Advertisement

காதல் 5:

 

“அண்ணா…ப்ளீஸ்ணா…என்னை மன்னிச்சிடு…ஐ அம் ரியலி சாரி…” ரியா அரை மணி நேரமாய்க் கெஞ்சிய போதும்,

 

அதியன் அசையவே இல்லை.மனதின் அழுத்தம் மன்னிக்க விடவில்லை.

 

“அண்ணா… ….ப்ளீஸ்னா…உங்கள பார்க்காம பேசாம இரண்டு வருசம் இருந்ததே எனக்குத் தண்டனை…இப்ப பார்த்தும் பேசாம என்னைக் கஷ்டப்படுத்தாத..ப்ளீஸ்..…பேசுண்ணா…”

 

“………………….”

 

“அண்ணா…என்னை மன்னிச்சுடுண்ணா..இல்லனா அடிக்காவது செய்…ஆனா இப்படி அமைதியா இருக்காத…..ப்ளீஸ்…” என அவள் அத்தனையாய் அழுத போதும் இளக்கம் காட்டவில்லை அவன்.

 

‘இவ்வளவு தூரம் அழறா…பெரிய இவன் சீன் போடுறான்…’ என ஐராவுக்குக் கோபம் வர,அடக்குபவளா அவள்,

 

“அவ தான் இவ்வளவு தூரம் கெஞ்சறாளே…பேசினா என்ன உனக்கு….?..” என கொஞ்சம் கோபமாய்க் கேட்க,

 

“ஐரா..இட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸீனஸ்…..அவங்க அவங்க இடத்தில் இருந்தா அவங்க கஷ்டம் புரியும்..” அதியன் பதில் கொடுக்க,

 

“ஓஓ…அப்போ அதே தான் எல்லாருக்கும்……அவ இடத்தில் இருந்தா தானே அவ கஷ்டம் தெரியும்…”

 

“டோண்ட் ஆக்ட் ஸ்மார்ட்…..ஐரா…..இவ இடம் என்ன பெரிசு….முழு சுய நலம்..” என்றதும் இன்னும் இன்னும் ரியாவின அழுகைப் பெரிதாக,

 

“எஸ்..சுய நலம் தான்….அதனால என்ன…?அடுத்தவங்களை நேசிச்சு வாழனும்..ஆனா அடுத்தவங்களுக்காக வாழக்கூடாது…இட்ஸ் நாட் செல்ஃபிஷ்னெஸ்..இட்ஸ் செல்ஃப் லவ்….அவ செஞ்சதை அவ விளக்கி சொல்ல ஒரு சான்ஸ் கொடு…அவ பக்கம் இருக்க நியாயத்தையும் கொஞ்சம் கேளு…சும்மா கத்தாத..”

எரிச்சலோடு ஐரா சொல்லிக் கொண்டே போக

தனது கையை நீட்டி ‘போதும்’ என்பதாய் அவளை முறைத்த அதியன்,

 

“என்ன நியாயம்…எதுடி நியாயம் அவ பக்கம்..கேட்க சொல்ற…எதாச்சும் சொல்லிடப் போறேன்…போடி..” என திமிரோடு பேச

 

“எல்லாருக்கும் நியாயம் உண்டு அதியன்…அவளையும் பேச விடுடா. அண்ட் யூ..டோண்ட் ஆக்ட் ஓவர் ஸ்மார்ட்….எதுவும் தெரியாம சீன் போடுறான்..” இவள் கடைசியில் மெதுவாய் முனுமுனுக்க,

 

“என்னடி சீன் போடுறேன் நான்..?” என அவன் இன்னும் கோபம் கொள்ள,

 

“சீன் தான் போடுற…எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமா நீ..அரை மெண்டல்…” என ஐராவும் எகிற,

 

ரியா தான் எங்கே இவர்கள் இன்னும் மோதிக் கொள்வார்களோ என பயந்து ஐராவிடம் பேசினாள்.அதியனிடம் பேசிட முடியுமா என்ன..?

