Advertisement

“இப்படியே செல்லம் கொடுத்து அவள கெடுத்து வைச்சு இருக்கீங்க..ஒரு பேச்சு கேக்குறது இல்ல இருக்கட்டும் எல்லாம் வந்துட்டு போகட்டும் பேசிக்குறேன்” நொடித்த படி பின்கட்டுக்கு சென்றார்.
“நீயும் எதுக்குடா அம்மா செல்லுற படி வைச்சுக்குற”
“இல்லையின்னா மட்டும் அவங்க திட்டுறதே இல்லையா..இங்க உக்காராத… அங்க போகாத…. இப்படி இருன்னு… நீங்களே செல்லுங்க அவங்க பேச்சை மீறி நான் ஏதாவது செய்றேனா?? இல்ல தான அப்பறம் யாரவது சொல்லிட்டா போதும் ஆரம்பிச்சுறாங்க…. அவங்க சொல்லுறத உண்மையின்னு நம்பி என்ன பேச கூட விடுறது இல்ல… அப்ப நானும் அப்படி தான் செய்வேன்”
“வாய்ல அடி என்ன பேச்சு பேசுற.. பெத்தவ உன்னைய ஒரு வார்த்த சொல்ல கூடாத… உடனே முகத்துல கட்டிக்கிட்டு வருவியா சண்டைக்கு… அவ பயம் தான் உனக்கு தெரியுமே அப்பறம் எதுக்கு அவ கிட்ட மல்லுக்கு நிக்குற… இனி அவ சொன்னா எதுத்து பேசாத..என்ன நான் சொன்னது ஏறுச்சா??”
“ம்ம் நல்லா ஏறுச்சு காரம் மூக்குல…!!! பாருங்க அங்க”என குறிஞ்சி அடுப்பை காண்பிக்க “அய்யோ உன்கிட்ட பேசிக்கிட்டே காரம் போட்டுட்டேனா” அவர் சட்னியின் காரத்தை தாளிப்பில் சரி செய்தார் செல்வி.
சிறு வயதில் இருந்தே தாமரைக்கு யாரும் தன்னையோ தன் குடும்பத்தை சேர்ந்தவர்களையோ யாரும் ஒரு வார்த்தை செல்லி விட கூடாது என்பதில் அத்தனை கவனமாக இருப்பார்.  சில சமயம் அடுத்தவர் பேச்சை கேட்டு வீட்டில் சண்டைகள் வந்ததுண்டு. 
செல்வியோ வினாயகமோ இருந்தால் அதை வாய் வார்த்தையாக முடித்து விடுவார்கள். அவர்கள் இல்லாத நேரங்களில் ரஞ்சனுக்கோ இல்லை குறிஞ்சிக்கோ அடி கிடைக்கும் இதில் அதிகம் பாதிப்பது குறிஞ்சி தான்.ஒரு வயதுக்கு பின் தாமரை கை நீட்டுவது இல்லை என்றாலும் அவரின் பேச்சில் “அப்படி செய்தால் தான் என்ன..” என நினைப்பாள் குறிஞ்சி. 
அனைவரும் சொல்லியாகிவிட்டது தாமரையின் இந்த குணத்தை மட்டும் மாற்ற முடியவில்லை மற்றவர்களால். அதனால் இப்போது அவரை விட்டு குறிஞ்சிக்கு தான் அறிவுரை தருவது. அவளும் சில நேரங்களில் துடுக்காக பேசி இப்படி குட்டு வாங்கி கொள்வாள் தாமரையிடம்.
வெளியே பேச்சு சத்தம் கேட்க “குறிஞ்சி வெளிய யாருன்னு பாரு…சம்பந்தி வீட்டு ஆளுங்க வந்து இருக்க போறாங்க”
குறிஞ்சி வாசலுக்கு வந்தவள் வெளியில் அமர்ந்து இருந்தவரை பார்த்து “வாங்க தாத்தா” அழைத்தாள்.
“யாரு?? குறிஞ்சியா… எப்படி வளந்துட்டா…” 
“நீங்க அடிக்கடி இந்த பக்கம் வந்தா தெரியும் மாமா…நீங்க தான் விஷேசம் வச்சாதான் வருவேன்னு பிடிவாதமா இருக்கீங்க…அப்பறம் பேத்தி வளந்து தான் நிப்பா…”வினாயகம்.
“அதுக்கு என்ன வினாயகம் இப்ப தான் வீட்டுல விஷேசம் வந்துடுச்சுல இனி அடிக்கடி வர்றேன்”
“தாத்தா காபியா..டீயா… என்ன கொண்டு வரட்டும்”
சங்கரன் “குறிஞ்சி தாத்தா நீச்சதண்ணி தான் குடிப்பாரு கொஞ்சம் கரைச்சு கொண்டா..” 
