Advertisement

சத்ரியன் ஐரா நலமாய் இருப்பதைப் பார்த்தவன் அடியாட்களைக் கவனிக்க செல்ல,அதியனின் உடல் நடுங்க,ஐராவை அப்படி அணைத்திருந்தான்.

 

அவன் அகம் துடிக்கும் ஓசை அவளுக்கும் கேட்டது….அவன் அணைத்திருந்த விதத்தில் அவன் அகத்தின் ஓசை இவளால் உணர  முடிய,அவனின் பதட்டம் புரிபட,இவளும் ஒன்றும் சொல்லாமல் அவனை அணைத்திருந்தாள்.

 

“அதி…ஐ அம் ஓகே..” என்றபடி அவன் முதுகை இவள் தட்டிக் கொடுக்க,உடனே அவளை விட்டு விலகி அங்கு கிடந்த தன் ஐபோனை எடுத்துத் தன் பாக்கெட்டில் போட்டவன் பார்வையை பாவையிடத்தில் அழுத்தமாய்ப் பதிந்து பின் ,சத்ரியனிடம்,

 

“சத்தி..என்ன செய்யனுமோ சொல்லிட்டு நீ இவளை அழைச்சிட்டு கீழ காருக்கு வா… நான் சுபாஷ் அப்பா கிட்ட பேசிடுறேன்..” என்றபடி படிகளில் இறங்கி செல்ல,ஐராவும் அவன் பின்னாடியே போனாள்..சத்ரியன் அடிப்பட்டவர்களை ஹாஸ்பிட்டல் அனுப்ப சொல்ல, கீழே இறங்கி கொண்டிருந்த ஐரா,

 

“சத்தி….பாத்ரூம்ல ஒருத்தனை வைச்சுப் பூட்டிட்டேன்…ஜாடியால வேற அடிச்சேன்…அவனையும் பார்க்க சொல்லு..” என சொல்ல

 

‘ஆத்தாடி’ என்பதாய் அவளை பார்த்த சத்ரியன்,

“நாங்க உன்னைக் காப்பாத்தலாம்னு வந்தோம்..கடைசியா இவனுங்களை காப்பாத்த வேண்டியாதகிடுச்சே…..” என்று சொல்லி சிரிக்க,ஐராவோ,

 

“ம்ம்…வழக்கம்போல் லேட்டா வந்துட்டு போலிஸ்க்கு லந்துக்கு ஒன்னும் குறை இல்ல” என முறைத்தபடி செல்ல

 

காரில் சாய்ந்தபடி அதியன் சுபாஷின் தந்தையிடம் நன்றி சொல்லிக் கொண்டிருக்க,அவரோ ,

“தம்பி….எங்க கட்சி மானம் போயிடும்..எப்போ எப்போன்னு காத்துட்டு இருக்கானுங்க மத்த கட்சிலாம்..இந்த எவிடன்ஸ்லாம்..அந்த பொண்ணு வைச்சிருக்காமே..சுந்தரேசன் பயப்படுறான்…” என சொல்ல

 

அதியனோ ,”அங்கிள்….பேசாம அந்த முன்னாள் எம்பியை முன்னாள் எம்பியாகவே இருக்க சொல்லுங்க…” என்று சொல்ல

 

“என்ன தம்பி சொல்ற..” என்று அவர் கேட்க

 

“ம்ம்…இனி அரசியல் பக்கம் வராதன்னு சொல்லுங்க அவர்ட்ட..ஓய்வு எடுக்க போறேன்..கட்சியை விட்டு நீங்கிடுறேன்னு அறிக்கை விட சொல்லுங்க….அவர் மகனும் தப்பித் தவறி அரசியலுக்கு வரக் கூடாது..ஒரு ஜாதி வெறிப் பிடிச்ச கொலைகாரன் அரசியல்ல வந்து ஆட்சிக்கு வரத நான் விரும்பல…அப்படியும் மீறி அந்த அருண் வரனும்னு நினைச்சா…இந்த அதியன் யாருன்னு காட்டிடுவேன்…என் வீட்டுப் பொண்ணுன்னு இல்ல…எந்த பொண்ணா இருந்தாலும் அவன் செஞ்சது தப்பு….ஒழுங்கா எங்காவது வெளி  நாட்டுக்குப் போய் செட்டிலாகிட சொல்லுங்க..கௌரவம் சொத்துன்னு மிஞ்சும்..இல்ல….இங்கேயே இருப்பேன்…என் தொகுதினு சவுண்டு விட்டான்..ஏர்ல விடுவேன் அவன் அத்தனை தப்பையும்…இப்பவும் ஒரு மனுஷன்னு கூட பார்க்காம தங்கை வீட்டுக்காரை கொன்னுருக்கான்…அதுக்குக் கண்டிப்பா அதியன் தண்டனை தரலனாலும் ஆண்டவன் தருவான்…அப்படி  நான் சொன்னது கேட்காம..என் வீட்டுப்பொண்ணை திரும்பி எதாவது செய்ய  நினைச்சா கூட போதும்…ஆண்டவனுக்குலாம் வெயிட் செய்ய மாட்டான் இந்த அதியன்….” என்று அத்தனை கோபமாய்ப் பேசியவன்

 

“சரியான நேரத்துக்கு உதவியிருக்கீங்க அங்கிள்…ரொம்ப நன்றி…வைச்சிடுறேன்” என்றபடி போனை வைக்க,அவருக்குத் தோன்றியது ஒன்றுதான் நல்ல காலம் நம்ம இவன்ட்ட சிக்கல….

