Advertisement

அத்தியாயம் பதினான்கு:

தன் செய்கையை எண்ணி ராமிற்கு கொஞ்சம் வருத்தம் தான். நடந்ததுக்கு வருத்தம் இல்லை. நடந்த விதத்திற்கு வருத்தம். இருந்தாலும் அவன் மனதில் சொல்லொணா திருப்தி இருந்தது. படுத்துக்கொண்டே திரும்பி வைதேகியை பார்த்தான். 

எப்படி நடக்க வேண்டிய நிகழ்வுகள் எப்படி நடந்துவிட்டன என்று ஒரு பெருமூச்சு அவனிடம் இருந்து வெளியேறியது.

நடந்து முடிந்தது அனைத்திற்கும் அவனே பொறுப்பாவான். அவன் ஒன்றும் சிறு பையனோ. ஒன்றும் தெரியாத ஆண்மகனோ அல்ல. நடந்ததுக்கு பொறுப்பை தூக்கி வைதேகி தான் காரணம். அவளின் நடத்தை தான் காரணம் என்று சொல்லுவதற்கு. அவன் அதற்கு பிரியப்படவும் இல்லை. இது அவனின் தப்பு என்றுணர்ந்தான். ஆனால் அதற்கு வருத்தப்படவில்லை.   

ஒரு விதமான பரவச நிலையில் இருந்தான்.

வைதேகியின் நிலைமை அதற்கு எதிர் பதமாக இருந்தது. 

போராடி போராடி பார்த்து. ஒரு கட்டத்திற்கு மேல் போராட முடியாமல். போராட்டம் தேவையில்லை என்றுணர்ந்து. ஓய்ந்து களைத்து படுத்திருந்தாள். நடந்து முடிந்த நிகழ்விலிருந்து வைதேகியாள் சில நிமிடங்களுக்கு வெளியே வரவே முடியவில்லை. அவளின் இயலாமை அவனிடம் தோற்றது அவளை பலமாகத் தாக்கியது.

ஆடை சற்று விலகினால் கூட போர்த்திவிடும் மனப்பக்குவம் கொண்ட ராமிடம் இருந்து இவள் இப்படி ஒரு செய்கையை எதிர்பார்க்கவில்லை. அவன் பக்கம் வந்த போது கூட அடிப்பான் என்று தான் எண்ணினாள். தன்னை அடைவான் என்று சற்றும் எண்ணவில்லை.  

அவளுக்கு அழுகை எல்லாம் வரவில்லை. கோபம் தான் வந்தது. அந்த சமயதிலும் அவளால் வாயை அடக்க முடியவில்லை. நினைக்க நினைக்க ஆவேசம் பொங்கியது. 

எழுந்து அமர்ந்தவள் அவனிடம் எழுந்து தனக்கு இதனால் ஒன்றுமில்லை என்று உணர்த்த விழைந்தாள். “ஆமா எதை நிரூபிக்க நீ இந்த மாதிரி செஞ்ச. நீ இந்த மாதிரி செஞ்சதால எனக்கு என்ன ஆகிடும்னு நினைச்ச. எனக்கு ஒண்ணும் ஆகாது. நான் அப்படியே தான் இருப்பேன். இதனால நான் உனக்கு பணிஞ்சு போவேன்னு நினைச்சியா. நெவெர்.”, என்றாள் சிறு பெண்ணை போல விவரமில்லாமல்.

அவளால் அந்த நிகழ்வை ஒத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் என்ன பேசுவது என்று தெரியாமல் கோபத்தில் உளறினாள்.

அவளின் பேச்சைக்கேட்டு அவனிருந்த மனநிலைக்கு ராமிற்கு சிரிப்பு தான் வந்தது. அடக்க மாட்டாமல் சிரித்தான். “என்ன ஆகும்னு உனக்கு தெரியாதா. பாப்பா வரும்”, என்றான் எப்பொழுதும் போல மனதிற்குள். 

