Advertisement

பூ – 10
“என்ன அத்தை என்ன நினைச்சுட்டு இந்த மாதிரி பண்ணிங்க! யார கேட்டு பண்ணிங்க!” என்று வானத்திற்கும் பூமிக்கும் குதியாய் குதிக்க 
“யார கேக்கணும்? எதுக்கு கேக்கணும்?” என்று அவனுக்கு ஈடாக பல்லவியும் பேச
“என்ன கேட்டுருக்கணும் கட்டிக்க போறவன் நா! அங்க தானே இருந்தேன் நிச்சயம் பண்ண போறோம் பொண்ணு பாத்துட்டோம்னு ஒரு வார்த்தை சொல்ல வேணாம்” 
“உன்கிட்ட கேட்டா சரி நிச்சயம் பண்ணுங்க கல்யாணத்துக்கு எனக்கு சம்மதம்னு சொல்லருவ போடா போடா இவனே கழுவுர மீனுல நழுவுர மீனாட்டம் பிடி கொடுக்காம நீ பாட்டுக்கு பட்டும் படாம பேசிட்டு போய்ட்ட கேக்குறவங்களுக்கு என்ன பதில் சொல்றது, பெரியவன் இருக்கும் போது சின்னவனுக்கு பொண்ணு பாத்துருக்கிங்க என்ன பிரச்னைன்னு கேப்பாங்க என்ன சொல்ல சொல்ற” என்றதும்
“என்ன அத்தை நா ஏ சொல்றேன்னு உங்களுக்கு புரியலையா ஏற்கனவே அவமானபட்டது போதலைய இன்னும் அவமானபடனுமா இப்போ தான் அதுல இருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளிய வந்துருக்கேன் மறுபடியும் எல்லாரு முன்னாடியும் தலை குனிச்சு அசிங்க பட எனக்கு விருப்பமில்லை அத்தை தயவு செஞ்சு விட்டுருங்க நா இப்டியே இருந்துட்டு போறேன் எனக்கு கல்யாணம் காட்சி எதுவும் வேணாம்” என்று ஆதங்கத்துடனும் கோபத்துடனும் பேச
“டேய் கிருஷ்ணா அப்ப ஏதோ தப்பு நடந்து போச்சுடா மறுபடியும் அதே மாதிரி நடக்கும்னு நினைக்கிறது தப்பு, மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்ட கொழுத்துர மாதிரி இருக்கு நீ பேசுறது அப்ப ஏதோ நாங்க சரியா விசாரிக்காம கடகடன்னு முடிவு பண்ணிடோம் அதுக்காக கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னா எப்டிடா நா இருக்கும் போதே உனக்கு ஒரு நல்லது பண்ணி பாக்கணும்னு ஆசைபடுறேன் அது தப்பா, நா இன்னும் எத்தனை நாளைக்கு இருப்பேனா தெரியாது இப்பவே தலை சுத்திக்கிட்டு வருது ஒரு பத்து நிமிஷம் நிக்க முடியல” என்று தலையை பிடித்து கொண்டு கூற
வம்சி சிரித்தான் “என்னடா என்னோட நிலைமை உனக்கு சிரிப்பா இருக்கா” என்றதும் “இல்ல அத்தை உங்க சாமர்த்தியமான பேச்ச கேட்டு சிரிப்பு தான் வருது சரி என்னமோ பண்ணுங்க ஆனா ஒன்னு போன தடவை மாதிரி ஏதாவது ஏடாகூடமா நடந்துச்சு அப்றம் நா மனுஷன இருக்க மாட்டேன் என்னோட கோபம் உங்களுக்கு தெரியும் தானே” என்று மிரட்ட 
“நீ சம்மதம் சொன்னதே போதும் அது மாதிரி கண்டிப்பா நடக்காது அதுக்கு நா கேரண்டி அப்றம் பொண்ணு யாருன்னு கேக்கவே இல்ல”