 

“ஐரா ப்ளீஸ்… நான் தப்பு செஞ்சேன்…அண்ணா கோபமா இருக்கார்…நீ கொஞ்சம் அமைதியா இரு…ப்ளீஸ்” என அழுதபடி சொல்ல,

 

ஐராவுக்குள் கோபம் பற்ற,

“ஆமா….ஆமா…நீ தப்பு செஞ்ச..அவன் உன் மேல கோபமா இருக்கான்..நான் யாரு உங்களுக்கு நடுவுல..எப்படியோ போய்த் தொல..” என்றவள் கோபமாய் வீட்டிற்குள் சென்று ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

 

‘எதும் செய்யலன்னாலும் பேச்சு வாங்குறேன்..எதாவது செஞ்சாலும் பேச்சு வாங்குறேன்…முதல்ல எல்லாரையும் வைச்சு..செஞ்சிரனும்ம்ம்ம்ம்..’ என கடுப்போடு நினைத்துக் கொண்டாள்…

 

ஐரா சென்ற பின்னும் ரியா அண்ணா அண்ணா..என அழுதபடியே இருக்க,அப்போதும் அதியன் இளகவே இல்லை.

 

எத்தனையாய்த் துடித்திருப்பான்..தவித்திருப்பான்…பயந்திருப்பான்..அமைதியான தங்கை யாரிடம் மாட்டி எப்படி அவதியுருகிறாளோ என அவன் பயந்த நொடிகள் கண் முன்னே வந்து போயின…

 

எத்தனை அவமானங்கள்,ஏச்சுப்பேச்சுகள் அதையெல்லாம்  விட எத்தனை பெரிய நம்பிக்கைத் துரோகம்…..???

 

இப்படியே அழுதவள் ஒரு கட்டத்தில் உடல் நிலையால் வாந்தி எடுக்க,அத்தனை கோபம் இருந்த போதும் தமையனாய் தங்கையின் தலைத் தாங்கினான்.அவள் வாந்தி எடுத்து முடித்ததும் தண்ணீர் எடுத்து வர,இவன்  நகர அவளோ அவன் சட்டையை பிடித்தவள்,

 

“சாரிண்ணா…” என துவங்க,அவள் கையை விலக்கியவன்,

 

“ப்ச்….இரு.” என்றபடி பரபரப்பாய் உள்ளே நுழைய,ஐரா சோபாவில் இருந்து இறங்க,

 

உள்ளே வந்தவன் வேகமாய்,

“ஹேய்……..ஹாட் வாட்டர் வேணும்… ரியா வாமிட் பண்ணிட்டா” என்றபடி கிச்சனுக்குள் செல்ல,வேகமாய் அவன் பின்னே போனவள் ப்ளாஸ்கில் இருந்து வென்னீரை ஊற்றி  எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.அப்படியே சுவற்றைப் பிடித்துக் கொண்டு ,கண்ணீரானாலும் மசக்கையினாலும் வாடிப்போயிருந்தாள் ரியா.

 

தலையைப் பிடித்துக்கொண்டு,கண்ணீல் இருந்து நீர் வழிய,அவன் தங்கை அமர்ந்திருந்த கோலம் அதியனை வெகுவாய் உலுக்க,ஐரா டென்ஷனோடு,

 

“என்னாச்சு..ரியா…என்ன செய்யுது….டேய்….இவளுக்கு இப்படி ஆகற வரைக்கும் என்ன டா பண்ண…?கன்சீவா இருக்கவளைப் போய் படுத்தி எடுக்கிற..” என அதியனிடம் கத்த, அப்பொழுதுதான் தங்கையின் உடல் நிலையின் காரணம் அவனுக்குப் புரிந்தது.

 

மனதில் கோபம் புயலாய் வீசிய போதிலும் இதைக் கேட்டதும் மென் காற்றும் மெல்லிய மழைச்சாரலுமாய் இவன் இதயத்திற்கு இதமளித்துச் செல்கிறது உணர்வொன்று.

