Advertisement

“ரியாட்ட பேசிட்டு சொல்லவா…” என தயக்கத்தோடு சத்ரியன் கேட்கவும்.

 

“தாராளமா….கல்யாணாமாகிட்டா மிஸஸ்ட்ட கேட்டுதான் எல்லா முடிவும் எடுக்கனும் போலயே” என கிண்டலாய் சொல்லி அதியன் சிரிக்க,சத்ரியன் எதுவும் பேசாமல் புன்னகைத்து விட்டு சென்றான்.ரியாவைத் தனியே அழைத்துப் போய் அவன் விசயத்தை சொல்ல,கேட்டதும் அவள்,

 

“ நான் போக மாட்டேன்…” என பிடிவாதமாய் சொல்ல,

 

“என்னடா சஷிம்மா  நீ…யோசிக்காம உடனே சொன்னா எப்படி…?”

 

“யோசிக்க என்ன இருக்கு..உங்களை விட்டு எப்படி போகறது நான்…?”

 

“ நான் என்ன குழந்தையா தனியா இருந்துப்பேன் டா…  நான் சொன்னா கேட்ப தானே…அடிக்கடி உனக்கு எதாவது தேவைப்படலாம்..சாப்பிடத் தோணலாம்…உடம்பு முடியலனா எப்படி நீயே செஞ்சுப்ப…எனக்கு உன் ஹெல்த் முக்கியம்.நம்ம பாப்பா முக்கியம் டா…ப்ளீஸ் டா செல்லம்மா….சொன்னா கேளு….ஒரு எமர்ஜென்சின்னா கூட யாரும் உன்னோட இல்ல..என்னோட வேலையும் அப்படி….அவங்களுக்கும் உன் கூட இருக்கனும்னு ஆசை இருக்கும் தானே..?”

 

“ஆ……….னாலும்….நீங்க…தனியா….என்னால முடியாதுங்க…..ப்ளீஸ்” என சொல்லி அவன் மேல் சாய்ந்து கொள்ள,அவள் தலையில் இருந்த பூவை வருடியவன்,

 

“என்னால மட்டும் முடியுமா என்ன…? என் பேச்சைக் கேளுடா….எனக்கு நீ நல்ல ஹெல்தோட இருக்கனும்…ஜஸ்ட் நாலு மாசம்….கொஞ்சம் டைம் கிடைச்சா கூட கால் பண்ணிடுறேன்…உங்க அம்மா சாப்பாடை சாப்பிட்டு .நான் கட்டிப்பிடிக்க முடியாத அளவு குண்டாகி வா…சரியா..”என சொல்லி அணைக்க

 

“ப்ச்….போங்க..அதுக்கு அப்புறம் பாப்பா வந்துட்டா…மூணு நாலு மாசம் கழிச்சு தான் அனுப்புவாங்க..தெரியுமா…” என கோபமாய்க் கேட்க

 

“ நோ நோ….அதெல்லாம் சத்ரியன் தாங்க மாட்டான்…அப்போ உன்னை நான் விசுப்பா வீட்ல தங்க வைக்க ஏற்பாடு செஞ்சிடுறேன்…அங்கன்னா நானும் வர போக ஈசியா இருக்கும்…பாரும்மாவும் உன்னையும் பாப்பாவையும்  நல்லா பார்த்துப்பாங்க…” என சொல்ல

 

அவள் அமைதியாக இருந்தாள்.அவளுக்குத் தெரியும் அவனுக்கு உயிராய் உறவாய் இருப்பவள் இவள் மட்டும் தானே..ஆனாலும் பிடிவாதம் பிடித்து இப்படி இருக்கும் நேரத்தில் குழந்தைக்கும் அவளுக்கும் எதாவது காம்ப்ளிகேஷனாகி விட்டால் என பயந்தவள்,அவன் சொல்வது சரிதான் என நினைத்தாள்.ஆனாலும் அவனை எப்படி தனியாய் விட்டுப் போவது…?

 

“என்னைப் பத்தி யோசிக்காதடா…லீவ் கிடைச்சா..ப்ளைட் பிடிச்சாவது உன்னைப் பார்க்க சென்னை ஓடி வந்துடுறேன்…” என சத்ரியன் அவளிடம் சொல்ல,

 

“ம்ம்ம்ம்” என எப்படியோ ஒத்துக்கொண்டாள்.அதன் பின் அனைவரும் விஸ்வநாதனின் வீட்டிற்கு வந்துவிட்டு அங்கிருந்து ரியா அவளின் பெற்றோரோடு சென்னை சென்றாள்.

