Advertisement

“டேய் வேற எதுனாலும்  செய் பழகின பாவத்துக்கு பொறுத்துக்குறேன்… இப்படி வெக்கம் மட்டும் படாத… பாக்க முடியலை…” குறிஞ்சி அவனை வாரிக்கொண்டு வர ஹோட்டலும் வந்து விட்டது.
வாசலிலேயே இவர்களுக்கா மற்றவர்கள் காத்து இருக்க குறிஞ்சியை பார்த்ததும் கூட்டம் மொத்தம் சூழ்ந்து கொண்டது அவளை…  
வெகு நாட்களுக்கு பிறகானா நட்புக்கூட்டம் தன் வழமையான சிரிப்பில் கரைந்து போக தூரத்தில் இருந்து வேலுவின் கண்கள் மட்டும் குறிஞ்சியை ரசனையாக பார்த்துக்கொண்டு இருந்தது.
காலையிலேயே ஏகாம்பரம் அழைத்து இருந்தார் வேலுவுக்கு. “சொல்லுங்க மாமா எப்படி இருக்கீங்க??”
“நல்லா இருக்கேன் வேலு… இன்னிக்கு உனக்கு முக்கிய வேலை எதுனாச்சும் இருக்கா?? இல்லையின்னா இங்க கொஞ்சம் வந்துட்டு போறியா”
ஏகாம்பரம் மதுரை மாவட்ட நெசவாளர் சங்க தலைவர் என்பதுடன் அரசியலில்  முக்கிய புள்ளியும் கூட. அவர் அழைத்தால் அதில் காரணம் இருக்கும் என்பதை புரிந்தவன், 

“முக்கியம் இல்லை.. ஆனா மதுரை வரை போக வேண்டியது இருக்கு மாமா ரொம்ப அவசரம்னா இப்ப வரவா??”  வேலு.
“மதுரைக்கு தான போற அப்ப நம்ம ஹோட்டலுக்கு வந்துடு..” என்றவர் வைத்து விட்டார். அவரை பார்க்க வந்த இடத்தில் தான் அவன் குறிஞ்சியை பார்த்தது.
நிச்சயம் இங்கு  அவளை எதிர் பார்க்கவில்லை வேலு. ஏகாம்பரத்திற்காக காத்திருந்தவன்  வாசலில் இவர்களின் சத்தம் கேட்கவும் தான் திரும்பி பார்த்தான். குறிஞ்சியை பார்த்தவன் பேசலாம் என்று நினைக்க சுற்றி நின்று இருந்த அவளின் நண்பர்களை பார்த்து  அமைதியாகி விட்டான். 
அவளுடன் வந்தவர்கள் யார் என்பதை பார்த்து கொண்டவன் அவளை தன் கண் பார்வை வைத்து சற்று தள்ளி அமர்ந்து கொண்டான். அவர்கள் பேசுவது கேட்க வில்லை என்றாலும் அவளின் முகம் காட்டும்  மாற்றங்கள் அவனுக்கு நன்கு தெரிந்தது.
“என்னப்பா வேலு இங்கயே உக்காந்துட்ட  உள்ள ரூம்ல இருக்க வேண்டியது தான??” ஏகாம்பரம்.
இது அவரின் ஹோட்டல் தான். இது போல் இன்னும் மூன்று உண்டு மதுரையில் மட்டும். சில முக்கிய பேச்சுக்கள் மட்டும் ஏகாம்பரம் இங்கு தான் வைத்துக்கொள்வார்.
“இருக்கட்டும் மாமா …உங்களுக்காதான் வெயிட் பண்றேன்..” என்றவன் எழுந்து கொள்ள “ வாப்பா..” என்றவர் ஹோட்டலின் பின்புறம் இருந்த அந்த லானுக்கு சென்றார்.
“வேலுவும் ஏகாம்பரமும் சென்றது குறிஞ்சி அமர்ந்து இருந்த கண்ணாடி தடுப்பின் வழியாக தான். “சேகர் அங்க பாரு  ஆளு செமயா இருக்கான்ல..!!” குறிஞ்சியின் பக்கத்தில் இருந்த வித்யா வேலுவை காட்டி சொல்ல..
குறிஞ்சி “பசங்க தான் கம்பத்துக்கு சேலை கட்டுனாலும் பாப்பாங்கனு சொல்லுறத இனி மாத்திக்கனும் ப்பா…  யார பாத்தாலும் இவளுக்கு இதே டயலாக் தான்.. நாமலும் எத்தன வருசமா தான் கேக்குறது… டயலாக்க மாத்துமா..!!” 
