Advertisement

 

தேடல் 8:

ஆறு மாதங்களுக்குப் பிறகு…

 

“என் இதழ் மேல் இன்று மௌனங்கள்

என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள்

சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே

தூரம் தள்ளிச் சென்றாலும் உயிர் தேடுதே”

 

அதிகாலையில் நல்ல உறக்கத்தின் பிடியில் இருந்தாள் ரவீணா.படுக்கையில் கையை வைத்தவள் தீடீரென ஏதோ வித்தியாசத்தை உணர,விடிவிளக்கின் வெளிச்சத்தில் கண்களை நன்றாய் விரித்துப் பார்த்தாள்.அவளது கணவன் ஹர்ஷா தான் படுத்திருந்தான்.அவளால் அதை நம்பமுடியவில்லை.கனவோ நனவோ என டெஸ்ட் செய்ய அவனை கன்னத்தில் அவள் கிள்ள,

 

“ஆ….” என்ற அலறலோடு ஹர்ஷா அடித்து பிடித்து எழுந்திருக்க,

 

“அடியே..ரௌடி பொண்டாட்டி.ஏன் டி தூங்குறவனை இப்படி கிள்ளுற..?” என அவன் கத்த

 

“ஹே..!! நீங்க எப்போ வந்தீங்க..எங்கிட்ட வரேன்னு சொல்லவே இல்லை.இப்படி தீடீர்னு வந்தா நான் கனவோன்னு நினைச்சுதான் கிள்ளிப் பார்த்தேன்.” என ரவீணா சொல்ல,

 

மனைவியை ரசனையோடு பார்த்தவன் ,”அப்போ  நான் உன் கனவுல வருவேன் அப்படி தானே..” என அவன் கேட்க அவளோ அமைதியாக இருந்தாள்.

 

“அது சரி..கிள்ளுறதுதான் உனக்குத் தெரிஞ்ச வழியா..? எவனோ வன்முறையைக் கடைப்பிடிக்கிறவன் இதைக் கண்டுபிடிச்சிருக்கான்.நான் எப்படி கண்டுபிடிப்பேன் தெரியுமா?” என்றவன் அவளை நெருங்கி வர

 

கட்டிலில் அவள் பின்னால் நகர்ந்து ,”வேண்டாம்..போ…சொன்னா கேளு ஆதி..” என அவள் சொல்ல

 

அவனோ உல்லாசமாய் ,”புஜ்ஜுக்குட்டி…பாவம் பாப்பா தூங்குதே டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்னு தான் நான் அமைதியா வந்து படுத்தேன்.ஆனா நீயே என்னை டிஸ்டர்ப் பண்ணிட்ட..போ” என்றவன் அவள் கன்னத்தில் அழுத்தமாய் இதழ்ப் பதித்தான்.

 

அவள் துடைக்க முடியாதபடி அவளது கைகளுக்கும் அணை போட்டிருந்தான்.அவள் மருண்ட பார்வையோடு அவனை நோக்க,

 

“சரி சரி நீ தூங்கு.எனக்கு செம டயர்சா இருக்கு வினு.” என அவன் படுக்க போக

 

“வரேன்னு சொல்லவே இல்லை”

 

“சர்ப்ப்ரைஸா இருக்கட்டும்னு தான்.அம்மா கிட்ட மட்டும் ஃப்ளைட் ஏறும் முன்னாடி சொன்னேன்” என்றவன்

“இப்போ தூங்கு வினு.நாளைக்குக் காலையில பேசலாம்..” என்றபடி உறங்க ரவீணா தான் உறக்கம் தொலைத்தாள்.

 

இந்த ஆறு மாதங்களாக முடிந்தவரையில் அவளிடம் அவன் தினமும் பேசிவிடுவான்.அவளுக்கும் ஆரம்பத்தில் விருப்பமில்லாவிட்டாலும் நாள் போக்கில் அவனது அழைப்பை எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.ஆனால் அவனது பேச்சுக்கு இவள் பதில் பேசவே மாட்டாள்.’ம்’ என்பாள் அவ்வளவே.இவளுக்காக இரவில் கண்விழித்து பேசுபவனை நோகடிக்க மனம் வராது அவளும் அவன் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்வாள்.

 

அவள் மனதில் ஆரம்பகால காயங்கள் ஆறாமலே இருந்தன.ஹர்ஷாவின் பெரியப்பாவும் அவரது மகனும் மாதம் ஒரு முறை வந்து அவர்களைப் பார்த்து செல்வார்கள்.இவளது பெற்றோரும்  நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து பார்த்துவிட்டு செல்வார்கள்.கோபம் இருந்த போதும் ஏதோ பேருக்கு அவர்களிடம் பேசுவாள்.

