Advertisement

அத்தியாயம் பதிமூன்று:

ராம் அப்போது தான் காஞ்சிபுரத்திற்கு வந்து வீட்டில் கால் வைத்தான் வைதேகி அவனுக்கு போன் அடித்தாள்.

அவள் போன் செய்ததும் பதட்டமாக எடுத்து, “என்ன? என்ன?”, என்றான். இப்போ தானே வந்தோம் என்று நினைத்துக்கொண்டே. 

அவனின் பதட்டமான குரலை கேட்டவள். “பயப்படறதுக்கு ஒண்ணும் இல்லை”, என்றாள்.

“பின்ன”, என்றான் ஆசுவாசப்பெருமூச்சு விட்டு.

“அது.”, என்று இழுத்தவள். “அப்பா விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும் வேற யாருக்கும் தெரியவேண்டாம்”,  என்றாள்.

“இல்லை நான் யாருக்கும் சொல்லலை”,

“மாலதி, மனோ கிட்ட கூட வேண்டாம்”,

“இல்லை சொல்ல மாட்டேன். நம்பலாம்”, என்று வாக்குறுதி கொடுத்தான்.

“அது யாராவது. அவர்கிட்ட பேச்சுவாக்குல. அவர்கிட்ட சொல்லிட்டா. அவருக்கு தெரிஞ்சிடும். அதான். அப்புறம் அதையே நினைச்சிட்டு இருப்பார்.”, என்று விளக்கமளித்தாள்.

“நீ என்ன சொன்னாலும் நான் சரின்னு தான் சொல்றேன். நீ தான் புரிஞ்சிக்க மாட்டேங்கற”, என்றான்.

“நான் என்ன பேசினால். இவன் என்ன பேசுகிறான்”, என்றிருந்தது வைதேகிக்கு.

“நான் போனை வச்சிடறேன்”, என்றாள்.

“சரி”, என்றுவிட்டான். வேறு என்ன பேசுவான்.

நாட்கள் நகர்ந்தன. ராமிற்கு வேலைகள் மிகவும் அதிகம் ஆகிவிட்டன. அவன் தொழிலையும் பார்த்துக்கொண்டு. சுவாமிநாதனின் தொழிலையும் பார்த்துக்கொண்டு. அவரின் இடங்களை பார்த்துக்கொண்டு. வாடகை வசூலித்துக் கொண்டு. ரொம்பவே பிசியாகி விட்டான்.

வைதேகியின் பரீட்ச்சையும் முடிந்து விட்டது. நான்காவது வருடத்தில் அடியெடுத்து வைத்திருந்தாள். அவள் மட்டுமல்ல மாலதி இரண்டாவது வருடத்தில் அடியெடுத்து வைக்க. மனோவும் நான்காவது வருடத்திற்கு போனான்.

மோகன் படிப்பை முடித்திருந்தான். அவன் கேம்பஸ் இன்டர்வ்யூவில் சென்னையிலுள்ள ஒரு மல்டி நேஷனல் கம்பெனி யில் செலக்ட் ஆகியிருந்தான்.  

அவனின் தந்தை, “என்னடா வேலை அடுத்தவனிடம் கைகட்டி சேவகம் செய்வது. அதைவிட நம்ம தொழில்ல அதிக வருமானம் கிடைக்கும் பாருடா”, என்று தான் சொன்னார்.

மோகன் தான் பிடிவாதமாக. “இல்லை நான் வேலைக்கு தான் போவேன்”, என்று சொல்லி வேலைக்கு சென்றான்.

மாலதியின் மேல் அவனுக்கு உள்ள காதலை அவளிடம் சொல்லும் சந்தர்ப்பம் அவனுக்கு வாய்க்கவே இல்லை. அவளை பார்க்கும் ஒன்றிரண்டு முறையும் வார்த்தைகள் வராமல் தடுமாறின. அவனால் அவனின் காதலை சொல்ல முடியவில்லை.

தங்கைக்கு திருமணம் முடியாமல் சொல்லி ஏதாவது தப்பாகி விட்டால் என்ன செய்வது என்ற பயமும் இருந்தது. பேசாமல் ரமாவின் திருமணம் முடிந்த பிறகு வீட்டில் சொல்லிக்கொள்வோம் என்று நினைத்தான். ரமாவிற்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு இருந்தனர்.   

நடுவில் ராம் வைதேகியின் திருப்திக்காக வேறு இரண்டு இடங்களிலும் சுவாமிநாதனின் உடல் நலத்தைப் பற்றி கன்சல்ட் செய்தார்கள். அவர்களும் முன்பு பார்த்த டாக்டர் சொன்னதையே தான் திரும்ப சொன்னார்கள்.

அடிக்கடி சென்னையும் போய் வந்தான். சுவாமிநாதனின் தொழிலை பார்த்துக்கொள்ளவும், வாடகை வசூலிக்கவும். போகும் போதெல்லாம் அவனின் கண்கள் ஆர்வமாக வைதேகியை தேடும். அதை வைதேகி உணர்ந்தாலும் அதற்குரிய பிரதிபலிப்பு ஒன்றும் அவளிடம் இருக்காது.

