. போனை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு மறுபுறத்தில் இருந்து வரவேண்டிய ‘ஹலோ’விற்கு கூட காத்திராமல், “ஹாய்! நான் நிலா பேசுறேன், இனியனோட வைஃப்..! நீங்க ஐஷு தானே?” என்று உறுதிபடுத்திக்கொண்டாள்.

‘சாரோட வைஃப் எதுக்கு எனக்கு கூப்புடுறாங்க!’ என அவள் யோசிக்க, “எங்க வீட்டுக்கு உங்களால வரமுடியுமா?” அடுத்து அவள் பேசும்முன், ‘ஏதோ அவசரம் போல’ என்று நினைத்த ஐஷூ, “எப்போ வரணும் மேம்” என்றாள். குரலில் அத்தனை வேகம்.

“இப்போதான்!” நிலா சொன்ன வினாடியில்லாமல் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

இனியன் வெளிப்படையாகவே தலையில் அடித்துக்கொண்டான். அந்த ஆர்வகோளாறுகளை பற்றிதான் அவனுக்கு நன்கு தெரியுமே!!

“என்ன அத்து, அட்ரெஸ் கூட கேட்காம கட் பண்ணிட்டாங்க, ஒருவேள அவங்களுக்கு முன்னமே சொல்லிருக்கியோ?” நிலா அவனிடமே கேள்வி கேட்க, ‘என்ன வர போகிறதோ?’ என்ற கடுப்பில் அமைதியாய் அமர்ந்துவிட்டான்.

இனியன் மீண்டும் அவளுக்கு அழைத்து ‘பிரன்ட்லி விசிட் தான், டோன்ட் பேனிக்’ என சொல்லலாம் என்று நினைத்தபோது,

“அச்சோ! உன் போன் சார்ஜ் இல்லாம சுவிச் ஆப் ஆகிடுச்சுடா! நான் சார்ஜ் போட்டு வைக்குறேன்” என்று கையேடு எடுத்துக்கொண்டு போய்விட்டாள் நிலா. ‘இதுவேறையா!’          

மூன்று பெண்களும் இரவு உணவுக்கான வேலையில் இறங்கிவிட, பதினைந்து நிமிடங்களை கடக்க பெரும்பாடுபட்டான் இனியன். பால்கனியில் நின்று இரவு ஒளியில் மின்னிய சாலையை அவன் நோட்டமிட, ‘குவைங் குவைங்’ என்ற சைரன் ஒலியோடு சீறிப்பாய்ந்து வந்துக்கொண்டிருந்தது ஒரு வண்டி. அது ஆம்புலன்ஸ் அல்ல என்று தெரிந்ததும், அதிவேகமாய் வாசலுக்கு விரைந்தான் இனியன்.

“எங்க போற அத்து?” நிலா கத்த, ஓட்டத்தை நிறுத்தாமல் “வந்துட்டாங்க, கூட்டிட்டு வரேன்” என்று ஓடினான்.

‘அவளை ரிசீவ் பண்ண எவ்ளோ ஆர்வம் பாரு இவனுக்கு..ஹும்ம்’ முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள் நிலா.

வாயுவேகத்தில் ஓடியவன் அப்பார்ட்மென்ட்டின் வாசலுக்கே சென்று வழிமறித்து நிற்க, காம்பவுண்ட் உள்ளே திரும்ப வந்த சைரன் வைத்த வண்டி சடன் பிரேக் போட்டு நின்றது.  அதன் பின்னே வந்த காரும், ஒரு ஜீப்பும் அப்படியே நிற்க, காரில் இருந்து இறங்கி ஓடி வந்தனர் ஐஷூ, மதன், சிவா மற்றும் முஸ்தபா!

“சார், எனி ப்ராப்ளம்?” போனில் கேட்க வேண்டியதை நேரில் வந்து கேட்டாள் ஐஷூ. அவன் வாயில் வண்ண வண்ணமாய் வந்தது. அவன் எதிர்பார்த்ததை விட அதிகமான கிறுக்குத்தனத்தை செய்திருந்தனர் நால்வரும்.