 

அவனோடு வாழ மனதின் குழப்பங்கள் அனுமதிக்கவில்லை.ஆனால் அவனைப் பிடித்தது.பைத்தியக்காரத்தனமாய்ப் பிடித்தது.கணவனை அந்தளவுக்கு நேசித்தாள் ரவீணா.அவனும் அவளை அப்படி நேசிக்கிறானா என்பது தான் அவளது குழப்பத்துக்கு முக்கிய காரணம்.அவளானால் திருமணத்துக்கு முன் யாரையும் நினைக்கவில்லை.ஆனால் அவன் அப்படி இல்லையே.அவளது அக்காவை அல்லவா நிச்சயம் செய்திருந்தான்.அப்படி இருக்கும்போது அது எப்படி அவளை உடனே மனதில் இருந்து அழித்து இவளோடு அவனால் ஒன்ற முடிகிறது என்பது அவளுக்குப் புரியவில்லை.அவனது சீண்டல்களை அவள் வெகுவாக ரகசியமாய் ரசிக்கத்தான் செய்கிறாள்.ஆனால் இவன் எப்படி இரண்டே மாதத்தில் எதுவும்   நடவாதது போல் அவளோடு ஒட்டிக்கொண்டே திரிகிறான்.அக்கறையாக நடக்கிறான் என்பது அவளுக்குப் புரியாத புதிர்தான்.

 

அந்த புதிருக்கு மட்டும் விடை தெரிந்து விட்டால் அவள் ஹர்ஷாவோடு மனமொன்றி வாழ எவ்வித தடையுமில்லை.அவளது மனக்குழப்பங்களை மனதிலேயே போட்டு மறைத்து வைத்திருந்தாள்.இருபத்திரண்டு வயதில் அவள் அளவுக்கு அதிகமாகவே யோசித்தாள்.போதாக்குறைக்கு தீபக்கும் ராஜியும் அவளை விட்டு விலகியிருந்தனர்.விலக்கி வைத்திருந்தாள்.ராஜி தீபக்கிடம்  காதலை சொல்லிய பின் ,ராஜி இவளோடு அமர்ந்து உணவுண்ண ,சுற்ற செய்தாள்.தீபக்கோ முன்பு ராஜி ரவீயோடு தான் சுற்றுவான்.இப்போது அவன் தனியாக இருக்கவும் காதலர்களைப் பிரிக்க வேண்டாமென ரவீணா ராஜியை தீபக்கோடு சாப்பிட சொல்லுவாள்.

 

ராஜியோ தோழியை விட்டு செல்லாமல் இருக்க,ரவீணாவோ அவள் இருக்கும் நேரம் கூட ,அவளிடம் பேசாமல் சிந்தனையிலே உழன்றாள்.ஆம் சிந்தனை தான்.எப்போதும் ஹர்ஷா பற்றிய சிந்தனை தான்.எப்படி அவன் மனம் சுலபமாக மாறியது.அவன் மனதில் தான் மட்டும் தான் இருக்கிறோமா ? என்ற கேள்வி ஒருபுறமும் “ நான் மட்டும் தான் இருக்க வேண்டும் “ என்ற தீராத எண்ணம் ஒருபுறமும் “ஒரு வேளை அப்படி இல்லாவிட்டால் “ என்ற பயமும் சேர அவள் மிகவும் அலைப்பாய்ந்த மனதுடனே சுற்றினாள்.ராஜியோ தோழி தன்னை அவாய்ட் செய்கிறாள் என உணர்ந்து அவளாகவே விலகினாள்.முன்பு போல் நெருக்கம் இல்லை.

 

ஆகையால் தனிமையால் அளவுக்கு அதிகமாகவே யோசிப்பாள்.அதுவும் அவளது ‘ஆதி’ பற்றியே.இதோ இன்று அவன் மீண்டும் வந்துவிட்டான்.இத்தனை நாள் அவளது மனதை அரித்த கேள்விகளுக்கு விடை தெரிந்தால் தான் அவர்கள் வாழ்வு விடியும்.

 

இப்படியே ரவீணா உறக்கம் தொலைத்து விடியலும் வர,அவசரமாக எழுந்து ஆபிஸுக்குக் கிளம்பினாள்.மாலை வீடு வந்த போது அவன் கீழே உட்கார்ந்து சிந்துவிடம் பேசி கொண்டு இருந்தான்.ரவீணாவும் குளித்து விட்டு சமையலறைக்குள் செல்ல,ஹர்ஷா மனைவியை அதிசயமாகப் பார்த்து

 

“ஏன் குட்டிம்மா.உங்கண்ணி சமைக்க  கத்துக்கிட்டாளா..என்ன? செஃப் தாமு ரேஞ்சுக்கு உள்ள போறா” என  மனைவியைக் கிண்டலடிக்க

 

“ஹா ஹா இல்லண்ணா இப்போதான் தோசையும் இட்லியும் சுட கத்துக்கிட்டிருக்காங்க..அப்புறம் ரசம் வைப்பாங்க.இப்போ அம்மாவுக்குக் காய்கறி கட் பண்ணி கொடுக்கப் போறாங்க.” என சிரிக்க

 

“அதுக்கா இந்த பில்டப்பு.?” என அவன் வாய் பிளக்க

 