 

“டேய்..அந்த சுந்தரேசன் மகன் மாதிரி..எதுவும் தப்பு கிப்புல மாட்டிகாத.. நண்பனு கூட பார்க்காம கிழிச்சி தொங்குவிட்டிருவான் போல இந்த அதியன்..” என்று தன் மகன் சுபாஷை எச்சரித்து விட்டுப் போனார்…

சத்ரியன் ஐராவுடன் காரின் அருகில் வர,அதியன் பேசி விட்டு வருவதற்குள் அத்தனையும் தோழியிடம் சொல்லி  முடித்தவன்,

 

“அப்பா கிட்ட பேசிடு ஐரா…” என்று அவன் தன் போனை தர,

 

“அப்பா.. நான் நல்லா பத்திரமா இருக்கேன்…..ஒன்னும் கவலைப்படாதீங்க..வீட்டுல எல்லார்கிட்டையும் சொல்லிடுங்க..நாங்க வந்துடுறோம்..” என்று சொல்லி வைக்க,அதியன் வரவும் காரில் அனைவரும் ஏறி உட்கார,அதியனின் கைகளில் கார் சீறிப்பாய்ந்தது.

 

சத்ரியன் ஐராவிடம் அதியனின் செயலை ,அவன் கோபத்தை சொல்லியிருக்க,இவளுக்கோ ‘அவன் செஞ்சது பெருமை இல்லடா..கடமை..’ என்று சொல்லத் தோன்றினாலும் அமைதியாகவே இருந்தாள்..

 

இவள் பின்னால் உட்கார்ந்திருக்க,சத்ரியன் முன்னால் அதியனோடு அமர்ந்திருந்தான்.

 

“அதி…காரை ஒரு ஹோட்டல்ல நிறுத்து…” என்று சொல்ல

 

“வீட்ல போய் சாப்பிடலாம் ஐரா..பசிக்குதா..” என சத்தி கேட்க

 

“ம்ம்…ஆமா…டா…மதியம் ஒரு மணிக்கு சாப்பிட்டதாச்சே..” என்று சொல்ல,சிறிது நேரம் கழித்து அதியனின் கைகளில் கார் ப்ரேக் அடித்து நிற்க,

 

“இறங்குங்க…அவ கையில ரத்தம் வருது…டிடி போட்டு அழைச்சிட்டு வா சத்தி..” என்று ஒரு ஹாஸ்பிட்டலின் முன் நிறுத்தி இருந்தான்.

இவர்களும் சென்று டிடி போட்டுக் கொண்டு வர,அதன் பின் ஒரு ஹோட்டலின் முன் நிறுத்தியவன்,

 

“சாப்பிட்டு வாங்க..” என்று சொல்ல

 

“நீங்களும் வாங்க…” என்று சத்ரியன் அழைத்தான்…அதியனும் தானே சாப்பிடவில்லை…எப்படியும் வீடு செல்ல ஒரு மணி நேரமாவது ஆகுமே…

 

“எனக்குப் பசியில்லை..நீங்க போங்க..நான் கார்ல வெயிட் பண்றேன்..” என்று சொன்ன அதியனை வித்தியாசமாய்ப் பார்த்தாள் ஐரா..அப்போது தான் தெரிகிறது அவன் தன்னிடம் பேசவே இல்லையென..ஆனாலும் என்னதான் செய்கிறான் பார்ப்போம் என பொறுத்தவள் சத்தியோடு சாப்பிட செல்ல,மறக்காமல் வீட்டிற்கு அழைத்து ,’பசிக்குது….சாப்பிட்டு வரேன்மா…நீங்களும் சாப்பிடுங்க…நான் வீட்டுக்கு வந்து பேசுறேன்.” என்றும் சொன்னாள்.

 

அவர்கள் சாப்பிட்டு வர,வீட்டிற்குள் வந்து காரை நிறுத்தியவன் , வேக  வேகமாய்த் தன் அறைக்குள் நுழைந்து விட,ஐராவின் மீது கவனமாய் இருந்தவர்கள் அதியனை கவனிக்கவில்லை.

 

“கன்னுக்குட்டி..” என்றபடி விஸ்வா அவளை அழைக்க,அவரின் அருகில் சென்றவள் கீழே அமர்ந்து ,

 

“அப்பா…ஐ அம் ஓகே…” என்று அவர்  கையை அழுத்திக் கொடுக்க,அவரும் அப்போதுதான் கொஞ்சம் புன்னகைத்தபடி மகளின் தலையில் கை வைத்தார்…ஐரா தாத்தாவைப் பார்த்தால் அவரோ முறைத்துக் கொண்டு இருந்தார்.