மனதில் அவனை பார்க்கும் போதெல்லாம், “எனக்கு அவனை பிடிக்காது”, என்று ஒரு முறையாவது சொல்லிக் கொள்வாள். ராமை தனக்கு பிடிக்கிறதா இல்லையா என்பதை எண்ணி பார்க்கவே அவள் தயாராக இல்லை. ஒரு மாதிரி மனதிற்குள் இருக்கு அசட்டு பிடிவாதம்.

சில விஷயங்களில் சிலருக்கு தோன்றும் ஒரு பிடிவாதம் ராமின் விஷயத்தில் அவளுக்கு தோன்றி இருந்தது. என்ன காரணம் என்பதை அவளும் அறியாள். அவனை எனக்கு பிடிக்க வேண்டும் என்று ஒரு நிமிடம் கூட அவள் யோசிக்க தயாராக இல்லை.  பிடிக்கிறதா இல்லையா என்று பார்க்கவும் தயாராக இல்லை.    

 ராமும் அவளின் பார்வைக்காக அவளின் வார்த்தைக்காக ஏங்கி ஏங்கி ஒரு மாதிரி விரக்தியான மனநிலையில் இருந்தான். என் கடன் பணி செய்வதே என்பது போல வாழ்க்கையை ஒட்டிக்கொண்டு இருந்தான். நாளுக்கு நாள் அவளின் மேல் இருந்த ஆர்வம் குறைவது போல உணர்ந்தான். அவனாக ஆர்வத்தை உண்டு பண்ணி அவளிடம் எவ்வளவு தான் பேச்சுக் கொடுக்க முயற்சித்தாலும் அவள் அவனிடம் சகஜமாக பேசுவதாக இல்லை.

என்ன தேவையோ அதை மட்டும் அளவாக பேசுவாள். பேசுவதற்கே இப்படி என்றால் மற்ற விஷயங்கள் அவளை அணுகும் விதம் தெரியவில்லை. அவனின் மனதின் ஏக்கங்கள் தீரும் வழி தெரியவில்லை. அவனின் ராமின் பொறுமை எல்லாம் காற்றில்  பறக்க ஆரம்பித்தது.

“நானென்ன இவள் தான் என் மனைவியாக வேண்டும் என்றா நினைத்தேன். வேறு யாராவது ஒரு பெண் என் மனைவியாக வந்திருந்தாள் என் வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமோ.”, என்ற எண்ணம் இப்போதெல்லாம் அடிக்கடி தோன்ற ஆரம்பித்தது.  

இப்படியே கிட்ட தட்ட ஒரு வருடம்  ஓடி விட்டது.       

வைதேகிக்கும் மனோகருக்கும் அவர்களின் கடைசி வருட இறுதி செமஸ்டர் நெருங்கிக்கொண்டு இருந்தது.

சுவாமிநாதனின் உடல் நிலையும் ஒரு வாறாக அதிக மோசம் ஆகாமல் சீராக சென்று கொண்டு இருந்தது. 

இந்த ஒரு வருடமாக வைதேகியை நெருங்க முயன்று தோற்று விட்டான் ராம். அது அவனுக்கு சொல்லொணா மன பாரத்தை கொடுத்தது. 

ராம் வாரத்திற்க்கு இரண்டு நாட்கள் சென்னை போவான். அவரின் தொழிலில் வரும் வருமானத்தையும் வாடகை பணத்தையும் சுவாமிநாதனிடம் கொடுப்பான். அவர் வைதேகியிடம் கொடுக்க சொல்வார். “பண விவகாரத்தை நீங்க ரெண்டு பேருமே பார்த்துக்கங்கப்பா”, என்று விடுவார்.

“இவ்வளவு காஷ் வெச்சிட்டு என்ன பண்றது இதை பேங்க்லயே போட்டுடுங்க”, என்று விடுவாள் வைதேகி.

திரும்ப அவன் போட்டானா இல்லையா என்று கூட யாரும் கேட்க மாட்டார்கள். அந்த வகையில் வைதேகியை பாராட்டலாம். பண விஷயத்தில் முழுதாக ராமை நம்பினாள். இருந்தாலும் ஒவ்வொரு முறை பணம் வசூலாகும் போதும் அதை அவர்களிடம் கொடுத்து. அவர்கள் பேங்கில் போட சொன்ன பிறகே போடுவான்.

லீவில் மாலதி சில முறை ஊருக்கு கூப்பிட்டும். “அப்பாவை விட்டுட்டு வரமுடியாது மாலதி”, என்றுவிட்டாள் வைதேகி.

ராம் அவன் சென்னை வரும்போது மாலதி கேட்டுக் கொண்டே இருக்கிறாள் என்று அவளை சில முறை அழைத்து வந்து வைதேகியிடம் காட்டி செல்வான்.

சுவாமிநாதன் வைதேகியிடம் சொல்லிக்கொண்டே இருந்தார். “நீ போய் காஞ்சிபுரத்துல ரெண்டு நாள் இருந்துட்டு வாயேன்மா” என்றார். “கல்யாணம் ஆனதுல இருந்து நீயும் ராமும் பிரிஞ்சே இருக்கறீங்க. நான் இருந்துகுவேன் நீ ரெண்டு நாள் போயிட்டு வா”, என்றார் கட்டளை இடுவது போல.