 

கூடவே அதியனும்.

 

அதியனுக்கும் மனம் தெளிய வேண்டி இருந்தது.பார்த்து பார்த்து வந்த பரவசமா…இல்லை பார்க்காமல் இருந்தாலும் தொடரும் உறவா என தெரிய வேண்டி இருந்தது…அதுவும் இன்று ஐராவைப் புடவையில் பார்த்த பின் அவனுக்கு யோசிக்கவே தோன்றவில்லை.அவளைப் பார்த்த பின் அத்தனை மறந்து மரத்து விட,அவளை விட்டு கொஞ்சம் தூரம் போக எண்ணினான்.

 

காதல் என்பது இதயத்தில் தோன்றும் இதமான இசையல்லவா….இசையை எப்படி விழியால் பார்க்க முடியாதோ அப்படி தானே காதலும் உள்ளத்தால் உணரவும் செவியால் கேட்கவும் தானே முடியும்……எத்தனை தூரம் போனாலும்…எத்தனை காலம் பாராமல் இருந்தாலும் அவனைத் தொடரும் அவன் கொண்ட காதல் ராகமாய்……இன்னிசை ஸ்வரமாய்….

 

#############################################

 

மார்கழி மாதம்…எங்கும் மஞ்சள் பூக்கள் நிறைந்திருக்க……மரங்களுக்கும் குளிரெடுக்கும் கடுங்குளிர் பொழுதில் அதிகாலை நான்கு மணி…ஐராவதி அழகிய சேலை உடுத்தி,தலையில் மலர் சூடி,கோதையாய்,

 

‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்

நீராட போதுவீர்…………’ என திருப்பாவை பாட,

 

அவளது தலைவன் அதியனுக்கு அதைக் காண உள்ளத்துக்குள் பட்டாம்பூச்சிகள் படையெடுத்தன…..குளிரும் உணரவில்லை….பொழுதும் புரியவில்லை….அவனுக்கு காதல் காலமல்லவா….?

 

அதியன் சென்னை சென்று மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.ழகரத்தின் பொறுப்புகளை கூட சென்னையில் இருந்தே மேற்பார்வை பார்த்தான்..மனக்கட்டுப்பாட்டோடு மூன்று மாதமாவது பார்க்காமல் இருக்க வேண்டும் என நினைத்தவனால்  நினைக்காமல் இருக்க முடியவில்லை…

 

கடக்கும் நாழிகை அத்தனையிலும் நாயகியின் நினைவுகளைக் நாயகனிடத்தில் கடத்திப் போனது.மூன்று மாதங்கள் அவளைப் பார்க்காமல் இருந்த போதிலும் எப்போதும் அவள் நினைவே…

 

ஆகையால் பொறுத்தது போதுமென பொங்கியெழுந்து விட்டான் தலைவன்…அதியன் என்றாலும் தலைவன் தானே…?!!

 

இவன் ஐராவின் பாட்டிலும் அவள் மீதும்  நிலைத்து நின்று விட,அவனைக் கண்ட பார்வதி தான்..

 

“அதி..வாப்பா…என்ன அங்கேயே நின்னுட்ட…பனி வேற கொட்றதுப் பாரு…” என்றபடி அழைக்க,ஐராவின் கண்கள் கொஞ்சம் கவனம் தப்பி இவனைக் கண்டாலும் குரலில் தயக்கமில்லை….இயல்புப் போல் இசையில் தவறின்றி திருப்பாவையை அப்பாவை சிறப்பாய் பாடி முடித்தாள்.கூடவே சேர்ந்து அனுராகாவும் தான் பாடினாள்.

 

திருமண வயதில் இருப்பதால் ஐரா மார்கழி மாதந்தோறும் அதிகாலை எழுந்து நீராடி திருப்பாவை பாட வேண்டும்…இது பார்வதியின் கட்டளை…முதல் நாள் என்பதால் ராதா அனுராகாவையும் எழுப்பி விட்டு விட,அவளும் சேர்ந்து பாடினாள்.

 

உள்ளே வந்தவன் அமைதியாய் பாடுபவளைப் பார்த்தான்.

 

‘பேபி…அத்தான் வந்துட்டேன்….ரொம்ப அழகா இருக்க…நீ…ஆனாலும் என்னால இப்ப சொல்ல முடியல..’ என நினைத்துக் கொண்டே அவளைப் பார்த்தான்.

