Advertisement

காதல் 2:

 

“ழகரத்துல உங்களுக்கு எந்த பிரச்சனைனாலும் எங்கிட்ட  நீங்க தயங்காம சொல்லலாம்.விஷாகா கைட்லைன்ஸ் நம்ம ஆபிஸ்ல இன்னிலேர்ந்து பாலோ செய்றோம்..உங்க கிட்ட கொலிக்ஸ் யாராவது தப்ப நடந்தா பயப்படாதீங்க…உங்களுக்கு என்ட்ட நேர்ல சொல்ல தயக்கம் இருந்தா [email protected]  இந்த ஈமெயிலுக்கு மெயில் செய்துடுங்க…என்ன ஆக்ஷன் எடுக்கனுமோ அதை நான் கண்டிப்பா எடுப்பேன்…உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்ல…விஸ்வநாத ஐயர் என் கொள்ளுத் தாத்தா காந்திஜி கூட இருந்தவர்….அப்படி ஒரு லெகஸி இருக்க ஒரு நியுஸ் ஃப்ர்ம் இப்படி ஏதோ பேருக்குன்னு ரன் ஆகாம நீங்க எல்லாரும் சேர்ந்து இதை நம்பர் ஓன் ஆக்க ட்ரை பண்ணுங்க…முதல் அடி எடுத்து வைச்சா போதும்…..அதுக்கு அப்புறம் முன்னேற்றம் தானா வந்துடும்…” என அதியன் அரண்யன் பேசி முடிக்க,கைதட்டல் அந்த கான்பரன்ஸ் ஹாலை நிறைத்தது.

 

அரண் என்ற அவன் பெயருக்கு ஏற்றார்போல் அவனிடத்தில் வேலை

பார்ப்போருக்கு அரணாய் இருப்பேன் என்றான்.கிட்ட தட்ட முக்கால் மணி நேரமாய் அவன் உரையாற்றுகிறான்.ழகரத்தின் வளர்ச்சி,ஊழியர் பாதுகாப்பு,ஊக்குவிப்பு என அத்தனைப் பற்றியும் பேசினான்.

 

‘ஆல் விக்கெட் அவுட்’ இதுதான் ஐராவின் மன் கி பாத்.

 

காலையில் அதியன் வரும்போது இருந்த காட்சி வேறு.இப்போது வேறாய் இருந்தது.அவன் வரும் முன் அவனைப் பற்றி தீந்தமிழின் மூலம் அறிந்திருந்த வரையில் ஸ்டிரிக்ட் சிதம்பரமாய் பர்ஃபெக்ட் பத்மநாபனாய் இருக்க,அவனோ இப்போது ‘ஆல் இந்தியன்ஸ் ஆர் மை ப்ரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ ரேஞ்சில் பேசவும் மொத்த அலுவலகமும் அவன் வசம்…

 

அதியன் வசம்.

 

ஐராவின் தோழியான ப்ரவிணா கூட,அதியனைப் பார்த்ததிலிருந்து,

“ஏய்….நீ ஏதோ புண்ணியம் செய்துருக்க டி….எவ்வளவு ஹேண்ட்சமான அத்தைப் பையன்….அவர் வைட் ஷர்ட்டும் ப்ளக் பேண்டும்….அவரோட ஸ்மைலும் இந்த திருச்சில மட்டும் ஒரு தாஜ்மஹால் இருந்திருந்தா நான் உங்க அத்தானுக்குத் தான் எழுதி வைச்சிருப்பேன்..” என வழிசலாய் வசனம் பேச,இவ்வஞ்சிக்கோ  இஞ்சி காரம்.

 

அதைக் கண்ட ப்ரவிணாவோ,”ஏய் என்னடி உங்க அத்தானை சைட் அடிக்கிறன்னு முறைக்கிறியா…?  ஜஸ்ட் சைட் தான் டி….அவர் கண்ணைப் பாரேன்..க்ரே ஐஸ்….” என வர்ணிக்கத் துவங்க,

 

இவளுக்கோ எங்கும் எகிறுகிறது எக்குத்தப்பாய் கோபம்.

