Advertisement

              தனது அசட்டுப்பெண் அத்தனையையும் இப்படி இவளிடம் ஒப்பித்து வைத்திருக்கிறாளே என்று கலங்கினாலும், வெளியில் தன்னை இயல்பாகவே காட்டிக் கொண்டார். ஆனால், ஸ்ரீகா அவரை அறிந்தவளாகஎன்ன அத்தை பயத்துல வேர்த்துக் கொட்டுதா…” என்று நக்கல் அடிக்க

                      “நான் ஏன் பயப்படணும்.. அதுவும் உன்கிட்ட எனக்கென்ன பயம்.. என் மக எங்கே ன்னு சொல்லுடி..” என்று குரல் உயர்த்தினார் சீதா.

                      ‘உங்க மகளை நான் நேற்றுப் பார்த்தது. அப்புறம் நீங்க எங்க அவளை பார்க்க விட்டிங்க.. அவளுக்கு பீவர்..ரெஸ்ட் எடுக்கிறா.. டிஸ்டர்ப் பண்ணாத ன்னு நீங்கதானே சொன்னிங்க…”

                      “என்னை கோபப்படுத்தாத ஸ்ரீகாநிச்சயம் இது உனக்கு நல்லது இல்ல.. அதோட இது எனக்கும், என் மக்களுக்குமான விஷயம். இதுல நீ உள்ளே வர்றதை நான் விரும்பல..புரியுதாஒழுங்கா என் மகளை வீட்டுக்கு கூட்டிட்டு வா.. “

                       “ஹை.. இது நல்லா இருக்கே.. நீங்க விரட்டி விடுவீங்க.. நான் கூட்டிட்டு வரணுமாஒருவேளை உங்க பொண்ணு, உங்களை மாதிரியே யோசிக்கிறாளோ..” என்றவள் கன்னத்தில் கையை வைத்து யோசிக்க, அவளை ஏதும் செய்ய முடியாத, தன் இயலாமையால் பொசுங்கி கொண்டிருந்தார் சீதா.                       

                       அதுவும் ஸ்ரீகா குத்திக் காட்டி பேசியதில் இன்னுமே ஆத்திரம் மிகுந்துவிட, மீண்டும் ஒருமுறை கையை உயர்த்தி இருந்தார் அவளிடம்.

                        ஆனால், இந்த முறையும் அவர் கை தன்னை தீண்டுவதற்கு முன்னமே தடுத்துப் பிடித்துக் கொண்டவள்நான் தீக்ஷி இல்லஅதோட நீங்க மாமியார் ஆகிட்ட ஒரே காரணத்துக்காக நீங்க அடிச்சாலும் பொறுத்துப் போற ஆளும் இல்லஒண்ணுக்கு ரெண்டா திருப்பிக் கொடுத்திடுவேன்..” என்றாள் முகத்திற்கு நேராக.

                    பெருத்த அவமானம் அது. வீட்டுக்கு வந்த மருமகள் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள். ஆனால், சீதா கொஞ்சமும் கவலை கொள்ளவில்லை. அவர் மனம் இப்போது முழுமையாக மகளைப் பற்றிய கவலையில் இருந்தது. அவருக்கு தீக்ஷி வந்தாக வேண்டும்.. அவள் அவருடைய கையை மீறி சென்றுவிடவே கூடாது சீதாவுக்கு.

                      “மரியாதையாக தீக்ஷி எங்கே இருக்கா சொல்லுஅதைத்தவிர, உன்கிட்ட பேச எனக்கு ஒண்ணுமே இல்ல..என் மகள் மட்டும் வீட்டுக்கு வரல, நேற்று அவளை பயம் காட்ட செஞ்சதை இன்னிக்கு உண்மையாகவே  செய்வேன்.” என்று ஸ்ரீகாவையும் மிரட்டும் முயற்சியில் இறங்கினார் சீதா.

