Advertisement

அத்தியாயம் 19
மகிழின் அழுகை ரிஷியின் கோபத்தைக் குறைத்து எரிச்சலைக் கூட்டியிருந்தது. ஹாலில் நடந்து கொண்டிருந்தவன் வருணாவின் அறையில் மின்விளக்கெறியும் ஒளியைக் கண்டு அவள் அறை நோக்கிச் சென்றான்
ரிஷி உள்ளே வர நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள் கையிலிருந்த அலைபேசியில் கவனத்தைத் திருப்பி விட்டாள். இந்த நேரம் என்ன செய்கிறாள் அவள் என்ற எண்ணத்தில் அருகே சென்று அமர, அவளோ அலைபேசியில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள்
எப்போதும் பாடல் கேட்பாள் இல்லை எனில் ஏதேனும் படத்தைப் பார்ப்பாள் படுக்கையில் இருந்த படி அதிகமாக அலைபேசியை கைகளில் தூக்கி வைத்துக் கொள்வதில்லைதற்போது என்ன புதிதாக விளையாட்டு? என அவன் சிந்திக்க சில நிமிடங்களில் அலைபேசியை அணைத்துவிட்டு அவனிடம் திரும்பினாள் வருணா
எதுக்கு இவ்வளவு நேரம் மொபைல் யூஸ் பண்ற? கையைப்படி உயர்த்தி பிடிச்சிக்கிட்டு இருந்தா கை வலிக்கும்ல?” என்றவன் கடிய, “கேம் இன்ரஸ்ட், அதனால வலிக்கவில்லை அண்ணா, இன்னைக்கு வந்த அலப்பறைகள் பழசெல்லாம் நியாபகப்படுத்திட்டுக. விளையாடணும் போல இருந்துச்சு, அதான் மொபைல் கேமாவது விளையாடலாமேன்னு கொஞ்ச நேரம் விளையாட்டேன் அண்ணாஎன்றாள்
தேவையில்லாது அத்தனை பேரையும் அழைத்து வருணாவின் குறையைக் காட்டி, இவளை ஏங்க வைத்து, வருந்த வைத்துட்டுவிட்டாளே! என அப்போதும் மகிழை மனதில் நினைத்துக்கொண்டு தலையாட்டினான்.  
ம்ம், ரொம்ப நேரம் யூஸ் பண்ணாத வருணாஎன்க, “நீ என்னை ரொம்ப கன்ட்ரோல் பண்ணாத ரிஷிஎன்றாள் சிறு முறைப்புடன்
அவள் காதை பிடித்து திருகியவன், “நீயெல்லாம் அடங்குற ஆளா? சரியான பிடிவாதம்என அதட்ட, சட்டென சிரித்தவள், “விடு அண்ணா நானே ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் சந்தோஷமா இருக்கேன், அந்த குஷியில கொஞ்சம் விளையாடக் கூடாதா?” என்றாள்
அவள் சந்தோஷமாக உள்ளாள் என்ற வார்த்தை நிறைவைத் தர, தலையாட்டினான். இல்லையில்லை தலையாட்ட வைத்திருந்தாள் வருணா
அதில் உண்டான வெற்றிச்சிரிப்புடன், “எங்க அண்ணா மகிழ்?” என்றாள்
ரூம்ல தான் இருப்பா, என்ன வேணும் வருணாஎன அவள் தேவையில் கவனமானான்
ப்ரண்ட்ஸ் கொடுத்த கிப்ட்ஸ் எல்லாம் டேபிள்ல இருக்கு பாரு, அதெல்லாம் ஓபன் பண்ணி பார்க்க தான் மகிழை கூப்பிட்டேன். சரி இருக்கட்டும், நீ எடுத்து ஓபன் செய்யேன்என்றாள்
அவனும் பொறுமையுடன் அனைத்தையும் எடுத்து வைத்துப் பிரிக்க, வருணா எதிர்பார்ப்புடன் உற்சாகமானாள்
