Advertisement

பூ- 10
திருமணத்திற்கு அவள் ஒத்துக்கொண்டது தன் தாய் தந்தைக்காக தானே ஒழிய அவனை பிடித்து போனதால் அல்ல, முதல் சந்திப்பே அவள் மனதில் கசப்பை உண்டாக்கியது சந்திரசேகர் கூறியதை கேட்டு அவனை காணும் ஆர்வத்துடன் சென்றவள் அவனின் நடவடிக்கையில் முகம் சுருக்கும் அளவிற்கு எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்கியது வகுப்பறையில் கவனத்தை செலுத்த முடியாமல் பனிஸ்மெண்ட் வாங்கியது வாக்கிங் செல்லும் இடத்தில் வந்து நின்று எரிச்சல் அடைய செய்தது என அவளுக்குள் மேலும் மேலும் கோபத்தை எரிய விட்டு சென்றான் 
அவனிடம் கோபமாகவும் பதிலுக்கு பதில் பேசுவதும் என தன் கோபத்தை துடுக்கு தனத்துடன் வெளிக்காட்டியவள் நிச்சயம் என்றதும் இருந்த வெறுப்பு அனைத்தும் அவன் மேல் ஒட்டு மொத்தமாக பாய்ந்தது, வேண்டாம் என்றால் காரணம் ஏதும் கேட்க போவதில்லை தான் இருந்தாலும், நளா சொல்லியதை போல பாதி திருமணத்தை பேசி முடித்து விட்டு மீதி திருமணத்திற்கு சம்மதம் கேட்க வந்த பெற்றோர்களை எண்ணி வருத்தம் கொள்வதா அல்லது கோபம் கொள்வதா என்று அவளுக்கு விளங்கவில்லை தந்தையின் முகம் சுருங்குவதை கண்டு பொறுக்க முடியாமல் திருமணத்திற்கு தலையை ஆட்டி வைத்தாள் 
ஆனால் இன்று அவன் பேசியதை கேட்டு அவளால் சாதரணமாக இருக்க முடியவில்லை நினைத்ததை முடிப்பதற்கு அவன் எந்த வழியையும் உபயோகிப்பான் என்ற தவறான எண்ணமே அவன் மீது மேலும் வெறுப்பை  உண்டாக்கியது 
சந்திரசேகரிடம் வந்த வம்சி “சரிங்க மாமா நாங்க கிளம்புறோம் உங்க பொண்ணு ரொம்ப கூச்ச படுறா பேசவே இல்ல ஒவ்வொரு வார்த்தைக்கும் ரொம்ப யோசிச்சு பேசுறா ரொம்ப நல்லா வளத்திருக்கிங்க உங்க பொண்ண” என ஒத்த ரோசா மாடுலேஷனில் கூறியவன் “அப்றம் நாங்க கிளம்புறோம் மத்த விஷயமெல்லாம் வீட்டுல இருக்குறவங்க பேசுவாங்க” என்றுவிட்டு இருவரிடமும் விடைபெற்று செல்ல 
“டேய்  அண்ணா என்னடா பேசுன இந்நேர வரைக்கும் தூரத்துல இருந்து பாத்துட்டு தான் இருந்தேன் நீ பேசும் போது அந்த பொண்ணு முறைக்கிறதும் நீ சிரிக்கிறதும் அப்றம் அவங்க ஏதோ பேசுறதும் என்னடா எனக்கு தெரியாமா ஏதாவது பண்றயா உன்ன நம்ப முடியாதே”
“டேய் அவ உன்னோட அண்ணி சோ அந்நியமா பேசமா அண்ணின்னு சொல்லி பேசு” என்றவன் “என்ன கவனிக்கிறத விட்டுட்டு உன்னோட வேலைய பாரு வா வீட்டுக்கு போய் குட்டியா ஒரு தூக்கம் போடணும் நைட்டெல்லாம் தூங்கவே இல்ல கண்ணெலாம் எரியிது நீயே வண்டி ஓட்டு நா கொஞ்ச நேரம் சாஞ்சுகிறேன்” என்று கூற
