Advertisement

காதல் 3:

 

தன்னை நோக்கி கை ஒங்கியவனின் கால் முட்டியின் கீழ் தன் ஷூ காலால் கோபமாய் ஐரா ஒரு உதை விட,தீடீரென அவள் அடிப்பாள் என எதிர்ப்பார்க்காத அந்த வெள்ளை வெட்டி நிலை தடுமாறி கீழே விழ,

 

“ஏய்….யார் மேல கை வைக்கிற?” என அடுத்தவன் கை ஓங்க…ஐராவின் பார்வை அருகில் ஏதேனும் இருக்கா என பார்க்க,கை ஓங்கியவன் ஜஸ்ட் மிஸ்.ஐரா டக்கென குனிந்து கொண்டு கீழே இருந்து ஒரு கல்லை எடுத்து அவனை அடிக்க போகும் சமயம் அதியன் அவளைத் தடுத்தான்.

 

அதியனைக் கோபமாய்ப் பார்த்தவள் “விடுடா…”என  சொல்ல,

 

முதலில் அடி வாங்கியவன் இப்போது சுதாரித்து எழுந்து மீண்டும் அடிக்க வர,ஐராவின் கையை விட்டவன் அவன் கையைத் தடுத்து பிடிக்க,

 

“என்னடா ஹீரோயிசம் காட்றியா?” என அடியாள் சவுண்ட் விட,

 

அதியனுக்கோ அளவில்லா புன்னகை மலர்தல்.

 

பின்னே இவன் என்ன செய்தாலும் ஐராவின் பார்வையில் அவன் அக்மார்க் வில்லன்… அவனை நாட் பேட் ஈவில் ரேஞ்சில் தான் பார்ப்பாள்.இவன் என்னடாவென்றால்…?

 

“டேய் நான் ஹீரோன்னா நீ  வில்லனா…அதுக்கும் ஒரு முக ராசி வேணும்….என்ன கலாட்டா செய்ற நீ?” என பிடித்த கையை விடாமல் கேட்க

 

இன்னொரு ஆசாமி ஐராவை அடிக்க வர,அவளோ இங்கு அவளுக்காய் ஒருத்தன் பஞ்சாயத்து செய்கிறான் என்ற எண்ணம் ஏதுமின்றி அவனுக்கு விட்டாள் ஒரு அறை….

 

ங்கங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்…

 

“ப்ச்….ஐரா…இரு..” என அவன் சொல்ல,ஐராவோ

 

“நீ உன் வேலையைப் பார்” என  திமிராய்ப் பேச,அவளைப் பதிலுக்கு முறைத்தவன் இப்போது இந்த ரௌடிகளை சமாளிப்பது தான் முக்கியம் என உணர்ந்து,

 

“டேய் எதுக்குடா இவ கிட்ட வந்து சண்டை போட்டு இப்படி அடி வாங்குறீங்க?..” என அதியன் சொல்ல,எகிறினான் வெள்ளை வேஷ்டி.

 

“டேய்..ஒரு பொண்ணு இவ..இவ என்னை அடிப்பாளா…தள்ளுடா..” என அதியனைத் தள்ள முயல,அதுவரை அடக்கி வாசித்த அதியன்

இப்போது விட்டான் ஒரு அறை.

 

தன் ஆட்காட்டி விரலை நீட்டி,

“இனிமே உன்னைப் பார்த்தேன் தொலைச்சிடுவேன்….எங்க வீட்டு பொண்ணையே மிரட்டுறியா நீ..? நீ என்னை வெட்டுறதுக்குள்ள ஒரே ஒரு புல்லட்….தூக்கிடுவேன்..மைண்ட் இட்..” என மிரட்டியவனின் முகத்தில் ரௌத்திரம் மட்டும்.