இப்போதெல்லாம் மகளும் மருமகனும் பிரிந்திருக்கிறார்கள் என்ற எண்ணம் அதிகமாக சுவாமிநாதனை தாக்க துவங்கியது. 

நிறைய முறை மறுத்து விட்டாள் வைதேகி. இந்த முறை சற்று அழுத்தமாக சொன்னார் சுவாமிநாதன்.

அவருக்கு கவலைகள் கொடுக்க கூடாது அவரின் உடல் நிலை பாதிக்கும் என்பதால் அவளால் மறுக்க முடியவில்லை. அதே சமயம் தந்தையை விட்டுப் போகவும் மனமில்லை.

“அதான் ரமாக்கு கல்யாணம் வருது இல்லையாப்பா. அப்போ போகத்தானேப்பா போறேன்.”,

“அதுக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கேம்மா. நீ இப்போ போயிட்டு வா”, என்றார் பிடிவாதமாக.   

அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாதவளாக. சட்டென்று, “நான் போகலைன்னா என்னப்பா. அவர் தான் வர்றாரே”,

“எப்போ வர்றான். வந்தாலும் சாயந்தரமே கிளம்பிடுறான்”, என்றார் ஆதங்கமாக.

“இல்லைப்பா இந்த தடவை வந்தா. ரெண்டு நாள் இருந்துட்டு போறேன்னு சொல்லியிருக்கார்”, என்று பொய் உரைத்தாள்.

“சரி”, என்று அரை மனதாக தலையாட்டினார் சுவாமிநாதன்.

பொய்யை மெய்யாக்கும் பொருட்டு  ராமை அழைத்தாள்.

“என்ன வைதேகி”,

“அப்பா என்னை காஞ்சிபுரத்துக்க்கு ஒரு ரெண்டு நாலாவது போய் இருந்துட்டு வான்னு சொன்னார். நான் போகலைப்பா. அவரே வர்றார்ன்னு சொல்லிட்டேன். எப்போ வர்றீங்க”, என்றாள். அதட்டல் அதிகாரம் குரலில் இல்லை. அதே சமயம் பணிவும் இல்லை. அது ஒரு செய்தியின் கேள்வியாக ஒலித்தது.

ராமிற்கு முன்பு அவளை பார்க்க வேண்டும் என்று இருந்த ஆர்வம் எல்லாம் இல்லை. “எப்போ வரட்டும்”, என்றான் இயந்தர கதியில்.

“நீங்க சொல்லுங்க”,

“நீ சொல்லு”.

“நாளைக்கு”,

“நாளைக்கு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அதுக்கு அடுத்த நாள் வர்றேன்”, என்றான்.

“மாலதி வர்ரேன்னு சொன்னா. அவளையும் கூட்டிட்டு வாங்க”, என்றாள் மறக்காமல்.

“வந்தா கூட்டிட்டு வர்றேன்”, என்று பட்டும் படாமல் சொன்னான்.

“சரி போனை வெச்சிடறேன்”, என்று சொல்லி வைத்தாள்.

வைத்த பிறகு தான் இரண்டு நாட்கள் இருக்குமாறு வர சொல்ல வேண்டும் என்பதே ஞாபகம் வந்தது.

உடனே மறுபடியும் அழைத்தாள்.

எடுத்த உடனே, “இப்போ என்ன”, என்றான் அவளிடம் சற்று அதட்டலாக.

இப்படியெல்லாம் அவன் தன்னிடம் பேசமாட்டானே என்ற எண்ணம் அவளுக்குள் ஓட ஆரம்பித்தாலும் அதை புறக்கணித்து. “ரெண்டு நாள் இருக்கிற மாதிரி வாங்க”, என்றாள்.

“எதுக்கு”,

“அப்பா கிட்ட நான் சொல்லிட்டேன். நீங்க ரெண்டு நாள் இங்க இருக்கிற மாதிரி வர்றீங்கன்னு அதுக்கு தான்”,

“வந்தா மட்டும் என்ன கிழிக்க போற”, என்று கேட்கவேண்டும் என்று வாய்வரை வந்துவிட்டது. முயன்று அடக்கி, “எதுக்கு அப்படி சொன்ன”, என்றான். 

“இல்லைனா என்னை ரெண்டு நாள் காஞ்சிபுரம் வந்து இருக்க சொல்றார். அவரை தனியா விட்டுட்டு எப்படி வர்றது”,

அவளிடம், “வர முடியாது போடி”, என்று சொல்லவேண்டும் போல ஆத்திரமாக வந்தது. இருந்தாலும் சுவாமிநாதனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அமைதி காத்தான்.

“என்ன வர்றீங்க தானே”,  

“வர்றேன்”, என்று சொல்லி. அவள் போனை வைக்கும் முன் இவன் வைத்தான். மனதிற்குள், “இவர்களுக்கு நான் என்ன வேலையாளா. இவர்கள் வா என்னும்போது வரவேண்டும். போ என்னும் போது போகவேண்டும். என்னடா வாழ்க்கை இது. என் முடிவு என்று ஒன்றுமே இல்லையா”, என்றிருந்தது.