“அண்ணிக்கு தான் அசைன்மெண்ட் எழுதிட்டு இருந்தியா! பாருமே என்னவிட ஃபார்ஸ்டா இருக்குடா நா நினைச்சது சரிதான் உனக்கு அவங்க மேல இவோல் இருக்கு” என்றதும் “அது என்னடா இவோல்”
“அது அது நீதான் அறிவாளியாச்சே நீயே கண்டுபிடி என்ன வார்தைன்னு” என்றவன் காரை ஓட்ட அருகில் வம்சி கண்முடி இருக்கையில் சாய்ந்து கொண்டான் கார் கிளம்பியதும் சந்திரசேகரும் அருணாவும் தன் மகளை பார்க்க “மாப்பிள்ளை வர்ற விஷயத்தை உன்கிட்ட சொல்ல வேணாமின்னு சொல்லிட்டாரும்மா அதான் சொல்லல” என்றவர் “அவருக்கிட்ட சரியா பேசலையா ரொம்ப தயங்கினேன்னு சொல்லிட்டு போறாரு” என்று மகளின் முகத்தை பார்க்க “அவருக்கு தெரியுமாப்பா நான் தான் கல்யாண பொண்ணுன்னு” என்று கேட்க
கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்து கொள்ள “இல்லப்பா சும்மா தான் கேட்டேன் அவரு என்கிட்ட விளையாட்டுக்கு சொன்னாரு போல நான் தான் உங்க கிட்ட..” என்று தயங்க சிரித்து கொண்டே “சரி சரி நாம கிளம்புவோமா பாப்பா” என்றதும் சரியென தலையை ஆட்டியவள் எதுவும் பேசமால் இல்லம் வந்து சேர சற்று நேரம் கூட அமரமால் நளா இல்லம் சென்றாள்
“வாடி கல்யாண பொண்ணு இப்போ தான் அம்மா சொன்னாங்க உனக்கு நிச்சயம் பண்ணிட்டாங்கன்னு ரொம்ப சந்தோஷம் எங்க போனாலும் நம்ம ரெண்டுபேரும் ஒண்ணா போறோம் நீயும் நானும் ஒரே வீட்டுக்கு மருமகளா போக போறோம்” என்று குதுகலமாய் பேச
நிரஞ்சனாவிடம் இருந்து எந்த அசைவும் இல்லை எதையோ சிந்தித்து கொண்டிருந்தவளை தட்டி நடபுலக்கிற்கு கொண்டுவந்தவள் “என்னடி ஆச்சு நா எவ்ளோ சந்தோஷமா பேசிட்டு இருக்கேன் நீ என்னடான்னா கப்பல் கவுந்து போன மாதிரி முகத்தை வச்சிருக்க என்னாச்சு உனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லையா” என கேட்க
“தெரியல சரியா தப்பான்னு புரியல கல்யாணம் வேணாம்னும் சொல்லுது அதே சமயம் வேணும்னு சொல்லுது ஃபர்ட்ஸ் இம்ப்ரஷன் பெஸ்ட் இப்ரஷன்னு சொல்லுவங்களே ஒருவேளை முதல் சந்திப்பு நல்ல அமைஞ்சிருந்தா அவர பிடிச்சிருக்குமோ எண்ணமோ” என்று மனம் தன் போக்கில் சிந்திக்க 
“ஏய்” என்று உலுக்கியவள் “என்னாச்சு நா கேக்குறேன் பதிலே சொல்லாம நீ பாட்டுக்கு யோசனை பண்ணிட்டு இருக்க உனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லையான்னு கேட்டேன் நீ இன்னும் பதில் சொல்லவே இல்ல”
“அதெல்லாம் ஒன்னுமில்ல சும்மா தான், கல்யாணத்துக்கு எனக்கு சம்மதம் தான்” என்று முகத்தை உம்மேன வைத்து கொண்டு கூற