சைரன் வைத்த வண்டியில் காவல்துறை ஸ்பெஷல் ஸ்குவாட் இருக்க, பின்னிருந்த ஜீப்பில் இருந்து இறங்கி வந்தார் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர்.

“சர், உங்களுக்கு ஏதோ எமெர்ஜென்சின்னு சொன்னாங்க! அதான் இம்மீடியட்டா வந்தோம்! ஆர் யூ ஓகே?” அவர் கேட்டதும், “நத்திங் டு பி சீரியஸ், உங்களை எல்லாம் ட்ரபிள் பண்ணிட்டோம்! ஐயம் சாரி பார் தட்!” இனியன் மன்னிப்பு கேட்க, மூவரும் கடுமையாய் முறைத்தனர் ஐஷூவை.

“சாரி எதுக்கு சர், உங்க செப்டி தான் எங்களுக்கு முக்கியம்! சிபிஐ ஆபிசரோட பாதுகாப்புக்கு ஸ்டேட் போலிஸ் தானே பொறுப்பு! வி டிட் அவர் டியூடி!” என்றவர் விடைபெற்று சென்றுவிட்டார்.

நால்வரையும் முறைத்த இனியன், ‘கெட் இன்’ வார்த்தைகளை கடித்து துப்பியபடி அப்பார்ட்மென்ட் வளாகத்தின் உள்ளே அழைத்து சென்றான்.

‘திட்டுவாரோ?’ பயத்துடனே பின்னே சென்றனர் நால்வரும். அங்கிருந்த ஸ்டோன் பெஞ்சில் நால்வரையும் உட்கார சொன்னவன், அவர்கலேதிரே கைகட்டி நின்று முடிந்தவரை முறைத்தான்.

குனிந்த தலை நிமிரவில்லை நால்வரும். சிவாவே தயக்கத்துடன், “சாரி சர், மேம் கால் பண்ணி வர சொன்னாங்கன்னு ஐஷூ சொன்னதும், நாங்க கொஞ்சம்கூட யோசிக்காம உங்களுக்கு ஏதோ ஆபத்துன்னு நினச்சு இப்படி பண்ணிட்டோம்!!” என்று சொல்ல, “வெரி குட்” என சொல்லி அவர்களை அதிர வைத்தான் இனியன். நால்வர் சிரமும் வெடுக்கென நிமிர்ந்தது. ஆனால் அவன் முகம் பாராட்டுதலை விட கடுமையையே  வெகுவாய் காட்டியது.

மதன் வியப்பாய், “சார்…?” என்றிட, “எமெர்ஜென்சி டைம்ல கால் பண்ணுனா, இப்படிதான் பதட்டப்படாம, துரிதமா செயல்படனும்! வெல்டன்” இருமுறை மெதுவாய் அவன் கைதட்ட, அவர்கள் முகம் பிரகாசமாய் ஒளிர்ந்தது.

“தேங்க்ஸ் சர்” “தேங்க் யூ சர்” என அவர்கள் நன்றி சொல்ல, “வெயிட் வெயிட்! துரிதமா செயல்பட்டீங்கன்னு தான்  சொன்னேன்! புத்தியோட நடந்துகிட்டீங்கன்னு சொல்லவே இல்ல!!” என்று மறுபடி முறைப்பதை தொடங்க, ‘புஸ்ஸ்ஸ்’சென ஆனது நால்வருக்கும்.

“என் போன்ல இருந்து கால் வந்துச்சுன்னா என்ன ஏதுன்னு கொஞ்சமும் யோசிக்காம இப்படி படை திரட்டிட்டு கிளம்பிடுவீங்களா?” என்று கேட்க, ஐஷூ, “உங்க வைப் தான் சார் பேசுனாங்க, அதான்!!!” என்றாள் சின்ன குரலில்.

“பேசுனது என் வைஃப்ன்னு எப்படி தெரியும்? வேற யாராது கூட பேசிருக்கலாமே?” என்றான்.