 

கருவில் தரிக்கும் உயிரானது அனைவரின் உள்ளத்துக்கும் உவகையளிக்க தவறுவதே இல்லை…..குழந்தைகள் வரம் தானே..!

 

ஐரா அதியனோடு சண்டையிடுவதைப் பார்த்து ,“அ…ண்…ணாவ ..ஒன்…னும் சொ…ல்லா….த..” என ரியா அந்த நிலையிலும் சொல்ல,

 

“ஏம்மா..தாயே உன் நொண்ணனை ஒன்னும் சொல்ல…மாட்டேன்…நீ பேசித் தொலையாத…உன் வீட்டுக்காரன்  வந்தா இன்னும் என்னை டென்ஷன் செய்வான்….வா முதல்ல வீட்டுக்குள்ள போவோம்..” என அவளை எழுப்ப முயற்சி செய்ய,ரியாவோ துவள,அதியன் தங்கையைத் தாங்கினான்.

 

அவளை வீட்டில் ஸோபாவில் வசதியாய் அமர வைத்து,தேவையானதை செய்து கொடுத்தனர் ஐராவும் அதியனும்.

 

ரியா அப்போதும் அழ,ஐராவுக்கு என்ன செய்யவென தெரியவில்லை.அதியன் தான் தங்கையின் தாயாகப் போகும் நிலையால் கொஞ்சம் நெகிழ்ந்திருக்க,

 

“ப்ச்..…விடு….அழாத..” என சொல்லி அவள் கையைப் பிடித்துக் கொண்டு சோபாவில் அமர,

 

“சாரிண்ணா.”

 

“இந்த மாதிரி டைம்ல…டென்ஷன் ஆகாத…..லிவ் இட்” என அவன் சொன்னான்.அக்கறையாக சொன்ன போதிலும் ஒரு ஒட்டாத தன்மை‌தான் அவன் பேச்சில்..

 

அதியனின் மனதில் கொஞ்சம் இளக்கம் தோன்றியிருந்தது.ஆனால் அவனுக்கு அதீத வருத்தமும் கொஞ்சம் கோபமும் கூட அவனும் மனிதன் தானே..?!

 

அதுவும் அன்பான அண்ணன்…!எத்தனைத் தூரம் கோபத்திலும் கசப்பிலும் மனம் பாகற்காயாய் கசந்தாலும் சில கணங்கள் பாசத்தில் பாகாய் உருகிடத்தான் செய்கிறது.அந்த அன்பு என்ற ஜீவ நதி தான் வாழ்வில் வருத்தங்கள் இருந்தாலும் வசந்தங்கள் வீசச் செய்கிறது.

 

“குழந்தைன்னு நினைச்சேன்….இப்ப நீயே ஒரு குழந்தையை சுமக்கிற…” சாதாரணமாய் அவன் சொல்ல,

 

ரியாவுக்கு குற்றமுள்ள நெஞ்சல்லவா..?குறுகுறுத்தது….

 

“அண்ணா….அப்போ….எ…ன….க்கு வேற வழி தெரில…”

 

“வேண்டாம்  எல்லாம் முடிஞ்சு போச்சு..இப்ப பேசினா மறுபடியும் கஷ்டம் தான்…” என அவன் அவளின் கண்ணீரைத் துடைக்க,

 

ஐராவோ ரியாவின் டென்ஷனைக் குறைக்க வேண்டி,

“அட அட…சிவாஜி காலத்துலேர்ந்து இந்த  சீனை மாத்த மாட்றீங்களேடா…நீ அழுவ…அவன் துடைக்க..ஒரே கூத்தா இருக்கு,…” என கிண்டல் செய்ய,

 

தனியாய் ஒற்றை சோபாவில் அமர்ந்திருந்த ஐராவை முறைத்த அதியன்,எக்கி அவளது தலையில் கொட்டினான்.