 

அவரிடம் சென்றவள் ,காலின் கீழ அமர்ந்தவள் , “என் கோவாலுக்கு என்ன கோவம்…” என அவர் தாடையைப் பிடித்துக் கொஞ்ச,

 

அவரோ அவள் கையைத் தட்டி விட்டவர் “இந்த கிழவனை சாக அடிக்காம விட மாட்ட இல்ல நீ…உனக்கு என்னாச்சு ஏதாச்சுன்னு நாங்க எப்படி பதறிட்டோம்..தெரியுமா…” என்று கோபமாய் சொல்ல,

 

“தாத்தா…என்ன இப்படி சொல்லிட்ட…என் டார்ச்சர் மட்டும் இல்லாம என் குழந்தை செய்யுற டார்ச்சர்லாம் பார்க்காம உன்னை அனுப்பமாட்டோம்..” என சொல்ல

 

வம்சி “ஏன் டி..எப்படி பயந்துட்டேன் தெரியுமா…..எல்லா இடத்துலேயும் உன்னைத் தேடினேன்..அப்படி என்ன பெரிய இன்வெஸ்டிகேஷன் உனக்கு….அவன் உன்னைக் கடத்தி எதாச்சும் செஞ்சிருந்தா..”என கோபமாய் சொல்ல

 

“ப்ரதர்….ஐ அம் ஓகே..” என்றபடி ஐரா புன்னகைக்க,ராம நாதனோ,

 

“என்ன இருந்தாலும் ஜாக்கிரதையா இருக்கனும்டா செல்லம்மா…இவனுங்க வந்ததால போச்சு….இல்லன்னா..” என சொல்ல

 

“அடேங்கப்பா….நோ ராமப்பா….இந்த தடியங்க என்னைக் காப்பாத்த வரல…என்ட்ட அடி வாங்கினவங்களைக் காப்பாத்த வந்தானுங்க..” என்று சொல்லி சிரிக்க,சத்ரியன் முறைத்தாலும் அனைத்தையும் சொல்ல,

 

“தாத்தா நான் அப்பவே சொல்லல…அக்கா பார்த்தீங்களா கலக்கிட்டா..” என்றபடி அனுராகா துள்ளிக்குதிக்க,

 

பார்வதி “தைரியமா இருக்கறது நல்லது தான் டா ஐரா..ஆனாலும் இப்படி தேவை இல்லாத ப்ர்ச்சனையை இழுத்து வைக்காத..” என்று சொல்ல

 

“ஆமாம்டா ஐரா….அம்மா சொல்றது சரிதான்..நீ இப்ப பத்திரமா வந்துட்ட…ஆனாலும் இப்படி மாட்டிக்காத..” என சித்தி ராதாவும் சொல்ல

 

குடும்பமே வயலின் இல்லாமல் சோக கீதம் வாசிக்க,கைகளைத் தட்டிக் கொண்டு மேலே எழுந்தவள்,

 

“அட அட…என்னையும் ஒரு ஆளா மதிச்சு ஒருத்தன் கடத்தி இருக்கான் ..அதைப் பார்க்காம…அதுவும் ஒன் வுமனா எல்லாரையும் அடிச்சிட்டு வந்திருக்கேன்….எனக்குத் திருச்சில ஒரு சிலை வைக்க யோசிக்காம இப்படி அழுது சீன் போடுறேள்..” என்று கிண்டலாய் சொல்ல,அனைவர் முகத்திலும் சின்னதாய் புன்னகை எட்டிப்பார்க்க,விஸ்வா மகளின் தலையில் செல்லமாய்த் தட்டிவிட்டு செல்ல,அதைப் பார்த்து வம்சியும் தட்ட,இப்படியாக வேண்டுமென்றே அனைவரும் தட்ட,

 

‘டேய் முடியலடா..’ என்றபடி இவள் அனைவரையும் முறைக்க,

 

ராஜகோபாலன் அப்படியும் அமைதியாக இருக்க,

 

“கோபால்..கோபால்..என்னோட அன்பு உங்களுக்குப் புரியலயா..கோபால்….கோபால்…” என சரோஜா தேவி போல் பேச, எப்போதும் அவரை சிரிக்க வைக்க அவள் செய்வது தான்..இப்போதும் அவர் மெல்லமாய் தன் பொக்கை வாய்த் தெரிய புன்னகை செய்ய,

 

“இதுதான் என் கோபாலுக்கு அழகு..” என்றபடி அவள்  கன்னத்தில் முத்தமிட,

 

“ஜாக்கிரதையா இருக்கனும் செல்லமா….இப்படி ஊர்ப்பிரச்சனையில போய் மாட்டிக்காதடா..” என்று சொல்ல,அவர் மன அமைதிக்காய் சரி என்பதாய் தலையசைத்தாள்.

 

அதன் பின் பார்த்தால் வீட்டில் இருந்தவர்கள் அப்போதுதான் சாப்பிட,

 

“நான் தான் சாப்பிட சொன்னேனே.” என்று இவள் கடிய

 

“உன்னைக் கண்ணால் பார்க்காம எப்படி சாப்பிட முடியும் கன்னுக்குட்டி..” என்று விஸ்வா சொல்ல,

 

இவளும் தலையசைத்து விட்டு ஹாலுக்கு வர,

“நமக்குத் தான்  சங்கத்தை விட சாப்பாடு முக்கியமாச்சே..” என சத்தி கிண்டலடிக்க

 

“என் கூட உட்கார்ந்து தின்ன ஆளு மட்டும் என்னவாம். நண்பன் எவ்வழி நானும் அவ்வழி” என்றபடி அவன் தோளில் அடி போட்டாள்.