“யாரா இருந்தா எனக்கென்ன கேக்காம முடிவு பண்ணிட்டு இப்போ பொண்ணு யாரு என்ன பேருன்னு சொல்லிட்டு இருக்கீங்க என்னமோ பண்ணுங்க எனக்கு எதுவும் சொல்ல வேணாம் தாலி கட்டும் போது பக்கத்துல தானே இருப்பா அப்போ பாத்துகிறேன்” என்று விட்டேரியாக கூற
“என்னடா இப்டி பேசுற! கட்டிக்க போறவன் உனக்கு தெரிய வேணாமா” என்றவர் “பொண்ண நீ கூட பாத்திருக்க நம்ம பொண்ணு பாக்க போனோமே அந்த பொண்ணோட பிரெண்ட் பேரு நிரஞ்சனா” என்றதும் வம்சிக்கு அதிர்ச்சி தாங்கவில்லை “வாட்? யாரு அந்த வாயாடியா அவளா?” என்று கேட்க
“டேய் அதென்ன வாயாடின்னு சொல்லிட்டு இருக்க நல்ல பொண்ணு தெரியுமா எவ்ளோ அழகா பேசுறா பெரிய மனுஷி மாதிரி தங்கமான பொண்ணு குடும்பமும் நல்ல குடும்பம் நம்ம கடை முன்னாடி தான் அவங்களும் கடை வச்சுருக்காங்க” என்று புகழ்ந்து தள்ள
“போதும் போதும் உங்க சம்பந்தி புராணமும் மருமக புராணமும் சரி பொண்ணுகிட்ட நா பேசணும் அவங்க நம்பர் இருந்தா கொடுங்க” என்றதும் “டேய் என்ன பேச போற அப்டின்னா நானும் வறேன்” என்க
“அத்தை அவகிட்ட தனியா பேசணும் நீங்க வந்தா கண்டிப்பா நா பேச மாட்டேன் மருமகளா வர்றதுக்கு முன்னாடியே தூக்கி வச்சு கொண்டாடுறீங்க அங்க வந்தா என்ன பேச விடாம நீங்களே பேசிட்டு இருப்பிங்க நானே போய் பாத்துட்டு பேசிட்டு வறேன் நா அவள பாக்க போறது பத்தி எதுவும் அவளுக்கு தெரிய கூடாது அவங்க வீட்டுலயும் சொல்லிருங்க இல்ல நா வர்ற விஷயத்தை சொன்னிங்கன்னா கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்லிட்டு வந்துருவேன்” என்று சிரிப்புடன் மிரட்ட
“இல்லடா நா சொல்லல நீ போய் என்ன பேசனுமோ பேசிட்டு வா ஆனா ஒன்னு கல்யாணம் மட்டும் வேணாம்னு சொல்லிராத” என்று பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கேட்க
“அது உங்க கையில தான் இருக்கு” என்றவன் பீரோவில் இருந்து நீல நிற சட்டையை எடுத்து “அத்தை இது நல்லா இருக்கும் தானே!” என்று காட்ட
வாயில் கைவைத்தவர் “இன்னே வரைக்கும் யார கேட்டு முடிவு பண்ணிங்க அப்டி இப்டின்னு தாம் தூம் ன்னு குதிச்ச இப்போ என்னடான்னா எந்த சட்டை போடுறதுன்னு கேக்குற” என அவன் எண்ணத்தை புரியாமல் கேட்க
“அது அப்போ இது இப்போ” என்றவன் “சரி இது ஓகே தானே” என்றவன் “ஓகே தான்” என்று கேள்வியும் பதிலும் அவனே கூற
சிரித்து விட்டு “சரி சரி சீக்கிரம் குளிச்சிட்டு வா நீ கீழ வந்த பிறகு தான் சாப்பிடுவோம்னு எல்லாரும் வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க நீ என்ன பதில் சொல்லுவயோன்னு ஆர்வதோட” என்று கூற