இவர்கள் பேசுவதைக் கேட்டு கொண்டு வந்த வைதேகி , “கொழுப்புடா உனக்கு..காலையில போனா சாயங்காலம் தான் வர அவ.அதுவும் உங்க ஐடி ஆபிஸ்லாம் அந்தமான் தீவு மாதிரி நாட்டை விட்டு தள்ளி இருக்கு.இந்த அழகுல அவ எங்கிட்டு இருந்து சமைக்கறது.ஏதோ அவளுக்கு ஆர்வமிருக்கறதால லீவ் நாள்ல கத்துக்கிறா.சும்மா அவளை வம்பிழுக்கிறான்.உன் தொங்கச்சிக்கும் உனக்கும் சமைக்க தெரியும்.ஆனா என்னைக்காவது எனக்கு உதவி செஞ்சிருக்கீங்களா? ” என திட்ட ரவீணா அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்தாள்.வெகு  நாட்களுக்குப் பிறகு  அந்த வீட்டில்  குதூகலம் நிரம்பி வழிந்தது.

 

இரவில்  ரவீணா உறங்க வரும் முன்பே ஹர்ஷா உறங்கியிருந்தான்.மறு தினம் இருவரும் ஒன்றாய்க் கிளம்பி காரிலேயே ஆபிஸ் சென்றனர்.மதிய உணவு இடைவெளியின் போது , ரவீணா மட்டும் தனியே அமர்ந்திருக்க ராஜி, தீபக்,மோனிஷா,ஆதித்யா,ரேகா என்று மற்ற  நண்பர்கள் எல்லாம் குழுமி கொட்டமடித்தனர்.அதைக் கண்ட ஹர்ஷா ரவீணாவின் அருகில் அமர,அவளோ ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள்.அவள் சாப்பிடாமல் இருக்க,அவளது பேக்கை பிரித்து சாப்பாடை எடுத்து வைத்தவன் ,

“சாப்பிடு” என்றவன் அமெரிக்கா சென்ற கதையை அவளோடு பேசிக் கொண்டே சாப்பிட்டான்.

 

சாப்பிட்டு விட்டு போகும் ரவீணாவின் பார்வை தீபக்கையும் ராஜியையும்  சுற்றி வந்தன.

அதை ஹர்ஷாவும் கண்டுகொண்டான்.அலுவலகத்தில் இருந்த நேரமெல்லாம் அவள் தனியாகவே  இருந்தாள்.அதை ஹர்ஷாவும் கவனித்தான்

 

மாலையில் காரில் வரும்போதும் அவன் அதையே யோசித்துக் கொண்டு வந்தான்.முன்பு பார்த்த ரவீணா இல்லை இவள்.துறுதுறுவென்று இருந்தவள் இப்போது இப்படி அமைதியாக இருக்கிறாள்.அவனுக்கு அமைதியாக இருந்தால் பிடிக்கும் தான்.ஆனால் இயல்பாக இருக்க வேண்டும்.ரவீணாவின் இயல்பு அது இல்லையே..!! அதனால்  அவன் மனதில் பெருங்கவலை ஆட்கொண்டது.

 

அன்று  வீட்டில் அவள் லேப்டாப்பில் ஏதோ நோண்டிக்கொண்டிருக்க,அவன் அவள் பின்னால் வந்து இயல்பாக அமர்ந்தான்.அவளது கழுத்தில் தன் தாடையைப் பதித்தவன் ,

 

“என்ன செய்ற புஜ்ஜு…?” என்றதில் அவனது உதடுகள் அவள் மேனியில் உரச,அவசரமாக அவள் எழுந்தாள்.அவளை கைப்பிடித்தவன் தன் மடியில் வைத்து இறுக்கி அணைத்துக் கொண்டு ,

 

“எங்கேயும் போக கூடாது.முன்னாடியே நான் சொல்லிட்டு தானே போனேன்.ஆறு மாசம் பத்தலையா…? உன் மனசு இன்னும் மாறலயா வினு” என அவன் கிசுகிசுப்பாய்க் கேட்க

 

“அது என்னோட மனசு..உங்க மனசு இல்ல…ஒரே மாசத்துல மாற..நீங்க சொல்றபடி வேணும்னா நான் கேட்கலாம்.என் மனசு கேட்காது” என்றாள் பட்டென்று.

 

அவள் கோபமாக இருப்பதை உணர்ந்தவன் , அவளை விடுவித்தான்.எழுந்து சென்று பால்கனி கதவருகே நின்றவன் ,கைகளைக் கட்டிக் கொண்டு மனைவியை ஆழமாய்ப் பார்த்தான்.

