Advertisement

அத்தியாயம் –23

 

 

ராஜசேகர் சில நாட்களாகவே ஏதோ யோசனையுடன் இருப்பது போலவே இருந்தார். தனக்குள் பேசிக் கொள்வதும் அடிக்கடி கிளம்பி எங்கோ செல்வதும் என்று இருந்த அவரை கண்ட இந்திராவுக்கு கவலையாக இருந்தது.

 

 

முத்துவை அழைத்தவர் “முத்து அப்பா ஏன் எப்பவும் ரொம்ப கவலையா தெரியறார், எப்போதுமே யோசனையாகவே இருக்கிறாரே, அலுவலகத்தில் எதுவும் பிரச்சனையாஎன்றார்அவர்.

 

 

“அம்மா அப்படி எதுவும் இல்லையேம்மா, எல்லாமே நல்லா தானே போயிட்டிருக்கு. அப்பா வேற ஏதாவது யோசனையில இருந்திருப்பார் விடுங்கம்மா. நான் வேணா என்னன்னு கேட்கிறேன் என்றான் அவன்.

 

 

“இல்லை முத்து உங்கப்பா எப்போமே இப்படி இருந்ததில்லை, அதான் யோசனையா இருக்குஎன்றவர்“விடுப்பாநானேஅவர்கிட்டஎன்னன்னுகேட்டுக்கறேன்என்றார்அவர்.

 

 

வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த ராஜசேகர் மனைவியை அழைத்தார். “இந்திரா, இந்திராஎன்றார். “இதோ வந்துட்டேங்கஎன்றவர்அவர்முன்வந்துநின்றார். “நாளைக்குஎல்லாரும்கிளம்பிதயாராஇருங்க, ஒருஇடத்துக்குபோகணும்என்றார்அவர்.

 

 

“எல்லாரும்ன்னா எல்லாரும் தான், நீ, முத்து, மருமக, நிர்மல், அப்புறம் கார்த்தியும், மாப்பிள்ளையும் சரியாஎன்றார்அவர். இந்திராவின் தலை தானாக ஆடியது, ‘ஏதேது உலக அதிசயம் எல்லாம் நடக்கிறதே, மாப்பிள்ளை என்று சொல்லிவிட்டாரேஎன்றுதான்அவர்ஆச்சரியத்தில்முழ்கினார்.

 

 

“என்ன மண்டையை ஆட்டுற, புரிஞ்சுதாஎன்றார்அவர். “ஹ்ம்ம்புரியுதுங்கஆனாகார்த்திக்கும்மாப்பிள்ளைக்கும்நீங்கஒரு வார்த்தை போன் பண்ணி கூப்பிடுங்க, அப்போ தானே அவங்க வருவாங்கஎன்றார்இந்திரா.

 

 

“நீயே கூப்பிடு இந்திரா, கார்த்தி இன்னமும் என் மேல கோபமா தான் இருக்கா. நீ பேசிட்டு என்கிட்ட கொடு, நான் பேசுறேன். நம்ம பொண்ணு மாசமா வேற இருக்காளே, அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து வாய்க்கு ருசியா சமைச்சு போடணுமே, அது எப்போ செய்யணும்என்றார்மனைவியிடம்.

 

 

கணவர் அறியாமல் தன்னையே ஒரு முறை கிள்ளிக் கொண்டார் இந்திரா. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது இது தானோ என்றே அவருக்கு தோன்றியது.

 

 

இந்திரா எல்லோரையும் தயாராக இருக்கச் சொல்லிவிட்டு இரவு படுக்கச் சென்றார். நிர்மல் வரமுடியாது என்று பிகு செய்ய இந்திரா அவனை அதட்டி உருட்டி சம்மதிக்க வைத்தார்.

 

 

சூரியன் செந்நிற கதிர்களை வீசி மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்க ராஜசேகரின் இல்லம் பரபரப்பாக இருந்தது. “என்னங்க கார்த்தி போன் பண்ணியிருந்தா, நீங்க எங்க வரணும்ன்னு சொன்னீங்கன்னா அவங்க நேரா அங்கே வந்துடுறாங்கலாம்என்றார்அவர்.

 

 

“அவங்களை நேரா வடபழனி முருகன் கோவிலுக்கு வரச்சொல்லி சொல்லிடுஎன்றார்அவர். ‘இவர்என்னத்துக்குஇன்னைக்குஇவ்வளவுசீன்போட்டுட்டுஇருக்கார், வேறவேலையே இல்லையா இவருக்குஎன்றுமனதிற்குள்குமைந்துக்கொண்டேநிர்மல்கிளம்பிநின்றிருந்தான்.

 

 

“சரி கிளம்பலாம்என்றுஅவர்கூறஎல்லோரும்கிளம்பிநேரேவடபழனிக்குசென்றனர். சரயு, முத்துவும்கூடஎன்னநடக்கிறதுஎன்றுபுரியாமலேசென்றனர். கோவிலுக்குசென்றுகடவுளைதரிசனம் செய்துவிட்டு கிளம்பினார்கள். “நிர்மல் வண்டியை அந்த இனிப்பு கடையில நிறுத்துஎன்றார்ராஜசேகர்.

 

 

இந்திராவோ எதற்கு இப்படி சொல்கிறார் என்று பார்த்தாலும் கணவருடன் இறங்கி சென்றார் அவர். அவரோ இனிப்புகளை வாங்கிக் குவித்தார். எதற்கு என்று நினைத்தாலும் ஒருவேளை மகள் வீட்டுக்கு சென்று அவளை அழைப்பதற்காக இப்படி செய்கிறாரோ என்று தோன்றியது அவருக்கு. முதல் நாள் வேறு மகளை எப்போது அழைத்து வரலாம் என்று கூறியிருந்ததால் அப்படி தான் இருக்கும் என்று அவர் மனமகிழ்ந்து போனார்.

 

 

நிர்மல் அவன் தந்தையை நன்றாக கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தான், “அண்ணா எதுக்கு இவர் இப்படி எல்லாம் செஞ்சுட்டு இருக்கார், என்ன வேணுமாம், எதுனாலும் சொல்லிட்டு செய்ய வேண்டியது தானே. ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்கார்என்றான்அவன்.

 

 

“நிர்மல் அப்பாவை அப்படி எல்லாம் பேசாதே. அவர் எதையும் காரணம் இல்லாம செய்ய மாட்டார். அம்மாவும் தானே கூட போயிருக்காங்க, கொஞ்சம் பொறுப்போம், என்னன்னு தெரியும்என்றான்அவன்.

 

 

“ஆமாம் நிர்மல் எனக்கும் அப்படி தான் தோணுது, மாமா ஏதோ காரணமா தான் அப்படி செய்யறார். விடுங்க என்னன்னு பார்ப்போம்என்றுசரயுவும்சொல்ல“என்னத்தைபண்ணப்போறாரோஎன்றுமுணுமுணுத்துக் கொண்டே அமைதியானான் நிர்மல்.

 

 

கல்யாணும் கார்த்திகாவும் பின்னால் வந்து கொண்டிருந்தவர்கள் இவர்கள் வண்டி இனிப்பு கடையில் நிற்பதை பார்த்து அவர்களும் பின்னால் நின்றனர். பின்னர் ஒருவாறு அவர்கள் அங்கிருந்து கிளம்பி நேரே அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.

 

 

‘வீட்டுக்கு வர்றதுக்கு எதுக்கு இந்த மனுஷன் ஸ்வீட் எல்லாம் வாங்கினார்என்றுயோசித்துக்கொண்டேகாரைவிட்டுஇறங்கினான்நிர்மல். “கோவிலுக்குபோயிட்டுவீட்டுக்குதானேபோகணும், ஒருபத்துநிமிஷம்உட்கார்ந்துட்டுகிளம்புவோம்என்றார்அவர். “எங்கேஎன்றுநிர்மல் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் அவனை முறைத்து பார்த்தார்.

 

____________________

 

 

வீட்டு வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்க சாந்தி யாராக இருக்கும் இந்த காலை நேரத்தில் என்று வீட்டுக்கு வாசலுக்கு வந்தவர், வந்தவர்களை பார்த்துவிட்டு மருமகளை தேடி உள்ளே சென்றார். அபி காபி கலந்து கொண்டிருக்க “அபிம்மா நம்ம சரயு வீட்டில இருந்து வந்திருக்காங்க, போய் வாங்கன்னு சொல்லும்மாஎன்றார்அவர்.

 

வீட்டில் இருந்து கிளம்பும் போது முத்துவை காரை எடுக்க சொன்னார் ராஜசேகர். நிர்மல் பின்னால் அமர்ந்து கொள்ள வண்டி எங்கே செல்கிறது என்று கூட பார்க்காமல் பயங்கரமான கோபத்தில் அவன் தந்தையை திட்டிக் கொண்டே வந்தான் நிர்மல்.

 

 

கார் நிற்கும் ஓசை கேட்டதும் நிமிர்ந்து பார்த்தவன் திகைத்தான், இங்க எதுக்கு வண்டி நிக்குது. என்ன நடக்கப் போகுது, சந்தோசமாகவும், திகைப்பாகவும் ஏதோ நடக்கப் போகிறது என்ற உணர்வோடு வண்டியை விட்டு கிழே இறங்கினான் அவன்.

 

 

வைபவ் வீட்டிற்கு வண்டியை ராஜசேகர் விடச் சொல்லும் போதே கல்யாணுக்கு ஏதோ நல்ல விஷயம் என்றே பட்டது. ஆனாலும் இவருக்கு தான் எதுவும் தெரியாதே, நிர்மல் விசயம் மற்றவர்களுக்கு தானே தெரியும் என்று யோசனையும் வந்தது.

 

 

எதுவும் பேசாமல் அவனும் நடப்பதை வேடிக்கை பார்க்க தயாரானான். வெளியில் வந்த அபி எல்லோரையும் வரவேற்றாள். மற்றவர்களை அவள் பார்த்திருக்கிறாள் ஆனால் நிர்மலின் தந்தையை அப்போது தான் முதல் முறை பார்க்கிறாள்.

 

 

“உட்காருங்கஎன்றுசொல்லிஅவர்களைஅமரச்செய்தாள். கார்த்திகாவும் அவர்களுடன் வந்திருக்க என்ன என்பது போல் கண்களால் அவளுக்கு சைகை செய்ய அவள் உதட்டை பிதுக்கி தெரியாது என்றாள். அடுத்து சரயுவை பார்க்க அவளும் அதையே பிரதிபலிக்க அபி உள்ளே விரைந்தாள் சாந்தியை அழைக்க.