அவனின் சிரிப்பை பார்த்தவளுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு ஆவேசம் வந்ததோ அவனின் கன்னதில் ஓங்கி அறைந்தாள்.

ராமிற்கு மனதிலும் வலிக்கவில்லை. உடலிலும் வலிக்கவில்லை. சந்தோஷமாக இருந்தான் அவன்.

“இன்னும் ரெண்டு அடி கூட அடிச்சிக்கோ பொண்டாட்டி”, என்றபடி எழுந்து உட்கார்ந்தான்.

“என்ன ஜென்மம்டா நீ. உனக்கு சூடு சொரனையேயில்லையா. சிரிக்கிற.”, என்றவள் ஆக்ரோஷமாக அவனின்  முடியை பிடித்து ஆட்டினாள்.

அவள் இழுத்த இழுபிர்க்கெல்லாம் கொஞ்ச நேரம் தலையை கொடுத்தவன். பின்பு மெதுவாக அவளின் கைகளை விலக்கி விட்டான்.  “நீ வாயையே குறைக்க மாட்டியா. இந்த வாய் தானே என்னை உசுப்பேத்தி  இவ்வளவும் செய்ய வைச்சது. அப்பவும் நீ அடங்க மாட்டியா.”, 

“மாட்டேன், மாட்டேன்”, என்று கத்தினாள் வைதேகி.

கத்தும் அவளையே பார்த்தான்.

கலைந்த உடைகளிலும் அழகாய் தெரிந்தாள் வைதேகி. மீண்டும் அணைத்து முத்தமிட தோன்றிய மனதை கஷ்டப்பட்டு அடக்கினான். அவளை பார்த்து   “தேங்க்ஸ் வைதேகி”, என்றான்.

அவன் எதற்கு தேங்க்ஸ் சொல்லுகிறான் என்று புரிந்தவள். கோபத்தில் அவனை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தாள்.

மறுப்பேதும் காட்டாமல் அவளின் அத்தனை அடிகளையும் வாங்கிக்கொண்டான். அவனின் மனதின் சிறு மூலையில் அவன் செய்தது தவறு என்று சொல்லிக் கொண்டிருந்தது.

அதனால் அவள் அடிக்கும் அடிகளை எல்லாம் மெளனமாக வாங்கிக்கொண்டான்.

பலமாகவே அடித்தாள் வைதேகி. இந்த முறை உடலுக்கு சற்று வலித்தது. அப்போதும் மனதுக்கு வலிக்கவில்லை. உலகையே வென்றுவிட்ட திருப்தியில் இருந்தான் ராம்.

அவளின் இரு கைகளையும் சேர்த்து பிடித்தவன். “சாரி சொல்லனும்னு தோணலை. இருந்தாலும் உனக்காக சொல்றேன். சாரி. இப்படி நடந்துக்கணும்னு நான் எப்பவும் நினைச்சது இல்லை. இன்னைக்கு என்னவோ எல்லாம் என்னை மீறி நடந்துடுச்சு. சாரி.”,

“நீ சாரி சொன்னா நடந்தது எல்லாம் இல்லைன்னு ஆகிடுமா”,

“ஏன் நடந்தது எல்லாம் இல்லைன்னு ஆகணும். நீ என் மனைவி. இது நமக்குள்ள ஒரு நல்ல தொடக்கமா இருக்கட்டுமே”, என்றான் ஆசையாக.

“உன்னோட உளறல் எதுவும் நடக்காது. சும்மா மனைவி அது இதுன்னு பேச்சை வளர்த்து. உன் காரியத்தை சாதிச்சிகிட்ட. உனக்கு இது ஒரு தொடக்கமா கிடையவே கிடையாது. நான் விடவே மாட்டேன்.”, என்று ஆக்ரோஷமாக கத்தினாள். அவளின் கண்களில் நீர் எட்டி பார்க்கத் துவங்கியது.

