Advertisement

                           ஓம நமச்சிவாய
அத்தியாயம் 3
“அண்ணோ முகூர்த்த புடவை உங்க பக்கம் எடுத்துக்கலாமா?? இல்ல நம்ம தறியிலேயே நெய்ய சொல்லாமா??” செல்வம்.
வினாயகம் “எங்களுக்கு அப்படி எதுவும் இல்ல செல்வம் அங்க தறியிலயே போட்டுக்கலாம்… எங்களுக்கும் சேத்து எத்தனையின்னு கேட்டு சொல்லுறேன்.. நீங்க வீட்டுக்கு போய் சேந்ததும் தகவல் சொல்லுங்க” என்றவரிடம் அனைவரும் சொல்லிக்கொண்டு புறப்பட வேலுவின் கண்கள் மட்டும் குறிஞ்சியை தான் தேடிக் கொண்டு இருந்தது..
அவன் தேடுதலை உணர்ந்தவள் போல் மலருடன் பேசிக்கொண்டு வந்தாள் குறிஞ்சி கன்னகுழி சிரிப்புடன்.
“ஏய் மலர் வேகமா வண்டியில ஏறு எல்லாரும் எவ்வளவு நேரம் தான் உனக்காக காத்துக்கிட்டு இருப்பாங்க??” நந்தீசன்
“இதோ வந்துட்டேன்” மலர் வண்டியில் ஏற டிராவலர்ஸ் நகர ஆரம்பித்தது. குறிஞ்சி, மலரை பார்த்து கை அசைக்க வேலு அதை ரிவர் மிரர் வியூவில்  பார்த்த படி வந்தவன் கண்ணாடியில் அவள் உருவம் மறைய கண்களை முடிக்கொண்டான் மனக் கண்ணில் அவளை ரசிக்க.
வேலுவின் மனதில் குறிஞ்சியின் பிம்பம் வந்து போக மனதில் இனம் புரியாத குறுகுறுப்பு இந்த எண்ணமே அவனுக்கு புது மாதிரி தான் இருந்தது மனதும் உடலும் லேசானது போல் ஒரு உணர்வு.
சாரல் காற்றில் வேலு கண்களை திறந்தவன் பார்த்தது மழை சாரலில் வானில் தெரிந்த வானவில்லை தான். மனதில் வானவில்லாய் குறிஞ்சியின் முகம் பூத்து இருக்க எதிரில் நிஜ வானவில். இரண்டும் கைக்கு எட்டா தூரம் தான் இருந்தும் ரசிக்க தேன்றியது அவனுக்கு.
குறிஞ்சியை நினைக்க நினைக்க அவன் முகத்தின் சிரிப்பு மறையாமல் இருக்க “என்ன மாப்பிள்ள அங்க எனக்கு தெரியாம பாக்க கூடாதத பாத்துட்டியா…!!! உன் முகம் எதிர்ல வர்ற வண்டி லைட்டுக்கு டப் கொடுக்குது” நந்தீசன் அவன் பின்னால் வந்து அவன் காதில் கேட்க…
“இவ்வளவு நேரம் நான் பார்த்த தான் நீ வந்து மறைச்சிட்டியேடா இனி  கம்மியாகிடும்” வேலு அவனை பார்த்தவன் “ம்மா மலர் உன் வீட்டுகாரன் யாரையோ பாத்தானம் அது என்னன்னு கேளு”
“டேய் இப்ப உன் கிட்ட என்ன கேட்டேன்னு என் வீட்டுல கும்மி தட்ட பாக்குற… நீ பளபளப்பா இருந்தா எனக்கென்ன?? பைத்தியமா இருந்தா எனக்கென்ன… இனி உன் பக்கம் வந்தா என்னனு கேளு..” என்றவன் மீண்டும் மலர் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்
“என்னங்க அண்ணா  கூப்பிட்ட மாதிரி இருந்தது..” மலர்.
