Advertisement

                         ஓம் நமச்சிவாய
அத்தியாயம் 1
“கோலம் ரொம்ப அழகா இருக்குடா…” என்ற சத்தத்தில் திரும்பியவள் “பெரியப்பா வாங்க…” என்று எழுந்து நின்றாள் குறிஞ்சி.
“பெரியப்பாவ பாத்தா இந்த பெரியம்மா தெரியாதே” பின்னால் வந்த செல்வி நொடிக்க…
“ஏன் தெரியாது…அது தான் நீங்க வாரதுக்கு முன்னமே உங்க வாசம் வந்துச்சே!!
“அப்பறம் ஏன் திரும்பாம இருந்தியாம்??”
“கோலம் முடிய போகுது பெரியம்மா மொத்தமா எழுந்துக்கலான்னு தான் அப்படியே இருந்தேன்… எங்க நான கேட்டது வாசம் சும்மா அள்ளுது”
“அடியேய் வாசம் பிடிக்காத கெட்டுடும்… போ உங்க அம்மை கிட்ட கொடுத்து தட்டுல வச்சு சாப்புடு” என்றவர் கொடுத்த பையை வாங்கிய படி சிட்டாய் பறந்தாள் குறிஞ்சி.  
வினாயகம் வராண்டாவில் இருந்த ஈசி சேரில் அமர செல்வி அங்கிருந்த துணில் தலை சாய்த்து அமர்ந்து கொண்டார். ”என்ன செல்லு செல்வி இந்த பொண்ணு வாய் நிறைய பெரியப்பா சொன்னா தான் அன்னிக்கு பொழுது நல்லா இருக்கு.. அப்படியே எங்க அம்மா தான்” வினாயகம் மகளின் வார்த்தைகளை சிலாகித்து பேச…
‘என் பொண்ணுக்கு என்ன அவ்வளவு வயசா ஆகிடுச்சு… உங்க அம்மா போல இருக்க.. அவங்க புத்தி வேண்டான்னு தான பொறந்ததும் அந்த டாக்டர் புள்ளய சேனதண்ணி தொட்டு வைக்க சொன்னது… அப்பறம் என்ன…அப்படியே எங்க அம்மா மாதிரின்னு’ வாய்க்குள் செல்வி முனுமுனுக்க
“எங்க அம்மாவ பத்தி சென்னா மட்டும் வாயே தொறக்க மாட்டியே??”
“அது மாமியார் மேல இருக்குற மரியாதைங்க…சும்மா அவங்கள இழுப்பானேன் அப்பறம் அங்க இழுக்குது இங்க இழுக்குதுன்னு சடைப்பானேன் அதுக்கு தான்” செல்வி இழுக்க..
“ம்ம் அந்த பயம் இருக்கட்டும்” வினாயகம் மீசையை முறுக்கினார். ‘இருக்கட்டும் ஒரு நாளைக்கு  மொத்தமா எடுத்துறேன் நெட்டுக்குட்டு இருக்குற அந்த மீசைய. புள்ள புடிக்குறவன் போல எப்பயும் நீவிக்கிட்டே திரியுறது’  செல்வி மனதில் அவரை வறுத்தபடி இருக்க…    
“வாங்க மாமா வாங்கக்கா” என்ற படி ஆட்டிய உளுந்த மாவை எடுத்த கையை முந்தியில் துடைத்த படி வந்தார் தாமரை.
“எங்கம்மா சங்கரன்” வினாயகம் தாமரையை கேட்டார்.
“காலைல  வெள்ளனத்துலயே பால் கொண்டுவந்து கொடுக்க சென்னேன் மாமா இன்னும் பால் வரல… அது தான் அவரே போய் வாங்கிட்டு வந்துடுறேன்னு போய் இருக்காரு… உங்களுக்கு காபி போடவா இல்ல அவர் வந்துடட்டுமா??” தாமரை.
“வரட்டும்மா குடிச்சுக்கலாம்…”
“அக்கா உங்களுக்கு..”
 
“ம்ம் கெஞ்சம் போடு… எங்க அவ உள்ள போனவல காணல தலையில கட்டுன துண்ட கூட கலட்டாம அப்படியே வந்து கோலம்  போட்டுட்டு இருக்கா நீ அவள பாக்காம என்ன பண்ணுற… போ அவள அனுப்பு அப்படியே புகைக்கு கங்க எடு ரெண்டு பூண்டு தொளியும் கொஞ்சம் மஞ்சள் தூளும் கொண்டா… இப்பிடியே விட்டா சளி புடுச்சுக்கும்… போ தாமரை” செல்வி தாமரையை விரட்ட..
