Advertisement

அத்தியாயம் –14

 

 

ஒரு வாரத்தில் என்னென்ன மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டிருந்த சக்தி சரயு நடந்த நிகழ்வுகளை அசை போட்டாள். “அம்மாடி செல்வி என்னடா சொல்ற, அவங்களை வர சொல்லலாமாஎன்றார்சக்திசரயுவின் பெற்றோர் சரவணன் – வள்ளி, சரயுவை வீட்டில் செல்லமாக செல்வி என்றே அழைப்பர்.

 

 

“அப்பா நான் தான் இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருக்கேனே, அப்புறம் எதுக்குப்பா இப்படி கேட்குறீங்க???என்றாள்சக்தி. “இல்லைம்மாஇவ்வளோநாளும்நீகல்யாணம்வேணாம்னுசொன்னே, நாங்களும்கேட்டோம்

 

 

“இப்போ வந்திருக்கற இடம் ரொம்ப பெரிய இடம்மா, அதுனால தான் பெரியய்யா சொல்லியிருக்காங்க. மாப்பிள்ளையோட அப்பாவுக்கு சொந்த ஊர் தேனி தானாம். இப்போ அவங்க எல்லாரும் சென்னையில தான் இருக்காங்க

 

 

“அவங்களுக்கு ரெண்டு பையன் ஒரு பொண்ணாம், அந்த பொண்ணுக்கு கூட கல்யாணம் ஆகிடுச்சு. இங்க ஏதோ வேலையா வந்திருக்காங்க நம்ம அய்யா உன்னை பத்தி சொல்லியிருப்பாங்க போல, அதான் வந்து பார்த்திட்டு போகட்டுமான்னு கேட்குறாங்க.

 

 

“இனி நீ தான் சொல்லணும்டா, அவங்க வந்து பார்த்திட்டு போகட்டும். நம்ம முடிவை நாம அப்புறம் சொல்லிக்கலாம். கடைசி முடிவு உன்னோடது தான்என்றார்அவர்தந்தையாக.

 

 

வீட்டில் உள்ள மற்றவர்களும் அவளை பேசியே கரைக்க, ஏதோவொரு உந்துதல் அவளை சரியென்று தலையாட்ட வைத்தது. அன்று மாலையே அவர்கள் வீட்டிற்கு வருவதாக ஏற்பாடு செய்திருந்ததால் அவளை கிளப்பிக் கொண்டிருந்தனர் அவள் வீட்டினர்.

 

 

அறைக்குள் வந்த அவள் பெரியம்மா “அம்மாடி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க. மாப்பிள்ளையும் அவரோட அப்பாவும் வந்திருக்காங்கஎன்றுவிட்டுவெளியில்சென்றார்அவர்.

 

 

அவளுடன் இருந்த அவள் அன்னையும் வந்தவர்களை வரவேற்க என வெளியில் சென்றார். வந்தவர்களை வரவேற்று கூடத்தில் அமர வைத்தனர். சரயுவுக்கு படபடப்பாக இருந்தது. வியர்ப்பது போல் தோன்றியது, மேஜையில் இருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து வாயில் சரித்தாள்.

 

கொஞ்சம் இலகுவாக இருப்பது போல் தோன்ற கட்டிலில் அமர்ந்தாள், யாரோ வரும் அரவம் கேட்க எழுந்து நின்றாள். “வாம்மா செல்வி அவங்க வந்துட்டாங்க, உன்னை கூட்டிட்டு வர சொல்லுறாங்கஎன்றுசொல்லிஅவளைஅழைத்துச்சென்றார்.

 

 

கூடத்திற்கு அழைத்து சென்றவர் வந்தவர்களை நமஸ்கரிக்குமாறு கூற சங்கடமாக உணர்ந்தாள் அவள். ‘இதுக்கு தான் நான் இவ்வளோ நாளும் கல்யாணம் வேணாம் வேணாம்னு சொன்னேன் இப்படி எல்லாரும் என்னை படுத்துறாங்களேஎன்றுநினைத்தவள் அவர் சொன்னதை செய்தாள்.

 

 

அப்போதும் நிமிர்ந்து வந்திருந்தவர்களை பார்க்கவில்லை. ராஜசேகருக்கு பெண் வீட்டினரை பார்த்ததும் பிடித்துவிட்டது, அவர்கள் நல்ல வசதியானவர்கள் என்றதும் அதற்கு ஒரு காரணம்.

 

 

முத்துக்குமார் வசதியை பார்த்து அவன் தந்தையுடன் வந்திருந்தாலும் அவனுக்கு ஒரு பயம் இருந்தது. என்ன தான் சென்னையில் படித்த பெண் என்றாலும் கிராமத்து பெண் ஆயிற்றே எப்படியிருப்பாளோ என்று நினைத்துக் கொண்டே வந்தான்.

 

 

அவன் நினைப்பிற்கு நேரெதிராக இருந்தாள் அவள். அவள் வீட்டினரும் அதிகம் படிக்கவில்லை என்றாலும் ஓரளவு படித்து நாகரீகமானவர்களாகவே இருந்தனர்.

 

 

அவள் வந்ததில் இருந்து விழியெடுக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன். பார்த்ததுமே அவனுக்கு அவளை பிடித்து போனது. கட்டினால் இந்த பெண்ணை தான் கட்டவேண்டும் என்று அவன் மனதிற்குள் முடிவே செய்துவிட்டான்.

 

 

“செல்வி வந்ததுல இருந்து குனிஞ்சுட்டே இருந்தா எப்படி??? கொஞ்சம் நிமிர்ந்து மாப்பிள்ளையை பாருஎன்றுஅவள்காதைகடித்தார்அவள்பெரியம்மா. அவஸ்தையாய்உணர்ந்தவள்நிமிர்ந்துபார்த்தால்தான்என்னஎன்றுநிமிர்ந்துஎதிரில்இருந்தவனைபார்த்தாள்.

 

 

இவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று நினைத்தவள் அவனை வைத்த கண் வாங்காமல் பார்க்க சளைக்காமல் அவனும் பதிலுக்கு பார்த்தான். பட்டிகாட்டான் மிட்டாய் கடையை வெறித்தது போல் தான் அவனை பார்த்திருக்கிறோமே என்று சட்டென்று அவள் தலையில் தட்டிக் கொள்வதை சிரிப்புடன் பார்த்தான் அவன்.

 

அவளை உள்ளே அழைத்து செல்ல சொல்ல அவளும் உள்ளே சென்று விட்டாள். அவள் அறைக்குள் நுழைந்தாலும் அவனையும் அவன் தந்தையும் இதற்கு முன் எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே என்ற அவள் எண்ணம் அவளை வெளியில் எட்டி பார்க்க வைத்தது.

 

 

அவள் அறையின் சன்னல் வழியே வெளியே அமர்ந்திருந்தவர்களை நோட்டமிட்டாள். அவளுக்கு அவர்களை எங்கு பார்த்திருப்போம் என்று மட்டும் சுத்தமாக ஞாபகம் வரவில்லை. வந்தவர்கள் சென்னை என்பதால் ஒருவேளை கல்லூரிக்கு போகும் போதோ இல்லை வரும் போதோ பார்த்திருப்போம் என்று எண்ணினாள்.

 

 

ஆனாலும் அந்த எண்ணத்தை அவளால் முற்றிலுமாக ஒதுக்க முடியவில்லை. பார்த்து பழகிய முகம் போல் தோன்றியது. வந்தவர்களுக்கு இவளை பிடித்துவிட்டது என்பது அவர்கள் பேச்சிலேயே தெரிந்தது, அவள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் அறைக்குள் அவள் அன்னையும் பெரியம்மாவும் வந்தனர்.

 

 

“என்னம்மா செல்வி மாப்பிள்ளை பார்க்க வரமாட்டேன்னு சொன்ன??? இப்போ சன்னல் வழியா எட்டிபார்த்திட்டு இருக்க அப்போ வெளிய போய் உங்க அப்பாகிட்டயும் பெரியப்பாகிட்டயும் உனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லிடட்டுமாஎன்றார்பெரியம்மா.

 

 

அவள் அருகில் வந்த அவள் அன்னை “என்னம்மா நீ தான் சொல்லணும் உனக்கு பிடிச்சிருக்குன்னா நாங்க மேல பேசுறோம். முடிவு உன்னோடது தான், உங்கப்பாவும் பெரியப்பாவும் உன்னோட முடிவை கேட்டுட்டு வரச் சொன்னாங்கஎன்றார்அவர்.

