Advertisement

தென்னவனும் தேன்யாழியும்

“உனக்கு என்ன கழுத? நீ சோறு ஆக்கி போடுற அழகுல தான் மாப்பிள்ளையும் என் பேத்தியும் மெலிஞ்சு போயிட்டாங்க.. என் மருமவளப் பாரு.. ஆடு மாடு வீடு அத்தனையும் அவ எப்படி பார்த்துகிறான்னு” என்று அமிர்தவள்ளி பாராட்டினார்.

மாமியார் பேசுவதை குந்தவை புன்னகையோடு கேட்க,

தேன்யாழி “முடியல” என்றாள்.

மாமியார் மருமகள் உறவு என்பது ஒரு கை ஓசை அல்லவே !அமிர்தவள்ளி சொல்வதை குந்தவை கேட்டுக் கொள்வாள். அதே போல் குந்தவை ஏதேனும் சொன்னாலும் அமிர்தவள்ளியும் கேட்டுக் கொள்வார்.

சிரித்துக் கொண்டிருக்கும் மகளைப் பார்த்து அமிர்தம், “என்னடி பல்லைக் காட்டிட்டு நிக்கறவ? போய் இலை அறுத்துட்டு வா..” என்று  விரட்ட

“அம்மோவ் விருந்து சாப்பிட வந்தவளை வேலை வாங்குற நீ” என்று பேசிக்கொண்டே வாழை இலை அறுக்கச் சென்றாள்.

சாப்பிட்டு முடித்தபின் தென்னவனிடம் செந்தூரன்,

“மாப்ள பெரிய கோவில் திருவிழாவுக்கு அந்திக்கு போயிட்டு வருவோமா?” என கேட்க.

தென்னவன் தேன்யாழியின் விழிகளில் விநாடி நேர சங்கமம்..

அவன் காதல் சொன்ன இடம்….

அவள் காதல் உணர்ந்த களம் அல்லவா?

ஞாபகங்கள் தாலாட்டிட… உடனே சம்மதமாக தலையாட்டினான் தென்னவன்.

செந்தூரன் குந்தவையைப் பார்த்து தலையசைக்க.. அவளும் புரிந்து கொண்டு அவர்கள் அறையினுள் சென்றவள் வருகையில் ஒரு நகைப்பெட்டியோடு  வந்தாள்.

அதனைக் கையில் வாங்கிய செந்தூரன் “புலிக்குட்டி இங்க வாங்க” என்று  பூந்தென்றலை அழைத்து அவள் கழுத்தில் மெல்லியதாய் இருந்த தங்க சங்கிலியை அணிவிக்க போக,

“அண்ணே ! என்ன இது அதான் காது குத்தையில இவளுக்கு நெறைய செஞ்சீங்களே… வேண்டாம்” என தேன்யாழி மறுக்க..

“இதெல்லாம் வேண்டாம் மச்சான்” என்றான்  தென்னவனும்

அமிர்தவள்ளியிடம் “பாரும்மா நீயி…” என தேன்யாழி குறைபட, அவர் தான் பூரிப்பில் இருந்தாரே,

“என்னத்த பார்க்க.. சங்கிலி தானே அதெல்லாம் என் மருமவ, அப்பவே காட்டிட்டா” என்று பேச

“ஆத்தா.. உன்னை” என்றபடி தேன்யாழி முறைக்க

“என்னடி முறைக்கிறவ? அவன் தங்கச்சி மகளுக்குத் தாய் மாமனா அவன் செய்றான்… இதுல என்ன தப்பு?”

தென்னவன் தன் மறுப்பினை மனைவியிடம் விழிகளினால் காட்டிட அவளோ விழித்துக்கொண்டு நின்றாள். அவனுக்கென வரதட்சனை எல்லாம் வாங்காதவன். ஆனால் குந்தவைக்கும் செந்தூரனுக்கும் அனைத்தும் முறையாய் செய்தான்.

அவன் கொள்கைகள் அவனோடு !

பூந்தென்றலுக்குக் கொடுப்பதையும் அவன் மறுத்திருக்க மாட்டான். ஆனால் சமீபத்தில் தான் காது குத்து விழா நடத்தி அதில் தாய் மாமனாய் சீர் செய்தான் செந்தூரன். அதனாலேயே தென்னவன் மறுக்க, அதைக் கண்டு குந்தவை

“அதை இங்க கொடுங்க” என்று கணவனிடம் கேட்டு வாங்கியவள் தென்னவனைப் பார்த்து

“ இது அத்தையா நான் என் அண்ணன் பொண்ணுக்கு ஆசையா போடுறது..” என்று சொல்லி பூந்தென்றலின் கழுத்தில் நகையை மாட்டிவிட்டாள்.

