Advertisement

வினாயகம் “சங்கரா பேச்ச இதோட விடு… ம்மா தாமர நீயும் பேசுறதுக்கு முன்ன யோசிச்சு பேசுமா.. டேய்… நீ என்ன அப்படியே உக்காந்துட்ட போ போய் கை கால் சுத்தம் பண்ணிட்டு வா…” பெரியவராய் அனைவரையும் அடக்கியவர் விசாகவை பார்க்க “இதோ காபி எடுத்துட்டு வர்றேன் மாமா” என்றவள் சமையல் கட்டுக்கு விரைந்தாள்.
செல்வியும், தாமரையும் ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்து இருக்க விசு  குறிஞ்சியை தேடி மாடிக்கு சென்றான்.
இங்கு வேலுவின் வீட்டில் செல்வம் பொன்னுவை திட்டிக்கொண்டு இல்லை கெஞ்சிக்கொண்டு இருந்தார்.
“க்கா எதுன்னாலும் முன்னாடியே சொல்லிடுங்க இப்படி எல்லாம் பேசி முடிச்சதுக்கு அப்பறமா பேசுன விசயத்தை மாத்தி மாத்தி பேசுறது நல்லா இல்ல… நம்ம பொண்ணு வாழப்போற இடம்… இப்பவே இப்படி மாத்தி மாத்தி பேசுனா… அவங்க நம்மள பத்தி என்ன நினைப்பாங்கன்னு கூட தெரியாத உங்களுக்கு??” அவரும் என்ன தான் செய்வார்…
எத்தனையோ முறை விதவிதமாய் ரகரகமாய் பொன்னுவுக்கு புத்தி சொல்லியாகி விட்டது… இன்னும் “புவனா ஆசை பட்டா, சின்ன பொண்ணு, அப்பா இல்லை, நம்ம வீட்டுல இருக்குற வரை தான் சந்தோசம்” என பழைய ரிக்கார்டரை மோட் மாற்றி இசைப்பவரை எப்படி சொல்லி புரிய வைக்க…!! மலைப்பாய் தான் இருந்தது செல்வத்திற்கு.
அனைவருக்கும் தெரிந்துவிட்டது திருமணத்தை மதுரையில் வைக்க சொன்னது புவனா தான் என்று… அவளிடம் கேட்டாளும் அவளுக்கு பதிலாக பேசப்போவது என்னமோ பொன்னு தான். அதற்கு ஏன் வீணாக பிரகாரம் சுற்ற, நேரடியாக பொன்னுவிடமே கேட்டு விட்டார் செல்வம். “க்கா மாமா எப்ப வேண்டிக்கிட்டார் மதுரைல கல்யாணம் வைச்சுக்கிறதா??”
“அது ரொம்ப நாளைக்கு முன்னாடிடா செல்வம்..”
“அது தான்க்கா எப்ப??”
“ம்ம்..” பொன்னு யோசித்தவர் “புவனாவுக்கு  அம்மை போட்டு இருந்ததுல அப்ப..” என்றுவிட்டார் பட்டென…
அதை கேட்ட அனைவரும் விக்கித்து தான் போனார்கள். செல்வத்தின் கோபம் உச்சியியை தொட “க்கா…” என கத்தியவர் “உன் பொண்ணு ஆசைக்காக செத்து போனவர் மேல பழிய போடுவியா….”
அவர் கேட்டதும் தான் பொன்னுவுக்கு தான் சொன்னது புரிய தலையை குனிந்து கொண்டார். புவானவிற்கு அம்மை போட்ட போது முத்து உயிருடன் இல்லை.
வேலு இங்கு வெறும் பார்வையாளன் மட்டும் தான். அவன் நடப்பதை அமைதியாக பார்த்து இருக்க நத்தீசனும் மலரும் தான் அவனை பாவமாக பார்த்து இருந்தனர். கமலதிற்கும் அவர்களை பார்ப்பதை தவிர  வழி இல்லை. செல்வம் என்ன தான் கோபமாக பேசினாலும் மற்றவர்கள் பொன்னுவை ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டார். இவர்களை பற்றி தெரிந்து தான்  அவர் அமைதியாக இருப்பது.
