Advertisement

அத்தியாயம் 16
பேபி பிங்க் நிறத்தில் டிசைனர் புடவை அணிந்து, கண்ணை உறுத்தாத கண்ணுக்குக் குளிர்ச்சியான, லேசான அலங்காரத்தில் தயாராகியிருந்தாள் மகிழ்நிரதி. ரிஷி இன்னும் வரவில்லை அதற்குள் தயாராகி இருந்தவள் அவன் கபோர்ட் முழுவதும் தேடி தனது புடவைக்கு பொருத்தமான நிறத்தில் சட்டையை எடுத்தவள் கட்டிலில் வைத்துவிட்டு உடன் டவலையும் எடுத்துவைத்துவிட்டு வாசல் வரை வர, ரிஷி எதிரே வந்தான்.
அதை சற்றும் எதிர்பாராது மோத இருந்தவள் ஒருநொடியில் சுதாரித்து விலகி மூச்சு வாங்க, சிரிப்புடன் அறைக்குள் வந்தான் ரிஷி. “ஜெஸ்ட் ப்யூவ் மின்ட்ஸ் ரெடியாகி வந்திடுறேன் மகிழ்” என்றாவன் உள்ளே செல்ல தலையாட்டிவள் கீழே வந்தாள். 
வருணாவின் அறைக்குள் வந்தவள் தாங்கள் வரும் வரை அவளை கவனித்துக் கொள்ளும்படி செவிலியரிடம் உரைத்துவிட்டு வருணாவிடம் விடைபெற்று வர, ரிஷி தயாராகி வந்தான். அவன் வருகையிலே முதலில் மகிழின் கண்ணில் பட்டது அவன் அணித்திருந்த நீல நிற பார்மல் உடை தான். சற்றே ஏமாற்றமாக இருக்க நொடி நேரத்தில் அவள் முகம் வாடிவிட்டது. 
சிரித்த முகமாக வந்தவன் அவள் கரம்பற்றி அழைத்துச் சென்றான். அந்த உடையை தன் கையில் கொடுத்து அணியும்படி சொன்னால் தான் தவிர்கையில் அவள் கவலை கொள்வாள் நல்லவேளையாக அவள் எடுத்துவைத்துவிட்டு சென்றுவிட்டாள், தற்போது தான் அதை கவனிக்கவில்லை என நினைத்துக்கொள்ளட்டும் என தெரிந்தே தவிர்த்திருந்தான். 
ஆனால் மகிழ்நிரதி அதற்கே மனம் வாடியிருந்தாள். தன் விருப்பத்தை அவன் மீது திணிக்க நினைத்த தன் முட்டாள் தனத்தை நொந்தாள். ஒருவேளை அவன் அந்த உடைகளை கவனிக்காமல் விட்டுருக்கலாம் என மனதனை சமாதனப்படுத்திக்கொண்டாள். அதை தாண்டியும் அவனோடு முதல் முறையாக வெளியில் செல்கையில் மனசஞ்சலம் வேண்டாமென முயன்று தன்னை சமாதனப்படுத்திக் கொண்டாள். ரிஷிமேல் அதுவரை எதிர்பார்ப்புகள் இல்லை தான் தற்போது எதிர்பார்த்து தோற்க, அந்த ஏமாற்றத்தின் வலி சற்று பெரிதாகத் தெரிந்தது. 
வரும் வரை அமைதியாக வந்தவள், வாசலிலே கணேஷனும் அவர் மனைவியும் வரவேற்க, மெல்லிய புன்னகையோடு உள்ளே சென்றாள். ஏற்கனவே ஒருமுறை பார்த்தவர்கள் தான் ஆகையால் இம்முறை சகஜமாக உரையாடல்கள் தொடர்ந்தது. 