மதன், “அதெப்படி சர் உங்க நம்பர்ல இருந்து பேச முடியும்?” என்றான் அறிவாய்.

“என் போனை யாராது திருடிட்டு போயிருந்தா அவங்களால பேச முடியும்ல?” என்று சொல்ல, ‘ஆமால’ என முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டனர்.

“ஒரு வேலை செய்யுறதுக்கு முன்னே பலமுறை யோசிக்கணும்! நீங்க டென்ஷன் ஆனதுமில்லாம போலீஸ்க்கு சொல்லி அவங்களையும் வரவைச்சு!! எதுக்கு இதெல்லாம்??” என்றான் வருத்தமாய்.

நால்வரும் கோரசாய் “சாரி சர்” என்றனர். “இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல” என்ற இனியன், “என்னோட அட்ரெஸ் எப்டி எடுத்தீங்க” என்று கேட்க, நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனரே ஒழிய பதில் சொல்லவில்லை.  

அவர்களின் திருட்டு முழியை பார்த்த இனியன், வினாடியில் யூகித்து விட்டான். “ஓ மை காட்!” தலையில் அடித்துக்கொண்டு, “அசோக் சர் கிட்ட சொல்லிட்டீங்களா?” என்றான். அவர்கள் ‘ஆம்’ என தலையாட்ட, “கால் ஹிம் இம்மீடியட்லி, எந்த ப்ராப்ளமும் இல்லன்னு உடனே சொல்லுங்க” என்றான். ஐஷு அதை செய்ய, “இப்படியே இருந்தீங்கன்னா இந்த ஜென்மத்துக்கு ப்ரொமோட் ஆக முடியாது!! போர் (4) இடியட்ஸ்” என்று திட்டினான்.

“உங்களை ஒரு பிரன்ட்லி விசிட்டா தான் கூப்ட்டுருக்கோம்! நான் சொல்ல போறத நல்லா மனசுல வாங்கிக்கோங்க!” என்றவன், “நம்ம ஐஞ்சு பேருமே பிரண்ட்ஸ், ஐஷூ பெங்களூர்ல ஒரு கோச்சிங் சென்டர் வச்சுருக்கா, அதுல நீங்க எல்லாம் பார்ட்னர்ஸ்! இப்போ சென்னைல ஒரு பிரான்ச் ஸ்டார்ட் பண்றதுக்காக இடம் பார்க்க வந்துருக்கீங்க! என் பொண்டாட்டி கேட்டா இதைதான் சொல்லணும், புரிஞ்சுதா?” என்றான்.

எதற்கென புரியாவிட்டாலும் அவர்கள் தலையாட்ட, “என் பொண்டாட்டி சுடரொளி மேகசினோட ரிபோர்டர்! கொஞ்சம் நோண்டி நோண்டி கேள்வி கேட்ப்பா! ஸ்டெடியா இருங்க, ரொம்ப பேச வேணாம்!!” என்று அறிவுறுத்தி, “வாங்க” என்று அழைத்து சென்றான்.

லிப்டுக்குள் புகுந்ததும், ஆர்வத்தை அடக்க முடியாத முஸ்தபா, “எதுக்கு சர் இதெல்லாம் சொல்லணும்?” என்றான்.

“நான் சிபிஐல இருக்கேன்னு என் வீட்ல யாருக்கும் தெரியாது. அதான்! நீங்களும் அதையே மெயின்டெயின் பண்ணுங்க!” என்றான். அதற்குமேல் அவர்களை கேள்வி கேட்கவே அவன் விடவில்லை. ஐந்தாம் தளம் வந்ததும் வெளியேறினர். வீட்டின் வாசலிலேயே நின்றிருந்தாள் நிலா.

‘வீட்டுக்கே தெரியாம சீக்ரட்டா வச்சுருக்காரு பாரேன்டா’ நால்வரும் தங்களுக்கு ஆச்சர்யப்பட்டுகொண்டனர்.

ஐஷூ மட்டும் வருவாள் என நினைத்தவளுக்கு உடன் மூன்று ஆடவர்களும் வரவும், அவளையறியாமல் நிம்மதி மூச்சு வெளிவந்தது.