“அவனை நீ சைட் அடி…இல்ல..சாட்டையால அடி…ஆமா பூனைக் கண்ணுக்குப் பேரு க்ரே ஐஸா…நல்லா சொல்லிடுவேன்…போடி..” என திட்டி விட,இப்போது பார்த்தால் ப்ரவீணாவின்  ‘ஐ’வேய்ஸ் அதியன் ‘பேஸ்’ தான்.

 

அவன் அடுத்து சொன்னது தான் உச்சம்..

 

“உங்க எல்லாருக்கும் இந்த மாசத்துலேர்ந்து பத்து பெர்சண்ட் இன்கிரிமெண்ட்” என்றதும் அனைவரும் மகிழ்ந்தனர்.

 

இதையெல்லாம் கேட்ட ஐராவுக்குத்தான் கொதி நிலையும் கோப மழையும் உள்ளத்தினுள்.அவன் வந்ததுமே ஏதோ மகராஜனை வரவேற்பது போல் ராஜகோபாலன் செய்த அலப்பறைகளில் ஏற்கனவே அனலில் இருந்தவள்,அடுத்த அதியனின் பேச்சில் அனைவரும் ஆழ்ந்து போயிருக்க கோபக் கனலின் வசமானாள்.

 

மீட்டிங் முடிந்து அனைவரும் செல்ல,அதியன் அவனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையினுள் ஒதுங்க,கூடவே ராஜகோபாலனும் ,தமிழமுதனும்.அவர்கள் பின்னோடு ஐராவும்.

 

“என்ன அதியன்…இருக்க ஃபினான்ஸியல் ஸ்டெர்ஸ்ல  சேலரி அதிகமாக்கனுமா…?”

 

அமுதன் தான்.

 

‘சூப்பர் மாமா…கேளுங்க…கேளுங்க..’ துள்ளினாள் இவள்.

 

அவனோ இரு கைகளையும் நீட்டி மேஜையின் மேல் வைத்து மிகவும் நிதானமாய்,அதே நேரம் குடி கொண்ட குமிண்சிரிப்புமாய் ,

 

“அங்கிள்…வேலை செய்ய முதல்ல உற்சாகமான மனசு வேணும்…உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை…எனக்கு தீந்தமிழ் எவ்வளவு முக்கியமோ அதை விட ழகரம் முக்கியம்…இது எங்களோட அடையாளம்..இப்படி ஏனோ தானோன்னு நடத்துறது எனக்கு விருப்பமில்லை..அதனால் தான் இங்க வொர்க் பண்றவங்களுக்கு முதல்ல ஒரு பிடிப்பு வரனும்…அப்போதான் கடமைக்குன்னு வேலை செய்யாம காதலா செய்வாங்க…இட்ஸ் ஜஸ்ட் எ என்கரேஜ்மெண்ட்”

 

‘எங்க அடிக்கனுமோ அங்க அடிக்கிறடா…மிஸ்டர் தமிழ் ஸ்டெடி…ஸ்டெடி..’ – இது ஐரா கவுண்டர்.

 

“தாத்தா நான் உங்க கிட்ட இன்னொரு விசயம் சொல்லனும்,..”

 

“சொல்லுடாப்பா”

 

‘சொல்லுடாப்பா…உடைஞ்ச செல்லுடாப்பா….ஆறடி அனிமலைக் கொஞ்சுறதைப் பாரு…ராஸ்கோஸ்….’

 

இவளுக்குக் கோபமோ கொஞ்சலோ மீநிலை அடைகையில் ராஜகோபால் ராஸ்கோஸ் ஆகிடுவார்.