“சும்மா சொல்லாதீங்க அத்தை மதியம் விருந்து வச்சு மொத்தமா அப்ப சாப்டுகலாம்னு சாப்பிடாம இருப்பாங்க உண்மைய சொல்லுங்க” என்று கேலி செய்ய 
“உனக்கு இருந்தாலும் இவ்வளவு வாய் ஆகாதுடா சரி சரி சீக்கிரம் வா நா போறேன்” என்று அறையை விட்டு வெளி வர விசிலடித்து கொண்டே குளியலறை புகுந்து கொண்டான்  
பால்கனியில் படுத்திருந்த பாலாவை கண்டு “இவன” என்று அருகில் சென்றவர் “டேய் எந்திரிடா இப்போ எந்திரிக்க போராயா இல்ல தண்ணி எடுத்து உத்தவா” என்றதும் அடித்து பிடித்து எழுந்தவன் “என்ன அத்தை கொஞ்ச நேரம் தூங்க விடுங்களேன் ப்ளீஸ்” என்று கண்களை திறவாமலே கெஞ்ச
“இன்னைக்கு லீவ் தானே சாப்பிட்டு தூங்கு இப்போ எந்திரிச்சு குளிச்சுட்டு வா சாப்பிடலாம்” என்று பாலாவை அறைக்கு அனுப்பி விட்டே கீழே இறங்கினார் பல்லவி
சற்று முன் வம்சியிடம் பேசி விட்டு சோபனா சோர்ந்த முகத்துடன் வருவதை கண்ட பல்லவி “என்னம்மா பசங்க வரலையா” என கேட்க
“இல்ல அண்ணி சின்னவன் தூங்கிட்டு இருக்கான் எழுப்பி விட்டேன் எந்திரக்கல பெரியவனுக்கு ஏதோ வேலை இருக்காம் உள்ள கூட விடல வெளிய வச்சே பேசி அனுப்பிட்டான் நைட்டேல்லாம் தூங்கல போல கண்ணெலாம் சிவந்து போயிருக்கு கேட்டா தலாட்டு பாடி தூங்க வைக்க போறீங்களான்னு நக்கல் பேசுறான் நீங்க போய் கூட்டிட்டு வாங்க அப்டியே விஷயத்தை மெதுவா எடுத்து சொல்லுங்க நாங்க போய் சொன்னா கண்டிப்பா கேக்க மாட்டான் நீங்க தான் அவனுக்கு சரி” என்றதும் சரி என்று மேலே சென்றவர் அறையின் கதைவை தட்ட வேகமாக கதவை திறந்தவனை பொருட்படுதாமல் உள்ளே சென்றவர் அங்குள்ள நாற்காலியில் அமரந்தார்
“என்ன அத்தை என்ன விஷயம்” என்றதும் “என்னடா நினைச்சுட்டு இருக்க ஒரு மனுஷி கேள்வி கேட்டா ஒழுங்கா பதில் சொல்ல மாட்டியா” என்றதும் “அம்மா ஏதாவது சொன்னாங்களா?” என்று கேட்க
“ஆமாடா நைடெல்லாம் முழிச்சுட்டு இருந்தியான்னு கேட்டா ஆமான்னு சொல்லிட்டு போறதா விட்டுட்டு தலாட்டு பாட போறீங்களான்னு கேட்டுருக்க” என்றவர் “வந்த விஷயத்தை விட்டுட்டு வேற பேசிட்டு இருக்கேன் பாரு  சரி அத விடு உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்றதும் 
“சோழியன் குடும்மி சும்மா ஆடாது சொல்லுங்க என்ன பேசணும்” என்று கேட்க
அவனை முறைத்து பார்த்தவர் “நீ என்ன வேணா நினைச்சுக்கோ ஆனா நாங்க செய்யிற கடமை செஞ்சு தான் ஆகணும்” என்று நிச்சயம் செய்ததை பற்றி கூற அதுவரை அவனின் சாந்தமான முகம் கோபத்தை பூசிக்கொண்டது, ஏனோ நிச்சயம் என்றதும் சட்டென நிரஞ்சனாவின் முகம் அவன் மன கண் முன் வந்து செல்ல இன்னும் கோபம் அதிகமானது ஒருவழியாய் அவனை தாஜா செய்து பேசி முடித்த பெண் இவள் தான் என்றதும் தான் உக்கிரம் கொண்ட அவன் நெஞ்சம் உருக தொடங்கியது 