“இல்ல என்கிட்ட பொய் சொல்ற உன்னோட முகமே சரியில்ல ஏதோ ஒன்னு இருக்கு என்னன்னு சொல்லு” 
“அதெல்லாம் ஒன்னுமில்லடி கல்யாணம் ஆன பிறகு அப்பா அம்மாவ விட்டு போயிருவேன்ல அத நினைச்சு தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு” என்று கூற
“ஏய் லூசு இதுக்கு தானா நா கூட என்னமோ ஏதோணு நினைச்சுட்டேன் இங்க பாரு நீயாவது இதே சென்னையில தான் இருக்க போற உனக்கு பாக்கணும்னு தோணுச்சுன்னா பாத்துக்கலாம் ஆனா நா கல்யாணம் முடிச்சதும் திருச்சி போயிருவேன் அடிக்கடி வந்து பாக்க முடியுமா சொல்லு வீணா மனச போட்டு குழம்பிகாம ரிலாக்ஸா இரு அம்மா உனக்கு பிடிக்குமேன்னு பருப்பு பாயசம் பண்ணிருக்காங்க இரு கொண்டு வறேன்” என்று சென்று விட நிரஞ்சனாவின் மனம் தெளிந்த பாடில்லை கலங்கிய குட்டையை போல எண்ணற்ற குழப்பங்கள் அவள் மனதை அமிழ்த்தியது
படிப்பு முடிய ஒருமாதம் தானே இருக்கிறது என்று தேர்வுகள் முடிந்ததும் திருமணத்தை வைத்து கொள்ளலாம் என மூன்று வீட்டு பெரியவர்களும் ஒருங்கே முடிவு செயத்திருந்தனர் திருமணத்திற்கு நாள் குறிக்க இரு திருமணமும் ஒரே வேளையில் ஒரே மேடையில் நடப்பதால் பெண் வீட்டார் இருவரும் செலவை பகிர்ந்து கொள்வதாக கூறிவிட அடுத்தடுத்து திருமண வேலைகள் தடபுடலாக நடக்க தொடங்கியது ஒருபக்கம் தேர்வு மறுபக்கம் திருமணம் என அவளை மனம் அலைகளித்தாலும் தேர்வு முடியும் வரை வேறு எண்ணமே இருக்க கூடாது என மனதை பிரயத்தனம் செய்து அடக்கியவள் படிப்பதில் கவனைத்தை செலுத்தினாள்
இடைப்பட்ட காலத்தில் அவளை சந்திக்கும் நேரங்களில் சீண்டி பார்ப்பதும் கோபப்டுத்தி ரசிப்பதுமே அவனின் செயலாகி போனது அவன் செயல்கள் ஒவ்வொன்றும் அவளுக்கு வெறுப்பையே உண்டாக்க இவனுடன் வாழ்வது சாத்தியம் தானா என்ற எண்ணம் தோன்றி அவளுக்கு அடிமனதில் கிலியை கிளப்பியது என்றால் 
அவனுக்கோ அவள் மீது இன்னும் அதிக படியான காதல் உண்டானது முதல் சந்திப்பிலேயே அவளை பிடித்து போய் விட தன்னை சந்திக்க அவள் கூறிய பொய் அவள் மீது அதீத ஈர்ப்பு கொள்ள செய்தது அவளை சீண்டி பார்த்து அவள் அவஸ்தயை அன்று உரிமையற்று ரசித்தவன் இன்று அவளை காணும் போதெல்லாம் அதே சீண்டல்களை உரிமையாக போகும் நோக்கில் கையாள அவளுடனான விளையாட்டு போக்கு அவனுக்கு புதிதாக ஓர் அனுபவத்தை அளித்தது
