Advertisement

கண்ணோடு கண்ணோடு வந்த காதல்..!

 

“உன்னைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கல…ஐ ஹேட் யூ..”

அவள் வார்த்தை ஒவ்வொன்றும் எரிமலையில் வார்த்தெடுத்தாற்போல் வர அவன் குழம்பிப் போனான்.

அவள் நிமிஷா.

“நிம்ஸ்…என்ன கோவம் உனக்கு…?”

“கோபம் தான் …கொஞ்சம் வாய மூடுறியா…?” 

ஏகத்துக்கும் எகிறினாள் பெண்.குறையா கோபம் அவனிடம்.பாய்ந்தான்.

“ஏய்..என்ன சீன் போடுற…என்னால உனக்கு என்ன கஷ்டம்..?”

“உன்னால தான் கஷ்டம்..உன்னைக் கூட்டிட்டு ஒரு ஃபங்க்ஷ்ன்னுக்குப் போக முடியுதா..நம்ம ரெண்டு பேரும் ஜோடியா ஒரு போட்டோ எடுக்க முடியுதா….நத்திங்….நீ வாழ்க்கையில வந்த பின்னாடி என் நிம்மதி சந்தோசம் எல்லாமே போச்சு…”

“வாட்… நான் உனக்கு உதவியா தானே இருந்திருக்கேன்..என்னைப் பார்த்து எப்படி உன்னால இப்படி பேச முடியுது  நிம்ஸ்…?”

“ப்ச்..பேசாத…டோன்ட் டாக் பேக்….நீ இல்லாதப்போ நான் ரொம்ப சந்தோசமா சுதந்திரமா இருந்தேன்..நான் இப்போ உனக்கு அடிக்ட் ஆகிட்டேன்.. நீ இல்லாம என்னால முடியலன்னு ஒரு நிலைமைக்குக் கொண்டு வந்துட்டு எனக்கு உதவி செஞ்சனு சொல்றியா நீ…?”

அவன் அமைதியின் பக்கம்..

” நீ இல்லாத ஒரு நாள்..நான் சுதந்திரமா இருக்கனும்…”

“உன் கூட போனா என்னை எல்லாரும் கிண்டல் பண்றாங்க…ஐ ஹேட் யூஊஊஊஊஊ…”

கத்தல் மட்டுமே அவள்..அவனோ அந்த பக்கம் கந்தல்…!!

ஆனாலும் தளராமல் பேசினான்.

” நான் உன்னுடையை குறைபாட்டைத் தீர்க்கத்தான் வந்தேன்…ஸ்பெக்ஸ் போடுறது ஒன்னும் குறையோ வருத்தப்பட வேண்டிய விசயமோ இல்லை….கடவுள் உனக்குத் தீர்க்க முடியாத குறையைத் தரல.. நீ ஏன் அடுத்தவங்களைப் பத்தி நினைக்கிற…பார்க்கவே முடியாதவங்க எத்தன பேர் இந்த உலகத்துல இருக்காங்க…?அதையெல்லாம் நீ எப்படி மறந்த நிம்ஸ்….?”

கண்ணாடி அவளிடம் கேள்வி கேட்பதாய் உணர்ந்தவள் தன் செயலைக் குறித்து வெட்கினாள்.ஆம் அவளுக்கு இருப்பது  நோய் அல்லவே குறைபாடு தானே..ஜஸ்ட் மையோப்யா..(myopia)அதை நிறையாக்குவது அவள் கண்ணாடி.

” நீ சொல்றது சரிதான் புட்டி….கடவுள் இந்த அளவு நல்லபடியா என்னைப் படைச்சத்துக்கு ஐ அம் தேங்க்ஸ் டூ ஹிம்….சாரி புட்டி…” என மனதார மானசீகமாய் சொன்னவள் கண்ணாடியை அணிந்து கொண்டாள்..

“அது தான் என் நிம்ஸ்….குட்…” என சொன்னது அவள் கண்ணாடி.

#கண்ணாடி கூட ஒரு குட்டி கான்வோ…

ஹி ஹி இமேஜினேஷன் எக்குத் தப்பா போனதின் விளைவு…

 Thanks for the support and encouragement given for angyaade guys..thanks a lottttttttttttttt ☺☺☺

 

 

 

 

Advertisement