 

“நான் கோவை,சென்னைல ழகரத்தை திரும்பி ஆரம்பிக்கலாம்னு முடிவு செய்துட்டேன்…”

 

அதுவரை அடக்கி வைத்திருந்த அக்னி கொழுந்தை எல்லாம் அதியனை நோக்கி எரிய விட்டாள் ஐரா.

 

“என்ன நினைச்சிட்டு இருக்க நீ…?உன் இஷ்டத்துக்கு போனஸ் தரேன்ன…இப்போ ஆபிஸ்லாம் ரீஓபன் செய்றேன்ர…..அதுக்கெல்லாம் எவ்வளவு நாள் ஆகும்….ரிஸோர்ஸ் வேணும்…முதல்ல….நீ யாரு அதையெல்லாம் முடிவு செய்ய…?”

 

வெடித்தாள் வஞ்சிக் கொடி.

அந்த மின்சாரக் கண்ணனோ ராஜகோபாலைப் பார்த்து,

 

“தாத்தா மேடம் யாரு…இங்க..?” என கேட்க, காட்டை எரிக்கும் அளவு அவளுள் கனல்  எரிய அவள் வாய் திறக்கும் முன்னே,

 

“அவ இங்க சப் எடிட்டர் அதியன்…அவ சின்னப் பொண்ணு…நீ சொல்லு…” என தாத்தா ஆதரவு தந்தார் அதியனுக்கு.

 

தமிழமுதனுக்கு ஐரா அப்படி  நிற்பது பிடிக்காமல் அவளை விட்டுக்கொடுக்காமல்,

“ஐரா சொல்றதும் சரிதானே அதியன்…” என தன் செல்ல மகளுக்கு ஆதரவாய் சொல்ல,

 

“எஸ்.அங்கிள் ஆனா நான் யோசிக்காம மத்தவங்க மாதிரி எந்த விசயத்தையும் அவசரப்பட்டு செய்ய மாட்டேன்..” என்றவனின் பார்வை முழுதும் பாவை மேல் தான்.

 

‘குத்திக் காட்றானாமாம்..போடா டேய்….’

 

ஐரா கொஞ்சம் கூட அசரவில்லை.அப்படியே நின்றாள்.பார்த்த விழி  பார்த்தபடி அவனை முழுதாய் முறைத்தபடி.

 

“சென்னையிலேயே நான் இருக்கும்போதே இதுக்கான வேலையெல்லாம் ஆரம்பிச்சு..ரிக்ருட்மெண்ட் ஸ்டார்ட் செய்துட்டேன்…..அது மட்டுமில்லாம தாத்தா நீங்க தீந்தமிழோட ழகரத்தை மெர்ஜ் செய்ய ஒத்துக்கனும்..அப்போதான் தீந்தமிழோட ஷேரோட ழகரமும் சேரும்..இன்வெஸ்ட்மெண்ட் வரும்..தானா நம்ம கோவை,சென்னை ஆபிஸ்லாம் டெவலப் செய்துடலாம்…எனக்கு ஒரு இரண்டு வருசம் டைம் தாங்க தாத்தா….ஐ வில் மேக் இட்…”

 

இது…இதுதான் அதியன்.மனோதிடம் மதியூகம் அத்தனையும் நிறைந்தவன்.

 

“வாட்….இது என்ன உனக்கு மட்டும் சொந்தமா….உனக்கு தான் உன் சேனல்..ப்ரஸ்னு இருக்குல டா…அப்புறம் எதுக்கு ழகரம் உனக்கு…விஸ்வநாத ஐயர் பெயரன்னு பெருமையடிக்கவா…?”

 

ஐரா அவன் ழகரத்தைக் கேட்ட கடுங்கோபத்தில் வார்த்தைகளைக் கட்டவிழ்த்து விட,

 

தாத்தாவோ,”வாயை மூடு ஐரா…அவன் உன்னோட பெரியவன்…என்ன இப்போ….அவனுக்கும் ழகரத்துல உரிமை இருக்கு…என் இஷ்டம்.. நான் அவனுக்குக் கொடுப்பேன்..உனக்கு ஏன் இவ்வளவு கோபம்..?”