 

அதற்குள் ஐராவிடம் அடி வாங்கியவன் சுதாரித்து,

“அண்ணே வாண்ணே போலாம்…நம்ம ஆளுங்கள கூட்டியாந்து அப்புறம் பார்த்துக்கலாம்..” என அவனிடம் மெதுவாய் சொல்ல,

 

ஐராவோ ‘போங்கடா டேய்’ என்பதாய் ஒரு பார்வை பார்த்தவள், தன் டிஷர்ட்டின் காலரை இழுத்து விட்டவள்,கைகளைத் தூசி தட்டி விடுவது போல் தட்டியவள் வீடு நோக்கி ஓடத் தொடங்கினாள்.

 

அவள் பின்னோடு வந்த அதியன்,

“ஏய் என்னடி பிரச்சனை அவனுங்க கூட… ரௌடிப்பொண்ணா நீ?…” என திட்டினான்.

 

இவள் சொல்லாமல் போனதால் தானே இரண்டு வருடம் முன் இவர்கள் அவமானப்பட வேண்டியதாப் போயிற்று.

 

“ஹ……..லோ….” என அந்த ‘லோ’வை ‘ஹை’யில் சொன்னவள்,

இடுப்பில் கை வைத்து,

“என்ன நீ வந்து காப்பாத்தினதா  நினைச்சு சீன் போடுறியா…நீ வரலன்னா ஜஸ்ட் டூ மினிட்ஸ்ல அவனுங்க இரண்டு பேர் மண்டையிலும் கல்லைப் போட்டுருப்பேன்…நான் ஒரு போன் போட்டா போதும் என் சக்தி வந்திருவான்..” என அவள் கெத்தாய் சொல்ல,

 

என் சக்தி…என்ற வார்த்தையில் அந்த வெள்ளை வேஷ்டி கோஷ்டியை விட்டு தள்ளி வந்த காரணத்தால் காணாமல் போயிருந்த ரௌத்திரம் மீண்டும் அவன் முகத்தில் குடியேற்றம்.

 

இரண்டு வருடமாய் அவனும் அவளும் சந்திக்கவே இல்லை.அவள் செய்த காரியத்தினால் இரு குடும்பத்திற்கும் இருந்த  நல்லுறவு கெட்டிருந்த போதிலும் , அதியனுக்கு அது எல்லாம் சீர்படுத்தவே எண்ணம்..உறவுகள் என்பது அதியனைப் பொருத்தவரையில் மிகவும் முக்கியம்.

 

ஆதலால் தான் சென்னையில் அவன் சேனலை விட்டு விட்டு தாத்தாவிற்காய் ழகரத்திற்கு வந்தான்.

 

நேற்றிலிருந்து அதியன் தனியாக ஐராவிடம் எதுவும் பேசவில்லை.இன்றும் பேச வேண்டுமென இருவரும் நினைக்காவிட்டாலும் பேச வேண்டியாதாய்ப் போய்விட,என்ன தான் ஆத்திரமெல்லாம் அகத்தின் ஆழத்தில் ஆர்ப்பரித்தாலும் உறவு இல்லை என்றாகிடுமா..?

 

அந்த காரணத்தால் தான் அதியன் அவளிடம் உரிமையாய் எப்பொழுதும் போல் பேச,அவளோ வெடுக் வேத நாயகியாய் முகம் திருப்பி முன்னால் செல்ல,அதியனுக்குள் எரிகிறது கோபக்கனல்..

 

“ஏய்… ஐரா நில்லுடி….”

 

“என்னடா……?”

 

“உன் பெயர் மாதிரியே எல்லாமே பெருசுதான் டி..கை வாய்…எல்லாமே நீளம்…சொல்றேன் நிக்காம போற..”

 

ஐராவதி என்றால் வெள்ளை யானையும் தானே.தேவேந்திரனின் வாகனம்..!

 

ஐராவுக்கு அவளின் பெயர் காரணமாய் யாரும் யானை என்று அழைத்தால் பிடிக்காது.இத்தனைக்கும் அவள் யானையின் கால் அளவு கூட பெறாதவள்..ஐம்பதைந்து கிலோ திருச்சி தாஜ்மஹால் அவள்.

“போடா பூனைக்கண்ணா….”

