Advertisement

தேடல் 9 :

காலையில் கணவனின் கையணைப்பில் இருந்த ரவீணா ,அவனுள் மேலும் புதைய,ஹர்ஷாவோ ,

 

“ஓய்….வினு..ஆபிஸுக்கு லேட் ஆச்சுடி.வா கமான்..” என அவளை விலக்கி விட்டு எழ அவன் குளித்து விட்டு வரும் வரையில் ரவீணா எழாமல் இருக்க,தலையணையை எடுத்து அவள் மேல் வீசியவன்,

 

“ஹே…வினு…புஜ்ஜிமா…எழுந்திருடி….டைம் ஆச்சுமா” என சத்தம் போட

 

“போடா….எனக்குத் தூக்கம் தூக்கமா வருது….நான் ஆபிஸ்க்கு லீவ்…” என அவள் சொல்ல,அவளருகில் சென்றவன் அவள் தலை கோதி ,

 

“புஜ்ஜூமா இப்போ லீவ் எடுத்துட்டா நமக்கு  ஹனிமூன் போக லீவ் கிடைக்காதுடி.என் ஆசையில மண் அள்ளிப் போடாதடி பொண்டாட்டி..ப்ளீஸ் வா…” என அவளை எழுப்பி விட,அவளும் போனால் போகட்டும் என கிளம்பினாள்.

 

ரெடியாகி கீழே வந்தவள் சமையலறைக்குள் சென்று பார்க்க,அங்கே ஹர்ஷா தலையில் துண்டை தலைப்பாகைப் போல் கட்டிக் கொண்டு ,மும்முரமாக சமையலில் ஈடுபட்டிருந்தான்.இவள் பின்னால் சென்று நிற்க,அவனோ அதை உணர்ந்தவனாய் அவளை கைகொடுத்து முன்னால் இழுத்து சமையல் மேடையில் சாய்த்து,

 

கையில் இட்லியை சட்னியில் தொட்டு அவள் வாயில் வைத்தான்.அதை சாப்பிட்டவள் கண்கள் கலங்க கணவனை நோக்க,

 

“ஏய்..என்ன காரம் அதிகமா?” என அவன் கவலையாக கேட்க

 

ரவீணாவோ தலையை ஆட்டி விட்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்.பின்னர் தனது துப்பட்டாவில் அவன் முகத்தில் இருந்த வியர்வையைத் துடைத்தவள் ,

 

“யூ ஆர் சோ ஸ்வீட் ஆதி…” என்றாள் புன்னகையோடு.

 

“உன்னை விடவா புஜ்ஜூ..” என்றவன்

 

“நீ சீக்கிரம் சாப்பிட்டு.இந்த தக்காளி தொக்கை ரைஸ்ல போட்டு கிளறி பேக் பண்ணு.நான் போய் ரெடியாகி வரேன்” என சொல்லிவிட்டு மாடியேறினான்.

 

அதன்பின் இருவரும் காரில் பயணிக்கும்போது ரவீணாவோ தூங்கி வழிந்தாள்.அலுவலகம் வந்த பின் ஹர்ஷா ரவீணாவை எழுப்ப அவன் மேலேயே அவள் தூங்கி சாய,

 

“வினு…ஆபிஸ் வந்துடுச்சு. நான் மட்டும் நல்லா தூங்கின மாதிரி நீ சுகமா தூங்குற..இப்போ நீ எழுந்திருக்கலன்னா நான் உன்னை தூக்கிட்டுப் போவேன் “  என அவன் மிரட்ட

 

“சரி தூக்கிட்டு போ” என்று அவள் கைகளை நீட்ட,

 

“அடியே….நான் ஆபிஸ்ல ரொம்ப குட் பாய்..இங்க எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு.டேமேஜ் பண்ணாதடி ..” என அலறியவன் காரை விட்டு இறங்க,ரவீணாவும் இறங்கினாள்.