 

“போடாங்க்க்க்க்க்” என அவள் சொல்கையிலேயே காலிங் பெல் ஒலியெழுப்ப, ஐரா தான் ,

 

“ஆபிசரா தான் இருக்கும்..” என சொல்லி கதவைத் திறக்க,சத்ரியன் தான் நின்றான்.இவளை இந்த நேரத்தில் எதிர்ப்பார்க்கதவனாய்,

 

“என்ன…என்னாச்சு…ஐரா…இப்ப வந்திருக்க…?” என கேட்டுக்கொண்டே தன் ஷூவைக் கழட்டி முடித்து வீட்டுக்குள் வர,

“உங்க ஆத்துக்காரிக்குக் கொஞ்சம் முடியலங்க ஆபிஸர்…அதான்..” என சொல்லவும் இவன் ஹாலில் உள்ள அதியனையும் அவனருகில் சோர்வாய் இருந்த அவன் ஆத்துக்காரியும் பார்த்து கொஞ்சம் ஜெர்க்கானான்.

 

அதியனைப் பார்த்தவுடன் என்ன செய்ய …என்ன பேசவென தெரியவில்லை…ஆனாலும்…

 

“வாங்க அதியன்….எப்படி இருக்கீங்க..?” என வரவேற்க,அதியனும் முறைக்கவெல்லாம் இல்லை.அவன் உரிமை..எல்லாம் தங்கையிடம் தான்..அவளிடம் தானே கோபிக்க முடியும்..அதுவும் இனி இவர்களோடு நல்ல உறவு வைத்துக் கொள்ள தானே வேண்டும்…முழுதாய் வெட்டி விடும் எண்ணமெல்லாம் அவனிற்கு இல்லையே….ஆகையால் அவனுமே,

 

“நல்லா இருக்கேன் சத்தி.. நீங்க எப்படி இருக்கீங்க..?” என கேட்க,

 

“ஹ்…ஹான்…ஃபைன்..” என்றபடி மனைவியைப் பார்த்தவன் அதன் பின் மற்றவர்களைப் பார்க்கவே இல்லை.ஆம்..அவளின் சோர்ந்த முகமும்,அழுத விழிகளும் அவனை அசைத்துப் பார்க்க,குடுகுடுவென அவள் அமர்ந்திருந்த ஸோபாவின் அருகில்  வந்தவன் அவளுக்குக் கீழே தரையில் அமர்ந்து,அவளின் கைப்பற்றி,

 

“என்னடா….செய்யுது….?” என பதட்டமாய்க் கேட்க

 

“ஒன்னுமில்லங்க….லைட்டா வாமிட் செஞ்சிட்டேன்…ஒரு மாதிரி இருந்துச்சுன்னு இவட்ட போன்ல சொன்னேன்..இவ  நேர்லேயே  வந்துட்டா…” என சொன்னாலும்,

 

“டாக்டர்ட்ட போவோமாடா….நமக்கு இதெல்லாம் சரியா தெரியாதுதானே…டாக்டரா பார்த்தா பெட்டரா ஃபீல் செய்வியோ என்னமோ….?”

 

அவன் கரிசனம் அவன் கொண்ட காதலினால்..அதை அவளும் அறிவாள்..காதல் சொல்லி..மிரட்டி திருமணம் செய்தது தான் அவள்..சில மாதங்கள் முட்டிக் கொண்டும் முறைத்துக் கொண்டும் இருந்தாலும் அதன் பிறகு..அதீத காதலும் நேசமும் தந்தவன் அவன் தான்.அனாதயாய் இருந்தவனுக்கு அனைத்துமாய் அவளாகிப் போக அவளை உயிராய் வைத்துப் பார்த்துக் கொண்டான்.