திருமண நாள் நெருங்க நெருங்க ஓர் இடத்தில் அமரக்கூட நேரம் இல்லை பம்பரம் போல சுழன்று கொண்டிருந்தனர் வீட்டு பெரியவர்கள், கல்லூரி தேர்வுகளும் முடிந்து விட அதோ இதோ என்று திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்த நிலையில் முகூர்த்த கால் நட மாப்பிள்ளை வீட்டிற்கு அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து கிளம்பி கொண்டிருந்தனர் அருணா சந்திரசேகர் சரோஜா மூர்த்தி தம்பதியினர்
இங்கும் முகூர்த்த கால் நட வேண்டும் அது மட்டுமல்லாது காலை ஒன்பது மணிக்கு பெண்ணிற்கு வளையல் வைக்க செட்டியாரை வேறு அழைத்திருக்க  முன்னமே அங்கு சென்று வந்துவிட்டால் இங்கு நடக்கும் வேலைகளை பார்க்கலாம் அவசரமாக பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதால் நிரஞ்சனாவை சரோஜா வீட்டில் விட்டு விட்டு சென்றனர்
ஆறு மணிக்கு நல்ல நேரம் ஆரம்பிப்பதால் அதற்கான ஏற்பாடுகள் செய்திருக்க ஐயர் வந்ததும் பூஜை செய்து முகூர்த்த கால் நட சிறப்பாக முடிந்தது சிறுது நேரம் இருந்து பேசிவிட்டு எழ மணி ஏழு என காட்டியது சம்பந்தி வீட்டினர் கிளம்புவதை கண்ட பல்லவி தனபதி கோபாலை விட்டு இருந்து உணவருந்தி செல்ல வேண்டும் என கூறி விட
“இல்ல சம்பந்தி அங்கயும் முகூர்த்த கால் நடுறதுக்கு ஏற்பாடு பண்ணிருக்கோம் அதுவுமில்லாம பொண்ணுக்கு வளையல் வைக்க வர சொல்லிருக்கோம்  நிறைய வேலை இருக்கு போய் தான் பாக்கணும்” என்று நாசுக்காக  மறுத்துவிட சரியென்று காஃபி மட்டும் குடித்து விட்டு செல்லுமாறு கூறவும் அதற்கு மறுத்து பேசமால் அவசர அவசரமாக குடித்து விட்டு அவர்களிடம் விடைபெற்று இல்லம் வந்தனர்
மகளை குளித்து புடவை கட்டி தயாராக இருக்குமாறு கூறியவர் கடகடவென சமையலை கவனிக்க தொடங்கினார் அருணா, ஒன்பது மணி ஆனதும் முகூர்த்த கால் நட வளையல் வைக்க ஒன்பது வீட்டு பெண்களை அழைத்திருந்தார் அருணா அருகில் குடியிருந்தோர் ஒவ்வொருவராக வந்துகொண்டிருக்க வந்தவர்களுக்கு பூவை  கொடுத்தவர் வளையல் செட்டியார் இன்னும் வர வில்லை என்றதும் கணவரை அழைத்து போன் செய்ய சொல்ல பேசிவிட்டு வந்தவர் “வந்துட்டு இருக்காரம் நீ வந்தவங்கள பாரு அப்டியே பாப்பா ரெடியாகிட்டாளான்னு பாரு” என்று அனுப்பி வைக்க 
மூர்த்தி வீட்டிலும் அதே தான் நளாவிற்கு அவர்களின் வழமை படி சில சடங்குகளை செய்து கொண்டிருந்தனர், நிரஞ்சனா கிளம்பி அமர்ந்திருக்க “நிரு இந்தா இந்த பூவை வச்சுக்கோ” என்றவர் அப்போதுதான் மகளின் அலங்காரத்தை பார்க்க முகம் சுருங்கி போனது “என்னடி இப்டி உக்காந்துட்டு இருக்க நா எடுத்து கொடுத்தத போடாம எதையோ எடுத்து போட்டுருக்க” என்றதும் “ப்ச் சும்மா இரும்மா நகை கடை பொம்மை மாதிரி அலங்கரிச்சிட்டு இப்போ இதுக்கு என்ன குறை நல்லா தானே இருக்கு” என்று சலித்து கொள்ள