 

 

அதற்குள் சாந்தியும் அங்கே வந்து அவர்களை வரவேற்றார். நம்ம நிர்மல் வந்ததுல இருந்து என்ன எதுன்னு புரியாம இருந்தாலும் அவர் காரியத்துல கண்ணா இருக்கார். என்ன பண்ணுறார் தெரியுமா நந்து எங்கேன்னு கண்ணை சுத்தி சுத்தி தேடுறார்.

 

 

அபி அவர்களுக்காக காபி போட உள்ளே செல்ல முயல “ஒரு நிமிஷம்மாஎன்றுவாயைதிறந்தார்ராஜசேகர். “சொல்லுங்கஎன்றாள்அவள். “நான்தான்கார்த்தியோடஅப்பா, உனக்குஎன்னைஅவ்வளவாதெரிஞ்சிருக்கவாய்ப்பில்லை

 

 

“ஏன்னா நான் உங்க கல்யாணத்துக்கு கூட வரலை, உன் கணவர் எங்கேம்மா நான் அவரை பார்க்கணும். அவர் வந்த பிறகு நான் பேச நினைச்ச விஷயத்தை பேசிடறேன்என்றார்அவர்.

“சரிங்கஎன்றுதலையாட்டியவள்கணவனைஎழுப்பஅவர்கள்அறைக்குள்விரைந்தாள். “என்னங்கஎழுந்திருங்கஎன்றுஅவள்அவனைஉலுப்பிக்கொண்டிருக்கஅவனோஅவளைஇழுத்துதன்மேல்போட்டுக்கொண்டான்.

 

 

“எதுக்கு அபி லீவ் நாள்ல சீக்கிரம் எழுப்புறேஎன்றவன்அவன்கழுத்தில் முகம் புதைத்தான். “அய்யோ என்ன பண்ணுறீங்க விடுங்க, உங்க வேலை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம், நம்ம வீட்டுக்கு முத்து அண்ணா வீட்டில இருந்து எல்லாரும் வந்திருக்காங்க, அவங்க அப்பாவும் வந்திருக்கார்என்றதும்தான்தாமதம்சடாரென்றுஎழுந்துஅமர்ந்தான்வைபவ்.

 

 

“என்னது அவரும் வந்திருக்காரா என்னவாக இருக்கும்என்றான்அவன். “அதைஅவர்உங்களிடம்தான்சொல்வாராம்என்றாள்அவள். “சரிஅபிஒருஐந்துநிமிடம்நான்குளித்துவிட்டுவந்துவிடுகிறேன், நீஅதுவரைஅவர்களைசமாளித்துக்கொள்என்றுவிட்டுகுளியலறைக்குள்புகுந்துக்கொண்டான் அவன்.

 

 

சொன்னது போல் ஐந்து நிமிடத்தில் தயாராகி வந்தான் அவன். “வாங்கஎன்றுஎல்லோரையும்வரவேற்றவனின்கண்கள்கல்யாணைநோக்கியது. அவனும்நண்பனைபுரியாதபார்வைபார்க்கஇவனுக்குஎன்னஎன்பதேதெரியாதுபோல்இருக்கிறதேஎன்றுநினைத்தவன்அமைதியாகஅமர்ந்தான்.

 

யார் முதலில் பேசுவார்கள் என்று அங்கு கனத்த அமைதி நிலவியது. யாராவது என்ன விஷயம் என்று கேட்பார்கள் என்று பார்த்தால் எல்லோருமே அமைதியாக என்ன நடக்க போகிறது என்று பார்த்தனர்.

 

 

சிறிது நேர அமைதிக்கு பின் ராஜசேகர் தொண்டையை செருமிக் கொண்டு பேசத் தயாரானார். மற்றவர்கள் என்ன நடக்க போகிறது என்று பார்க்க தயாரானார்கள். “வைபவ்என்றவர்எழுந்துவந்துஅவன்கைகளைபிடித்துக்கொள்ளஅவன்சட்டென்றுஎழுந்துநின்றான்.

 

 

“சொ… சொல்லுங்க சார்… இப்போ எதுக்கு என் கையெல்லாம் பிடிச்சுக்கிட்டுஎன்றுகூச்சத்தில்நெளிந்தான்அவன். “இல்லைப்பா என்னை மன்னிச்சுடு, எனக்கு கொஞ்சம் செருக்கும் ஆணவமும் அதிகமா இருந்ததால மனுஷங்களை நான் அடையாளம் காணாமல் விட்டுட்டேன்

 

 

“இப்போ தான் எனக்கு மனுஷங்களை புரிய ஆரம்பிச்சு இருக்கு, எல்லாரையுமே நான் பணத்தால தான் நல்லவங்களா கெட்டவங்களான்னு தராதரம் பார்த்திருக்கேன். இப்போ தான் மனசை பார்க்க ஆரம்பிச்சு இருக்கேன்

 

“என் பசங்களுக்கு நல்லதுன்னு நான் நினைச்சு செஞ்சது அவங்களுக்கு பிடிக்கலை, நான் அவங்களுக்கு நல்லதுன்னு நினைச்சு எல்லாத்தையும் அவங்க மேல திணிச்சேன். அவங்களுக்கு அது பிடிக்காம என்னை எதிர்த்தாங்க, அப்பவும் நான் நினைச்சது தான் சரின்னு நினைச்சேன்

 

 

“அவங்க எல்லாரும் என்னை அந்நியமா பார்க்க ஆரம்பிச்சு என்கிட்ட இருந்து விலகினாங்க, என் பொண்ணும், என் சின்ன மகனும் இப்போலாம் என்கிட்ட பேசுறதே இல்லை. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு எனக்கு, நான் ராஜ்ஜியம் பண்ண வீட்டில நானே அந்நியப்பட்டதா உணர்ந்தேன்

 

 

“என்ன பண்ணி என்ன சாதிக்க போறோம்ன்னு தோணிச்சு, மனசுக்கு பிடிச்ச பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்ட நான் ஒரு நாளாவது அவளோடு சந்தோசமாக சிரித்து பேசியிருக்கிறேனா, பிள்ளைகளுடன் நட்புறவாக இருந்திருக்கிறேனா என்று நினைத்து எனக்குள் வெறுமை

 

 

“உன்னை பார்க்கும் போது எனக்குள் எப்போதுமே ஒரு பொறாமை உண்டாகும், உன்னிடம் பணம் இல்லாமல் இருக்கலாம். நல்ல மனம் இருக்கிறது, உன்னை சுற்றி நல்லவர்கள் இருக்கிறார்கள், உனக்காக எதையும் அவர்கள் செய்வதை பார்த்திருக்கிறேன்

 

“நமக்கு ஏன் இப்படி இல்லை என்று யோசித்த போது என் குணம் தான் அதற்கு காரணம் என்று புரிந்தது, இப்போது கூட பார், எத்தனை முறை நான் உன்னை அவமானப்படுத்தியிருக்கிறேன், ஆனால் நீ எதையும் பொருட்படுத்தாது என்னை அன்போடு வரவேற்கிறாய்

 

 

“என்னை மன்னித்துவிடப்பாஎன்றார்அவர். “அய்யோசார்நீங்கபெரியமனுஷன்நீங்கபோய்என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு எங்கப்பா எதாச்சும் சொன்னா நான் தப்பா எடுத்துக்குவேனா, அப்படி தான் சார் நீங்களும். உங்களை எப்போதும் வேறா நினைச்சது இல்லை சார்என்றான்வைபவ்.

 

 

“நீங்க முதல்ல உட்காருங்கஎன்றவன்அவரைஅமர்த்தினான். “அப்புறம்வைபவ்இன்னொருவிசயம்என்று தயங்கினார் அவர். “சொல்லுங்க சார்என்றார்அவன். “உன்தங்கையைஎன்சின்னமகனுக்குகட்டிக்கொடுப்பாயாஎன்றார்அவர்.

 

 

நிர்மலுக்கு சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை, நடப்பது கனவா நனவா என்பது போல் பிரமித்து அமர்ந்திருந்தான். நிர்மல் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை, திக்குமுக்காடி போயிருந்தவன் வேகமாக எழுந்து வந்து அவன் தந்தையை இறுகக்கட்டிக் கொண்டான்.

 

கார்த்திகாவும் அவள் தந்தை பேசியதில் நெகிழ்ந்து போய் அவர் அருகில் வந்து அவர் கைகளை பிடித்துக் கொண்டு தோளில் தலைசாய்ந்தாள். “என்னங்க நீங்க போகலையா என்றாள் சரயு கணவனிடம்.

 

 

“லூசு அவங்க ரெண்டு பேரும் அப்பாவை இப்போ தான் புரிஞ்சுகிட்டாங்க, அதான் இப்படி செய்யறாங்க, நான் அவர் மாதிரி தானே இருந்தேன், நானே மாறிட்டேன் அவர் மாறமாட்டாரா என்றான் சரயுவை பார்த்து. வைபவ் வேறு மாதிரி இதை எதிர்பார்த்திருந்தான், நிர்மலுக்காக அவனிடம் முதலில் பேசியது கல்யாண்.

 

____________________

 

 

சரயு விருந்திற்கு பின் ஒரு நாள் கல்யாண் வைபவிடம் பேச வேண்டும் என்று அவன் அலுவல் அறைக்குள் வந்து நின்றான். “சொல்லு கல்யாண் என்றான் வைபவ்.

 

 

கல்யாண் வெகுவாக தயங்குவது போல் இருக்க “என்ன கல்யாண் என்கிட்ட என்ன தயக்கம் உனக்கு, சொல்லு என்றான் வைபவ். “நம்ம நந்து கல்யாணம் பத்தி தான் என்று நிறுத்தினான் அவன்.

“என்னடா நல்ல வரன் எதுவும் வந்திருக்கா சொல்லு பார்போம் என்றான் அவன். “நல்ல வரன் தான் வைபவ், நம்ம நிர்மல் தான் அது. நிர்மலுக்கு நந்துவை பிடிச்சிருக்கு, நீ என்ன நினைக்கிறே என்று நேரடியாக விஷயத்திற்கே வந்துவிட்டான் அவன்.

 

 

வைபவ் நெற்றியை சுருக்கி யோசித்தான், “நீ என்ன நினைக்கிற கல்யாண், இது சரியா வருமா என்றான் அவன். “நிர்மல் ரொம்ப நல்லவன்டா நம்ம நந்துவை அவனுக்கு பிடிச்சிருக்கு, நல்லா பார்த்துக்குவான். உனக்கே அவனை பத்தி தெரியும், நீயும் யோசி என்றான் அவன். “சரி கல்யாண் கல்யாணம் முடியட்டும் பார்க்கலாம் என்று அந்த பேச்சை முடித்துவிட்டான் அவன்.

