Advertisement

காதல் 7:

 

காதல் இருக்கிறதா என்று தெரியவில்லை…இல்லையா..அதுவும் புரிபடவில்லை….இப்படி தெரியாததும் தெளிவில்லாததுமாய் தவித்துக் கொண்டிருந்தன அதியனின் அக எண்ணங்கள்.

 

தெரியாதது எல்லாம் தெரிதலாகிவிட்டால் அது எல்லாம் தெளிதலாகிடும்…அவனும் காதலாகி கமிட்டாகி கல்யாணமாகி வாழ்வான்.

 

அதியன் மனதில் அந்த எண்ணம் தோன்றிய ஷணமே அதை அவனால் நம்பவே முடியவில்லை.அந்த பக்கம் வேறு தாத்தா,

 

“அதியா….இருக்கியா..?” என்று கத்திக் கொண்டிருந்தார்.

 

“ஹா….எஸ்…தாத்தா…நான் ஐராவைப் பார்த்துக்கிறேன்…நீங்க மெதுவா வாங்க…” என்று சொல்லி போனை வைத்தபின் தான் அவனால் யோசிக்கவே முடிந்தது.

 

இதுவரை மாமன் மகள் என்ற ஆவலோ ஆசையோ இல்லை ரசனையாய் ரகசியமாய் ஒரு பார்வை கூட  அதியனிடம் இருந்து ஐராவுக்குக் கிடைத்ததில்லை.அவள் எப்போதும் அவனைக் கண்டால் ஒரு ட்ரேட் மார்க் முறைக்கும் பார்வை பார்ப்பாள்.இவனோ ஐராவின் மீதும் சரி அனுராகாவின் மீது சரி அன்பு பரிவு பாசம் என்று வைத்திருந்தான்.

 

ஆனால் என்ன அனு மிகவும் சிறியவள் என்பதால் அவளை ஒரு குட்டித்தங்கை போல் பாவிப்பவன்…ஐராவை குட்டிசாத்தானாகவே சிறு வயது முதல்  நினைத்து வந்தான்.வேண்டுமென்றே அவளை வம்பிழுப்பது மாட்டிவிடுப்பது என அந்த வயதுக்குரிய துடுக்குத்தனத்துடன் இருந்தவன் பெரியவனானதும் அதை குறைத்தான் அவ்வளவே…ஆனால் ஐராவை சீண்டுவது அவனுக்குப் பிடித்தமான ஒன்றுதான்.

 

அதியனின் மனதிலோ அதீத யோசனைகள்…,’அவள நான் லவ் பண்றேனா….ஏன் நான் இப்படி நினைச்சேன்…?ஆனா அவளை இன்னொருத்தன்ட்ட எப்படி கொடுக்க முடியும்….ஒரு வேளை இப்படி சில மாசமா அவளை தினமும் பார்த்து அட்ராக்ட் ஆகிட்டேனா…’ என அத்தனை யோசனைகள் அவனகத்தில்.

.

 

இப்படியாக இவனது எண்ணங்கள் இருக்க,தலைவனின் நாயகியோ கொஞ்சம் சிரத்தை எடுத்து அவள் அழகை அழகாய்க் காட்டிய வண்ணம் வந்தாள்.

 

அவயத்தின் அத்தனை பெண்களுமே  அழகுதான்….!! என்ன பெண்கள் அனைவருமே அழகானாலும் அழகை மென்மையாய் மேன்மையாய் வெளிக்காட்டுபவர் சிலர் தான்.கீழ் இறங்கி வந்த ஐராவைக் கண்ட அதியன் அவனே அவனைத் திட்டிக் கொண்டான்.

 

‘இத்தனை நாள் உனக்கு எப்படிடா கண்ணு தெரியாம போச்சு….இவ இவ்வளவு அழகா….?’ என அவள் அழகை ஆராதித்தவன் தன்னை நிந்தித்துக் கொண்டான்.

 

அதியனைக் கண்ட ஐராவோ,

“டேய்…என்னை ஒரு போட்டோ எடுத்துக் கொடு…” என்று சொல்ல,என்னமோ இப்போதுதான் முதல் முறையாய்க் காண்பவன் போல் அவளையே பார்த்தவன் அவள் பேசவும் கவனம் கலைந்தான்..

