Advertisement

காதல் 10:

 

‘ஐரா ஐரா..ஐராப்பா…ஐரா ஐரா ஐராப்பா..’ என மெல்லமாய் மெல்லிசையாய் முணுமுணுத்துக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான் அதியன்.

 

“ நான் தான் ஐரா அப்பா…என்ன வைச்சிருக்க  எனக்கு…..?” என விஸ்வா கேட்க

 

“ஐராவை வைச்சிருக்கேன் மாமா…என் ஹார்ட்டுக்குள்ள..”என கிண்டலாய் சொல்ல

 

“டேய்..டேய்..” என இவர் முறைக்க

 

“பார்த்தீங்களா…எப்படி ஐராவைக் கரெக்ட் செஞ்சேன்னு….அதியன் மாமா…” என காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள…

 

“டேய்….ஏதோ என் பொண்ணு அத்தை மகன் அழறான்னேன்னு பாவம் பார்த்து கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா…அதுக்கு நீ போடுற சீன்…தாங்கல..” என இவர் வம்பிழுக்க,

 

“வெட்கம்..வேதனை….” என்று தலையில் தட்டிக் கொண்டவன் ,

 

“நான் அழறேன்னு அவ ஒத்துக்கல மாமா…அழகா இருக்கேன்னு ஒத்துட்டிருப்பா..”

 

“ஆமா..டா..இவர் பெரிய இவரு..இவர் அழகில என் பொண்ணு விழுந்துட்டா….என் பொண்ணை வைச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு அவ உன்னைப் பார்க்குறாளா…?”

 

“மாமா..உங்க பொண்ணு கேடி….அவ என்னை யாருக்கும் தெரியாம சைட் அடிப்பா உங்களுக்குத் தெரியாது..”

 

“போடா டேய்..” என்று ஐரா சொல்வது போல் சொன்னவர் அவன் முதுகில் செல்லமாய்த்  தட்ட..

 

“என்ன மாமா….மருமகனுக்கு மரியாதை தராம வாடா போடான்னு..” என்று சொல்லியபடி அவரருகில் இடித்துக் கொண்டு அமர,

 

“கன்னுக்குட்டி..இங்க வா..” என்று விஸ்வா சொல்லவும் ஐரா இறங்கி வர,அவளைக் கண்டவனின் கண்ணில் காதல் குடியேற,இவன் விழி அவள் விழியில் கரை சேர,அங்கேயும் காதல் பூக்கள் மலர்வு…

 

‘வா’ என்றபடி இவள் பார்க்க,அவனும் தலையசைக்க,விஸ்வா தான்,

 

“ஐராக்குட்டி..மாப்பிள்ளை என்னமோ வேணும்னு கேட்குறார்டா..?” என்று சொல்ல

 

“என்ன அதி வேணும்..” என்றபடி இவள் தந்தையின் அருகில் உட்கார்ந்து கேட்க

 

“மரியாதையெல்லாம் வேணுமாம்…நான் அவரை வாடா போடா சொல்லக்கூடாதாம்..” என சொல்ல,ஐரா அதியனை முறைக்க,

 

‘போன நிமிஷம் ரொமாண்டிக்கா பார்த்தவளா இப்படி முறைக்க வைச்சிட்டியே மாமா…நீ எனக்கு வில்லன் தான்..’ என அவரை முறைக்க,

 

“என்ன என்னை லுக் விடுற மாப்பிள்ளை….அதுக்கு தான் என் மக இருக்காளே…” என சொல்ல

 

“மாமா……” என இவன் பல்லைக் கடிக்க,

 

“பாவம் பா..விட்ருங்க…” என ஐரா சொல்லி சிரிக்க,

 

வம்சி வந்தவன் , “ஐரா..யூ நோ…இவ்வளவு நேரம் இங்க ஐரா ஐரா ஐராப்பாதான்….மாம்ஸ் ஒரே சாங்க்ஸ் தான்..” என சொல்ல,ஐராவின் விழிகளில் வீண்மீன்கள்…

 

இவன் ‘வாடி’ என்பதாய்ப் பார்க்க,இவள் அனைவரையும் கண்ணால் காட்ட,காதலுக்கு மொழியன்றி விழி போதும் போல,….