 

 

சற்று நேரம் யோசனை செய்தவளுக்கு அதுநாள் வரை மறுத்தது போல் மறுக்க தோன்றவில்லை. “உங்களிஷ்டம்என்றுஒற்றைவார்த்தையில்அவள்பதிலைகூறினாள்.

 

 

எல்லோரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர், மறுவாரமே மாப்பிள்ளை வீட்டை பார்க்க வருவதாக சரயு வீட்டினர் கூற ராஜசேகரும், முத்துக்குமாரும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தனர்.

 

 

மேலும் அவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருக்க பேச்சின் இடையே அவள் சென்னையில் தான் படித்தாள் என்று சரயுவின் தந்தை கூற எந்த கல்லூரி என்று ராஜசேகர் கேட்டார்.

 

சரயுவின் தந்தை கூறிய பதிலை கேட்டு ஆச்சரியமடைந்தவர் “அப்படியா என்னோட பொண்ணு கூட அந்த கல்லூரியில தான் படிச்சா என்றார் அவர். “ஆனா அவ ஜூனியரா இருந்திருப்பான்னு நினைக்கிறேன் என்றார் அவர்.

 

 

‘என்னது அவங்க பொண்ணும் நான் படிச்ச கல்லூரி தானா, ஒருவேளை அவங்க பொண்ணை அவங்க கூட்டி வரும் போது பார்த்திருப்போம் என்று சென்ற அவள் எண்ணம் வேகமாக யோசித்து அவள் அலமாரியை கலைய செய்தது.

 

 

அவள் கல்லூரி புகைப்படங்களை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தவள் கண்கள் அடுத்து பார்த்த புகைப்படத்தில் பார்வையை பதித்திருக்க அவள் காதுகள் வெளியில் பேசிய பேச்சை கேட்டுக் கொண்டிருந்தது. ராஜசேகர் அவர் பெண்ணின் பெயர் கார்த்திகா என்பதை கூறிக் கொண்டிருந்தார்.

 

 

அவள் நினைத்தது சரி தான் அவள் கையில் இருந்த புகைப்படத்தில் கல்யாண், கார்த்தி, வைபவுடன் அவள் எடுத்துக் கொண்ட புகைப்படம் இருந்தது. அந்த தருணம் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்ததா இல்லை சங்கடமாக இருந்ததா என்று அவளுக்கே புரியவில்லை.

 

 

வந்தவர்கள் கிளம்பும் அரவம் கேட்க அவள் அறை சன்னல் வழியே எட்டிப்பார்த்தாள், முத்துக்குமார் விடைபெறும் விதமாக அவளுக்கு லேசாக தலையசைத்து சென்றான், தன்னையறியாமல் அவளும் பதிலுக்கு ஆட்டி வைத்தாள்.

 

 

அடக்கடவுளே நாம பார்த்திட்டு இருந்தது அவனுக்கு தெரிஞ்சு போச்சா, அவன் தலையை ஆட்டினா நாம வேற பதிலுக்கு ஆட்டி வைக்கிறோமே அய்யோ என்று அவள் மீண்டும் தலையில் அடித்துக் கொள்வதை ரசனையுடன் பாரத்தான் அவன்.

 

 

அதான் போயிட்டாங்களே என்ற எண்ணத்தில் குனிந்து அவள் சன்னலில் வெளியில் பார்க்க வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள் அவள் கண்ணில் பட்டனர். முத்துக்குமாரும் அவளையே பார்ப்பது தெரிந்தது, இன்னமும் என்னை தானா பார்த்திட்டு இருக்கான்.

 

 

அடப்பாவி இப்படி எல்லாரும் இருக்கும் போதே கண்ணடிக்கிறானே என்று படபடப்பாக இருந்தாலும் மனதிற்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல் இருந்தது அவளுக்கு, இப்படி தான் இருக்குமா என்று தன்னையே கேள்வி கேட்டுக் கொண்டாள் அவள்.

 

கல்லூரியில் படிக்கும் போது ஒரு முறை கார்த்தி அவள் தந்தைக்கு சொந்த ஊர் தேனி என்றது லேசாக நினைவு வந்தது. மீண்டும் கட்டிலில் வந்து அமர்ந்தவள் அந்த புகைப்படத்தை எடுத்து பார்த்தாள்.

 

 

‘அடியே கார்த்தி என்னை நீ எப்படி எல்லாம் ஓட்டியிருப்ப, இரு இரு நான் வந்து உன்னைய ஓட்டுறேன் பாரு என்று மனதிற்குள் பேசிக் கொண்டாள். கல்யாணையும் வைபவையும் மீண்டும் சந்திக்கப் போகிறோம் என்று நினைத்ததில் அவளுக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று.

 

 

வைபவின் நிலைக்கும் கல்யாண் அன்னை அவனிடம் பேசாததற்கும் தானே காரணம் என்று மருகியவள், அவர்களிடம் பேச முயற்சிக்கவே இல்லை. அவர்களை விட்டு தான் விலகி இருந்தால் அவர்கள் வாழ்க்கை நல்லபடியாக இருக்கும் என்று நினைத்து ஒதுங்கினாள்.

 

 

அவர்களை விட்டு ஒதுங்கி இருந்தாலும் அவர்களை நினைக்காத நாளில்லை. எங்கே அவர்களிடம் பேசினால் அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்று நினைத்தவள் அவர்களை தொடர்பு கொள்ளாமலிருந்தாள்.

 

 

ஏதோ தோன்ற அவள் ஊரில் இருந்து அவளுடன் சென்னைக்கு படிக்க வந்த தோழி காயத்ரி ஞாபகம் வந்தது. உடனே அவள் வீட்டின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டாள். ஆனால் எடுத்து பேசியதோ அவள் அன்னை அவளுக்கு திருமணமாகி மதுரை சென்றுவிட்டதாக அவர் கூற அவளுடைய எண்ணை வாங்கிக் கொண்டு போனை வைத்தாள்.

 

 

இரண்டு அழைப்புக்கு பின் போன் எடுக்கப்பட்டது “ஹலோ காயு நான் சரயு பேசறேன், ஞாபகம் இருக்கா என்றாள் அவள். “ரொம்ப நல்லவடி நீ, உனக்கு இப்போ தான் என்னை ஞாபகம் வந்திச்சா என்றார் காயத்ரி பதிலுக்கு.

 

 

இருவரும் சம்பிரதாயமாக சற்று நேரம் பேசினார்கள். “ஹேய் சொல்ல மறந்துட்டேன், நீ கல்யாண், வைபவ்க்கு போன் பண்ணவே இல்லையா??? பாவம்டி அவங்க எனக்கு போன் பண்ணி உன்னை விசாரிச்சாங்க. எங்க வீட்டில நம்ம காலேஜ் முடிச்சு வந்ததுமே எனக்கு கல்யாணம் பண்ணிட்டாங்க

 

 

“என்னால உன்னை தொடர்பு கொள்ள முடியலைன்னு சொல்லிட்டேன் அவங்ககிட்ட, எதுக்குடி இப்படி பண்ண, அவங்ககிட்ட பேச வேண்டியது தானே என்றாள் காயத்ரி. “ஹேய் காயு நான் அதை பத்தி அப்புறம் சொல்லறேன், அவங்க இப்போ எப்படி இருக்காங்க, அதே நம்பர் தானா என்றாள் சரயு.

“இருந்தாலும் நீ இப்படி இருந்திருக்கக் கூடாதுடி, இன்னொரு விஷயம் நம்ம கல்யாணும் கார்த்தியும் பிரிஞ்சுட்டாங்களாம் என்றதும் “என்னடி சொல்ற??? என்று பதறினாள் சரயு.

 

 

“இல்லை ஒருநாள் அவங்க போன் பண்ணும் போது நான் கார்த்திகிட்ட பேசணும்ன்னு சொன்னேன். கல்யாணும் ஒரு ரெண்டு மூணு தடவை அவ எங்கயோ போயிருக்கறதா சொன்னார். அப்புறம் நான் வைபவ்கிட்ட சாதாரணமா விசாரிக்கறது போல விசாரிச்சேன் அப்போ தான் தெரிஞ்சுது அவங்க பிரிஞ்சது என்றாள் அவள்.