 

‘என்ன’ என்பதாய் அவன் பார்க்க,

 

“அது எங்கம்மா நான் நல்லா ரெடியானாலும் எதாவது சொல்லுவாங்க…ஸோ எவிடன்ஸ் ரெடி பண்றேன்…நல்லா தானே டா இருக்கேன்..” என இவள் இயல்பாய்க் கேட்க,அவன் சமவெளிகளிலோ சரம் சரமாய் சந்தன மலர்கள் மலர்வும் மணமுமாய் இருக்க,நங்கை நயனங்களில் நாயகன் அவன் சரண்.

 

“டேய்ய்ய்ய்” என இவள் கத்த,

 

“என்னடி” என்றான் எரிச்சலாய்…அவனே இன்று தான் பார்வை வந்தவனாய் பாவையை பார்க்க,அதில் இவள் குறுக்கிட்டாள் பாவம் அவனும் என்ன செய்வான்..??

 

“போட்டோ எடுக்க முடியுமா முடியாதா…செல்ஃபிலாம் எனக்கு நல்லா வராது..”என்றதும்

 

“சரி…சரி…” என்றவன் அவன் அலைப்பேசியில் அவளை போட்டோ எடுத்தான்.

 

“வாட்ஸ் அப்ல அனுப்புடா..” என்றவளிடம்,

 

“அனுப்புறேன்….அப்புறமா… உன்னை தாத்தா என்னை ட்ராப் செய்ய சொன்னார்..” என அதியன் சொன்னதும்,

 

“ஆமா…ஆமா..அப்பா கூட சொன்னார்..சரி சரி வா….” என அவள் முன்னே செல்ல,இவன் குழப்பமாக அவள் பின்னே சென்றான்.

 

‘டேய் மூணு மாசத்துல அவ பின்னாடி நீ போற..உன் பின்னாடி ஏன் டா அவ வரல….இதுல ஹாண்ட்சம்னு நினைப்பு வேற…மாமா பொண்ணே உன்னைப் பார்க்கலேயே மத்த பொண்ணுங்க பார்த்தா என்ன…பார்க்கலன்னா என்ன…?’ என  அவன் மனம் அவன் மானத்தை வாங்கியது.

 

காரில் அமர்ந்ததும்,ஐரா அதியனைப் பார்த்து நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்க்க,

 

“என்னடி சிரிப்பு..?” என்று இவன் கோபமாய்க் கேட்க

 

“இல்ல…..ஒரு சேனல் ஹெட் இன்னிக்கு எனக்கு ட்ரைவரா வரத நினைச்சு பெருமையா இருக்கு…” என சொல்ல,

 

“உன்னையெல்லாம்…..சேனலுக்கு ஹெட் இப்போ ஐஞ்சாறு வருசமாதான் ஆனா பொறந்ததுலேர்ந்து உன் அத்தை மகன் டி நான்..” என்றவனுக்கு மேலே என்ன சொல்லவென தெரியவில்லை.

 

ஐராவோ அவனைப் பார்த்து சிரித்தவள் அதன் பின் அமைதியாகி விட்டாள்.அவள் நினைவெல்லாம் இன்று சந்திக்க போகிறவன் மேல் இருந்தது.அவன் எப்படிப்பட்டவனாய் இருப்பான் என பயணித்தன அவளது எண்ணங்கள்.

 

ஆனால் அதியனுக்குள் அத்தனை போராட்டம்.முதலில் இது தீடீர் ஈர்ப்பா இல்லை தீராக் காதலா என்ற ஐயம் அவன் மனதினில்.அப்படி தீராக் காதலாய் இருந்தால் இப்போது அந்த பத்ரிக்கு எப்படி கத்திரி போடுவது என யோசனை.ஐராவிடம் நேரடியாய் பேசவும் பயமாய் இருந்தது.ஏற்கனவே சஸ்ரியாவின் ப்ரச்சனையில் இருந்த மனஸ்தாபம் இப்போதுதான்  நீங்கி கொஞ்சம் பழையபடி உறவு சுமூகமாய் இருக்கிறது.