செய்யும் வகை தெரியாதவன். “மெதுவா வைதேகி கீழ எல்லாம் இருந்காங்க. கத்தாத”, என்றான்.

“ஏன்? உன் வண்டவாளம் எல்லாருக்கும் தெரிஞ்சிடும்னு பயப்படரியா”,

“எனக்கு ஒரு பயமும் இல்லை. கத்து என்ன வேணா பண்ணிக்கோ.”, என்றான்.  மேலே அவனை என்ன பண்ணுவது என்றே வைதேகிக்கு புரியவில்லை.

அவளுக்கு அவனிடம் போராடியது மனதிலும் வலியை கொடுத்தது. உடம்பிலும் வலியை கொடுத்தது.  

“சீ! சீ! நீயெல்லாம் ஒரு மனுஷ ஜென்மமே கிடையாது. அதையும் இதையும் பேசி என்னை நாசமாகிட்ட இல்லை”,

நாசமாக்கிட்ட என்ற வார்த்தையை கேட்டு ராமிற்கு வருத்தமாக இருந்தது. “புருஷன் பொண்டாட்டிகுள்ள நடக்கற தாம்பத்தியதுக்கு பேரு நாசமாக்குறதா. இவள் புரியாம பேசறாளா இல்லை புரிஞ்சிக்க விருப்பமில்லாம பேசறாளா.”, பொறுமையாய் அவளுக்கு புரிய வைக்க முயன்றான். 

“ப்ளீஸ் வைதேகி. நீ என் பொண்டாட்டி புரிஞ்சிக்கோ. இது நமக்குள்ள இயற்கையா நடந்திருக்க வேண்டியது. இப்படி நடந்த விதம் எனக்கு ஒரு வகையில வருத்தம்தான். ஆனா நடந்ததுக்கு வருத்தம் இல்லை.”, என்றான் தெளிவாக.

அவன் பேச்சை கேட்க கேட்க ஆத்திரம் பொங்கியது.

“நீ நல்லவன் மாதிரி பேசாத. வாயை மூடு”, என்று கத்தினாள்.

அதற்குள் இவளின் சத்தம் வெளியே கேட்டிருக்கும் போல. மாலதி போன் அடித்தாள் வைதேகிக்கு.

போன் அடித்துக்கொண்டே இருந்தது. வைதேகி யார் என்ன என்று கூட எடுத்து பார்க்கவில்லை. 

ராம் தான் எடுத்து யாரென்று பார்த்தான்.

மாலதி என்று தெரிந்தவுடன் அதை எடுத்தான்.

“என்ன மாலதி”,

“என்னண்ணா சத்தம். நீ போய் ரொம்ப நேரம் ஆச்சு. மாமா வேற ஹால்ல உட்கார்ந்து மேல என்ன சத்தம்ன்ற மாதிரி பார்த்துட்டு இருக்கார்”,

“ஒன்னுமில்லைம்மா ஒரு சின்ன வாக்குவாதம். இப்போ சரியா போச்சு. கொஞ்ச நேரத்துல வந்துடுவோம்”, என்றான்.

“சீக்கிரம் வாண்ணா. அவர் மேல பாக்கறதும், நடக்கறதுமா இருக்கார். இன்னும் நீங்க சாப்பிடக் கூட இல்லை.”,

“நீங்க சாப்டீங்க தானே”,

“உங்களை பார்த்தோம். நீங்க கீழ வரலைன்ன உடனே மாமா என்னை சாப்பிட சொன்னார். நான் சாப்பிட்டிடேன்”,

“சரி நாங்க வர்றோம். அவருக்கு காபி ஏதாவது வேணும்னா போட்டு குடு.”, என்று சொல்லி வைத்தான்.

பிறகு வைதேகியை சமாதானப்படுத்தும் பொருட்டு மீண்டும். “சாரி வைதேகி. சாரின்ற வார்த்தை எல்லாத்தையும் சரி படுத்தாதுன்னு தெரியும். இருந்தாலும் நானும் நீயும் கணவன் மனைவி. இந்த எண்ணம் உனக்குள்ள கொஞ்சமாவது இருந்ததுன்னா. நடந்தது உனக்கு தப்பாவே தோணாது”, என்றான்.

