Advertisement

“ஆமா அண்ணி எனக்கும் நினைக்க நினைக்க வருத்தமா தான் இருக்கு… என்ன விட சின்ன பசங்க எல்லாம் எப்படி பேசுறாங்க தெரியுமா..??நீங்க தான் என்னைய ஒன்னும் தெரியாம வளத்து வைச்சிருக்கீங்க…”
“ஆமா ஒன்னும் தெரியாது தான் ஒத்துக்குறேன்… ஆனா உனக்கு தெரியாதுன்னு சொல்லாத..   இப்படி பயப்படுற அத்த உன்னைய எப்படி வேலைக்கு அனுப்புறாங்கன்னு தெரியல..??” விசாக தலையை தட்டிய படி கேட்க…
“அது அம்மாக்களுக்கே உண்டான பயம் வேற டிப்பார்ட்மெண்ட்” என தாமரையை விட்டு கொடுக்காமல் குறிஞ்சி பேச…
“நான் உன் அண்ணிடி.. என்கிட்டயேவா??” விசாக 
“அண்ணி அதை விடுங்க கல்யாணத்துக்கு ஷாபிங் பண்ணனும் எப்ப வர்றீங்க ??” குறிஞ்சி பேச்சை மாற்ற, குறிஞ்சி “ஷாப்பிங்” என்றதும் பேச்சு அதை நோக்கி திரும்பியது.
பேசிய படி இருவரும் கீழே வர குறிஞ்சியின் சிரித்த முகத்தை பார்த்த பின் தான் தாமரைக்கும் செல்விக்கும் சற்று மனம் சமன் பட்டது. இருந்தும் தாமரையை அவர் முறைக்க தவறவில்லை.
 
விசு “அப்பா அடுத்த வாரம் விசாகாவை அனுப்பி வைச்சுடுறேன் என்ன வேணுமோ போய் அவங்க வாங்கிட்டு வரட்டும். நீங்க பத்திரிக்கை எப்ப வைக்க போறதுன்னு சொன்னா நான் லீவ்கு அப்ளை பண்ண சரியா இருக்கும்” என்றவன் விசாகாவை அழைத்து கொண்டு சென்னைக்கு புறப்பட்டான். 
விசுவும் விசாகவும் சென்றதும் “தாமர மத்தியம் இருக்குறதையே சூடு பண்ணிக்கலாம் அவங்களுக்கு மட்டும் இட்லி ஊத்திட்டா போதும் அந்த பலகாரத்தை எல்லாருக்கும் கொடுத்து விடு..” செல்வி அடுத்து வேலைகளை தாமரைக்கு சொல்லியவர் “குறிஞ்சி தலை வலிக்குதுன்னு சொன்னியே  இப்ப எப்படிடா இருக்கு??”என்றார்.
“பரவாயில்ல பெரியம்மா… எனக்கு ஏதாவது வேலை இருக்கா?? இல்லையின்னா நாளைக்கு கொஞ்சம் நோட்ஸ் எடுக்கனும் போகட்டா??”
“ம்ம் எந்த வேலையும் இல்ல நீ போ..” செல்வி சொன்னதும் தலையை ஆட்டியவள் மாடிக்கு சென்றாள். 
மாடிக்கு சென்றவள் தெப்பென கட்டிலில் விழ கண்ணில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்ட ஆரம்பித்தது..’எதுக்குடி நீ அழற இப்ப தான் அண்ணிக்கிட்ட அவ்வளவு வசனம் பேசுன இப்ப எதுக்கு இந்த அழுகை…இப்ப என்ன தாமரையம்மா பயம் தேவையில்லாததுன்னு வாயால இல்லாம செயல்ல காட்டிடு அவ்வளவு தான் முடிஞ்சது.. இதுக்கு போய் அழுதுகிட்டு” அவளுக்கு அவளே ஆறுதல் கூறிக் கொண்டவள் ‘இனி வேலுவை பார்த்தாலும் அவனிடம் எந்த பேச்சும் வைத்து கொள்ள கூடாது’ என முடிவினை எடுத்துக்கொண்டாள்.
“ஏன் மாப்பிள்ள  குறிஞ்சிக்கு என்ன பதில் சொல்ல..??” நந்தீசன்
வேலு குறிஞ்சி பெயர் கேட்டதும் முகத்தில் தோன்றிய உணர்வை மறைத்தவன் “காலையில தான பாத்தோம்…அதுகுள்ள என்ன பதில்” 
“டேய் நான் எந்த குறிஞ்சிய சொல்லுறேன் நீ எந்த குறிஞ்சிய நினைக்குற..” நந்தீசன் நண்பனின் நாடியை சரியாக பிடித்தவன் கேட்க..