“சரிப்பா” என்றவள் உள்ளே சென்றுவிட்டாள்
“அப்பறம் வினாயகம் பொண்ணு எங்க?? அண்ணனும் தம்பியும் நல்லா விசாரிச்சீங்களா?? நம்ம குடும்பத்துக்கு ஒத்து வரும்மா??” பெரியவர் அண்ணன் தம்பி முகம் பார்த்தார்.
“ம்ம் பாத்தாச்சு மாமா…. பொண்ணு நம்ப வக்கம்பட்டி வகையறாதான்… கூட பொறந்தது பையன். அவன் தான் பெரியவன்…அவங்க அப்பா இறந்து போய் பத்து பதினைஞ்சு வருசம் இருக்கும்… பையன் கள்ளிகுடியில தறி போட்டு இருக்கான்.. பொண்ணும் டிகிரி முடிச்சு இருக்கு… நம்ம வசதிக்கு தக்க இடம் தான் மாமா” 
“வக்கம்பட்டி வகையறான்னா நம்மா சுடலை பேத்தியா??”
“அட ஆமாம் மாமா”
“நல்ல இடம் தான் மாப்பிள்ள… சுடலை மருமகளும் நல்ல குணமான பொண்ணு தான்… என்ன… முத்து தான் அப்பன் சேத்து வைச்சதையும் அனுபவிக்காம இப்ப பையன் சேக்கறதையும் பாக்காம போய் சேந்துட்டான்..!! என்ன பண்ண தலை விதின்னு ஒன்னு இருக்குல மாத்த முடியுமா..” பெரியவர் வருந்தி பேச…
“இப்ப தான் அந்த பையன் வேலுமணியும் தறியை பெரிசு பண்ணி அவன் பண்ணுற டிசைனுக்கு எல்லாம் உரிமை வாங்கி வைச்சு இருக்கானாம்…எதுவா இருந்தாலும் நம்ம வீட்டுக்கு வர்ற பொண்ணு நல்லா இருந்தா சரி தான்” சங்கரன்.   
இவர்கள் பெண்வீட்டை பற்றி பேசிக்கொண்டு இருக்க அங்கு பெண் வீட்டில் “ம்மா இதை எல்லாம் அவங்கிட்ட பேசும் போதே செல்லி இருக்கனும் இப்ப வந்து நேத்தி கடன் அப்படின்னா அவங்க ஒத்துப்பாங்களா??” வெளியில் மாப்பிள்ளை வீடு பார்க்க வந்த சொந்தங்கள் இருக்க அறைக்குள் வேலுமணி அவன் அம்மா பொன்னமாவை மெதுவாக சத்தமிட்டு கொண்டு இருந்தான்.
“என்னப்பா…. இது அவ பொறந்தப்ப உங்க அப்பா வேண்டிக்கிட்டது எனக்கே இப்ப தான் நியாபகத்துக்கு வந்தது அது தான் சென்னேன். அவர் தான் இவ கல்யாணத்தை பாக்க இல்ல அவர் வேண்டிக்கிட்டதாவது நடக்கட்டுமே…நீ கொஞ்சம் அவங்க கிட்ட பேசி பாருப்பா” பொன்னம்மாவின் பேச்சு மகனிடம் இருந்தாலும் எதிரில் இருந்த புவனாவை முறைத்த படி தான் இருந்தார்.  
“ம்மா பேச்சு வார்த்தை முடிஞ்சு இப்ப சும்மா ஒரு பேச்சுக்கு தான் நாம இப்ப அங்க போறது… இப்ப போயி கல்யாணம் மீனாட்சி அம்மன் கோயில்ல தான் வைக்கனும் அப்படின்னு சென்னா அது சரி படுமா… ஏற்கனவே மண்டபத்துக்கு அட்வான்ஸ் செஞ்சு இருப்பாங்க…”
“இருக்கட்டும்ப்பா அதுல என்ன இருக்கு தாலி கட்டு மட்டும் தான அங்க மத்தது எல்லாம் மண்டபத்துல தான செய்ய போறேம்…” 
     
“ம்மா நான் அதை செல்லல அலைச்சல சொன்னேன்… சரி விடுங்க பாத்துக்கலாம்… வேற ஏதுன்னாலும் இப்பவே சொல்லிடுங்க அப்பறம் உங்க இஷ்டத்துக்கு மாத்த முடியாது…என்ன வேற இருக்கா??”
“இல்லப்பா அவ்வளவு தான்” பொன்னம்மா சொல்ல அவர்களின் அறை கதவு தட்டப்பட்டது
“அண்ணி இன்னும் என்ன செய்றீங்க நல்ல நேரம் போகுது பாருங்க” வாசலில் பொன்னம்மாவின் தம்பி மனைவி கமலம்.
“வாசல் தொரந்து தான் இருக்கு கமலா…. உள்ள வா” பொன்னம்மா
“என்ன அத்தை எல்லாம் வந்தாச்சா??” வேலு..