வேலை பளு அந்தளவிற்கு இருந்தது ராமிற்கு. அவன் தொழில் ஒரு புறம். சுவாமிநாதனின் தொழில் ஒருபுறம். அவர்களின் சொத்தை மேய்க்கும் வேலை ஒரு புறம். மனது உற்சாகமாக இருந்தால் எத்தனை வேலை இருந்தாலும் தெரிவிக்காது. அது இல்லாமல் போகவும் அதிக உழைப்பை உணர்ந்தான்.

மனம், “இளைப்பாறு”, என்றது. எப்படி என்று தான் அவனுக்கு தெரியவில்லை.

உழைக்கும் வயது தான். இருந்தாலும் எதற்கு இந்த ஓட்டம் என்ற சோர்வு ஆட்கொண்டது. அப்படி ஆட்கொள்ளும்போதேல்லாம். “வைதேகி உன் வாழ்க்கையில் வருவதற்க்கு முன் நீ சந்தோஷமாக இல்லையா. இப்போது மட்டும் ஏன் அவளை பிடித்துக் கொண்டு தொங்கிக்கொண்டு இருக்கிறாய். அவளை விடு உன் வாழ்க்கையை நீ வாழ். உன்னை நம்பி இரு ஜீவன்கள் இருக்கின்றன.”, என்றது மனது.   

அவன் சோர்வடையும் போதெல்லாம் மாலதியையும் மனோகரையும் நினைத்து உற்சாகத்தை வளர்த்துக்கொள்வான்.   

இரண்டு நாட்கள் இருக்க போகும்போது தனியாக போகவில்லை மாலதியையும் அழைத்துக்கொண்டு போனான். இந்த முறை அவளுக்கு நகைகள் வாங்கி விட வேண்டும் என்று நினைத்து தான் அவளை அழைத்துப் போனான்.

ஏனென்றால் ரமாவின் திருமணம் விரைவில் நடக்க இருந்தது. அதில் தன் தங்கை நகைகள் இல்லாமல் இருக்க கூடாது என்று நினைத்துக் கொண்டான். அவனுடைய சேமிப்பில் பெரும் பங்கு இந்த நகை வாங்குவதில் போய் விடும் என்று அவனுக்கு தெரியும். 

அதற்காகத் தான் இவ்வளவு நாட்கள் நகை வாங்காமல் வாங்காமல் தள்ளி போட்டுக் கொண்டே இருந்தான். இருந்தாலும் இப்போது அவளும் திருமணத்திற்கு நிற்கும்  பெண் நாட்களை தள்ளி போடாமல் வாங்கி விடுவதே சிறந்தது என்று நினைத்தான்.   

மாலதிக்கு அண்ணன் அண்ணியின் வீட்டுக்கு அழைத்து போவதில் மிகுந்த சந்தோஷம்.       

வைதேகியை பார்த்தவுடனே சிறு பெண்ணை போல ஓடி வந்து கையை பிடித்துக் கொண்டாள். “எப்படி இருக்கீங்க அண்ணி”,

மாலதியின் இந்த செய்கை வைதேகிக்கு எப்பவும் பிடிக்கும். “நான் நல்லாயிருக்கேன் மாலதி”, என்று வைதேகி சொல்லிக்கொண்டு இருக்கும் போதே. 

“அவளுக்கு என்ன நல்லாதான் இருப்பா. அதான் என்னை உயிரோட கொன்னுட்டு இருக்காளே”, என்று எப்பொழுதும் போல மனதிற்குள் எண்ணங்களை ஓடவிட்டான் ராம்.

எப்பொழுதும் ஆசையுடன் தழுவும் ராமின் பார்வைகள் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக தென்படுவதில்லை என்று வைதேகி உணர்ந்தே இருந்தாள். அதை பற்றி சற்று யோசிக்கவும் ஆரம்பித்து இருந்தாள்.

ராம் வந்தவுடனேயே சொல்லிவிட்டான். “நாளைக்கு போய் மாலதிக்கு கொஞ்சம் நகைகள் வாங்கிட்டு வரலாம்”, என்று.

வைதேகியும் ஆர்வமாக தலையாட்டினாள். எப்பொழுதும் ஷாப்பிங் போவதென்றால் அவளுக்கு அவ்வளவு பிரியம்.  

அடுத்த நாள் நகை கடைக்கு கிளம்பினர். டிரைவர் வேண்டாம் என்று ராமே காரை ஓட்டினான்.

“ஒஹ்! ஒரு வழியாக இவன் கார் கற்றுக்கொண்டு விட்டானா”, என்றிருந்தது வைதேகிக்கு.

மாலதி பின்புறம் ஏறிக்கொண்டாள். அவளோடு சேர்ந்து ஏறப்போன வைதேகியை. “நீங்க முன்னால உட்காருங்க அண்ணி”, என்று கட்டாயப்படுத்தினாள்.

“இல்லை! நான் பின்னாடியே உட்கார்ந்துக்கறேன்”, என்று சொல்ல வந்த வைதேகி அவள் என்ன செய்ய போகிறாள் என்று சுவாமிநாதன் பார்த்துக்கொண்டு இருப்பதை உணர்ந்து. எதுவும் பேசாமல் காரின் முன்புறமே ஏறிக்கொண்டாள்.