 

பதினொரு மணி போல் ,ரவீணா ஹர்ஷாவின் அறைக்குள் சென்றாள்.இரவெல்லாம் தூங்காமல் இருந்த காரணத்தால் அவளுக்குத் தலைவலிக்க,வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை.தப்பும் தவறுமாய் செய்து டீம் லீடிடம் திட்டு வாங்கினாள்.

 

ஹர்ஷாவின் அறைக்குள் செல்ல,மனைவியைக் கண்டவன் உற்சாகமாய்ப் புன்னகைத்தான்.அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவன் இவளைப் பார்த்து புன்னகைக்க ,அதில் அவனது கன்னத்தில் குழி விழ,ரவீணாவும் அவனையே ரசித்துப் பார்த்தாள்.

 

அலைபேசியை அணைத்து விட்டு மனைவியைப் பார்த்து கண்ணடித்தவன் ,

 

“என்ன மிசஸ் ரவீணா…?” என ப்ராஜ்க்ட் மேனேஜராய் கெத்தாக அவளை கேள்வி கேட்க

 

“ஆதீயீயீயீயீயீ..” என அவள் முறைக்க

 

“வாட் டூ யூ வாண்ட் ரவீணா..ஐ காண்ட் எண்டர்டெயின் யூ ட்யூரிங் ஆபிஸ் ஹவர்ஸ்..சீக்கிரம் சொல்லுங்க..” என நமட்டுச் சிரிப்போடு சொல்ல

 

“வேண்டாம்டா…பம்ளீமாஸ்…உன்னை அடிச்சிடுவேன்…” என அவள் திட்ட

 

அவள் அருகே வந்து கைப்பிடித்தவன் , “என்னது பம்ளிமாஸா…உன்னை..” என அவன் மனைவியின் காதை திருக

 

“ஆதி..ப்ளீஸ் ப்ளீஸ்.என் டீம் லீட் அந்த மைதா மாவு அபய் என்னை திட்டிட்டான்..நீ தான் என்னைக் காப்பாத்தனும்…என் செல்லமில்ல..பம்ளிமாஸ்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.எவ்வளவு ஸ்வீட்ட்ட்ட் என்னோட ஆதி போல..அதான்…” என அவள் ஐஸ் வைக்க

 

“என்ன செஞ்ச நீ.. அபய் உன்னைத் திட்டறதுக்கு..?” என அவன் அக்கறையாக கேட்க

 

“ நான் ஒன்னும் செய்யல..நீ தான்..”

 

“நானா?  நான் என்னடி செஞ்சேன்..?”

 

“பின்ன..நைட்லாம் நீ…என்னை தூங்க விடல…இப்போ தூங்கி வழிஞ்சு..தலை வலிச்சு….என்னால சரியா வேலை செய்ய முடியல..அவன் கொடுத்த வொர்க்கை நான் தப்பு தப்பா செஞ்சிட்டேன்..இப்ப என்னை அவன் லஞ்சுக்குள்ள முடிச்சு தர சொல்றான்..என்னால கவனமா செய்ய முடியல..” என அவள் புலம்பித் தள்ள

 

“போதும் போதும்டி…ஆத்தா…எவ்வளவு பெரிய விளக்கம்…ம்ம்…பொண்டாட்டி ஸ்வீட்னு வேற சொல்லிட்ட..செஞ்சிடுறேன்..போ.ஆனா இதே வேலையா வைச்சிக்காத” என சொல்ல

 

“என்னமோ உரிமை..கடமைன்னு சொன்ன…அப்புறம் நான் போய் ராம் கிட்ட அப்புறம் தட் ஸ்மார்ட் மேன் ஷ்யாம் எல்லார்கிட்டையும் டவுட் கேட்பேன்.ஒகேவா” என அவள் மிரட்ட

 

“அம்மாடி…என்ன கொழுப்பு உனக்கு.போடி…உன் புருஷன் நான் தான் உன் வேலையும் சேர்த்து செஞ்சு தருவேன்..ஊர்ல உள்ளவன்லாம் உனக்கு செய்ய மாட்டான்..” என அவன் முறுக்கிக் கொள்ள