 

 

வைபவ் அந்த பேச்சு அத்தோடு முடிந்தது என்று நினைத்திருக்க அவன் அபியை சந்திந்த தருணத்தில் அவளும் அவனிடம் இதை பற்றி பேசியிருந்தாள்.  அதுமட்டுமல்லாது கார்த்தி மாதவியிடம் இது பற்றி பேசியிருக்க அவர் சாந்தியிடம் இதைப்பற்றி சொல்ல அவர் மகன் காதுகளில் அந்த விஷயத்தை போட்டு வைத்தார்.

 

 

இரண்டொரு நாளில் சரயு வைபவை தேடி வீட்டிற்கு வந்தாள். “வாங்க மேடம், இப்போ தான் உங்களுக்கு இங்க வர்றதுக்கு வழி தெரியுதா என்றான் வைபவ். “என்ன வைபவ் பண்ண சொல்ற எல்லாம் உன் கல்யாண வேலையா தான் அலையுறோம். கல்யாண் தான் ஆளுக்கு ஒரு வேலையா பிரிச்சு கொடுத்திட்டானே என்றாள் அவள்.

 

 

“அதுனால நீங்க ரொம்ப பிஸி அப்படி தானே சரயு என்றான் அவன். “சரி அதெல்லாம் இருக்கட்டும், இப்போ நீ ப்ரீயா இருக்கியா, உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்றாள் அவள். ‘இவளும் நிர்மல் பத்தி பேச வந்திருப்பாளோ, என்னடா இது என்று யோசித்தான் அவன்.

 

 

“சொல்லு சரயு, எனக்கென்ன வேலையிருக்கு, சும்மா வெட்டியா தான் இருக்கேன் என்றான் அவன். “நான் சுத்தி வளைக்க விரும்பலை நேராவே கேட்கறேன், நிர்மல்க்கு நந்துவை கொடுப்பீங்களா, இது நான் மட்டும் வந்து பேசற விஷயமில்லைன்னு எனக்கு தெரியும்

 

 

“நிர்மல்க்கு நந்துவை பிடிச்சிருக்கு, அதை அவன் எல்லார்கிட்டயும் சொல்லவே தயங்குனான் என்றவள் அவன் தயக்கத்தின் காரணத்தை வைபவிற்கு கூறினாள். “அவன் ஆசையில எந்த தப்பும் எங்களுக்கு தோணலை

 

 

“நீ என்ன நினைக்கிற வைபவ், உனக்கு சம்மதம்ன்னா மட்டும் தான் மேற்கொண்டு நாங்க முறையா பேசணும்னு நினைக்கிறோம். நீ என்ன சொல்ற வைபவ் என்றாள் அவள். ‘இவளுமா என்று நினைத்தவன் வழக்கம் போலவே “கல்யாணம் முடியட்டும் சரயு, அப்புறம் இதை பத்தி பேசலாம் என்றான் அவன்.

 

 

“சரி யோசிச்சு நிதானமாவே சொல்லு ஒண்ணும் அவசரமில்லை. அப்புறம் இன்னொரு விஷயம் நீ இப்போலாம் முன்ன மாதிரி இல்லையே வைபவ் ரொம்ப மாறிட்டே என்றாள் அவள்.

 

 

“மாறினா எந்த தப்பும் இல்லையே என்றான் வைபவ். “ஏன்டா என்னமோ மாதிரி பேசுற, பழி வாங்குறியா. கஷ்டமா இருக்கு வைபவ், உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கலை என்றாள் சரயு உள்ளார்ந்த வருத்தத்துடன்.

 

 

“ஹேய் சரயு நீ என்னை தப்பா நினைக்கிற, நான் எப்படிப்பட்டவன்னு உனக்கு தெரியாதா. கல்யாணத்துக்கு பிறகு உனக்கு கணவன் தான் முதல்ல, நாங்க எல்லாரும் உனக்கு அவருக்கு பிறகு தான் என்றான் அவன்.

 

 

“அவர் நம்ம நட்பை சந்தேகப்படுவார்னு நினைக்கிறியா என்றாள் வருந்திய குரலில். “அப்படியில்லை, இது எந்த ஒரு ஆணுக்கும் இருக்கற ஒரு உணர்வு தான் தனக்கு பின்னே தான் மற்றவர்கள் என்று எண்ணமிருக்கும். ஊர்ல வைச்சே எனக்கு அது புரிஞ்சு போச்சு. அவர் மேல எந்த தப்புமில்லை, அவருக்கு உண்மை புரிஞ்சதும் இயல்பா இருந்ததை பார்த்தேன்

 

 

“அப்புறம் தான் முடிவு பண்ணேன், கொஞ்சம் தள்ளி தான் இருக்கணும்ன்னு என்றவனை இடைமறித்தவள் “அப்போ நான் வேணாம்ன்னு நினைக்கிறியா என்றாள் அவள். “உன் கூட பழக வேண்டாம்ன்னு அவரே சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். நான் நட்பே வேண்டாம்னு சொல்லலை. அவருக்கு பிறகு தான் உனக்கு நாங்க எல்லாரும் அதை புரிஞ்சு நடந்துக்கோ

 

 

“நாம எல்லாரும் இருக்கற இடத்துல நீ முதல்ல உன் கணவரை தான் கவனிக்கணும், நாங்க தான் முக்கியம்ன்னு எங்க கூட இருக்கக்கூடாது. நாம இன்னமும் கல்லூரி காலத்திலேயே இல்லை, வாழ்க்கைக்குள்ள அடியெடுத்து வைச்சாச்சு

 

 

“நாம சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி தான் வாழ பழகிக்கணும், உன்னையும் நம்ம நட்பையும் என்னைக்கும் என்னால விட்டுத் தர முடியாது புரிஞ்சுக்கோ என்றான் வைபவ்.

 

 

அன்று மாலை வீட்டிற்கு ராம் வந்திருந்தான். “நந்து நந்து என்று அழைத்தவாறே உள்ளே நுழைந்தான். “என்ன ராம் என்ன விஷயம் என்றான் வைபவ். “நந்து எங்கேண்ணா, அவளுக்கு நம்ம கடையில இருந்து அழகு சாதன பொருள் எல்லாம் வேணுமாம்

 

 

“கடைக்கு கூட்டிட்டு போன்னு ஒரே தொல்லை, அதான் வந்தேன் என்றான் அவன். நந்து அப்போது எதிரில் வர “ஹேய் என்ன நீ இன்னும் கிளம்பாம இருக்கே, போய் கிளம்பு உனக்கு பத்து நிமிஷம் தான் டைம் என்றான் அவன்.

 

 

“சரி போடா நான் கிளம்பி வர்றேன் என்றாள் அவள். “எப்படிடா இவளை எல்லாம் நீ பொறுமையா சமாளிச்சு கடைக்கு கூட்டிட்டு போறே என்றான் வைபவ். “விடுங்கண்ணா அவ சின்ன பொண்ணு என்கிட்ட தானே கேட்குறா, அதுல என்ன தப்பிருக்கு என்றான் அவன்.

 

 

“அப்புறம் அண்ணா அவ வர்றதுக்குள்ள உங்ககிட்ட ஒரு விஷயம் பேசிடறேன் வாங்களேன் மொட்டை மாடிக்கு போய் பேசுவோம் என்றான் ராம். “ஹ்ம்ம் வா ராம் போகலாம் என்று அவனும் அவனுடன் சேர்ந்து மொட்டை மாடிக்கு சென்றான்.

 

 

“சொல்லு ராம், என்ன விஷயம் என்றான் வைபவ். “அண்ணா நந்துவுக்கு மாப்பிள்ளை பார்க்கறீங்க தானே என்றான் அவன். “ஆமா ராம், என் கல்யாணம் முடிஞ்சதும் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க வேண்டியது தான் என்றான் வைபவ்.

 

 

“அண்ணா நம்ம நிர்மலுக்கு நந்து மேல ஒரு அபிப்பிராயம் இருக்கும் போல தெரியுது. நாம ஏன் இப்படி யோசிக்க கூடாது என்றான் அவன். வைபவோ எதுவுமே தெரியாதவன் போல் “என்ன சொல்ற ராம் நிர்மலா என்றான் அவன்.

 

 

“ஆமாம் அண்ணா, நம்ம நந்துவுக்கு அவர் ரொம்ப பொருத்தமான மாப்பிள்ளையா இருப்பார். நாம எப்படியும் நந்துவுக்கு மாப்பிள்ளை பார்க்க போறோம், யாரோ ஒரு மாப்பிள்ளை பார்த்து அவரை பத்தி விசாரிச்சு அப்புறம் நந்துவுக்கு கட்டணும்

 

 

“எனக்கென்னவோ நிர்மலே சரின்னு தோணுது, நல்ல வேலையில இருக்கார், அவர் குணத்தை பத்தி நமக்கு நல்லா தெரியும், அவர் குடும்ப பின்னணியும் நமக்கு தெரியும். தவிர நிர்மலுக்கும் நந்து மேல விருப்பமிருக்கு அவர் நம்ம நந்துவை நல்லா பார்த்துக்குவாருன்னு எனக்கு தோணுது

 

 

“அதுவும் இல்லாம இன்னொரு விஷயமும் இருக்கு என்றவன் மேற்கொண்டு ஏதோ சொல்ல வைபவும் யோசனையானான். “சரி ராம் பார்ப்போம் என்றான் அவன். “அண்ணா உங்க கல்யாணம் முடிஞ்சு தான் இதை பத்தி பேசலாம் நினைச்சேன். இப்போ இந்த பக்கம் வரவும் பேசிடலாம்ன்னு தான் மனசுல பட்டதை சொல்லிட்டேன் என்றான் அவன்.

 

____________________

 

 

“என்ன வைபவ் என்ன யோசனை என்ற ராஜசேகரின் குரல் கேட்க வைபவ் சிந்தனை கலைந்தான். “சொல்லுங்க சார் என்றான் அவன். “ஏன் வைபவ் நீ இன்னும் முடிவு பண்ணலையா என்னை சார்ன்னு கூப்பிட போறியா இல்லை மாமான்னு கூப்பிட போறியா என்றார் நேராக.

 

 

வைபவ் இன்னமும் ஒரு தயக்கத்துடனே இருந்தான், நிர்மலுக்காக அவனிடம் பேசாதவர்களே கிடையாது, எதிர்பார்க்கவேயில்லை ராஜசேகரே அவனிடம் பேசுவார் என்று ஆனால் சம்மந்தப்பட்டவன் அமைதியாவே இருந்தான்.