 

அவளோ ,’வந்துட்டியாடா…’ என்ற எண்ணத்தில் தான் அவனைப் பார்த்தாள்.அதுவும் இவன் மூன்று மாதம் வராத காரணத்தால் ஐரா தாத்தாவிடம் ,

 

‘என்ன மிஸ்டர்.ராஜகோபாலன்…உங்க பெயரை ஓட விடுவேன்னு சவால் விட்டேனே…எப்படி இந்த ஐரா விஸ்வநாத்’ என ஜம்பமாய் சொல்லி இருக்க,இப்போது மீண்டும் அவன் வந்துவிட தட் தலையில பல்ப் தட்டி விடுற தருணம் பொண்ணுக்கு…

 

அவனை முறைப்பாய் பார்க்க,அவனோ அவளைப் பார்த்து கண்ணடிக்க,ஒரு நொடி அதிர்ந்தவள்  காலையில் இவனுடன் வம்பிழுத்தால் அம்மாவிடம் திட்டு விழும் என்பதால்,

 

‘சீ போ..’ என வாயை அசைத்துக் காட்ட,

 

‘அத்தைட்ட சொல்லிடவா..?’ என அவனும் அவளைப் போலவே செய்ய

 

‘கொன்னுடுவேன்’ என்று விரல் நீட்டி மிரட்டியபடி சேலை முந்தானையை முன்னால் இழுத்து வலப்பக்கத் தோளில் போட்ட வண்ணம் மாடியேறினாள்.

 

‘அதான் தினமும் கொல்றியே’ என்று நினைத்தவன் பார்வதியிடம் சொல்லிக் கொண்டு அவனது அறைக்குச் சென்றான்.

 

காலையில் அனைவரும் அமர்ந்து சாப்பிடுகையில் ராஜகோபாலன்,மிதப்பாய் பேத்தியைப் பார்த்து வைக்க,

 

“தாத்தா…” என அவள் முறைத்தபடி சொல்ல

 

“என்ன ஐரா  விஸ்வநாத் பொண்ணே… நான் எதுவுமே செய்யலேயே..” என்று அவர் சொல்ல

 

“கோபால்…கோபால்..உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா..கோபால்…” என அவள் சரோஜா தேவிப் போல் பாவனையாய் சொல்ல,

 

“தாத்தாவ என்ன பெயர் சொல்ற பழக்கம்….ஐரா…” என அவள் அப்பா திட்ட

 

“தப்பு தான்..சாரி மிஸ்டர்..விஸ்வநாத்.” என்று ஐரா அசராமல் சொல்ல,

 

“உன்னை…வாலுக்குட்டி” என தலையில் செல்லமாய்த் தட்டி விட்டுப் போனார் விஸ்வநாத்.

 

ஐரா அலுவலகத்திற்கு வழக்கம்  போல் கிளம்பி ஸ்கூட்டரை எடுக்கப் பார்க்க,அதைத் தான் அதியன் வந்ததுமே பஞ்சர் செய்து விட்டானே…

 

“ப்பா….ஸ்கூட்டி பஞ்சர்….என்னை ட்ராப் பண்றீங்களா..” என விஸ்வநாத்திடம் கேட்க,

 

அவரோ “அப்பாவுக்கு இன்னிக்கு சீக்கிரம் பேங்க் போகனும்டா…நீ வம்சியை கூப்பிடேன்..இல்ல அதியன் கூட போயேன்..” என்று சொல்ல,

 

வம்சியோ முந்தி கொண்டு,” நோ நோ..ஐ அம் பிஸி..” என பிகு செய்ய

 

“டேய்..கும்சி….போடா….எனக்கு ட்ரைவர்லாம் இருக்கு…” என தயாராகி வந்த அதியனைப் பார்த்துக் கொண்டே அவள் சொல்ல,

 

“மாம்ஸ்..உங்களை இந்த யானைக்குட்டி ட்ரைவர்னு சொல்றா..” என்றான் வம்சி.

 

“டேய்…யார்டா யானைக்குட்டி…” என ஐரா சண்டையிட

 

“விடுடா..சின்னப்பொண்ணு…ஐரா ஆபிஸ் தானே போறேன்…சேர்ந்து போகலாம் வா..” என கூப்பிட,

 

“வெவ்வே….போடா..கும்சி…லூசே” என சொல்லியவள் அதியனோடு போனாள்.