 

தமிழமுதனும் ,”ஆமாடா ஐரா அவன் சொல்றதும் சரிதானே டா…தீந்தமிழ் ஷேர்ஸோட ழகரம் சேர்ந்தா இன்வெஸ்ட்மெண்ட் வரும் தானே…அவன் எம்பிஏ இன் பினான்ஸ் முடிச்சிருக்கான்..நம்ம ஜர்னலிசம் மட்டும் தானே….அவன் சொல்றதைப் பொறுமையாக் கேளேன் கண்ணம்மா..” என சொல்லவும்,

 

“ஆமா…அவனுக்குத்தான் எல்லாம் தெரியும்..எனக்கு எதுவுமே தெரியாது..நான் எதுக்குமே லாயக்கு இல்லை….எல்லாத்தையும் இவன்ட்டேயே கொடுக்க சொல்லுங்க உங்க மாமாவை..” என தமிழமுதனைப் பார்த்துக் கத்தியவள் வேகமாய் அறையை விட்டு வெளியேறினாள்.

 

“அவ கிடக்குறா சின்ன கழுத என்ன தெரியும்…..மூக்கு மேல கோபம் மட்டும் பொசுக்குன்னு வரும்…உனக்கு எது சரின்னு படுதோ செய்டாப்பா..” என்றபடி தாத்தா வெளியேற,

 

தமிழமுதன் , “எடிட்டரா இல்லாம உன் அங்கிளா ஒன்னு சொன்னா கேட்டுக்குவியா அதி..?” என கேட்க

 

“ஐயோ அங்கிள்…ஐராவை நான் சும்மா கோபப்படுத்த கேட்டேன்…ஆனா இதுல என்னோட டிஸிசன் தப்புன்னா நீங்க தாராளமா சொல்லலாம்…என்னோட வயசு உங்க அனுபவம் அங்கிள்….” என அதியன் எழுந்து வந்து அமுதனின் கைப்பற்றி சொல்ல,

 

மனிதருக்குள் நெகிழ்ச்சி அலை.அவன் தலையில் வாஞ்சையாய்க் கைவைத்தவர்,

“ஒரு சேனலுக்கு ஹெட்டா இருந்தாலும் இன்னமும் சின்ன வயசுல பார்த்த மாதிரியே இருக்கடா அதி…” எனவும் அவன் முகத்தில் புன்னகைப் பூக்கள் புலர்தல்.

 

“அதி….அவளுக்கு உன் அளவு பிஸினஸ் மைண்ட்செட் இல்லாம இருக்கலாம்..ஆனா அவளுக்கு ழகரத்து மேல காதல் ஜாஸ்தி…டெல்லி டைம்ஸ்ல….பிபிசில லாம் அவ அப்ளை செஞ்சு ஆஃபர் வந்துச்சு ஆனா அவ போகல…காரணம்..இது மேல உள்ள பிரியம்..அவ தப்பு செஞ்சா சொல்லிக் கொடு..சொல்லிக் காட்டாத…உன்னை விட சின்னப்பொண்ணு….புரிஞ்சிப்பன்னு நினைக்கிறேன்…”

 

“அங்கிள்..உங்க செல்லப்பொண்ணைப் பத்திரமா பார்த்துக்கிறேன்… நீங்க கவலைப் பட வேண்டாம்…”

 

உறுதியளித்தான் அதியன்.