 

 

“ஏன் பிரிஞ்சாங்கன்னு தெரியுமா??? என்றாள் சரயு. “அதை பத்தி எந்த விபரமும் எனக்கு தெரியலை சரயு, அதுக்கு மேல கேட்ட நாகரீகம் இல்லைன்னு நான் எதுவும் கேட்கலை என்றாள் அவள்.

 

 

ஏதோ யோசித்தவள், “சரி காயு நீ இப்போ எனக்கு ஒரு உதவி செய்யணும் என்றாள் பீடிகையுடன். “என்னன்னு சொல்லுடி என்றாள் காயத்ரி. “அவங்க இப்போ ஒண்ணு சேர்ந்துட்டாங்களா இல்லையான்னு தெரியணும். தயவு செய்து எனக்காக இதை செய்டி என்றாள் சரயு.

 

 

“நான் எப்படி இதெல்லாம் கேட்க முடியும் என்றாள் அவள். “நான் சொல்ற மாதிரி கேளு என்று சொல்லி அவளே வழியும் சொல்லிக் கொடுத்தாள். சரயுவிடம் பேசிவிட்டு வைத்த மறுநொடி காயத்ரி வைபவுக்கு போன் செய்தாள்.

 

 

காயத்ரியிடம் இருந்து அழைப்பு வந்ததும் சந்தோசத்துடன் போனை எடுத்தான் வைபவ். “ஹலோ காயத்ரி, எப்படி இருக்க. சரயுவை பார்த்தியா என்று பரபரத்தான் அவன்.

 

 

“ஹலோ நான் போன் பண்ணாலே சரயு தானா, வேறெந்த விஷயமும் இருக்காதா என்றாள் அவள். “அப்படிலாம் இல்லை, சொல்லு காயத்ரி என்ன விஷயம் உன் கணவர், குழந்தைங்க எல்லாரும் எப்படி இருக்காங்க என்றான் அவன்.

 

 

“சரி சரி நீ பேச்சை மாத்திட்டன்னு புரியுது. எல்லாரும் நல்லாயிருக்காங்க, சந்தோஷமான விஷயம் சொல்லலாம்ன்னு தான் கூப்பிட்டேன். நான் இன்னும் ஒரு வாரத்தில உங்களுக்கு அவளை பற்றிய தகவல் தர்றேன் என்றாள் அவள்.

 

 

“ஹேய் நிஜமாவா ரொம்ப சந்தோசமாயிருக்கு காயு. எங்கடா என் கல்யாணத்துக்கு முன்னாடி அவளை பார்க்க முடியாம போயிடுமோன்னு நினைச்சேன். அந்த கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும் என்றான் வைபவ் மனமார.

 

 

“அடப்பாவி என்கிட்ட உன் கல்யாண விஷயம் பத்தி மூச்சு விடலை, இப்போ நான் சரயு பத்தி சொல்லலைன்னா நீ என்கிட்ட இந்த விஷயம் சொல்லியிருக்க மாட்ட போல என்றாள் அவள்.

 

 

“சாரி காயு நான் அப்படி எல்லாம் நினைக்கலை. உணர்ச்சி பெருக்குல தான் பேசினேன் என்றான் வைபவ். “சரி இருக்கட்டும் விடு, கல்யாண் எப்படியிருக்கான், கார்த்தியும் அவனும் இப்போ ஒண்ணா தானே இருக்காங்க என்று அவள் கேட்க வந்த விஷயத்தை ஒருவழியாக கேட்டுவிட்டாள்.

 

 

“இன்னும் இல்லை காயத்ரி, அவங்களுக்குள்ள இன்னும் எதுவும் சரியாகலை. சீக்கிரமே சரியாகிடும் பார்ப்போம். நீ சீக்கிரமே நல்ல தகவலா சொல்லு, அவளோட நம்பர் கிடைச்சதும் சொல்லு நான் உடனே அவளுக்கு போன் பண்ணி பேசறேன் என்றான் வைபவ். மேலும் ஏதோதோ பேசிவிட்டு போனை வைத்தாள் காயத்ரி.

 

 

அவனிடம் பேசிவிட்டு மீண்டும் சரயுவிற்கு அழைத்தாள் காயத்ரி. “முதல் அழைப்பிலேயே எடுத்தவள் “சொல்லுடி என்னாச்சு என்றாள். “இல்லை சரயு இன்னும் அவங்க ஒண்ணு சேரலையாம் என்றாள் அவள்.

 

 

காயத்ரியிடம் பேசிவிட்டு போனை வைத்த சரயு மீண்டும் கவலையில் ஆழ்ந்தாள். மகளின் முகம் கவலையில் இருப்பதை பார்த்த அவளின் அன்னையும் பெரியன்னையும் அவளருகில் வந்தனர்.

 

 

“என்னடா செல்வி??? எதுக்கு இப்படி இருக்க??? என்னடா??? என்று அவர்கள் பரிவாக கேட்கவும் அவள் அழுது கொண்டே எல்லாமும் கூற அவள் அன்னை வள்ளி கவலையுடன் அவளை பார்த்தார்.

 

 

“என்னடா செல்வி??? இதுக்கா நீ உன்னோட தோழர்களை பிரிஞ்சு இருக்க, அவங்க உன்னை எவ்வளவு தேடியிருப்பாங்க. இந்த காரணத்துக்காக தான் நீ உன்னோட கல்யாணத்தையும் தள்ளி போட்டியா. இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, அவங்களுக்கு நடந்த பிரச்சனைக்கு நீ எப்படி காரணம் ஆக முடியும் சொல்லு என்றார் அவள் அன்னை.

 

 

“கல்யாண் அம்மா பேசாம இருந்ததுக்கு வேணும்னா நான் காரணம் இல்லைன்னு ஒத்துக்கலாம். ஆனா வைபவை ஷர்மி ஏமாத்தினதுக்கு நானும் ஒருவகையில காரணம் தானேம்மா என்றாள் அவள்.

 

 

“எது நடக்கணும்ன்னு இருக்கோ அது தான் நடக்கும். இதுல நீ என்னடா செஞ்ச, சரி விடு நடந்தது எல்லாம் போகட்டும். நீ இப்போ கல்யாணத்துக்கு சம்மதிச்சதே எங்களுக்கு போதும். அந்த பொண்ணு உன்னோட பிரிண்ட் கூட சேர்றதுக்கு நாங்க ஏதாவது செய்யறோம். நீ எதுவும் கவலைப்படாதே, உன்னோட கல்யாணத்துக்கு உன்னோட நண்பர்கள் எல்லாரையும் நீ கூப்பிடு என்றார் அவர்.

 

 

“அம்மா நீங்க நான் சொல்ற மாதிரி அவங்க வீட்டில பேசுங்க, எனக்கென்னமோ அது சரியா வேலை செய்யும்ன்னு தோணுதுஎன்றவள் இருவரிடம் ஏதோ கூற அவள் பெரியம்மாவின் முகம் மாறியது.

 

 

“செல்வி வேணாம்டா இப்படி சொன்னா ஒருவேளை அவங்க இந்த பொண்ணே வேணாம் இந்த சம்மந்தமும் வேணாம்ன்னு சொல்லிட்டு போய்ட்டா என்னடா செய்யறது என்றார் அவளின் பெரியன்னை  மாரியம்மா.

 

 

“அப்படி எல்லாம் எதுவும் நடக்காது பெரியம்மா நீங்க நான் சொன்ன மாதிரி அவங்க வீட்டில பேசுங்க. நல்லதே நடக்கும் என்னை நம்புங்க என்று அவர்களுக்கும் தனக்குமாக சொல்லிக் கொண்டாள் அவள்.

 

 

அவளுக்கு நம்பிக்கை இருந்தது முத்துக்குமாரின் மேல். தன்னை அவனுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதை அவன் பார்வையே உணர்த்தியது. அதுமட்டுமில்லாமல் அவன் யாருக்கும் தெரியாமல் அவளை பார்த்து கண்சிமிட்டியது எல்லாம் அவன் சம்மதத்தையே அவளுக்கு சொன்னது.

 

 

ராஜசேகரின் கதை வைபவின் மூலம் அவளுக்கு ஓரளவு தெரியும் தந்தையை போல் தானே மகன் இருப்பான், கட்டினால் இந்த பெண்ணை தான் கட்டுவேன் என்று அவன் தந்தை கட்டியது போல் அவனும் தன்னை நிச்சயம் திருமணம் செய்வான் என்று அவள் உறுதியாக நம்பினாள். அவளுக்கும் அவனை பிடித்தே இருந்தது.

