Advertisement

                           ஓம் நமச்சிவாய
அத்தியாயம் 2
பொன்னம்மா புவனாவை பார்த்தபடி இருக்க “ம்மா பாத்தது போதும்  எனக்கு பசிக்குது வேகமா எதாவது செய்..” 
“ம்ம் செஞ்சிட்டு வர்றேன் இரு” என்றவர் சமையல்கட்டுக்கு போக புவனா இத்தனை நேரம் நிறுத்தி வைத்து இருந்த தன் தூக்கத்தை தொடர்ந்தாள்.
புவனா எப்போதும் இப்படி தான். புவனாவிற்கு ஆறு வயது முத்து தவறும் போது. அப்போது இருந்து ஆரம்பித்தது அவளின் இந்த பிடிவாத குணம்.அவளின் சந்தேஷத்திற்காக பக்கத்து வீட்டு பிள்ளைகளை அடிப்பதில் ஆரம்பித்தது. ‘தகப்பன் இல்லாத பெண்  தானும் கண்டிக்க ஆரம்பித்தால் மனம் சுருங்கி விடும் பெரியவள் ஆனால் சரியாகிவிடும்’ என்று பொன்னம்மா நினைக்க… அதுவே அவளின் குணமாகி விட்டது இப்போது.
அவள் எதையும் பொன்னம்மாவிடம் மட்டும் தான் கேட்பாள். வேலுவிடம் சற்று பயம் உண்டு. அதனால் பொன்னம்மா வழியாக அனைத்தையும் முடித்து கொள்வாள் புவனா… செல்வமும் கமலாவும் கண்டிப்பதால் அவர்களிடமும் அளவான பேச்சு தான்.
 
  
“ம்மா அவ செல்லுறத எல்லாம் செய்யாதீங்க எது வேணும் வேண்டாம்ன்னு சொல்லி கொடுங்க” வேலு சொன்னாலும் 
சிறுமியாக இருக்கும் போது “சின்ன பொண்ணு” என்றவர் புவனா வளர்ந்ததும் “விடுப்பா நம்ம கிட்ட இருக்குற வரைக்கும் தான் அவ நினைச்ச படி இருக்க முடியும் அவளுக்குனு குடும்பம் வந்துட்டா அப்பறம் இப்படி இருக்க முடியுமா..”என  தான் சொல்வார்.
வேலுவுக்கு பதிநான்கு வயது தான் அவர்களின் குடும்ப தொழில் கைக்கு வரும் போது. அது வரை பள்ளி, விளையாட்டு, நண்பர்கள் என சென்ற வாழ்க்கை மாறி பட்டு, நூல் என்று ஆனது.
சுடலையுடனும் முத்துவுடனும்  விடுமுறை நாட்களில் மட்டும் தான் தறிக்கு வந்து பழக்கம் வேலுவுக்கு. இப்போது முழுவதும் அவன் பெறுப்பு என்னும் போது அதை பற்றி தெரிந்து கொள்ளவே அவனுக்கு சில மாதங்கள் ஆகியது.
வீட்டிற்கு வந்தால் கணவனை நினைத்து அழும்  பொன்னம்மாவையும் தந்தையை தேடி அழும் புவனாவையும் சிரிக்க வைப்பது மட்டுமே அவனுக்கு முக்கியமாக தோன்ற அதில் புவனாவின் பிடிவாத குணம் அவனுக்கு பிடிபடவில்லை.   
வேலு தெளிந்து கேள்வி கேட்க்கும் போது பொன்னம்மாவின் “விடுப்பா” என்ற பதில் மட்டும்தான் வரும்
கல்யாணம் பேசும் போதே பெண் வீட்டில் திருமணம் என்றதை புவனா ஒத்து கொள்ள வில்லை. “என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் அவங்க ஊர் பாக்கனும் சொல்லுறாங்க… அதனால கல்யாணத்தை மாப்பிள்ளை ஊர்ல வைக்க சொல்லுங்க” என்றாள் 
“அதுவும் சரிதான் பொண்ணு மாப்பிள்ளைய கூட்டிட்டு அலையிற வேலை இல்ல மண்டபத்துலயே எல்லாம் முடிச்சி பொண்ணையும் விட்டுட்டு வரலாம்” என  வினாயகமும் ஒத்துக்கொண்டார்.