 

“என் செல்ல பப்ளி இல்ல…சிரி…அப்போதான் நல்லா இருக்கு..” என்றவுடன் அவன் மந்தகாசமாய்ப் புன்னகைக்க ,அதன் காரணமாய் விழுந்த கன்னத்து குழியில் அவள் முத்தமிட்டு உடனே விலக,

 

“ஹே..!! இது ஆபிஸ்..இதெல்லாம் கூடாது.” என அவன் கண்டிக்க

 

“போடா…அப்புறம் தம்பி வேலை சரியா இருக்கனும்..” என அவள் தோரணையாக சொல்ல,

 

“சரிங்க மேடம்” என்றான் இதயமும் இதழும் நிறைந்த புன்னகையோடு.

 

இரவில் அவன் மும்முரமாக லேப்டாப்பில் வேலைப் பார்க்க,

“ஊப்ஸ்….ஆதி…மணி பதினொன்னு ஆச்சு..வா தூங்கலாம்” என அவன் பின்னால் அமர்ந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவள் சொல்ல,அதில் மயங்கினாலும் ,

 

“என்னமோ எனக்கு மட்டும் வேண்டுதல் மாதிரி பேசுற…உன்  வேலையை நான் செஞ்சுக் கொடுத்துட்டேன்.என் வேலையை யார் செய்றது.அதான் இப்போ உட்கார்ந்து செய்றேன்..” என்றவன் மீண்டும் வேலையில் மூழ்கிப் போக,

 

அவள் “சாரி…ஆதி….நான் இப்போ சீக்கிரமா தூங்கிடுறேன்..இனிமே இப்படி  தொந்தரவு கொடுக்க மாட்டேன்..” என அவள் உணர்ந்து சொல்ல

 

“அய்யே..மக்கு…” என அவள் தலையில் தட்டியவன்

 

“உனக்கு செய்யாம யாருக்கு செய்வேன்..இப்போ நீ சீக்கிரமா தூங்க..நான் உன்னை விட்டுடுவேனா  என்ன..? அதெல்லாம் முடியாது..முதல்ல போய் பால் காய்ச்சி எடுத்துட்டு வா…எனக்கு டயர்டா இருக்கு ..”என சொல்ல அவளும் அவன் சொன்னபடி செய்தாள்.

 

அவனுக்குக் கொடுத்த பாலைக் குடித்தவன் அவள் குடிக்கும் வரைக் காத்திருந்தான்.பின்னர் படுக்கையை சரி செய்தவன் ,அவள் குடித்து விட்டு பால் கிளாஸை டேபிளில் வைத்து விட்டு ,ஞாபகமாக வாயைத் துடைக்கப் போக,

 

“ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்” என அலறியே விட்டான்.

 

அவள் என்னமோ ஏதோ என பதறிப் போய் பார்க்க ,அவளருகில் வேகமாகச் சென்றவன் ,

 

“ஏன் நீ கஷ்டப்படுற..நான் ஏன் இருக்கேன்..?” என விசமமாய் சொல்ல,

 

“இதுக்குத் தான் இவ்வளவு சீனா..நான் கூட கத்துனதுல பயந்துட்டேன்…போங்க..” என சிணுங்க..

 

அவனோ ,” சில விசயங்கள் சொன்னால் புரியாது.சுவைத்தால் மறக்காது புஜ்ஜுமா..அப்படிதான் இந்த பாலும்..” என்றபடி அவள் இதழில்  இருந்த பாலை வருடினான்.

 

அதன் பிறகு ஹர்ஷா புரியாததை புரிய வைக்க உலகை மறந்தனர் அவர்கள்.

 

இப்படியே ஒருவரை ஒருவர் உள்ளத்தால் நெருங்கி உணர்ந்து கொண்டனர்.நாளாக நாளாக அவர்கள் கொண்ட அன்பும் வளர்ந்தது.ஊருக்குச் சென்று விட்டு சிந்துஜாவும் வைதேகியும் திரும்பினர்.