 

“ஓய்…என் கண்ணுக்கு எத்தனை ஃபேன்ஸ் தெரியுமா….என்னை பார்த்து பூனைக்கண்ணுன்னா சொல்ற யானைக்குட்டி”

 

அத்தானுக்கு அன்பாய் வருகிறது அவசர முறைப்பு அவளிடத்திலிருந்து.

 

அதைப் பார்த்து “வீரமா இருக்க சரி….விவேகமா இருந்தா நல்லா இருக்கும்..” அதியன் முனுமுனுக்க

 

“அஜித் ஃபேனா நீ…?வீரம் விவேகம்னு அடுக்கிற…அடுத்து என்ன விஸ்வாசமா இருக்கனும்னு சொல்வியா?”

 

குரலில் குத்தல் குத்தகை எடுத்திருக்க,

“ம்ம்..குடும்பத்துக்குக் கொஞ்சம் விஸ்வாசமா இருந்திருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது…” அதியன் மிகவும் சீரியசாய் சொன்னான்.

 

அவன் பேச்சில் தெரிகிறதோ தெளிவாய் காரம்…?

 

முன்னால் சென்றவள் இப்போது நேருக்கு  நேராய்த் திரும்பி நின்று,

“வீரம் விவேகம்னு பேசினியே…அதெல்லாம் முதல்ல உனக்கு இருக்கான்னு பாரு…அப்போ தெரியும் என்னோட  விஸ்வாசம்..வந்துட்டான்…அவசரத்துக்குப் பொறந்தவன்…” திட்டிக் கொண்டே  நடந்தாள்.

 

“ஓய்…ரௌடி நான் அவசரத்துக்குப் பொறக்கலடி..உன் அத்தைக்குப் பொறந்தவன்…”

 

இயல்புக்குத் திரும்பியவன் அவளை வம்பிழுக்க,

 

அவளோ இப்போதும் ‘அதே போடா டேய்’ பாவம் தான்..

 

அப்போது அவனது அலைப்பேசி ஒலிக்க,எடுத்தால் அவன் அம்மா கஸ்தூரி தான்.

“ஓய்..யானைக்குட்டி உன் மான் குட்டி தான் பேசுறியா..?”

 

அவளுக்கும் அத்தை என்றால் அத்தனை பிரியம் தான்..ஆனால் பிரியத்துக்குள் இப்போது பிரிவு.அத்தனைக்கும் அஸ்திவாரம் அமைத்தவன் இந்த ஆறடி அனிமல்…

 

நெஞ்சுப்பொறுக்கிதில்லையே மோடுக்குப் போனவள் அலையாய் வந்த அழுகை அடக்கி வீடு  நோக்கி நடக்க,இவன் தாயிடம் பேசத் துவங்கினான்.

 

“ஆமாம்மா…..யா…யா….தாத்தா கம்பெல் செஞ்சாரும்மா…யா…நல்லா இருக்காங்க…..”

 

தாத்தா கம்பெல் என்பது ஐராவின் காதில் தேனாய் விழாமல் தேளாய் விழ,

‘ஓஹ்…பெருசு தான் ரவுசு செஞ்சு இவனை வீட்டுக்கும் அழைச்சிட்டு வந்திருக்கு..ரொம்ப தான் லவ்ஸ்…ஹ்ம்கும்’ மனதுக்குள் முனகியவள் வீட்டுக்குச் சென்ற சிறிது  நேரத்தில் அதியனும் வந்து குளித்து சந்தியா வந்தனம் செய்தான்.

 

இவன் பூஜை செய்வதை கண்ட ராஜகோபால்,அப்பொழுதுதான் எழுந்து வந்த மனோவம்சியைப் பார்த்து,

 

“பார்த்துக்கோடா..கோடி கோடியா சம்பாரிச்சாலும் கொடுத்த அந்த கோபாலனை மறக்காம இவன் காலம்பற எழுந்து குளிச்சு சந்தியா வந்தனம் செய்றான்…நீயும் தான் இருக்கியே கழுத…” என திட்ட,

 

“அத்தானுக்குக் கோடி கோடியாய் கொடுத்த அந்த கோபாலனுக்கு என்  நம்பரையும் தரேன்..பே டி எம் செய்ய சொல்லுங்கோ தாத்தா…நானும் சந்தியா…என்ன..சமந்தாவுக்கே வந்தனம் செய்றேன்..” என்று சொல்லி அவரின் பிபியை எகிற வைக்க,

 

“வாய் தான் டா நோக்கு…வழியைக் காணோம்…பெருமாளே காப்பாத்து,,” என மேல்  நோக்கி ஒரு பெட்டிஷன் பேரனுக்காய் வைத்தார்.