சற்று ஆட்டம் காட்ட வேண்டியே அவளை நேரில் சந்திக்க முடிவு செய்து அலைபேசி எண்ணையும் வாங்கி கொண்டு தன் எண்ணத்தை செயல்படுத்த சித்தமாய் கிளம்பி கொண்டிருக்கின்றான்
குளித்து முடித்து இருவரும் ஒன்றாய் கீழே வர வம்சியின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தனர் சேரில் அமர்ந்தவன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு “என்னோட முகத்துல ஏதாவது எழுதி ஒட்டியிருக்கா என்ன?” என்றவன்  உணவருந்தும் தட்டில் முகம் பார்த்து விட்டு “எதுவும் இல்ல பின்ன எதுக்கு எல்லாரும் என்னவே பாக்குறிங்க எதுவும் சிலை மாதிரியான ரியாக்சன்ல இப்போ சாப்பிடவா வேணாமா” என்றதும் வேகமாக பரிமாறினார் சோபனா அவசர கதியில் உண்டு விட்டு எழும் சமயத்தில் பாயாசத்தை கிளாசில் ஊற்றி ரஞ்சனி நீட்ட 
யோசனையுடன் பார்த்தவன் “என்ன விசேஷம் பாயசம் எல்லாம் ரெடி பண்ணிருக்கிங்க” என்றவாறே வாங்கி குடித்துவிட்டு டம்ளரை நீட்ட “உனக்கு தெரியதாக்கும் தெரியாத மாதிரியே கேப்ப நீ கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டல அதுக்கு தான் இது” என்றவாறே சமையலறை சென்றுவிட்டார் இருந்தால் எதவாது பேச்சு கொடுத்து சீண்டுவான் என்று 
சிரித்து கொண்டே “சரி அத்தை நா போய்ட்டு வறேன் கோவில்ல இருக்காங்களாம் நேரா அங்கயே வரேன்னு சொல்லிட்டேன்” என்றவன் “டேய் நீ வர்றயா உன்னோட ஆளும் வந்துருக்கா” என்று கூற
“இதோ நா வந்துட்டேன்” என்றவன் பாதி உணவில் எழுந்து கொள்ள “டேய் சாப்ட்டு போடா” என்று பல்லவி கூற
“சாப்பாட முக்கியம்” என்றவன் வம்சியின் பின்னோடு விறுவிறுவென சென்றான் கடவுளை தரிசித்து விட்டு அமர்ந்திருக்க “அப்பா நா பிரகாரத்தை சுத்திட்டு வறேன் கொஞ்சம் லேட் ஆகும்” என்று கூறிவிட்டு செல்ல 
அதே நேரம் வம்சியும் பாலாவும் கேவிலின் உள்ளே நுழைந்தனர் நுழைவாயிலில் நின்றவாறு போனில் அழைப்பு விடுக்க ஆன் செய்து பேசியவர் இருக்கும் இடத்தை கூறியதும் அவர்களின் அருகில் வந்தவர்கள் வணக்கம் என்று கூற 
சந்திரசேகரோ உரோமையோடு “வாங்க மாப்பிளை” என்றார் பாலாவும் வம்சியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள “என்ன மாப்பிளை ஏதோ பேசணும்னு சொன்னிங்கலாமே பாப்பா பிரகாரத்தை சுத்திட்டு வர போயிருக்கா நீங்க போய் பேசுங்க நீங்க வர்ற விவரத்தை இன்னும் சொல்லல” என்றதும் “தங்கஸ் மாமா” என்றவன் “டேய் நீ இங்கயே இரு நா போய் பேசிட்டு வறேன்” என்று காதில் கிசுகிசுக்க
“டேய் நளா வந்துருக்கறதா சொன்ன? 