“வெல்கம் ஹோம்! ஐயம் நிலா!” சிரிப்புடன் நால்வரையும் வரவேற்று அமரவைத்தாள். தன் வீட்டினருக்கு புதியவர்களை அறிமுகப்படுத்தினான் இனியன்.  வழமையான நலம் விசாரிப்புகளுக்கு பிறகு, வேலை பற்றி கேள்வி கேட்க, சற்றுமுன் இனியன் சொல்லிகொடுத்ததை அட்சரம் பிசகாமல் நியாபகம் வைத்து சொல்லினர் நால்வரும்.

“வாங்க சாப்பிட்டுகிட்டே பேசலாம்” என நிலா அழைக்க, இனியனின் முகம் பார்த்தனர் அவர்கள். “வாங்க சாப்டலாம்” அவன் அழைத்ததுமே தான் உணவருந்த சென்றனர்.  “ஏன் ஒருமாறி UNCOMFORTABLEஆ இருக்கீங்க எல்லாரும்?” நிலா சிரித்துக்கொண்டே கேட்க, “இல்லையே இல்லையே இல்லையே” என உதட்டை இழுத்துப்பிடித்து அவசரமாய் சிரித்தனர்.

இனியனின் நிலையை என்னன்னு சொல்றது? பாவம்!! அவன் இதெயெல்லாம் பார்த்துக்கொண்டே நிற்க, அவனை பார்த்த நிலா, “இவங்க வந்ததுல இருந்தே நானும் பார்க்குறேன்! கஞ்சி போட்டு அயர்ன் பண்ணுன சர்ட்டு மாறி விரைப்பாவே இருக்குற? என்னாச்சு உனக்கு?” என்றாள்.

பதில் சொல்லாமல் ‘ஈஈ’ என்ற முகத்துடன் சாப்பிட அமர்ந்தான். உணவு வேளை நிம்மதியாய் கழிய, கிளம்பலாம் என அவர்கள் நினைக்கும் வேளை, வேணி, “அம்மாடி, அதியன் எப்படி இருக்காம்மா? எனக்கு ஒரு போன் கூட பண்ணல அவன்!” என்றார்.

அவர் கேட்டதும், “யாரு மேடம் அதியன்?” என அவரிடமே திருப்பி கேட்டாள் ஐஷூ.  நால்வரிடம் அத்தனை கதையும் சொன்ன இனியன் மண்டை மேல் இருந்த கொண்டையை மறந்துபோனான்.

‘ஸ்ஸ்ஸ் போச்சு’ அவன் நாக்கை கடித்துக்கொள்ள, “என்னம்மா யாருன்னு கேக்குற? உன்கிட்ட தானே என் ரெண்டாவது புள்ள வேலைக்கு இருக்கான் இப்போ??” வேணி கேட்க, “என்கிட்டயாமா?” என்ற ஐஷூ அவர் ‘ம்ம்’ என்றதும், ‘சொல்லவே இல்லையே’ என இனியனை பார்த்தாள் பாவமாய்.

“ஹிஹி” மழுப்பலாய் சிரித்துகொண்டே தன் அன்னையிடம் சென்ற இனியன், “அவங்களுக்கு அதியனை தெரியாதும்மா! இனியன் தம்பின்னு சொன்னாதான் தெரியும், அதுவும் இல்லாம அவனை எல்லாரும் ‘நெடுமாறன் நெடுமாறன்னு’ சுருக்கமா தான் கூப்புடுவாங்க!! இல்லையா ஐஷூ?” இனியன் கேட்டதில் ‘ஆமான்னு சொல்லு’ என்ற பொருள் உள்ளடங்கிருக்க, “ஆமா ஆமா” என்றாள் ஐஷூ.