அவள் அப்படி சொல்லிவிட அண்ணன் வாய்திறப்பானா என்ன?

தேன்யாழி தான், “எதுக்கு செலவுடி?” என்று கேட்க,

“என்ன செலவு? நெல்லு வித்தாரு…. லாபம் தான்… தோணிச்சு வாங்கினோம். இதைப் பத்தி இனி பேசாத” என முடித்துக் கொண்டாள் குந்தவை.

கோவிலுக்குக் கிளம்ப வேண்டி அனைவரும் தயாராக, தென்னவன் தன் காரிலே எல்லாரும் போகலாம் என்று சொல்ல,

“நோப்பா.. நான் மாமா கூட டுர்ல தான் போவேன்” என்று செந்தூரனின் புல்லட்டில் போக வேண்டும் என பூந்தென்றல் அடம் பிடிக்க,

அருள்மொழியும் “நானும் அப்பா கூட” என்று சொல்ல

செந்தூரன், “சரி நான் பிள்ளைங்க கூட பைக்ல வரேன்  மாப்ள” என்று சொல்லவும் குந்தவை தன்னை அழைத்துச் செல்லவில்லை என அவனை நன்றாய் முறைக்க,

“ஏய் குந்தவை டக்குனு வா… நேரமாகுது” என்று சொல்லவும் தான் குந்தவை முகம் மலர்ந்து போனது.

குந்தவை, குழந்தைகளோடு செந்தூரன் தன் புல்லட்டில் செல்ல.. தேன்யாழியும் தென்னவனும் தனிப்பயணம் தங்கள் காரில்…

இராஜகோபாலனை வணங்கிவிட்டு செங்கமலத்தாயாரை வணங்கையில் தென்னவன் பார்வை நிறைவை சுமந்தபடி தன்னவளைப் பார்க்க.. தலைவி விழியும் தலைவன் வழியில் தான்.

குழந்தைகள் முன்னே ஓட செந்தூரன் அவர்களையும் குந்தவையையும் பார்த்துக் கொண்டு இருக்க,

“ஹே ராஜாத்தி! குங்குமம் வெச்சு விடுடி..” என்ற தென்னவன் பேச்சில் தேன்யாழி சுற்றும் முற்றும் பார்க்க,

“என்ன பார்வை? ஊரே பார்த்தாலும் இப்ப வைச்சு விடுற நீ” என்று தென்னவன் மிரட்ட,

“என்ன இன்ஸூ… ஒரு காலத்துல இங்க எனக்காக தேவுடா இருந்துட்டு.. இப்ப பேச்சைப் பாரேன்” என்று இடுப்பில் கைவைத்து முறைக்க…

அவள் முறைப்பில் உடனே தணிந்தவன்,

“என் செல்ல ராஜாத்தில… வைச்சு விடுடி” என்று கொஞ்சலாய் சொல்கையில் மனைவிக்கு மறுப்பேது?

குழந்தைகளை யானையிடம் தூக்கிச் சென்ற தென்னவன் தேன்யாழியையும் குந்தவையையும் அழைக்க,

“போடா… எனக்கு பயம்” என குந்தவை உட்கார்ந்து கொள்ள, செந்தூரனும் துணைவிக்குத் துணையாய் அவள் அருகில்.

தேன்யாழி அருள்மொழியைப் பிடித்திருக்க.. தென்னவன் மகளைத் தூக்கிக் கொள்ள மனைவியிடம் ஒரு மயக்கும் பார்வை வீசியவன் மகளிடம்,

“பேபி இந்த செங்கமலம் பேபி கிட்ட அப்பா வேண்டிகிட்டு தான் நீங்களும் அம்மாவும் கிடைச்சீங்க.. உங்களுக்கும் எதாச்சும் வேணும்னா வேண்டிக்கோங்க” என்று சொன்னான்.

“மாமா அப்போ எனக்கு பூக்குட்டி மாதிரி தங்கச்சி பாப்பா வேணும்னு வேண்டிக்கவா?” என்று அருள் கேட்க,

“வேண்டிக்கோ அருள்” என தேன்யாழி சொல்ல,

“அப்போ எனக்கும் அருள் மாதிரி அண்ணா வேணும்” என்றாள் பூந்தென்றல்.