அதற்குள் குறிஞ்சியே அனைத்தையும் எடுத்து வந்து இருந்தாள். “முதல்லயே துண்ட கலட்டி முடிய காய வைச்சு இருந்தா எனக்கு பேச்சு கிடைச்சு இருக்காதுல” தாமரை குறிஞ்சியை குட்ட..
“ஏய் இந்தாடி இப்ப நான் என்ன செல்லிட்டேன்னு வயசு பொண்ண திட்டுறவ” செல்வி தாமரையை முறைக்க…
“இப்ப நான் என்ன சொல்லிட்டேன் …போங்க நீங்களாச்சு அவளாச்சு” தாமரை சொல்லியவர் உள்ளே போக செல்வியும் முகத்தை திருப்பிக்கொண்டார்
இவர்கள் இருவரின் முகத்திருப்பலுக்கு காரணம் ஆனவலோ செல்வி கொண்டு வந்து இருந்த திரட்டு பாலை வினாயகம் ஊட்டி விட ரசித்து சாப்பிட்ட படி இருந்தாள்.
அவள் குறிஞ்சி. பெயருக்கு தகுந்தார் போல் அவள் குறிஞ்சி தான். அத்தனை சாந்தமான முகம் அவளுக்கு. அந்த வட்ட முகம் சிரிக்கும் பொது விழும்  கன்ன குழிக்கு மயங்காத ஆள் இருந்தால் அது அதிசயம் தான். 
அண்ணன் தம்பியான வினாயகத்திற்கும் சங்கரனுக்கும் முதலில் பிறந்த பிள்ளைகள் ஆண்கள் தான். இரண்டாவதாக சங்கரனுக்கும் தாமரைக்கும் பெண்ணாக வந்தாள் குறிஞ்சி. இரண்டு தலைமுறைக்கு வந்து பிறந்த பெண் என்பதால் அவர்களின் குலதெய்வமான குறிஞ்சி ஆண்டவர் பெயரையே அவளுக்கு வைத்தனர்.
இருவீட்டுக்கும்  ஒற்றை பெண் என்பதால்  அனைவரின் அன்பும் கவனிப்பும் அவளுக்கு தான். அன்பு என்பது இருந்தாலும் கண்டிப்பு அதை தாண்டியதாக தான் இருக்கும். ஆண்பிள்ளைகளும் இதில் அடக்கம் தான்.
வினாயகத்தின் மகன் விசு சென்னையில் உள்ள நிறுவனத்தில் மேனேஜராக இருக்க அதே நிறுவனத்தில் மார்கெட்டிங் டிப்பார்ட்மெண்டில் இருந்தான் ரஞ்சன்.
விசுவிற்கு கம்பெனியே தங்கும் இடம் வசதி செய்து தர அவன் திருமணம் முடித்து மனைவி விசாகவுடன் சென்னையில் வாசம். ரஞ்சன் எப்போதும் பயணம் தான் இருப்பான். வீட்டில் இருப்பது மாதத்தின் கடைசி நாட்கள் என்பதால் இங்கு விருதுநகரில் அவன் வாசம்.
இன்று ரஞ்சனுக்கு பார்த்த பெண் வீட்டில் இருந்து மாப்பிள்ளை வீடு பார்க்க வருவதால் தான் காலையிலேயே செல்வியும் வினாயகமும் வந்து விட்டனர்.
அண்ணன் தம்பி என்றாலும் சற்று விலகி இருந்தால் தான் உறவு நிலைக்கும் என்பதால் வீடு கட்டும் பொழுதே வினாயகம் இரண்டு தெரு தள்ளி தான் சங்கரனுக்கு வீடு கட்டி கொடுத்து இருந்தார்.
செல்வி குறிஞ்சியின் முடியை சிடுக்கு எடுக்க “அக்கா இந்தாங்க” என்று காபி கிளாஸை தாமரை தந்தார். தாமரை அவள் முடிக்கு சாம்பிராணி போட செல்வி “இந்த அப்படியே திரும்பி முகத்தை காட்டு கொஞ்சம் வாசம் புடி தலையில கேத்து இருக்குற தண்ணி வத்தட்டும்… தாமர அப்படியே நீயும் கெஞ்சம் வாசம் புடி நேத்து இருந்து முகம் கொஞ்சம் அதப்பா இருக்குது” என்றவர் இருவருக்குமே புகையை காட்டினார்  
  
செல்வி புகையை இருவருக்கும் காட்ட சங்கரன் பால் கேனுடன் வந்தவர் “ வாங்ண்ணே வாங்கண்ணி” அழைத்தவர் தாமரையிடம் கேனை நீட்ட செல்வி “இங்க கொண்டா சங்கரா நான் பாத்துக்குறேன்” என்றவர் அனைவருக்கும் காபி போட சமையல் அறைக்குள் நுழைந்தார்.