 

 

“என்ன நிர்மல் நான் என்ன பதில் சொல்லணும் என்றான் வைபவ் நிர்மலை பார்த்து. “உங்களுக்காக கல்யாண், சரயு, அபி, ராம் ஏன் எங்கம்மா கூட பேசிட்டாங்க, ஆனா சம்மந்தப்பட்ட நீ வந்து என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கவே இல்லையே என்றான் அவன்.

 

 

நிர்மல் எச்சில் கூட்டி விழுங்கினான், “மாமா அது வந்து… என்று அவன் இழுக்க, “எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கு, என் ஒருத்தனை தவிர. நீ, நான் சம்மதிக்க மாட்டேன்னு நினைச்சுட்டே அப்படி தானே. நீ வந்து என்கிட்ட உங்க தங்கையை பிடிச்சிருக்கு மாமான்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா போதுமே நிர்மல். கண்டிப்பா உனக்கு என் தங்கையை கொடுத்திருப்பேனே, உனக்காக எல்லாரும் பேசினது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு

 

 

“என்னோட வருத்தம் நீ என்கிட்ட ஒரு வரத்தை கூட சொல்லவே இல்லைன்னு தான் என்றான் வைபவ். “மாமா என்னோட நிலைமை உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன், எங்கே இல்லைன்னு ஆகிடுமோன்னு பயந்துட்டே இருந்தேன்

 

 

“நான் இப்படி நேரடியா கேட்டு உங்களை கஷ்டப்படுத்திடுவோம்ன்னு ஒரு பயம் அது தான் மாமா, நான் கேட்கலை. இப்போ கேட்குறேன் மாமா சொல்லுங்க உங்க தங்கையை என்னை நம்பி கட்டிக் கொடுப்பீங்களா என்றான் அவன்.

 

 

வைபவ் எழுந்து அவனை அணைத்துக் கொண்டான். “எங்க வீட்டு மாப்பிள்ளை நீங்க தான் நிர்மல் என்று மரியாதைக்கு தாவினான் வைபவ். “மாமா சும்மா நீன்னே கூப்பிடுங்க என்றான். “அது மரியாதையா இருக்காது மாப்பிள்ளை என்றான் அவன்.

 

 

“மாமா நீங்க எங்கிட்ட கேட்டதுக்கு நான் மாப்பிள்ளைக்கிட்ட பதில் சொல்லிட்டேன்னு தப்பா நினைக்காதீங்க என்றான் அவன். “அதான் உங்க சம்மதத்தை என்கிட்ட சொல்லிட்டீங்களே என்றார் ராஜசேகர், வைபவ் புரியாமல் முழிக்க “அதான் மாமான்னு கூப்பிட்டு உறுதி படுத்திட்டீங்களே என்றார் அவர்.

 

 

இங்கு எல்லோரும் நந்துவை பற்றி பேசிக் கொண்டிருக்க சம்மந்தப்பட்டவளை எல்லோருமே மறந்திருந்தனர். அபிக்கு அப்போது தான் நந்துவின் நினைவு வர அவள் இன்னும் உறங்கி கொண்டிருக்கிறாளே என்ற நினைவு வந்ததும் வேகமாக அவள் அறைக்கு சென்றாள்.

 

 

அவள் அறைக்கதவை திறக்கும் முன் கதவு தானாக திறந்தது, “ஹா…ஹாவ்வ் அண்ணி மணி என்னாச்சு, ஒரு காபி தாங்களேன். குடிச்சுட்டு திரும்ப கொஞ்ச நேரம் தூங்குறேன், தூக்கமா வருது. ஞாயிற்றுக்கிழமை தான் கூட கொஞ்ச நேரம் தூங்க முடியுது என்று பேசிக் கொண்டே அவள் அபியின் தோளில் முகம் புதைத்தாள்.

 

 

அபி அவளுக்கு செய்த சமிக்கைகளை எல்லாம் கவனிக்காமல் விட்டுவிட அபி அவள் கையை கிள்ளினாள். “ஆ…ஆ… அண்ணி எதுக்கு கையை கிள்ளி… என்று வலியில் கையை தடவிக் கொண்டே நிமிர்ந்தவள் திருதிருவென்று விழித்தாள். கலைந்த தலையுடன் நைட்டியுடன் நின்றிருந்தாள் அவள், நிர்மல் அவளை அவன் விழிகளில் படம் பிடித்துக் கொண்டான் அவன்.

 

 

“அண்ணி என்று அவளை திரும்பி பார்த்து விழிக்க அபி அவளை அவள் அறைக்கு தள்ளிச் சென்றாள். “என்ன அண்ணி இது இவங்க எல்லாம் காலையிலேயே நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க, சொல்லக் கூடாதா நான் இப்படி கன்றாவியா வந்து நின்னு இருக்க மாட்டேன்ல என்றாள் அவள்.

 

 

“உனக்கு பத்து நிமிஷம் தரேன், அதுக்குள்ளே நீ குளிச்சுட்டு புடவை கட்டி இரு என்றாள் அபி. “புடவையா எதுக்கு அண்ணி, எனக்கு புடவையும் கட்டத் தெரியாதே என்றாள் அவள். “சரி நான் ஐந்து நிமிடத்தில் வருகிறேன் நீ குளித்துவிட்டு இரு நான் வந்து புடவை கட்டி விடுகிறேன் என்று சொல்லிவிட்டு அபி வெளியில் சென்றுவிட்டாள்.

 

 

‘என்னை எதுக்கு புடவை கட்ட சொல்றாங்க, ஒருவேளை யாரும் பெண் பார்க்க வந்திருக்காங்களோ. கார்த்தி அண்ணி வீட்டுக்கு தெரிஞ்சவங்களா இருப்பாங்களோ என்று பலவிதமாக யோசனை செய்துக் கொண்டு குளித்து அவள் வெளியில் வரவும் அபி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

 

 

கையில மல்லிகைப்பூவுடனும் நகைபெட்டியுடனும் உள்ளே நுழைந்தாள் அபி. “அண்ணி இதெல்லாம் எதுக்கு என்ன நடக்குது இங்க என்றாள் நந்து. “உன்னை பெண் பார்க்க வந்திருக்காங்க என்றவள் வேகமாக அவளுக்கு புடவை கட்டிவிட ஆரம்பித்தாள்.

 

 

அவளுக்கு தலை சீவி பூ வைத்து நகைகளை அணிவித்து அழகு பார்த்தாள் அபி, பின் திருப்தியுற்றவள் அவளை வெளியே அழைத்து செல்ல முயல “அண்ணி விளையாடாதீங்க, நிஜமாவே என்னை பெண் பார்க்க தான் அவங்க வந்திருக்காங்களா, யாருக்கு பார்க்க வந்திருக்காங்க என்று கேள்விகளாக அடுக்கினாள் அவள்.

 

 

“நிர்மலுக்கு தான் என்று சொல்லிக் கொண்டே அவள் கைப்பிடித்து அழைத்துச் சென்றாள் அபி. ‘என்னது அந்த வாட்ச்மேனா என்று முணுமுணுத்ததை அபி கவனிக்கவில்லை.

நந்து ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டே அபியின் பின்னால் வந்தாள். எப்போதுமே வாயாடிக் கொண்டிருக்கும் நந்துவையே பார்த்திருந்த நிர்மலுக்கு புடவை கட்டி கூந்தலில் சரமாக கோர்த்த மல்லிகையை சூடி தனக்காக அலங்கரித்து வந்திருந்தவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு.

 

 

வைத்த கண் வாங்காமல் அவளை விழிகளில் பருகி கொண்டிருந்தவனை “ஹம்க்கும்என்றகுரல்கலைக்கதிரும்பிபார்த்தான். “மச்சான்நாங்கஎல்லாருமேஇங்கதான்இருக்கும், இருந்தாலும்உனக்குரொம்பதைரியம்தான்இப்படிஉரிமையோடசைட்அடிக்கதான்இவ்வளோநாள்காத்திட்டுஇருந்தபோல, நடத்து நடத்துஎன்றான்கல்யாண்.

 

 

“ஹா ஹா ஹா… மாமா இப்பாவாச்சும் எனக்கு சந்தர்ப்பம் கிடைச்சுதே கொஞ்சம் பார்த்துக்கறேனே. இதையெல்லாம் நீங்க எதுக்கு கண்டுக்கறீங்கஎன்றான்அவன். “அது சரி அது சரிஎன்றுவிட்டுகல்யாண்வேறுபுறம்திரும்பிக்கொண்டான்.

 

 

அபி காபி கோப்பைகள் அடங்கிய தட்டை அவளிடம் நீட்டி எல்லோருக்கும் கொடுக்குமாறு சொல்ல நந்துவிற்கு முதன் முறையாக பயம் பிடித்துக் கொண்டது. இது போலெல்லாம் செய்வார்கள் என்று அறியாதவளாக விழித்தாள் அவள்.

 

 

“என்ன நந்து போ போய் கொடுஎன்றாள்அவள். திரும்பவும்காபியா என்று நிர்மல் நொந்து போனாலும் முறையான பெண் பார்க்கும் படலமாக அது இருந்ததால் சந்தோசத்துடன் அவள் அவனிடம் வருவதற்காக காத்திருந்தான்.

 

 

எல்லோருக்கும் வரிசையாக கொடுத்து வந்தவள் கல்யாணுக்கு அருகில் அமர்ந்திருந்த நிர்மலிடமும் நீட்டினாள், “இன்னைக்கும் நான் தான் சோதனை எலியாஎன்றுஅவளுக்குமட்டுமேகேட்கும்குரலில்அவன்சொல்லதிகைத்துநிமிர்ந்தவள்அவனைநேராகநோக்கிபின்தலைதாழ்ந்தாள்.

 

 

நந்துவை பெண் பார்க்க தான் கார்த்தி வீட்டினர் வந்திருக்கின்றனர் என்ற விபரம் உரைத்து மாதவியையும் ராமையும் போன் செய்து வரச்சொல்லி இருந்தார் சாந்தி, அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்களும் உள்ளே நுழைந்தனர்.

 

 

ராம் உள்ளே நுழைந்ததும் நிர்மலை பார்த்து சிநேகமாக சிரித்தான். கூடத்தில் நின்றிருந்த நந்து குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தாள், ராமோ அவளை பார்த்து கிண்டலடித்துக் கொண்டிருந்தான்.

 

“அண்ணா உலக அதிசயம் நடந்திருக்கு எப்படி இது சாத்தியம், நந்து உன்னால அமைதியா கூட இருக்க முடியுமா. ரொம்ப நேரம் பேசாம இருக்க உன்னாலே முடியவே முடியாதே என்ன செய்ய போறே. பேசு நந்து பேசு, உன் பேச்சை கேட்க மன்னிக்கணும் உன் வசவுகளை கேட்க ஆவலுடன் ஓடி வந்த என்னை ஏமாற்றாதே நந்து ஏமாற்றாதேஎன்றுஅவன்வசனம்பேசஎல்லோரும்சிரித்தனர்.