“இல்ல நிஜமாவே ஆளு சூப்பரா தான் இருந்தான்.. நம்பலையின்னா நீ திரும்பி பாரு..” வித்யா சொல்ல குறிஞ்சி திரும்பி பார்க்க வேலு ஏகாம்பரத்துடன் சென்று கொண்டு இருந்தான். “வேலுதம்பி” வாய்குள் முணங்கியவள் வித்யாவை பார்த்து “அட லுசே உனக்கு இவர் தான் கிடைச்சு தா பார்க்க” என்றாள்.
“ஏய் அவர உனக்கு தெரியுமா??” வித்யா.
“ம்ம் தெரியும் என் வருங்கால அண்ணியேட அண்ணன்… அல்ரெடி அவருக்கு பொண்ணு பாத்தாச்சு…” என்றவள் வித்யாவை பார்க்க “விடு பொண்ணு தான பாத்து இருக்காங்க..” என்றவளை புரியாத பாவத்தில் பார்த்து வைத்தாள் குறிஞ்சி.
“என்ன குறிஞ்சி அப்படி பாக்குற??” வித்யா.
ஏனோ குறிஞ்சிக்கு அதற்கு மேல் வேலுவை பற்றிய பேச்சை வளர்க்க விரும்பவில்லை. குறிஞ்சி பேச்சை மாற்ற வேலுவின் பேச்சு அதோடு முடிந்து போனது.
“சொல்லுய்யா கல்யாணு வேலை எப்படி போகுது??” ஏகாம்பரம்.
“எல்லா வேலையும் முடிஞ்சது மாமா.”
“எப்படியோ ஒத்த ஆளா நின்னு உங்க தாத்தா பேர காப்பாத்திட்ட… உன் தங்கச்சிக்கும் நல்ல இடமா பாத்துட்ட.. ஆன உன்ன தான் நான் விட்டு கொடுத்துட்டேன் வேலு..” என்றவர் பேச்சில் உண்மையான ஆதங்கம் மட்டுமே.
ஏகாம்பரம் தன் மகள் அருணாவை வேலுவுக்கு முடிக்க தான் நினைத்து இருந்தார். ஆனால் அவள் காதல் என்று வந்து நிற்க அவருக்கு வேறு வழி இல்லாமல் மகளின் விருப்படி அவளுக்கு திருமணத்தை முடித்து விட்டார் ஏகாம்பரம்.
அவரின் பேச்சு உண்மையில் வேலுவுக்கும் அதிர்ச்சி தான். “மாமா என்ன பேச்சு இது…. அருணாவுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு இப்ப இது தேவையா??”
“தேவையோ இல்லையோ… சில விசயம் மனச உறுத்திகிட்டே இருக்கும் வேலு. அதை எப்பவும் மாத்த முடியாது..”
“மாமா அருணா மேல எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்ல.. புவனா எப்படியோ அப்படி தான் அருணாவும்.. நீங்களே வந்து கேட்டு இருந்தாலும் நிச்சயமா உங்களுக்கு சாதகமான பதில் என்கிட்ட இருந்து வந்து இருக்காது.. அதனால அந்த பேச்சு வேண்டாமே” என்றான் சங்கடமாக.
“சரி விடுப்பா  உனக்கு சங்கடம் தர்ற விசயம் இனி பேசல.. ஆனா நான் கேக்குறத நீ செய்யனும்..” என்றவர் பேச்சில் இருந்த அழுத்தம் அது தனக்கான உத்தரவா என  யோசித்தான்.
“என்ன மாமா சொல்லுங்க… என்னால முடியும்னா நிச்சயம் செய்றேன்..” என்றவன் பேச்சில் சிரித்துவிட்டார் ஏகாம்பரம். காலையில் அவர் அழைக்கும் போதே அவர் எதை பற்றி பேசுவார் என்பது தெரிந்தவன் அவர் பேச்சுக்கு பிடி கொடுக்காமல் தான் பேசினான்.
“டேய் மாப்பிள்ள..” அவர் சிரிக்க, அவர் சிரிப்பை யோசனையுடன் தான் பார்த்து இருந்தான் வேலு. அவர் தன்னை இப்படி அழைத்து மனம் விட்டு சிரிப்பதை பார்த்து வருடங்கள் ஆகிவிட்டது. தன் தந்தையுடன் வீட்டுக்கு வரும் போது தான் அவரு இப்படி சிரித்து இருப்பார். அவர் இறந்த பின் இவர் சங்கம் அரசியல் என வந்து விட, அவர் சிரிப்பு எல்லாம்  காரியம் சாதிக்க மட்டும் தான்.
“என்ன மாமா அப்படி என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஒரு சிரிப்பு!!” வேலு.