“அப்டி சொன்னா தானே வருவ இல்லன்னா வீட்டுல நீ மட்டும் நிம்மதியா தூங்கிட்டு இருந்திருப்ப அதா பொய் சொல்லி உன்ன கூட்டிட்டு வந்தேன்” என்றுவிட்டு அவள் இருக்கும் இடம் நோக்கி சென்றான்
“கடவுளே இவன் பேச்ச கேட்டு வந்தேன் பாரு” என நொந்து கொண்டு சந்திரசேகரிடம் பேச்சு கொடுத்தான் பாலா, சண்டிகேஸ்வரர் சன்னதியில் நின்று கண்களை மூடி தரிசிக்க “சினுப்பாகோழி” என்று காதில் கூறவும் திக்கென்று திரும்பி பார்க்க மிக சமீபத்தில் அவன் முகத்தை கண்டதும் தடுமாறி கீழே விழுந்தவள் அவனை தீயாய் முறைக்க 
சிரித்தபடி அவளை பார்த்தவன் தூக்கி விட கைநீட்டினான் அவன் கையை தட்டி விட்டு கைகளில் இருந்த தூசியை துடைத்து கொண்டே எழுந்தவள் “இப்டியா வந்து பயம்முறுத்துவீங்க ச்சே ஒரு நிமிஷம் இதயமே நின்னு போச்சு என்ன சார் வேணும் எங்க போனாலும் கூடவே வர்றிங்க நிம்மதியா சாமி கும்பிட கூட விட மாட்டிங்கிறீங்க” என்றதும்
“என்ன சாமி கும்பிடும் போதும் நான் தான் தெரிஞ்சேனா என்ன” என்று கள்ள சிரிப்புடன் கேட்க
“ம் நினைப்பு தான் இப்போ என்ன வேணும்” என்றவள் அவன் முகத்தை ஆழ்ந்து நோக்கி ஆராய “இது கோவில்ம்மா இப்டி சைட் அடிச்சா பாக்குறவங்க என்ன நினைப்பாங்க” என்று சீண்ட
அவனை முறைத்து பார்த்தவள் “இல்ல உங்களுக்கு கோவிலுக்கு வர்ற மாதிரியான நல்ல பழக்கம் எல்லாம் இருக்கான்னு பாத்தேன்” என்று கூற
“உனக்கு ஏ அந்த டவுட் சினுப்பாகோழி என்கிட்ட நல்ல பழக்கம் நிறைய இருக்கு அது நல்லவங்க கண்ணுக்கு மட்டும் தான் தெரியும், என்னன்னு தெரியல அடிக்கடி நீ தான் கனவுல வர்ற” என்றவன் “சரி அத விடு உனக்கு கல்யாணமாமே” என்று தெரியாதது போல கேட்க
“இவருக்கு தெரியுமா! இல்ல தெரியாதா! ஒரு வேளை நம்மகிட்ட விளையாடுறா? இல்ல நம்மகிட்ட போட்டுவாங்குறாரா!” என்று யோசனையில் ஆழ்ந்து இருக்க
“என்ன கேட்டதுக்கு பதில் சொல்லாம அப்டி என்ன யோசனை” என்று சிரிப்பை அடக்கி கொண்டு கேட்க
“உங்களுக்கு தெரியாதா?”