பெண் பார்த்த அன்றே ஒப்பு தாம்பூழமும் மாற்றி கல்யாணத்தின் மற்ற விபரங்களை வாய் வார்த்தையாக முடிவு செய்து இருந்தனர். வெறும் பெண் பார்ப்பது தானே என்று குடும்ப ஆட்கள் மட்டும் வந்தது இருக்க முடிவில் அன்றே அனைத்தும் முடிவாகி விட்டது. இரு பக்க உறவுகளும் இல்லை என்பதால் இன்று உறவுகளுக்கா தான் அங்கு செல்வது. 
அதில் இரண்டு நாட்களுக்கு முன் புவனாவின் தோழி திருமணம் திருப்பதியில் நடந்து இருக்க, அதற்கு சென்று வந்த மற்ற தேழிகள் அதை பற்றி பேச…
புவனா பொன்னம்மாவிடம் “அந்த கோவில் அவ்வளவு நல்லா இருக்காம்…என் ஃபிரண்ட்ஸ் செல்றாங்க… நீங்க அண்ணா கிட்ட சொல்லுங்க கல்யாணத்தை அங்க வைக்க சொல்லி” என அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டாள்.
“இங்க இருந்து அவ்வளவு தூரத்துல யாராவது கல்யாணம் வைப்பாங்களா…!! எப்படி எல்லாரையும் எப்படி கூட்டிட்டு போறது… அதுக்கு மாப்பிள்ள வீட்டுல சம்மதிப்பாங்களா…?? அதுவும் ஏற்கனவே பொண்ணு வீட்டுல வேணாம் மாப்பிள்ளை வீட்டுல வைக்க சொன்னதுக்கே அவங்க அவ்வளவு யோசிச்சாங்க.. இப்ப போய் திருப்பதியில தாலிகட்டலாம்னு சொன்னா அவ்வளவு தான்.. போ போய் ஆக வேண்டிய வேலைய பாரு” பொன்னம்மா சொல்ல..
அங்கேயே அமர்ந்து விட்டாள் புவனா. “அப்பா இருந்து இருந்தா நான் சொன்னதும் சரி சொல்லி அவங்க கிட்ட பேசி இருப்பார்…நீங்க எதுன்னாலும் உங்க பையனத்தான பாப்பீங்க… இதே அண்ணா கேட்டு இருந்தா சரி சொல்லி இருப்பீங்க தான.. போங்க எனக்கு யாரும் இல்லை… எனக்கு யாரும் வேண்டாம் நான் எப்படியோ போறேன்” 
புவனா வேலு இல்லாத போது பொன்னம்மாவிடம் எடுக்கும் ஆயுதம்  “அப்பா” என்ற வார்த்தை தான். அதை சொன்னதும் பொன்னம்மா எதையாவது பேசி வேலுவை சரிகட்டி விடுவார். அவனுக்கும் இருக்கும் வேலையில் அவர் சொல்லுவது எந்த அளவிற்கு உண்மை என்பதை எல்லாம் ஆராயும் நேரம் இருக்காது அவனுக்கு…
அதை தான் இப்போதும் புவனா செய்தாள். அவள் “அப்பா” என்றதும் பொன்னம்மா தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்…
பென்னம்மாவை கீழ் கண்ணால் பார்க்க அவர் யோசனையில் இருந்தது தெரிந்தது… “ம்மா சொல்லும்மா” புவனா 
“திருப்பதியில முடியாது வேணுன்னா மதுரையில வைக்க சொல்லி பாக்குறேன்” என்றார் பொன்னம்மா.
“மதுரையிலயா.. ம்ஹும் முடியாது..திருப்பதியில தான் வைக்கனும்” புவனா பிடிவாதமாக பேச..
“பிடிவாதம் பிடிக்காத புவனா இதுவே அவங்க ஒத்துகிட்டா தான்” பொன்னம்மா சற்று கடிந்து பேச “சரி உங்களுக்கா ஒத்துக்குறேன்” என்றாள் ஏதோ போனால் போகிறது என்று.
அவளின் நினைவும் மதுரை தான் தோழிகளிடமும் “என் கல்யாணமும் மதுரையில் தான்” என்றிருந்தாள். முதலிலேயே “மதுரை” என்றுவிட்டால் யாரும் ஒத்து கொள்ள மாட்டார்கள் என்று தான் திருப்பதியை சொன்னது.