 

கண்களில் கலக்கம் சூழ,உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன.முகமெல்லாம் கோபத்தில் சிவந்திருந்தது.எதுவாகினும் பேசி தீர்த்து விட முடிவு செய்து,

 

“உனக்கு என்னை என்ன கேட்கனும்னாலும் கேளு வினு,ப்ளீஸ் மனசுல போட்டு குழப்பிக்காத.என்னை பச்சை பச்சையா திட்டனும்னு தோணினாலும் திட்டிக்கோ.ஐ டோண்ட் மைண்ட்.அடிக்கனுமா அடிச்சிக்கோ.ஆனா இப்படி இருக்காத..நீ நீயா இரு.இப்படி அமைதியா இருந்து என்னைப் படுத்தி எடுக்காதடி.எதுனாலும் வாயைத் திறந்து பேசித் தொல..” என அமைதியாக ஆரம்பித்தவன் சத்தமாக முடிக்க,

 

“ஏன் உங்களுக்கு அமைதியா இருந்தா தானே பிடிக்கும்” என்றாள் பூமிஜாவை நினைவில் வைத்து.

 

“வாட் டூ யூ மீன் ?” என கோபமாகக் கேட்டவன் ,

 

“எதுவா இருந்தாலும் நீ நேருக்கு நேரா கேளு.வினு நான் உன்னோட ஹஸ்பண்ட்.எங்கிட்ட உனக்கு எந்த தயக்கமும் வேண்டாம்.பீ ப்ரங்க்” என ஹர்ஷா சொல்ல

 

“அது எப்படி உங்களால எதுவும் நடக்காத மாதிரி எங்கிட்ட நடந்துக்க முடியுது.அதுவும் இப்படி க்ளோஸா எங்கிட்ட …இழையுறீங்க…எப்படி முடியுது உங்களால..?முதல்ல என்னை வார்த்தையால டார்ச்சர் பண்ணீங்க…மறுபடி அன்பும் அக்கறையும் காட்டினீங்க.எப்படி இந்த மாற்றம்னு புரிஞ்சிக்க முடியாம என் மண்டை வெடிச்சிடும் போல இருக்கு.உங்களால பூமியை எப்படி மறக்க முடிஞ்சது?இல்ல மறந்துட்ட மாதிரி நடிக்கிறீங்களா..? கடமைக்காக என்னோட வாழ நினைக்கிறீங்களா..? சொல்லுங்க…” என அவள் கத்த

 

அவளது உணர்வுகளைத் துல்லியமாக இம்முறை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.முன்பு புரிந்து கொண்டான்.இம்முறை உணர்ந்து கொண்டான்.புரிதல் என்பது அடுத்தவரின் நிலை.உணர்தல் என்பது தானே  அந்நிலையை உணர்வது.புரிதல் வேறு..! உணர்தல் வேறு..!!

 

மனைவியை அணைத்து ஆறுதல் படுத்த நினைத்த மாத்திரத்தில் தன் எண்ணத்துக்கு சென்சார் போட்டான்.ரவீணாவிடம் அவன் அத்துடன் நிறுத்திக் கொள்ள மாட்டானே.அவளிடம் சொன்னது போல் அவன் வெரி வெரி பேட் ஹர்ஷாவாயிற்றே அவள் விசயத்தில்.முன்பு அவளோடு வாழ நினைத்தான்.ஆனால் ஆறு மாதம் அவள் இல்லாது அவள் முகத்தைப் பார்க்காது கழித்த நாட்களில் அவளின்றி வாழ முடியாது என்பதை திண்ணமாய் அவன் உணர்ந்து கொண்டான்.

 

ஹர்ஷா மிகவும் எதார்த்தவாதி.கிடைப்பது வைத்து மகிழ்ச்சியடையவே அவனது அன்னை போதித்திருந்தார்.ஆகையால் தான் பூமிஜா இல்லையென்றாலும் அவனால் இயல்பாக ரவீணாவை ஏற்க முடிந்தது.இதை அவளிடம் சொன்னால் கண்டிப்பாக தாங்க மாட்டாள்.கோபம் கொள்ளுவாள்.ஆனால் அவன் மனைவி பேசுவதை நினைத்து அவனால் கோப்பட முடியவில்லை.மாறாக சிரிப்புதான் வந்தது.அவனுக்கென்ன பூமிஜாவைப் பார்த்தவுடன் மனதில் பட்டாம்பூச்சி பறந்ததா என்ன?

 

ஆனால் இப்போது மனைவியை இந்த இரவில் நிலவின் நிழலில் காண காண ஊரில் உள்ள அத்தனை பூச்சிகளும் பறக்கின்றதே..!!பின்னாடி இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் அவனுக்காக ரொமாண்டிக் இசையை இசைப்பது போல் ஒரு மாயை உருவாகிறதே.போதாகுறைக்கு காதலித்து பார் ஒளிவட்டம் தோன்றும் என்று வைரமுத்துவின் குரலும் கேட்கிறதே.ஆனால் இப்போது அதையெல்லாம் சொன்னால் நிச்சயம் அவள் டின் கட்டி விடுவாள் என்பதால் அமைதியாகப் பேச ஆரம்பித்தான்.