“ப்ச் நீ சும்மா இரு ஒத்த பிள்ளை உனக்கு இல்லாதது வேற யாருக்காம் கொஞ்ச நேரத்துக்கு தானே போட்டுக்கோ வந்தவங்க ஏதாவது குறை சொல்லானுமா என்ன? மறுத்து பேசாம உக்காரு நா போட்டுவிடுறேன்” என்றவர் காதிலும் கழுத்திலும் நகைகளை பூட்டி தலையில் பூ வைத்துவிட்டு மகளை பார்க்க “ம் இப்போ எப்டி இருக்கு அம்சமா இருக்க சரி இந்தா வெறும் வயித்தோட வளையல் வைக்க கூடாது ரெண்டு தோசை மட்டும் சாப்பிடு சீக்கிரம் கொஞ்ச நேரத்துல செட்டியார் வந்திருவாறு” என கூறிவிட்டு வந்தவர்களோடு அலாவி கொண்டிருக்க 
சடங்கு சம்பிரதாயங்களை எண்ணியவளுக்கு சட்டென ஓர் எண்ணம் தோன்றியது “சடங்கு சம்பிரதாயம் எல்லாம் செஞ்சு தான் கல்யாணம் பண்றாங்க எதுக்குன்னு கேட்டா இது வழக்கம் பொண்ணு மாப்பிள்ளைகாகன்னு சொல்றாங்க அப்றம் எதுக்கு டைவர்ஸ் ஆகுது பிரிஞ்சு போறாங்க இத சொன்னா அதிகபிரசங்கி வாயாடின்னு சொல்லுவாங்க, எப்டி அவரு கூட வாழ போறேன்னு தெரியலையே பெத்தவங்களுக்காக சரின்னு சொல்லிட்டோம் ஆனா..” என்றெண்ணியவள் “பாத்துக்கலாம் நம்மள மீறி என்ன நடந்துரும்” என தனக்கு தானே தையிரியம் கொடுத்து கொண்டாலும் ஏதோ ஒருவித பயம் ஆட்கொண்டே இருந்தது
சற்று நேரத்தில் செட்டியார் என அழைக்க படும் வரதராஜனும் வந்துவிட “அருணா காபி கொண்டா” என்றவர் “அப்டியே பொண்ண கூட்டிட்டு வாம்மா” என்க காபியை கொண்டு வந்து கொடுத்தவர் மகளை அழைத்து வந்து கூட்டத்தின் நடுவில் அமர வைத்தார் இதே சடங்குகள் நளா வீட்டிலும் நடக்க 
இருபத்தியொரு கல்யாண வளையல்களை இரு கைகளிலும் பூட்டியவர் நிரஞ்சனாவின் கையை பிடித்து ஆசீர்வதிக்க வந்த வேலை முடிந்தது என கிளம்பினார் அவரை வழியனுப்ப வந்த சந்திர சேகர் “ரொம்ப நன்றி ராஜன் சொன்னதும் மறுப்பு சொல்லாம வந்ததுக்கு”
“அட நீ வேற சேகர் இப்போ யாரு செட்டியார கூப்ட்டு வளையல் வைக்கிறாங்க எங்க அப்பாரு காலத்துல இந்த மாதிரி கிராமத்துல வைப்பாங்க இப்போ அதெல்லாம் எங்க “என்றவர் “நிரு என்னோட பொண்ணு மாதிரி நீ சொல்லாட்டியும் நா வந்து அவளுக்கு வளையல் போட்டுருப்பேன் சரி அப்றம் நா வறேன்” என்றவரிடம் பணத்தை கொடுக்க 
“ப்ச் பாத்தியா உன்னோட வேலை முடிஞ்சதும் புத்திய காட்டிட நா தா சொன்னேனே என்னோட மகன்னு அப்றம் பணத்தை எடுத்து நீட்டுற உன்னோட பவுச நீயே வச்சுக்கோ எனக்கு தேவையில்ல அதான் வெத்தலை பாக்குல நுத்தி ஒன்ன வச்சு கொடுத்துருக்கல அப்றம் எதுக்கு இது வச்சுக்கோ” என பெருந்தன்மையாய் கூற