 

ஆனால் மனோவம்சிக்குத் தான்,மாமா எப்படி இந்த ஐராவுக்கு சப்போர்ட் செய்றார்..மாணிக் பாட்ஷா மார்க் ஆண்டனிக்கு சப்போர்ட் செய்றாரே…சம்திங்…சம்திங்….என்று சரியாய் சொன்னது அவன் மனது.

 

காரில் செல்லும்போது அதியனுக்குள் பரவச மழை….பன்னீர் தூறல்..மார்கழி பனி உடலையும் உள்ளத்தையும்  ஜிவ்வென்று வருடிச் செல்ல,ஐராவோடு இப்படி தனியாய் பயணம் செய்வது அதுவும் முழு மொத்தக் காதலோடு அவளோடு போவது அவனுக்கு இதமும் இனிமையுமாய் இருக்க,அவளிடம் மெல்லமாய் மனம் திறக்க எண்ணியவன்,காரில் பாடலை ஒலிக்கவிட்டான்.அதுவும்….

 

‘இசையில் தொடங்குதம்மா…’ என்ற ஹேராம் பாடல்..

 

பாடல் ஒலித்துக் கொண்டிருக்க,

“நல்ல சாங்ல..ஐரா..” என அதியன் ஆரம்பித்தான் மிகுந்த தயக்கத்தோடு…மிகவும் சாதாரண பேச்சுத்தான்..ஆனால் சட்டென்று வரவில்லை..அதியன் அரண்யன் ஒரு யூத் ஐகான்…அரசியல் தலைவர்கள்….சினிமா பிரபலங்கள்….வக்கீல்கள்….இன்னும் இன்னும் எத்தனையோ பேரிடம் பேசி இருக்கிறான்..பேட்டி கண்டிருக்கிறான்…அவர்களோடு சேனலுக்காய் காரசாரமாய் விவாதம் நடத்தியும் இருக்கிறான்..

 

ஆனால் இது புதிது..அதே நேரம் இனிது…

 

இப்படியெல்லாம் உணர்வை அவன் இதுவரை கண்டதில்லை.மொட்டவிழ்க்கும் மலர் எத்தனை மென்மையாய் மலருமோ அது போலவே தான் அதியனும்…காதலை சொல்ல காலம் பார்த்திருந்தான்…தயக்கமும் ஐராவின் மீதான மயக்கமும் மல்யுத்தம் செய்ய எப்படியோ பேசிவிட்டான்.

 

“ஆமாடா..உனக்கும் பிடிக்குமா…ராஜா சார் லிரிக்ஸ்…அண்ட் மியுசிக்…அதுவும் அஜய் சக்ரபர்த்தி என்ன வாய்ஸ்டா அவருது…என்ன ஒரு டிவினிட்டி…ஹம்ஸ நாதம் ராகம்ல…ஆனாலும் அதுல சரங்க தரங்கிணியும் ஷுத்த தரங்கிணியும் வரும்….” என பேசிக் கொண்டு போக,

 

‘அம்மாடியோவ்…இவட்ட மியுசிக் பத்தி பேசினது என் தப்பு தான்… நான் சாங் சிட்டுவேஷனைப் பத்தி பேசினா இவ ராகத்தை ஆராயுற…அதியா…. இனி டிரைக்ட் ஆக்ஷன்’ என சொல்லிக் கொண்டவன்,

 

“காதலைப் பத்தி என்ன நினைக்கிற ஐரா…?” என்று அதியன் கேட்டதும் அவனை ஆச்சரியமாய் ஒரு பார்வை பார்த்தவள்,

 

“என்னடா…என்ன ஆச்சு….ஏன் இந்த கேள்வி…?” என்று கேட்டாள்.

 

அவனோ அலட்டிக்கொள்ளாமல்,

“ஆன்சர் மீ ஐரா..ஜஸ்ட் உன் ஒபினியன் சொல்லுடி….” என்று சொன்னான்.

 

“ம்ம்..evolutionary pschycology அதாவது பரிணாம உளவியல்படி பார்த்த இனப்பெருக்கத்தை தன்னோட ரகசிய நோக்கமா கொண்டு நகர்த்தபடுற உணர்வு தான் காதல்…காதல்னா அது யார் மேல வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் வரலாம்…இட் இஸ் நாட் டிவைண்ட்…”

 

“அம்மாடி…..நான் உன்ட்ட காதல்னா என்ன்னு கேட்டா தியரி பேசுற….உன்னையெல்லாம் வைச்சிண்டு…கஷ்டம்…”

 