 

 

வைபவுக்கு தங்கையின் இந்த அமைதி புதிது, அவள் வளர்ந்துவிட்டாள் என்பதை அது அவனுக்கு புரிய வைத்தது. அவள் திருமணமாகி கணவன் வீட்டிற்கு சென்றுவிடுவாள் என்ற உண்மை புரிய மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் நடக்க வேண்டியது நடந்தது தானே ஆகவேண்டும் என்று புரிந்தது அவனுக்கு.

 

 

ராமும் பலவாறாக பேசி நந்துவை பேச வைக்க முயற்சி செய்ய ஏனோ பேசாமடந்தையாக நின்றாள் நந்து. வந்தவர்கள் அன்றே உப்புதாம்பூலம் மாற்றி கை நனைத்து விடலாம் என்று பேசிக்கொள்ள சமையலை கவனிக்க மற்றவர்கள் உள்ளே சென்றனர்.

 

 

அபி நந்துவை அழைத்து சென்று அவள் அறையில் விட்டு வந்தாள். ராம் நிர்மலை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான். “இப்போ தான் எனக்கு சந்தோஷமாயிருக்கு நிர்மல் என்றான் ராம். “நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும் ராம்

 

 

“நீங்களும் எனக்காக மாமாகிட்ட பேசினீங்களாம். மாமா சொன்னார், ரொம்ப தேங்க்ஸ் ராம் என்றான் நிர்மல். “நந்துவுக்கு நீங்க சரியா இருப்பீங்கன்னு தோணிச்சு அதை தான் நான் அண்ணாகிட்டயும் சொன்னேன் நிர்மல். அதுவுமில்லாம நந்துவோட வால்தனத்தை நீங்க பொறுத்து போற மாதிரி வேற யாரும் பொருத்துபோவாங்களா தெரியலை. அதுவும் ஒரு காரணம் தான் என்றான் அவன்.

 

 

“என்ன கலாட்டா பண்றீங்களா ராம் என்றான் அவன். “இல்லவே இல்லை நிஜமா தான் சொல்றேன், சின்ன வயசில இருந்தே அவன் என்கிட்ட ரொம்ப ராசியா இருப்பா. அவகூட விளையாடுறதுல இருந்து அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கறது எல்லாத்துக்குமே அவகூட நான் இருந்திருக்கேன்

 

 

“யாராவது பசங்க கிண்டல் பண்ணா கூட வைபவ் அண்ணாகிட்டயோ, கல்யாண் அண்ணாகிட்டயோ சொல்லமாட்டா நேரா என்கிட்ட தான் வந்து சொல்லுவா. என்னை ரொம்பவே கிண்டலடிப்பா என்கூட ரொம்ப சகஜமா இருப்பா. எனக்கப்புறம் அவ அப்படி விளையாட்டா இருந்தது உங்ககிட்ட தான்

 

“அன்னைக்கு நீங்க வீட்டுக்கு வரும்போது உங்ககிட்ட ஜூஸ் பிடிங்கிட்டு ஓடினப்பவே எனக்கு தோணிச்சு. அதுக்கு முன்னாடி நீங்க அவளை பார்த்த தருணங்களையும் சகஜம் போலவே அவ என்கிட்ட சொல்லியிருக்கா. எனக்கு தெரிஞ்சு அவ வேற ஆண்கள் பத்தி பேசினது அது தான் முதல் முறை

 

 

“பார்க்க எல்லார்கிட்டயும் சகஜமா பழகுறவ மாதிரி தெரிஞ்சாலும் ரொம்பவும் விவரமானவ. லேசுல யாரையும் நம்பமாட்டா, பசங்க கூட பேச்சே வச்சுக்க மாட்டா, உங்ககிட்ட தான் எப்படி விளையாட்டா பேசி கிண்டலடிச்சுன்னு இருந்திருக்கா எனக்கே ஆச்சரியம் தான் என்றான் ராம்.

 

 

“அப்போ நந்துவும் என்னை விரும்புறான்னு சொல்லறீங்களா ராம் என்றான் நிர்மல் ஆர்வமாக. “அவளை நீங்க கேட்டா நான் யாரையும் விரும்பலைன்னு தான் சொல்லுவா, அவங்க அண்ணா பார்க்குற பையனை தான் கட்டுவேன்னு சொல்லிட்டு இருக்கவ காதல் எல்லாம் பண்ணுவாளா

 

 

“அவளுக்கு உங்களை பிடிச்சிருக்கு அது உண்மை, அது காதலான்னு கேட்டா அவளுக்கு சொல்ல தெரியாது. நான் என்ன சொல்லறேன்னு புரியுதா உங்களுக்கு என்றான் ராம். “ஹ்ம்ம் புரியுது ராம் என்றான் நிர்மல். “உங்களை அவளுக்கு பிடிக்கும், கண்டிப்பா உங்க வாழ்க்கை சுவாரசியமானதா இருக்கும் என்றான் ராம்.

 

 

நந்துவோ அவள் அறையில் தலையில் கையை வைத்து உட்கார்ந்திருந்தாள், சரயு உள்ளே நுழைந்தாள். “வாங்க அக்கா உங்களை தான் தேடிட்டு இருந்தேன். என்ன நடக்குது இங்க திடிர்னு வந்தீங்க கேட்டா பொண்ணு பார்க்க வந்திருக்கேன்னு சொல்றீங்க. அதுவும் அந்த எலி… வாட்ச்… உங்க மச்சினனுக்கு சொல்றீங்க

 

 

“என்ன என்ன நடக்குது திடிர்னு ஏன் இப்படி எல்லாம் என்றாள் அவள். “ஏன்னு எங்களை கேட்டா உன் ஆளையே கேளும்மா. தூக்கத்துல கூட நதி, ஆறு, கடல் ஏரின்னு புலம்பிட்டு இருக்கறது அவர் தான்

 

 

“நீ என்ன சொக்கு பொடி போட்டியோ தெரியலையே என்றாள் சரயு கழுத்தை ஒடித்து. “சொக்கு பொடி இல்லைக்கா காபி பொடி தான் என்று சொல்லி நாக்கை கடித்துக் கொண்டாள்.

 

 

வெளியில் நிர்மல் வைபவிடம் வந்து நின்றான், “மாமா உங்க தங்கைகிட்ட கொஞ்சம் பேசணும் என்றான் அவன். “ஹ்ம்ம் போய் பேசுங்க மாப்பிள்ளை என்றவன் அபியை அழைத்தான். “அபி மாப்பிள்ளை நந்துகிட்ட பேசணுமாம், கூட்டிட்டு போ என்றான் அவன்.

அப்போது தான் சரயுவும் நந்துவும் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது நிர்மலுக்கு. “நிர்மல் நந்துகிட்ட பேசணுமாம் அதான் கூட்டிட்டு வந்தேன். நந்து பேசுங்க என்றவள், “வாங்க சரயு நாம போகலாம் என்றுவிட்டு வெளியில் சென்று விட்டாள்.

 

 

நந்து “அண்ணி என்று எதையோ சொல்ல வருவதை கண்டும் காணாதவளாக சென்றுவிட்டாள் அவள். “நதி ஒரு நிமிஷம் என்றான் நிர்மல். “என்ன என்றாள் சிடுசிடுப்பாக. “உனக்கு என்ன கோபம் என்றான் அவன்.

 

 

“சொன்னா தீர்த்து வைக்க போறீங்களா என்றாள் கடுப்புடனே. “சொல்லு தீர்த்து வைக்கிறேன் என்றான் அவன். “இப்போ என்ன அவசரம்ன்னு பொண்ணு பார்க்க வந்தீங்க என்றாள் அவள். “உனக்கு பொண்ணு பார்க்க வந்தது பிடிக்கலையா என்றவனின் கேள்விக்கு இல்லை என்பதாய் தலையாட்டினாள் அவள்.

 

 

“பொண்ணு பார்க்க வந்தது பிடிக்கலையா, நான் பொண்ணு பார்க்க வந்தது பிடிக்கலையா என்றான் அவன். ஒன்றும் புரியாமல் அவனை ஏறிட்டாள் அவள். “அப்படின்னா என்றாள். “உனக்கு இப்போ கல்யாணம் வேணாம்ன்னா தள்ளி போட்டுக்கலாம்

 

 

“நான் வேணாம்ன்னா சொல்லு நான் வெளிய போய் மாமாகிட்ட பேசறேன் என்றான் இறுக்கமாக. ‘அவரசப்பட்டு எதுவும் பேசிட்டோமே இவன் ஏன் இப்படி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்சியை வைச்சுட்டு இருக்கான், திடுதிப்புன்னு வந்து இறங்கி பீதியை கிளப்புறாங்களேன்னு ஒரு கோபத்துல பேசினா இவன் ஏன் இப்படி கேட்குறான் என்று யோசித்துக் கொண்டிருந்தாள் அவள்.

 

 

“ஆமா இன்னொரு விஷயம் நீங்க என்னை விரும்புறீங்களா என்றாள் அவள். “ஆமா உன்னை எனக்கு பிடிச்சிருக்கு என்றான் அவன். “அதை ஏன் முதல்லயே என்கிட்ட சொல்லலை என்றாள் அவள். “சொன்னா ரொம்ப சந்தோசம்ன்னு சொல்லி நீயும் பதிலுக்கு என்னை விரும்பியிருப்பியா என்றான் அவன்.

 

 

“அதெப்படி விரும்புவேன், நான் அண்ணா பார்க்கற பையனை கட்டிக்கணும் நினைச்சுட்டு இருக்கேன். அதெப்படி உங்களை விரும்புவேன் என்றாள் அவள். “உங்கண்ணா உனக்கு என்னை மாப்பிள்ளையா பார்த்திருக்கார், உன் முடிவு என்ன. சொல்லு உனக்கு நான் பிடிக்கலையா கல்யாணம் பிடிக்கலையா என்று ஆரம்பித்த இடத்திற்கு வந்தான் அவன்.

 

 

“பிடிச்சிருக்கு என்றாள். “என்னது கேட்கலை சத்தமா சொல்லு என்றான் அவன். “சும்மா கேட்காத மாதிரி நடிக்க வேண்டாம் என்னால திரும்ப திரும்ப எல்லாம் சொல்ல முடியாது என்றாள் அவள். அவளிடம் நெருங்கி வந்தவன் “நதி உண்மையை சொல்லு உனக்கு என்னை பிடிச்சிருக்கா, உங்கண்ணா சொன்னதுக்காக என்னை நீ ஏத்துக்கணும் அவசியம் இல்லை. உனக்கு பிடிச்சிருக்கான்னு சொல்லு என்றான் அவன்.