கணேஷனின் மகள் திருமணம் முடிந்து மும்பையில் இருக்க, மகன் வெளிநாட்டில் உயர்கல்வியில் இருந்தான். ஆகையால் வீட்டில் அவர்கள் இருவர் மட்டும் தான். அதிலும் முதல் முறை பார்கையிலே அவர் மனைவி கலைவாணிக்கு மகிழை மிகவும் பிடித்துவிட்டது. அனைவரும் பேசியபடியே இரவு விருந்து உண்ண, ரிஷியும் கணேஷனும் தொழில் பற்றி பேசத் தொடங்கினார். 
“ஏங்க சாப்பிடும் போது கூட பிஸ்னஸ் பத்தின பேச்சு தானா? இன்னும் கொஞ்ச நேரம் பேசுனீங்க பச்சமிளகாவை கிள்ளி வைச்சிடுவேன்” என கலைவாணி மிரட்ட, சிறு சிரிப்புடன், “சரி சரி பேசலை” என்றார் கணேஷன்.
ரிஷியும் மகிழும் சிரிப்புடன் அவர்களை பார்த்தபடி உண்ண, “எப்போ ரிஷி உங்க ரிஷப்ஷன்?” என்றார் கலைவாணி.
“லேட்டாகும், டைம் இல்லை ஆன்ட்டி கொஞ்சம் முடிக்க வேண்டிய பிஸ்னஸ் டீல் எல்லாம் நிறைய இருக்கு” என்க, கணேஷ் சிரித்தார். 
“அது முடிக்கவும் அடுத்தடுத்த ஆடர் தான் வந்துக்கிட்டே இருக்குமே ரிஷி” என கலைவாணி கேட்க, “பார்க்கலாம் ஆண்ட்டி நெக்ஸ்ட் மன்த் என்டல அரேன்ஜ் செஞ்சிடுறேன்” என்றான்.
“சூப்பர் ரிஷி, சந்திரிக்காவுக்கும் நெக்ஸ்ட் மன்த்ல தான் என்கேஜ்மென்ட்” என்ற கலைவாணி கணேஷின் முறைப்பை பார்த்ததும் அமைதியாகினர். 
ரிஷி மகிழைப் பார்க்க, சந்திரிக்கா பற்றி தெரியாதாகையால் அவர்கள் உறவினரோ இவனுக்கு தெரிந்தவர்களோ என நினைத்து அமைதியாக உண்டுக்கொண்டிருந்தாள். அதற்குமேல் அங்கு பேச்சுக்கள் இல்லாது அமைதி நிரப்ப, மகிழ் தான் பேசத் தொடங்கினாள். கலைவாணியின் சமையலைப் பாராட்டியவள் அதன் ரெசிபிகள் குறித்தும் கேட்க, ஆர்வமான கலைவாணி மீண்டும் கலகலப்பாக பேசத்தொடங்கினார். விருந்து முடிய கிளம்பும் நேரம் தாம்பூலம் கொடுத்து ஆசிர்வதித்து அனுப்பினர். 
சற்றே எரிச்சலில் கிளம்பிய போதும் சிறிதே நேரத்தில் மனம் அமைதியடைத்திருந்தது ரிஷிக்கு. பிளேயரில் மெல்லிய இசையில் காதல் பாடல் ஒலித்துக்கொண்டிருக்க, மௌனமாக வண்டியோட்டிக் கொண்டிருந்தான். மகிழ் இருந்த உற்ச்சாகத்தில் தன்னையும் அறியாமல் கேட்கும் பாடலை முணுமுணுத்தபடி வெளியில் பார்வை செலுத்தியவாறே வந்தாள்.
ஆனால் மனமோ சந்தோஷ துள்ளலில் குதித்துக்கொண்டிருந்தது. தன்னவனோடு தனிமையில் ஒரு பயணம், காணும் காட்சிகள் யாவும் அழகாக்கியது. அவள் சிறு இதயத்தில் நிரப்பட்ட சந்தோஷம் மூச்சுமுட்ட செய்தது. முடியாத பாதையாக, நீண்ட பயணமாக வேண்டுமென்ற ஆசைகளும் இன்பக்கனவுகளும் அவளுள் நீண்டது. 