“அடிங்க……என் ஒபினியன் கேட்டா எனக்குத் தெரிஞ்ச தானே நான் சொல்ல முடியும்…தியரி சொல்றேனா…எனக்கு எப்படி ப்ராக்டலா தெரியும்…?… உனக்கு ஏன் டா கஷ்டம்…அதையெல்லாம் என்னைக் கல்யாணம் செய்துக்கப் போறவர் கவலைப்படனும்…” என்றவளுக்கு கோபம் தீராமல் அவனை தோளில் அடிக்க,

 

காரை ஓட்டிக் கொண்டு இருந்தவன் ஓரமாய்க் காரை நிறுத்தி அவளை பார்க்க,அவள் அவனை முறைத்தால் எனில் இவனது அகவெளிகளில் அத்தனையாய் ஆனந்த தூறலும் அடிமனதில் மாருதமும் வீச மந்தகாசமாய் ஒரு புன்னகை வந்து மன்னவன்பால் சேர்ந்தது.

 

‘ நீ நிஜமா பேபி தான் டி ரௌடி ..’ ஒன்லி மைண்ட் வாய்ஸ்

 

“டேய் என்னடா அடிக்கிறேன்…அமைதியா இருக்க..” என அவனை உலுக்க

 

வலதுகையால் தலையில் தட்டிக் கொண்ட நாயகன் முகத்தில் மலராய் மலருகிறது புது வெட்கம்….

 

‘ஒன்னுமில்லை…’ என்றபடி அவன் காரை எடுக்க,

 

“அதியன் அரண்யன் அவர்களே….என்னாச்சு உங்களுக்கு..தனியா சிரிக்கிறேள்….காதல் பத்தி கேட்கிறேள்…இப்ப தலையில தட்டிக்கிறேள்?..” என்று கேட்க

 

எப்படி சொல்வான் அவன்….தியரியை ப்ராக்டிலாக செய்து காட்ட விரும்புகிறேன் என…

 

சொல்ல முடியாமல் இல்லை…சொல்லத் தெரியவில்லை….பரவசம் மட்டுமே மனமெங்கிலும் பயிர் செய்து வைத்திருக்க,பாவை அருகினில் இருப்பதே இவனுக்கு பரம ஆனந்தமாய் இருக்க,எதுவும் பேசவில்லை.

 

“டேய்….என்னடா ஆச்சு..உனக்கு…? சம்திங் ராங்…என்னனு சீக்கிரமே கண்டுபிடிக்கிறேன் நான்…” என ஐரா சவாலாய் சொல்ல

 

“ஓ…ரியலி..” என்றவனின் ஆச்சரிய பார்வை பாவை பக்கம் வீச,

 

“எஸ்…ஐரா இன்வெஸ்டிகேஷனை நீ பார்த்தது இல்லை தானே…இனிமே பார்ப்ப மிஸ்டர்…அதியன்…”

 

“காத்திருக்கிறேன்..” என்றான் காதலாய்….அதை விடவும் அதை மறைக்கும் வகையில்  கவனமாகவும்..

 

“கண்டுபிடிச்சா  என்ன தருவ..?”

 

“என்னைக் கேட்டாலும் தருவேன்…”என்றவனின் ‘என்னை’ என்பது அழுத்தமாய் வந்தாலும் அவள் கவனத்தில் பதியவில்லை.

 

“ஐராவோட ஆக்ஷனை இனிமே பார்ப்படா…” என சொல்லி,

 

“பார்க்க தான் போறேன்…ஆல் தி பெஸ்ட்…முடிஞ்சா கண்டுபிடி..” என்றான் திமிராய்..

 

அதன் பின் அலுவலகம் வந்துவிட ழகரம் செய்திக்காக புதிய செயலித் (mobile app) தொடங்கும் பணியில் அவன் ஈடுபட,ஐராவையும் அவ்வப்போது கலந்தாலோசித்தான்..இடை இடையே ஐராவின் பார்வை அவன் மீது வந்து போக,

 

தலைவன் பக்கம் வாடைக்காற்று வகையாய் வீசிய உணர்வு…உள்ளக் குளிர்வாய் இருக்க,மலர்வாய் மங்கை முகம் பார்த்தவன்,

 

“என்னடி என்னையே லுக் விடுற..” என அவள் மீது பார்வை வைத்துக் கேட்க,

 

“உன் போனை கொடுடா..” என்றதும் ஐரா முன்பு ஐபோன் எல்லாம் என்ன..? என்பதை போல் அவளிடம் எடுத்து நீட்ட,

 

அதியசம் கண்டாற் போல அகல விரிந்தன பெண் விழிகள்…

 

“என்னடா…கேட்டதும் கொடுத்துட்ட”

 

“கேட்டதே கொடுக்கத் தானே..?”