 

“ஆனாலும் நீ இப்படி பெரிய சம்பவம்லாம் செய்வேன்னு நான் நினைக்கல….ஐரா..” என அவன் சொல்ல

 

“வாட் டூ டூ நண்பா….எழுதியிருக்கு…” என்று தலையைக் காட்ட

 

“என்ன செய்யப் போற இப்போ…” என்று கேட்க

 

“ம்ம்..நாளைக்குப் பார்ப்போம்..முதல்ல பிஸ்டல் யூஸ் செஞ்சது பத்தி உன் டிபார்ட்மெண்ட்ல பேசனும்…” என்று சொல்ல

 

“அது ஒன்னும் பிரச்சனையில்ல..அவனுங்க உன்னைக் கடத்தினவங்க…ஸோ கம்ப்ளையண்ட் எல்லாம் கொடுக்க மாட்டாங்க…ஆனாலும் சொல்லிடுவோம்..” என்றவன் அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை அவளோடு பேசிக் கொண்டு இருந்தவன்,அதன் பின் தன் வீட்டிற்குக் கிளம்பினான்.

 

&&&&&&&&&&&&&&&&

 

“அப்ப்பாஆஆஆஅ…” என்றபடி ஐரா அவளது அப்பா அம்மாவின் அறைக்குள் சென்று தாயின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொள்ள,அவளது கால்களைத் தூக்கி வழக்கம்போல் தன் மடியில்  வைத்துக் கொண்டார் விஸ்வநாதன்.

 

“என்னப்பா ரொம்ப பயந்துட்டீங்களா..?” என்று ஐரா கேட்க

 

“ரொம்ப டா…இனிமே இப்படியெல்லாம் மாட்டிக்காதடா…செய்தி தரதோட நிறுத்திக்கோ…” என்று அவள் கால்களை  பிடித்தவாறே சொல்ல,

 

“அப்பா…சரி சரி….கால விடுங்க…” என்று சொல்ல

 

“சின்ன வயசுல நீ இப்படித்தான் படுத்துப்ப…உங்கப்பாவும் இப்படியே தான் செய்வார்…” என அலுத்துக் கொள்வது போல் பார்வதி சொல்ல,

 

“அப்பா….அம்மா ஏதோ பொறாமையில சொல்ற மாதிரி தெரியல..” என ஐரா சொல்லவும்

 

“ஆமாம்டா கன்னுக்குட்டி” என அவரும் சொல்ல

 

“ஆமா..ஆமா….எங்களை எல்லாம் தவுட்டுக்கு வாங்கித் தெருவுல விட்டாங்க..இவங்க தான் புள்ளையை பாசமா வளர்க்கிறாங்க,,,” என்று சொல்லி அவள் காதை திருக,

 

“ப்பா..வலிக்குது..” என கத்த

 

“ஹேய்..பாரு.பாவம் குழந்தை  கைல வேற கிழிச்சுக் கட்டுப்போட்டிருக்கா…சும்மா இரு..” என்று சொல்ல

 

“தேவையா..கொழுப்பெடுத்தா இப்படித்தான்..” என திட்ட

 

“தாய்க்கிழவி…உன்னை அப்புறம் கவனிக்கிறேன்…” என்று சொன்னவள் அதியனின் இதயம் துடிப்பதை உணர்ந்த கணத்தை நினைத்தவள் தந்தையிடம்,

 

“ப்பா….உங்க கிட்ட அதி பேசினானா…?” என அவன் இவர்கள் திருமண விசயமாய்ப் பேசியதைப் பற்றிக் கேட்க

 

அவரோ அறிந்திருந்தாலும் ஐராவின் அப்பாவாயிற்றே…

 

“டெய்லி தானே டா பேசுறான்…” என சொல்ல,

 

“ம்ம்..அதி ரொம்ப மாறிட்டான்லப்பா…இன்னிக்கு மினிஸ்டர் வரைக்கும் பேசி அந்த எம்பியை மிரட்டினானாம் எனக்காக…சத்தி சொன்னான்….”

 

“ம்ம்…ஆமாம்டா”

 

“அதி கூட ரொம்ப பயந்துட்டான்ப்பா..உங்களைப் போல..” என்று சொல்ல,கணவன் மனைவி இருவரும் இவளைப் பார்த்து கிண்டலாய்

 

“ஓ ஓ ..ஹா ஹா..” என சொல்ல,இவர்கள் குரலின் தொனியைக் கண்டு கொண்டவள்,

 

“என்ன கிண்டலா…” என முறைக்க

 

“இல்ல……ஐரான்னு ஒரு பாப்பா இருந்துச்சாம்..அது சின்ன வயசுல அதியன் ஒரு பையன் சத்தமா பேசினா கூட அவங்க அப்பா கிட்ட வந்து மாட்டிவிடுமாம்…ஆனால் இன்னிக்கு அந்த அதியன் பையன் கிட்டயே மாட்டிக்கிச்சாம்..” என்று பார்வதி சொல்லி சிரிக்க

 

விஸ்வாவோ “ஐரா ஐரான்னு ஒரு மானஸ்தி இருந்தாளே…எங்க பாரு..?” என கிண்டலாய் சொல்ல

 

“இதோ மடியில..” என்றதும் ஐரா கோபமாய் எழுந்து அவர்களை முறைக்க,மீண்டும் மகளை இழுத்துத் தன் மேல் படுக்க வைத்த பார்வதி,

 

“அதியன் உன்னைப் பிடிச்சிருக்குன்னு அப்பா கிட்ட சொன்னானாம்..அப்பா ஐராவுக்குப்  பிடிச்சா பார்க்கலாம்னு சொல்லிட்டார்..என்ன பார்க்கலாமாடா கன்னுக்குட்டி “ என்று கேட்க