முன்பு இருந்த ராமாயிருந்தால் காற்றில் பறந்திருப்பான். இப்போது இருக்கும் ராம் மனதை அடக்க கற்றுக்கொண்டு விட்டான். “நீ எங்கே உட்கார்ந்தால் எனக்கென்ன”, என்பது போல பார்த்திருந்தான். அப்படியும் அவளின் அழகு கண்களை  ஈர்த்தது. எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று தோன்றியது.

ஏறியவுடன், “கிளம்பலாம்”, என்றாள்.

“எங்க போகலாம்”, என்றான் ராம்

“நீங்க எதையும் யோசிச்சு வைக்கலியா”, என்றாள். இதை கூட செய்யவில்லையா என்பதை போல.

அந்த பாவனை ராமிற்கு இவள் என்ன பெரிய இவள் மாதிரி பேசுகிறாள் என்று தோன்ற. இவளிடம் போய் எனக்கு அதெல்லாம் தெரியாது என்று சொல்லுவதா என்று. “இல்லை”, என்பது போல தலையை மட்டும் ஆட்டினான்.

அதை பார்த்த வைதேகி, “ஏன் துரை வாயை தொறந்து பதில் சொல்ல மாட்டாரோ”, என்று நினைத்தாள்.

“எனக்கு மட்டும் என்ன”, என்று திமிராக அமைதியாக அமர்ந்து கொண்டாள். சிறிது நேரம் பொறுத்த ராம், “எங்கே போகலாம்”, என்றான் அவனாக வேறு வழியில்லாமல்.

நகைக்கு புகழ் பெற்ற ஒரு கடையின் பெயரை சொல்லி. “அங்கே போகலாம் அங்கே தான் எங்கம்மா வாங்குவாங்க”, என்றாள் பெருமையாக.

“ஒஹ்! இவங்க அம்மா பெருமை வேறா. இவங்க அம்மா இருந்திருந்தாலாவது பரவாயில்லை. நான் இவ கிட்ட இருந்து தப்பிச்சு இருப்பேன் என்னையெல்லாம் மாப்பிள்ளையாக்க இவ அம்மா ஒத்துகிட்டே இருக்க மாட்டாங்க”, என்றிருந்தது

அவள் சொன்ன கடைக்கே காரை விட்டான்.

இவளை பார்த்தவுடனே கடையில் பயங்கர மரியாதை.

கடையின் முதலாளியே வந்து. “எங்கம்மா ரெண்டு மூணு வருஷமா காணோம். ரெண்டு மூணு மாசத்துக்கு ஒரு தடவை கடைக்கு வந்துட்டு இருந்தவங்க. ரெண்டு மூணு வருஷமா காணாம போயிடீங்க. அம்மா வரலையாம்மா”, என்றார். அவளின் அன்னை அவளை அழைத்துக்கொண்டு தான் கடைக்கு வருவார்.

“அம்மா தவறிட்டாங்கா”, என்றாள் வைதேகி

“என்னமா சொல்ற”, என்றார் வருத்தமாக பின்னே அடிக்கடி நகை வாங்கிக் கொண்டிருந்த கஸ்டமர் ஆகிட்ரே.

“ஆமாங்க. மூணு வருஷம் ஆச்சு. அதான் கடை பக்கம் வரமுடியலை”,

“சின்ன வயசு தானம்மா அவங்களுக்கு. என்ன பண்றது கடவுள் போடற கணக்கு யாருக்கு தெரியும்”, என்று அவர் தத்துவம் பேசினார். 

பிறகு, “அதானே நம்ம அம்மா இருந்தா உனக்கு வாங்கனும்னே வந்திருப்பாங்க. சரி இப்போ மட்டும் என்ன இனிமே நீ வாங்கும்மா”, என்றார்.

இவளுக்கு நகை வாங்குவதில் எல்லாம் அவ்வளவு பழக்கமோ என்று எண்ணிக்கொண்டான் ராம்.

“சார் யாரும்மா”, என்றார் கடைக்காரர்.

“என் வீட்டுக்காரர். இது என் நாத்தனார். இவளுக்கு தான் நகை எடுக்க வந்திருக்கோம்”, என்றாள் வைதேகி.

எப்படி கடைக்காரரிடம் அவருக்கு தகுந்த மாதிரியே பேசுகிறாள். என்னை எப்படியோ வீட்டுக்காரர் என்றுவிட்டாள் என்று ராம் நினைத்தான். 

அங்கே அவனுக்கு ராஜ மரியாதை. “வாங்க சர், வாங்க சர், உட்காருங்க”, என்று.

ராமிற்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது.

“என்ன பார்க்கறீங்க”, என்று அவர்கள் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே காபி வந்தது.

இவன் வேண்டாம் என்று சொல்லப் போக. “எடுத்துக்கோங்க”, என்றாள் வைதேகி.

இவள் சொல்கிறபடி எல்லாம் எல்லாம் ஆட வேண்டுமோ என்பதே அப்போதைக்கு ராமின் எண்ணமாக இருந்தது. வெளியில் விட்டுக்கொடுக்காமல் அந்த காபியை எடுத்து பருகினான்.

வைதேகி கடைக்காரரிடம் பேசும் போது ஒரு பெரிய மனுஷத்தனம் தெரிந்தது. ஒரு பணகாரத்தனம் தெரிந்தது. ஒரு ஹய் ஃபை நடத்தியாக இருந்தது. ராமிற்கு சுட்டுப் போட்டாலும் அப்படியெல்லாம் பேச வராது.