 

“இல்லங்க….நான் நல்லா இருக்கேன்…ஐரா நீயாச்சும் சொல்லேன்..” அவன் மனம் படும் பாடு அவளுக்கு புரியாமலா…?கணவனின் காதலினால் விளைந்த பதட்டம் அவளயறிய  மாட்டாளா?ஐரா சொன்னாலாவது அவன் அமைதியடைவான் என சஷ்ரியா சொல்ல,

 

ஐராவோ “சத்தி…அவளுக்கு ஒன்னும் இல்ல…டா..அவங்க அண்ணனைப் பார்ததும் மேடமுக்கு சக்தி வந்துடுச்சுடா…இவ்வளவு நேரம் இங்க பாசமலர் பார்ட் 2 ஓடுச்சு. யூ நோ..” என  நண்பனுக்கு ஏற்ற வகையில் பேச ,சத்ரியனோ,

 

“ஓ….இப்ப ஓகே தானடா..சஷிம்மா…” விழிகள் வினா வைக்க,அதனோடு கொஞ்சம் காதலும் கலந்து கொள்ள கரிசனமும் கனிவுமாய் அவன் கேட்க அதையெல்லாம் காணும் அதியனுக்கு எப்படி இருக்கிறதாம்..?

 

அவன் ரியாவின் காலின் அருகே அமர்ந்த போதே அதியன் பாதி ப்ளாட்…அவன் அப்பா பார்த்த மாப்பிள்ளையும் நல்லவன் தான்..ஆனால்  இப்படி இந்தளவு மனைவியை தாங்குவானா..? என்ற கேள்வி உதயமானது.சத்ரியன் ரியாவுக்கு சாதாரண வாந்திக்கே இப்படி துடிக்கிறான்..அதுவும் அவன் தங்கை கணவனைக் கண்டதும் அவள் முகத்தில் இருக்கும் இந்த ப்ரகாசமும் பரவி இருக்கும் பரவசமும் அவனுக்குப் பல கதைகள் சொன்னது.

 

ஆனால் அது சொல்லாமல் விட்டது சத்ரியன் ரியாவைக் காதலித்து மணக்கவில்லை..மணந்தபின் தான் காதலித்தான் என்பதை..ஆமாம் இன்னமும் அவனிடம் யாரும் உண்மையை சொல்லவே இல்லையே…

 

அவர்களின் தனிமைக்கு இடையூறாய் இருக்க வேண்டாமென நினைத்தவன்,ஐராவைப் பார்க்க அவளோ ஸோபாவில் உட்கார்ந்து கொண்டே தூங்கினாள்…தூக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு முழிப்பதும் உறங்குவதுமாய் இருக்க,

 

“சரி….நாங்க கிளம்புறோம்..லேட்டாச்சு” என சொல்ல,ஐரா இப்போது அட்டென்ஷனில் வந்து எழுந்து நிற்க,

 

சத்ரியனோ அப்போதுதான் கீழே இருந்து எழுந்து“சாப்பிட்டுப் போங்க…அதியன்..” என சொல்ல

 

“மணி…2 ஆகப்போகுது சத்தி….அன்டைம்ல எதுவும் சாப்பிட மாட்டேன்…”

 

ரியாவுக்கோ இது  நிரந்தரமா இல்லை நிகழ் காலத்தில் நிகழும்  தருணமா என தெரிய வேண்டி இருந்தது,அதியன் உண்மையில்  அவளை ஏற்றுக்கொண்டானா….என

 

“அ..ண்ணா…” என அவள் ஆவலும் அதை விட அதீத பயமுமாய் அழைக்க,

 

“உடம்பைப் பார்த்துக்கோ…அடுத்த தரம் வரச்ச…அம்மா அப்பாவை அழைச்சிட்டு வரேன்..” என்ற போதிலும் அவள் அண்ணன் இப்படி பேச மாட்டான் என ரியா அறிவாளே…எப்போதும் தங்கையிடம் பேசுகையில் தானாய் ஒரு புன்னகை அதியனின் முகத்தில் தோன்றி விடும்….இப்படி யாரிடமோ பேசுவது போல் பேசமாட்டான்.அகம் அத்தனையாய்க் காயம் பட்ட போதும் விரைவில் அனைத்தும் சரியாகிட வேண்டும் என வேண்டி கொண்டாள்..