 

 

நிமிர்ந்து அவன் கண்களை பார்த்தாள் அவன் கண்களில் காதல் தெரிந்தது, அவள் என்ன சொல்ல போகிறாளோ என்ற ஆர்வம் தெரிந்தது. “என்ன சொல்றது என்று அவளுக்கே கேட்காத குரலில் கூறினாள். “எனக்கு உங்களை பிடிக்கும், ஆனா காதல் எல்லாம் இல்லை என்றாள்.

 

 

“அது எனக்கு தெரியும், உனக்குள்ள இருக்கற காதலை எப்படி வெளிய எடுக்கறதுன்னு எனக்கு தெரியும். அதை நான் பார்த்துக்கறேன், இந்தளவுக்கு நீ சம்மதிச்சதே பெரிய விஷயம். என்னடா எப்போவும் போல கலாட்டா பண்ணிடுவியோன்னு பயந்துட்டே இருந்தேன் என்றான் நிர்மல் நிம்மதியாக.

 

 

“ஆமா நான் உள்ள வரும் போது ஏதோ சொக்குபொடின்னு பேச்சு போயிட்டு இருந்துதே, நீ கூட ஏதோ காபி பொடின்னு சொல்லிட்டு இருந்தே என்றான் அவன். “நாங்க ஆயிரம் பேசுவோம், நீங்க ஏன் அதெல்லாம் ஒட்டு கேட்குறீங்க என்றாள் அவள்.

 

 

“அதென்ன நீங்க என்னை நதின்னு கூப்பிடுறீங்க என்றாள் அவள். “செல்லமா தான், ஒரு வேளை நந்தின்னு கூப்பிட்டு இருக்ககணுமோ என்று அவன் சொல்ல அதுவரை அவள் அமைதியாக இருந்ததே பெரிய விஷயம் போல் தோன்ற பொறுக்க முடியாதவள் எக்கி அவன் தலையில் கொட்டினாள்.

 

 

அவ்வளவு நெருக்கத்தில் அவளை பார்த்துவிட்டு அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை, சட்டென்று அவளை இழுத்து இறுக அணைத்தான். அவன் வெகு நாளைய தவம் ஈடேறிய சந்தோசம் மட்டுமே அதில் தெரிந்தது. மேலும் மேலும் அவளை இறுக்க அவளுக்கு வலித்தது.

 

 

“விடுங்க வலிக்குது, ப்ளீஸ் என்ற அவள் குரலில் அவன் அவளை விட்டு விலகினான். “மன்னிச்சுடு நதி எங்க நீ கிடைக்காம போய்டுவியோன்னு இத்தனை நாளா நிம்மதியே இல்லாம இருந்தேன். இன்னைக்கு தான் எனக்கு அந்த நிம்மதியே வந்தது

 

 

“அதான் உணர்ச்சி வசப்பட்டுட்டேன், தப்பா எடுத்துக்காதே என்றான் அவன். “தப்பா எடுத்துகிட்டாலும், இப்படியா வலிக்கிற மாதிரி பிடிக்கிறது, அதான் கத்தினேன் என்றாள் அவள் அலட்சியம் போல்.

 

 

“அப்போ நான் கட்டிப்பிடிச்சதுல தப்பில்லைன்னு சொல்றியா என்று சொல்லி அவளை நெருங்கினான். “அய்யே நீங்க இப்படிலாம் பேசுவீங்களா, பேட் மேன் என்றாள் அவள். “வாட்ச்மேன் இப்போ பேட் மேன் ஆகிட்டேனா நதி என்றான் நிர்மல்.

 

 

“நான் எவ்வளவு பேட் மேன்னு இப்போ பார்க்குறியா என்றவன் அவளை அருகே இழுத்து அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான். நந்து அவன் இப்படி திடீர் என்று செய்ததில் கலவரமாகி போனாள்.

 

 

“போனா போகுதுன்னு சின்ன பொண்ணாச்சேன்னு இதோட விடுறேன், இல்லைன்னா இங்க கொடுத்ததை இங்க கொடுத்திருப்பேன் என்று அவன் அவள் உதடுகளை தொட்டுக் காட்டி சொல்ல முகம் சிவந்தது நந்துவிற்கு. “என்னோட நதிக்கு வெட்கம் எல்லாம் வருமா, இப்படி நீ பேச்சிழந்து என் முன்னாடி நிற்கறது இது தான் முதல் முறை

 

 

“எப்போதுமே உன் முன்னாடி நான் தான் எதுவும் பேசமுடியாமல் நிற்பேன், இது உன் முறை போலும். ஆனா நீ இப்படி இருக்கறது எனக்கு பிடிக்கலை, எப்பவும் போல என்னை கலாட்டா பண்ணுற நதி தான் வேணும் எனக்கு என்று கிண்டல் செய்தான் நிர்மல்.

 

 

மூன்று மாதம் கழித்து திருமணம் என்று பெரியவர்கள் பேசி முடிவு செய்திருக்க திருமண நாளும் விடிந்தது. வைபவ் அங்குமிங்கும் ஓடியாடி வேலை பார்த்துக் கொண்டிருக்க அபியும் அவனுக்கு சரியாக அலைந்து கொண்டிருந்தாள்.

 

 

கெட்டி மேளசத்தம் முழங்க நந்துவின் கழுத்தில் மங்கலநாண் பூட்டினான் நிர்மல். வைபவும் அபியும் நந்துவிற்கு தாய் தகப்பன் ஸ்தானத்தில் இருந்து பெண்ணை தாரை வார்த்து கொடுக்க அங்கு அண்ணனாக கல்யாண் சீர் செய்து கொண்டிருந்தான்.

 

 

நந்துவின் கழுத்தில் நிர்மல் தாலி கட்டும் வேளை ராமுக்கு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது, இனி நந்து வேறு வீட்டு பெண் ஆகிவிட்டாள், முன்பு போல என்னிடம் சண்டையிட மாட்டாள் என்று ஏதேதோ யோசித்து கண்ணீர் விட “என்ன ராம்என்ன இதெல்லாம், நந்து எங்க போறா இங்க தானே இருக்க போறா நினைச்சா போய் பார்க்க போறோம்

“நீ தானே அவங்க கல்யாணத்துக்கு அவ்வளவு சப்போர்ட் பண்ணே, நந்துவுக்கும் நிர்மலை பிடிக்கும் கல்யாணம் பண்ணுங்கன்னு சொல்லிட்டு இப்படி கண்ணீர் விட்டுட்டு இருக்கே என்று ராமுக்கு ஆறுதல் சொன்னாலும் வைபவின் நிலையும் அவனையொத்தே இருந்தது.

 

 

அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தவன் கடமை முடிந்த திருப்தியில் அங்கு நடப்பதை ரசித்துக் கொண்டிருந்தான். அபி அங்குமிங்கும் எதையோ எடுப்பதும் கொடுப்பதும் ரசித்து பார்த்தவன் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தவளின் கையை பிடித்து அருகில் இருந்த அறைக்கு அழைத்து சென்றான்.

 

 

“என்னங்க உங்களை நான் கூட்டிட்டு போக வந்தா என்னை எதுக்கு இங்க இழுத்துட்டு வந்தீங்க என்றாள் அவள். “அண்ணனா என்னோட கடமையை நான் சரி வர நடத்திட்டேன் நினைக்கிறேன் என்றவனை இடைமறித்தாள் அபி. “எங்க முடிஞ்சது இன்னும் நெறைய வேலை இருக்கு இனிமே தான்

 

 

“மறுவீடு, பொங்கல் சீர், தீபாவளி, ஐந்தாம் மாதம், வளைக்காப்பு, சீமந்தம், பேறுகாலம், குழந்தைக்கு மொட்டை… என்று அவள் அடுக்கிக் கொண்டே போக, “போதும் போதும் கொஞ்சம் மூச்சு வாங்கு, இதெல்லாம் எனக்கும் தெரியும். கல்யாணம் அப்படிங்கறது தான் பெரிய கடமையே அதெல்லாம் முடிஞ்சுது தானே என்றான் அவன்.

 

 

“இப்போ என்ன சொல்ல வர்றீங்க என்றாள் அபி. “உனக்கு புருஷனா என் கடமையை இன்னும் தொடங்கவே இல்லையே என்றான். அபிக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரிய வெட்கியவள் “அதை பத்தி பேச இது தான் நேரமா என்றாள்.

 

 

“ஹ்ம்ம் ஆமாம் இப்போ தான் பேசணும், நம்ம வாழ்க்கையை இன்னைக்கு நாம தொடங்கணும் என்றான் அவன்.

 

 

“அதுக்கு

 

 

“இனி சீண்டல் எல்லாம் இல்லை

 

 

“அதுக்கு

 

 

“அதுக்கு இப்பவே ஒரு அச்சாரம் போடணும்

 

 

“அதுக்கு என்றாள் இறங்கிய குரலில்

 

 

“அதுக்கு என்றவன் அவளருகில் நெருங்கி நிற்க அவள் இதழ்களில் அச்சாரம் இட தொடங்கினான். வெளியில் யாரோ கதவை தட்ட சட்டென்று விலகினர் இருவரும்.

 

____________________

 

 

“என்னங்க கிளம்பிட்டீங்களா, போகலாம் என்றாள் அபி. “சரி நீங்க போய்சார்கிட்ட நில்லுங்க நான் வந்திடுறேன் என்றான் வைபவ். அபி வைபவ் தம்பதியின் செல்ல மகள் அவந்திகாவை அபியின் தங்கை விமலா தயார்படுத்தி இருந்தாள்.

 

 

“அம்மா பாப்பாக்கு இந்த டெஸ் நல்லாக்கா என்றது குழந்தை. “சூப்பரா இருக்குடா தங்கம் என்றாள் அபி. “ஹேய் விமலா என்ன நீ இன்னும் கிளம்பாம இருக்க, போ, போய் கிளம்பு நீ மட்டும் இங்க தனியா என்ன பண்ண போற என்றாள் அபி.