 

“மாமா…..இந்தாங்க..இன்விடேஷன்…நீங்க சொன்ன மாதிரி இரண்டு டிசைன்ல அடிச்சிட்டேன்….அம்மா அப்பா ஏற்கனவே அங்க கோயில்ல பூஜை பண்ணிட்டா…நீங்களும் போய் ஸ்ரீரங்கத்துல வைச்சிட்டு யாருக்குக் கொடுக்கனுமோ கொடுங்க…” என சொல்ல

 

இவர்கள் செய்த கலாட்டைவைப் பார்த்து ,“வந்தவுடனே அதியனை வம்பிழுக்கனுமா…அதி நீ போப்பா..போய் ப்ரஷாகிட்டு வா…சாப்பிடலாம்..” என அங்கு வந்த பார்வதி சொல்ல,

 

“இதுக்குதான் மாமி வேணும்ன்றது…மை ஸ்வீட் மாமி..” என்று அவன் சொல்லி அவரைக் கன்னம் கிள்ள,அவர் புன்னகைக்க,

 

“டேய்…” என்று விஸ்வா கத்த

 

“ஐ லவ் யூ மாமி..” என்று பதிலுக்குக் கத்தி விட்டுப் போனான் அதியன்.

 

ஐரா திருமணத்திற்கு ஒத்துக் கொண்ட பின் அதியன் சென்னை சென்று விட,அடுத்தும் ரியாவின் வளைக்காப்பு,பிரசவம் என அவன் பிஸி…இப்போது தான் மீண்டும் வந்திருக்க,ஐராவைக் காண. அத்தனை ஆவலும் அதைத் தாண்டிய ஆசையும் அவனுக்கு.

 

இவன் போய் குளித்து விட்டு உடை மாற்றி ஐராவுக்காக காத்துக் கொண்டிருக்க,அவளும் சரியாய்க் கதவைத் தட்ட,

 

“வாங்க பேபி…” என அவளைக் கைப்பிடித்து இழுத்தவன்,

 

“இன்விடேஷன் பார்த்தியா..?” என ஆசையாய்க் கேட்க

 

“நல்லா இருக்குடா…” என்றவள் “நான் ஒன்னு கேட்பேன் செய்வியா…?” என அவனிடம் கேட்க

 

“உட்கார்..” என சொல்லி அவளை அங்கிருந்த சேரில் அமர்த்தியவன்,

 

“என்னடி எதாச்சும் சம்பவம் ப்ளான் செய்றியா….கேஸ் எதாவது..?”

 

“லூசு..கேஸ் இல்லடா….எனக்கு திருவையாறு போகனும்….அழைச்சிட்டுப் போ…” என ஆவல் பொங்கும் விழியும் மொழியுமாய் மங்கையவள் கேட்க,

 

இவனோ ,

 

“என்ன ஐரா….நான் நாளைக்கு இல்ல நாளைன்னைக்குக் கிளம்பனும் டி….அங்க நிறையா வேலை இருக்கு…அப்பாவும் எவ்வளவு பார்ப்பார்….இங்க இன்விடேஷன் கொடுக்க அம்மா அப்பா வரேன்னு தான் சொன்னாங்க..நான் தான் உன்னைப் பார்க்கனும்..நம்ம மாமா தானே அப்படி சொல்லி வந்தேன்…ழகரம் வந்து மூணு மாசம் ஆச்சு….என்ன காரணம் சொல்லி நம்ம அங்க போறது..”