 

பின்னர் இவர்கள் கிளம்பி காரில் வரவும்,ஐரா தான் முதலில் பேசினாள்.அவளுக்கு அதியன் மேல் உள்ள கோபம் கொஞ்சம் குறைந்திருந்தது.அவனுக்கு சத்ரியனின் வீடு தெரிந்ததிலிருந்து ரியாவைக் கண்கானித்து வந்திருக்கிறான் என அவளின் அறிவு சொல்லியது.ஆனாலும் அவளை முதலில் அடித்து பழி சொல்லியது அவன் தானே என்ற கோபம் மிச்சமும் மீதியுமாய் இருக்கத்தான் செய்கிறது.அது தனி ட்ராக் என ஒதுக்கியவள் அவனிடம் எப்போதும் போல் பேசினாள்.

 

“ரியாட்ட சொன்ன மாதிரி அத்தையும் மாமாவையும் அழைச்சிட்டு வரப்போறியா…?”.

 

லேசாக முகம் திருப்பி இவளைப் பார்த்தவன்,

“.ம்ம்ம்” என்க

 

“என்ன தீடீர்னு மாற்றம்..? அங்க சத்தியும் ரியாவும் ஓட்டின ரொமான்ஸ் படத்துல தானே மனசு மாறின…உண்மையை சொல்லுடா…ஐ நோ….. நீ சத்தியை ரொம்ப நேரம் வாட்ச் பண்ணிட்டே இருந்த…”

 

“ச்சீ…கழுத…என்ன ரொமான்ஸ்..?வாயை அடக்கு…” என அதட்ட

 

“ஓ…ஐ அம் சாரி…நீ முரட்டு சிங்கிள்னு எனக்குத் தெரியாது..” என இவள் உதடு பிதுக்கி கேலியாய் சொல்ல,

 

,”ஏன் டி நான் முரட்டு சிங்கிளா…?” என தலையில் தட்ட வர,

 

“டேய் அடிச்ச..பிச்சிடுவேன்…அப்போ நீ சிங்கிள் இல்லனா…யாராச்சும் கரெக்ட் செய்திட்டியா…?”

 

“வாய் இருக்கே…உனக்கு…..ஏன் டி அங்க நடந்தது ரொமான்ஸா? உன்னையெல்லாம் கட்டிக்கப்போறவன் பாடு கஷ்டம் தான்..”

 

“ஓய்..என்ன நக்கலா…என்னைக் கட்டிக்கபோறவன் பாவமா.. நீதான் டா பாவமா ஆகப்போற….உனக்கு ஆத்துக்காரியா வரப்போறவட்ட நீ அடி வாங்கி வாங்கி ஒரு அடிதாங்கியா ஆகல…..ஆகல..என்ன…?ஆவே….உனக்கு சாபம் தரேன்…” என முறைப்பாய் சொல்ல,

 

“சாபம் தரவள பாரு…அவ அடிச்சா நானும் அடிப்பேன்…அது எங்க பிரச்சனை….” என்றவன் பின் சீரியசாய்

 

“தேங்க்ஸ் ஐரா..” எனவும்

 

“எதுக்கு,..?”

 

“இல்ல…அவளுக்கு உடம்பு சரியில்லனதும்….இந்த நேரத்திலேயும் வந்த பாரு..அதான்..ஆனாலும் நீயும் கொஞ்சம் கேர்புல்லா இருக்கனும் ஐரா…உனக்கு சொல்ல வேண்டியது இல்ல..ஆனாலும் நாட்டுல நடக்கிறதுல..நீ உன் சேஃப்டியும் யோசிக்கனும் இல்ல…”

 

ஐரா மீது அதியனுக்குக் கோபம் இருந்த போதிலும் அது இப்போது மட்டுப்பட்டிருந்தது.அவர்கள் செய்தது தவறு தான் என்ற போதிலும் மனம் மன்னிக்கக் கற்றுக்கொண்டது.ஓடி போனவள் ரியாவாக இருக்க உதவி செய்த ஐராவை நொந்து என்ன செய்ய? என்ற நிலைக்கு வந்திருந்தான்.