அதான் இவளுக்கு என்னை பிடிக்கவில்லை என்பது போல எண்ணினான். மனதிற்குள் அவனியறியாமல் அவள் பேச்சு நடத்தை எல்லாம் அவனை மறுபடியும் ஈர்த்தன. அதையும் மீறி  இங்கே நான் வெறும் டம்மி பீஸ் தான் என்பது போல உணர்ந்தான்.

ஒரு பக்கம் மனம் அவளை பெருமையாக நினைத்தது. மறுபக்கம் அவனை மதிக்க மாட்டாள் என்றும் தோன்றியது. இவன் நினைத்துக்கொண்டே இருக்க இவனின் நினைவலைகளை கலைத்தாள் வைதேகி.

“என்ன என்ன வாங்கறோம்”,

“மாலதி கிட்ட கேளு”,

“எனக்கு என்னண்ணா தெரியும்”, என்றாள் அவள்.

“எனக்கு மட்டும் தெரியுமா என்ன?”, என்றான் ராம்.

“உங்க பட்ஜெட் தான் என்ன”,

அவன் சொன்னான்.

அதற்கு எவ்வளவு பவுன் வரும் என்று கணக்கு போட்டாள். அதற்கு தகுந்த மாதிரி நகைகளை அவளே பார்வையிட ஆரம்பித்தாள். ராமும் மாலதியும் அங்கே பார்வையாளர் ஆகினர்.

சாமான்யத்தில் வைதேகி செலக்ட் செய்யவில்லை. காலை பத்து மணிக்கு ஆரம்பித்தவள் மதியம் இரண்டு மணிக்கே முடித்தாள். அது மாலதிக்கு பிடிக்கிறதா என்றும் பார்த்துக்கொண்டாள். 

அவனின் பட்ஜெடிற்கு மேல் சில லட்சங்கள் ஓடின.

“போதும் வைதேகி. ஒரு ரெண்டு மூணு நகையை திருப்பி கொடுத்துடு. என்கிட்ட பணம் இல்லை”, என்றான் ராம் மெதுவான குரலில்.

“என்ன எடுத்த நகையை திரும்ப குடுக்கறதா. அதெல்லாம் வேண்டாம்.  நம்ம மரியாதை என்ன ஆகறது. இருக்கறதை குடுங்க மீதி என் அக்கௌன்ட்ல இருந்து எடுத்துக்கலாம்”, என்றாள்.

“வேண்டாம் வைதேகி. இது போதும் மாலதிக்கு”,

“இவ்வளவு நாளா என் அப்பா கொடுத்ததை எல்லாம் வாங்கிக் கொள்ள முடிந்தது. இப்போது முடியவில்லையோ”, என்று தோன்றியது வைதேகிக்கு. அவளின் நல்ல நேரம் அவள் அதை வெளியில் சொல்லவில்லை. 

பொறுமையாக. “அதெல்லாம் போதாது. நான் அவளோட அண்ணி தானே நான் கொடுக்கறேன்”,

“என்ன பெரிய அண்ணி”, என்று நினைத்தவன். அவள் கொடுப்பதை தடுத்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் வார்த்தைகளை கொஞ்சம் அதிகப்படியாக விட்டான் ராம். “உனக்கு என் மனைவின்றதே ஞாபகத்துல கிடையாது. அப்புறம் எப்படி அவள் அண்ணியாவ”, என்றான் பொறுக்க மாட்டாமல்.

கேட்ட வைதேகி மனதிற்குள் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாள். திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தாள். அதில் கொஞ்சம் கோபம். ஒரு அலட்சியம் இருந்தது. பார்வை மட்டுமே அலட்சியத்தை காட்டியது. முகம் ஒரு மாறுதலையும் காட்டவில்லை.

பார்க்கிறவர்களுக்கு அவர்கள் சாதாரணமாக பேசிக்கொள்வது போல தான் தோன்றும். ஆனால்.   

வைதேகியிடமிருந்து ராமை நோக்கி வார்த்தைகள் விஷம் தோய்ந்த அம்புகளாக சீறிப்பாய்ந்து வந்தன.

“இவ்வளவு நாளா தெரியலையா நான் மனைவி இல்லைன்னு. இப்போதான் தெரியுதா. அதை சொல்ல இது தான் இடமா.”, என்றாள் இளக்காரமாக.

ராம் ஒரு நிமிடம் அவளின் பாவனைகளை பார்த்து அசந்து விட்டான். வாயை மூடிக்கொண்டான். அவனுக்கு எப்படி பதிலுக்கு நடந்து கொள்வது என்றே தெரியவில்லை. மேலும் அவளே பேசினாள்.                                                                                                             

“ஒஹ்! இப்படியெல்லாம் பேசினா எனக்கு கோபம் வந்து வாங்காமா விட்டுடுவேன்னு நினைச்சீங்களா. நான் ஒன்னை செய்யனும்னு நினைச்சிட்டன்னா செஞ்சிட்டு தான் விடுவேன். இது நான் மாலதிக்கு வாங்கி கொடுக்கறது. உங்களுக்கு இதுல என்ன போகுது. இதுல நீங்க தலையிடாதீங்க”, என்றாள் அடிக்குரலில்.  