வேலு நொடி நேரம் திடுக்கிட்டாலும் அதை காட்டாதவன் “ நம்ம குறிஞ்சி சில்க தான சொல்லுற??? அவரை தான் காலையில பாத்து நாளைக்கு செட்டில் பண்ணுங்க  திங்ககிழமை சரக்கு வந்துடும்னு சொல்லிட்டு தான வந்தேன்…” கேள்வியாக புருவம் சுருக்கியவன் “நீ எந்த குறிஞ்சிய கேக்குற மாப்பிள்ள??” 
“ம்ம் நானும் அதே குறிஞ்சிய தான் கேக்குறேன்!!” என்றவன் குரலில் அப்பட்டமான ஏமாற்றம் தெரிந்தது. காலையில் விருதுநகர் சென்றதில் இருந்து வேலுவின் முகத்தில் இருந்த சிரிப்பு மட்டும் மாறாமல் இருக்க அவனை தான் கவனித்து கொண்டு இருந்தான் நந்தீசன். 
குறிஞ்சியை பார்த்த பின் தான் அவன் முகத்தில் இந்த சிரிப்பு வந்து இருந்தது. அதை அனுமானித்தவன் இப்போது கேட்டது வியாபார சம்பந்தமாக தான். வேலுவாக “காலைல பாத்தது” என்றதும் நந்தீசன் குறிஞ்சியின் பெயரை சொல்ல அவனிடம் எந்த மாறுதலும் இல்லை. 
“மாப்பிள்ள ராமநாதன் குரூப்  சிவமலை நம்ம ஏகாம்பரத்த பார்த்ததா தகவல்” நந்தீசன் சொல்ல அவனை பார்த்தவன் “ம்ம் பாக்கட்டும் நமக்கும் போட்டி இருந்தாதான நல்லா இருக்கும்….”
“இது போட்டி மாதிரி தெரியலைடா வேற ஏதோ பண்ணுறாங்க..”
“இந்த சந்தேகம் எனக்கும் இருக்குடா….ரொம்ப நாளா…”
 
நந்தீசன் அதிர்ச்சியாக வேலுவை பார்க்க, வேலு “எதுக்குடா இப்படி பாக்குற..”
“ஏண்டா இத்தனை நாளா சொல்லவே இல்ல.. உனக்கு எப்படி தோணுச்சு.. மாமாகிட்ட பேசி அப்பவே என்னனு பார்த்து இருக்கலாம்ல??”
“அப்ப இருந்த நிலையில தொழில் தான் முக்கியமா பட்டது. இப்பவும் இதுக்காக தான்னு எந்த காரணமும் சொல்ல முடியாது…. பாக்கலாம் என்ன பண்ணுறாங்கனு…எங்க சுத்தியும் என்கிட்ட தான வந்து நிக்கனும்… பாக்கலாம்” என்றவன் நெட்டி முறித்தான்  
நந்தீசன் யேசனையில் இருக்கு அவனின் ஃபோன் ரிங் ஆனது. மலர் தான் அழைத்து இருந்தாள்.
“ஏங்க இன்னும் சாப்பிட வரலை… அங்கயே எடுத்துட்டு வரட்டா??”
“இல்ல வேண்டாம் இதோ கிளம்பிட்டோம் வந்துடுவோம்” என்றவன் வேலுவை கிளப்பிக்கொண்டு வர மணி பத்தை காட்டியது.
“எங்கம்மா வினோ..??” வேலு கேட்டபடி உள்ளே வர…  
“அவன் தூங்கிட்டான்னா.. இவ்வளவு நேரம் பவன் கூட தான் விளையாடிட்டு இருந்தான் இப்ப தான் தூங்குனான்…நீங்க வாங்க சாப்பிடலாம்” என்றவள் அனைவருக்கும் எடுத்து வைக்க புவனாவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.
அவளை நந்தீசன் ஆச்சர்யமாக பார்த்தவன் “என்ன கல்யாண பொண்ணு இன்னிக்கு தான் மாப்பிள்ள வீட்டுக்கே போயிட்டு வந்தோம்… அதுகுள்ள விருதுநகர் காத்து இங்க வந்துடுச்சு போல?? நீங்க வேலை செய்ய ஆரம்பிச்சீட்டீங்க.. இப்ப இருந்தே டிரைனிங்கா.. யாரு குடுக்குறது??” கேலியாக கேட்க.