 

“ஓஒ…பார்க்கலாமே…. ஆண்பாவம் பொல்லாது….என் அத்தை மகன் வேற இன்னிக்கு அழாத குறையா இருந்தான்..” என்று சொல்லி சிரிக்க,

 

“ஆமாம்ல..அதியன் எங்க போனான்..?” என்று விஸ்வா கேட்க

 

“அவன் இன்னிக்கு என்னைக் காணும்னதும் ரொம்ப டென்ஷன் ஆகிட்டான் போலப்பா….” என்று சொல்ல

 

“எஸ் எஸ்…என்னை கூட கத்தினான்…” என்று பார்வதியும் சொல்ல

 

“ நான் நேத்து லேட்டாச்சுன்னு சொல்லாம போயிட்டேன்…இவன் வேற அத்தையை ரியாவை எல்லாம் திட்டி கலாட்டா செய்திட்டான் இல்ல… திருவையாறு போனப்போ….என்ட்ட ப்ரோபோஸ் செய்தான்…ஆனா அப்போ எனக்கு என்ன சொல்லத் தெரியலம்மா…ஆனால் இன்னிக்கு அவனைப் பார்த்துட்டு அவனை எனக்கு அவ்வளவு பிடிச்சிருக்கு…ஏன்னே தெரியல…” என சொல்ல

 

“பிடிச்சிருக்கு தானே…அப்போ போய் அவன்ட்ட பேசு” என விஸ்வா சொல்ல இவள் யோசனையாய்ப் பார்க்க

 

“ஆமாம்டா..பேசிப் பாரு..உங்க இரண்டு பேருக்குள்ள உள்ள சண்டைலாம் சின்ன குழந்தைங்க போட்டிக்கிற மாதிரி…அதுவும் உன் மேல தப்பு இல்லனதும் எப்படி எல்லார் முன்னாடியும் சொன்னான்…இரண்டு பேருமே ஒரே மாதிரி தான்…பார்ன் ஃபார் இச் அதர்…..” என்று விஸ்வா சொல்ல

 

“அட டே..தங்கச்சி பையனை அன்னிக்கு வேண்டாம்னு சொல்லிட்டு இன்னிக்கு என்னப்பா ?”

 

“ம்ம்..இப்போ என் ஐராவுக்குப் பிடிச்சிருக்கே..போய் பேசுடா” என்று சொல்ல

 

“ம்மா….இவர் எனக்குப் பிடிச்சிருக்குன்னு நினைக்கறாரோ இல்லையோ…அதி மேல அப்பாவுக்கு அளவில்லாம பாசம் பொங்குது பாரேன்..மாப்பிள்ளையை சமாதானம் செய்ய சொல்றார்..” என்றவள் பேசிக் கொண்டே அறைவாசலுக்கு சென்றிருக்க,

 

“அது சரி…பிடிக்கல பிடிக்கல…அவனை ஓட விடுவேன்னு சொன்ன பொண்ணு இப்ப அவனைப் பார்க்க ஓடுறது என்னவாம்..?” என்று சொல்லி பார்வதி சிரிக்க,ஐராவோ தாயைப் பார்த்து கண்ணடித்து விட்டு சென்றாள்.

 

அதியனின் அறைக் கதவைத் தட்ட,அவனோ திறக்கவே இல்லை..ஐரா வந்திருக்கேன் என்று இவள் வெளியில் இருந்து கத்த,அவன்  பதிலே பேசாமல் இருக்க,

‘பிசாசு…வேணும்னு பண்றான்…என்ட்யேவா..” என்று நினைத்தவள் அதியனின் அறைக்குள் பக்கத்து அறை கெஸ்ட் ரூம்…அதைத் திறந்தவள் அதன் பால்கனி வழியாக ஏறி அடுத்து இருக்கும் அதியனின் அறை பால்கனிக்குள் குதிக்க,அப்போதுதான் சட்டையைக் கழட்டி விட்டு பனியனோடு நின்றவன் டீஷர்ட்டை மாட்டப் போக,தீடீரென பின் பக்கம் சத்தம் கேட்க,அதிர்ச்சியில் அவனது டீஷர்ட் கீழே விழ,பின்னால் பார்த்தாள் சிரிப்பும் குறும்பும் அந்த குறு குறு விழிகளில் நிறைந்த வண்ணம்…ஐரா நிற்க.

 

“அறிவில்ல…பிசாசு..மேன்ர்ஸ் இல்ல…இடியட்…டிசன்ஸி கிடையாது..” என்று கோபமாய்த் திட்ட,

 

இவளோ  , “என்ட்ட மேனர்ஸ் இல்ல்..உனக்கு மேல்சட்டை இல்ல..ஷேம் ஷேம்.” என சொல்லி சிரிக்க,

 

பல்லைக் கடித்தவன் கூச்சத்தோடு பின்னால் திரும்பி பனியனை மாட்டினான்.இவள் அவனருகில் வந்து,

 

“ஏன் டா என்ட்ட பேச மாட்டேங்கிற..” என்று  கோபமாய் கேட்க,அவன் அசையவே இல்லை…முகமோ கோபத்தில் இறுகியிருக்க,

 

“ப்ச்…என்ன இப்ப உனக்கு…?எதுனாலும் வாயைத் தொறந்து சண்டை போடுடா..பாரு..உனக்காக பால்கனிலாம் குதிச்சு வந்திருக்கேன்..கை வலியோட..” என கை கட்டைக் காட்டி சொல்ல,