ராமிற்கு இவ்வளவு பணம் செலவு பண்ணி தன் தங்கைக்கு நகை வாங்கும் சந்தோஷமே போய்விட்டது. அவன் முகமும் விழுந்துவிட்டது.   கண்களை மூடி திறந்து கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தான். அவன் கண்களில் கிளம்பிய ஆக்ரோஷம் யாரையும் பயமுறுத்தும். ஆனால் வைதேகி அதற்கெல்லாம் சற்றும் அசையவில்லை.

அவளும் சலைக்காமல் பதில் பார்வை பார்த்தாள்.

இவளின் பேச்சுக்கள் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று நினைத்து கொண்டான் ராம்.

“பேசுவதை எல்லாம் பேசிவிட்டு எப்படி பார்க்கிறாள் பார்”,

இருவரும் ஏதோ சுவாரசியமாக பேசிக்கொள்கிறார்கள் என்பது போல தான் பார்பவர்களுக்கு தெரிந்தது. அவர்கள் பேச்சிலும் பார்வையிலும் அனல் பறந்தது.

ஏதோ சரியில்லையோ என்று மாலதிக்கு தோன்ற. “என்ன ஆச்சு அண்ணி”, என்றாள்.

“ஒண்ணும் இல்லை மாலதி. கணக்கு போட்டோம்”, என்று சமாளித்தாள். 

அண்ணனை பார்க்க. “ஒன்றுமில்லை”, என்று கண்களாலேயே அவளை சமாதானப்படுத்தினான் அவளின் அண்ணன்.

மேலும் ரசாபாசம் கடையில் வேண்டாம் என்று இருவருமே நினைத்தார்களோ என்னவோ அமைதியாகி விட்டனர்.

ஒரு அசையா சொத்தையே வாங்கும் அளவிற்கு நகைகளை வாங்கிய மூவரும் கடையை விட்டு கிளம்பினர்.

ராம் நாம் மட்டும் வந்திருக்க வேண்டும் இவளை போய் கூட்டிக்கொண்டு வந்தோமே என்று தன் முட்டாள்தனத்தை எண்ணி நொந்து கொண்டான்.  

ராமின் மனமும் வைதேகியின் மனமும் கனன்று கொண்டிருந்தது.

வீட்டிற்கு வந்தவுடனேயே அவளின் அப்பாவிடம் நகைகளையெல்லாம் காட்டினாள். “அப்பா நம்ம இதெல்லாம் வாங்கிக்கொடுகிறோம். இவர் வேண்டாம்னு சொல்றார்பா”, என்றாள் ஒன்றுமே நடவாதது போல முகத்தை வைத்து.

“ஏன் ராம்? அப்படி சொல்ற”, என்று கடிந்தார் சுவாமிநாதன்.

அவரை மீறி எதுவும் ராமிற்கு செய்யும் வழக்கம் இல்லாததால் அமைதி காத்தான்.

அவனின் மனநிலை உணர்ந்தோ என்னவோ சுவாமிநாதன் அவனிடம் தன்மையாக. “மாலதியும் எனக்கு ஒரு பொண்ணு மாதிரி தான். நான் அவளுக்கு செய்யறதை வேண்டாம்னு சொல்லாத”, என்றார்.

அவரின் மகள் பேசிய பேச்சுக்கள் மனதிற்குள் சுழன்று கொண்டிருந்தாலும் அவனுடைய இயலாமையை முன்னிட்டு, “சரி”, என்று தலையசைத்தான்.

ஒரு வெற்றி பெருமிதம் வைதேகியின் முகத்தில் தெரிந்தது. அவனை இளக்காரமாக பார்ப்பது போல அவனுக்கு தோன்றியது.

அதை ஒரு வித அவமானமாக உணர்ந்தான் ராம்.

வைதேகிக்கு கோபம் கனன்று கொண்டிருந்தது. “இவனை  பிடிக்கவில்லை என்று சொன்னேன். இருந்தாலும் என்னை திருமணம் செய்து கொண்டு இப்போது தப்பெல்லாம் என்மேல் என்பது போல பேசுகிறான். மனைவின்றதே ஞாபகத்துல இல்லைன்னு பேசறான். மனைவின்னா என்ன பண்ணணுமாம். அதெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது.”, என்று மனதிற்குள்ளேயே பொறிந்தாள்.

அவனை நறுக்கென்று நாலு வார்த்தை கேட்க வேண்டும் போல தோன்றியது. 

 “இதையெல்லாம் எடுத்துட்டு வாங்க. ரூம்ல வெச்சிடலாம்”, என்று அவனையும் அழைத்துக்கொண்டு மேலே ஏறினாள். விபரீதத்தை அவளே தேடிக்கொள்ள அவனை மேலே அழைத்துச் சென்றாள். 

இனி என்னவோ என்று ராம் அதையெல்லாம் எடுத்துக்கொண்டு அவளை பின் தொடர்ந்தான்.  தனிமை கிடைத்த அடுத்த நிமிடம் மறுபடியும் சீறினாள்.