‘போதும், கிளம்புங்க’ இனியன் கண்களால் விரட்ட, எழுந்துக்கொண்ட நால்வரும், “நேரமாச்சு, கிளம்புறோம்! தேங்க்ஸ் பார் தி டின்னர்” என்றனர். வாசலோடு அவர்கள் விடைபெறும் நேரம், அமைதியாய் இருந்த வானம் தாளம் போட தொடங்கியது. பெரும் இடி சத்தம் ஒன்று கேட்க, “என்ன திடீர்னு இடி இடிக்குது! மழை வருமோ!?” வேணி சொல்லி முடிக்கும் முன் தூறல் ஆரம்பித்தது.

“எப்படிம்மா போவீங்க?” தேவி கவலை கொள்ள, “டேக்சில போய்டுவோம் மேடம்! சும்மா தூறும் அவ்ளோதான், சென்னைல எங்க பெரும்மழை வர போது!!” மதன் சொல்ல, ரோஷம் கொண்ட வானம் அருவி போல் கொட்ட தொடங்கியது.

“இவ்ளோ மழைல போக வேணாம்ப்பா! பொம்பளப்புள்ள வேற இருக்கா! மழை நின்னதும் போலாம்! எல்லாம் உள்ள வாங்க” தேவி சொன்னதற்கு அவர்கள் பலவிதமாய் மறுப்பு சொல்ல, இறுதியாய், ‘வாங்க’ என்று இனியன் சைகை செய்த பின்னரே உள்ளே வந்தனர்.  அதை கண்டும் காணாதபடி கவனித்துக்கொண்டிருந்தாள் நிலா.   

பால்கனியை ஒட்டி சோபாவை போட்டுக்கொண்டவர்கள் மழையை ரசிக்க தொடங்கினர். நால்வரும் ஏதேதோ கதைகள் பேச, நிலா தன் மடிகணினியோடு வந்து அமர்ந்தாள். அவள் சிறிது நேரம் வேலை செய்ய, ஐஷூ, “நீங்க ரிப்போர்டர்ன்னு சர் சொன்னாரு! என்ன டாபிக்ஸ் கவர் பண்றீங்க?” என்றாள்.

நிலா, “பெரும்பாலும் க்ரைம் தான்! அதுதான் கொஞ்சம் கிக்கா இருக்கும்!” என்றவள் கடந்தவார சுடரொளி நாளிதழை எடுத்து கொடுத்தாள். அட்டைப்படத்திலேயே ‘இதழியின் ரிபோர்ட்’ என்ற சப் டைட்டில் இடம்பெற்றிருக்க, அதை சுட்டிக்காட்டியவள், “இது என்னோட புனைபெயர்” என்றாள்.

“அதென்னங்க இதழி? வித்தியாசமா இருக்கு?” சிவா கேட்க, இனியன் ‘க்கும் க்கும்’ என கனைத்தான். அவனை செல்லமாய் முறைத்தவள் வேண்டுமென்றே, “ஜர்னலிசம்க்கு தமிழ்ல என்னனு தெரியுமா?” என்றாள்.

முஸ்தபா, “தெரிஞ்சமாறியே இருக்கு, நியாபகம் வரல! நீங்களே சொல்லிடுங்களேன்!!” சொன்னதும், “இது நீ தெரியாதுன்னே சொல்லிருக்கலாம்” என அவனை கேலி செய்து சிரித்தனர் மூவரும்!

“இதழியல்-ன்னு சொல்வாங்க! சோ ‘இதழி’ ன்னு வச்சுகிட்டேன்!” என்ற நிலா, இனியனை மட்டும் பார்த்து, “வேற எந்த காரணமும் இல்ல! ஹும்” உதட்டை சுளித்துக்கொண்டாள்.

அவனோ பார்வையாலயே ‘அப்படியா?’ என்றான்.

அவள் ஆர்டிகிளை படிக்கலாம் என உள்ளே திருப்பிய மதன் அதன் தலைப்பகத்தை பார்த்து திடுக்கிட்டு போனான். “மேம்? நீங்க???” அவன் இனியனை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே கேட்க தயங்க, அவன் கேட்க வந்ததை புரிந்துக்கொண்ட நிலா, “அமைச்சர் டெத் கேஸ் தான் என்னோட கரென்ட் ப்ராஜெக்ட்” என்றாள்.