 

பேப்பரை எடுத்துக் கொண்டு வந்த அதியன் வம்சியின் அருகில் உட்கார,

“ஏன் அத்தான்…வை திஸ் கொலவெறி உங்களுக்கு….எதுக்கு உங்க சேனலை விட்டு இங்க வந்து உட்கார்ந்து சந்தியா வந்தனம்லாம் செஞ்சு என்னை திட்டு வாங்க வைக்கிறீங்க..?” என குறையாய் சொல்ல,

 

“ஹாஹா…சேனல் ஓனர்னா சேட்டிலைட்டைத் தூக்கிட்டே வா சுத்த முடியும்டா?இங்கே இருந்தே எனக்கு ஆபிஸ்ல நடக்கிற அத்தனையும் லைவ்வா தெரியும்…ஒரு ஒன் மந்த் தான் இங்க செட்டில் செஞ்சுட்டு சென்னை தான்…சந்தியா வந்தனம் அப்பா கூட டெய்லி செய்வேன்.. நீயும் செய்டா பழகிடும்..” அதியன் புன்னகை முகமாகவே சொல்ல,

 

“இவனுக்குத் தூங்கி தான் பழக்கம்..அதான் பழகிடுச்சு..”  அங்கு வந்த ராம் நாத் மகனைத் தாக்கிப் பேச,

 

வம்சியோ,

“அப்பா…அத்தான் சொன்னதைக் கேட்டீங்களா….அவர் மாமா கூட டெய்லி செய்வாராம்..நீங்க செஞ்சாதானே நான் செய்றதுக்கு…வாட் டூ டூ வளர்ப்பு சரியில்லை..” என சொல்ல,

 

விஸ்வநாதனோ தம்பிக்கு ஒன்னுன்னா அண்ணன் பார்க்கனும்..அண்ணன் சொன்னா தம்பி கேட்கனும் பாலிசி உடையவர்.

 

“வம்சி…உங்கப்பா உன்னை மாதிரி இருந்தப்போ அதெல்லாம் கரெக்டா தான் செய்தான்..இப்ப தான் வேலைக்குப் போய் லேட்டா ஆகுறதால் செய்றதில்லை…பேசாம போய் ஆபிஸ் கிளம்புற வேலையைப் பார்..” என்றவர் அதியனிடம் பேச ஆரம்பித்தார்.

 

“இன்னமும் மாதவனுக்கு எங்க மேல உள்ள கோபம் போகலய்யா….அதி?””

 

“சரியாகிடும் மாமா..” என்ற அதியனின் பதிலிலேயே எதுவும் சரியாகிடவில்லை என்பது அவருக்கு சரியாய்ப் புரிய,சரியாகிவிட்டால் சரி என்று நினைத்தார்..

 

*******************************************************************************

 

ழகரத்தில்…..

 

“யார் நீங்க..யார் வேணும் உங்களுக்கு..?”

ப்ரவீணா அங்கு வந்திருந்தவர்களிடம் விசாரிக்க,அவர்களோ

 

“இங்க  ஒரு அம்மா இருப்பாங்க..அவங்க எங்களை பேட்டி எடுக்கனும்னு வர சொன்னாங்கம்மா”

 

“வாட்..பேட்டியா..” என ப்ரவீணா ஷாக் ஆகையில் அதியன் அங்கே ஆஜர்.