“வந்தாச்சுப்பா…நீங்க தான் இன்னும் வரக்கானோம்னு அங்க தேடிக்கிட்டு இருக்காங்க…என்ன ஓடுது இங்க..?” என்றவர் பார்வையும் புவனாவின் மேல் இருக்க… ‘இவ ஏன் இப்படி உக்காந்து இருக்கா தூங்கி எழுந்து முகம் கூட கழுவாம… இப்படியே இருந்தா போற வீடு நல்லா இருக்கும்… இன்னும் வந்தவங்க யாரும் இவள வந்து பாக்கலையோ?? இந்த அண்ணியாவது சொல்ல கூடாது… மக எது சொன்னாலும் அதுக்கு ஆடுறது’ மனதில் புவனாவையும் பொன்னுவையும் திட்டிய படி வேலுவை பார்த்தார்
“ஒன்னும் இல்ல அத்தை அம்மா மாப்பிள்ள வீட்டுக்கு வர மாட்டேன்னு செல்லிட்டு இருக்காங்க என்னன்னு பேசி கூட்டிட்டு வாங்க..நான் மாமாகிட்ட இருக்கேன்..” என்றவன் வாசலுக்கு சென்றான்.  
“என்ன அண்ணி இதெல்லாம் நீங்க ஏன் வரமாட்டேன்னு அடம் புடிக்குறீங்க… இந்த காலத்துல இது எல்லாம் சகஜம் தான யாரும் எதுவும் செல்ல போறது இல்ல நீங்க கிளம்புங்க…”
“இல்ல கமலா என் மனசு ஒப்ப மாட்டீங்குது… முதல் தடவைய மாப்பிள்ளை வீட்டுக்கு போறீங்க நான் வேண்டாம்… அடுத்த முறை போகும் போது வாறேன்…இப்ப மணியாச்சு நீங்க கிளம்புங்க..” என்றவர் கமலா புவனாவை பார்த்ததை வைத்து “அவளுக்கும் நேத்துல இருந்து காய்சலா இருக்கு விட்டுட்டும் வர முடியாது” என மகளின் தவறை மறைத்தவர் அவர்களை வாசல் சென்று வழி அனுப்பி வைத்தார்.
முத்து இறந்ததில் இருந்து எந்த விஷேசத்திற்கும் பொன்னம்மா போவது இல்லை. “என்ன கட்டுபெட்டி தனம் இது??” என்று அனைவர் சொல்லியும் ஏனோ அவருக்கு போக தேன்றியதே இல்லை. விஷேசங்கள் முடிந்து இரண்டு நாட்கள் சென்று விசாரித்து வருவார்.இன்று மகள் விசயத்திற்கும் அப்படியே…
 
வேலுவுக்கு தான் எப்படியோ ஆனது. ‘இவங்க இப்படியே தான் இருப்பாங்களா…எதுக்குனாலும் வீட்டுக்குள்ளயே இருந்துகிட்டு வெளிய வராம…’ ஆனால் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ள வில்லை.
“விடு வேலு அக்காவை பத்தி தான் தெரியும்ல அவ இஷ்டபடி இருக்கட்டும் வீம்பா கூட்டிட்டு வந்தா முகத்தையே காட்ட மாட்டாங்க..” செல்வம் தான்  சமாதானம் செய்தார் வேலுவின் மனம் புரிந்தவராக.
“அதெல்லாம் எதுவும் இல்ல மாமா… இத்தனை வருசமா பாக்குறோமே அவங்கள பத்தி தெரியாதா…!! இது வேற..” ஏன வேலு பொன்னுவை விட்டு கொடுக்காமல் பேச…
“புதுசா என்ன மாப்பிள்ள??” கேட்டார் செல்வம். வேலு பொன்னு சொன்னதை சொல்ல “இது எப்ப மாப்பிள்ளை??” என்றார்.
“இப்ப கிளம்பு போது தான் சொன்னாங்க மாமா…இதை சொன்னா அங்க ஒத்துப்பாங்களா மாமா??”
“இதுல என்னப்பா இருக்கு நாம நம்ம விருப்பத்தை சொல்ல போறோம் அவ்வளவு தான்.  பாக்கலாம்… அவங்களுக்கும் கோயில்ல கல்யாணம்னா சந்தோஷமா சரின்னு தான் சொல்லுவாங்க… பேசி பாக்கலாம்..” சொன்னவர் மனதிலும் அதே சிந்தனை தான்
பொன்னம்மா அனைவரையும் அனுப்பி வைத்தவர் உள்ளே வர புவனா எப்படி அமர்ந்து இருந்தாலோ அப்படியே இருந்தால்.
“போதுமாடி உனக்கு நீ நினைச்து மட்டும் தான் நடக்கனும் இல்ல மத்தவங்க பத்தி கவலையே இல்ல..??” பொன்னம்மா புவனாவை பார்க்க…
“நான் எதுக்கு மத்தவங்கள பத்தி கவலை படனும் எனக்கு என் சந்தோஷம் தான் முக்கியம்…” என்றவளை ஆயாசமாக பார்த்தார் பொன்னம்மா…………
  

Advertisement