“யாரு உங்க அண்ணன் உன்ன கூப்புட்டானா… தூக்கத்துல ஹாரன் சவுண்ட் அவன் கூப்பிட்ட மாதிரி இருந்து இருக்கும்..” கடுப்பாக அவன் செல்ல, அவனை ஒரு பார்வை பார்த்தவள் அவன் மீது சாய்ந்தே தூக்கத்தை  தொடர்ந்தால்.
   
நந்தீசனின் பேச்சு மனைவியிடம் இருந்தாலும் கண்கள் அவனின் சிரித்த முகத்தை பார்த்து  மனதில் வேண்டிக்கொண்டான் ‘அவன் சிரிப்பு எப்பேதும் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று’
முத்து போனதில் இருந்து பெரிதாய் ஆசைகள் என்று அவனுக்கு இல்லை. எதுவும் இல்லை என்பதை விட ஆசை பட நேரம் இல்லை. முத்து செய்து வைத்து போன குழறுபடிகளை சரி செய்யவே அவனுக்கும் செல்வத்திற்கும் நேரம் சரியாய் இருந்தது. அதில் மகனை நினைத்து சுடலையின் உடல் நிலை மோசம் ஆக தாத்தா, அம்மா, புவனா, தறி இது மட்டும் தான் வேலு என்றாகியது.
  
புவனாவின் வீட்டில் அவர்கள் சென்றதும் இவர்கள் பக்க உறவுகளும் சொல்லிக்கொண்டு புறப்பட அது வரை முகத்தில் சிரிப்பை தவிர எதையும் காட்டாத செல்வி சட்டென முகம் மாறினார்.
“எல்லாரும் உள்ளுக்கு வாங்க” என்ற அவரின் சத்ததில் மற்றவர்கள் புரியாமல் அவர் முகம் பார்க்க, “ஒருக்க சொன்னா புரியாதா எல்லாரையும் வாங்க சொன்னேன்” என்றவர் யாரையும் பார்க்காமல் விடுவிடுவென் வீட்டிற்குள் சொன்றார்.
“என்ன ஆச்சு?? இவ்வளவு நேரம் நல்லா தான இருந்தா?? ம்மா குறிஞ்சி நீ எதாவது செஞ்சியா??” வினாயகம் அனைவரையும் பார்த்தவர் கேள்வியை குறிஞ்சியிடம் கேட்டார்.
“இல்லப்பா எனக்கு தெரியாது நான் எதுவும் பண்ணலை..”
தாமரைக்கு தெரிந்து விட்டது கோபம் தன் மீது தான் என்று… எதுவும் பேசாமல் சென்றவருக்கு நன்கு தெரியும் செல்விக்கு அத்தனை சுலபத்தில் கோபம் வராது.. அப்படி வந்தால் அது தணிவது என்பதும் அத்தனை சுலபம் இல்லை என்பதும்.
விசு “விசா நீ எதுனாச்சும் பண்ணுனியா??”
“ஏன் உங்களுக்கு என்ன பாத்தா எப்படி தெரியுது?? உங்க அம்மா கூட பிரச்சனை பண்ணுற மாதிரி இருக்கா??” கோபமாக அவனை முறைக்க….
“இப்ப என்ன நான் கேட்டேன்னு இவ்வளவு கோபப்படுற…. நீ எதாவது செஞ்சி இருந்தா சமாளிக்கலான்னு தான்…” அவன் இழுக்க..
“யாரு…?? நீங்க!!! சாமளிக்க போறீங்க.. அதுவும் உங்க அம்மாவ??? சும்மா வெறியேத்தாம வாங்க உள்ள…” என்றவள்  தாமரையை தான் பார்த்தாள்.
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி வீட்டினுள் வர செல்வி வாய்க்குள் எதையோ முனுமுனுத்தபடி இருந்தார்.
   
“என்ன  அண்ணி எதுக்கு இவ்வளவு கோபமா இருக்கீங்க?? சங்கரன் தான் கேட்டார்.
“எதுக்க?? அதோ அங்க இருக்காளே அவள கேளுங்க?? தாமரை பக்கம் கை காட்டினார் செல்வி..