“அம்மா இனி நீ ஃபிரி தான் பாரு பெரியம்மா போயாச்சு..”குறிஞ்சி தாமரை பார்த்து  செல்ல “இன்னிக்காவது நல்ல சேறு கிடைக்குனு நினைச்சேன் அதுவும் போச்சா..!!” வினாயகம் 
“பெரியம்மா உங்கள பெரியப்பா கூப்புடுறாங்க” குறிஞ்சி கத்த “உனக்கு குறிஞ்சிக்கு பதிலா நெருஞ்சின்னு வைச்சு இருக்கனும் உங்க பெரியம்மா கிட்ட வாய தெறந்த கென்னுடுவேன்” தாமரை அவளை தட்ட “என்னங்க கூப்டீங்களா…” வந்தார்  செல்வி
வினாயகம் “ஏண்டா இப்படி கோத்து விடுற” பார்வை பார்க்க “நான் பாத்துக்குறேன்” என்றாள் பதில் பார்வையாக. ஏன் என்றால் அத்தனை மிருதுவானவர் செல்வி. அவரை பற்றி யாரேனும் கிண்டலாக செல்லி விட்டால் கூட மனம் தாங்காது “ நான் அப்படியா…” என்று கேட்டே மனம் குமைந்து போவார்.. யாரையும் சட்டென பேச தெரியாதவர். வந்த புதிதில் தாமரைக்கும் வித்யாசமாக பட சில நாட்களிலேயே அவரின் குணம் பிடிபட இருவருக்குள்ளும் அப்படி ஒரு ஒட்டுதல். 
அதிலும் குறிஞ்சி ஒற்றை பெண்ணாய் இருக்க மற்றவர்களை விட வினாயகம், செல்வி, விசுவிற்கு குறிஞ்சி என்றால் உயிர் தான். அவளை யாரும் ஒரு சொல் செல்ல விடமாட்டர்கள்.   
குறிஞ்சி “அது இன்னும் கொஞ்சம்” தட்டை நீட்ட “அதுக்கு எதுக்கு கூப்பிட்டவ இங்க இருந்தே சொல்லி இருக்க வேண்டியது தான திரும்ப நடக்க வைக்குறவ” என்றவர் அவள் கேட்டதையும் தந்தார்.
“இங்க பாருங்க மக சாப்புடுரான்னு அள்ளி திணிக்காதீங்க அப்பறம் காலை சாப்பாடு உள்ள எறங்காது உங்க மகளுக்கு” வினாயகத்தையும் சொன்னவர் “இந்தா தாமர பாரு கொழம்புக்கு புளி போதுமான்னு” தாமரையிடம்  குழம்பு கரண்டியை தந்தார்.
தாமரை குழம்பை சரி பார்த்த படி சமையல் அறைக்கு வர குறிஞ்சியும் செல்வியும் தாமரையுடனே  வந்துவிட்டனர்.
“இவங்க சரி பாத்து குழம்பு வைச்சா வர்ற பொண்ணு வீட்டுகாரவுக நிலை என்ன ஆகுறது… ரஞ்சனுக்கு கல்யாணம் நடக்கனுமின்னா நீங்களே வைங்க” குறிஞ்சி தாமரையை பாத்து கண்ணடித்தாள்.
“ஏய் என்னடி நான் ருசியா செய்யாம நீ வக்கனையா சாப்பிடாம தான் இப்படி வளந்து நிக்குறியா??” தாமரை குறிஞ்சியுடன் சண்டையை ஆரம்பிக்க..
“சரி சரி ரெண்டு பேரும் இப்பவே ஆரம்பிக்காதீங்க…” செல்வி சத்தம் போட தாயும் மகளும் முறைத்து கொண்டனர்.
“குறிஞ்சி எத்தனை தடவ சொல்லுறது அண்ணா சொல்லு ரஞ்சன்னு பேர் சொல்லாதனு…உங்க பெரியப்பா காதுல விலழ கேட்டு இருந்தா அதுக்கும் மீசைய முறுக்கி இருப்பாரு” செல்வி 
“அட போங்க பெரியம்மா” என சமையல்கட்டு திண்டில் அமர “ எத்தனை தடவை சொல்லுறது இப்படி உக்காராதன்னு…” தாமரை மீண்டும் ஆரம்பிக்க, “தாமர போதும்டி விடு… எப்படா இவ கிடைக்குப்பான்னு பாத்துக்கிட்டயே இருப்பியா… போ அங்க அண்ணனும் தம்பியும் என்ன பண்ணுறாங்கன்னு பாரு இல்ல வெளி வேலை ஏதாவது இருந்தா பாரு” செல்வி தாமரையை வெளியே அனுப்ப…

Advertisement