காலையில் இருந்து இந்த விசயத்தை வேலுவிடம் எப்படி பேசுவது என்ற சிந்தனையில் தான் இருந்தார் பொன்னு.  அவரை கவனித்த படியே தயாராகியவன் “ம்மா என்ன யேசனை காலைல இருந்து??”
“ம்ம் அது வந்துப்பா” நிறுத்தியவர் அவன் முகம் பார்க்க “என்ன சொல்லுங்க”
“சொன்னா கோவிச்சுக்க கூடாது”
“அப்ப கோவம் வராத மாதிரி சொல்லுங்க” என்றான் சிறு சிரிப்புடன். வெகு வருடங்களுக்கு பிறகு இந்த இளக்கமான குரலில் வேலு பேச மகனை தான் பார்த்திருந்தார் பொன்னு.
முப்பது வயது வேலுவுக்கு. பார்த்தால் அப்படி தெரியாது…. சராசரிக்கும் சற்று அதிக உயரம்,  நல்ல நிறம் அலைச்சல் காரணமாக சற்று மங்கி தெரிந்தான். தாத்தனை போல் பெரிய மீசை வைக்க ஆசை அவனுக்கு. ஆனால் அதை பராமரிக்க நேரம் தேவை!!! என்பதால் கட்டை மீசை தான். அது இன்னும் அழகு அவனுக்கு. சிரிப்பை மறந்தது போல் இருந்த உதடு இன்று சிறிது விலக ஆண்ணழகன் தான் வேலு.
 
“என்னம்மா எதுவோ செல்ல வந்துட்டு என் முகத்தையே பாத்துக்கிட்டு இருக்கீங்க” பொன்னுவின் அருகில் வந்து நின்றான்.
“அது உங்க அப்பா புவனா கல்யாணத்தை மீனாட்சி சந்நதியில நடத்துறதா வேண்டிக்கிட்டு இருந்தாரு அதை நான் மறந்துட்டேன் நீ கொஞ்சம் சம்பந்தி வீட்டுல பேசுறியா தாலிகட்டு மட்டும் அங்க வைச்சுக்கலாம்னு” சொல்லி வேலுவின் முகம் பார்க்க…
“இது நிஜமாவே அப்பா தான் வேண்டிக்கிட்டாறா…??” கேள்வி பொன்னுவிடம் என்றாலும் பார்வை மட்டும் புவனாவை தான சந்தேகமாக பார்த்தது. 
“என்னடா அப்படி ஒரு சந்தேகம் உனக்கு… உனக்கு கேக்க முடியாதுன்னா சொல்லு நான் செல்வத்தை விட்டு கேட்டுக்குறேன்” பொன்னு முகம் தூக்க “எப்பவும் என்னைய டெட் என்டுல நிறுத்தியே காரியம் சாதிச்சுடுங்க… மாமாகிட்ட நானே பேசிக்கிறேன்..” என்றவன் தான் அனைவரையும் அழைத்து கொண்டு விருதுநகர் புறப்பட்டான் 
“தாமர வந்தவங்களுக்கு குடிக்க தண்ணி கொண்டு வந்து முன்னாடி வைய்யி அவங்க வர்ற நேரமாச்சு… எங்க இந்த பொண்ணு தலையில பூவ வைக்காம என்ன பண்ணுறா..இவள கிளப்புறதுக்குள்ள இடுப்பே விண்டு போகுது.. போற வீட்டுல இப்படி இருந்தா பாவம் இவ மாமியா..”
“அடியேய்னு கூப்பிட பொண்டாட்டி இல்லயாம் இதுல கொழந்த அப்பான்னு கூப்புடு தாம்..”தாமரை சொல்லி செல்வியை பார்க்க “என்னடி ஏதோ சாட பேசுற”
“சாடை எல்லாம் பேசல… நேராவே தான் சொல்லுறேன்..இதை தான  நானும் சொல்லுறேன்… கேக்க மாட்டேன்னு வீம்பு செய்றா…. அதை சொன்னா மட்டும் என்ன திட்ட வந்துடுறீங்க” தாமரை ஆரம்பிக்க
“ஆத்த போதும் அந்த பிஞ்ச சொல்லலையின்னா உனக்கு ராவுக்கு ஒறக்கம் காணாதே உன் வாய சத்த நேரம் மூடு எல்லாரும் வர்ற நேரம் ஆச்சு போ முகத்த சரி பண்ணிட்டு வாசல்ல போயி நில்லு” செல்வி சொல்லிய படி மொட்டாக தொடுத்த குண்டுமல்லியை எடுத்து கொண்டு குறிஞ்சியின் அறைக்கு சென்றார்..