அதற்குமேல் ஒருத்தரிடமும் பேச்சில்லை!! நிலாதான் ஆரம்பித்தாள், “நீங்க வந்ததுமே கேட்கணும்ன்னு நினச்சேன்! எல்லோரும் பிரண்ட்ஸ் தானே? அப்புறம் ஏன் இவரை ‘சார் சார்’ன்னு கூப்புடுறீங்க?” என்றாள்.

“பிரன்டுன்னாலும் மரியாதை குடுக்கனும்ல?” மதன் சொல்ல, இனியன், “அவங்க என்னோட ஜூனியர்ஸ், அதனால சார்ன்னு சொல்லி பழகிட்டாங்க” என்றான்.

‘என்ன இந்த மனுஷன் யோசிக்காமையே இப்படி புளுகுறாரு?’ ஆச்சர்யமானான் சிவா.

“இந்த வார ரிபோர்ட் ரெடி பண்றீங்களா மேம்?” ஐஷூ ஆர்வமாய் கேட்க, “ஆமா! நாளைக்கு குடுத்தாதான் வீகென்ட் புக் வரும்!” என்றாள் நிலா.

“நான் பார்க்கலாமா?” ஐஷூ அனுமதி கேட்டதும், தன் அருகே அவளை அமர சொல்லி இடம் கொடுத்தாள் நிலா. அவள் அதி வேகமாக தட்டச்சு செய்வதை ஆர்வமாய் பார்க்கொண்டிருந்த ஐஷூவின் கண்கள் சில நொடிகளில் பீதியை வெளிக்காட்ட, இனியன் எழுந்து நிலாவின் மறுபுறம் அமர்ந்தான்.

அவனுமே பார்த்த கணத்தில் அதிர்ந்து போக, “என்ன நிலா, அமைச்சர் தான் அவர் குடும்பத்தை கொலை செஞ்சாருன்னு எழுதிட்டு இருக்க?” என்றான்.

“அவர்தான் கொன்னாருன்னு எழுதல! அவர்கூட கொன்னுருக்கலாம்ன்னு யூகமா தான் நிறுத்துறேன்!” என்றாள் தட்டச்சை நிறுத்தாமல்.

“அப்போ அவரை கொன்னது யாரு?” சிவா கேட்க, “அதுதான் எண்டு லைன்! அமைச்சரை கொன்றது யார்ன்னு கேள்விகுறி போட்டு நிறுத்தப்போறேன், கண்டிப்பா அடுத்த ரெண்டு வாரத்துக்கு சேல்ஸ் பிச்சுக்க போது!!” நிலா சொன்னதில் சாதுவுக்கே கோவம் கொப்பளித்தது.

“புல் ஷிட்! காசுக்காக கண்டதையும் எழுதுவியா நீ? டோன்ட் யூ ஹேவ் சம் ப்ரோபெஷனல் எத்திக்ஸ்?” தொழில் தர்மமின்றி கண்டதை எழுதுவாயா? என்ற கோவம் அவனை குரல் உயர்த்த செய்தது.

“என்னை பார்த்தா காசுக்கு எழுதுற ஆள் மாதிரி இருக்கா இனியா?” அவளுமே கோவமாய் கேட்டாள். நால்வரும் இவர்களை வேடிக்கை பார்த்தனர்.

“அப்புறம் எதுக்கு இந்தமாறி ஒரு கன்டென்ட்?” அடங்கிய கோவம் வார்த்தைகளில் அழுத்தமாய் மாறியது.

“கண்ணால பார்த்த சாட்சி இருக்கு! அவன் சொன்னதை வச்சு தான் இப்போ எழுதுறேன்” என்றாள் நிலா. இனியனும் மற்றவரும் ஆர்வமாய் அவளை நோக்க, விபத்துக்கு முந்தைய நிகழ்வுகளை வரிசை போட்டு சொன்னாள் நிலா. நம்பமுடியாத குழப்பத்தில் மிதந்தனர் அனைவரும்.

“ஒரு குடிகாரன் சொல்றதை வச்சு எழுதுவியா நீ?” கோவம் இன்றி குழப்பமான நிலையிலேயே கேட்டான் இனியன்.