முதல் பரிசை பிரிக்க, பெரிய சையில் டெடி பியர் பொம்மை ஒன்றிருக்க, ஆசையோடு அவன் கைகளில் இருந்து வாங்கியவள், “இங்க பாரேன் அண்ணா, எனக்கு பிடிச்ச டெடி மகிழுக்கு பிடிச்ச பிங்க் கலர்ல! ஒரு பொம்மைக்கு நாங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கணுமாம்இப்படி வில்லத்தனமான வேலையெல்லாம் கிஷோர் தான் செய்வான்என்றாள்
நண்பர்களை நினைத்து மகிழ்ச்சியில் மலர்ந்த முகத்தையும், குரலில் இருந்த குதூகலத்தையும் அப்போது தான் கவனித்தான் ரிஷி
நீயே வைச்சிக்கோ வருணாம்மா, நான் அவளுக்கு புதுசு வாங்கிக் கொடுத்திடுறேன்என்க, “நீ சொல்லாட்டாலும் மகி கொடுத்துடுவா அண்ணா, அவளுக்கு விட்டுக்கொடுத்துத் தான் பழக்கம் சண்டை போடத் தெரியாது, மறக்காம நீ நாளைக்கு அவளுக்கு புது பொம்மை வாங்கிக்கொடுத்துடு, இதுஇங்க என் பெட்ல ரைட் சைட் வைஎன ஏவினாள்
அடுத்தடுத்த பரிசுப்பொருட்களைப் பிரிக்க, வருணாவின் குழந்தை பருவத்திலிருந்து வயதான தோற்றம் வரையிலான புகைப்படங்கள் அடங்கிய போட்டோ ப்ரேம், சிறிய வெண்மை நிற புத்தர் சிலை, பேட்மின்டன் ஹிட் என வரிசையாக இருந்தது
அழகா இருக்குல?” எனக் கேட்டபடி அனைத்தையும் ரசித்து மகிழ்ந்தவள் தன் கண் பார்வை படும் இடங்களில் அடுக்க வைத்து ரிஷியை வேலை வாங்கினாள்
அவனும் சலிக்காமல் செய்ய, தன் கையிலிருந்த டெடியை அணைத்துக்கொண்டவள், “இந்த ப்ரேம் கவி ரெடி பண்ணதா இருக்கும், புத்தர் சிலை சுபி வாங்கியிருப்பா, அந்த பேட்மின்டன் ஹிட் அருண் வாங்கினதா இருக்கும்! நல்லவேளை அண்ணா, முடியாதவளைப் பார்க்கப் போறோம்னு ஆப்பிளும் ஹார்லைஸ்க்ஸும் வாங்கிட்டு வந்து நிறைக்காம விட்டாங்களே! குட் நயிட் அண்ணா!” என்றவள் படுக்க முயன்றாள்.
குறுநகையுடன் தலை தடவியபடி படுக்க உதவியவன், மின்விளக்கை அணைத்துவிட்டு யோசனையுடன் தன்னறை நோக்கிச் சென்றான்
தன்னறைகுள் வந்தவன் விழிகளை சுழற்ற மகிழ் கட்டிலில் உறக்கத்திலிருந்தாள். சத்தமின்றி உடை மாற்றி வந்தவன் கட்டிலில் அமர்ந்தான். அவன் புறம் திரும்பி சீரான மூச்சுடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்! அழுததிற்கான அடையாளங்கள் கண்ணீர் கரையாய் கன்னத்தில் படித்திருக்க, முகமே சிவந்து வீக்கினார் போன்றிருந்தது