 

“இங்க பார் ரவீ…உங்கிட்ட நான் என்னைக்குப் பாசமா நடந்துக்க ஆரம்பிச்சேன்னு உனக்கு நினைவில இருக்கா…? நீ வயிறு வலியில அழுதியே அன்னிக்கு நைட் தான்.நீ அழும்போது என்னால தாங்க முடியல.அப்படியே உன்னை எனக்குள்ள பொத்தி வைச்சிக்கனும்னு தோணிச்சு.அப்போதான் உன்னை நான் ரொம்ப  நேசிக்க ஆரம்பிச்சேன்.அதுக்கு முன்னாடி நான் உன்னை என் மனைவியா  மட்டும் பார்த்தேன்.மனைவிங்கற உரிமை உன் கழுத்துல தாலி கட்டின அந்த நொடியில எனக்கு வந்துடுச்சு.ஏன் எனக்கு மட்டுமா உனக்கும் தானே வந்துச்சு..” என பேசியவனை தடுக்கப் பார்க்க,

 

“நான் முடிச்சிடுறேன்…அந்த உரிமையுணர்வு இல்லாம தான் அன்னிக்கு நான் உங்கிட்ட கத்துனேனா சொல்லு..இல்ல  நானும் சரி நீயும் சரி கல்யாணம் முடிஞ்சதும் அமைதியாவே தான இருந்தோம்.நம்ம ரெண்டு பேரும் நம்மளோட கோபத்தை ஒருத்தர் ஒருத்தர் கிட்ட தானே காட்டினோம்.சரி நான் தான் அதிகமா காட்டினேன்.நீயும் எங்கிட்ட தானே பதிலுக்குப் பேசின.இத்தனை வருசம் நம்மளை வளர்த்த பெத்தவங்களை விட அன்னிக்கு உறவான  நாம ரெண்டு பேரும்தானே அடிச்சிக்கிட்டோம்.ஏன்…கல்யாணம் கொடுத்த உரிமை.தாலி கொடுத்த பந்தம்.”

 

“அதுக்கு அப்புறமும்  நான் நீ உன் ப்ர்ண்ட்ஸ்ட்ட அழுதப்போ என் மனைவி என்னை எப்படி விட்டுக் கொடுத்துப் பேசலாம்னு தான் கோவம்.நீ ராம் கிட்ட டவுட் கேட்டப்போ கூட என் வைஃப் எங்கிட்ட ஏன் உரிமையா  கேட்கலன்னு தான் கோவம்.மத்தபடி நான் உன்னை சந்தேகமெல்லாம் படல.அதுக்கு முன்னாடி கூட நான் உனக்கு அட்வைஸ் செஞ்சது உன் மேல இருந்த அக்கறையால தான்.என்னோட உறவுக்கார பொண்ணா இருந்த உரிமையில நான் சொன்னேன்.”

 

“அப்புறம் கேட்டியே பூமிஜாவை நினைச்ச நான் எப்படி உன்னை நினைக்க முடிஞ்சதுன்னு..ஒரே மாசத்துல கல்யாணம் ஃபிக்ஸ் ஆச்சு.உங்க வீடு மாதிரி எடுத்து செய்ய எனக்கு அப்பா இருக்காரா என்ன? நான் தானே எல்லாம் செய்யனும்.பெரியப்பாவும் வயசானவர் அவரும் எவ்வளவு அலைவார்..?என்னால யாரும் கஷ்டப்படக்கூடாதுனு நினைக்கறவன் நான்.நான் கஷ்டப்படுத்தினது உன்னை மட்டும் தான் வினு. சிக்கனமா செய்யனும்.சொந்தக்காரங்களுக்கு டிரஸ் எடுக்கனும்.சிந்துவுக்கு செய்யனும்.காசை வேஸ்ட் பண்ண கூடாதுன்னு நான் அலைஞ்சு திரிஞ்சு ஒவ்வொண்ணா செஞ்சேன்.அதுல எங்க நான் உங்க அக்காவை நினைக்கிறது.சரி தான்னு புடவை எடுக்க போகும்போது அவளைப் பார்க்க நினைச்சா…நீ என்னை முறைச்ச முறைப்புல நான் உன்னையே தான பார்த்தேன்.அப்புறமும் அவளை நான் எங்க பார்த்தேன் நினைத்தேன்..இதையெல்லாம் நான் உன்னை சமாதானம் செய்ய சொல்றேன்னு நினைக்காத வினு..இதான் உண்மை.அம்மாவைக் கேட்டுப் பாரு.அக்சுவலி எனக்கு அப்போ கல்யாணம் செய்ய ஆசை கூட இல்லை.சிந்துவை நல்லபடியா கரை சேர்க்கனும்.லைஃப்ல இன்னும் கொஞ்சம் ஸ்டேபிள் ஆகனும்னு தான் என்னோட எண்ணங்கள்.. இன்னொருத்தனை காதலிச்ச உங்க அக்காவை நான் எப்படி நினைக்க முடியும் சொல்லு..? இப்படி ஓடி போனாளே அதான் கோவம்..”