“டேய் வர்தா பிடிடா எல்லாருக்கும் வளையல் போட்டு விட்டுருக்க பணம் கொடுக்காம எப்டி இந்தா” என்று சட்டை பையில் திணிக்க “விட மாட்ட” என்றவர் “நாளைக்கு கடையில பாத்துகிறேன் எப்டி கொடுக்குறதுன்னு எனக்கு தெரியும்” என்று விட்டு கிளம்பி செல்ல
சிரித்து கொண்டே உள்ளே வந்தார் சந்திர சேகர் வரதராஜன் சந்திர சேகரின் கடையில் மேலாளராக பணிபுரிபவர் கடை ஆரம்பத்திலிருந்து கிட்ட தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக அதே கடையில் வேலை பார்க்கிறார் நம்பகமான மனிதன் என்பதை விட சந்திர சேகருக்கும் அவருக்கும் இடையே நீண்ட கால நட்பு உண்டு 
இரண்டு திருமணம் என்பதால் சற்று பெரிய மண்டபத்தையே தேர்வு செய்திருந்தனர் உறவினர்கள் வந்து தங்கி கொள்ள அத்தனை வசதிகளும் உள்ள மண்டபம் இடையே பல்லவி தன் வசிக்கும் கிராமத்திற்கு சென்று திரும்பியிருந்தார், பாலா நளா வேறு உலகில் சஞ்சரிக்க வம்சி அவளை பாடாய் படுத்தினான் போன் செய்யும் போதெல்லாம் அவன் தான் பேசுவானே ஒழிய இவள் தானாக எதையும் பேசுவதில்லை கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் உரைப்பாள் அல்லது வேலை இருக்கிறது என்று நிராகரித்து விடுவாள் 
“நாமளும் கொஞ்சம் ஓவரா தான் போறோமோ” என நினைத்தவன் “போவோம் யாரு கேப்பாங்க நம்மள” என எண்ணி கொண்டாலும் “எத்தனை நாளைக்கு இந்த கண்கட்டு விளையாட்டு என நானும் பார்க்கிறேன் சினுப்பாகோழி” என எண்ணியவன் அவளை விட்டு பிடிப்போம் என நினைத்து கொண்டு திருமணம் முடியும் வரை அவளுக்கு தொடர்பு கொள்ள வேண்டாம் என முடிவு செய்திருக்க 
அவன் அழைக்காமல் இருப்பதே அவளுக்கு ஒருபக்கம் இன்பமாயும் மற்றோரு பக்கம் இமைசையை தோற்றுவித்தது “ச்சே என்ன மனசு ஒரு நிலையில முடிவு எடுக்க மாட்டிங்கிது அவரு பேசுனா அய்யோன்னு தோணுது பேசாட்டி என்னமோ ஏதோன்னு மனசு அடிச்சிகிது கடவுளே என்னோட நிலைமையை பாத்தா எனக்கு சிரிக்கிறதா இல்ல கோபப்படுறதான்னு தெரியல” என தனக்கு தானே பைத்தியம் போல புலம்பி கொள்வாள் சிலநேரங்களில் அருணா இல்லை சந்திர சேகர் அவள் தனியாக பேசி கொள்வதை பார்த்துவிட்டு சிரித்து கொண்டே சென்று விடுவார்கள்..
அதோ இதோ என்று ஒரு வாரம் சென்ற திசை தெரியவில்லை காலம் சக்கரமாய் சுழன்று நாளை திருமணம் என்ற நிலையில் வந்து நின்றது 

Advertisement