என்ன மனிதன் நான் வருணாவை வருந்த வைக்கக் கூடாது என்பதற்காக இவளை வருந்த வைத்துவிட்டேனே! இவள் வரும் வரை வருணாவின் தேவைகளை நிறைவேற்றி நலனை கவனித்துக்கொண்டாலும் அவள் ரசனைகள், பொழுதுபோக்கு, மகிழ்வு தரும் விஷயங்கள் என எதையும் அறியாமல் இருந்திருக்கிறேன். மகிழாகச் செய்யும் போதும் புரியாது இவளை காயப்படுத்தி விட்டேனே! இவளை அழைத்து வரும்போது இவள் தந்தையிடம் கொடுத்த வாக்குகளையெல்லாம் காற்றில் விட்டுவிட்டேனே! ஏன் தான் இவளுக்கு என் மீது இத்தனை அன்போ! தவறே செய்யாமல் என்னுள் குற்றவுணர்வை விதைத்து அதிகப்படுத்துகிறாள்
தன்னால் அவள் கண்களில் கண்ட கண்ணீர் அவனை வதைக்க, இமைக்காது அவள் முகம் பார்த்திருந்தவன் மெல்ல அவள் கன்னங்களை வருடினான். ரோஜாப்பூவின் இதழ் போன்றே மென்மையாய், குளுமையாய் இருக்க மேலும் மென்மையாய் வருடினான்
இதற்கு முன்னும் தொட்டிருக்கிறான், அணைத்திருக்கிறான், ஆனால் மென்மையான அவள் ஸ்பரிசத்தை உணர்ந்ததில்லை, ரசித்ததில்லை. இன்று உணர, அதை நெஞ்சில் நிறுத்தி நினைவில் சேமித்துக்கொள்ள முயன்றான்
அதற்குள் அவன் தொடுகையை உணர்ந்தாளோ என்னவோ உறக்கத்தில் மறுபுறம் திரும்பிப்படுத்தாள் மகிழ்நிரதி. அணைத்துக்கொள்ளும் ஆசை இருந்த போதும் அழுது சோர்ந்து, ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவளைத் தொந்தரவு செய்யாது அவளருகிலே படுத்துக்கொண்டான்
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மகிழ்நிரதியை எங்கேனும் வெளியே அழைத்துச் செல்ல வேண்டும், அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும், பேச வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்போடு இருந்தான் ரிஷி
ஆனால் காலை முதலே அவன் கண்ணில் விழாது கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தாள் மகிழ். வருணாவின் அருகில் கூட அமரவில்லை, சிறிது நேரம் அவளருகில் இருந்தால் கூடத் தான் வருந்தியதை கண்டுகொள்வாள் என அவளையும் தவிர்த்தாள். இல்லாத வேலையை இருப்பது போல் இழுத்துக்கொண்டு பூஜை அறையிலும் சமையலறையிலும் அடைந்து கொண்டாள். வேலையாட்களின் முன் பேச விருப்பமின்றி ரிஷியும் ஹாலில் தொலைக்காட்சியுடனும் வருணாவுடனும் நேரம் போக்கினான்.
ரிஷி தவறான புரிதலில் கடிந்து கொண்டாலும் மகிழுக்கு அவன் மேல் கோபமில்லை, ஆனால் வருத்தம் இருந்தது. வருணாவை வேதனைப் படுத்திவிடுவேன் எனத் தன்னை எவ்வாறு அவன் நினைக்கலாம்? என் மீது துளிகூடவா நம்பிக்கை இல்லை! என்ற வருத்தம் அவளைப் பெருமளவு அழுத்தியது. எங்கே அவன் முன் சென்றால் மீண்டும் கோபம் கொள்வானோ திட்டிவிடுவானோ? அவனிடமிருந்து வரும் கடும் சொற்களை தன்னால் தாங்கவும் இயலாதே! என்ற பயத்திலே அவனை தவிர்த்தாள்.