 

அதைக் கண்டதும் இன்னும் இன்னும் பெருகியது பெருங்கோபம் அவனுள்…எத்தனையாய்த் துடித்திருப்பான்..எங்கேயென தவித்திருப்பான்…இவளுக்கு அத்தனையும் விளையாட்டா..? என இன்னும் இன்னும் சிந்தையினுள் சீற்றம் அதிகமாக, வாயைத் திறக்கவில்லை..அவன் பேசாவிட்டால் இவளுக்கு வலிக்கிறதெனில் வலிக்கட்டும்…இந்த சில மணி நேரத்தில் எத்தனையாய் சித்ரவதை செய்திருப்பாள் என நினைத்தவன் பேசவே இல்லை.

 

“அதி….ஒழுங்கா பேசிடு..இல்ல…” என்றபடி மிரட்ட

 

அவனின் கண்களோ ‘என்ன செய்வ’ என்ற வகையில் திமிர்ப்பார்வைப் பார்க்க,

 

“இது..இதுதான் உன்கிட்ட பிடிக்காத விசயம்…இதனால் தான் உன்னை எனக்குப் பிடிக்கல…என் பக்கம் என்ன  நியாயம்னு கேட்காம நீயே முடிவெடுத்து என்னை டார்ச்சர் செய்வ.… …என்ட்ட சண்டை போட்டா கூட எனக்கு வலிக்காது…ஆனால் இப்படி பேசாம நிராகரிச்ச வலிக்கும்னு நல்லா தெரிஞ்சிட்டே செய்ற இல்ல…முதல்ல அப்பா…இப்ப நீ…போடா…டேய்…ஐ ஹேட் யூ….” என்று சீற்றத்தோடு சொன்னவளின் கண்களில் நீர் சுரக்க,இதுவரையில் ஐரா தனது தந்தை பேசாத மன உளைச்சலை யாரிடமும் பகிர்ந்ததில்லை…அந்த வலிகளை..வெந்து தணிந்த வேவம்(தனிமை) பொழுதுகளைப் பற்றி தந்தையிடம் கூட சொன்னதில்லை…ஆனால் இன்று அதியனின் நிராகரிப்பு..அவனின் அன்றையை செய்கையை நினைவுப்படுத்தியது.

 

அவன் அவள் கண்ணில் நீரைப் பார்த்ததுமே பேச நினைத்து விட்டான்..ஆனால் அவள் ஐ ஹேட் யூ என்றதில் மீண்டும் அமைதியாகி நிற்க,எங்கெங்கிலும் ஐராவுக்கு ஏறுகிறது காரம்……இரண்டு அடி முன் வைத்தவள் மீண்டும் அவன் அருகில் வந்து,

 

“பேச மாட்ட தானே….பேசாதே,,,”  என்றபடி அவன் அருகில் நெருங்கி வர,இவன் அகத்தினில் அதிர்வலைகள்…அதியனின் கன்னம் நெருங்கியவள் கடித்து வைக்க…’ஹா.’ வென அலறினான் அதியன்.

 

ஒரு கை கன்னம் பற்ற,ஒரு கை கன்னியைப் பற்ற,வலது கையால் கன்னத்தைத் தேய்த்து விட்டவன்,

 

“சின்ன வயசுலவாச்சும் மாமா..உங்க பொண்ணு கடிச்சிட்டான்னு சொல்லி கம்ப்ளையண்ட் செய்யலாம்..இப்ப போய்..நான் எப்படி செய்வேன் டி..” என்றவன் இடது கையால் ஐராவை வளைத்து முன்னால் இழுக்க.

 

அவளோ “விடுடா எரும…நாயே…பன்னி..பேய்..” என திட்ட

 

“சாரி..” என்றான் அவன் மிக மிக மென்மையாய்..

 

“உன் சாரியைத் தூக்கித் தூரப்போடு…” என இவள் கோபமாய்க் கத்த

 

“சாரி பேபி..”

 

“ஒரு கன்னம் நல்லா இருக்கறது பிடிக்கலயா…உனக்கு..” என்று முறைத்தபடி கேட்க

 

“வாவ்..பேபி…இன்னொரு கன்னத்தையும் டேஸ்ட் செய்ய ஆசையா…ஐ அம் ஆல் யுவர்ஸ்..” என்று இன்னும் இதழ் விரிந்த புன்னகையோடு அவன் சொல்ல,

 

“என்ட்ட பேசாத…ஆசையாய் பேச வந்தா சீன் போடுறல்ல…உன்னை..விடுடா” என்று கத்த,

 

அவளை விட்டவன்,

“உனக்கு மட்டும் தான் கோவம்லாம்  வரனுமா ஐரா….உன்னைக் காணும்னு நான் தவிச்சதெல்லாம் உனக்கு எங்கடி தெரியும்….செய்றதை எங்கிட்ட சொல்லிட்டாச்சும் செஞ்சுத் தொலைய வேண்டியது தானே..அந்த சத்தி என்னடான்னா நீ என்ன செஞ்சாலும் நண்பேண்டா ரேஞ்சுல இருக்கான்..எனக்குத் தான் உயிர் போகுது….உன்னையெல்லாம்..” என்று திட்ட,

 

“என்ன என்ன தெரியாது..எனக்கு..” என்று அவன் அருகில் போனவள் அவன் இதயத்தைக் காட்டி  ….