 

“ம்ம்,…நான் ஏன் கேட்டேன் தெரியுமா…உன்னோட இந்த  அவதாரத்துக்கு இதுக்குள்ள எதாச்சும் ஆதாரம் இருக்கான்னு செக் செய்ய தான் ..”

 

“இருந்தா எடுத்துக்கோ….” என அவன் அதில் எதுவும் இல்லாதது போல் இயல்பாய் பேசினான்..உண்மையும் அதுதானே…அவளை அவன் எடுத்து அந்த ஓற்றைப்படம் தானே இருக்கும்..அதையும் அவள் ஆராய்வாள் என அவனுக்குத் தோன்றவில்லை..

 

“இப்படி பேசினாவெல்லாம் நாங்க நம்பிட மாட்டோம்….நான் எதையும் தீர விசாரிச்சு தான் முடிவெடுப்பேன்..” என்றபடி அவன் அறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தே அதை அவள் பார்க்க,இவன் அவளைப் பார்க்க,பார்த்து பார்த்து பறந்து போனது காலம்.

 

 

அன்று அதியனின் பிறந்த நாள்…வெளியே சென்று விட்டு அப்போது தான் அதியன் வீட்டிற்குள் நுழைய,விஸ்வ நாதனும் ராம நாதனும் மருமகனுக்கு வாழ்த்து சொல்ல,

 

“தேங்க்ஸ் மாமா…தேங்க்ஸ் சின்ன மாமா” என்றவன்,

 

“எங்க வீட்டுல யாரையும் காணோம்..” என்று கேட்க

 

“அனு ஷாப்பிங் போகனும்னு சொன்னா ஸோ எல்லா லேடிஸும் ஷாப்பிங்..” என்றதும், அப்பாடா என நினைத்தவன்

 

“என்ன மாமா…வெறும் விஷ் தானா…கிஃப்ட்லாம் எதுவும் இல்லையா..?” என கேட்கவும்

 

“அதுக்கென்னடா..கண்ணா…உனக்கு இல்லாததா….?” என்ற விஸ்வநாத்

கழுத்தில் இருந்த செயினைக் கழட்டி அவனுக்குப் போட போக,

 

“மாமா…இதெல்லாம் வேண்டாம்..” என அவன் மறுக்க

 

“கொடுக்கறச்ச நோ சொல்லாத..” என்றபடி அவனுக்கு அவர் அணிவித்தும் விட,

 

“மாமா……நான் கேட்காத கிஃப்ட் கொடுத்துட்டீங்க…..ஆனா கேட்டதை தருவீங்களா…?” என்றான் அதியன்…ஐராவிடம் சொல்லி எதாவது சொதப்பி  விட்டால் என்ற எண்ணம் தோன்ற,பேசாமல் மாமாவிடமே டிரைக்ட் டீல் செய்து விடலாம் என நினைத்து வைத்திருக்க அதற்கு தோதாய் அமைந்தது அவனது பிறந்த நாள்.

 

“என்ன வேணும் கேளுடா..” என ராம நாதனும் சொல்ல

 

“எனக்கு ஐரா வேணும் மாமா..” என அவன் சொல்ல அண்ணன் தம்பி இருவரும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,

 

“டேய்..என்ன சின்ன வயசுல ஐஸ்கீரிம் வேணும்னு கேட்கிற மாதிரி கேட்குற..நீ இப்போ என்ன கேட்ட.?.” என ராம் மீண்டும் கேட்க

 

“எனக்கு..ஐரா வேணும் மாமா…என் மனைவியாய்…என் காதலியாய்…ஐ அம் இன் லவ் வித் ஹெர்…ஐரா கூட சேர்த்து ஐஸ்கீரிம் கொடுத்தாலும் கூட ஓகே…” என அவன் மிகவும் கூலாய் சொல்ல,

 

அது வரை அமைதியாய் இருந்த விஸ்வநாத்

 

“கண்டிப்பா முடியாது..” என்றார் திண்ணமாய்.

 

அதியனோ அது வரை இருந்த அமைதி,நம்பிக்கை எல்லாம் மெல்லமாய் உதிர்ந்து போக,அதுவும் தன் மாமாவே முடியாது என்று சொல்ல உள்ளம் அதிர அவரை பார்த்தான்.

 

காதல் கவனமாகும்..!!!

 

Advertisement