ஞாயிறு ஒருநாள் தான் மதிய உணவு வீட்டில் உண்பான் என்பதால் எப்போதும் அவனுக்கு பிடித்தவற்றை அவளே சமைப்பாள். இன்றும் சமைத்து வைத்துவிட்டு வேலையாளை பரிமாற அனுப்பியவள் அவன் உண்ணும் நேரம் வருணாவை கவனிக்க அவள் அறைக்குள் சென்றுவிட்டாள்
டைனிங் டேபிள் வரை அருகே வந்தவள் தான் அமர்ந்திருப்பது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் செல்வது ரிஷிக்கு முகத்தில் அடித்து போன்றிருக்க, துளி கோபம் துளிர்விட்டது
வருணாவிற்கு உணவு கொடுக்க சில நிமிடங்களிலே அவள் முகத்தை ஆராய்ந்து கண்டுகொண்ட வருணா, “என்ன மகி ஒரு மாதிரி இருக்க, உடம்புக்கு முடியலையா? அண்ணாவை கூப்பிடவா?” என்றாள்
அவர் எதுக்கு?” சட்டென கேட்டவள் வருணாவின் பார்வையை உணர்ந்து, “எனக்கு ஒன்னுமில்லை, நல்லா தான் இருக்கேன். அவரே இன்னைக்கு ஒரு நாள் தான் வீட்டுல இருக்காரு ரெஸ்ட் எடுக்கட்டுமே வருணாஎன்றாள் மெல்லிய குரலில்
சரி அப்போ கொஞ்ச நேரம் இங்க உக்காருஎன வருணா கேட்க, “இல்லை கொஞ்சம் வேலை இருக்கு, முடிச்சிட்டு வரேன்என நழுவினாள் மகிழ்நிரதி
சரி உன் மொபைல் கொடுஎன மகிழின் கைகளில் இருந்த அலைபேசியைப் பிடுங்கிக்கொண்ட வருணா, “இருந்தாலும் நீ ரொம்ப பண்ற மகி, வீட்டு வேலைக்கும், சமையல் வேலைக்கும் ஆள் இருக்கு, உன்னை யார் இழுத்துப்போட்டு அந்த வேலையெல்லாம் செய்யச் சொன்னா? என்னவோ எங்க அண்ணன் வேலை செய்ய தான் உன்னை கல்யாணமே செஞ்சிக்கிட்டு வந்த மாதிரி ஸீன் காட்டுற நீ!” என்றாள் முறைப்புடன்
பின்ன இவ்வளவு பெரிய வீட்டுக்கு மருமகள், இந்த அறுந்தவாலுக்கு அண்ணி கொஞ்சமாவது பொறுப்பா இருக்க வேண்டாமா?” என சிறுசிரிப்புடன் உரைத்த மகிழ் அறையிலிருந்து வெளியேறினாள். ஹாலிலும் டைனிங் டேபிளிலும் ரிஷி இல்லாமல் இருக்க கண்டுகொள்ளவில்லை.
தங்கள் விஷயத்தை, அதுவும் வருணாவின் பொருட்டு அவர்களுள் நடந்த வாக்குவாதங்களைத் தெரிவித்து வருணாவை வருந்த வைக்க விரும்பவில்லை. அது மட்டுமின்றி யார் பார்வைக்கும் ரிஷியை குறைவாகக் காட்ட, அவனை நேசிக்கும் அவளால் இயலாது!