 

ஒரு ஞாயிற்றுக்கிழமைப் போல் ரவீணா  மாலையில் தூங்கி எழுந்து  முகம் கழுவி விட்டு தன்னை ரெடி செய்து கொண்டிருந்தாள்.அவள் பின்னால் வந்து நின்று ஹர்ஷா அவள் கழுத்தில் முகம் புதைத்து,

 

“புஜ்ஜூமா…ரொம்ப அழகா இருக்க..” என்றான் குழைவாக

 

“தேங்க்ஸ் “ என்றாள் வெட்கத்துடன்

 

“வினுக்குட்டி..இப்போ நம்ம வீட்டுக்குக் கெஸ்ட் வந்திருக்காங்க.என் ப்ரண்டும் அவன் மிசஸும் வந்திருக்காங்க.நீ அவங்களை நல்லபடியா வரவேற்கனும்” என அவன் பூடகமாய்ப் பேச

 

திரும்பியவள் அவன் கன்னத்தைக் கிள்ளி,கழுத்தில் கரம் கோர்த்து

“என்ன நீங்க உங்க ப்ரண்டுன்னு சொல்றீங்க.நான் நல்லா கவனிக்க மாட்டேனா பப்ளி…” என கொஞ்ச

 

அவள் இடையில் கைக்கொடுத்தவன் ,”அதெல்லாம் சரிதான் வினு.நீ அவங்களைப் பார்த்து கோபப்படக் கூடாது.நல்லபடியா பேசனும்.” என சொல்ல

 

அவனது பேச்சில் கடுப்பானவள் ,“லூசாடா நீ..நான் என்னிக்கு போய் எல்லார்க்கிட்டையும் போய் சண்டை போட்டிருக்கேன்.அப்படி நான் கோபப்படுற அளவுக்கு யாரு வந்திருக்கா..?” என அவனிடமிருந்து விலகி செல்ல,ஹர்ஷாவோ அவளை தடுத்து சமாதானம் செய்ய நினைப்பதற்குள் கீழே இறங்கி விட்டாள்.

 

ஹாலில் மேடிட்ட வயிற்றோடு அமர்ந்திருந்த பூமிஜாவையும் அவளருகில் இருந்த அவளது கணவனையும் கண்டவள் வேக வேகமாக படியேறினாள்.அறைக்குள் வரும்போது ஹர்ஷாவும் அறையை விட்டு வெளியே வர,இருவரும் மோதிக் கொண்டனர்.அவளது கோபம் முகம் கண்டவன் அவளை சமாதானம் செய்ய நினைத்து அவள் பின்னாலேயே வர,

 

“ஏன் பின்னால ஏன் வரீங்க..போய்  உங்க கெஸ்டை கவனிங்க…என்னை விட அவங்க தானே முக்கியம்..” என்று சிடுசிடுத்தாள் ரவீணா.

 

“வினு…….நான் யூஎஸ் போனப்போ தான் இவங்களைப் பார்த்தேன்.பூமியோட ஹஸ்பண்ட் கிருஷ்ணா டாக்டர்.பூமிஜா ப்ளட் டொனெட் செய்ற ஆஸ்பிட்டல கிருஷ்ணா வொர்க் பண்ணிருக்கார்..அப்படியே இரண்டு பேருக்கும் பழக்கம்..ரொம்ப நல்லவர்.பாவம் அவருக்கு யாருமில்ல.உங்க வீட்ல வேற கேஸ்ட்லாம் பார்ப்பீங்களா..அதான் கிருஷ்ணாவைப் பத்தி பூமிஜா வீட்ல சொல்லல”

 

“ஏன்….உங்க வீட்ல ஜாதி மதம் எல்லாம் பார்க்க மாட்டீங்களா..? கிருஷ்ணா அவ்வளவு நல்லவர்னா ஏன் கல்யாணத்தனைக்குப் பொண்ணைக் கூட்டிட்டு ஓடிப்போகனும்?” என்றாள் சீறலாய்.