எதுவும் வைதேகியை சமாதனப்படுத்தவில்லை. அவள் மனது நடந்ததை ஒத்துக்கொள்ள மறுத்தது.

அவள் அப்படியே பித்து பிடித்தவள் போல அமர்ந்து இருக்க.

“கீழ உங்கப்பா உன்னை தேடுறாராம். மாலதி சொன்னா. கீழ போகலாம் வா”, என்றான்.

“எப்படி இப்படியேவா.”, என்று அதற்கும் கத்தினாள். அவளின் ஆடைகள் அலங்கோலமாக இருந்தன. அவள் சேலையில் பின் குத்தியிருந்த இடமெல்லாம் ராமின் கைங்கர்யத்தால் கிழிந்து இருந்தன.

மறுபடியும், “சாரி. சாரி.”, என்றான்.

“மாத்திக்கோ”, என்றான் கரிசனமாக.

“நீ முதல்ல இங்கிருந்து போ”, என்று கத்தினாள்.

“சரி! போறேன்! போறேன்!”, என்று சொல்லி எழுந்து தன்னை திருத்திக் கொண்டு சென்றான்.

கீழே கவலையாக அமர்ந்திருந்தார் சுவாமிநாதன்.

இவனை பார்த்தவுடனே. “என்ன ராம்? ஏதோ சத்தமா இருந்தது. ஏதாவது பிரச்சனையா.”,

“அதெல்லாம் பெருசா ஒண்ணும் இல்லை மாமா. அவளுக்கு நான் நகைக்கு நீங்க பணம் கொடுக்கவேண்டாம்னு சொன்னதுல கொஞ்சம் கோபம். அதான் இப்படி சத்தம் போட்டா”, என்று சமாளித்தான்.

“கொஞ்ச நேரம் கோபம் இருக்கும். அப்புறம் குறைஞ்சிடும். நான் பார்த்துக்கறேன் மாமா. நீங்க கவலைப்படாதீங்க.”, என்றான்.

இவ்வளவு தான் விஷயமா என்பது போல ஆசுவாசப் பெருமூச்சு விட்டார். “ரொம்ப சத்தம் கேட்டதா. நான் பயந்துட்டேன். அவ சின்ன பொண்ணு. ரொம்ப செல்லமா வளர்ந்துட்டா. கொஞ்சம் அனுசரிச்சி போயிடு ராம்”, என்றார்.

அந்த வார்த்தைகளை கேட்டதும் சற்று குற்றவுணர்ச்சியாக போய் விட்டது ராமிற்கு. “நான் பார்த்துக்கறேன் மாமா. நீங்க கவலைபடாதீங்க.”, என்று சமாதானப்படுத்தினான்.

அதற்குள் மாலதி இருவருக்கும் காபி கொண்டு வந்தாள். “வைதேகிக்கும் கொடு மாலதி”, என்றவுடனே அவள் சாப்பிடும் ஹார்லிக்ஸ் வந்தது. அதை எடுத்துக்கொண்டு அவன் காபியை கூட அருந்தாமல் மேலே போனான்.

“அண்ணா இந்த காபியையும் எடுத்துட்டு போ. ரெண்டு பேரும் சேர்ந்தே குடிங்க. இன்னும் சாப்பிடக்கூட இல்லை.”, என்று மாலதி அவனிடம் கட்டாயபடுத்தி அவனின் காபியையும் கொடுத்தனுப்பினாள்.

இரண்டையும் தூக்கிக்கொண்டு ரூமிற்கு போனால்.  அங்கே அவளை காணவில்லை. பாத்ரூமில் இருப்பாள் போல தண்ணீர் விழும் சத்தம் கேட்டது.