 

“இது எனக்காக துடிச்சது தெரியும் அந்த அழகான ஃபீல் கொடுத்தியேன்னு சொல்ல வந்தா..என்னை அவாய்ட் செய்ற நீ..?” என்றபடி முறைக்க

 

“என்னது..அழகான ஃபீலா..? என்றவன் அப்படியே கட்டிலில் அமர்ந்து கொண்டு,

 

“அம்மாடி…உன்னை இன்னும் கொஞ்ச நேரம் காணும்னா ஹார்ட் அட்டாக்கே வந்திருந்தாலும் ஆச்சரியமில்ல…” என்று இவனும் முறைக்க,

 

“என்ன பேச்சு இது…ஹார்ட் அட்டாக்னு எரும….கடி வாங்கியும் என்னை முறைக்கிற…” என்றபடி அவனை இடித்துக் கொண்டு உட்கார,இவன் தள்ளி தள்ளிப் போக,

 

“ஆமா….ஒரு டவுட்..என்னை அடிச்சதுக்கு…என் கால விழுந்து மன்னிப்புக் கேட்காம எங்க அம்மா அப்பா கால்ல விழற…ஹ்ம்ம்..ஹ்ம்ம்..” என அவளும் அவனைத் தள்ளிக் கொண்டு போக,ஒரு கட்டத்தில் இவன் கட்டிலின் ஓரம் சென்றிருக்க,இவள் கொஞ்சம் வேகமாய் இடிக்க,அப்படியே அவன் கீழே விழ,இவள் சொன்னது போல்,அதியன் அவளின் காலின் கீழ் அமர்ந்திருக்க,

 

“டேய் சாரி..” என்று இவள் சொல்ல,

 

“விழுந்தாச்சு போதுமா..” என்றான் முறைப்போடு..இவளோ ‘அச்சோ…பாவம்’ என்றபடி கீழே இறங்க முனைய,இவள் கால்களை கைகளால் கைது செய்திருந்தான்…

 

“இறங்காத..அங்கேயே இரு..” என இவன் அழுத்தி சொல்ல,அவள் இவனைப் பாவமாய் பார்க்க,

 

“என்ன லுக்கு,,,?உனக்கு அது ஃபீல்னா எனக்கு இது அழகான ஃபீல்…அது எந்த அம்மா அப்பாவா இருந்தாலும் அவங்க அடிக்கிறது வேற…அவங்க முன்னாடி அவங்க பசங்களை அடிச்சா..அவங்களுக்குக் கஷ்டமா தானே இருக்கும்..அதுவும் நீ தப்பே செய்யாம இருக்கறச்ச….அதான்…அவங்க கால்ல விழுந்தேன்…அது மட்டுமில்லாம அவங்க  யாரு என் மாமா மாமி தானே…!! அதனால ஒன்னும் தப்பில்ல..”

 

இவள் அமைதியாய் அவன் சொல்வதைக் கேட்க,

 

“நிஜமா நீ கேட்டியே…நான் இல்லன்னா என்ன செய்வேன்னு  நேத்து கார்ல வரச்ச…என்ன செய்வேன்னு தெரியல!! நீ இல்லன்னா யோசிக்க கூட முடியலடி… நிஜமா….என்னை அப்படி டென்ஷன் பண்ணிட்ட நீ..!!இவ்வளவு பெரிய ரிஸ்க்ல இறங்கும்போது எவ்வளவு கவனம் தேவை…ஒரு வேளை அவங்க இன்னும் மோசமா எதாச்சும் செஞ்சிருந்தா…சில மனுஷங்க மிருகத்தை விட வக்கிரமானவங்க ஐரா..நீ வீராதி வீராங்கனைன்னு தெரியும்..ஆனால் சூழ் நிலைகள் மாறும்..அதுவும் அந்த ராஸ்கல்..தங்கச்சி ஆத்துக்காரர்னு கூட நினைக்காம கொன்னுருக்கான்….நல்ல காலம் நீ கன் வைச்சிருந்த….” என மிகவும் சீரியசாய்ப் பேச

 

“அதி…. நீ சொல்றது சரிதான்…கவனமாத்தான் இருந்தேன்….பட் இவ்வளவு சீக்கிரம் அவன் என்னை ட்ரேஸ் செய்வான்னு நினைக்கல…நான் விசாரிச்ச இடத்துல அவங்கிட்ட யாராவது சொல்லியிருப்பாங்க…அதையே பேசாத..இரிட்டேட் ஆகுது…இவ்வளவு நேரம் வீட்ல அதையே தான் பேசினாங்க…அதை விடு…ஆனா அதுக்காக என்ட்ட பேசாம டார்ச்சர் செய்வியா நீ…?கட்டிக்கிறியான்னு கேட்டா மட்டும் ஆச்சு..நீ தான் கட்டிக் காப்பாத்தனும் என்னை..சும்மா எகிறுற…..” என இவளும் கோபமாய்ப் பேச

 

“ம்ம்..அப்போ என்னைக் கட்டிக்கிறியா..?”என அவன் கேட்க அவள் அப்போதும் முறைத்துப் பார்க்க,

 

“வேற என்ன கேட்கவாம்..?” என்றபடி அவள் பாதங்களை இவன் மெதுவே விரல்களால் தடவிக் கொடுக்க,இவளுக்கு கூச

 

“எரும..விடுடா…கூசுது..” என சொல்ல,

 

“இந்த அழகான ஃபீல்ல்ல்ல்ல்ல்ல் நல்ல்ல்ல்ல்ல்லா இருக்கு பேபி…” என சொல்லி சொல்லி மீண்டும் கூச வைக்க,அவள் தாங்காது டக்கென்று காலைத் தூக்கி விட,இவனும் எழுந்தவன் அவளை எழுப்பி இறுக்கி அணைத்திருந்தான்..