இந்த மனபோராட்டத்தில் இரண்டு மூன்று முறை அவள் புறம் ஆராயும் பார்வையை திருப்பியிவன் அவள் ஹம் செய்வதை கவனித்தவிட்டு அவளே பாடட்டும் என நினைத்து பிளேயரை ஆஃப் செய்தான். மகிழோ தான் ஹம் செய்வது அவனுக்கு இடையூராக உள்ளது போல் அதற்காகவே பாடலை நிறுத்திவிட்டான் என்றெண்ணி வாயை மூடிக்கொண்டாள்.
ரிஷி இரண்டு மூன்று முறை மகிழின் பாடலைக்கேட்டதுண்டு, அதிலும் ஒருமுறை தன் வீட்டுப் பூஜையில் அவள் பாடியது அவனையே சில நொடிகள் மயக்கும் படி இருந்தது. இன்றும் அவள் பாடுவாள் என எதிர்பார்க்க அவன் எதிர்பார்ப்பு அவளறியாமலே ஏமாற்றமாகியது! 
வீட்டிற்கு வந்ததும் மகிழ் காரைவிட்டு இறங்க, அவள் கைபேசி அழைத்தது. தந்தையிடமிருந்து அழைப்பு வந்திருக்க உறச்சாகமானவள் பேசியவாறே உள்ளே சென்றுவிட்டாள். ரிஷி காரை நிறுத்திவிட்டு அதன் பின் இறங்கி வர, மகிழ் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்தவன் இடையூறு செய்யாது வருணாவை பார்க்க அவள் அறைநோக்கி சென்றுவிட்டான். 
இரவு ரிஷி மடிக்கணினியோடு தன் வேலையில் அமர்ந்துவிட, அன்று விரைவாக டின்னர் முடித்து வந்துவிட்டதால் வேலையில்லாது வருணாவின் மெடிக்கல் ரிப்போர்ட்டை அவனிடம் கேட்டு வாங்கிப் பார்த்துக்கொண்டிருந்தாள். வாசித்தாலே தவிர தெளிவாக எதுவும் புரியவில்லை, அவனிடம் விளக்கம் கேட்டு தொந்தரவு செய்யாது காலையில் செவிலியரிடம் கேட்டுக்கொள்ளலாம் என படுத்திருந்தவள் அப்படியே உறங்கியும் விட்டாள். 
மறுநாள் மறக்காமல் செவிலியரிடம் தனியாக வருணாவின் நிலை பற்றி விசாரித்து அறிந்து கொண்டாள் மேலும் மேற்சிகிச்சைகள் பற்றி மருத்துவரிடம் பேச வேண்டுமென முடிவு செய்தாள். 
இதற்கிடையில் வருணாவின் அறை இன்டீரியர் மற்றும் டெக்ரேஷன்களை மாற்றும் வேலையைத் தொடங்கினாள். “மகி இப்போ என்ன அவசியம்? நம்மை தவிர யார் வரப்போறா என் ரூம்புக்கு?” என வருணா கேட்கும் போதும், “என் திருப்த்திக்கு நான் செய்யுறேன், நீ கொஞ்சம் சும்மா இரு வரு” என அதட்டி அடக்கிவிட்டாள். 
அறையின் வண்ணம், வண்ண விளக்குகள், திரைச்சீலைகள், வருணாவின் கட்டில், மெத்தை, அத்தியாவசிகப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் என அனைத்தையும் வண்ணமயமாய் ரசனையோடு மாற்றினாள். முதலில் கண்டு கொள்ளாத வருணாவிடமும், “வால் பெயிண்டிங் இந்த கலர் நல்லாயிருக்குமா? இல்லை இதுவா?” எனக் கேட்க பதில் சொல்லிய பின் ஒவ்வொன்றுக்கும் கேட்கவே வருணாவும் ஆர்வமானாள். 