                       “போய் முதல்ல அதை செய்ங்கமாத்திரை தீர்ந்து போயிருந்தா கூட சொல்லுங்க.. நான் ஆன்லைன் டெலிவரி போட்டு விடறேன்கிளம்புங்க..”என்றாள் ஸ்ரீகா.

 

                       அவளின் இந்த ஏளனத்தில் சீதா இன்னும் துவேஷம் கொள்ள, தன்னறைக்கு சென்றவர் தன் கணவரை அலைபேசியில் அழைத்துவிட்டார். அவரிடம்தீக்ஷியை காணவில்லை.. ஸ்ரீகா எங்கோ அனுப்பி வைத்திருக்கிறாள்..” என்று மொட்டையாக அவர் கூறி வைக்க, ஸ்ரீகா இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் பெரிதாக கவலை கொள்ளவில்லை மது. அவருக்கு மருமகளின் மீது அந்த அளவு நம்பிக்கை இருந்தது.

                          நேற்றைப் போல் அடித்து பிடித்து ஓடி வராமல், நிதானமாக வீட்டை அடைந்தார். மனைவி கூறிய விஷயங்களை முழுதாக உள்வாங்கி கொண்டவர் மருமகளை அழைக்க, கொஞ்சமும் பதட்டமில்லாமல் வந்து நின்றாள் ஸ்ரீகா.

                            “சொல்லுங்க மாமா..” என்று அவரின் கண்களை அவள் சந்திக்க

                            “தீக்ஷி எங்கம்மா..” என்றார் மது.

                            “எனக்கு தெரியாதே மாமா.. நான் அவளோட ரூம்க்கு போகக்கூட அத்தை என்னை அலோவ் பண்ணவே இல்லையே.” என்று அப்பாவியாக விழி விரித்தவள்நீங்க அவளோட மொபைல்க்கு ட்ரை பண்ணிப் பாருங்களேன்..” என்றாள் மேலும்.

                              மது மனைவியைப் பார்க்க, “அவ போன் வீட்ல தான் இருக்குங்க..” என்றார் முறைப்புடன்.

                          “மறந்துட்டாளோ…” என்று ஸ்ரீகா சத்தமாக யோசித்து பின், “நேத்து நைட்ல இருந்தே அவ போன் ரீச் ஆகல மாமா.. நானும் நேத்து நைட் அவளை பார்க்கவே இல்ல.. நீங்க அவளைப் எப்போ பார்த்தீங்க..” என்று அவரிடமே கேள்வி கேட்க

                           “என்ன சொல்ல வர்ற ஸ்ரீகா..” என்று நேரடியாகவே கேட்டார் மது.

                          “நான் சொல்றதுக்கு எதுவுமே இல்ல மாமா. ஒரே வீட்ல இருக்கோம்.. ஆனா, ரெண்டு நாளா ஒருத்தி கண்ல படவே இல்ல.. அதைப்பத்தி நமக்கு அக்கறையும் இல்ல. இதுல அவ போனையும் இவங்க வாங்கி வச்சிருக்காங்கயாருக்கு தெரியும். இந்த நரகத்துல இருக்க முடியாம அவளே வீட்டை விட்டு கிளம்பிட்டாளோ என்னவோ…” என்று கையை விரித்தாள் மருமகள்.

 

                            மருமகள் கேட்ட வார்த்தைகள் சுருக்கென்று தைத்துவிட, சட்டென மனைவியைப் பார்த்தார் மது. “ஸ்ரீகா என்ன சொல்றா சீதாதீக்ஷியோட போனை நீ வாங்கி வைத்திருக்கிறாயா…” என்று அவர் கேள்வி கேட்க

                            என்ன பதில் சொல்ல என்று விழி பிதுங்கியது சீதாவுக்கு. ஸ்ரீகாஅவங்களை கஷ்டப்படுத்தாதிங்க மாமா.. நான் சொல்றேன். அவளோட போனை நேற்று ராத்திரியே பிடுங்கிட்டாங்க இவங்க. அது மட்டுமில்ல அவ உங்களோடவோ, என்னோடவோ பேசிடக்கூடாது ன்னு அவளை ரூம்ல வச்சு கிட்டத்தட்ட அரெஸ்ட் பண்ணியாச்சு…”