 

“என்னடா செய்ற..?”

 

“இதுதான் டி கட்டிக் காப்பாத்தறது..” என அவன் சொல்ல

 

“உன்னை…” என்றபடி அவள் அடிக்க போக

 

அவளைத் தடுத்தவன் “உன் இஷ்டப்படி என்ன வேணும்னாலும் செய்டி..ஆனாலும் சொல்லிட்டு செய்..பாதுகாப்பாச்சும் செய்வேன்..இப்படி பயந்து சாகாம..” என அவன் சொல்ல, காதலை பொழிந்த அந்த அகன்ற விழிகளில் தன் விழிகளைக் கலக்க விட்டவள்..அவனையே பார்த்திருந்தாள்..

 

தயக்கமோ இல்லை திமிரோ காட்டாமல் காலின் கீழ் உட்காருகிறான்… நேற்று விருப்பமில்லை என சொல்லியும் என்னை இன்று நானாகத் தேடி வரும் வரை எவ்வகையிலும் தொந்தரவு செய்யவில்லை…நீ செய்யாதே என்று அவளின் எண்ணங்களுக்கு தடை போடாமல்…நான் இருக்கிறேன் என துணை நிற்கிறான்…இன்று எனக்காக இவன் அகம் எப்படி துடித்தது…இவன் தான் என் தலைவன்..என் அதியன்…என அந்த நிமிடம் அவள் உணர்ந்தாள்.

 

கண நேரங்களில் கண்கள் காதல் எனும் கவிதை எழுதிட,

“என்ன..டி…எதாச்சும் சொல்லனுமா…?” என்று கேட்க

 

“உன்னைக் கட்டிக்கிறேன்..:” என இவள் சொல்ல,

 

“மாமா கிட்ட சொல்லு முதல்ல….”என அவன் சொல்ல,இன்னும் இன்னும் இதயம் நிறைய நிறைய பிடிக்கிறது இவனை…விடாமல் அவனைப் பார்க்க, மொழியால் சொல்லா காதல்….ஆனால் இது தீராக் காதல்..மீளாக் காதல்… மீக்காதல்…!!

 

அந்த அகல ஆர்கழியினில் அகம் கொண்டவன் ஆழ விழுந்து வைத்தான்..அவள் நெற்றியில் மென்மையாய் இதழ்ப்பதிக்க,

….

 

வெளியே மார்கழி பனி கொட்ட,நிசப்த நிசர் பொழுதில் இருவரின் சிந்தையிலும்  சீலிர் மழையாய் சிறு தூரல்….நிசர் நேர தேரல்…!!

 

“நீ எங்கிட்ட வந்ததும் முதல்ல எதாவது தரமான சம்பவம் நடக்கும்னு நினைச்சேன்…ஆனால் நீ என்னடான்னா கடிச்சு தாறுமாறா சம்பவம் செஞ்சிட்ட..” என சொல்லி அவள் நெற்றியில் முட்ட,

 

ஐராவோ குழலில் புகுந்திடும் காற்றாய் இனிதாய் இசையாய் புன்னகைத்தவள் “என்னைக் கல்யாணம் செஞ்சிண்டா…இப்படிதான் நிறையா தாறுமாறான தருணம்லாம் வரும்..குட் நைட்” என சொல்லி விலக

 

அதியனும் இதயம் நிறை மகிழ்வை இதழில் நிறைத்தபடி,

“எவ்வளவு கடிச்சாலும் நான் தாங்குவேன்….டி..” என்று சொன்னான்…

 

மனம் ரம்யம்…..!!காதல் மையம்..!!

 

&&&&&&&&&&&&&&&&&&&&

 

மார்கழி முடிந்து தையும் பிறக்க,அதியன் சென்னை சென்றவன் அவன் பெற்றோரிடம் பேசி ஐராவை பெண் கேட்க,அனைத்தும் சுபம்…தை மாதம் சஸ்ரியாவிற்கு வளைகாப்பு நடத்த,அடுத்து வந்த சில தினங்களில் அவளுக்கு அழகிய ஆண் குழந்தை பிறக்க,சத்ரியனுக்கு அளவில்லா மகிழ்ச்சி.அவனுக்கு உயிராய்..அவனது உயிராய்..ஒரு உயிர்..அவனது உதிரத்தின் உறவு…!!

 

இப்படியாக மகிழ்வாய் பொழுதுகள் செல்ல,குழந்தைக்கு மூன்று மாதம் ஆன பின் திருமணம் என முடிவாக,அதியன் பத்திரிக்கை அடித்த பின் அதனைக் கொடுக்க திருச்சி வர,அப்போது தான் ஐரா அந்த கண்டிஷனை அவனிடம் சொன்னாள்..

 

அவனோ அதை முடியாது என மறுத்தான்…

 

காதல் கவனமாகும்..!!

 

நிசர் – இரவு

தேரல்- தேன்

 

Advertisement