பகலில் அதிக வேலையில் அழுத்திக்கொள்ளவே இரவு அசதியில் விரைவாக உறங்கி விடுவாள். அனைத்திற்குமிடையில் ரிஷியை கவனிக்கவும் தவறவில்லை! ரிஷி உணவு பரிமாறுவது, உடை எடுத்து வைப்பது என அனைத்தும் அவளை சார்ந்தே இருந்தது. முன்பு போல் அல்லாது வீடு பற்றி கவலை இன்றி மகிழால் நிம்மதியாக இருந்தான் ரிஷி. 
ஆனால் அதற்கும் சேர்த்து தொழில் நேரம் கரைந்தது, மகிழை விட வெகு பிஸியாக இருந்தது ரிஷி தான். காலையில் வெகு நேரமாக சென்று விடுபவன் இரவு தாமதமாக தான் வருவான். வந்த பின்னும் வீட்டிலும் அலுவலக வேலைகளை தான் கவனித்துக் கொண்டிருந்தான். அன்னையின் இழப்பிற்கு பின் சற்றே சறுக்கி இருந்த தொழிலில் தற்சமையம் மேலும் கவனமோடு உழைத்தான். வேலை விஷியமாக காஞ்சிபுரம் செல்லும் போதெல்லாம் குணசீலனையும் பார்த்து விட்டு வந்தான். 
வருணா உறங்கிக்கொண்டிருக்கவே மாலை நேரம் மகிழ்நிரதி தோட்டத்து மரபெஞ்சில் அமர்ந்திருந்தாள். ஆதவன் மங்கி இருள் சூழவிருக்கும் நேரம், கையில் காஃபி கப்போடு சுற்றிலும் வேடிக்கைப் பார்த்தவாறு, மனதில் ரிஷியை எண்ணியபடி அமர்ந்திருந்தாள். 
அதே நேரம் தான் ரிஷியின் கார் உள்ளே வந்தது, மகிழ் அமர்ந்திருப்பதை கவனித்த ரிஷி வீட்டிற்குள் செல்லாது அவள் அருகில் வந்து சற்றே அவளை நெருங்கியபடி அமர்ந்தான். அதுவரையிலும் கவனிக்காது இருந்தவள் அவன் அருகாமை உணர்ந்து சட்டென திரும்பினாள். 
ரிஷி குறுநகையோடு அவளைப் பார்க்க, “வொர்க் முடிச்சிடுச்சா அதுக்குள்ள வந்துட்டீங்க?” என்றாள். ஏனென்றால் இத்தனை சீக்கிரம் வீடு திரும்புபவன் அல்ல என நன்கு அறிந்தவள். 
“இல்லை, கிளைன்ட்டோட டின்னர் மீட் இருக்கு, அதான் ரெடியாகணும்னு கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டேன்” என்க, “டீ எடுத்துட்டு வரட்டுமா?” எனக் கேட்டவாறு எழ முயன்றாள். 
“இல்லை வேண்டாம், டைமில்லை” என்றவன் அவள் கையிலிருந்த கப்பை வாங்கிக் கொண்டான். மென்சிரிப்போடு மகிழ் தலை குனிய, காஃபியை உறிஞ்சியவன் ரசனையாக அவளைப் பார்த்தான். 
மெல்லிய மூச்சோடு அவன்புறம் திரும்பிய மகிழ் அன்று தான் செய்த வேலைகளைப் பற்றி பேசத் தொடங்கி உடன் செலவு கணக்கையும் உரைத்தாள். அதுவரை அமைதியகாகக் கேட்டுக் கொண்டிருந்தவன், காலியான கப்பை கீழே வைத்துவிட்டு, “உஷ்..ஷ்..” என தன் உதட்டின் மீது விரல் வைத்துக்காட்டினான். 
மகிழ் அமைதியாகிவிட, “இப்போ யார் உங்கிட்ட கணக்குக் கேட்ட? நீ சொல்ல வேண்டிய அவசியம் தான் என்ன?” என்றான். 