“குளிக்கிறாளோ”, என்று நினைத்தான். அவனின் நினைப்பிற்கு தகுந்த மாதிரி அவள் குளித்துக்கொண்டு தானிருந்தாள். அழுகையிலும் கரைந்து கொண்டிருந்தாள்.

வெகு நேரமாகிற்று. வெளியேவே வரவில்லை.

கொஞ்சம் பயந்து போனான்.

“வைதேகி, வைதேகி”, என்றழைக்க. தண்ணீர் விழும் சத்தத்தில் அது கேட்கவும் இல்லை. பிறகு தட தட வென பாத்ரூம் கதவை தட்டினான். சத்தம் கேட்கவும் தான் தண்ணீரை நிறுத்தி, “என்ன”, என்றாள் வைதேகி.

“ரொம்ப நேரமா காணோம். என்ன பண்ற.”, என்றான்.

“என்ன பண்ணுவாங்க பாத்ரூம்ல. என்ன பண்றன்னு கேட்கறான் பாரு கேள்வி மடையன்”, என்று அவனை சகட்டு மேனிக்கு மனதில் திட்டினாள். அவனை நினைத்தாலே ஆத்திர ஆத்திரமாக வந்தது. வெளியில் பதிலே பேசவில்லை வைதேகி., திரும்ப தண்ணீர் விழும் சத்தம் தான் கேட்டது.

அவள் என்னவென்று கேட்டதிலேயே. அவள் நன்றாக தான் இருக்கிறாள் என்று அமைதிகாத்தான்.

அதன் பிறகும் வெகு நேரம் கழித்தே வெளியே வந்தாள் வைதேகி. தலைக்கு குளித்திருக்கிறாள் என்று பார்த்தவுடனேயே தெரிந்தது.

“இவ்வளவு நேரமா தண்ணில நிற்ப உடம்பு கெட்டுட போகுது”, என்றான் கரிசனமாக.

“ரொம்ப தான் அக்கறை”, என்றாள் கோபமாக. 

அவள் என்னவோ பேசிக்கொள்ளட்டும் என்றுஅதை கண்டுகொள்ளாமல்.  “இந்தா உன் ஹார்லிக்ஸ்”, என்றான்.

அவள் பயங்கர சோர்வாக தான் உணர்ந்தாள். ஏதாவது  குடித்தால் சற்று தெம்பாயிருக்கும் என்று நினைத்தவள். பதில் பேசாமல் அதனை வாங்கி குடித்தாள்.

அவள் அதை குடிப்பதை பார்த்த பிறகே. அவனின் காபியை குடித்தான் ராம். அது ஆறிப்போய் இருந்தது. அப்படியும் குடித்து வைத்தான்.

அழுது அழுது அவளின் முகமெல்லாம் சற்று உப்பினார் போல இருந்தது.

இப்படியே இவளின் தந்தை முன் வந்து நின்றால் அவர் வேறு என்ன சொல்வாரோ என்று சற்று பயந்தான் ராம்.

அதற்கு தகுந்த மாதிரியே அவள் கீழே வந்தவுடனே, “என்ன வைதேகி முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு”, என்றார் அவளின் தந்தை கவலையாக.

அவரின் அந்த அக்கறையான கேள்வியில் மீண்டும் அழுகை வரும் போல இருந்தது முயன்று அடக்கினாள்.

“தெரியலைப்பா கொஞ்சம் காய்ச்சல் வர்ற மாதிரி இருக்கு”, என்றாள்.

“டாக்டர் கிட்ட போகலாமாம்மா”, என்றார் அக்கறையாக.

“இல்லை. வேண்டாம்பா மாத்திரை போட்டு இருக்கேன்”, என்று சரளமாக பொய் சொன்னாள்.

மாலதியும், “நீங்க போய் ரெஸ்ட் எடுங்க அண்ணி நான் பார்த்துக்கறேன்”, என்றாள்.

“இல்லை. கொஞ்ச நேரம் இங்கயே இருக்கேன்”, என்றாள்.