“ஆமாம் மனைவின்னு ஞாபகத்துல இல்லைன்னு எப்படி சொல்ற. மனைவின்னா என்ன செய்யனும்னு எதிர்பார்க்கற. நீ நினைச்ச மாதிரி நான் இல்லைனா நான் உன் மனைவி இல்லைன்னு ஆகிடுமா. எனக்கு மனைவி என்ன பண்ணனும்னு தெரியாது. நான் நீ நினைச்ச மாதிரி எல்லாம் இருக்க முடியாது. மனைவி இல்லைன்னு சொன்னா சொல்லிக்கோ. எனக்கு ஒண்ணும் இல்லை.”,  என்றாள் வார்த்தைகளில் கடினத்தை தோய்த்து. 

ராம் பதில் கொடுத்தே ஆகவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப் பட்டான்.“ஏன் மனைவி என்ன பண்ணுவாங்கன்னு உனக்கு தெரியாதா”,

“என்ன பண்ணுவாங்க”, என்றாள் தெனாவெட்டாக.

வேகமாக அவளின் அருகில் வந்தவன்.” ஏய்! நீ வாயையே குறைக்க மாட்டியா”, என்றான் ஆக்ரோஷமாக.

அவன் வந்த வேகத்தை பார்த்தவள். “என்ன அடிக்க போறியா”, என்றாள். உன்னால அதெல்லாம் முடியாது என்கிற மாதிரி ஒரு பார்வை பார்த்துக்கொண்டு. 

அந்த பார்வை ராமை உசுப்பேற்றி விட்டது. “நீ மட்டும் உங்கப்பாவுக்கு மகளா இல்லைனா உன்னை என்ன பண்ணுவேன்னு தெரியாது”,

“என்ன பண்ணுவ”,

“என்னை வீணா சீண்டிப்  பார்க்காத. என்ன வேணுன்னாலும் பண்ணுவேன். எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்கமாட்டேன்.”, என்றான் கோபம் குறையாதவனாக.

“என்ன பயப்படுத்தறியா”, என்றாள் அலட்சியமாக.

 “நீ சொன்னா கேட்கமாட்டடி. என்னைக்காவது பட்டாதாண்டி உனக்கு புரியும்”, என்றான் ஆவேசமாக.

“அன்னைக்கு பார்த்துக்கலாம்”, என்றாள் இன்னும் அலட்சியமாக.

அவனின் கோபம் எல்லை மீறியது. கண்களை மறைத்தது. “அன்னைக்கு என்ன பார்க்கறது. இன்னைக்கே பாரு. பேசற உன் வாயை என்ன பண்றேன் பாரு”, என்று அவளை பிடித்து ஆவேசமாக இழுத்தான்.

“அடிக்க தான் போகிறான்”, என்று ஒரு நொடி வைதேகி நினைக்க.

அருகில் ஆவேசமாக இழுத்தவன். ஒரு கையால் அவளை அணைத்து. மறு கையால் அவளின் முகத்தை அசையாமல் பிடித்து. அவளின் இதழ்களை ஆவேசம் சற்றும் குறையாமல் முற்றுகையிட்டான்.

இதை வைதேகி சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவளால் திமிரக்கூட முடியவில்லை. இரும்பு பிடியாய் இருந்தது அவனின் பிடி. அவளும் கைகளால் தள்ள பெருமுயற்சி செய்தாள். முடியவேயில்லை.

ராமின் பலநாட்களின் ஏக்கம் அவனை மேலும் மேலும் முன்னேற செய்தது.

அவளின் இதழ்களுக்கு சற்று விடுதலை அளித்தவுடன். “சீ! சீ! என்ன பண்ற விடு. உனக்கே இது அசிங்கமாயில்லை. நீயெல்லாம் ஒரு மனுஷனா. ஒரு பொண்ணு கிட்ட இப்படித்தான் வீரத்தை காட்டுவியா”, என்று மறுபடியும் வைதேகி வார்த்தைகளை விட.

கிடைத்த சந்தர்ப்பத்தை ராம் விட தயாராயில்லை.“நான் மனுஷனே கிடையாதுடி”, என்று கர்ஜித்தவன்.

தன் வசம் இழந்தான்.

தன்னை சுற்றி அவன் பிணைத்துக்கொண்டிருந்த கட்டுக்கள் அனைத்தையும் விடுவித்துக்கொண்டு. எவ்வளவு பெரிய தப்பென்றாலும் அதை செய்தே தீருவது என்று முடிவெடுத்து. அவளை ஆவேசமாக படுக்கையில் தள்ளி. “எதுடி அசிங்கம்” என்று ஆக்ரோஷமாக அவளை ஆக்ரமிக்க துவங்கினான்.

அவளின் மென்மையை உணர்ந்தவன்.  அவளை விடமுடியாதவனாகினான்.

அவளின் எதிர்ப்புகள் எதுவும் அவனை அசைக்கவில்லை.

பல நாட்கள் அவன் கொண்ட ஏக்கங்கள் எல்லாவற்றையும் தீர்த்துக்கொள்ள துவங்கினான். தந்தை இருப்பதனால் அவளால் கத்தவும் முடியவில்லை. மௌனமாக அவனுடன் போராட ஆரம்பித்து அநியாயமாக தோற்றுப்போனாள். வலிமையான ஆண்மகனிடம் மெல்லிய இடையாள் தோற்றுப் போனாள்.

Advertisement