 

                           “இவங்களோட இந்த டிராமா இதோட இல்ல.. நேத்து ஈவினிங் தூக்கமாத்திரையை போடப்போறதா சொல்லி அவளை மிரட்டி, இவங்க சொல்றதை கேட்கிறேன் ன்னு சத்தியம் பண்ண வச்சிருக்காங்கஅழுதழுது முகமெல்லாம் சிவந்து எப்படி இருந்தா தெரியுமா அவ…” என்று கண்களை லேசாக துடைத்துக் கொண்டவள்அவளை பார்க்கவே பயமா இருந்தது.. இப்படி ஒரு அம்மாவை நம்பி, எப்படி தீக்ஷியை விடச் சொல்றிங்க…”

 

                       “அதான் அவளை அனுப்பி வச்சேன். உன் வாழ்க்கையை நீ பார்த்துக்கோ ன்னு சொல்லியே அனுப்பி வச்சிருக்கேன்.. அவ எங்க இருக்கா, என்ன செய்யப் போறா எதுவும் எனக்கும் தெரியாது..” என்று கூறி முடித்தவள்அவ்ளோதானே..” என்பது போல் ஒரு பார்வையைக் கொடுத்து நின்றாள்.

                        “நான் இன்னமும் இந்த வீட்ல தானே ஸ்ரீகா இருக்கேன். என் மனைவி தான் என்னை அசிங்கப்படுத்திட்டா ன்னு நினைச்சேன்.. நீயும் எனக்கு கையாலாகாதவன் ன்னு எண்ணம் வர வைக்கிறம்மா..” என்றார் வேதனையாக

                                          “என்னை மன்னிச்சிடுங்க மாமா.. எனக்கு உங்கமேல நம்பிக்கை இல்லாம இல்ல..ஆனா,அதைவிட அதிகமா இவங்களை நினைச்சு பயமா இருக்கு. இவங்களோட ஆசைக்காக யாரையும் பலி கொடுப்பாங்க இவங்க.”

                      “அதுக்கு தீக்ஷிக்கிட்ட இவங்க சத்தியம் வாங்கினது தான் சாட்சி. தீக்ஷி என் அண்ணன் சர்வாவை விரும்புறா மாமா. இப்போ இல்ல, காலேஜ் படிக்கும் போதே பிடிக்கும் அவங்க ரெண்டு பேருக்கும். இந்த விஷயம் உங்க மகனுக்கும் தெரியும். “

 

                        “அவர் உங்ககிட்ட பேசுறதா என்கிட்டே சொல்லி இருந்தார். ஆனால், அதுக்கு முன்னாடி நானே சொல்ல வேண்டியதா போச்சு..” என்றவளை

 

                       “என்ன அந்த அனாதைப் பயல, மந்திரி வீட்டுக்கு மாப்பிள்ளையாக்க திட்டம் போடறியா. உன் திட்டம் ஒருநாளும் பலிக்காது.. உன்னை இந்த வீட்டுக்குள்ளே விட்டதே தப்பு…” என்று சீதா கத்தி விட, வாழ்வில் முதமுறையாக மனைவியின் மீது கைநீட்டி இருந்தார் மதுபாலகிருஷ்ணன்.

 

                             சீதா கணவர் அடித்ததில் மொத்தமாக இடிந்து நிற்க, “இதற்கு மேல எதுவுமே பேசக்கூடாது நீ. உன்னை நம்பி என் குடும்பத்தை மொத்தமா ஒப்படைச்சேன்.. நீ என்ன செஞ்சு வச்சிருக்கஎன் மகளை வீட்ல அடைச்சு வைப்பியாஉன் குடும்பத்தோட அந்த புத்தி இன்னும் உன்கிட்ட இருக்கு இல்ல…” என்றவர் ஸ்ரீகாவிடம்நீ போம்மா.. நான் உன்கிட்ட பேசறேன்.. நீ போ..” என்று அவளை அனுப்பிவிட்டார்.