 

“வாட்ஸ் கோயிங் ஆன்…?” வீட்டில் இருந்தாற் போல் அன்பில் தொய்த்த வார்த்தையாடல் அல்ல..அவன் அங்கே அதியன் அரண்யனாய் இருந்தான்..தீந்தமிழின் சேனல் ஹெட் என்ற தோரணையில் இருந்தான்.

 

கறுப்பு சட்டையும் க்ரே பேண்டும் அவனின் கண்களும்…அத்தனை வசீகரம் அவன் கண்களில்…..நின்று ஒரு நொடி திரும்பி பார்க்க வைக்கும் விழிகள்..

 

விழிகளில் தீரமும் வார்த்தையினில் தீர்க்கமுமாய் அவன் கேட்க,முதல் முறையாய் அவன் ப்ரவீணாவிடம் பேச,

 

அவளோ பயத்தில் திக்கித் திணறி ,“சார்…இவங்களை பேட்டி எடுக்க யாரோ கூப்பிட்டாங்களாம்..”

 

வந்திருந்தவர்களைப் பார்க்க அவனுக்குமே புரியா நிலைதான்.அவர்கள் குடுகுடுப்பைகாரர்கள்.இவர்கள் ‘ நல்லா காலம் பொறக்குது என்பதை தவிர என்ன சொல்லிவிட போகிறார்கள்…’ என்பதாய் அதியனின் யோசனை ஓடிய போதிலும்,

 

“சொல்லுங்க…யார் உங்களை வர சொன்னா..?”

 

“ஐயா….அது..அந்தம்மா பேரை மறந்துட்டேன்….மகாலஷ்மி மாதிரி..” என வந்த ஆண் சொல்ல,

 

“மகாலஷ்மின்னு ஆபிஸ்ல யாராச்சும் இருக்காங்களா..?” என அங்கிருந்த ப்ரவீணாவிடமும் சுந்தரிடமும் அதியன் கேட்க

 

“இல்லங்கையா…அவங்க மகாலஷ்மி மாதிரி இருப்பாங்க….அவங்க பேரு ஏதோ மீன் பேரு..”

 

“மீனா..?”

 

அவனுக்கு எங்கிருந்து மீனின் பெயர் தெரியும்…?

 

“ஏய்யா…அயிர மீனா இல்ல ஆரா மீனா..?” என அந்த ஆணின் மனைவி சொல்ல,

அப்போது சரியாக அங்கே வந்தாள் ஐரா…

 

“இதோ அந்த அம்மாவே வந்துடுச்சு” என அந்த பெண்மணி சொல்ல,ப்ரவீணாவிற்கும் சுந்தருக்கும் ஐரா தான் அந்த மீனா என பார்த்து சிரித்து வைக்க,அதியனோ அட்டென்ஷன் தான்.

 

அவனைப் பார்த்து அவனின் மாமன் மகளை அவன் முன் கிண்டல் செய்தால் என்ன நினைப்பானோ என பயந்தவர்கள் அமைதியாய் நிற்க, ஐரா வந்தவள் அந்த குடுகுடுப்பைக்காரர்களைப் பார்த்து விட்டு

 

“அட வந்துட்டிங்களா..?உட்காருங்க…ஐஞ்சு நிமிஷம்..” என்றவள் சுந்தரிடம் “இவங்களுக்குக் குடிக்க கொடு.” என்றவள் அவள் அறைக்குள் நுழையப் போக,

 

“ஒன் மினிட் ஐரா..கம் டூ மை ரூம்..” என அவன் உத்தரவாய் சொல்ல,

 

காலையில் அவனோடு எதற்கு மீண்டும் ஒரு வாக்குவாதம்…?அதுமட்டுமில்லாமல் இங்கு அவன் எம்டியாக இருக்க,அத்தனை பேரின் முன் அவனை மதித்தாக வேண்டிய கட்டாயம்.

 

சமத்தாய் அவன் அறைக்குள் ப்ரவேசித்தாள்.