“புவனா…” செல்வம் அழைக்க புவனா வந்து நின்றாள் அமைதியாக.. பார்த்தாள் யாரும் கேட்பார்கள் “இவளா அப்படி..!!” என்று. அத்தனை சாந்தமான முகம்.
அவளை பார்த்து  கமலம் அவளை மனதில் வறுத்த படி நின்று இருந்தனர்.
அவளை பக்கத்தில் அமர வைக்க கமலம் மலர் காதில் “மலரு அங்க ஒரு பீடிங் பாட்டிலும் ஒரு தூளியும் கட்டிட்டா போதும்ல?? ” கேட்க முதலில் அவர் கேள்வி புரியாமள் முழித்தவள் அவர் கேட்டதின் அர்த்தம் புரிய வாய்குள்ளேயே சிரிப்பை அடக்கிகொண்டாள்.
அவரோ “இல்ல அந்த தூளி மேல ஒரு ராட்டின பொம்மைய கட்டிவிட்டுடு அப்பதான் குழந்தை அழும் போது எல்லாம் சாவி கொடுத்து அதை சிரிக்க வைக்க முடியும்” விடாமல் பேச… அங்க நின்று இருந்தவளுக்கு தான் சிரிப்பு நிற்பேனா என்றது. “அத்தை என்னால முடியலை வாய் விட்டு சிரிசுட்டா வேலு அண்ணா மனசு கஷ்ட படும்  இதோட நிறுத்துங்க” என்றதும் அவரும் அவனை தான் பார்த்தார்.
செல்வத்தை திருமணம் செய்து வந்த நாளில் இருந்து அவரும் பார்த்து கொண்டு தானே இருக்கிறார் அவன் இவர்களுக்காக படும் பாட்டை. அவன் வயதிற்கு மீறிய சுமை தான் அவனுக்கு. அதையும் சற்றும் முகம் வாடாமல் தான் செய்தான். பாதி நாள் தறி என்றால் மீதி நாள் சுடலையை பார்க்க மருத்துவமனையில் இருப்பான்.
“பார்ன் வித் சில்வர் ஸ்பூன்” அவனுக்கு அப்படியே பொருந்தும்… சுடலை அவ்வளவு சொத்து சேர்த்து வைத்து இருந்தார் மகனுக்கு. கிட்ட தட்ட அந்த ஊரின் பாதி இவனது தான். அத்தனையும் வீணாது முத்துவின் கூடா நட்பால். சொத்தில் பாதிக்கும் மேல் அழிந்த பின் தான் மகனின் தவறான நடவடிக்கைள் சுடலையின் கவனத்திற்கு வந்தது.
திருத்தாலாம் என்றால் முத்துவின் நடவடிக்கைகள் அனைத்தும் அவரின் கை மீறி சென்று இருந்தது. பொன்னுவுடன் திருமணம் முடிந்து வேலுவும் புவனாவும் இருந்தனர். பொன்னுவுக்கும் அத்தனை விவரம் தெரியவில்லை. கணவனின் சுபாவத்தை மற்ற வேண்டும் என்று.
இனி மிச்சம் இருப்பதையாவது காப்பாற்ற வேண்டும் என்னும் போது தான் முத்து இறந்து போனது. மகனின் நினைவில் சுடலை படுத்த படுக்கையாக அந்த மருத்துவ மனை வாசம் சுத்தமாக ஒத்துக்கொள்ளாது வேலுவுக்கு. வேலைக்கு ஆட்கள், ஆண் பணியாளர்கள் இருந்தாலும் சுடலையை தானே தான் கவனித்து கொண்டான்.
சுடலையின் குணம் அப்படி தன்னை விட கீழ் இருப்பவர்கள் அவருக்கு வேலை செய்யலாமே தவிர்த்து தன்னை தொடுவதை ஒத்துககொள்ள மாட்டார் மருத்துவமனை சூழ்நிலை ஒத்துகொள்ளாததால் செல்வம் கொண்டு வரும் சாப்பாட்டை பாதி நாள் உண்ணாமலே திருப்பி அனுப்பி விடுவான் வேலு.