“உனக்கு தம்பி இல்ல தங்கச்சி பாப்பா தான் வருவாங்கடா பேபி.. நீங்க பெரிய பொண்ணு ஆச்சே” என்று மகளுக்குத் தென்னவன் எடுத்து சொல்ல, சில வருடம் முன் அவன் சொன்னது போலவே செங்கமலத்திடம் அவன்  பேபியோடு நின்று ஆசீர்வாதம் வாங்கினான்.

பின் திருவிழாவுக்கென்றே பிரத்யேகமாய்ப் போடப்பட்டிருக்கும் இராயல் தோட்டத்தில் உள்ள இராட்டினம், பாம்பே அப்பளம், மிளகாய் பஜ்ஜி என்று திருவிழாவின் அத்தனை அமசங்களையும் குடும்பத்துடன் அனுபவித்தனர்.

வரும்போது பனி பொழியும் என்பதாலும், குழந்தைகள் வேறு தூங்கி வழிந்ததால் குந்தவையையும் காரிலேயே வரச் சொன்னான் செந்தூரன்.

இரவு உணவினை முடித்துக் கொண்டு தென்னவனும் தேன்யாழியும் பூந்தேன்றலோடு அவர்கள் வீட்டிற்குச் சென்றனர்.

தென்னவன் தேன்யாழிக்காக வாங்கிய கயிற்றுக் கட்டிலைத் தூக்கி வந்து திண்ணையில் போட.. உடனே தந்தை மேல் தாவி ஏறியது பூந்தென்றல்.

“என்னடா பேபி மாமா வீட்ல ஜாலியா இருந்துச்சா?” என்று இவன் விசாரிக்க,

“ஜாலி ஜாலியா இந்துச்சுப்பா.. மாமா என்னை சீ சா பண்ணினாங்களே..” என்ற தென்றலின் மொழியில் தென்னவன் விழிக்க, தேன்யாழி மகளை தன் மேல் வைத்து அம்மாச்சி அரிஹோரம் என்று சொல்லிக் காட்ட,

தென்னவனோ, “என் ரேஞ்சுக்கு வாலிபால்… பாஸ்கட் பால் தான் டி தெரியும்” என்று சொல்ல

“சரிங்க சார்” என்றாள் இவளும் விழியும் இதழும் மலர்ந்தபடி.

“நான் அப்பாகிட்ட” என்று தென்றல் மீண்டும் தென்ன்வனிடத்தில் தாவிட மகளை மடி சேர்த்தான் தென்னவன்.

தென்னவனும் தேன்யாழியும் பூந்தென்றலும் இருக்கும் அந்த சுகானந்த ஏகாந்தம் தென்னவனுக்கு மிகவும் பிடித்தம்.

மகள் அப்படியே உறங்கிட, அவளை உள்ளே தூக்கி சென்று மெத்தையில் மெதுவாய் விட்டவன், அப்படியே தரையில் பாய்விரித்துப் படுத்துக் கொண்டு,

“மை டியர் ராஜாத்தி ! மாமனுக்கு கொஞ்சம் முதுகு வலி கொஞ்சம் மிதியேன்..” என்று குறும்பாகக் கேட்க

“அதுக்கென்ன நல்லா மிதிச்சிட்டாப் போச்சு.. உங்க தொங்கச்சி என்னைக் கிண்டல் பண்ணி தள்ளிட்டா.. இனி மிதிக்கிற மிதியில மிதின்னு  சொல்லி கேட்பீங்க நீங்க?” என்று அவன் முதுகில் ஏறிக் கொள்ள,

“ஹா… ஹா” என்று சிரித்தவன் அவளை அப்படியே இழுத்து கீழே தள்ளி அவன் தலைக்குக் கீழ் பாதுகாப்பாய் தன் கைகளை வைத்து அணைத்துக்கொண்டான்.

பிறகென்ன ?

தென்னவனும் தேன்யாழியும் தென்றல் காற்றும் கூடிட.. பொழிந்தது காதல் தேன்மழை !

ஆகாச வீடு கட்டும்

உன் கண்ணிலே

சின்னூண்டு கூடுகட்ட

வந்தேன்.

சங்கீத பாதங்களின்

பேரோசையில் சொக்கி

உன்னோடு வாசல் வரை

வந்தேன்.

மென் ஆம்பல் புன்னைகையின்

பேரன்பிலே

விண்மீனில் வீடெடுப்பேன்

இன்றே

உன்னை காணவே

ஆசை ஒவ்வொன்றும்

ஒற்றை காலில் நின்றெங்கும்

அதற்காகவே ..

வாசல் படியோரம்

எந்தன்  வாழ்க்கை குடியேறும்

       

Advertisement