என்ன தான் மகிழ் தற்போது அவன் மனைவியானாலும் அதற்கு முன் ஒருமுறை அவனால் காயம் கொண்டவள் அல்லவா ஆகையால், ‘இல்லை, அது நீங்க கோபப்படக்கூடாது, கல்யாணத்துக்கு முன்ன என் மேல உங்களுக்கு நம்பிக்கை கிடையாது தானே? அதை நீங்க உங்க அம்மாகிட்ட சொல்லும் போது நானே கேட்டிருக்கேன். அதான் சொல்லிடுறது நல்லது தான்னு இவ்வளவு நேரமா யோசிச்சி சொன்னேன்” என்றாள். 
“வாட்..நான்சென்ஸ், நான் எப்போ அப்படி சொன்னேன்? அதையும் நேர்ல பார்த்தேன்னு வேற சொல்லுற?” எனக் கோபமுடன் அவளை தன் பக்கம் திருப்பிக் கேட்டான். 
“இல்லை பூஜை அன்னைக்கு நான் வந்திருந்த அப்போ நீங்க தான் சொன்னீங்க, நான் கேட்டேன்” என மகிழ் சற்று நடுக்கிக்கொண்டு உரைத்தாள். 
“இங்க பாரு மகிழ், உரிமை இல்லாம எங்க வீட்டுல இருந்து ஒரு சின்ன ரோஜா பூவை கூட பறிக்காம திரும்பிப் பார்த்துட்டுப் போன உன்னை போய் நான் எப்படி அப்படி நினைப்பேன்? நம்பிக்கை இல்லைன்னு சொன்னது உன்னை இல்லை, ஏற்கனவே கஷ்டத்துல இருந்த எங்களை நஷ்டப்பட வைச்ச எங்க சொந்தங்களை நம்ப வேண்டாம்னு எங்க அம்மாவை தான் சென்னேன். அன்னைக்கு உன்னை குறிப்பிட்டு சொல்லவே இல்லை மகிழ்” என்றான் பொறுமையாக. 
நடப்பதுவும் நிஜம் தானா? கேட்பதுவும் உண்மை தானா? என அதிர்ந்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். ரிஷியிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பார்கவில்லை. அன்றைய நாட்களில் தன்னை திரும்பியும் பார்க்கவில்லை என எவ்வளவு வருந்தினேன், ஆனால் என்னை மிகவும் நுட்பமாக கவனித்துள்ளானா என எண்ணி வியந்தாள்! அதை விடவும் இத்தனை நாட்களாக சில நிமிடங்கள் முன் வரை அழுத்திக்கொண்டிருந்த பாரம் முற்றிலும் நீங்கியது போன்றிருந்தது. அவன் அன்னையை குறை கூறியதை தன்னை கீழாகப் பேசியதாக நினைத்துக்கொண்டு அவனை தவிர்த்துச் சென்று கொண்ட வேதனைகள் எல்லாம் மீண்டும் நெஞ்சை கனக்கச் செய்ய அப்படியே அமர்ந்திருந்தாள். 
எழுந்து சென்ற ரிஷி அதே தொட்டிச் செடியிலிருந்து ஒரு சிறு ரோஜாப்பூவை பறித்து வந்து அவள் முன் நீட்ட, மனம் நிறைந்து முகம் ரோஜாவாய் சிவந்து போனவள் தன் மென்கரங்களால் வாங்கினாள். நிமிர்ந்தவன் அவள் சிவந்த கன்னத்தை லேசாக வருடிவிட்டு மெல்லிய சிரிப்போடு உள்ளே சென்றுவிட, மகிழ் அங்கே சிலையாக அமர்ந்தாள். அவள் தான் அமர்ந்தாள் ஆனால் மனமானது விண்ணில் பறந்துக்கொண்டிருந்தது. 
வருணாவிற்காக சில உடைகள் வாங்கவென கடைக்கு வந்திருந்தாள் மகிழ்நிரதி. நேரமெடுத்து கவனமோடு தேர்வுசெய்து, பில் போட்டு வாங்கிவிட்டு வெளியில் வருகையிலே எதிரே வந்த ஒருவனின் மேல் இடித்துவிட்டாள். 