 

 

“இல்லைக்கா நான் வரலை, நான் வீட்டில இருக்கேன். எனக்கு யாரையும் தெரியாது, நான் வரலைக்கா என்று மறுத்தாள் விமலா. “எல்லாரையும் தெரிஞ்சுக்க தான் உங்கக்கா கூப்பிடுறா விமலா வா, இன்னும் எத்தனை நாளைக்கு தான் நீ வீட்டிலேயே அடைஞ்சு இருக்க போற, உனக்கு ஒரு மாறுதலா இருக்கட்டும்ன்னு தான் உன்னை இங்கே கூட்டிட்டு வந்தோம். நீ இங்கயும் வந்து வீட்டிலேயே அடையணும் நினைக்கிறியே

 

 

“போம்மா போய் கிளம்பு, என்னை மாதிரி தான் உனக்கு கல்யாணும். கார்த்தியை நீ உன் அக்கா மாதிரி நினைச்சுக்கோ, அங்க இருக்கற எல்லாரும் உனக்கும் சொந்தங்கள் தான் என்று வைபவ் வேறு சொல்லியதில் வேறு வழியில்லாமல் அவளும் கிளம்பினாள்.

 

 

எங்க போறோம்னே சொல்லாம எல்லாரும் எங்க கிளம்புறாங்கன்னு தானே யோசனை, நம்ம கல்யாண் கார்திக்காவின் இரட்டை பிள்ளைகள் சர்வேஸ் – சாதனாவுக்கு இன்று மூன்றாம் வருட பிறந்தநாள் அதற்கு தான் கிளம்பிக் கொண்டிருக்கின்றனர்.

 

 

ராஜசேகரின் வீட்டில்

 

“என்னங்க எப்போ கிளம்புறதா உத்தேசம் என்றாள் சரயு. “சக்தி உன் பிள்ளையை மட்டும் கிளப்பிவிட்டியே, என்னை யார் தயார்படுத்தறது என்று அவளை பார்த்து கண் சிமிட்டினான். “இவர் சின்ன பாப்பா இவரை கிளப்பணுமாம், ஆளை பாரு என்று ஒழுங்கு செய்தாள் அவள்.

 

 

“ஆமா நானும் உனக்கு ஒரு குழந்தை தான், அதெல்லாம் எனக்கு தெரியாது நீ தான் எனக்கு டிரஸ் பண்ணிவிடணும் என்று சொல்லி அடம் பிடித்துக் கொண்டிருந்தான் முத்து. “ஆமா இவரு சின்ன குழந்தை இவரை தூக்கி இடுப்புல வைச்சுட்டு போகணுமா என்றாள் அவள் கிண்டலாக.

 

 

“ஹைய் இது நல்ல ஐடியாவா இருக்கே என்று அவன் அவளை நெருங்க “அப்பா சாமி ஆளை விடுங்க, வேணா ஒண்ணு செய்யலாம் நீங்க பேண்ட் போட்டுகுவீங்களாம், நான் சட்டை மட்டும் போடுவேணாம் என்று ஒரு வழியாக அவனிடம் கெஞ்சி அவனை தயார்படுத்தினாள்.

 

 

அடுத்த அறையில் நந்துவும் நிர்மலும் கிளம்பிக் கொண்டிருந்தனர். நந்து கிளம்புவதை பார்த்த நிர்மலுக்கு அன்று காலையில் தொலைக்காட்சியில் அவன் பார்த்த அந்த பாடல் நினைவுக்கு வர அவளை பார்த்து பாடினான். “நதி எங்கே போகிறது என்று அதே வரிகளை அவன் பாட, இருமுறை அமைதியாக இருந்தவள் அவன் பாட்டுக்கு பதில் கொடுத்தாள்.

 

 

“கல்யாணம் வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கேன் என்றாள் அவள். “கல்யாண வீட்டுக்கு இன்னைக்கு எந்த முகூர்த்தமும் இல்லையே என்றான் அவன் பதிலுக்கு மீண்டும் பழையபடி பாடலை ஆரம்பிக்க இந்த முறை அவளும் பதிலுக்கு பாடினாள் “நிர்மலை தேடி என்று “நிஜமாவா என்று அவளருகில் வந்தான்.

 

 

“ஹ்ம்ம் ஆமாம்ங்க கிட்ட வந்தா தானே உங்களை அடிக்க முடியும் என்று சொல்லி அவன் முதுகில் செல்லமாக இரண்டு அடி போட்டாள். “நதி என்ன செஞ்சு நீ என்னை மயக்கினே என்று அவன் விடாமல் அவளை தொந்திரவு செய்ய, “இப்படியே பேசிட்டு இருந்தீங்க அப்புறம் காபி போட்டு கொண்டு வந்திருவேன் என்றதும் “அய்யோ அம்மா தாயே எனக்கு காபியே வேணாம் நீ தான் வேணும் என்று அவன் அவளை துரத்த அவனுக்கு சிக்காமல் வெளியில் ஓடி வந்தவள் ராஜசேகரின் மீது இடித்துக்  கொண்டாள்.

 

 

“அய்யோ சாரி மாமா என்றாள். “பரவாயில்லைம்மா, ஒரு காபி சாப்பிடணும் போல இருக்கு போட்டு கொடுக்கறியாம்மா என்றார் அவர். “அப்பா வேணாம் அவளை காபி போட சொல்லாதீங்க என்றான் நிர்மல். ராஜசேகரின் பின்னால் நின்றிருந்த நந்து நிர்மலை பார்த்து ஒழுங்கு காட்ட பதிலுக்கு அவனும் ஒழுங்கு காட்டினான்.

 

 

“நிர்மல் அம்மா எங்கே?? என்ற தந்தையிடம் “அவங்க பேரனோட விளையாடவே நேரம் சரியா இருக்கு என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இந்திரா நிர்மல் – நந்துவின் சீமந்த புத்திரன் ஒன்பது மாத குழந்தை தர்ஷனையும், முத்து – சரயுவின் செல்ல மகன் இரண்டு வயது நிரம்பிய ராகேஷை கையில் பிடித்துக் கொண்டும் இறங்கினார்.

 

 

ஒரு வழியாக எல்லோரும் கிளம்பி கல்யாண் வீட்டை அடைந்தனர். நந்து அங்கு சென்றதும் எல்லோரையும் கண்டு ஆர்பரித்தாள். அடக்கி  வைத்திருந்த வால்தனத்தனம் எல்லாம் வெளியில் வந்தது.

 

 

“எவ்வளவு நேரம் நீங்க வர்றதுக்கு நந்து, உங்கண்ணன் தான் கிளம்ப தாமதம் பண்ணுவான் நீயும் கூட சேர்ந்துட்டியா, இவ்வளவு தாமதமா தான் வர்றதா. உன் பையன் எப்போ வருவான்னு கேட்டு ரெண்டு பேரும் என்னை துளைச்சி எடுத்துட்டாங்க

 

 

“ஏன் கல்யாண் சந்தடி சாக்குல என்னை இழுக்குற, நான் சீக்கிரம் வந்துட்டேனே என்றான் வைபவ். “நீங்க ஐந்து நிமிடம் முன்னால் வந்திருக்கீங்க, அது தான் சீக்கிரமா என்றாள் கார்த்திகா.

 

 

கேக் வெட்டி முடித்ததும் குழந்தைகள் எல்லோரும் ஒன்றாக விளையாட சென்றுவிட அவர்களை கவனிக்க மூத்தவர்கள் அவர்களுடனே சென்றுவிட்டனர்.

 

 

சொந்தங்களாகிவிட்ட நட்பு வட்டங்கள் தங்கள் மலரும் நினைவுகளை ஒன்றாக அமர்ந்து பகிர்ந்து கொண்டிருந்தனர். விமலா தனித்து அமர்ந்திருக்க  ராம் அங்கிருந்த கேக்கை அப்புறப்படுத்தியவாறே அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

சற்று முன் நடந்த நிகழ்வு அவன் நினைவுக்கு வந்தது தனித்து அமர்ந்திருக்கும் விமலாவை கண்டதும் ராம் அவளருகில் சென்றான். “ஹலோ என்றவனை நிமிர்ந்து பார்த்தாள். “நான் ராம் கல்யாண் அண்ணாவோட தம்பி என்றான் அவன். “ஓ என்று ஒற்றை சொல்லாக முடித்துக் கொண்டு அவள் வேறு பக்கம் பார்த்தாள்.

 

 

“அப்புறம் நீங்க??? உங்களை பத்தி சொல்லலாமே என்றான் ராம். “எதுக்கு என்றாள் அவள். “தெரிஞ்சுக்க தான் என்றான் அவன். “அவசியமில்லை என்றாள் கத்தரித்தார் போல். அவன் விடாமல் வேறு ஏதோ கேட்க அவளோ “என்ன வேணும் உங்களுக்கு என்னை பத்தி உங்களுக்கு தெரியாது என்றாள்.

 

“அதான் தெரிஞ்சுக்க்கலாம்ன்னு பேச வந்தேன் என்றான் அவன். “ஒரு கல்யாணம் ஆனா பொண்ணுகிட்ட வந்து என்ன பேச்சு உங்களுக்கு என்றாள் அவள். “அது தான் எனக்கு தெரியுமே என்றான் அவன். “புருஷனை பிரிஞ்சு வந்துட்டா என்கிட்ட வந்து வாலாட்டுவீங்களா நீங்க என்றாள் விமலா.

 

 

“தப்பா சொல்றீங்க, நீங்க பிரிஞ்சு வரலை. புருஷனே வேணாம்ன்னு வந்துட்டீங்க சரியா??? என்றவனை திகைப்புடன் பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் அபியின் அருகில் சென்று நின்று கொண்டாள்.

 

 

“ஹாய்டா ராம் என்று “என்ன நந்தி உனக்கு என்னை கூட அடையாளம் தெரியுது, என்ன விஷயம் என்றான் அவன். “என்னடா இப்படி பேசுற என்று அவள் முகம் வாட “அதுக்குள்ள எதுக்கு மூஞ்சியை தூக்கி வைக்கிற, எப்போமே நிர்மல் வாலை பிடிச்சுட்டே போவியே அதான் கேட்டேன் என்றான் அவன்.

 

 

“என்ன கொழுப்பா என் புருஷனுக்கு வால் இருக்கு அவர் குரங்குன்னு சொல்றியா என்றாள் அவள். “நதி அவர் அப்படி எல்லாம் சொல்லலை நீ தான் உன் மனசுல இருக்கறதை வெளிய சொல்ற, வீட்டுக்கு வா உன்னை கவனிச்சுக்கறேன் என்றான் அவன்.

