Advertisement

                          ஓம நமச்சிவாய
அத்தியாயம் 4
கதவினை விடாமல் விசு தட்ட “ என்னாச்சு விசு!!??”  ரஞ்சன் தான் முதலில் வந்தது.
“தெரியலைடா… குறிஞ்சிய பாக்காலான்னு வந்தேன் அப்ப இருந்து கதவ தட்டறேன் பேசவும் இல்ல கதவையும் தெறக்க மாட்டேன்றா…”
“குறிஞ்சி கதவ தெற..” ரஞ்சன் கதவை தட்ட அதற்கும் உள்ளிருந்து எந்த பதிலும் இல்லை… அதற்குள் அனைவரும் மேலே வர…
“டேய் சின்னவனே பின்னால பால்கனியில இருக்குற வழியா உள்ள போக பாரு..”வினாயகம் சொல்லும்  போதோ தாமரை அழ ஆரம்பித்து விட்டார்.. “அய்யோ குறிஞ்சி…” தாமரை ஆரம்பிக்கும் போதே செல்வி அவரை பார்த்த பார்வையில் வாயை மூடிக்கொண்டார்.
   
“யேய் இப்ப வாய மூட போறியா இல்லையா… பிள்ள உள்ள தூங்கிடுச்சோ என்னமோ எதுக்குடி இப்ப இப்படி கத்துற..?” செல்வி அவரை அரட்டிக்கொண்டு இருந்தாலும் அவருக்கும் சொல்லாத பயம் தான் உள்ளுக்குள். குறிஞ்சி எப்போதும் இப்படி செய்பவள் இல்லை. இன்று தாமரையின் பேச்சு அதிக படி தான் என்றாலும் தாயாய் அவரின் பயம் உணர்ந்தவர் அவரிடம் அதை காட்டிக்கொள்ள வில்லை.
மீண்டும் ஒரு முறை கதவு தட்ட பட எந்த சத்தமும் வராததால் ரஞ்சன் பின் பக்கம் போக பார்க்க குறிஞ்சியின் அறை கதவு திறந்தது.
“என்னண்ணா இங்க சத்தம்..”என்ற படி கதவினை திறந்தவள் காதில் இயர் ஃபோன் இருக்க கைகள் கண்ணை கசக்கிய படி இருந்தது… அவளை பார்த்த பின் தான்  அனைவருக்கும் மூச்சு வந்தது…
“தாமரை வேகமாக எழுந்தவர் அவள் முன் போவதற்குள் செல்வி “ஏண்டி கூறுகெட்டவளே தூங்கறதா இருந்தா கதவ தொறந்து வைச்சுட்டு தூங்க மாட்டியா எத்தனை நேரமா கத்துறது..” மற்றவர்கள் பேசும் முன் அவர் பேசி விட்டார்.
“அது கீழ நீங்க எல்லாம் சத்தமா பேசிட்டு இருந்தீங்களா… எனக்கு தலை வலிக்க ஆரம்பிச்சது உங்க பேச்சு சத்தம் தெந்தரவா இருந்ததுன்னு இயர்ஃபோன்னுல பாட்ட கேட்டுட்டு தூங்கிட்டேன் கதவ தாள் போட்டது நியாபகம் இல்ல பெரியம்மா….” பாவமாக முகத்தை வைத்து கொண்டாள்.
அனைவரும் அவளை பார்த்து முறைக்க… அவள் விசாகாவைத்தான் பார்த்தாள் “என்னவென்று…??”
“பெரியப்பா என்னாச்சி…ஏதாவது தப்பு பண்ணிட்டோனா??” ஏதும் தெரியாதவள் போல் கேட்க, அவரும் இந்த சில நிமிடங்களில் ஏதேதோ நினைவுகளுக்கு சென்று இருந்தார் தான்.
பேசும் சொற்களுக்கு மட்டும் தான் நமக்கு உரியது. அது தரும் அர்த்தங்கள் எதிரில் இருப்பவரின் மனநிலையை பெருத்தது. அதுவும் வாழ்கையின் எதார்த்தம் என்னவென்று தெரியாதா சிறு பிள்ளைகளிடம் பேசும் போது அதன் தாக்கம் எப்படி என்பது வாழக்கையில் அனுபம் கொண்டவர்கள் அறிந்தது தான். 
புவனாவின் ஜாகத்திற்கு முன்னும் அண்ணன் தங்கை கொண்ட ஜாதங்கள் ரஞ்சனுக்கு வந்ததுண்டு அப்போது இல்லாத ஒரு பதட்டம் இப்போது தாமரையிடம் வினாயகம் பார்த்தார். அதற்கு என்ன காரணம் என தான் புரியவில்லை அவருக்கு.