 

                            “நீ என்ன நினைக்கிற சீதா. உன்னை மீறி என்னால எதுவுமே செய்ய முடியாதாஇது நம்மோட குடும்பம். நம்ம பிள்ளைங்க.. என் மனைவி எங்களுக்கு நல்லது தான் செய்வா ன்னு உன்மேல அபார நம்பிக்கை எனக்கு. அதனாலதான் நீ சொன்ன எதுக்கும் நான் மறுவார்த்தை பேசினதே கிடையாது.”

 

                          “ஆனா, அது தப்பு ன்னு இத்தனை வருஷம் கழிச்சு எனக்கு புரிய வச்சுட்ட நீஎன்னதான் வீட்டை விட்டு வந்துட்டாலும், உன் அப்பாவுக்கு மகளா தான் இருந்திருக்க இன்னைக்கு வரைக்கும். ஆனா, என்னோட ஒரே வீட்ல வாழ்ந்தும் எனக்கு மனைவியா இல்லாம போய்ட்டியே…”

 

                         “பிள்ளைங்க வாழ்க்கையை விட, உனக்கு உன் அப்பா பைத்தியம் பெருசா போய்டுச்சாஅப்படி வேதனைப்பட்டு நீ இந்த வீட்ல வாழ வேண்டாம்.. இந்த நிமிஷமே கூட உன் வீட்டுக்கு நீ கிளம்பலாம். உன் அப்பாவுக்கு மகளா மட்டுமேநீ வாழலாம்.”

 

                         “உன் அப்பா கால்ல விழுந்து நான் மன்னிப்பு கேட்கிறேன். உங்க மகளை பிரிச்சு கூட்டிட்டு போனது தப்பு. அந்த தப்புக்காக என் மகளோட வாழ்க்கையை நான் பணயம் வைக்க விரும்பல.. உங்க மகளை நீங்களே வச்சுக்கோங்க ன்னு சொல்லிடறேன் வா..” என்று மது சீதாவின் கையை பிடித்து இழுக்க, அவர் கைக்கு அகப்படாமல் தனது அறைக்குச்சென்று கதவை அடைத்துக் கொண்டார் சீதா.

 

                         மதுவுக்கு அவரை சரிசெய்யும் மனநிலை நிச்சயம் இல்லை. “எப்படியோ போகட்டும்..”என்று நினைத்தவராக அவர் சோஃபாவில் சரிந்து அமர்ந்துவிட, ஸ்ரீகா அறையின் பால்கனியில் உலாவிக் கொண்டிருந்தாள்.

 

                        அந்த நாள் அதே கடினத்துடன் முடிவடைய, அடுத்தநாள் விடியல் அதைக்காட்டிலும் மோசமாக அமைந்தது ஜெய்யின் குடும்பத்திற்கு. சீதா உண்மைக்கும் அவர் அறையில் மீதம் இருந்த மொத்த மாத்திரைகளையும் விழுங்கி வைத்திருக்க, காலை நான்கு மணி அளவில் இயற்கை உபாதைக்காக அறைக்கு சென்ற மது, அவரின் நிலையைக் கண்டுகொண்டார்.

 

                       ஸ்ரீகாவை அலைபேசியில் அழைத்தவர் மனைவியை கண்ணீருடன் எழுப்ப முயற்சிக்க, அசைவே இல்லை சீதாவிடம்.. ஸ்ரீகா மாமனாரின் பதட்டம் மிகுந்த குரலில் ஓடி வந்தவர் சீதாவின்  நிலையைக் கண்டு,அதிர்ந்து நிற்காமல் வேகமாக செயல்பட அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சீதா.

 

                        அவள் இருந்த பதட்டத்திற்கு எதையும் யோசிக்காமல் நகரின் பெரிய மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்து இருக்க, அது பீஷ்மனின் மருத்துவமனையாக அமைந்து போனது யாருக்கு பாதகமோ???…

Advertisement