அனைவரும் தாமரையை பார்க்க “க்கா நான் என்ன செல்ல வர்றேன்னு…” தாமரை ஆரம்பிக்க….
“வாய மூடு தாமர… எப்ப எது செஞ்சலும் நான் சொல்லுறத கேளுங்கன்னு ஒரு புராணம் பாட வேண்டியது..எப்ப தான் நீ திருந்த போற.. உன்னால எல்லாருக்கும் மனகஷ்டம் தான் அதிகமாகுது.. நாளைக்கு நம்ம வீட்டுக்கு புதுசா ஒரு பொண்ணு வர போகுது… ஏன் நீ அதை எல்லாம் யோசிக்க மாட்டீங்குற தாமர..”
“எய் செல்வி இப்ப என்ன ஆச்சுன்னு அந்த புள்ளைய போட்டு இப்படி திட்டுறவ…எதுன்னாலும் யோசிச்சு பேசு” வினாயகம் செல்வியை திட்ட…
“நான் பேசுறது இருக்கட்டும் முதல்ல அவள இந்த புள்ளைய பத்தி யோசிக்க சொல்லுங்க யார் இருக்க… என்ன ஏதுன்னு… பாக்குறது இல்ல. அந்த நேரம் அவளுக்கு என்ன தேணுதோ அதை பேச வேண்டியது..” குறிஞ்சியை காட்டி செல்வி பேச அனைவருக்கும் புரிந்து விட்டது.
சங்கரன் தான் கேட்டார் தாமரையிடம் “என்ன தாமர என்ன சொன்ன குறிஞ்சிய??”
அது அவங்க பொண்ணு வீட்டுகாரவங்க முன்னாடி வர வேண்டாண்ணு சொன்னேன்.. அன்னிக்கு பொண்ணு பாக்க போகும் போதே குறிஞ்சிய அங்க கொடுப்பீங்களான்னு ஒரு பேச்சு வந்தது.. அது தான் அவங்க வந்து போற வரைக்கும் அவள வெளிய வர வேண்டாம்னு அக்கா கிட்ட சொன்னேன்…”
“”இப்ப சரி அவங்க போற வரைக்கும் அவள வெளிய விடல நாளைக்கு கல்யாணத்துக்கு என்ன பண்ணுவ…அப்பவும்  நாலு பேர் கேக்க தான் செய்வாங்க… உள்ளயே சம்பந்தம் பண்ணுறீங்களா?? இல்ல வெளியவான்னு??? அதுக்கு பதமா நாம தான் பதில் சொல்லனும் அதை விட்டு உடனே உள்ள வைச்சு பூட்டுவிய??” செல்வி
“க்கா…!! என்னக்கா இப்படி கேக்குறீங்க..குறிஞ்சி இல்லாம கல்யாணம் எப்படிக்கா??” தாமரை பறிதாபமாக அவரை பார்க்க…
“எப்படிக்கான்னா… நீ தான் சொல்லனும் தாமர…. பொண்ணுன்னு இருந்தா நாலு பேர் சாரிக்க தான் செய்வாங்க அவங்க கேக்குறங்க சொல்லுறாங்கனு நாம வீட்டுக்குள்ளயே இருக்க முடியுமா?? இல்ல அவளுக்கு கல்யாணம் செய்யாம வீட்டுக்குள்யே வச்சுகிட போறோமா??”
செல்வி தாமரையை கேட்க அனைவரின் பார்வையும் அவர்களின் மீது தான் இருந்ததே தவிர அந்த பேச்சின் மையமான குறிஞ்சியை யாரும் கவனிக்க வில்லை…
“இல்லக்கா வர்றவங்க ஏதாவது வம்பு பேச போயி நம்ம பொண்ணு மனசுல எதாவது நினைச்சுட்டா..” தாமரை  என்ன நினைத்து சொன்னாரே..?? ஆனால் அதன் பொருள் “என் மேல அவ்வளவு கூடவா நம்பிக்கையில்ல..!!” என சரியாக தவறாக பதிந்து போனது  குறிஞ்சியின் மனதில்.