ராமிற்கு சுவாமிநாதன் ஒரு வேலை வைக்க. அதை பார்க்க வெளியில் போனான் ராம். வேலை முடிய இரவாகி விட்டது. 

அவன் திரும்ப வந்த போது மாலதி மட்டும் தான் அவனுக்காக காத்து இருந்தாள் சுவாமிநாதனும் உறங்க போயிருந்தார். வைதேகியும் உறங்க போயிருந்தாள்.

“சாப்பிடு அண்ணா ரொம்ப நேரமாயிடுச்சு. மதியமும் நீ சாப்பிடலை”,

“வைதேகி சாப்பிடாளா”,

“சாப்பிடாங்க”,

“நீ.”,

“நானும் அவங்களோட சாப்பிட்டேன்”,

“சரி, எடுத்து வை”, என்று கைகழுவி சாப்பிட அமர்ந்தான்.

சாப்பிட்டு முடித்து மேலே சென்றான். அவன் செல்லும் போது அவனிடம் மாலதி  “அண்ணி சரியா சாப்பிடலை. இந்த ஹார்லிக்ஸ் குடுத்துடு”, என்று குடுத்துவிட்டாள்.

வைதேகியை குறித்த மாலதியின் அக்கறை அவனை நெகில்தியது.

“உன்கிட்ட நல்லா பேசினாளா. இல்லை காய்ச்சல்னு அமைதியா தான் இருந்தாளா”, என்றான்.

“எப்பவும் போல நிறைய பேசலை. ஆனா பேசாமலும் இல்லை. பேசினாங்க”, என்றாள்.

மனதிற்குள், “அப்பாடா என்னால் மற்றவர்களிடம் முகம் திருப்பவில்லை அவள்”, என்று ஆசுவாசபெருமூச்சு விட்டான்.

“நகையெல்லாம் பிடிச்சிருக்கா மாலதி”,

“ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா”, என்றாள் சந்தோஷமாக மாலதி அவளின் சந்தோஷம் அவனுக்கு ஒரு மனநிறைவை கொடுத்தது.

வைதேகி உறங்கவில்லை விழித்து தான் இருந்தாள். இருந்தாலும் கண்மூடி உறங்குவது போல படுத்து இருந்தாள்.  

நின்று சற்று நேரம் அவளை பார்த்தான். அவள் உறங்கவில்லை விழித்து தான் இருக்கிறாள் என்பது அவளின் விழி அசைவிலேயே தெரிந்தது.

அவள் சாப்பிட்டு விட்டாள் என்று தெரியும். இருந்தாலும் அவளிடம் பேச வேண்டும் என்பதற்காக. “சாப்பிட்டிட்டியா வைதேகி”, என்றான் ஹார்லிக்க்சை டேபிள் மேல் வைத்துக்கொண்டே.

வைதேகி பதிலே பேசவில்லை.

கொண்டு வந்த நகைகள் எல்லாம் அப்படியே கிடந்தன. இப்போது வேறு அவன் பணம் வசூலித்து வந்ததும் அப்படியே இருந்தது.

அவளின் பீரோவில் சாவி அப்படியே தான் தொங்கிக்கொண்டிருந்தது. பீரோவைத் திறந்தான். அந்த சத்தத்தில் அவன் என்ன செய்கிறான் என்று பார்பதற்காக எழுந்து உட்கார்ந்தாள்.

அதை பார்த்த ராம். “இந்த நகை பணமெல்லாம் வைக்கணும், அதான்”, என்றான்.

பதில் பேசாமல் பார்த்துக்கொண்டு தான் இருந்தாள்.

அதையே சம்மதமாக எடுத்து அவளின் பீரோவில் எல்லாம் வைத்தான். வைத்தவன். “இந்த ஹார்லிக்ஸை குடிச்சிட்டு படு”, என்று அதை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அதை வாங்குவதா வேண்டாமா என்று வைதேகி யோசிக்க. “நீ குடிக்கறியா இல்லை. நான் குடிக்க வைக்கட்டா”, என்று அவளின் வாயின் பக்கத்தில் கொண்டு போக. அவசரமாக அதை வாங்கி குடித்தாள்.