 

****************************************************************

 

வீட்டிற்கு வந்த அந்த செல்ல மகளோ ,”அம்மா……” என கத்திக் கொண்டே சமையல் அறைக்கு வந்தவள் , அம்மாவின் கைத்தலம் பற்ற,அவரோ,

 

“வேலையா இருக்கேன் ஐரா…வெயிட் பண்ணு” என சொல்ல,

 

அவள் சித்தி ராதாவைப் பார்த்து,

 

“சித்தி நீங்க கொஞ்சம் பார்த்துக்கோங்க…” என அவள் அம்மா பார்வதியை இழுத்துக் கொண்டு சென்றவள் அவள் அறைக்குச் சென்றதும்,கதவை சாத்தியவள் தாயின் மடியில் படுத்து விசும்பினாள்.

 

“ஐராம்மா…என்னாச்சுடா..ஏன் அழற நீ…? என்னாச்சுடா கண்ணம்மா..?”

 

இவரின் பாசக்கிளி இப்படி படுத்த எலியாகி அழுதால் அவருக்கும் கிலியாகாதா…?

 

“போம்மா…அந்த …அதியன் வந்ததும் அதிசயம் கண்ட மாதிரி…” என்றவள் சொல்லாமல் மேலும் மேலும் தேம்ப,

 

“என் செல்லமில்ல..அழாம சொல்லுடா ராஜாத்தி..” என்றவர் அவள் முதுகை வருடித் தர,அழுகை பின்னணியாக அவள் முன் கதையை சொல்ல,

 

“இதுக்கா என் ஐரா அழறா…?உரிமை இல்லன்னு தாத்தா சொல்லிட்டா ஆச்சா….என்ட்ட தான் உன் சவுண்டெல்லாம்….அவர்ட்ட தைரியமா பேசாம இப்படி அழுதா…உன்னை நம்பி எப்படி பொறுப்பைக் கொடுப்பாங்க ஐராம்மா..”

 

“நான் உன்ட்ட தான்மா அழறேன்..அவர்ட்ட ஒன்னும் அழல..” ரோஷமாய் சொன்னாள் இவள்.

 

மகளின் பாவனையில் அவருக்குச் சிரிப்பு வந்தாலும் அவளுணர்வை புரிந்தவர்,அவள் மனம் நோகா வண்ணம் பேசினார்.

 

“அது சரிடா கண்ணு…தாத்தா உரிமை இல்லன்னு சொல்லி நீ இப்படி கோச்சுட்டு அழுதுண்டு வந்தா சரியாப் போச்சா..? உனக்கு உரிமை இருக்குன்னு அங்கேயே ஸ்டராங்கா சொல்லிட்டு வேலைப் பார்க்க வேண்டாமா..?” என அம்மா சொல்லவும் தான் மகளுக்கு பல்பு எரிதல்….நிலை புரிதல்.

 

“ஆமாம்மா… நீ சொல்றது ரைட் தான்…” ஒத்துக் கொண்டவளின் கேசம் மென்மையாகக் கோதினார்.

வருடலிலும் வாஞ்சையிலும் அவள் அப்படியே கண் அசர,பார்வதி எழ முயன்றால்,அவரின் புடவையைக் கையில் பிடித்தபடியே உறங்கினாள் ஐராவதி.

 

அதைக் காண்கையில் தாயுள்ளத்தில் பன்னீர் நதி பாய்ந்தோடி பாசம் மனம் நனைக்க,மகள் நெற்றியில் மென்மையாய் ஒரு முத்தம்..அன்பின் சத்தம்..!!

 

‘ஐராக்குட்டி இன்னமும் நீ மாறவே இல்ல’ பார்வதி முகத்தில் பளீர் புன்னகை உதயம்.

 

ஐரா சிறு வயதில் இப்படி தான் அத்தனைக்கும் அப்பாவிடம் செல்லம் கொஞ்சினாலும் அழுகை என்றால் அம்மாவிடம் தஞ்சமாகிவிடுவாள்.அப்பாவை பொருத்தவரையில் அவள் ‘ஸ்டாரங்க் பேபி’.பார்வதியும் மகளிடம் சண்டை போட்டாலும் அவள் அவர் மடி தேடும் நேரம் கடியாமல் கனிந்து தாங்கிடுவார்.அவளது சீக்ரெட் ஆஃப் எனர்ஜி அவர்.