 

“ஸேஃப்டி தானே…………….” என இழுத்தவள் தனது பாண்ட் பாக்கெட்டில் இருந்து சிறிய பிஸ்டிலை எடுத்து அதியனின் நெற்றியில் வைத்து,

 

“ஹேண்ட்ஸ் அப்..” என சொல்லவும்,அவளின் அதிரடி செயலில் கார் தாறுமாறாய் ஓட,தன்னை நிலைப்படுத்தி ப்ரேக்கை அழுத்தினான்.

 

“ஹே…இடியட்….” என அவன் கத்த

 

“ஹாஹா..” என அவள் அவனின் பயந்த தோற்றம் கண்டு சிரித்தவள் அவன் தலையில் இருந்து பிஸ்டலை எடுத்து,தனது பாக்கெட்டுக்குள் சொருகியவள்,

 

“லைசென்ஸெட் கன்….இப்படி நைட்ல வரப்ப கண்டிப்பா என் கூட எடுத்துட்டு தான்  வருவேன்..ஆனா ஒன்னு அதியன்…இப்படி பாதுகாப்பா இருக்க சொல்றதை விட பொண்ணுங்களை தைரியமா இருக்க சொல்றது பெட்டர்…” என்க

 

“ம்ம்..எஸ்…யூ ஆர் ரைட்…ரௌடி தான் டி நீ…பட் குட்..” என அவள் செயலை மெச்சினான்.

 

“சரி…சரி..அதை விடு…கண்டிப்பா அத்தை மாமாட்ட பேசுவ தானே..இல்லன்னா ரியா ரொம்ப ஃபீல் செய்வா” என சோகமாய் சொல்ல

 

“கண்டிப்பா பேசுவேன் டி..நாளைக்கே சென்னைப் போகனும்….

 

 

பதினைந்து நாட்களுக்குப் பிறகு,

 

“ஏன்..ஐரா…உன் அத்தான் எப்போ வருவாரு…” என ஆர்வமாய் ப்ரவீணா விசாரிக்க,

 

“ஏன்…”

 

“இல்ல..அந்த மின்சாரக் கண்ணன் இல்லாம..நம்ம ஆபிஸே மின்சாரமே இல்லாத மாதிரி டல்லா இருக்கு…” என சொல்லவும்,

 

“அப்படிங்களா மேடம்…மின்சாரக் கண்ணனுக்குப் போன் போடுறேன்..பேசி கூப்பிடுறீங்களா..?” என போனைக் கையில் எடுக்கவும்,ஐரா செய்தாலும் செய்வாள் என பயந்தவள்,

 

“ஹேய்.. வை திஸ் கொலவெறி டி…?ஏதோ சும்மா கலாய்ச்ச நீ என்னடான்னா…அவரைப் பார்த்தாலே எனக்குப் பேச்சு வராது…அப்படியோ ஒரு ஸ்டிரிக்ட் நெஸ் இருக்கு அவர் பார்வையில…” என  ப்ரவீணா சொல்ல,

 

“சரி…சரி..டென்ஷன் ஆகாத..வருவாரு..வருவாரு….” என்ற ஐராவுக்கும் தெரியாது அவன் எப்போது வருவான் என..அவனிடம் என்ன தினமும் இவள் பேசிக் கொண்டா இருக்கிறாள்.

 

சென்னை சென்ற அதியனுக்கோ தாயை சமாதானம் செய்த போதிலும் தந்தையை சமாளிப்பதும் சமாதானம் செய்வதும் பகீரதப் பிராயர்த்தனமாய் இருந்தது.

 

கையில் இருந்த பேப்பரில் ஒரு கண் வைத்திருந்தவள்,அதை மீண்டும் மீண்டும் படித்தாள்.

 

சிறிது நேரம் கழித்து யாரிடமோ போன் செய்து பேசி விட்டு நிமிர்ந்தவளுக்கு அப்படி ஒரு எண்ணம் உதயமானது.

 

“ஏன் இது கொலையாக இருக்க கூடாது…???”

 

காதல் கவனமாகும்..!!!

 

Advertisement