Advertisement

இருவருக்கும் தலை முடி இடையை தாண்டி தான் இருக்கும். உயரம் சற்று குறைந்தாலும் தாமரையும் செல்வியும் ஒரு வழி செய்து விடுவார்கள். ஆரம்பத்தில் விசாகவிற்கும் நீளமான முடி அவஸ்தையாக தான் இருந்தது. செல்வி கட்டி வைக்கும் மல்லிகை பூவிற்காகவே அவள் அந்த நீள முடியை வைத்துக்கொண்டாள்.
விசாகாவின் வீட்டில் அவளின் அம்மாவும் வேலைக்கு போவதால்  அவளின் முடியை வளர்ப்பதுக்கு எல்லாம் நேரம் கிடையாது. முடி தோள் வரை தான் இருக்கும். இங்க செல்வியும் தாமரையும் முடியை பராமறிக்கும் அழகே தனி… ஞாயிறு ஆனால் எண்ணெய் குளியலில் ஆரம்பிக்கும் காலை மத்தியம் கோழி சூப், கறி குழம்புடன்  நல்ல தூக்கத்தில் முடியும். மற்ற நாட்களிலில் பூச தனியாக எண்ணெய் காய்ச்சி வைப்பார்கள்.
“எல்லா வீட்டுலையும் வெள்ளி கிழமை எண்ணெய் குளியல்ன்னா இந்த வீட்டுல மட்டும் ஞாயிறு எதுக்கு??” விசாக கேட்க…
“உங்களுக்கு தான் வெள்ளிகிழமை வந்துட்டா அன்னிக்கு தான் ஸ்பெசல் கிளாஸ், டெஸ்ட்ன்னு ஏதாவது வருது. அதுக்கு தான் ஞாயித்துகிழமை. இப்ப எந்த கிளாசுக்கும் போக முடியாதுல??”  செல்வி கிண்டலாக சொன்னாலும் அது தான் உண்மை. குறிஞ்சிக்கு தலைக்கு எண்ணெய் வைப்பது என்றால்  வேப்பங்காயாக கசக்கும் அதனாலேயே வெள்ளி கிழமை என்றால் ஏதாவது காரணம் சொல்லி ஓடிவிடுவாள். 
“சரி முகத்தை தூக்காத உனக்கு  உங்க அண்ணன் வேலைய பத்தி தெரியும் தான…. ஆபிஸே அவர்னால மட்டும் தான நடக்குதுன்னு நெனப்பு..வாட்ச்மேன் கூட மாசத்துல ரெண்டு நாள் லீவ் வாங்கிட்டு போறாரு.. ஆனா இங்க அவர் டியூட்டியையும் உங்க அண்ணன் தான் சேத்து செய்றாரு.. இதுல உனக்கு கோவம் வேற வருதா?? நியாத்துக்கு நான் தான் எங்க அம்மா வீட்டுக்கு பொட்டிய கட்டனும்… இங்க எல்லாம் தலைகீழ நடக்குது…நா எதாதவது கேக்க முன்ன இங்க வந்து நின்னுடுறாரு.. உங்க அம்மாங்க கேக்குற கேள்விக்கு பதில நான் யோசிச்சே உங்கம்மா வளத்த முடியில அரையடி குறைஞ்சுட்டது…” சாதாரணமாக ஆரம்பித்தவள்  ஆத்திரத்துடன் முடிக்க….
“இந்தாங்க தண்ணி… குடிச்சிட்டு யூ கன்டின்யூ…” குறிஞ்சி தண்ணீர் சொம்பை நீட்ட.,
“என் பாடு உனக்கு கிண்டலா இருக்கா…” விசாக குறிஞ்சியை முறைக்க வாசலில் வண்டி சத்தம் கேட்டது.
“அண்ணி வந்துட்டாங்க…” குறிஞ்சி அறையின் ஜன்னல் வழியே பார்த்து சொல்ல, விசாகா “ வா சீக்கரம் போகலாம் இல்லன்னா அதுக்கும் பாட்டு சத்தம் கேக்கும்..”
“இருந்தலும் எங்கள நீங்க ரொம்பத்தான் பாடுறீங்க அண்ணி..”
“ஏது உங்க அண்ணன் பாட்ட விடவா..!!” விசாகா ஆச்சர்யம் போல் வாயில் விரல் வைக்க
 
“அங்க பொண்ணு வீட்டுகாரவுங்க எல்லாம் வந்துட்டாங்க இன்னும் இங்க என்ன அரட்டை ரெண்டு பேருக்கும்… விசாக போ…. அங்க உன் புருசன் கூட நின்னு வந்தவங்கள வான்னு சொல்லு” செல்வி அதட்ட, விசாகா “சரிங்கத்தை” என்றவள் குறிஞ்சியை பார்த்து “பார்ததுக்க” என கண் காட்டியவள் விசுவுடன் சேர்ந்து நின்று கொண்டாள்.