 

“அதையெல்லாம் விடு.உனக்கு புரியுற மாதிரியே சொல்றேன்.இப்போ படம் பார்க்க தியேட்டர் போறோம். நாம போக நினைச்ச படத்த்துக்கு டிக்கெட் கிடைக்கல..ஆனா வந்ததுக்கு வேற படத்துக்கு டிக்கெட் வாங்கிட்டு போய் பார்க்கிறோம்.அந்த படம் செமயா இருந்தா எப்படி இருக்கும். எதிர்ப்பாராம அந்த படத்துக்குப் போய் அதுவும் ரொம்ப நல்லா இருக்கும்போது அந்த பார்க்க முடியாத படம்  பத்தின ஆசை பின்னாடி போயிடும்.அதான் என்னோட நிலை.உங்க அக்கா கூட நிச்சயம் ஆகியிருந்தாலும் நடக்கல.ஆனா நீ கிடைச்ச.ஐ அம் வெரி லக்கி அண்ட் ஹாப்பி”

 

“முடிவா சொல்றேன் கேட்டுக்கோ வினு.வாழ்க்கையில எதிர்ப்பாராத துன்பங்கள் எவ்வளவு வலியைக் கொடுக்குமோ அது மாதிரி  எதிர்ப்பாராம நம்ம வாழ்க்கையில எதிர்ப்பாராத நேரத்தில் நடக்கிற விசயங்கள் நமக்கு அளவில்லாம சந்தோசத்தைக் கொடுக்கும்.எதிர்ப்பார்த்து கிடைக்குறதை விட எதிர்ப்பாராம கிடைக்கற விசயத்துல கிக் ஜாஸ்தி.அப்படி எதிர்ப்பாராம எனக்குக் கிடைச்ச சந்தோசம் நீ…” என்றான் உள்ளார்ந்த உள்ளத்துக் காதலோடு.

 

எல்லாவற்றையும் கிரகித்துக் கொள்ளவே சில நிமிடங்கள் ஆனது ரவீணாவிற்கு.அவன் மனதில் பூமிஜா இல்லை என்பதே பெரிய ஆசுவாசத்தைக் கொடுத்தது.அவள் அந்த ஆசுவாசம் தந்த நிம்மதியோடு அழ,

 

“ஏய்..என்னடி இன்னும்…” என பதறி அவளருகில் செல்ல,

 

“அப்புறம் ஏன் அன்னிக்கு என்னை டைவர்ஸ் பண்ணிடுவேன்னு சொன்ன நீ..?” என அவள் தேம்ப,அருகில் நின்றானே ஒழிய தொடவில்லை.பின்னே இழையுற நீ என அதுக்கும் தப்பாகப் புரிந்து கொண்டு பேசுவாளே.

 

“அடிங்க..ஏன் டி..தலையில கட்டிட்டாங்கன்னு புலம்பினா எனக்குக் கோவம் வராத..சரி இந்த புள்ளைக்கு நம்மளைப் பிடிக்கல போலனு நினைச்சு டைவர்ஸ் கொடுக்க நினைச்சேன்.அது ஒரு குத்தமா..? ஆனா இனிமே அப்படியெல்லாம்  நல்லவனா யோசிக்க முடியாது.கல்யாணமாகி ஒன்பது மாசம் ஆச்சு…இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்..ரொம்ப்ப்ப்ப்ப்ப் நல்லவன்னு நினைக்காத” என்று நடிகர்  வடிவேலு பாணியில் சொன்னவன்

 

அவள் முகம் பார்க்க அதுவோ யோசனையில் இருக்க,

“உனக்கு ஒரு வாரம் டைம்.தட்ஸ் இட்…இப்போ நான் தூங்குறேன்..நீ நல்லா யோசி..என்னோட விளக்கத்தை நான் சொல்லிட்டேன்.நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம்.இதுக்கு மேல எங்கிட்ட சொல்ல ஒன்னுமில்லை.இனிமே சொல்லனும்னா பொய் தான் சொல்லனும்..குட் நைட்” என்றவன் மெத்தையில் போர்த்திக்  கொண்டு படுத்து விட்டான்.

 

 

அடுத்த இரு நாட்கள் அவள் யோசனையில் கழிக்க ,ஹர்ஷாவோ அவளை இயல்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.ஆம் தீபக்கிடம் பேசினான்.

 

“இங்க பாரு தீபக்.எனக்கு எப்பவுமே ப்ர்ண்ட்ஸ் சர்க்கிள் கம்மி.அது மட்டுமில்லாம ஒரு பொண்ணொட அண்ணனா எனக்கு சில பயம் உண்டு. இன்னிக்கு நாட்டுல நடக்குறதுல யாரை நம்ப முடியுது சொல்லு.நீயும் வினுவும் காலேஜ்லேர்ந்து ப்ர்ண்ட்ஸ்னு எனக்குத் தெரியாது.அது மட்டுமில்லாம என்னோட சொந்தக்கார பொண்ணு என்பதால் தான்  நான் அவ கிட்ட லிமிட்டோட இருன்னு சொன்னேன்.இப்படி அடிச்சு பிடிச்செல்லாம் விளையாடதான்னு சொன்னேன்.அதுக்கு அப்புறம் ஒரு எதிர்ப்பார்க்காத சிட்டிவேஷன்ல எங்க மேரேஜ்.ஏற்கனவே கோபத்தில் இருந்த நான் உங்க கிட்ட அவ அழுததைப் பார்த்தவுடனே கத்தி விட்டேன்.அதனால மேடமுக்கு என் மேல கோவம்.என்னை என்னமோ ப்ர்ண்ட்ஷிப்பையே மதிக்காதவன் மாதிரி உங்கிட்ட சண்டை போட்டுட்டா.அக்சுவலி அதுல தப்பு என் பேர்லதான்.இப்ப ஆறு மாசமா அவளை விட்டு நீங்க இருக்கீங்க.அவ தப்பு செஞ்சா நீங்க மன்னிக்க மாட்டீங்களா.. நானும் அவ கூட இல்ல.பாவம் அவ..தனியாவே உட்கார்ந்திருக்கா..எல்லாத்துக்கும் நான் சாரி கேட்டுக்கிறேன் தீபக்” என ஹர்ஷா சொல்ல தீபக்கும்