 

 

சரயுவின் அன்னை இரு குடும்பத்திற்கும் பொதுவாக இருந்த அந்த பெரியவரிடம் கார்த்திகா பிறந்த வீட்டில் இருப்பது பற்றி லேசுபாசாக சொல்ல அவரும் தான் இது பற்றி ராஜசேகரிடம் பேசுவதாக கூறினார். அதன்படி அவரும் ராஜசேகரிடம் இந்த விஷயத்தை காதில் ஓத அதன் பின்னே அவரும் வீட்டில் இந்த சம்மந்தம் வேண்டாம் என்று தாம்தூம் என குதித்து விட்டு அலுவலகம் கிளம்பிச் சென்றுவிட்டார்.

 

____________________

 

 

தந்தை பேசியதை நினைத்துக் கொண்டிருந்த முத்துவிற்கு தலையை வலிப்பது போல் இருந்தது. அலுவலகம் கிளம்பிச் சென்றவன் அங்கு எந்த வேலையும் ஓடாமல் அவன் தந்தையிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பி வந்துவிட்டான்.

 

 

அன்று நிர்மலுக்கு வார விடுமுறை என்பதால் எங்கோ வெளியில் சென்றவன் வீடு வந்ததும் இந்திரா அவனிடம் காலையில் போன் வந்திருந்த செய்தியை கூற தாயும் மகனும் இது தான் கார்த்திகாவை அவள் வீட்டிற்கு அனுப்ப நல்ல சந்தர்ப்பம் என்று அவர்கள் அதற்கு திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர்.

 

 

தற்செயலாக வீட்டிற்கு சீக்கிரமே திரும்பியிருந்த முத்துவிற்கு நிர்மலும் அவன் அன்னையும் பேசியது காதில் விழுந்தது. சிறிது நேரம் வெளியில் நின்று அவர்கள் பேசுவதை கேட்டவன் எண்ணமும் சுத்தமடைந்திருந்தது. சக்தியின் வீட்டில் கார்த்திகாவை பற்றி பேசியது அவனுக்கு வருத்தமே என்றாலும் அதில் ஓரளவு உண்மையிருப்பதாகவே அவன் உணர்ந்தான்.

 

 

தன் தங்கை வாழ்க்கை பற்றி தான் அக்கறை கொள்ளவில்லையோ என்ற வருத்தம் அவனுக்கு மேலோங்கியது. ஒருவேளை தான் சக்தியை திருமணம் செய்து கொள்வதற்காக சுயநலமாக தன் தங்கை இங்கிருந்து செல்ல வேண்டும் என்று நினைக்கிறோமோ என்று கூட எண்ணி வருந்தியவாறே சோபாவில் அமர்ந்தவன் யோசனையில் ஆழ்ந்தான். சற்று நேரம் அமர்ந்தவன் ஒரு முடிவுடன் சமையலறை நோக்கிச் சென்றான்.

 

 

“அம்மா என்றழைத்தவாறே சமையலறைக்குள் அவன் நுழைய மெலிதான ஆச்சரியம் எட்டி பார்த்தது இந்திராவுக்கு. அவன் முகச்சோர்வு அவருக்கு எதையோ உணர்த்த “என்னப்பா இந்த நேரத்துல வீட்டுக்கு வந்திருக்க, உடம்பு சரியில்லையா என்று கேட்டவாறே அருகே வந்து அவன் நெற்றியில் கையை வைத்து பார்த்தார் அவர்.

 

 

“அம்மா என்னை மன்னிப்பீங்களா என்று அவர் கையை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டான் அவன். நிர்மல் அங்கு என்ன நடக்கிறது என்று பார்வையாளனாக நின்று பார்த்துக் கொண்டிருந்தான். “என்னப்பா என்கிட்ட எதுக்கு நீ மன்னிப்பு கேட்குற என்றார் இந்திரா.

 

 

“இல்லைம்மா நான் அப்பா கூட சேர்ந்து உங்களை கொஞ்சம் மதிக்காம இருந்திட்டேனோன்னு எனக்கு குற்ற உணர்வா இருக்கும்மா. ஒரு அண்ணனா என் தங்கைக்கு நான் நல்லது செய்யலைன்னு எனக்கு வருத்தமாயிருக்கு. அன்னைக்கு கிஷோர் விஷயத்துல நான் செஞ்சது எவ்வளவு பெரிய தப்புன்னு எனக்கு புரியுதும்மா என்றார் வருத்தம் தோய்ந்த குரலில் மீண்டும்.

 

 

“நான் அவளுக்கு நல்லது தான் செய்யறேன்னு எனக்கு நானே சமாதானம் வேற சொல்லிக்கிட்டேன். அதெல்லாம் எவ்வளவு பெரிய முட்டாள்தனம்ன்னு எனக்கு இப்போ புரியுதும்மா. நம்ம கார்த்தி கல்யாணோட சேரணும்மா. அதுக்கு நான் என்ன செய்யணும்ன்னு சொல்லுங்க என்றான் அவன்.

 

 

மகனின் மாற்றம் சந்தோசம் கொடுத்தது அந்த அன்னைக்கு. “ஏம்ப்பா உனக்கு சக்தியை ரொம்ப பிடிச்சிருக்கா??? என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார் அன்னை. அன்னையின் புத்திசாலித்தனம் கண்டு மனதிற்குள் மெச்சியவனுக்கு சற்று வருத்தமாகவும் இருந்தது.

 

 

அவன் வருத்தம் தோய்ந்த முகத்தை பார்த்தவர், “நீ அதுக்காக தான் சொல்றேன்னு நினைச்சு நான் கேட்கலை முத்து. நிஜமா தான் கேட்குறேன். உங்கப்பா அந்த பொண்ணை பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை, உனக்கு பேசி முடிவு பண்ணியாச்சுன்னு மட்டும் தான் எனக்கு தெரியும் என்றார் அவர்.

 

 

“என்னம்மா சொல்றீங்க அப்பா எதுவும் சொல்லையா??? என்றான் அவன். “அண்ணா அப்பா என்னைக்கு அம்மாவை மதிச்சு இதெல்லாம் சொல்லியிருக்காங்க. அம்மாவுக்கு எதுவும் தெரியாதுங்கறது அவரோட நினைப்பு. அப்படியே இத்தனை வருஷமும் வாழ்ந்திட்டார். அவரை யாராலும் மாத்தவே முடியாது என்று இடைபுகுந்தான் நிர்மல்.

 

 

“நானும் உங்களை புரிஞ்சுக்காம இருந்திட்டனேம்மா, நீங்க எப்போதுமே சமையலறையே உலகமாக இருப்பது போல் தோன்றினாலும் உங்களுக்கு எங்கள் மேல் தான் அக்கறை என்பது நன்றாக புரிகிறதும்மா என்றான் முத்து.

 

 

“அப்போ நீயும் அந்த பொண்ணை பத்தி எதுவும் சொல்லமாட்டா, அந்த பொண்ணோட போட்டோ கூட காட்டமாட்ட அப்படி தானே என்றார் அவன் அன்னை வருத்தமாக.

 

 

“அய்யோ அம்மா, சாரி மறந்துட்டேன். இருங்க என்றவாறே அவன் கைபேசியை எடுத்து அவள் புகைப்படத்தை தேடியவன் அதை அவன் அன்னைக்கு காண்பித்தான்.“பொண்ணு எப்படி முத்து??? என்று அன்னையாக அக்கறையாக கேட்வாறே கைபேசியை வாங்கி பார்த்தார் அவர்.

 

 

“ஹ்ம்ம் ரொம்ப நல்ல மாதிரியா தெரியறா, அந்த பொண்ணும் உங்களை மாதிரி தான்னு தோணுதும்மா. அதான் நான் உடனே சரின்னு சொல்லிட்டேன் என்றார் முத்துக்குமார்.

 

 

“முத்து இந்த பொண்ணு பேரு சரயு தானே என்றார் இந்திரா. “ஹ்ம்ம்… ஆமாம்மா, அவ பேரு சக்தி சரயுன்னு நினைக்கிறேன். உங்களுக்கு இவளை தெரியுமாம்மா என்றான் அவன்.