“ஆத்தா குறிஞ்சி இந்த பூவ வைக்காம என்ன பண்ணுற??”
“வைச்சுக்கிட்டேன் பெரியம்மா இது உங்களுக்கும் அம்மாவுக்கும் தான்… ஏன் இன்னும் நீங்க வைக்கலை??”
“ஆமண்டி இப்பத்தான் எனக்கும் உன் ஆத்தாலுக்கும் வயசு திரும்புது நாங்க தொங்க தொங்க வைக்க…நீ தான் வயசு புள்ள தலை நிறைய வச்சு கண் நிறைய இருக்கனும்.. வா இன்னும் கெஞ்சம் வச்சுக்க”
“போதும்மா இப்பவே தலை நிறைய தான் இருக்குது.. ஆமா அண்ணா அண்ணி வந்தாச்சா?? குட்டியும் கூட வர்றான் தான…” 
“அவன் படிக்குற கலெக்டர் படிப்புக்கு கூட்டிக்கிட்டு வந்தா படிப்பு கெட்டு போகும்ல அதனால உஙக அண்ணி அவனை கூட்டிட்டு வரலையாம்…”
“பெரியம்மா அது வந்துட்டும் போறதால ரித்து அடம் பிடிப்பான் அதுக்கு தான் அண்ணி விட்டுட்டு வருவாங்க..நீங்க வாங்க கீழ போகலாம்” இருவரும் இறங்கி வர வாசலில் வந்து நின்றனர் விசுவும் விசாகாவும்.
“அண்ணி” என  குறிஞ்சி குடுகுடுவென ஓட அவள் கட்டி இருந்த பாவாடை தடுக்க “ஏய் பாத்து வாடி.. உனக்கு தான் கால் இடருதுல  கொஞ்சம் ஏத்தி கட்டுனா தான் என்ன??” விசாக அவளுடன் சேர்ந்து கொண்டாள்.
“ஏத்தி கட்டுனா பாவாடை அழகே போயிடும் அண்ணி இப்படி தழைய தழைய இருந்தா தான் அழகா இருக்கும்” 
அண்ணி மட்டும் தான் எப்பவும் தெரிவாளா…?? என்னைய எப்பதான் கணக்குல சேத்துப்ப…” விசு குறைபட.
“நேத்தே வர்றேன்னு சொல்லிட்டு இன்னிக்கு வர்றவங்கல எல்லாம் நான் கணக்குல வைச்சுக்குறது இல்ல..” குறிஞ்சி விசுவின் முகம் பார்க்காமல் பதில் சொல்லி சென்றாள் மாடிக்கு விசாகாவுடன்.
போகும் அவர்களை தான் விசு பார்த்து இருக்க சங்கரன் “விசு ரஞ்சன் எங்க இருக்கான்னு கேளு… அவங்க போறதுகுள்ள இவனும் வந்துட்டா நல்லா இருக்கும்” அவனுக்கு வேலை செல்ல வீடு கொஞ்சம் பரபரக்க ஆரம்பித்தது
“எதுக்குடி உங்க அண்ணன் கூட பேசாம வர்ற பாரு முகம் அப்படியே வாடிப்போச்சு” விசாக கணவனுக்கு பறிந்து வர…
“பேசாதீங்க அண்ணி… மதுரைக்கு போகனும் ரெண்டு நாளைக்கு முன்ன வாங்கன்னு சொல்லிருந்தேன் தான… நீங்க இன்னிக்கு காலையில வர்றீங்க…!!”குறிஞ்சியின் பேச்சில் மட்டும் தான் கோபம் இருந்தது கைகள் விசாகவின் புடவையின் மடிப்பை சரி செய்து அவளின் சடை உயரத்திற்கு பூவை கட் செய்த படி இருந்தது.

Advertisement