 

 

“அப்புறம் ராம் எப்போ கல்யாணம் என்றான் நிர்மல். “வீட்டில பொண்ணு பார்த்துட்டே இருக்காங்க நிர்மல் எதுவும் சரியா அமையலை, நான் என்ன செய்ய முடியும் என்றான் ராம். “பேசாம எதாவது ஒரு பொண்ணை லவ் பண்ணுங்க ராம், சும்மா போர் அடிச்சுட்டு வீட்டில பார்க்கற பொண்ணை தான் கட்டிக்குவேன்னு

 

 

“என்னது இவனா, இவனை போய் லவ் பண்ண சொல்றீங்க இவனுக்கு அதெல்லாம் வராதே, இவன் ஸ்ட்ரிக்ட் ஆபீசர் ஆச்சே, எப்போ பார்த்தாலும் விரைப்பாவே சுத்திக்கிட்டு இருப்பான். இவனை பார்த்து அப்படி சொல்றீங்க என்று கிண்டல் செய்தாள் நந்து.

 

 

“நதி நீ போய் தர்ஷனை பாரு அம்மா உன்னை தேடிட்டு இருந்தாங்க என்று சொல்லி அவளை அங்கிருந்து அப்புறப்படுத்தினான் நிர்மல். “என்ன நிர்மல் என்ன விஷயம் என்றான் ராம். “நீங்க தான் சொல்லணும் ராம் என்றான் அவன் பீடிகையாக.

 

 

“எதை பத்தி நிர்மல் என்றான் ராம். “விமலா பத்தி தான், நீங்க பேசிட்டு இருந்தது கேட்டேன் என்றான் அவன். “அவங்களை பத்தி உங்களுக்கு முழுசா தெரியுமா என்றான் மேலும். “ஹ்ம்ம் தெரியும் நிர்மல் வைபவ் அண்ணாகிட்ட பேசிட்டேன். விமலாவோட மனசு மாறுற வரைக்கும் காத்திட்டு இருக்க சொன்னாங்க என்றான் அவன்.

 

 

“என்னப்பா நடக்குது இங்க எனக்கு தெரியாம, அத்தை, கல்யாண் மாமா எல்லாரும் சம்மதம் சொல்லிட்டாங்களா என்றான் நிர்மல் ஆச்சரியமாக. “எங்க வீட்டில எனக்கு ரொம்ப நாளா பொண்ணு பார்த்திட்டு இருக்காங்க எதுவும் சரியா அமையலை

 

 

“வைபவ் அண்ணாவும் கல்யாண் அண்ணாவும் எவ்வளவோ நல்லது செஞ்சிருக்காங்க, அவங்களை மாதிரி நானும் எதுவாவது செய்யணும் நினைச்சேன், அப்போ தான் விமலாவை உங்க கல்யாணத்துல தான் பார்த்தேன்

 

 

“அப்போ தான் அவங்க கதை எல்லாம் தெரிஞ்சது. படிச்சுட்டு இருக்கற பொண்ணுக்கு அவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ணி அவங்க வாழ்க்கை இப்படி அலங்கோலமா ஆகி அவங்களும் இப்போ இங்க வந்து நிற்கறாங்க

 

 

“அன்னைக்கே அம்மாகிட்ட பேசினேன், அவங்க முதல்ல வேணாம்ன்னு தான் சொன்னாங்க. அப்புறம் உன்னோட இஷ்டம், இது உன் வாழ்க்கை, உங்கண்ணன் அவனோட விருப்பத்துக்கு திருமணம் செஞ்சுகிட்டான். நான் அதை மறுத்ததுனால தான் அவன் மனைவியை பிரிஞ்சு கஷ்டப்பட்டானோன்னு ரொம்ப நாள் வருத்தப்பட்டுட்டே இருந்தேன்.

 

 

“அப்புறம் எப்படியோ அவங்க ஒண்ணு சேர்ந்து இப்போ நல்லா இருக்காங்க. அதுனால அது போல உன் வாழ்க்கையில நடக்க வேண்டாம். உனக்கு சரின்னு பட்டா மட்டும் செய்ன்னு சொல்லிட்டாங்க. அண்ணாவுக்கு சந்தோசம் தான் ஆனாலும் யோசிச்சு முடிவு பண்ணிக்கோன்னு சொல்லிட்டாங்க, அண்ணி முதல்ல யோசிச்சாங்க அப்புறம் அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க

 

 

“அபி அண்ணி வேணவே வேணாம்ன்னு சொன்னாங்க, நான் தான் பேசி அவங்களை சமாதானம் செஞ்சேன். இப்ப எல்லாரும் விமலாவோட மனசு மாற காத்திட்டு இருக்கோம் என்றான் ராம். “கிரேட் ராம் என்றான்.

 

 

“கிரேட் சொல்ற அளவுக்கு எதுவும் இல்லை நிர்மல், பிடிச்சிருக்கு. அதான் மனசுல பட்டதை கேட்டேன், அவங்க வாழ்க்கையில நடந்த மற்ற விஷயங்கள் பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை. நடந்ததுல அவங்க தப்பு எதுவுமில்லைஎன்றான் ராம்.நிர்மல் அவனை பெருமிதமாக பார்த்தான்.

 

____________________

“பாப்பு சாப்பிடு தங்கம் எதுக்குடா இப்படி என்னை ஓடவிடுற, என்னையும் பாட்டியும் பார்த்தா பாவமா இல்லையா என்றாள் அபி களைத்துப் போய். “அம்முலு அம்மா பாவமில்லை சாப்பிடு ராசாத்தி எங்கேடா ஓடுற என்று அவரும் தொப்பென்று சோபாவில் அமர்ந்தார்.

 

 

மாமியாரையும் மருமகளையும் இப்படி ஓட வைத்தது வைபவ் அபியின் செல்ல மகள் அவந்திகா. அவளோ “போ பாத்தி, போம்மா என்று சொல்லி போக்கு காட்டி வாசலுக்கு ஓடினாள்.

 

 

வாசலில் அப்போது தான் வைபவ் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான். “குட்டிம்மா எங்க ஓடி வர்றீங்க அப்பாவை தேடி வர்றீங்களா என்றான் வைபவ். “ஆமாப்பா அம்மாவும் பாத்தியும் பூவா ஊட்ட வதாங்க, எனக்கு ஆணாம் என்றாள் அவள்.

 

 

“வேணாம்ன்னா விடுங்க குட்டிம்மா என்றவன் குழந்தையை தூக்கி தோளில் வைத்துக் கொண்டான். “அப்படியே அம்மா மாதிரியே ஆணாம் சொல்றீங்க, வேணாம்ன்னு சொல்லுங்க பார்க்கலாம் என்றான் அவன். “ஆணாம் என்று குழந்தை மீண்டும் அதையே சொன்னது.

 

 

“என்னங்க நீங்க அவளுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுக்குறீங்க, அவ சரியாவே சாப்பிட மாட்டேங்குறா என்று சிணுங்கினாள் அபி. “விடு அபி அவ சின்ன குழந்தை தானே எவ்வளவு சாப்பிட முடியுமோ அவ்வளவு சாப்பிட்டா தானேஎன்றவன் அவர்கள் அறைக்குள் நுழைந்தான். கையை கழுவி விட்டு பின்னோடு அபியும் நுழைந்தாள். “கொடுங்க அவளை வாயை கழுவி விட்டு கூட்டிட்டு வரேன் என்று கையை நீட்டினாள்.

 

 

“குட்டிம்மா நீங்க போய் பாட்டிகிட்ட வாயை துடைச்சுக்கோங்க என்று சொல்லி குழந்தையை அனுப்பி வைத்துவிட்டு அபியிடம் வந்தான். “இப்போ எதுக்கு பக்கத்துல வர்றீங்க என்றாள் அபி ஓரடி விலகியவாறே, “அவந்தி குட்டியோட விளையாட குட்டி வைபவ் தயார் பண்ண வேண்டாமா என்றான் அவன்.

 

 

“என்ன விளையாடுறீங்களா நம்ம மூன்றாண்டு திட்டம் போட்டிருக்கோம் மறந்திடாதீங்க என்றாள். “நீ தான் அபி மறந்துட்ட, மூன்றாண்டு திட்டம் முடிந்து ஒரு வாரம் ஆகுது என்றான் அவன். “அதெப்படி நம்ம அவந்தி குட்டிக்கு ரெண்டு வயசு தானே ஆகுது என்றாள் அபி.

 

 

“நாம என்ன பேசினோம், நம்ம கல்யாணம் முடிஞ்ச முதல் வருஷம் ஒரு குழந்தை அதுக்கு அப்புறம் அடுத்த ரெண்டு வருஷத்தில ரெண்டாவது குழந்தைன்னு முடிவு பண்ணோம். இப்போ அது சரியா தானே இருக்கு, அவந்தி குட்டி நம்ம கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கழிச்சு பிறந்தா, அப்போ அடுத்தது இரண்டு வருஷம் கழிச்சுன்னா இப்போ தானே. போன வாரம் தானே நம்ம கல்யாண நாள் முடிஞ்சுது என்று சொல்லி உல்லாசமாக சிரித்தான் அவன்.

 

 

“என்னங்க இன்னும் ஒரு வருஷம் போகட்டுமே என்றவளை இழுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டவன் “முடியாது நீ சொல்றதை கேட்க முடியாது என்றான் அவன் அடமாக. “நீங்க இப்போலாம் ரொம்ப அடம் பிடிக்கிறீங்க என்றாள் அபி.

 

 

“உன்னோட அடத்தை ஜெயிச்சு இருக்கேன்னு சொல்லு அபி, உன்னையும் ஜெயிச்சு இருக்கேன். இப்போ தான் உன்னை முதன் முதலா ரோட்டில பார்த்த மாதிரி இருக்கு. பெரிய உலக அழகியான்னு கேட்டு மாதிரி இருக்கு. பதிலுக்கு நான் ஒண்ணும் உங்களை மயக்க வரலைன்னு நீ சொன்ன

 

 

“உண்மை தான் நீ என்னை மயக்க வரலை, நான் தான் உன்கிட்ட மயங்கிட்டேன். என்னையும் ஜெயிச்சு உன்னையும் ஜெயிச்சிருக்கேன் என்றான் அவன். “என்ன இன்னைக்கு மலரும் நினைவுகளா என்றாள் அபி. “நினைவுகள் மலர்ந்தா தான் நேசம் பெருகும், இப்போ எனக்கு நேசம் இன்னும் அதிகமாகுது என்றான் அவன் அதீத காதலுடன்.

 

 

பேசாமல் பேசிய அவள் விழிகளில் விழுந்தவன் அவள் இதய கூட்டில் நுழைந்து உயிராகி போனவன், அவன் மகவை தாங்கியவளின் நெஞ்சில் நீக்கமற நிறைந்து இருவரும் ஒருவராகி போயினர். அவர்கள் இன்று போல் என்றும் மகிழ்வுடனும் நிறைவுடனும் வாழ்வார்கள் என்று வாழ்த்தி நாமும் விடைபெறுவோம்…

 

 

 

Advertisement