 

 

“முத்து இந்த பொண்ணு நம்ம கார்த்தியோட தோழி தான், நான் போட்டோல ஏற்கனவே பார்த்திருக்கேன் என்றார் அவர். “என்னம்மா சொல்றீங்க நிஜமாவா… அப்போ… என்று யோசித்தவன் “அம்மா ஒருவேளை அவளுக்கு நம்ம கார்த்தியை பற்றி தெரிஞ்சு தான் அவங்களை ஒண்ணு சேர்க்க வேண்டி அவங்க வீட்டில அப்படி பேச வைச்சிருப்பாளோ என்றான் அவன் சந்தேகத்துடன்.

 

 

“இருக்கலாம் என்றார் அன்னையும் மறுமொழியாக, “முத்து எனக்கு அந்த பொண்ணுகூட இப்போ பேசணுமே?? என்றார் அவர். “அம்மா எனக்கு அவங்க நம்பர் தெரியாதே??? என்று விழித்தவன் “ஒரு நிமிஷம் என்றவாறே போனை காதுக்கு கொடுத்தவன், யாரிடமோ பேசி எப்படியோ அவர்கள் வீட்டு எண்ணை கண்டு பிடித்து அவர்கள் வீட்டிற்கு அழைத்தான்.

 

 

சில ரிங்கிற்கு பிறகு யாரோ ஒரு பெண்மணி போனை எடுக்க முத்து அவன் அன்னையிடம் போனை கொடுத்து “அம்மா யாரோ லேடீஸ் தான் பேசுறாங்க, நீங்களே பேசுங்க சக்தின்னு கேளுங்க கொடுப்பாங்க என்றுவிட்டு அவன் அன்னையிடம் போனை கொடுத்துவிட்டு நகத்தை கடித்துக் கொண்டு நின்றிருந்தான். நிர்மல் அவனின் டென்ஷனான முகம் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தான்.

 

 

“எதுக்குடா சிரிக்குற என்று அடிக்குரலில் மெதுவாக பேசினான் அவன். “இல்லண்ணா எப்படி இருந்த நீ இப்படி ஆகிட்டியே. உனக்கு அண்ணியை அவ்வளவு பிடிச்சிருக்கா??? என்றான் நிர்மல். சந்தோசத்தில் முகம் மலர்ந்தான் அவன்.

 

 

“ஹலோ சக்தி இருக்காங்களா??? என்றார் அவன் அன்னை, “ஒரு நிமிஷம் இருங்க என்ற எதிர்முனை “செல்வி உனக்கு தான் போனு என்று அழைத்து அவளிடம் போனை கொடுத்து நகர்ந்தார்.

“முத்து இங்க வா, அந்த பொண்ணு தான் பேசுது. நீ முதல்ல பேசிட்டு என்கிட்ட கொடு என்றதும் அவனுக்கு படபடப்பு அதிகமாகியது. நிர்மல் வேறு அவனை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தான். “ஹலோ நான் குமார் பேசறேன் என்றான் அவன்.

 

 

“குமாரா, எந்த குமார் என்றாள் அவள், “அதான் உங்களை வந்து பெண் பார்த்திட்டு போன முத்துக்குமார் பேசறேன் என்றதும் அவளுக்கு குப்பென்று வியர்த்தது. “சொல்லுங்க என்றாள் படபடப்புடன்.

 

 

“இல்லை எங்க அம்மா உன்கிட்ட பேசணுமாம் என்றான் அவன். “என்ன விஷயம் என்றாள் அவள். “உனக்கு கார்த்தியை முன்னாடியே தெரியுமா??? கார்த்தி உன்னோட தோழியா??? என்றவனிடம் அவளால் எதையும் மறைக்க முடியவில்லை.

 

 

“கார்த்தியை விட எனக்கு கல்யாணும், வைபவும் தான் நண்பர்கள். கல்யாணால தான் எனக்கு கார்த்தியை தெரியும் என்றாள் அவள். “நான் போனை அம்மாகிட்ட கொடுக்கிறேன் என்று அவன் சொல்ல “ஒரு நிமிஷம் என்றவளிடம் “என்ன என்றான் அவன். “நான் என்னோட மொபைல் நம்பர் தர்றேன், நீங்க அதுக்கு போன் பண்ணுங்க ப்ளீஸ் என்றாள் அவள்.

 

 

அவளிடம் கைபேசி எண்ணை வாங்கி அவளுக்கு உடனே அவன் போன் செய்ய “தப்பா எடுத்துக்காதீங்க, அந்த போன் கூடத்துல இருக்கு, அங்க எல்லார் முன்னாடியும் பேச முடியாது, அதான் என்றாள் அவள்.

 

 

“சரி என்றவன் போனை அவன் அன்னையிடம் கொடுத்தான். “சரயு என்றவர் அவளிடம் சம்பிரதாயமாக விசாரித்துவிட்டு பின் நேரடியாக விஷயத்திற்கு வந்தார். “உனக்கு அவங்க விஷயம் எல்லாம் தெரியுமாம்மா என்றார் அவர்.

 

 

“அத்தை… என்று இழுத்தவள் “அப்படி கூப்பிடலாம் தானே என்றாள்.  “கண்டிப்பா நீ அப்படி தான் கூப்பிடணும்மா என்றார் அவர் உள்ளார்ந்து, அதன்பின் சரயு நடந்த சம்பவங்களை ஒவ்வொன்றாக கூற அவரும் இம்மென்றவாறே கேட்டுக் கொண்டு வந்தார்.

 

 

எதிரில் அமர்ந்திருந்த அண்ணனுக்கும் தம்பிக்கும் அவர் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. “அண்ணா, அண்ணி என்ன தான் சொல்றாங்க. அம்மா முகத்தில எந்த ரியாக்சனும் காணோம் என்றான் நிர்மல். “என்னடா அவ தான் அண்ணின்னு முடிவு பண்ணிட்டியா??? என்றான் முத்து.

 

“நீ மட்டும் போய் பொண்ணு பார்த்திட்டு வந்தப்போ கொஞ்சம் கோபமிருந்துச்சு, ஆனா அண்ணி உன்னை மாதிரி இல்லை அவங்க இப்போவே நம்ம குடும்பம் ஒற்றுமையா இருக்கணும்ன்னு என்ன வேலை எல்லாம் செய்யறாங்க

 

 

“அதான் அவங்க மேல ஒரு மதிப்பு வந்திடுச்சு. உனக்கு அவங்க கொஞ்சம் அதிகம் தான், இருந்தாலும் பரவாயில்லை நீ அண்ணனா போய்ட்ட, இதுக்கு மேல என்னோட அண்ணனை நான் எப்படி விட்டுக் கொடுக்க முடியும். அவங்க தான் எனக்கு அண்ணி என்றான் நிர்மல்.

 

 

“நான் நம்ம குடும்பத்து மேல பாசமா இல்லைன்னு நீ நினைக்கிறியா நிர்மல்??? என்றான் முத்து. “அண்ணா நீயும் அப்பா மாதிரி தான் அண்ணா உனக்கு பாசத்தை வெளிய காட்ட தெரியலை. அப்பா நமக்கு நல்லது செய்யறேன்னு நினைச்சு எப்போதுமே நம்ம விருப்பத்தை கேட்டதே இல்லை. எல்லாத்துலயும் அதிரடியாவே செஞ்சு பழக்கப்பட்டுட்டார்

 

 

“அவரோட விருப்பத்தை தான் நம்ம மேல திணிச்சு இருக்கார், அம்மாவை பிடிச்சு தான் கட்டினேன்னு சொல்லறார்ல, ஒரு நாள் ஒரு மணி நேரம் நம்ம அம்மா கூட நின்னு பேசியிருப்பாரா. அவங்க சம்மதத்தோட தான் அவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டாரா. நீயே யோசிண்ணா. உன்மேல எந்த தப்புமில்லை, அப்பா உன்னை அவரை போலவே வளர்த்திட்டார்

 

 

“ஏதோ புண்ணியம் உனக்கு அம்மா குணமும் வந்திருக்கு போல, இத்தனை வருஷம் கழிச்சு நீ அவங்களை புரிஞ்சுகிட்டியே. அக்கா இங்க வந்தப்போ நான் ரொம்ப சின்னவன், அம்மா பேசினா தான் அப்பா எப்பவும் போல அவங்க வாயை அடைச்சுடுவாறே.