“நான் சொன்னதை செய்ய மாட்டேன்னு எனக்கு தகுந்த மாதிரி சொல்லுறியா,,” அவர் சிரிப்புடனே கேட்க,
வேலு பதில் சொல்லாமல் அவரை தான் பார்த்து இருந்தான். “சொல்லு வேலு என்ன பண்ண போற??” இப்போது அவர் சிரிப்பு மறைந்து இருந்தது.
“உங்களுக்கே எல்லாம் தெரிஞ்சு இருக்கும் போது நான் சொல்ல என்ன இருக்கு மாமா”
“எல்லாம்  எனக்கு தெரியுதுன்னா உனக்கும் இங்க நடக்குறது தெரிஞ்சு தான இருக்கும் சிவமலை என்னைய பாத்தது உட்பட..” ஏகாம்பரம் கேட்க  “எனக்கு தெரியும் அப்படின்றது உங்களுக்கும் தெரிஞ்சு இருக்குல மாமா அப்பறம் இதுல கேக்க என்ன இருக்கு.. இது எனக்கும் அவருக்கும் நடக்குற போட்டி.”
“திறமை இருக்குறவன் சம்பாதிக்குறான். அது தான் இங்கயும். அதுல நான் தோத்து போகம இருக்க நான் எல்லாம் செய்து தான் ஆகனும் மாமா..” என்றவன் பேச்சு சாதாரணமாக இருந்தலும் இதை இதோடு விடமாட்டேன் என்ற செய்தியும் இருந்தது.
அதை ஏகாம்பரம் புரிந்து கொண்டாலும் ஒரு முறை கேட்கலாம் என்று தான் கேட்டார் ஏகாம்பரம். “அவன் எல்லாம் இழந்து நிக்குறான் வேலு. இனியும் நீ அடிச்சா அவன் தாங்க மாட்டான் வேலு..” என்றார்.
அவரின் பேச்சில் முத்துவின் முகம்  கண் முன் வந்து போக வேலுவின் முகம் இறுகி போனது. “தாங்கனும் மாமா எல்லாம் போனாலும் உயிர் இருக்கு தான?? தாங்கனும் தாங்கி தான் ஆகனும்…” அவரை உற்று பார்த்து சொல்ல, அவன் கேட்டதிலும் சொன்னதிலும்  ஏகாம்பரமும் சற்று யோசிக்க தான் வேண்டி இருந்தது.
“அப்ப நீ எடுத்த முடிவுல மாற்றம் இல்ல?” ஏகாம்பரம் கேட்க “ ஆமாம்” என்பதாய் அவன் தலை அசைந்தது. 
ஏகாம்பரம் பெரியதாக மூச்சை விட்டவர் “சங்க எலக்சன்ல உன் முடிவு” என்றார்.
“சிவமலைய அடிக்க எனக்கு வியாபாரம் மட்டும் போதும் மாமா அரசியல் எல்லாம் வேண்டாம்” என்றவனை எதில் சேர்க்க என புரியவில்லை.
“வேலு நீ பிடிச்சு இருக்குறது புலி வால்.. அத விட முடியாது விட்டா அது உன்ன அடிச்சுடும். முடிக்கனும் அப்படின்னு முடிவு பண்ணிட்டா எல்லாம் உன் வசமா இருக்கனும்” என்றவருக்கு வேலு பதில் சொல்ல  வாய் திறக்க, அவன் பேச்சை கை நீட்டி தடுத்தவர்  “உடனே பதில் வேண்டாம் எலக்சனுக்கு இன்னும் நாள் இருக்கு நிதானமா யோசிச்சு பதில் சொல்லு” என்றவர் எழுந்து கொண்டார்.
வேலுவும் “நான் கிளம்புறேன் மாமா” என்றவன் வெளியில் வந்து பார்க்க அங்கு குறிஞ்சி இல்லை “அதுகுள்ள போயிட்டாளா!!” நினைத்தவன் வாட்ச்சை பார்க்க அது மதியம் மணி இரண்டு என்றது.
“ரெண்டு மணியா..” யோசித்தவன் நந்தீசனுக்கு அழைக்க “மாப்பிள்ள ரிசப்சன்னுக்கு ஆர்டர் பண்ணுன கோட்ட வாங்கிட்டு வந்துட்டேன் நீ போன வேலை முடிஞ்சுதா??” என்றான்.
“ம்ம்…. நீ  அதை எடுத்துகிட்டு ரஞ்சன் வீட்டுக்கு வந்துடு நான் நேரா அங்க வந்துடுறேன்” என்றவன் அவன் புல்லெட்டில் பறக்க அங்கு குறிஞ்சி இவனுக்காக காத்திருந்தால் அவனை கிழித்து தொங்க விடும் ஆத்திரத்தில்……

Advertisement