“தெரியாதுன்னு தானே கேக்குறேன் கடை ரிஜிஸ்டர் விஷயமா உங்கப்பா கிட்ட பேச வந்தேன் அப்ப தான் சொன்னாரு உனக்கு கல்யாணம்னு அப்டியே உன்ன பாத்து வாழ்த்திட்டு போலாம்னு ஒரு ஆசை அதான்!, சரி மாப்பிளை எந்த ஊரு என்ன பண்ராரு உனக்கு பிடிச்சிருக்கா” என்று படபடவென கேட்க
“நிஜமாவே இவருக்கு எதுவும் தெரியாதோ… சரி நம்மாலும் கொஞ்சம் ஓட்டலாம் தெரியும் போது  நாம பேசுனத நினைச்சு நினைச்சு புழுங்கட்டும்” என்றெண்ணியவள் “சென்னை தான் மாப்பிள்ளை ஏதோ டப்பா கடை வச்சுறுகங்கலாம் அப்பா அம்மாவுக்கு பிடிச்சிருக்கு” என்றவள் “என்னோட தலையெழுத்த பாத்திங்களா சார் பிடிக்காத ஒருத்தர கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தனும்” என்று தலைவிதியே என்று நொந்து கொண்டு கூற
“என்கிட்டயே உன்னோட வேலைய காட்டுராய இருடி” என கருவியவன் “அப்டின்னா வேணாம்னு சொல்ல வேண்டியது தானே பிடிக்காத ஒருத்தர்கூட கடைசி வரைக்கும் எப்டி சகிச்சுக்கிட்டு வாழ முடியும்!, உனக்கு சொல்ல கஷ்டமா இருந்தா நா வேணா உங்கப்பா கிட்ட சொல்றேன் ரொம்ப பழக்க நா எது சொன்னாலும் அதுக்கு மறுபேச்சு கிடையாது கடை விஷயத்துலயே பாத்திருப்ப தானே நா கேட்டேன்னு மறுப்பு சொல்லாம அடுத்தவாரம் ரிஜிஸ்டர் பண்ணிறலாம்னு சொல்லிட்டாரு” என்று அவள் முகத்தின் மாற்றத்தை கவனித்து கொண்டே கூற
அவள் முகத்தில் கடுகடுப்பு ஏற தொடங்கியது “அடுத்த வாரம்ன்னு யார் சொன்னா வீட்டுல கேக்காம எதுவும் முடிவு பண்ண மாட்டாரு நீங்க சொல்ற மாதிரி ரிஜிஸ்டரேசன் பண்ண போறேன்னு அம்மாக்கிட்டயாவது சொல்லிருப்பாரு அந்த மாதிரி எதுவும் இல்ல நீங்க பொய் சொல்றிங்க” என்னும் போதே கண்களில் நீர் கோர்த்தது 
“வேணுன்னா உங்கப்பா கிட்டயே கேளு நா சொல்றது உண்மையா இல்லையான்னு” என்றவனின் மனம் “டேய் வம்சி போதுண்டா பாவம் விட்டா அழுதிருவா போதும் உன்னோட விளையாட்ட முடிச்சிட்டு கிளம்பு இப்போவே அவளுக்கு உன்மேல வெறுப்பு வந்தாலும் ஆச்சர்யபடுறதுகில்ல” என்று உரைக்க
“சரி சரி இந்தா அசைன்மெண்ட் எழுதி முடிச்சேட்டேன் நேத்து நைட்டெல்லாம் தூங்காம உக்காந்து நா எழுதல அதோ அவன் தான் எழுதினான் எழுத்து கொஞ்சம் கேவலமா தான் இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ சரி நா கிளம்புறேன் பாக்கலாம்” என்று கன்னத்தை தட்டிவிட்டு செல்ல 
கன்னத்தை அழுந்த துடைத்தவள் வேகமாக பக்கத்தை புரட்ட அச்சிட்டது போல அழகான கையெழுத்துகளால் எழுதி இருந்தது  நோட்டை மூடியவள் அவனின் சாமர்த்தியமான செயலை கண்டு எரிச்சலும் வெறுப்பும் மனதில் வேர்விட்டது 

Advertisement