 

“அதெல்லாம் சரிதான்..விடு…எதுக்கு இன்னும் கோபத்தைப் பிடிச்சிட்டு தொங்கனும்..? அவங்க எங்கிட்ட சாரி கேட்டாங்க.அவங்க விருப்பப்படி வாழ்க்கையை அமைச்சிக்கிட்டாங்க.பாவம் மாசமா வேற இருக்கா உங்க அக்கா..இப்போ ஏன் பழசை பேசனும்?அவருக்கும் யாருமில்ல..அவளை இந்த நிலைமையில அங்க தனியா வைச்சிக்க அவருக்கு விருப்பமில்ல..அதனால தான் நான் அவங்களை இந்தியாவுக்கு வர சொன்னேன்.உன்னைப் பார்க்கனும்னு ரொம்ப ஆசையா வந்திருக்காங்கடா..ப்ளீஸ் எனக்காக வா” என ஹர்ஷா மனைவியை சாந்தபடுத்த

 

“நீங்க என்ன சொன்னாலும் என்னால கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது ஹர்ஷா அவளை இந்த நிலைமையில கத்திட கூடாதுன்னு தான் நான் வந்துட்டேன்.அவ்வளவுதான் என்னால முடியும்.அதுக்கு மேல எதுவும் எதிர்ப்பார்க்காதீங்க.அவ ஆசையா என்னைப் பார்க்க வந்தாளா..? இத்தனை நாள் இல்லாத அக்கறை இப்போ எதுக்கு?அவ இஷ்டத்துக்கு போனாள் இல்லையா? ப்ளீஸ் ஆதி…..அவளோட சுய நலம் அவளுக்குப் பெருசு..தப்பில்ல..எங்கப்பாம்மாவோட  மானம் மரியாதை அவங்களுக்குப் பெரிசு தப்பில்லை.ஆனா உங்க மேல நான் நிறையா மரியாதை வைச்சிருக்கேன்.தயவு செஞ்சு ப்ளாக்மெயில் செய்யாதீங்க…என்னை..” என அவள் கண்கள் கலங்க சொல்ல

 

“அப்படி என்ன கோவம் உனக்கு..? எனக்கு மட்டும் கோவமில்லையா..? அவ ஓடி போய் நல்லது செஞ்சதா தான் நான் நினைக்கிறேன்.உனக்குத் தான் அப்படி இல்லை போல..” என்றான் கோபத்துடன்.

 

“ஓ..இப்படி வேற பேசுவீங்களா..குட்..வெரி குட்….நான் இந்த விசயத்துல உங்களை இழுக்கவே இல்லை.நீங்களா இப்படி கற்பனை செஞ்சா நான் பொறுப்பில்லை ஆதி.அதுவும் எனக்கு நீங்க எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கு தெரிஞ்சும் இப்படி கேட்கிறது ரொம்ப அபத்தம்.அவ லவ் பண்றதை முன்னாடியே சொல்லியிருக்கலாம்.நான் என்னால முடிஞ்ச எதாவது செஞ்சிருப்பேன்.அப்பா அம்மாவை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணியிருப்பேன்.ஆனா அவ செஞ்ச காரியத்தால நம்மளோட ஏழு மாச வாழ்க்கைதான் போச்சு.எவ்வளவு மன உளைச்சல் நமக்கு.அதெல்லாம் மறந்து போச்சா” என்றாள் அவனுக்கு சளைக்காத ஆத்திரத்துடன்.

 

“ஆமா மறந்துதான் போச்சு..உன்னால..உன்னோட அருகாமையால பாசத்தால காதலால எல்லாமே மறந்து போச்சு..உனக்கு ஆனா மறக்கல..இல்ல…” என ஹர்ஷா கடுமையாகப் பேச

 

“ஆதி…போதும்..அவளுக்காக நாம சண்டை போட வேண்டாம்..லீவ் இட்” என்று அவள் படுத்துக் கொள்ள,

 

அதன்பின் ஹர்ஷாவும் கீழே வந்து சிறிது நேரம் அவர்களோடு பேசினான்.வைதேகியும் எதையும் காட்டிக் கொள்ளாது பேச ,பூமிஜா அவரிடமும் மன்னிப்புக் கேட்டாள்.