“இது நல்ல பொண்ணுக்கு அழகு”, என்று சத்தமாகவே சொன்னான். 

 அவனை முறைத்து பார்த்தாள்.

அதனை பார்த்து அவன் புன்னகைக்க. அவளுக்கு கோபமாக வந்தது திரும்ப படுத்துக்கொண்டாள்.

அங்கே வந்தால் அவன் முன்பெல்லாம் கீழே தான் படுத்துக்கொள்வான். இன்று உடை மாற்றி அவளின் அருகிலேயே படுத்தான்.

அவன் அருகில் படுத்தவுடன் மறுபடியும் எழுந்து உட்கார்ந்தாள். “என்ன இது”, என்ற கேள்வியோடு.

“என்ன இதுன்னா”, என்றான் பதிலுக்கு ராம்.

“நீங்க கீழ தானே படுப்பீங்க”,

“அது நேத்தைக்கு. இது இன்னைக்கு.”, என்றான் ரைமிங்காக.

“அப்போ நான் கீழ படுத்துக்கறேன்”, என்று கீழே இறங்கப் போனாள்.

அவளின் கையை பிடித்துக்கொண்டவன். “நீ கீழ படுத்தா. நானும் கீழ படுப்பேன்”, என்று அவனும் எழுந்து உட்கார்ந்தான்.

வைதேகி அவனை முறைத்து பார்க்க.

“சும்மா எவ்வளவு நேரம் தான் பேபி என்னை முறைச்சு முறைச்சு பார்ப்ப. நீ எங்க படுக்கறியோ நான் அங்க தான் படுப்பேன்”, என்றான் தெளிவாக.

அவனின் பேபி என்ற அழைப்பு அவளுக்கு ரசிக்கவில்லை. “என்னை அப்படி கூப்பிடாத”, என்றாள் காட்டமாக.

ஒரு தரம் மரியாதையாக அழைக்கிறாள். மறுநிமிடமே மரியாதையை குறைத்துக்கொள்கிறாள். இவள் எதில் சேர்த்தி தெரியவில்லையே என்று நினைத்துக்கொண்டவன். “சரி கூப்பிடாம இருக்க முயற்சி பண்றேன். ஆனா என்னை அறியாம கூப்பிட்டா என்னாலயே ஒண்ணும் செய்யமுடியாது”, என்றான். 

“பயப்படாம தூங்கு நான் உன்னை கட்டி பிடிக்க மாட்டேன். மேல கால் போடமாட்டேன். இதெல்லாம் நான் முழிச்சு இருக்கும் போது தான். தூங்கும் போது என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது”, என்றான்.

“இவன் இவ்வளவு பேசுவானா. எங்கிருந்து இவனுக்கு இவ்வளவு தைரியம் வந்தது”, என்பது போல கண்களை விரித்து பார்த்தாள் வைதேகி.

“ஏன் பேபி இப்படி முட்டைக்கண்ணை போட்டு முறைச்சு முறைச்சி பார்க்கற. கண்லயே என்னை முழிங்கிடுவ போல இருக்கே”,  என்றான் உல்லாசமாக. அவனின் பேச்சில் சற்று ஆளுமை வந்திருந்தது.    

“என்னடா இது வாயே பேசாதவன் இன்று இவ்வளவு வார்த்தைகள் பேசுகிறான்”, என்று அவனை யே ஆச்சர்யமாக பார்த்தாள். அவளின் கண்களுக்கு புதிதாக தெரிந்தான் ராம்.இவ்வளவு பேசும்போதும். நினைக்கும் போதும். அவளின் கையை ராம் விடவேயில்லை. அதை உணராதவளாக வைதேகியும் அவன் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்தாள்.

Advertisement