மகிழின் அலைபேசியை வாங்கிய வருணா ஏதோ நினைவில் அதில் இருக்கும் ஸ்ரீதர் மகிழ் முன்பு பாடிய பாடல்களை ஒலிக்கவிட்டுக் கண்மூடினாள். கல்லூரி காலத்திலிருந்தே இவர்கள் குரல் மீதும், பாடல்கள் மீதும் பெரும் ஈர்ப்பு. பெரும் ரசிகர் கூட்டமிருக்க வருணாவும் எப்போதும் விரும்பிக் கேட்பாள். ஆனால் மகிழ் திருமணம் முடிந்து வந்ததிலிருந்து கேட்கத் தோன்றாது ஸ்ரீதர் வந்து சென்ற பின் கேட்கத் தோன்றியது எதனால் என அவளுக்கே தெரியவில்லை
மாலை நேரம் கையில் இரண்டு புத்தகங்களோடு ஸ்ரீதர் வந்தான். மகிழ் அவனை வரவேற்க, “எங்க ரிஷியைக் காணும்?” என்றவனின் பார்வை வருணாவின் அறை நோக்கிச் சென்றது
ரூம்ல தான் இருப்பாங்கஎன மகிழ் பதில் சொல்லும் போதே, “இல்லம்மா ஐயா மதியமே வெளிய போயிட்டாங்களேஎன்றார் வேலையாள்
அச்சோ! மறந்துட்டேன் சீனியர்என அறியாத விஷயத்தை மறந்தது போன்று தலையில் தட்டிக்கொண்டவள், “அவரை பார்க்கத் தான் வந்தீங்களா? என்ன விஷயம் சீனியர்?” என்றாள்
சும்மா தான் கேட்டேன், வருணாவை பார்க்கத் தான் வந்தேன்எனக் கையில் உள்ள புத்தகத்தை நீட்ட, “நீங்க போய் பாருங்க சீனியர், நான் இதோ வந்திடுறேன்என்ற மகிழ் பூஜையறை நோக்கி நகர்ந்தாள்
தனக்குப் பிடித்ததை எல்லாம் சமைத்து வைத்திருக்கிறாள் எனில் தன் மீது கோபமில்லை, ஆனாலும் தன்னை தவிர்க்கிறாளே என்பதை ரிஷியால் ஏற்கமுடியவில்லை. அவள் பின்னே வர வேண்டும், அலைய வேண்டும் என்பதற்காகத் தன்னை தவிர்த்து, தவிக்க வைக்கிறாளோ என நினைத்த ரிஷி எரிச்சலானான். மகிழ் வருணாவை கவனித்துக் கொண்டிருந்த போதே வீட்டில் இருக்க விருப்பமின்றி வெளியில் சென்றுவிட்டான்
ஸ்ரீதர் அறைக்குள் செல்ல, காதில் ஹெட் போனோடு கண்மூடி படுத்திருந்தாள் வருணா. பார்வையால் ஒரு முறை அறையைச் சுற்றிவிட்டு டேபிளில் இருந்த போட்டோ ப்ரேமை அருகில் சென்று பார்த்தான்
உறக்கமில்லாது கண்களை மட்டுமே மூடியிருந்த வருணா, அவன் காலடி ஓசையில் விழித்து, “வாங்க சீனியர்என வரவேற்றாள்
மலர்ந்த முகத்துடன் அருகில் வந்தமர்ந்தவன், “நேத்து ப்ரண்ஸோட நல்ல என்ஜாய்மெண்ட் போலஎன்றான்
ஆமா சீனியர் எல்லாரும் வந்திருந்தாங்க. நீங்க தான் மிஸ், இதெல்லாம் அவங்க வாங்கிட்டு வந்த கிப்ட்ஸ் தான்என்றாள்
தலையாட்டியவன் தன் கைகளில் இருந்த புத்தகத்தை அவளிடம் நீட்டினான். தன்னம்பிக்கை கவிதைகளும், காதல் கவிதைகளுமென இருக்க, இரண்டையும் வாங்கிப் பார்த்தாள்
என்ன சீனியர் இது! கவிதையெல்லாம் நான் படிச்சதே இல்லையே, ஏதோ இப்போ கொஞ்ச நாளா தான் மகிழை புக்ஸ் வாசிக்கச் சொல்லி கேட்கிறேன். இல்லை நானெல்லாம் இந்த பக்கம் திரும்புற ஆளா? இதுல கவிதை வேற? உங்களை மாதிரி படிப்ஸ் இல்லையே சீனியர் நான்!”
என்னோட புக் தான், படிச்சிப்பாரு வருணா நல்லா இருக்கும்” 
ச்சு, கவிதைனாவே பொய்! இதெல்லாம் நான் படிச்சதுமில்லை, ரசிச்சதும்மில்லை” 
மிகைப்படுத்திய பொய்மையில் ஒரு அழகு இருக்கு! இனி ரசிக்க கத்துக்கோ
சீனியர்….”
சரி புக்ஸை வாங்கிக்கோ, உனக்குத் தோனும் போது படி” 
உப்புக்காரமில்லாத சுத்த தயிர்சாதம் என மனதில் நினைத்தவள் குறுநகையுடன் வாங்கி அருகில் வைத்துக்கொண்டாள்.