 

“அய்யோ ஹர்ஷா நீங்க எதுக்கு சாரியெல்லாம் சொல்றீங்க.அவ அவாய்ட் செஞ்சதும் கோவம்.அதுவும் இந்த விசயம் எதுவும் தெரியாது எனக்கு காரணமே சொல்லாம பேசாதடான்னு திட்டிட்டு போயிட்டா..அந்த கோவம் தான் எனக்கு.ஆனா நீங்க அன்னிக்கு அவ மயங்கி விழுந்தப்போ அவ கிட்ட நடந்துகிட்டதைப் பார்த்த பின்னாடி எனக்கு அவ சந்தோசம் தான் முக்கியமா இருந்துச்சு.என்னால ஏன் பிரச்சனைன்னு தான் நான் ஒதுங்கிட்டேன்.”

 

“ஓகே தீபக்.இப்போ ரவீணா எனக்கு பழையபடி வேணும்.போய் எனக்காகப் பேசு ப்ளீஸ்” என கேட்க

 

“அய்யோ பாஸ்!  நீங்க ஏன் ப்ளீஸ் போடுறீங்க..இருங்க..” என்றபடி வேகமாக எழுந்தவன் ரவீணாவின் இருக்கைக்குச் சென்று ,

 

“ஓய்..குட்டச்சி..வா டி கேண்டின் போகலாம் “ என அடாவடியாக கூப்பிட,தோழன் வந்து பேசியதில் மனம் மகிழ்ந்தாலும் கணவனுக்குப் பிடிக்காது என்ற பயமும் சேர்ந்து கொண்டது.இப்போது அவன் மனம் தெளிவாய்ப் புரிய அவனைக் காயப்படுத்த விரும்பவில்லை.அதனால் அமைதியாக நிற்க, ஹர்ஷா வந்து தீபக்கின் தோளில் கைப்போட்டு ,

 

“என்ன என்னை கூப்பிடாம இவளை கூப்பிடுற தீபக் நீ..எனக்கெல்லாம் டீரிட் கிடையாதா…?” என உரிமையாகக் கேட்க

 

தீபக் “அட போங்க பாஸ்…இவ சரி பட்டு வர மாட்டா..போல..யாரோ இவளுக்கு மந்திரிச்சு விட்டாங்க போல. நீங்க வாங்க பாஸ்..ஒரு கட்டிங் போடுவோம்..” என சொல்ல

 

“டேய்..ப்ராடு குடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு குடிக்கிறியா நீ..? ஆதி….நீயுமா குடிப்ப…?” என அவள் கணவனை முறைக்க

 

“ஹே..!! நான் காபி டீ தான் டி குடிப்பேன்…” என் அவன் அலற

 

தீபக் ரவீணாவின் கைகளைப் பிடித்துக் கொண்டவன் “உங்கிட்ட ப்ராமிஸ் செஞ்ச பின்னாடி நான் குடிப்பேனா குட்டச்சி..?” என்றவன் ,”சாரிடி..அன்னிக்கு உன்னை அடிச்சிட்டேன்..” என சொல்லி ப்ர்ண்ட்ஸ் என கை நீட்ட

 

ரவீணாவோ ஹர்ஷாவைத் தான் பார்த்தாள்.உடனே அவன் கண்ணடிக்க,அதில் புன்னகைத்தவள்,

 

“சாரி தீப்ஸ்..நான் தான் உன்னை கஷ்டப்படுத்தினேன்..ஐ அம் சாரி..” என அழ

 

“அழாதடி  லூசு..” என அவன் சமாதானம் செய்ய, ராஜியோ ,

 

“எப்படியோ டி உன்னால இந்த குடிகாரன் திருந்திட்டான்..எனக்கு ஒரு  நல்லவனை கணவனா கொடுத்திட்ட மகராசி….” என சொல்ல , அங்கே நட்பதிகாரம் தொடர்கதையானது.