“இல்லடாம்மா நீ கதவ தொறக்காம இருக்கவும் எல்லாரும் கொஞ்சம் டென்சன் ஆகிட்டாங்க அவ்வளவு தான் நீ போய் தூங்கு..” என்றவர் அனைவரையும் பார்த்தவர் இறங்கும் படி ஜாடை காட்டியவர் தாமரையிடம் பேச வேண்டும் என நினைத்து  படி இறங்க மற்றவர்களும் இறங்கினர்.
விசு, விசாக, ரஞ்சன் மட்டும் அங்கு இருக்க அப்போதும் அவள் புரியாமல் தான் அவர்களை பார்த்தாள். “ரஞ்சண்ணா நீ எப்ப வந்த??” அப்போது தான் அவனை பார்த்தது போல் அவள் கேட்க அவனுக்கே சிறிது குழப்பம் தான். ‘அப்ப இவளுக்கு கீழ நடந்தது, அம்மா பேசினது எதுவும் தெரியாதா!!! நிஜமாவே தூங்கிட்டாளா??’ நினைத்ததை ரஞ்சன் வாய் விட்டு கேட்டான்.
“அம்மாவா… என்ன சொன்னாங்க என்ன நடந்தது..??” அவன் கேட்டதை குறிஞ்சி அவனிடமே திருப்பி கேட்க…
விசுவின் முகத்தை தான் பார்த்தான் ரஞ்சன். அவனுக்கும்  அதே குழப்பம் தான். ரஞ்சன் ஏதோ செல்ல போக “அது ஒன்னும் இல்ல அம்மு அவன் வந்தும் வழக்கமா தாமரம்மா பேசிட்டாங்க அத தான் கேக்க தெரியாம கேக்குறான் நீ போய் தூங்கு நான் கிளம்பும் போது வா..” சொன்னவன் ரஞ்சனை “வாடா..” என இழுத்து சென்று விட்டான்.
விசாக மட்டும் போகமல் அங்கேயே நிற்க “ஐய்யையோ… என்னதிது??” என்றால் குறிஞ்சி. விசாக அவளை பார்க்க…
“இந்த லுக்க உங்க பாவாவை  பார்த்து பார்த்தாலும் பரவாயில்லை… என்னைய பாத்து…” குறிஞ்சி வெக்க பட…
மற்றவர்களுக்கு அவள் முகவாட்டம் தெரியாமல்  குறிஞ்சி சமாளித்து இருந்தாலும் விசாக கண்டுகொண்டால் அவளை.
“பேச்ச மாத்தாத அழுதியா குறிஞ்சி..” விசாகாவின் கேள்வியில் அத்தனை ஆதங்கம்….
ஆதங்கம் தான் அது. ஒற்றை பிள்ளையாய் வளர்ந்த விசாகாவிற்கு பெரிய குடும்பத்தில் கல்யாணம் செய்ய வேண்டும் என்பது தான் ஆசை ‘எப்போதும்  தன்னை சுற்றி ஆட்கள் இருக்க வேண்டும்’ என நினைப்பவள்.
அவளுக்கு வந்த ஜாதகம்  எல்லாம்   தனி  நபர்களாக இருக்க விசுவின் ஜாதகம் மட்டும் தான் அவளின் நிபந்தனைகளுக்கு சற்று ஒத்து வந்தது. விசுவும் ஒற்றை பிள்ளையாய் இருக்க அவளுக்கு சற்று தயக்கம் தான். விசுவின் போட்டோ காட்டும் போதே அவனை பிடித்து விட அவனை வேண்டாம் சொல்லவும் முடியாமல் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லவும் முடியாமல் சிந்தித்த படி இருந்தவள் முன் வந்து நின்றாள் குறிஞ்சி. பார்த்த உடனே “அண்ணி…எனக்கு கம்பெனி குடுக்க வீட்டுக்கு வருவீங்களா..!!” என கட்டிக்கொண்ட சிறு பெண்ணை பிடிக்காதவர்கள் யார்??
அன்றில் இருந்து இன்று வரை அவளை பார்க்கிறாள் விசாகா. அவளின் அத்தனையும் தெரியும்… எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் வாழ்க்கையை அதன் போக்கில் ரசித்து வாழும் பெண். எப்போதும் சிரித்த முகம். “உனக்கு அழ வராதா குறிஞ்சி??” சில சமயம் விசாகாவே சந்தேகத்துடன் கேட்டது உண்டு…
“எதுக்கு அண்ணி அழனும்??? நினைச்சது கிடைக்கலன்னா அழலாம்… எனக்கு தான் எல்லாம் இருக்கே… எதாவது தப்பு பண்ணுனா தான அம்மா திட்டுவாங்க நான் தப்பு செய்றது இல்லையில… அதுவும் இல்லாம அழுதா நாம பலகினமானவங்களாம்… ஏதோ ஒரு புக்குல படிச்சு இருக்குறேன் அப்ப இருந்து சுத்தமா அழறது இல்ல” என சொல்லி கன்னகுழி விழ சரிப்பவளை திருஷ்டி எடுப்பாள் விசாகா.   