பசியாய் இருப்பவன் வீட்டிற்கு வந்தால் பொன்னுவின் அழுகை மட்டும் தான் இருக்கும். பசியை  யாரிடமும் சொல்லாமல் தறி கூடத்தில் சென்று படுத்துக்கொள்வன். அங்கு அவன் இருப்பதை நந்தீசன் வந்து சொன்னால் கமலம் தான் அவனுக்கு சாப்பாடு எடுத்து செல்வது. அனைத்தும் இருந்தும் எதுவும் இல்லாதவன் வேலு.
“என்னம்மா இதெல்லாம்” செல்வம் அப்போதும் மென்மையாகத்தான் கேட்டார் புவனாவிடம்.
‘பாத்து பாத்து மெதுவ பிள்ளைக்கு வழிச்சிட போகுது’ கமலம் மனதுக்குள்  கணவனின் சொல்லுக்கு பேச… அந்த ஓசை அவர் காதுக்கும் எட்டியது தான் அதிசயம். செல்வம் கமலாவை முறைக்க “இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல” வாய்க்குள் முனுமுனுத்தவர் அனைவருக்கும் காபி போட சமையல்கட்டுக்குள் நுழைந்தார்.
“நீ இன்னும் சின்ன பொண்ணு இல்ல புவனா… உனக்குன்னு ஒரு குடும்பம் வர போகுது….நீ இன்னும் இப்படி இருந்தா அங்க எங்களுக்கு என்ன மரியாதை கிடைக்கும் சொல்லு… உனக்கு என்ன வேணுன்னு முன்னாடியே எங்க கிட்ட சொன்னா நாங்க வேண்டான்னு சொல்ல போறது இல்லை..” புவனா முகம் பார்க்க அவளே அவர் சொன்னதை கவனித்தாக கூட தெரியவில்லை.
“என்ன புவனா நான் சொன்னது கேட்டியா??” செல்வம்
“ம்ம் கேட்டது மாமா இனி இது மாதிரி பண்ண மாட்டேன்” என்றவளை பார்க்க மட்டும் தான் முடிந்தது அவரால்.
“மாமா விடுங்க… அவ புரிஞ்சிப்பா..” வேலு
அவன் சொன்னதும் நந்தீசன் அவனை முறைத்தவன் “சித்தப்பா நான் கிளம்புறேன்..” என வந்து நின்றான்.
வேலு அவனின் கோபம் புரிந்தவன் “இருடா அப்பறமா போகலாம்…” அவனுக்கும் தெரியும் அவனின் கோபம் எதற்கு என்று.
“இல்ல எனக்கு வேலை இருக்கு வினோவை கூட்டிட்டு வரனும்” அவன் முகம் பார்க்காமல் சொன்னவனை “டேய் அடங்கு ரொம்ப சீன போடாத..” வேலு
“யார்டா சீன் போடுறது??” பல்லை கடித்து சொன்னவன் வெளியே வந்துவிட்டான்.
மலர் வேலுவை பார்க்க “நீ  இரும்மா  அவன் வந்து கூட்டிட்டு போவான்..” என்றவனிடம் “சரி” என தலையை மட்டும் ஆட்டிவிட்டு உள்ளே போனாள்.   
“அத்தை” கமலத்தை அழைத்தவன் அவர் வர, “இன்னிக்கு இங்கயே இருங்க பரமுவ விட்டு பசங்கள கூட்டிட்டு வர செல்லுறேன்…” என்றவன் “மாமா நான் தறிக்கு போறேன் நீங்க ரெஸ்ட் எடுங்க..” புல்லட்டை எடுத்துகொண்டு கிளம்பினான்.
வீதி முக்கில் நந்தீசன் நின்று இருக்க வேலு அவன் முன் வண்டியை நிறுத்தியவன் “டேய் என்ன?? வா ஏறு..”
வேலு சொல்லவும் அவனை முறைத்தவன் எதுவும் சொல்லாமல் புல்லட்டில் ஏறிக்கொண்டான்.