 

*********************************************************************

அன்று மாலை ரவீணாவிற்கு மனதின் பாரங்கள் அகன்றாற்போல் ஒரு உணர்வு.அத்தனை லேசாக இருந்தது அவள் மனம்.இரவே ஹர்ஷாவின் மேல் இருந்த கோபமெல்லாம் நீங்கி விட,இன்று தீபக் ராஜியுடன் பேசியது மனதை இன்னும் உற்சாகமாக்கியது.வரும் வழியெல்லாம் ஹர்ஷா ரோட்டைப் பார்க்க,இவள் ஹர்ஷாவைப் பார்த்தாள்.

வீட்டிற்கு வந்தால் சிந்துஜாவும் வைதேகியும் வெளியே கிளம்ப ரெடியாகியிருந்தனர்.சிந்துவுக்கு பரீட்சை முடிந்து லீவ் என்பதால் சொந்த ஊருக்குப் போய் பத்து நாள் இருக்க முடிவு செய்து கிளம்பினர்.

 

இரவில் தனியாக ஹர்ஷாவும் ரவீணாவும் மட்டுமே.ரவீணா சமையலறையில்  பால் கலக்கிக் கொண்டிருந்தாள்.அவளுக்குப் பால் கலக்கியவள் குடித்துவிட்டு ,ஹாலில் அமர்ந்திருந்த ஹர்ஷாவுக்கு எடுத்துக் கொண்டு போனாள்.

 

பாலைக் குடித்து முடித்தவன் , ரவீணாவைப் பார்க்க,அவளோ சிறுபிள்ளையாய் பாலை குடித்து விட்டு வாயைத் துடைக்காமல் இருந்தாள்.அதைக் கண்டவன் மனம் அதை துடைத்து விட சொல்லி உந்த,

 

“வினுக்குட்டி..நில்லு “ என்றான்

 

“என்ன..?”

 

“பாலைக் குடிச்சிட்டு வாயைத் துடைக்கல பாரு..” என்றவன் அவளது செயலை முன்பே கணித்து இருகைகளையும் பிடித்துக் கொண்டான்.

 

“ப்ச்.லூசா நீ…இப்படி பிடிச்ச எப்படி துடைக்க நானு…?” என சிணுங்க,

“நான் துடைக்கிறேன் புஜ்ஜூ…” என்றான் சரசமாய்.

 

“நீயும் என் கையைப் பிடிச்சிட்டு இருந்தா எப்படி துடைப்ப..நான் உன் சட்டையில துடைக்கப் போறேன்..” என அவனைப் பார்க்க,படுபாவி தாயும் தங்கையும் இல்லாத காரணத்தால்  சட்டை போடாமல் வெறும் ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்திருந்தான்.

 

அதைக் கண்டவள் தலையைக் குனிந்தவாறே,

 

“விடுடா “ என சொல்ல

 

“மாட்டேன் டி…கார்ல வரும்போது அப்படி சைட் அடிச்ச…என்னை….இப்ப ஏன் டி குனிஞ்சிக்கிற….”

 

“ஆதி…ப்ளீஸ்டா..” என அவள் கெஞ்ச

 

“நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் புஜ்ஜுக்குட்டி.முள்ளை முள்ளால எடுக்கனும்.இப்போ நானு…” என்றவன் அவள் இதழில் உள்ள பாலை அவன் பருக , அவள் அவனோடு ஒன்றினாள்.பின்னர் சிரித்துக் கொண்டே அவன் விலக

 

“பால் செம டேஸ்ட்…” என சிரிக்க

 

“போடா..” என அவள் ஓடி விட,இரவு தூங்கும்போது அவன் வழக்கம்போல் அவளை அணைத்துக் கொள்ளாது விலகி படுத்திருக்க,அவனருகில் நெருங்கிப் படுத்தவள்,

 

“எதுக்கு சீன் போடுற…நீ தான் ஒன்னும் அவ்வ்வ்வ்வ்வ்வளவு நல்லவன் இல்லையே..வெரி வெரி பேட் ஹர்ஷா தானே..அப்புறம் ஏன் தள்ளியிருக்க..?கிஸ் மட்டும் பண்ற நீ…” என சண்டையிட

 

அவனோ அமைதியாக ,

“எப்படி உன் மனசு மட்டும் ஒரே நாள்ல மாறிச்சு?” என கேட்க

 

“மாற வேண்டியது மனசு மட்டும்  தானே..மாறினா தப்பில்லையே..” என்றாள் கெத்தாக

 

“ஆர் யூ ஷ்யூர் வினு..அப்புறம் இதை வைச்சு நீ எதுவும் என்னைப் பேசிட்டா ரெண்டு பேருக்குமே கஷ்டம்..” என அவன் சொல்ல

 

 “கொஞ்சம் கன்ஃப்யூசன்ஸ் அதெல்லாம் நேத்து நீயே க்ளீயர் பண்ணிட்ட…நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன் ஆதி..நீ என்னை நம்பலாம்..” என அவள் சொல்ல,அதற்கு பின் மொழி அங்கே மௌனமானது.ஆதியின் ஆதிக்கத்தில்  தன்னை விரும்பியே தொலைத்தாள் ரவீணா.

 

Advertisement