இன்று தாமரை பேசியது அதிலும் குறிஞ்சியை பற்றி அவர் சொன்னது அதிகப்படி தான். தாமரையின் மீது அவளுக்கும் சிறு வறுத்தம் தான். அதை அப்போதே காட்டியும் விட்டாள் சமையல் கட்டில். “அத்த நீங்க குறிஞ்சிய பத்தி பேசுனது சரியில்ல…” என்று 
குறிஞ்சி விசாகாவை பார்த்தவள் “நான் எதுக்கு அழுகனும்??? அழுகுற மாதிரி என்ன தப்பு பண்ணுனேன் அண்ணி…??” 
“அப்ப எதுக்குடி தூங்குற மாதிரி நடிச்ச உங்க அண்ணன் வந்து கதவ தட்டினதும் தொறந்து இருக்க வேண்டியது தான..??”
“அது கொஞ்சம் வருத்தம். அந்த மூஞ்சியோட அப்படியே வந்து தொறந்தா என் கெத்து என்ன ஆகுறது.. எல்லாரையும் எப்படி சமாளிக்குறது!! அது தான் கொஞ்சம் லேட் பண்ணினேன் அது ரொம்ம்ம்ம்ப லேட் ஆகிடுச்சு…” இழுத்து சொல்ல….
விசாகாவிற்கு தான் இதை எப்படி எடுத்து கொள்வது என தெரியவில்லை. எதையும் வாய்விட்டு சொல்லாமல் அனைத்தையும் மனதிற்குள் வைத்து பூட்டிக்கொண்டு வெளியில் தான் சந்தோசமாக இருப்பதாக காட்டிக்கொள்பவளை  என்னவென்று கேட்க…” அப்ப கண்டிப்பா அழல..”
“ச்சு கண்டிப்பா அழல … இன்னும் கொஞ்ச நேரம் இந்த பேச்சு போச்சுன்னா  விசுண்ணா தான் கதறுவாறு என் டிக்கட் காசு எல்லாம் இப்படி வைகை ஆத்து தண்ணியா போகுதேன்னு..”
“பொய் சொல்லாதடி வைகை ஆத்துல ஏது தண்ணி..”
“அதை தான் சொல்றேன் வைகை ஆத்துல  ஏது தண்ணி… நீங்க இப்படி காச செலவழிச்சா வைகை ஆறு நிலை தான் எங்க அண்ணா நிலையும்…நோ தண்ணி… நோ காசு..”
“காசு… பணம்… துட்டு… மணிமணி” கையை விரித்து விசாகாவை சுற்றி விட்டவள்.. “ண்ணி… வேலுதம்பிய பார்த்து தாமர பயந்துடுச்சோ!!” கேட்டாள் எதிரில் நின்று கைகைளை கட்டிய படி.
விசாகா புரியாமல் “யார்டி அது வேலுதம்பி??”
“அவ்வா… உடன் பிறப்ப தெரியாம நீங்க என்ன தங்கச்சி…?? தங்கச்சி சொன்ன ஒத்த வார்த்தைக்காக, இன்னிக்கு வரும் போது கூட இருட்டுகட அல்வாவ மதுரைல பார்சல் பண்ணி சுடசுட கொண்டு வந்து கொடுத்த மனுசன யார்னு கேட்டா..” 
“யாரை வேலு அண்ணாவையா சொல்லுற..!!” ஆச்சர்யமாக குறிஞ்சியை பார்த்தாள் விசாகா.
“எஸ்..” குறிஞ்சி கண்சிமிட்ட…
“ஏய்.. நீ பேசுனது மட்டும் அத்த காதுல விழுந்தது” என்றவள், “அவர போய் தம்பி சொல்லுற!!” அவள் காதை விளையாட்டாய் திருக…
“அப்பறம் என்ன?? ஒரு இருபத்தி எட்டு  வயசு இருக்குமா?? நல்லா ஜீன்ஸ் சர்ட்ன்னு போடாம  ராம்ராஜா வந்தா அப்படி தான் சொல்ல தோனும்.. அதுவும் சட்டைக்கு போடுற கஞ்சிய குடிச்சுட்டு வந்தவரு போல விரைப்பா நின்னா…. அவரு ஹைட்டுக்கும் வெயிட்டுக்கும்  வெஸ்டன் அவுட்பிட்ல வந்தா எப்படி இருக்கும் தெரியுமா..!!” ரசனையாய் சொன்னவள் வாயை ஆஆஆஆவென பார்த்த படி இருந்தாள் விசாகா.
“ஏய் குறிஞ்சி நீயா பேசுற….  காலேஜ் போகும் போது கூட நல்லா தான இருந்த… இப்ப ஸ்கூலுக்கு போற இப்ப இப்படி பேசுற!! என்னடி ஆச்சு உனக்கு… இதுக்கு தான் அத்த பயந்தது போல..”

Advertisement