 

 

“அவங்க எவ்வளவோ எடுத்து சொல்லியும் அப்பா அவங்க பேசினதை கேட்கவே இல்லை. நீ மட்டும் அப்போ அம்மாவுக்கு துணையா இருந்திருந்தா அக்கா நம்ம வீட்டிலேயே நாம வைச்சுட்டு இருந்திருப்போமா. விடு அண்ணா எல்லாமே நல்லதுக்கு தான் போல, இனியாச்சும் அக்காவை நாம நல்லபடியா அவங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கணும் என்றான் நிர்மல் அவன் மனதில் இருந்தது எல்லாமும் கொட்டி.

 

 

“அண்ணா இன்னொரு விஷயம் உனக்கு இப்பவும் மாமா பற்றி… என்று இழுக்க “நிர்மல் அவரை பற்றி எனக்கு நல்ல எண்ணங்கள் மட்டுமே தான் இருக்கு.

 

 

“இத்தனை வருஷமா அவர் நம்ம கார்த்திக்காக காத்திட்டு இருக்கறது நினைச்சா ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அவருக்கு நம்ம கார்த்தி மேல எவ்வளவு அன்பு இருக்கும்ன்னு எனக்கு புரியுது. கண்டிப்பா இது நான் சக்தியை பார்த்ததுக்கு அப்புறம் வந்த நினைப்பு இல்லை நிர்மல்

 

 

“அந்த நினைப்பு கொஞ்ச நாளாவே என் மனசில இருக்கு. கிஷோர் விஷயத்துக்கு அப்புறம் நான் யதேச்சையா அவரை பார்த்தேன். அப்போவே எனக்கு அவர் பத்தி அபிப்பிராயம் மாறி போச்சு. ஆனா அப்போ அந்த உண்மையை ஒத்துக்க தான் எனக்கு மனசில்லை என்றான் அவன்.

 

 

“அண்ணா அம்மா பேசி முடிச்சுட்டாங்க போல, என்னன்னு கேட்போம் என்றான் நிர்மல். முத்துவுக்கு அவளிடம் பேச வேண்டும் போல் தோன்ற, சரி அப்புறம் பேசிக்கலாம் அதான் அவளோட நம்பர் நம்மகிட்ட இருக்கே என்று நினைத்து அமைதியானான் அவன்.

 

 

மகனின் முகத்தை வைத்தே அவன் மனதை புரிந்த இந்திரா அவளிடம் ஒரு நிமிடம் என்று கூறிவிட்டு “முத்து சரயு கிட்ட பேசு என்று சொல்லி போனை கொடுக்க அவன் முகம் மலர்ந்தது.

 

 

முகம் விசிக்க அவரிடம் இருந்து போனை வாங்கியவன் “ஹலோ நான் குமார் பேசறேன் என்றான். “அதையே எத்தனை தடவை தான் சொல்லுவீங்க என்றாள் அவள் பதிலுக்கு. ‘நல்லா பதிலுக்கு பதில் பேசுறாளே என்று நினைத்தவன் அவளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக “குமார் பேசறேன்னு சொன்னா எந்த குமார்ன்னு கேட்ட ஆளு தானே நீ

 

 

“அதான் திரும்பவும் ஞாபகப்படுத்தினேன், போதுமா. இல்லை வேற மாதிரி சொல்லியிருக்கணுமோ. நீ சன்னல்ல இருந்து எட்டிபார்த்த மாப்பிள்ளைன்னு சொல்லியிருக்கணுமா, இல்லை உன்னை பார்த்து கண்ணடிச்ச மாப்பிள்ளைன்னு சொல்லியிருக்கணுமா என்று அவளிடம் பேசிக் கொண்டே அவன் அறைக்கு சென்றுவிட்டான் அவன்.

 

 

‘அடப்பாவி என் மானத்தை வாங்குறானே, அப்படியே அவன் தங்கச்சி என்னை கலாய்க்கிற மாதிரியே என்னை கலாய்கிறான் என்று நினைத்தவள். “அண்ணனும் தங்கையும் ஒரே மாதிரியே இருக்கீங்க என்றாள் அவள்.

 

 

“ஏன் சக்தி அப்படி சொல்ற என்றான் அவன். “நான் அவளை கலாட்டா பண்ணா பதிலுக்கு எனக்கு மேல அவ கலாட்டா பண்ணி என் வாயை அடைப்பா. நீங்களும் அப்படி தான் இருக்கீங்க என்றாள் அவள்.

 

“சக்தி உன்கிட்ட நெறைய பேசணும், நான் இன்னைக்கு நைட் உனக்கு போன் பண்ணுறேன் என்றான் அவன். “ஹான்… என்னது விளையாடுறீங்களா??? அதெல்லாம் என்னால பேச முடியாது. அதுவும் நைட் எனக்கு நெறய வேலை இருக்கு என்றாள் அவள்.

 

 

“என்ன வேலை இருக்கு உனக்கு??? என்று அவன் மிகத்தீவிரமாக கேட்க “எல்லாரும் என்ன செய்வாங்களோ அதே வேலை. தூங்கற வேலை தான் என்று அவளும் சீரியஸாக சொன்னாள்.

 

 

“உன்னை… நீ இப்படி தான் எப்பவும் பேசுவியா என்றான் அவன். “நான் பேசவே ஆரம்பிக்கலை என்றாள் அவள். “சரி இன்னைக்கு ஒரு நாள்… இல்லையில்லை… கொஞ்ச நாளைக்கு உன் தூக்கத்தை எல்லாம் எனக்காக ஒதுக்கி என்கூட பேசு என்றான் அவன்.

 

 

“ஹலோ… ஹலோ… யாரு நீங்க??? என்னை வந்து பெண் பார்த்திட்டு போயிருக்கீங்க. அவ்வளோ தான் என்னமோ என்னை கட்டிக்கிட்டவர் மாதிரி அதிகாரம் எல்லாம் தூள் பறக்குது என்றாள் அவள்.

 

 

“அதும் சரி தான் நீங்க யாரு எனக்கு??? சரி சக்தி நான் உங்களுக்கு போன் பண்ணி தொல்லை எல்லாம் பண்ண மாட்டேன். நான் பார்த்த பொண்ணு எனக்கு பிடிச்சுது. அதான் ஒரு உரிமையில பேசிட்டேன். கடைசியா ஒண்ணு மட்டும் என்றவன் போனில் அவளுக்கு முத்தம் கொடுக்க எதிர்முனையில் சத்தமே இல்லை.

 

 

எவ்வளவு கொழுப்பிருந்தா இப்படி பேசுவான் என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவன் முத்தம் கொடுக்க வாயடைத்து போனாள் அவள். “சரி சக்தி உனக்கு நான் கொடுத்த முத்தம் பிடிக்கலைன்னா திருப்பி கொடுத்திரு என்றான் அவன்.

 

 

“ஹலோ… இருக்கீங்களா… என்ன சத்தமே காணோம்??? பிடிக்கலையா??? என்னை பிடிக்கலையான்னு கேட்டேன்??? என்றான். “அதுக்கு பதில் இன்னைக்கு நைட் சொல்றேன் என்றாள் அவள்.

 

 

“யாரோ ஒரு நல்லவங்க நீங்க யாரு என்னன்னு கொஞ்சம் முன்னாடி தான் கேட்டாங்க. இப்போ அவங்களே எனக்கு பதில் நைட்ல சொல்றேன்னு சொல்றாங்க. அப்போ நைட் நான் போன்ல கூப்பிடலாம் அப்படிதானே என்றான் அவன்.

 

 

“தெரிஞ்சுட்டே கேளுங்க என்றவளிடம் பேசிவிட்டு போனை வைத்தான் அவன். அவன் அன்னையை தேடி கூடத்திற்கு வந்தவனை பார்த்து இப்போது நன்றாகவே சிரித்தான் நிர்மல்.

 

 

“டேய் எதுக்குடா இப்போ அவனை பார்த்து சிரிக்குற??? என்றார் இந்திரா. “அண்ணனை நினைச்சேன் சிரிச்சேன் என்றான் அவன். “அம்மா அவனை விடுங்க சொல்லுங்கம்மா சக்தி என்ன சொன்னா??? என்றான் அவன்.

 

 

“அதெல்லாம் அண்ணி உன்கிட்ட சொல்லலையா??? என்றான் நிர்மல் கிண்டலாக. “டேய் நீ கொஞ்சம் வாயை மூடு, நான் அவகிட்ட எதுவும் கேட்கலை. என்னம்மா சொன்னா??? என்று நிர்மலிடம் ஆரம்பித்து அன்னையிடன் முடித்தான் அவன்.