 

அதியனுக்கோ உள் நுழைந்த ஐராவைப் பார்க்க பார்க்க பெருகி வருகிறது புன்னகை  நதியாய்…

 

இவள் மகாலஷ்மியா? காலையில அவனுங்க வாங்கின அடியைப் பார்த்திருந்தா அவ்வளவு தான் என நினைத்தவன்,

 

“எஸ்..ஐரா..சொல்லுங்க…எதுக்கு அவங்களை கூப்பிட்டீங்க….அவங்களை என்ன பேட்டி எடுக்கப் போறீங்க..?”

 

‘டேய்….நீ அரை டவுசர் போட்டு அத்தை கிட்ட அடி வாங்கின காலத்துலே இருந்து உன்னைத் தெரியும்டா..இன்னிக்கு அயர்ன் செஞ்ச சொக்கா போட்டு என்னை அதிகாரம் செய்றியா..?எல்லாம் கோவாலு செய்ற வேலை…’

 

‘திட்டுறியாடி என்னை…ரௌடி..’ என்றவனின் பார்வை அவளை ஆராய்ந்த போதிலும் இப்போது வேலை முக்கியம் என்ற நினைவு எழ,

 

”உட்கார்ந்து எதுனாலும் சொல்லுங்க” என்றதும் உட்கார்ந்தவள் மெதுவே அதே நேரம் நிமிர்வாய் சொல்லத் தொடங்கினாள்.

 

“அவங்க இந்த  நாட்டோட ஆதிவாசிங்க…உண்மையான மனுஷங்க….இன்னமும் மண்ணை மதிச்சு வாழறவங்க..அரசாங்கம் வேணும்னா பழங்குடி….னு சொல்லலாம்… நம்மளைப் பொறுத்தவரை அவங்க நாகரிகம் தெரியாதவங்களா…இருக்கலாம்..ஆனா உண்மையான நாகரிகம் என்னன்னு தெரியாத ஆளுங்க நம்ம தான்…சாப்பாடு சாப்பிட கூட சோம்பேறித்தனம் பட்டு ஆன்லைனல் ஆடர் செய்றதும்..பக்கத்துல இருக்க அண்ணாச்சி கடையில நடந்து போய் வாங்காம…அமேசான்ல வாங்குறதைப் பெருமையா நினைக்கிறதும்…அம்மா கையால சாப்பிடாம….ஆறு ஸ்டார்…ஏழு ஸ்டார் உள்ள ஹோட்டல்ல அஜினா மோட்டோ போட்ட சாப்பாட சாப்பிட்டுட்டு ஸ்டேட்டஸ் வைக்கிறதும் தான் சந்தோசம்னு நினைக்கிறோம்…”

 

அவள் பேச்சின் சாரமும் அதில் உள்ள காரமும் புரிந்தவன் இடையூறின்றி அவள் பேசியதைக் கேட்டான்.ஆர்வம் தழும்பியது அவனகத்தே…

 

“இவங்களை சினிமாவுல சீரியல்ல ஒரு சீனுக்கு யூஸ் செய்றதும்…கிண்டலா பேசுறதும் தான் இன்னிக்கு நடக்குது,.ஆனா இவங்களுக்கும் ஒரு வரலாறு உண்டு..இன்னிக்கு ஊசி மணி விக்கிறவங்களோட முன்னோர்கள் ஒரு காலத்துல எதாவது ஒரு ராஜா கிட்ட படைத்தளபதியா இருந்திருப்பாங்க…இவ்வளவு ஏன் இந்த குடுகுடுப்பைக்காரங்களைப் பத்தி என்ன தெரியும்..ஜக்கம்மாவைத் தவிர…இவங்க டெல்லி சுல்தான் ஹைதரபாத்தை ஆளறதுக்கு பின்னாடி தமிழ் நாட்டுக்கு வந்தவங்க…டெல்லி சுல்தான்ட்ட குதிரைப்படைத் தலைவரா. இருந்தவரு பெரிகொண்டம நாயக்கரு…அவரோட மச்சான் சின்னப்ப நாயக்கர் பொண்ணை அந்த முகல் ரூலர் கல்யாணம் செய்ய ஆசைப்பட வேறு மதத்து ஆளுக்குப் பொண்ணைக் கொடுக்க விருப்பமில்லாம இவங்க நைட்டோட நைட்டா அந்த ராஜாவுக்கு தெரியாம அவரை பகைச்சுக்காம வரனும்னு டெக்கன் ரீஜனுக்கு வந்துட்டாங்க..அப்படி வந்தப்ப பிரிஞ்சு போன ஒரு குழு தான் இவங்களோடது..இப்படி ஒவ்வொரு குருப் கிட்டையும் ஒரு வரலாறு இருக்கு..அதைத் தெரிஞ்சிக்க தான் நான் இவங்களை வர சொன்னேன்….ஒரு காலம்ன் புதுசா எழுதலாம்னு..”