 

கீழே வந்தவரிடத்தில் ராதா என்னவென விசாரிக்க,

“அதியன் ஆபிஸ் வந்துருக்கானாம்..இவளுக்கும் அவனுக்கும் முட்டிகிச்சு போல..மாமா இவளை டோஸ் விடவும் நம்ம ஆத்து குட்டிக்கு வழக்கம்போல கோவம்..அதான் சமாதானம் செஞ்சுட்டு வரேன்..” என பார்வதி சொல்ல,ராதாவின் முகத்திலும் மெல்லிய மென்னகை.

 

“இன்னமும் இவங்க சின்ன பிள்ளைங்க மாதிரியே அடிச்சிக்கிறாங்க பாருங்களேன்..அத்த இருந்தவரை அவங்க கிட்ட செல்லம் கொஞ்சிட்டு அடிச்சிக்குவாங்க..இன்னமும் குழந்தைங்களாவே இருக்காங்க..” என்றவர் வேலையைக் கவனிக்கத் துவங்க பார்வதி மனதில் பழைய நினைவுகள்.

 

அதியன் தான் வீட்டின் மூத்த வாரிசு.ராஜகோபாலனின் மனைவி பாரிஜாதத்துக்குப் பேரன் என்றால் கொள்ளைப் பிரியம்..அடுத்து ஐரா பிறக்க,அவளுமே வீட்டின் மகாலஷ்மியாய் மரியாதையாய் நடத்தப்பட்டாள். அதியன் விடுமுறை என்று சென்னையில் இருந்து வந்தால் அவன் ஆதிக்கம் தான் அவர்கள் வீட்டில்.

 

இத்தனை நாள் இவளைக் கொஞ்சிய தாத்தா,பாட்டி,அவளது அப்பா,ராமப்பா என அனைவரும் தங்கை மகனைத் தலையில் வைத்துக் கொஞ்ச இவளுக்கு பொஸசிவ் நெஸ்…ப்ரையார்டியினால் வந்த போட்டி…வளர வளர அதுவும் கூடவே வளர,இருவருக்குள்ளும் எப்பவும் முட்டலும் மோதலும் தான்.இன்று வரையில்….

 

வீட்டிற்கு வராமல் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருந்த பேரனை மல்லுக்கட்டி இழுத்து வந்தார் ராஜகோபாலன்.

 

“தாத்தா…நான் வந்த சரியா இருக்காது தாத்தா..அங்க எல்லாரும் என்ன நினைச்சிப்பாங்களோ..?” என அதியன் தயங்க,

 

“ஏன் டா….அவங்களாம் யாரு..உன் மாமனுங்க தானே..உன் பாட்டி இருந்திருந்தா வராம இருந்திருப்பியா…?அவ உன்னை ஆத்துல தங்க விடாம இப்படி வெளியே தங்க விட்டிருப்பாளா..?இன்னும் நான் எத்தனை நாள் இருப்பேனோ…..வாடாப்பா…” என வகையாய் அவனை மிரட்டி கெஞ்சி அழைத்து வந்தார்.

 

வந்தால் அவனுக்கு எப்போதும் போல் அதே முதல் மரியாதை…மாமன்மார்கள் இருவருக்கும் அவன் இரண்டு வருடம் கழித்து வருவதில் ஏக மகிழ்ச்சி.இரவு உணவு அத்தனையும் அதியனின் இஷ்ட பதார்த்தம்.

 

அதியன் தன் அருகில் இருந்த அனுவிடம்,

“ஏன் அனும்மா…காளை மாடு வந்தா கன்னுக்குட்டி பின்னாடியே சுத்துமே…என்னாச்சு..” என கேட்க

 

“அது மாமா..காளை மாடும் கன்னுக்குட்டியும் டூ இயர்ஸா பேசிக்கறது இல்ல….” என ஐராவும் விஸ்வநாத்தும் பேசிக் கொள்ளாததை  சொல்ல அதியனுக்குள் அதிர்ச்சியும் ஆச்சரியமும்.