செல்வி குறிஞ்சியை அங்கேயே பிடித்து நிப்பாட்ட “என்ன பெரியம்மா”
“நீ அங்க போகாத குறிஞ்சி அவங்க வீட்டுக்குள்ள வந்ததும் வாங்கன்னு கூப்புடு போதும்” என்றவரை தான் வித்தியாசமாக பார்த்தாள் குறிஞ்சி.
“எதுக்கு பெரியம்மா நான் போனா என்ன??”
“நிறைய பேர் வந்து இருக்காங்கடா அங்க எதுக்கு போய் நின்னுகிட்டு பொம்பளைங்க உள்ள வந்ததும் பேசு..” என்றதும் அவரை ஒரு மாதிரி பார்த்துவிட்டு முன் அறைக்கு சென்றாள்
செல்வி பெரு மூச்சினை விட்டவர் தாமரையை திரும்பி பார்த்து முறைத்து விட்டு தான் சென்றார். தாமரை, விசாக வந்ததும் செல்வியிடம் “க்கா வாசல்ல விசுவையும் விசாகவையும் மட்டும் நிறுத்துங்க… குறிஞ்சி உள்ள இருக்கட்டும்” 
“எதுக்குடி அப்படி செல்லுறவ?? வீட்டுல இருக்குற பெண்ணு வந்தவங்கள வா சொல்லையின்ன மரியாதையா இருக்குமா??”
“க்கா… அண்ணிக்கு பொண்ணு பாக்க போனப்பவே மாப்பிள்ளைக்கும் தங்கச்சி இருக்குல அப்ப பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்க விருப்பமான்னு??? அந்த பக்கம் பேச்சு வந்தது.. அதுக்கு தான் செல்லுறேன் அவ வர வேண்டாம்னு”
“ஏண்டி யாரோ கேட்டதுக்காக நாம  புள்ளைய வீட்டல வச்சு பூட்டவா முடியும்…!! இருந்தலும் நீ ரொம்ப தான் யோசிக்குற தாமர இது நல்லதில்ல..”என்றார் கோபமாக  
“நல்லதோ கெட்டதோ இப்ப அவ வாசலுக்கு வர வேணாம் நீங்க சொல்லுறீங்களா இல்ல நானே சொல்லட்டா..” தாமரை
“ஆத்தா நீ வாய மூடு… நானே பதமா சொல்லிக்குறேன் நீ பேசி மத்தவங்க முன்னாடி அவ முகத்த வாட வைக்காத..அவங்க போகட்டும் அப்பறம் இருக்கு உனக்கு” செல்வி  தாமரையை எச்சரிக்கை செய்தவர் குறிஞ்சியை “வீட்டுக்குள்ளேயே இரு” என்று விட்டார். வீட்டிற்கு இவர்கள் பக்க ஆட்களும் வர ஆரம்பித்துவிட்டதால் ஒரு அளவிற்கு மேல் பேச முடியாமல் தாமரையை அனுப்பிவிட்டார் செல்வி. 
டிராவலர்ஸ் வண்டியில் இருந்து செல்வம் முதலில் இறங்க, பின்னால் கமலமுடன் மற்ற சொந்தங்கள் இறங்கி வர வாசலில் நின்று இருந்த வினாயகம், சங்கரன், விசு, விசாகா அனைவரையும் “வாங்க வாங்க” என அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் போக வேலுமணி மட்டும் வாசலில் நின்றான்.
வேலு வராததை சங்கரன் கவனித்தவர் “வேலு உள்ள வாப்பா” என்றார்.
“என் ஃபிரண்ட்  பின்னாடி வர்றான் மாமா அவன் வந்ததும் வர்றேன் நீங்க போங்க..” என்றவன் வாசலுக்கு வந்து எட்டி பார்த்தான்.
சிறிது நேரத்தில் அவன் வர வேலு “பின்னாடியே தான வந்த அப்பறம் எதுக்குடா லேட்டு”
“அது வர்ற வழியில சுகுணாவ பாத்தேன் மச்சான் அது தான் லேட்”
“சுகுணாவா??”
“ஆமாம் மச்சான் அண்ணலும் நோக்க… அவளும் நோக்கன்னு…. ஒரே நோக்கியா மயம் தான்..” 
“அப்பறம்”  வேலு நந்தீசனை கண்டிப்புடன் பார்த்தான். 
“அப்பறம் இடையில் அவன் அவள் அண்ணனும் அப்பனும் நோக்க!!! நான் உன்ன பாக்க வந்துட்டேன்” என்றவனை “இதுக்கு தான் மலரை எங்க கூட அனுப்பி வைச்சியா??”