மன்னிப்பு வேண்டியபடி நிமிர்ந்தவள், “ஹே..மகி, எதிர்பார்க்கவேயில்லை. ஹொவ் ஆர் யூ?” என்ற குரலில் தான் அது சீனியர் ஸ்ரீதர் என்பதை அடையாளம் கண்டாள். கண்ணாடி இல்லாத கண்களும், சிகை அலங்காரமும் குறுந்தாடியையும் அவளால் அடையாளம் காண முடியவில்லை. ஆனால் அவன் குரல் மட்டும் அடையாளப்படுத்திவிட, அவளுக்குமே அது எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருந்தது. 
அருகே இருக்கும் காஃபி ஷாப்பிற்கு சென்று அமர்ந்தனர் இருவரும். முகம் மலர மகிழ் அவன் நலம் விசாரிக்க பதிலளித்தவன், “ஹேய், மேரேஜ் எப்போ ஆச்சு? இன்வைட் பண்ணவே இல்லையே?” என்றான் அவள் தோற்றத்தை கவனித்து. 
“இப்போ தான் கொஞ்ச நாள் முன்ன, திடீர்ன்னு அரேன்ஜ் செஞ்சிட்டதால யாரையும் இன்வைட் பண்ண முடியலை” என சிறு சிரிப்புடன் சமாளித்தவள் அவனை பற்றி விசாரித்தாள். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின் எதிர்பாராமல் பார்த்ததில் அத்தனை உற்ச்சாகம்! 
நேஷனல் யூனிவெர்சிட்டி ஆஃப் கலிபோர்னியாவில் பேராசிரியராக இருப்பவன், தற்ச்சமையம் விடுமுறையில் இந்தியா வந்துள்ளதாகவும் தங்கையின் வீட்டில் விஷேசம் என்றும் உரைத்தான். “மகி, உன் ப்ரண்ட்ஸ் எல்லாரும் எப்படியிருக்காங்க?” என்றான். 
கிடைப்பதற்கறிய பொக்கிஷமாய் கிடைத்த நன்முத்துக்கலான நட்புக்களை தவறவிட்டதை நினைத்து வருந்தி அமைதியானாள். “என்னாச்சு மகிழ்?” என்க, “நத்திங், காலேஜ் முடியவும் யாரும் என் காண்டேக்ட்ல இல்லை சீனியர்” என்றாள். 
“வாட்..ஏன் மகி?” என அதிர்ந்து கேட்க, “இல்லை சீனியர் நான் தான் மிஸ் பண்ணிட்டேன்” என்றவளுக்கு குரலே இறங்கியது. 
அதை உணர்ந்தவன், “சரி மகி, எல்லாம் இங்க தான் இருப்பாங்க. வாட்சாப்ல ஒரு மெசேஜ் போட்டா எல்லாரையும் பிடிச்சிடலாம்” என்க, இத்தனை நாட்களில் இதைக்கூட செய்யாமல் விட்டுவிட்டோமே என நினைத்தாள் மகிழ். 
மகிழ் தலையாட்ட, “கவலையே படாத மகி, இப்போ காலேஜ் க்ரூப்ல கேட்டு இருக்கேன், ஒன் ஹவர்ல உன் ப்ரண்ட்ஸ், கிளாஸ்மெட் எல்லார் நம்பரையும் கண்டுபிடிச்சி சொல்லுறேன்” என்றான் ஆறுதலாக. 
மகிழ் குறுச்சிரிப்புடன் தலையாட்ட, இருவருக்கும் ஆடர் கொடுத்திருந்த காஃபி வந்திருந்தது. காஃபியோடு இருவரும் கலகலப்பாய் பேசிக்கொண்டே இருக்க, மகிழின் கைபையில் சைலன்ட் மோடில் கிடந்த அவள் கைபேசியில் ரிஷிடமிருந்து வந்திருந்த பத்தாவது அழைப்பும் அவளால் கவனிக்கப்படவில்லை.  

Advertisement