புவனா மலரையும் கமலத்மையும் பார்க்க “ஆத்தே இவங்க ரெண்டு பேருமா..? நந்தீசன்  நெஞ்சில் கைவைத்தவன் “அந்த குடும்பம் நல்லா இருக்குறது மாமியா மருமக ரெண்டு பேருக்கும் பொறுக்கலையா எதுக்கு இந்த கொல வெறி??” கேட்டவன் தலையில் கமலம் குட்ட…
“எதுக்கு சித்தி வளர்ற பிள்ள தலையில குட்டுறீங்க..!!”
“டேய் மாப்பிள்ள அது உயரமா வளர்ற பசங்க தலையில குட்டுறதுக்கு சொல்லுறது உன்ன மாதிரி குறுக்கால வளர்ற பசங்களுக்கு இல்ல” வேலு
“அனைவரின் பேச்சு சிரிப்புமாக அந்த சாப்பாட்டு நேரம் போக “ண்ணா..” என்றாள் புவனா..
“என்னடா…” வேலு.
“முகூர்த்த புடவை நானே செலக்ட் பண்ணிக்கவா..!!” ஆர்வமாய் கேட்டவள் வேலுவின் முகத்தை பார்க்க அதில் சிறு யேசனை.
“என்னண்ணா எடுக்க கூடாதா..” கேட்டவள் முகம் சுருங்கி விட்டது..
“இல்லம்மா முகூர்த்த புடவை அவங்க எடுக்குறதுடா அதுல நாம எதுவும் சொல்ல முடியாது நீ வேண்ணுன்னா உனக்கு புடிச்ச டிசனை காட்டு அது மாதிரியே புடவை டிசையின் பண்ண சொல்லாம்..”   
“ஆமா புவனா  அண்ணா சொல்லுறது தான் சரி அது மாப்பிள்ள வீட்டுல தான் எடுப்பாங்க..” கமலா.
“அத்தை கல்யாணத்துக்கு மொத்தமா எத்தனை புடவை வேணும் புவனாக்கு தனிய என்ன வேணும் எல்லாம் லிஸ்ட் பண்ணிடுங்க…. ஒரு நாள்  எல்லாரும் போயிட்டு வந்துடலாம்… கடைசி நேரத்துல டென்ஸன் வேண்டாம்” சொன்னவனுக்கு கமலம் “சரி” என தலை அசைக்க அப்போதே கல்யாண லிஸ்ட் எழுத ஆரம்பித்து விட்டார் கமலம்.
சாப்பிட்டு நந்தீசனும் மலரும் செல்லிக்கொண்டு கிளம்ப “நான் பாவா கூட படுத்துக்குறேன்” என செல்வத்தின் மகன் பவன் வேலுவின் அறைக்கு ஓடிவிட்டான்.
“டேய் இருடா..” என்ற கலத்தின் குரலுக்கு “விடுங்க அத்த அவன் துங்கட்டும்” வேலு.
“எல்லாம் நீ கொடுக்குற இடம் தான் வந்ததுல இருந்து வினோ கூட விளையாட்டு, இப்ப தூக்கம். ஹோம் ஒர்க் யார் செய்றது…இதுல சார் கல்யாணம் முடியுற வரை இங்க தான் இருப்பாறாம்… முடியல வேலு இவன் கூட… போன வாரம் அவங்க டீச்சர் அத்தனை திட்டுறாங்க…அவ்வளவு சேட்டை பண்றான்… என்ன பண்ண இந்த பையன?? உங்க மாமாவும் இவன என்னன்னு கேக்குறது இல்ல… ஆள் ஆள்ளுக்கு சொல்லம் கொடுத்து கெடுத்து வச்சு இருக்கீங்க” கமலம்
“அத்த  சின்ன பையன் த்த விடுங்க சரியாகிடுவான்..” வேலு
“இந்த வயசுல நீ தொழிலுக்கு போயிட்ட..”
“என்ன மாதிரி வாழ்க்கை அவனுக்கு வேண்டாம்த்த அவனாவது அவன் வயச ரசிக்கட்டும்”   என்றவன் பவனுக்கான பாலை எடுத்துக்கொண்டு அறைக்கு சென்றான்.
போகும் அவனை தான் சங்கடத்துடன் பார்த்து இருந்தார் கமலம்……….   

Advertisement