 

 

இந்திரா சரயுவிடம் பேசியதை முழுதாக சொன்னவர் கார்த்தியை எப்படி அவள் வீட்டிற்கு அனுப்புவது என்பதில் வந்து நின்றார் அவர். “அம்மா அப்போ கார்த்தி கல்யாணத்துல சக்தியோட பங்கும் இருக்குன்னு சொல்லுங்க என்றான் முத்து.

 

 

“அண்ணா நீ என்ன அம்மா சொன்னதையே திரும்பவும் சொல்லி பார்த்துக்கறயா. சரி இப்போ என்ன பண்ணலாம் அதை பத்தி மட்டும் பேசுவோம் என்று சொல்லி நிர்மல் சீரியஸ் ஆனான்.

 

 

மூவருமாக ஒன்று கூடி பேசியவர்கள் கார்த்திகாவின் வரவிற்காய் காத்திருந்தனர். ஏற்கனவே கல்யாணின் பேச்சில் சோர்ந்திருந்தவள் உயிர்ப்பில்லாமல் நடமாடிக் கொண்டிருந்தாள்.

 

 

நிம்மதியை தேடி கோவிலுக்கு சென்றவள் வெகு நேரம் கழித்து வீடு திரும்பினாள். வீட்டிற்கு வந்து சோபாவில் ஒரு வெறுமையுடன் அமர்ந்திருந்தவள் அருகில் வந்து அமர்ந்தான் நிர்மல்.

 

 

அது தான் தக்க தருணம் அவளிடம் பேசுவதற்கு என்று முடிவு செய்தவன், குழம்பியிருக்கும் அவளை மேலும் குழப்பினால் அவள் எதையும் யோசிக்காமல் கிளம்பிவிடுவாள் என்று தோன்ற மெதுவாக முத்துவிடம் இருந்து பேச்சை ஆரம்பித்தான்.

 

 

“அண்ணா, அம்மா ஏதோ சொன்னாங்க. பொண்ணு வீட்டுல இருந்து என்னமோ சொன்னாங்களாம். அப்பா இந்த கல்யாணம் நடக்காது, வேற பொண்ணு பார்த்துக்கலாம்ன்னு சொல்லிட்டாராம். என்ன நடக்குது. பொண்ணு வீட்டில அப்படி என்ன தான் சொன்னாங்க என்றான் அவன்.

 

 

“இல்லை நிர்மல் அந்த பொண்ணு சரியா வராது. அவங்க தேவையில்லாம நம்ம கார்த்தியை பத்தி பேசுறாங்க. அவங்களுக்கு இந்த சம்மந்தம் பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லியிருக்கணும், அதைவிட்டு இவளை பத்தி பேச அவங்க யாரு??? என்றான் முத்து.

 

 

“அவங்க அக்காவை பத்தி என்ன பேசுனாங்க??? என்றான் நிர்மல். “என்ன அண்ணா??? பொண்ணு வீட்டில அன்னை இங்க வந்து இருக்கும் போது நல்ல மாதிரியா தானே பேசினாங்க. என்னை பத்தி அவங்க என்ன சொன்னாங்க. எனக்கு ஒண்ணும் புரியலை சொல்லுங்கண்ணா என்றாள் கார்த்தி.

 

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை கார்த்தி, நீ உன்னோட அறைக்கு போய் கொஞ்ச ஓய்வேடு என்றான் முத்து. “அண்ணா என்னன்னு சொல்லுங்க??? ப்ளீஸ் என்றாள் அவள்.

 

 

“நீ ஒருத்தி இங்க வாழாம இருக்கும் போது அவங்க பொண்ணு எப்படி இங்க வந்து வாழும்ன்னு கேக்குறாங்க. அதுவும் இல்லாம நீ உன் புருஷன் வீட்டுக்கு போனா மேற்கொண்டு பேசலாம்ன்னு சொல்றாங்க. விடு கார்த்தி எனக்கு பிடிக்கலை என்றான் முத்து.

 

 

“அப்போ நான் உனக்கும் பிரச்சனையாகிட்டேனா??? என்றாள் அவள் விரக்தியுடன். “அவங்க சொன்னதுல என்ன தப்பிருக்கு என்றான் நிர்மல். “சும்மா எல்லாரும் என்னை முறைக்காதீங்க, அக்காவால் யாராச்சும் நிம்மதியா இருந்திருக்கோமா???

 

 

“முதல்ல காதலிக்கிறேன்னு வந்து நின்னா, அப்புறம் காதலிச்சவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவரோட போனா. அப்புறம் அவரை எனக்கு பிடிக்கலை, அங்க எனக்கு நிம்மதியில்லைன்னு திரும்பி வந்தா. இப்போ உன் கல்யாணத்துல ஒரு தடை

 

 

“கவலையேப்படாதே அக்கா இது தொடரும், இந்த வீட்டில இருக்கற யாரும் வாழப் போறதில்லை. எல்லாரும் இப்படியே ஒண்ணா தான் இருப்போம். நீ இங்க இருக்கறவரை அண்ணாக்கு மட்டும் இல்லை. எனக்கும் யாரும் பொண்ணு தரமாட்டாங்க

 

 

“உன்னால நாங்க எவ்வளவு நிம்மதியா இருக்கோம் பாரு என்று நக்கலாக கூறி முடித்தான் அவன். “நிர்மல் நீ பேசுறது அதிகம், அவ உன்னோட அக்கா இப்படி தான் மரியாதை இல்லாம பேசுவியா என்று கடிந்தார் இந்திரா.

 

 

“ஆமாம் நிர்மல் நீ பண்றது சரியில்லை, நீ பேசுனது தப்பு. கார்த்தி யாரு நம்ம கூடப் பிறந்தவ அவளை நீயும் தப்பா பேசுவியா??? என்றான் முத்துக்குமார். நிர்மல் பேசியதை கேட்டதில் இருந்து சிலையென சமைந்திருந்தாள் கார்த்திகா. அவள் முகம் பார்த்தவர் இரு மகன்களிடம் கண்களால் ஜாடை காட்டி பேசாமல் இருக்குமாறு கூற நிர்மல் வாயை மூடாமல் வேண்டுமென்றே பேசினான்.

 

 

“நான் என்ன தப்பா பேசிட்டேன்??? இவளால நாமளும் நிம்மதியா இல்லை, இவளை கட்டினவரும் நிம்மதியா இல்லை. அவர் என்ன தப்பு பண்ணார், குடிக்கிறாரா??? இல்லை வேற பொண்ணோட தொடர்பு இருக்கா??? இல்லை கள்ளக்கடத்தல் எதுவும் பண்றாரா??? அவர் என்ன பண்ணார்ன்னு இவ அவரை விட்டுட்டு வந்தா???

 

 

“இப்போ உட்கார்ந்து யோசிச்சு பார்த்தா நீ செஞ்சது உனக்கே சின்னத்தனமா இல்லை. கொஞ்சம் யோசிச்சு பாரு, நீ வீட்டை விட்டு வந்ததும் அந்த மனுஷன் போனவ போகட்டும்ன்னு வேற கல்யாணம் எதுவும் பண்ணிக்கிட்டாரா??? இல்லையே உன்னையே நினைச்சு உனக்காகவே காத்திட்டு இருக்கார்

 

 

“மாமா, அவரோட அம்மா இப்படி எல்லார் நிம்மதியும் கெடுத்திட்டு நீ மட்டும் சந்தோசமாவா இருக்க என்றான் அவன். “நிர்மல் போதும் நிறுத்து நான் பேசிக்கறேன் என்றார் இந்திரா.

 

 

“கார்த்திம்மா உன் தம்பி பேசினது தப்பு தான்மா. ஆனா அவன் பேசினதுல சில உண்மையும் இருக்கு. சொல்லும்மா மாப்பிள்ளையை பிரிஞ்சு நீ மட்டும் சந்தோசமா இருக்கியா, இல்லையே. நீ இந்த வீட்டை விட்டு போகணும்னோ, இல்லை உங்க அண்ணன் கல்யாணம் நடக்கணும்னோ நான் சொல்லலை. இனியும் தாமதிக்காதே ஏதாவது ஒரு நல்ல முடிவு எடு

 

 

“உன்னோட சந்தோசத்தை நீயே கெடுத்துக்காதே, மாப்பிள்ளை ரொம்ப நல்லவர், இப்பவும் உன்னையே தான் நினைச்சுட்டு இருக்கார். உனக்கு அவரை பிடிக்கலைன்னா சட்டப்படி விலகிக்கோங்க. அவருக்காச்சும் ஒரு நல்லது நடக்கட்டும் என்று இந்திரா அவளுக்கு புரியுமாறு உரைத்தார்.