“பத்திரிக்கைகாரன் ஆதாரத்தோட எழுதணும்ன்னு எந்த அவசியமுமில்லை! சின்ன சந்தேகத்தை கிளப்பி விட்டா போதும், அதை போலிஸ் தான் கெட்டியா பிடிச்சுகிட்டு மேலும் தோண்டணும்!!” என்றவள் மடிகணினியோடு அறைக்குள் சென்றுவிட்டாள்.

அவளோடு மழையும் சென்றுவிட நால்வரும் விடைபெற்றனர். இனியனுக்கு இந்த வழக்கை எங்கு தொடங்கி எங்கு முடிப்பது என்றே குழப்பமாகி போனது. மீளா சிந்தனையுடன் படுக்கைக்கு வந்தவன், கையை தலைக்கு கொடுத்து படுத்துவிட்டான். எதையோ எதிர்பார்த்து இருந்தவள் அவன் இப்படி அமைதியாய் இருக்கவும், எழுந்து அமர்ந்துகொண்டாள். அவள் அசைவில், “தூங்கலையா?” என்றான் இனியன்.

“நைட்ல தூங்கனும்ன்னு கட்டாயம் இல்லையே!” இடக்காக அவள் சொல்ல, “அப்போ நைட் எதுக்கு இருக்கு?” என்றான் எதையும் யோசிக்காமல்!

ஹாஸ்பிடலில் அன்று நடந்த சமாதானத்திற்கு பிறகு, அவனோடு கழிக்கபோகும் முதல் இரவு! ஏதேதோ கற்பனையில் இருந்தாள். காதிற்குள் ஏக்கமாய், ‘இப்போவே வீட்டுக்கு போலாமா?’ அவன் கேட்டது ஒலித்து அவளை தொல்லை செய்தது.  ஆனால் அவனோ அம்னீஷியா பேஷன்ட் போல நடந்துக்கொள்ள கடுப்பானவள், “ஆணி புடுங்க!!” என்றுவிட்டு திரும்பி படுத்துக்கொண்டாள்.  

“ஹும்ம்! நிலாகுட்டி அடிக்கடி கோவப்படுது” சலிப்பு போல அவன் சொல்ல, “நீ கொஞ்சுனா நான் ஏன் கோவபடப்போறேன்?” என்றுவிட்டு அவன் பதில் செயல் வருமென காத்திருந்தாள்.

நிமிடங்கள் கடந்தும் அவன் வராததால் மெல்ல திரும்பி பார்த்தவள், படக்கென எழுந்து அமர்ந்தாள்.

‘தூங்கிட்டியா??????’ அப்பட்டமான அதிர்ச்சி!!!!!

“யூ யூ யூ” அவன் கழுத்தை நெரிக்கவே சென்றவள், “இந்த விஷயத்துல நான் கொஞ்சுறதும், நீ மிஞ்சுறதுமே பொழப்பா இருக்கு! இனி நீயா வர வரைக்கும் நான் உன்கிட்ட வரமாட்டேன் பாரு!!!” சூளுரைத்தவள் படுக்கையில் விழுந்து, கண் மூடி தூங்க முயன்றாள்.

திடீரென அவள் மூளைக்குள், “முத்தம் குடுத்தா குழந்தை பொறந்துடும்ன்னு நினைக்குற கேசா இருப்பானோ!!??” என்ற சந்தேகம் தோன்ற, “நிலாஆஆ!! எதையும் நினைக்காம தூங்கிதொல” தன்னையே திட்டிக்கொண்டு சிறிது நேரத்தில் தூங்கிபோனாள்.

அவள் அசைவு நின்றதும் கண் திறந்த இனியன், “ஹப்பாடா!!! இன்னைக்கு தப்பிச்சோம்” என்று போர்வையை தலைவரை போர்த்திக்கொண்டு நித்திரா தேவியோடு டூயட்டாட சென்றான்.      

கண்ணாமூச்சி ஏனடா!!!?

Advertisement