“டேய் பாவி உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பாக்க வந்து என்னைய புது மாப்பிள்ளை ஆக்கிடாதடா…!!! வர்ற வழியில நிஜமாவே சுகுணாவ  அவ புருசங் கூட பாத்தேன்…  மாசமா இருக்கா அது தான் ரெண்டு வார்த்தை பேசிட்டு வந்தேன் அது தான் லேட் வேற எதுவும் இல்ல…” பாவமாய் பார்த்தவனை “நம்பிட்டேன் உள்ள வா..” என இருவரும் வீட்டிற்குள் போக…
“இதோ மாப்பிள்ள வந்துட்டார்ல பேச்ச ஆரம்பிக்கலாம்..” என காலையில் வந்திருந்த பெரியவர்…
அவர் சொன்னதும் “அட வரலையின்னு சொல்லிட்டு ரஞ்சன் வந்ததுட்டான் போல அண்ணி” குறிஞ்சி விசாகாவின் காதில் சொல்லியவள் அவள் கையை பிடித்து இழுத்ததையும் தட்டிவிட்டு வாசலுக்கு  செல்ல அறையின் பின் வாசலுக்கு போக அங்கிருந்து தெரிந்தது வேலுவின் முகம் தான்…
“அட நம்ம வேலு தம்பி!!!” குறிஞ்சி சொன்னது அட்சரம் பிசகாமல் அவன் காதில் விழுந்தது. அவன் அவளின் சத்தம் வந்த திசை பார்க்க…. பார்த்தவன் கண்கள் இமைக்க மறந்து தான் போனது.
பச்சை பட்டு பாவடை தவணியில் கன்னகுழி விழ சிரிக்க நின்று இருந்தவள் உருவத்தை சேலையாய் நெய்ய ஆரம்பித்தது வேலுவின் மனம். வேலு பார்த்ததை பார்த்தவள் வரவேற்ப்பாய் சிறு சிரிப்புடன் தலை அசைத்தவள் உள்ளே சென்றுவிட அவளை பார்த்து இருந்தவன் கவனத்தை நத்தி தான் கலைத்தான்.
“என்ன மாப்பிள்ள இங்கயே நின்னுட்ட??”
அவன் கேட்டதில் தலையை உழுக்கியவன் “ஒன்னும் இல்லடா..” என வாசலை தாண்டி விட்டுக்குள் நுழைந்தான். 
   
சம்பிரதாய விசாரிப்பு பேச்சு அங்கு இருந்தாலும் வேலுவின் மனம் முழுதும் குறிஞ்சியின் “வேலு தம்பி” என்ற வார்த்தை மட்டும் தான் எதிரெலித்து கொண்டு இருந்தது அவளின் பிம்பத்துடன்…
அவனின் எண்ணம் அவனுக்கே “என்ன இது என தோன்ற??” முயன்று  அவளிடம் இருந்து மனதை மாற்றி காலையில் பொன்னு சொன்னதை வினாயகத்திடம் கேட்டான்….
“மாமா தப்பா நினைக்காதீங்க” என பொன்னு சொன்தை சொல்ல அங்கு அனைவரின் முகத்திலும் யோசனை தான்..
வினாயகம் “ஒரு நிமிசம் தம்பி…” என்றவர் “சங்கரா, விசு உள்ள வாங்க” என அழைத்து சென்றார்.
“என்னப்பா அவங்க இப்படி சொல்லுறாங்க..கல்யாணம் மதுரையில வைச்சா சரி படுமா…இத்தனை பேரையும் எப்படி கூட்டிட்டு போறது?? ஒருத்தர் விட்டு போனாலும் அது எவ்வளவு பிரச்சனை ஆகும்??” வினாயகம்
“அது தாண்ணா எனக்கும் யோசனையா இருக்கு??” சங்கரன்.
“வீட்டு பொம்பளைங்க அமைதியா இருந்தா என்ன அர்த்தம்… உங்களுக்கும் தோணினதை சொன்னா தான நாங்களும் முடிவு எடுக்க முடியும்” வினாயகம் செல்வியை பார்த்தார்.
“இதுல நாங்க சொல்ல என்ன இருக்கு…மீனாட்சி கோயில கல்யாணம் நல்லது தான… கொஞ்சம் அலைச்சல் தான்… இருந்தாலும் பரவாயில்ல கல்யாணத்துல இதை எல்லாம் பாக்க முடியுமா?? அதுவும் அங்க அப்பா வேண்டிக்கிட்டதுன்னு சொல்லுறப்ப வேற யோசனை எதுக்கு?? என்ன தாமர நான் சொல்லுறது சரி தான??” தமரையிடம் முடிவை விட்டார் செல்வி.
“அக்கா சொல்லுறதும் சரி தான் மாமா எல்லாம் சமாளிக்கலாம்.” முடிவாய் தாமரையும் மதுரையில் தாலி கட்ட ஒத்துக்கொண்டார்.  
வினாயகம் ஹாலுக்கு வர அவர் முகத்தை தான் வேலுவும் செல்வமும் பார்த்தனர். “ஒன்னும் பிரச்சனை இல்ல செல்வம்…. உங்க ஆசை படி கல்யாணத்தை மதுரையியே வச்சுக்கலாம். இப்ப வாங்க கை நனைக்கலாம்” வினாயகம் சொல்ல அங்கு பந்தி நடக்க ஆரம்பித்தது…
 

Advertisement