 

இவளுக்கு மனிதர்கள் மீது எத்தனை காதல் எனத்தான் எண்ணத் தோன்றியது அதியனுக்கு.அவனைப் பொருத்தவரையில் மீடியா என்பது பிஸீனஸ்..அவனது வணிக யுக்தியும் நேர்மை புத்தியும் தான் அவனை வழி நடத்தும்.ஆனால் இவளுக்கு தமிழ் மேல் அன்பு…மனிதர் மேல் அத்தனை மாண்பு…இவளது பண்பு கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.

“வெல் டன் ஐரா….பட் ஒரு ரிக்வெஸ்ட் கேட்பேன் செய்வியா..?”

 

“என்ன?” என கேள்வி கேட்டாலும் பக்கி என பணிவா பேசுது என்பதாய் தான் அவள் அகவோட்டம்.

 

“அது இதை நீ பேப்பர்ல ஒரு காலம்னா போடு…ஆனா எனக்கு விடியோ புட்டேஜும் வேணும்…ஒரு டாகுமென்ட்ரி மாதிரி கூட பண்ணித் தா…”

 

அவன் சொல்ல சொல்ல அலையாத்தி காடாய் அசைகிறது அவள் மனம்…துள்ளுகிறது அவள் விழிகள்…பேசுகிறது ஆயிரம் மொழிகள்…அவளுக்கு அவள் வேலையின் மீது அத்தனை காதல்..அதை இன்னும் சிறப்பாய் செய்ய சொன்னாள் அவளுக்கு எப்படி இருக்கிறதாம்…?

 

கலக்கப் போகிறாள் அவள்..

 

 

தமிழமுதன் யூஎஸ் போய் ஒரு வாரம் ஆகிவிட்டது.வீட்டில் அதியனிடம் சண்டைக்கோழியாய்த் திரிந்தாலும் அலுவலகத்தில் அமைதிப் புறா தான்…அவரவர் அவர்களின் வேலையை செவ்வனே செய்ய அனைத்தும் சிறப்பாய் சீராய்ப் போனது.

 

இரவு பன்னிரெண்டு மணி…

 

ஐராவுக்கு அலைப்பேசியில் அழைப்பு வர,

‘ஹூ இஸ் தி ப்ளக் ஷீப்..’ என கடுப்போடு போனை எடுத்தவள் அழைப்பது யாரென தெரிந்ததும் பேசியபின்  பதறி பந்தாய் எழும்பியவள் வேகவேகமாய் தனது பர்ஸை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

 

அவள் மாடியிலிருந்து கீழ் இறங்கும் படியில் முதல் அடி வைக்க,.

 

“இந்த நேரத்தில எங்க போற நீ..?”

 

அந்த நிசப்த நிசர் பொழுதில் அவளை அதிர வைக்கிறது  அவனது ஆலல்.

 

“ஷ்..நீதானா..” அதியன் என்பதில் அவளுக்கு ஆசுவாசம் வர

 

நல்ல வேலை அவள் அப்பாவோ வேறு யாரோ பெரியவர்கள் இல்லை..இவனெல்லாம் ஜூஜூபி…

 

“எங்கடி போற..?” அவன் கேட்ட கேள்விக்கு ஐரா சொன்ன பதிலில் அவன் சர்வமெங்கிலும் சத்தம் மட்டுமே…!!

 

காதல் கவனமாகும்..!!!

 

Advertisement