 

“எனக்கு அதெல்லாம் தெரியாது…என்னை அழைச்சிட்டுப் போற…டாட்” என்று சொல்லி எழுந்து கொள்ள,

 

“தனியா விடுவாங்களா நம்மளை….ஏற்கனவே வண்டு சிண்டெல்லாம் நம்மளைக் கிண்டல் செய்யுதுங்க…” என அவன் தயங்கி சொல்ல

 

“உன்னை….போடா..” என அவள் கோபமாய் செல்ல,

 

“பேபி…நில்லுடி…”என்று போய் இழுக்க,

 

“போடா…” என நெஞ்சில் கை வைத்துத் தள்ளினாள் அவள்.

 

அதன் பின் இவன் சாப்பிட போக,ஐராவோ இவன் அருகில் உட்காராமல் போய் விஸ்வா பக்கம் உட்கார,இவன் அவளைப் பார்த்து முறைக்க.அவளோ இவனைப் பார்க்கவே இல்லை.

 

இவனோ அவள் கால்களை தன் கால்களால் தொட முயல,அவளோ எந்த வித பாவமும் காட்டாமல் இருக்க,

 

‘இவளை’ என்று அவன் பல்லைக் கடித்தபடியே வேகமாய் சாப்பிட்டு செல்ல,அவனோடு சாப்பிட்டு எழுந்து வந்த விஸ்வா,

 

“அதி கண்ணா…ஐரா கால்னு நினைச்சு மாமா கால்ல மிதிச்சிட்ட டா.” என்று சீரியசாய் சொல்ல,

 

இவன் ‘ஞே’ என முழிக்க,

 

அவன் தோளில் தட்டி ,“விடுடா..விடுடா… நான் ஒன்னும் நினைச்சிக்கல..” என்று அவர் செல்ல,நாயகனுக்கு கூட நாணம் வருமோ…? என்ற வண்ணம் அங்கிருந்த சுவற்றில் தலை சாய்த்து தன் விரலை வைத்து முகம் மூடியிருக்க,அவன் நின்ற கோலம் கண்ட ஐரா,அவன் அருகில் வந்து,

 

“அதியா….இப்படியே நிற்காத..இறுக்கி அணைச்சு உம்மா தரனும் போல இருக்கு…” என்று சொல்லி கண்ணடிக்க,அவசர அவசரமாய் சுற்றிப் பார்த்தான் அதியன்.

 

அவனின் பாவனையில் சிரிப்பு வர,

“ஆமா…அப்பா என்ன சொன்னார் இப்படி வெட்கப்பட…?” என்று கேட்க

 

இவன் நடந்ததை சொல்ல,

 

“ என் அம்மாவுக்கு ஐ லவ் யூ சொல்ற..எங்கப்பா கூட ரொமான்ஸ் செய்ற…ம்ம்…கலக்கு…ஆனா நான் சொல்றதை செய்யாத..,” என்று கோபமாய் சொல்லி அவள் அறைக்கு செல்ல,அவள் பின்னோடு வேகமாய் சென்றவன் அவள் அறைக்கதவை அடைக்கும் முன் உள்புகுந்தவன்,அவளை பின்னால் இறுக்கி அணைத்திருக்க,

 

“என்ன பண்ற நீ..” என இவள் கேட்க

 

“கட்டிக் காப்பாத்துறேன்…” என சொல்லி இவன் இன்னும் அவளை இறுக்க,

 

“உன் மேல கோவமா இருக்கேன்…விடு..”

 

“என்ன இப்போ திருவையாறு தானே போகனும்..போறோம்…டாட்..” என சொல்லி அதியன் அவள் முன்னால் வர

 

“நிஜமா…வா” என்றவளின் விழிகளில் மின்னல்……

 

“ம்ம்ம்….ஆனா ஒரு கண்டிஷன்….சாரி கட்டிட்டு வரனும்..” என சொல்ல

 

“கண்டிப்பா…” என சொல்லி அவள் உள்ளக்கள்வனின் கன்னம் கடிக்க,

 

“பார்டா” என்றான் அவன் ஆச்சரியமும் அவள் செய்கையை ரசித்தவனுமாக.