 

அவனுக்குத் தெரியும் தந்தையும் மகளும் வீட்டிலிருந்தால் எப்போதும் ஆனந்த யாழ் மீட்டல் தான்.விஸ்வநாத்தை

வரவேற்பதே ‘அப்பாஆஅ’ என்ற ஐராவின் ஆலாபனை தான்.ஆனால் இது அத்தனையும் இன்றி இன்று அவர்கள் வீடு.காரணம் அவள் தானே…!

 

தூங்கி எழுந்த ஐரா இரவு உணவுக்குக் கீழே வர , மாடியில் இருந்து இறங்கும்போதே அதியன் பார்வையில் பட,

‘இங்கேயும் வந்துடீங்களா மகாப்ரபு..’ என்பது பெண்ணின் நினைப்பு..தானாய் அவள் வதனத்தில் வந்து சேருகிறது அத்தானுக்கு ஆசையாய் முறைப்பு.

 

“மாமா…கன்னுக்குட்டி கமிங் டவுன்..” அனுராகா அதியனிடம் கிசுகிசுக்க,

 

“வரட்டும் வரட்டும் டா..நீ சாப்பிடு..” என்றவனுக்கு எதிரில் இப்போது ஐரா ஆஜர்.

 

“இந்த அப்பத்தையும் எடுத்துக்கோ அதி…” என்றபடி தட்டில் அவனுக்குப் பரிமாறிய பார்வதியைப் பார்த்த ஐரா

‘தாய்க்கிழவி எனக்கு ஆப்பு அடிக்கிறவனுக்கு அப்பம் தரியா நீ..’ என மெதுவாய்த்  திட்டியவள் அதியனுக்கு வைப்பதற்காய் இருந்த அப்பத்தை எடுத்துத் தன் தட்டில் வைத்து அமைதியாய் சாப்பிட,பார்வதி மகளை முறைக்க,

 

அதியன் தான் ,” நீங்க அடுத்து எடுத்துட்டு வாங்க மாமி…” என சமாளித்து அனுப்பினான்.

 

“நல்ல காலம்…பெரியப்பாவும் அப்பாவும் சாப்பிட்டுப் போயாச்சு..இல்ல…இங்க கச்சேரி ஆகியிருக்கும்..” என அனு மெதுவாய் சொல்ல,

 

“அனும்மா….சாப்பிடுடா..” அதியன் அவளை அடக்கினான்.

 

************************************************************

புதுப்பொழுது புலர,எப்போதும் போல் வாக்கிங் சென்றாள் ஐரா.

 

ஐந்தரை மணி என்பதால் அவ்வளவாய் இல்லை கூட்டம்.

 

ஐரா பாட்டிற்கு மெல்லமாய் ஓடிக் கொண்டிருக்க,அவள் முன் இரு வெள்ளை வேட்டிகள்.பார்த்தாலே ஹரி பட அடியாள் போல்.

 

“ஏய்….நீதானே எங்கண்ணனைப் பத்தி தப்பா எழுதினது…?”

 

“யார் டா உங்க அண்ணன்..?”

 

“ஏய்…எங்கண்ணன் தான் இந்த ஏரியா கவுன்சிலர்…”

 

“ஹோ….அந்த டாஸ்மாக் தன்ராஜா?” அவளிடம் துளி கூட பயம் பதட்டம் எதுமில்லை…

 

“எங்க அண்ணன் பெயரையே சொல்றியா நீ..உன்னை…” இருவரில் பலசாலியாய் இருந்த ஒருவன் கை நீட்ட,அத்தனையும் விழுகிறது அவன் பார்வையில்..

 

அதியன் பார்வையில்….

 

காதல் கவனமாகும்..!!

 

Advertisement