தாமரை அந்த வாக்கியத்தை முடிக்கும் முன்னமே “ம்மா..” என கோபத்தில் பக்கத்தில் இருந்த தட்டை எடுத்து வீசி இருந்தான் ரஞ்சன்.
அந்த நேரத்தில் அவனை அங்கு யாரும் எதிர் பார்க்கவில்லை என்பது அவர்களின் அதிர்ந்த முகமே சொன்னது.
விசு ஃபோன் செய்யும் போது “இன்னும் ஒன் ஹவர்ல வந்துடுவேன்” என்றவன் டிராபிக்கில் மாட்டிக்கொண்டான். ரஞ்சன் வீடு வந்து நூழையவும் தாமரை சொல்லவும் சரியாய் இருந்தது.
விசு எப்போதும் சிரித்த முகம் தான்… அவனை கோபடுத்துவது என்பது எல்லாம் முடியாத காரியம். விசாகவே சில முறை கேட்டு இருக்கிறாள் “உங்களுக்கு மானம், ரோசம் இது எல்லாம் இருக்கா?? எவ்வளவு திட்டுறேன் எதுவுமே நடக்காத மாதிரி அமைதியா இருக்கீங்க??” என..
“குடும்பத்துல கத்தி பேசி, கோபத்த காட்டி என்ன செய்ய.. எந்த யூசும் இல்ல.. யூஸ் இல்லா ஒன்னு நமக்கு எதுக்கு…” என்று தான் அவளின் வாயை அடைப்பான்…
ஆனால் ரஞ்சனுக்கு சட்டென கோபம் வந்து விடும். அவனுக்கு கோபம் வந்தால் அவன் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் தேள் கடியை விட மோசமாக தான் இருக்கும். அந்த நேரங்களில் அவனை சமாளிக்க கூடியவன் விசு மட்டும் தான்.
இப்போதும் ருத்திர மூர்த்தியாக நின்று இருந்தவனை சமாதானம் செய்ய தான் சென்றான் விசு. “டேய் பக்கத்து வராத…” விசுவை  எச்சரிக்கை செய்தான் ரஞ்சன்.
“சரி வரலை ஆனா நீ அமைதியாகு… அவங்க ஒன்னும் தப்பான அர்த்தத்துல அதை செல்லல…ஏதோ வாய் தவறி வந்துடுச்சு.. சித்தி என்னிக்காவது தப்பா பேசி இருக்காங்களா??”
“அவங்க எப்படி சென்னாலும் அதுக்கு ஒரே அர்த்தம் தான்..” “சரி அப்படியே இருக்கட்டும் அதுக்கு நீ எதுக்குடா இப்படி வெடச்சுகிட்டு நிக்குற.. உன்ன பாத்தா எனக்கே பயமா இருக்கு கொஞ்சம் எறங்குடா.. இப்ப தான் உள்ள வந்த வந்ததும் குதிக்கனுமா??” அவனை பேசவிடாமல் பேசிய படி அவன் மீது கை போட்டான்.  
“டேய் சின்னவனே என்ன இது?? வந்ததும் இப்படி தான் பேசுவியா கொஞ்சம் கூட மரியாதை இல்லாம..” வினாயகம் கேட்கவும்,  தாமரையை முறைத்த படி திண்ணையில்  அமர்ந்து கொண்டான் ரஞ்சன்.
“இப்ப எதுக்கு அவனை  சத்தம் போடுறீங்க… இவ பேசுனது சரியா?? நம்ம வீட்டு பொண்ணு இல்ல….. தான் பெத்த பொண்ணு மேல எவ்வளவு நம்பிக்கை பாருங்க..” சங்கரன்…
இவர்களின் பேச்சில் குறிஞ்சி அங்கிருந்து  சென்றதை யாரும் கவனிக்க வில்லை…

Advertisement