 

“பார்த்துக்கோடா..” என சொல்லி அவள் அவனைப் பார்க்க,பார்த்துக் கொண்டே பேசாமல் கழிந்த அந்த காதல் பொதிந்த நிமிடங்கள் இருவருக்கும் அத்தனை சுகம்…

 

“பார்க்க தானே வெயிட்டீங்க்..” என்று  சொல்லி  கண்ணடிக்க,

 

“உன்னை..முதல்ல எல்லா வேலையும் முடிச்சிட்டு வா…நாளைக்கு போகனும்..ஆமா…முதல்ல முடியாதுன்னு சொன்ன..” என சொல்ல,

 

“இப்போதான் இந்த ஐடியா வந்துச்சு…” என்று சொல்லி அவளைத் தோளோடு அணைக்க,

 

“வாட்?”

 

“ஆமா…ஐரா என் கைக்குள்ள இருக்கும்போது ஐடியாவெல்லாம் தாறு மாறா கொட்டுது..” என்றான் காதலோடு..

 

“என்ன ஐடியா..அதி..?”

 

“வெயிட் அண்ட் வாட்ச்” என்றான்.

 

மறு நாள் இருவரும் திருவையாறுக்குக் கிளம்பிப் போக தயாராக,

காரில் செல்கையில் அவன் தோளில் அடித்தவள்,

 

“எப்படி பொய் சொல்லிட்டு வரான் பாரு..” என்று திட்ட

 

“அழைச்சிட்டுப் போ அழைச்சிட்டுப் போனு …சொன்ன…அழைச்சிட்டு

வந்துட்டேன்…” என்று அவன் சொல்ல,அவன் வீட்டில் சொல்லிய காரணம்,

 

“பஞ்ச நாதிஸ்வரர் கோவிலில் விளக்கெத்தனும்னு அம்மா சொன்னாங்க…ஐராவையும் அழைச்சிட்டுப் போன்னு சொன்னாங்க…மாமி..” என்று பார்வதியிடம் சொல்ல,பகவான் காரியம் என்று உடனே ஓகே சொல்லிவிட்டார்கள்.

 

“உண்மையை சொன்னா…ஊர் சுத்திட்டு வாங்கன்னு அனுப்பிடுவாங்க பாரு…ஆயிரம் காரணம் சொல்லி என்னை டென்ஷன் பண்ணுவாங்க…” என்று சொன்னவன் பாடலை ஒலிக்க விட,இன்றும்

 

‘நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி…’ என்ற பாடல் ஒலிக்க,இருவர் முகத்திலும் நிறைவாய் நிறைகிறது புன்னகை…

 

அன்று போல் இன்றும் காதல் என்றால் என்ன என்று கேட்க,ஐராவோ அதியனின் முகம் பார்த்து சொன்னாள்

 

“காதல்னா எனக்குத் தெரிஞ்சது இப்போ அதியன்..” என்று சொல்ல,அகம் நிறை உணர்வு அதியனுக்கு.

 

“தேங்க்ஸ்” என்றான்  நெஞ்சம் நெகிழ்ந்த நிலையில்…கார் ஓட்டியதால் இடது கையை எடுத்து அவள் கை மீது அழுத்தமாய்ப் பதித்தவன்,

 

“இதை கடைசி வரைக் காப்பாத்துவேன்..” என்றான் உண்மையாக.

 

“டேய்….டேய்……இந்த டயலாக் எல்லாம் எனக்கு வேண்டாம்…எப்படியும் நம்ம கண்டிப்பா சண்டை போடுவோம்..அப்புறம் அடிச்சிக்குவோம்..அப்புறம் சமாதானம் ஆகிடுவோம்..” என்று சொன்னவள்

 

“இது ரொமாண்டிக் ட்ரிப்…சும்மா செண்டிமெண்டா பேசாத..” என சொல்ல,

 

“அப்போ ரொமாண்டிக்கா பேசவா…?”

 

“ரொமாண்டிக்கா பேசவான்னு கேட்டு பேசற ரொமாண்டிக் ஹீரோ நீயா தாண்டா இருப்ப…” என்றாள் இவள்.

 

Advertisement