அவன் கைகளில் இருந்த ப்ரேமை பார்த்தவள், “இப்போ பார்க்க எப்படி இருக்கேன், இப்படி இருப்பேனா, இல்லை இப்படி?” என அதிலிருந்த புகைப்படங்களைத் தொட்டுக்காட்டிக் கேட்டாள்
இதை மகிழிடமே கேட்டிருப்பாள் ஆனால் அவள் தான் நேற்றிலிருந்து வருணாவின் அருகில் அமரவில்லையே
அவள் கேள்வியில் எழுந்தவன் அவளருகே குனிந்து கன்னத்தோடு கன்னம் உரச, தன் அலைபேசியின் முகப்பு கேமராவில் செல்ஃபி ஒன்றை கிளிக் செய்தான். இதை எதிர்பாராது ஒரு நொடி அதிர்ந்த வருணா அவனையே இமைக்காது பார்த்தாள்
மீண்டும் அமர்ந்தவன், “நீயே பாருஎன அவளிடம் அலைபேசியை நீட்டினான்.
நண்பர்களோடு ஆயிரத்திற்கும் மேல் செல்ஃபிகள் எடுத்துள்ளதால் அதைப் பெரிதுபடுத்தாது விட்டவள் ஆர்வமுடன் புகைப்படத்தை ஸூம் செய்து தன் முகத்தைப் பார்த்தாள்
அதைக் கவனித்தவன், “க்கும், ஜோடிப் பொருத்தம் எப்படி இருக்குன்னு கொஞ்சம் பார்க்கலாமே?” என்றான் சிறு செறுமலுடன்
அதிர்ந்த வருணா சட்டென தலை நிமிர்ந்து அவனை ஆராய்ந்தாள். ஸ்ரீதரின் முகத்தில் சிறுசிரிப்பு இருந்த போதும் அதில் குறும்புத்தனமில்லை, உறுதியும் வேண்டுதலும் இருந்தது. உடலில் மெல்லிய சிலிர்ப்பை உணர்ந்த போதும் வருணாவல் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை
தாங்க முடியாது அவள் கண்களை மூட, அவள் கை விரல்களை வருடிய படி அலைபேசியை ஸ்ரீதர் வாங்க, அதே நேரம் கையில் காஃபியோடு மகிழ் அறைக்குள் வந்தாள்
மகிழ் அவனிடம் நீட்ட, அலைபேசியை சட்டை பையில் வைத்து விட்டு காஃபியை எடுத்துக்கொண்டான். பின் மூவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க, வருணா அவ்வப்போது அவனை ஆராய்வது போல் பார்க்க, சளைக்காமல் எதிர்பார்வை பார்த்தான் ஸ்ரீதர். மகிழ் இருந்த கவலையில் அவர்கள் பார்வையை சிறிதும் கவனிக்கவில்லை
செல்லும் போது கடைசியாக மீண்டும் கவிதைகளை வாசிக்கும்படி உரைத்துவிட்டு விடைபெற்றுக் கிளம்பினான் ஸ்ரீதர். அவன் சென்று பல மணி நேரங்களாகியது, நன்கு இருள் சூழ்ந்த இரவு நேரம் ரிஷி இன்னும் வீடு வரவில்லை, அவன் வருகையை எதிர்பார்த்து ஹாலில் அமர்ந்திருந்தாள் மகிழ்நிரதி
அவன் வீட்டிலிருந்த போது தவிர்த்தவள் அவன் வீட்டிலில்லாத போது தவித்தாள். அதைத் தாண்டியும் நேற்று நண்பர்களை அழைத்ததற்கு திண்டியவன் இன்று தான் அழைக்காமலே வந்த ஸ்ரீதரின் வருகையை அறிந்தால் என்ன சொல்வானோ என்ற பயம் பரவியது. எவ்வாறாகினும் மகிழின் நினைவுகள் எப்போதும் ரிஷியை பற்றியே இருந்தது

Advertisement