 

 

முத்து அவளருகில் வந்தவன், “கார்த்தி எனக்கும் அம்மா சொல்றது தான் படுது, ஒண்ணு நீ அவரோட வாழு. இல்லை அவரை விட்டு விலகு, இப்படி மதில் மேல் பூனையா இருக்காதே. உனக்கு வேற யாரையும் பிடிச்சுதுன்னா சொல்லு அவங்களையே உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சுடலாம் என்றான் அவன்.

 

 

‘அய்யோ இவன் ஒருத்தன் காரியத்தையே கெடுத்திருவான் போல வேற கல்யாணம் பண்ணி வைக்கிறானாம் என்று பொருமினான் நிர்மல்.

 

 

நிர்மலிடம் தனியே வந்தவன் “டேய் நான் அப்படி சொன்னேன்னு தப்பா நினைக்காதே நிர்மல். அவளுக்கு பிடிக்கலைன்னா வேற நல்ல வாழ்க்கை அமைச்சு தர வேண்டியது நம்மோட கடமை. ஒரு அண்ணானா நான் அதை சொன்னேன், புரிஞ்சுக்கோடா??? என்று விட்டு போனான் முத்து.

 

 

யாரிடமும் எதுவும் பேசாமல் எழுந்து அவள் அறைக்கு சென்றவள் தான் இரவு சாப்பாட்டிற்கு கூட வெளியே வரவேயில்லை. இரவு வீடு வந்த ராஜசேகர் மகளை தேட இந்திரா அவள் தலைவலிப்பதாக கூறி நேரமே படுத்துவிட்டதாக கூறினார்.

 

 

நம்பாமல் மனைவியை அவர் பார்க்க, “சரி நீங்க போய் பாருங்க ஆனா அவளை எழுப்பிடாதீங்க, கொஞ்சம் முன்னாடி தான் அவளை சாப்பிட வைச்சு பால் கொடுத்திட்டு வர்றேன் என்றார் இந்திரா. மனைவி இவ்வளவு சொல்லும் போது மேற்கொண்டு அவர் எதுவும் பேசவில்லை.

 

 

மறுநாளைய பொழுது விடிய காலையிலேயே எழுந்து குளித்து பெட்டியுடன் கீழிறங்கி வந்தாள் கார்த்திகா. சோபாவில் அமர்ந்து தினசரியை புரட்டிக் கொண்டிருந்த ராஜசேகரின் முன் சென்று நின்றாள் அவள்.

 

 

தினசரியை புரட்டிக் கொண்டிருந்தவரின் முன் நிழலாட எதிரில் பெட்டியுடன் நின்றவளை பார்த்து சரக்கென்று எழுந்தார் அவர். “என்னம்மா எங்க கிளம்பிட்ட??? என்றார்.

 

 

“நான் எங்க வீட்டுக்கு போறேன்ப்பா, என்னால யாரோட நிம்மதியும் கெட வேண்டாம். அண்ணாவுக்கு ஊர்ல பார்த்த அந்த பொண்ணையே பேசி முடிங்க, அவங்ககிட்ட நான் எங்க வீட்டுக்கு போயிட்டேன்னு சொல்லிடுங்க. நான் கிளம்பறேன்ப்பா என்றாள் அவள்.

 

 

பேச்சுக் குரல் கேட்டு வெளியில் வந்த இந்திரா பெட்டியுடன் நிற்கும் மகளை பார்த்து நிம்மதியடைந்தார். “இந்திரா… என்று அந்த வீடே அதிர கத்தினார் ராஜசேகர். “என் பொண்ணுகிட்ட இந்த விஷயத்தை யாரு சொன்னது என்று அவர் உறும, அவர் போட்ட சத்தத்தில் வெளியில் வந்த நிர்மல் “நான் தான் என்றான் அசட்டையாக.

 

 

வேகமாக சென்று அவன் சட்டையை அவர் கொத்தாக பற்றி கையை ஓங்கி அவனை அடிக்க வர முத்து அவரை தடுத்தான். “அப்பா விடுங்க அவன் பேசினதுல என்ன தப்பு?? அவனை எதுக்கு அடிக்க போறீங்க?? என்றதும் மூத்த மகனை வித்தியாசமாக பார்த்தார் அவர்.

 

 

“என்ன நடக்குது இந்த வீட்டில??? என் பொண்ணை வீட்டை விட்டு வெளிய போக சொல்ல உங்க யாருக்கு உரிமை இருக்கு??? நீங்க எல்லாரும் போங்கடா வெளியே??? என்று அவர் கர்ஜனை செய்ய, “இது எங்க தாத்தா சொத்து சட்டப்படி அது பேரப்பசங்களுக்கு தான் சொந்தம். உங்களுக்கு கூட சொந்தம் கிடையாது என்றான் நிர்மல்.

 

 

“என் முன்னாடி நின்னு பேச உனக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது என்றார் அவர். “அப்பா நீங்க எதுக்கு அவங்களை எல்லாம் சத்தம் போடுறீங்க, அவங்க சொல்லலைன்னா எனக்கு எதுவுமே தெரியாம போய்டுமா. நான் என் புருஷன் வீட்டுக்கு தானே போறேன்னு சொன்னேன் என்றாள் அவள்.

 

 

“கார்த்திம்மா அப்போ உனக்கு அப்பா வேணாம், அப்பாவை அனாதையா விட்டுட்டு நீ போகப்போறியா என்றார் ராஜசேகர். இப்போதும் அமைதியாய் இருந்தால் மகள் கனிந்து போவாள் என்பதை உணர்ந்த பெற்றவள் வாயை திறந்தாள்.

 

 

“கார்த்தி நீ கிளம்பு, உங்கப்பாவை பார்த்துக்க நாங்க இருக்கோம் என்று அவர் மகளை கிளப்புவதில் குறியாய் இருக்க, ராஜசேகர் வேகமாக மனைவியிடம் வந்தார். “நீ தான் எல்லாத்துக்கும் காரணமா??? என்றார் கோபமாக.

 

 

“ஆமா என்ன பண்ணப் போறீங்க??? என்னை கொல்லணுமா?? செஞ்சுக்கோங்க, அதுக்கு முன்னாடி என் பொண்ணு வாழ்க்கையை கெடுக்காதீங்க, உங்க பொண்ணு உங்க பொண்ணுன்னு சொல்லிக்கிறீங்க, அவ எனக்கும் பொண்ணு தான். உங்களை மாதிரி அவ வாழ்க்கையை அழிக்க நான் நினைக்கலை. அவளை வாழ வைக்க நினைக்கிறேன்

 

 

“அவ உங்க பொண்ணுங்கற இடத்துல இருந்து கல்யாணோட மனைவிங்கற இடத்துக்கு என்னைக்கோ போயாச்சு. இனி யாரும் அவளை உங்க பொண்ணுன்னு சொல்ல மாட்டாங்க இன்னாருடைய மனைவின்னு தான் சொல்லுவாங்க. கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் தான் உங்களுக்கு அவகிட்ட இருந்த உரிமை எல்லாம், இனி எல்லா உரிமையும் அவளோட புருஷனுக்கு மட்டும். இதுக்கு மேல நீங்க அவளை தடுக்கணும்ன்னு நினைச்சா உங்களுக்கு பொண்டாட்டியும் இருக்க மாட்டா, பிள்ளைங்களும் இருக்க மாட்டாங்க என்று முதல் முறையாக கணவரை எதிர்த்து பேசினார்.

 

 

எப்போது மனைவியின் வாயை அடைக்க முயலும் ராஜசேகர் மனைவியின் புது அவதாரத்தில் வாயடைத்து போய் நின்றார். இந்திரா நிர்மலுக்கு ஜாடை செய்ய அவன் கார்த்திகாவை வெளியில் அழைத்து சென்றான்.

 

 

“அக்கா வா நானே உன்னை மாமா வீட்டில விட்டுடறேன் என்றான் அவன். “இல்லை யாரும் வரவேணாம், நானே போய்க்கறேன் என்றுவிட்டு விருட்டென்று கிளம்பி வெளியில் சென்றவள் ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறினாள்….

 

 

Advertisement