சிறிது தூரம் சென்ற பின்னும் நந்தீசனிடம் இருந்து எந்த பேச்சு இல்லை வேலு கண்ணாடியில் அவன் முகம் பார்த்தவன் “என்னடா இன்னிக்கு மௌன விரதமா…??”
வேலுவின் கேள்விக்கு நந்தீசன் பதில் சொல்லாமல்  இருக்க வண்டியை நிறுத்தி விட்டான் வேலு. வண்டி நிற்கவும் “என்ன..??” என்பதை போல் நந்தீசன் பார்த்தவனை, வேலு “டேய் உன் பேச்ச கூட சகிச்சுகிடுவேன் ஏன்டா இப்படி அமைதியா வர்ற??”
“எதுக்குன்னு உனக்கு தெரியாதா..”நந்தீசன்
“அவங்கள பத்தி தெரிஞ்சது தான விடுடா.. முன்னாடி செல்ல வேண்டியதை கொஞ்சம் லேட்டா செல்லுறாங்க விடு அதுக்கு எதுக்கு இவ்வளவு கோபம்…”
“டேய் உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா..??”
“அது இருந்தா உன்னை கூட வைச்சுகிட்டு சுத்துவேனா..!!”
“டேய் காமெடி!!!  அப்பறமா சிரிச்சுக்குறேன்… மாப்பிள்ள வீட்டுல என்ன நினைப்பாங்க??  அவங்க வேற பிளான் வச்சு இருந்தா இந்த விசயம் எவ்வளவு பிரச்சனையா போயிருக்கும்…. இப்படி அவங்க சொல்லுற எல்லாத்துக்கும் நீ தலை ஆட்டுறதால தான் அவங்க இப்படி பண்ணுறாங்க இதை நீ புரிஞ்சுக்க மாட்டியா??”
வேலுவின் உயிர் நண்பன் என்றாலும் அவனின் எல்லைக்குள் நின்று தான் பேசமுடியும் நந்தீசனால். வேலுவின் தொழில் அவனை கேட்காமல் எடுக்கும் முடிவுகளை கூட ஒத்துக்கொள்ளும் வேலு, பொன்னு புவனா விசயங்களில் அவனை  விடுவதில்லை. பொன்னுவை, புவனாவை கேட்கும் உரிமை செல்வத்துக்கு மட்டும் தான். அப்படி இருப்பவனிடம் அவனின் தாய் தங்கையை பற்றி இந்த அளவுக்கு பேசுவதே அதிகம் தான்.
தான் பேசுவது அதிகம் என்று தெரிந்தும் வேலுவிடம் பேச அதற்கு அவனிடம் இருந்து வந்தது அமைதி மட்டும் தான். நந்தீசன் அவனை பார்த்து பெருமூச்சினை விட வேலு  எதுவும் சொல்லாமல் வண்டியை கிளப்பினான்   
விசு தாமரை பேசியதற்கு  ‘குறிஞ்சி இந்நேரம் அழுது ஒரு வழி ஆகி இருப்பாள்’ நினைத்து அவளை சமாதானம் செய்ய விசு மாடிக்கு வர அவளின் அறை கதவு முடப்பட்டு இருந்தது.
“அம்மு..” விசு கதவை தட்ட உள்ளிருந்து எந்த சத்தமும் இல்லை. பொதுவாக அவள் கதவை எப்போதும் தாள் போட மாட்டாள். இப்போது தாள் போடப்பட்டு இவன் அழைத்தற்கும் பதில் சொல்லாமல் இருக்க விசு வேகமாக “அம்மு கதவ தொற” பட பட வென தட்ட அவனின் சத்தம் கீழே இருந்தவர்களுக்கும் நன்கு கேட்டது
“என்ன.. எதுக்கு பெரியவன் கதவ இப்படி தட்டுறான்..!!” வினாயகம் மேலே பார்க்க மீண்டும் விசுவின் “அம்மு” என்ற சத்தமும் கதவு தட்டும் சத்தமும் கேட்க அனைவரும் வேகமாக மாடிக்கு சென்றனர்………

Advertisement