 

அவரோ “விடுமா…புள்ளத்தாச்சிப் பொண்ணு கண்ணு கலங்கலாமா?…இப்ப என்ன நடந்து போச்சு..ரவீணா மாதிரி ஒரு மருமக கிடைக்க நாங்க புண்ணியம் செஞ்சிருக்கனும்.” என்று சொல்ல பூமிஜாவுக்குத் தான் இழைத்த தவறால் தங்கையின் வாழ்வில் ஏற்பட்ட சிக்கல் தீர்ந்த நிம்மதி உண்டானது.ஹர்ஷாவும் சரி வைதேகியும் சரி ரவீணாவை விட்டுக் கொடுக்காது பேச அவளுக்கு மகிழ்ச்சி தான் .தங்கையின் வாழ்க்கையைக் கெடுத்து விட்டோமென இருந்த குற்றவுணர்வு நீங்கியது.

 

இரவில் ஹர்ஷாவோ பயந்து கொண்டே வந்து படுக்க ,ரவீணாவோ சகஜமாக இருந்தாள்.அவன் அமைதியாகப் படுக்க,ரவீணாவோ அவன் மேல் சாய்ந்து கொண்டு,

 

“ஒருத்தர் மேல உள்ள கோபத்தை அடுத்தவங்க மேல நான் காட்ட மாட்டேன்” என்றாள் ரவீணா.

 

ஹர்ஷாவோ அவளை அணைத்துக் கொண்டு ,”சாரி” என்றான்.

 

“சாரியெல்லாம் எனக்கு வேண்டாம்” என சொல்ல ஹர்ஷாவோ

கண்ணடித்து ,

 

“ஒஹ்..அப்போ வேண்டாம்னா உன் சாரியைக் கொடுத்துடு…” என சரசமாய்க் கேட்க,ரவீணாவோ கண்களை அகல விரித்து,

 

“உன்னை……போடா..” என கைவைத்துத் தள்ளி விட,

 

“அதெல்லாம் போக முடியாது..” என்றபடி அவளை இறுக்கியவன்,

 

“சாரி வினு..உனக்குப் பிடிக்காதுன்னு தெரியும்.பட் இந்த சில மாசத்துல உனக்குக் கோபம் போயிருக்கும்னு நினைச்சேன்.இங்க பாருடா தேவையில்லாம எதுக்கு நாம கோபத்தை சுமக்கனும். நான் எப்போதுமே லைஃப் ஸ்மூத்தா போகனும்னு நினைக்கறவன். ஓப்ரா வின்ஃப்ரே என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா true forgiveness is when you can say thankyou for that experience.உண்மையான மன்னிப்புங்கறது எப்போ தெரியுமா சொல்வாங்க அந்த அனுபவத்துக்கு நாம நன்றி சொல்ல முடியும்போது தான்.”

 

“இப்போ பூமிஜா செஞ்சதுக்கு ஐ அம் தாங்க்ஃபூல் டூ ஹெர்.அதனால தான் மன்னிக்க முடிஞ்சது.உன்னை நான் கம்பெல் பண்ணல.உனக்கா என்னைக்கு விருப்பமோ அப்போ மன்னிச்சிடுடா..மனசை ரிலாக்ஸா வைச்சிக்கோ..” என்றான் அவளை ஆதுரமாய் வருடியபடி.

 

“மறக்க முயற்சி பண்றேன் ஆதி” என்று முறுவல் செய்த மனைவியை கண்ணோடு நோக்கி

 

“அதை மறக்கலாம் சரி.ஏதோ சாரி வேண்டாம்னு சொன்னியே..அது..”

 

“நான் எதுவும் வேண்டாம்னு சொல்லலையே” என்ற அவளது பாஷை புரிந்தவன் அவளுள் வேண்டியே புதைந்தான்.

Advertisement