 

அவனுக்கு அவன் பெற்றோர்,இவள் பெற்றோர் பற்றி எல்லாம் கூட கவலையாய் இல்லை.அவனது எண்ணங்கள் யாதும் ஐராவே.ஐராவிடம் காதலை சொன்னால் அவள் ஏற்பாளா…?இல்லாவிடில் பெரியவர்கள் மூலமாகப் பேசினாலும் இவள் முடியாது என்றுவிட்டால்….

 

அவன் அகம் தெரிந்து தெளியவே அவனுக்கு அவகாசம் தேவைப்பட,இப்போது இந்த புது வில்லன் பத்ரிக்கு ஒரு வேளை ஐராவைப் பிடித்துவிட்டால்….?இப்படியாக நினைவுகள் ஓடினாலும் சரியாய் அவளை கொண்டு வந்து சேர்த்து விட்டான்.

 

“டேய்…  நான் போய் பத்ரியைப் பார்த்துட்டு வரேன்…தாத்தா சொன்னார்தானே…வில் கம் இன் ஃபிஃப்டின் டூ ட்வுண்டி மினிட்ஸ்…நீயும் உள்ள வந்து தனியா ஒரு டேபிள்ல உட்காரேன்….” என்று ஐரா சொல்ல

 

‘நீ அவன் கூட பேசறதை நான் பார்க்கனுமாடி’ என பத்திக் கொண்டு வந்தாலும்,

 

“இல்ல.. நீ பேசிட்டு வாடி .நான்  வெயிட் செய்றேன்…” என்றவனுக்குத் தனிமை மிகத் தேவையாய் இருந்தது.

 

ஐரா உள்ளே செல்ல,அதியனின் அகத்தினில் ஐராவின் ஆட்சியே.அதியனுக்கு பயம் வேறு பத்ரியை ஐராவுக்குப் பிடித்திடுமோ என்று…?

 

எங்கிருந்தாலும் வாழ்க…என்று சொல்லவும் மனம் இல்லை..என் ஐரா என தான் மனம் கூக்குரலிட,தேவையில்லாது தாத்தா மாமா என்று அத்தனை பேரின் மீது ஆத்திரமாய் வந்தது

 

‘என்ன தைரியம் இந்த தாத்தாவுக்கு…அத்தை மகன் நான் இருக்க….பத்ரி கத்திரின்னு மாப்பிள்ளை பார்க்குறாங்க…’

 

இப்படி இவன் காதலும் கடிந்து கொள்ளுதலுமாய் இருக்க,ஐரா ஒரு இருபது நிமிடம் கழித்து வெளியே வர அவள் முகத்தில் கோபம் தெரிய,இவன் மனதுக்குள் குத்தாட்டம் போட்டான்.

 

‘ரொம்ப செல்ஃபிஷ் ஆகிட்ட டா..பாவம் பேபி கோபமா வரா…’ என்று மனசாட்சி காறித்துப்பியது.ஆம் ரௌடி இப்போது பேபி ஆகிவிட்டாள்.

 

‘என் செல்ல  ரௌடி பேபி ‘ என சொல்லிக் கொண்டான்.அவள் காரின் அருகே வந்து கதவைத் தட்ட,இவன் திறந்ததும் அவள் அமர்ந்து கொள்ள,அவள் பேசாமல் அமைதியாய் வர,கொஞ்சம் நெரிசல் குறைவாய் உள்ள சாலைக்கு வந்ததும் அவள் முகம் பார்க்க,

 

‘ரோஜாப்பூ கோவமா இருந்தா இப்படி  தான் இருக்குமோ..’ என்று நினைத்தவன்,அவளிடம்,

 

“என்னாச்சுடி” என்றான் மென்மையாய்.

 

“அவன் என்ன லூசாடா அதி….…பத்ரியாம் பத்ரி…உடைஞ்ச பேட்டரி..”

 

“என்னாச்சு ஐரா..என்ன செஞ்சான் அவன்…?”

 

“இந்த டிரஸ் எப்படிடா இருக்கு..ஒழுங்கா உண்மையை சொல்லு…?”

 

“நல்லா…எலிகண்டா …..இருக்கு……”

 

“ஹான்..ஆனா அந்த உடைஞ்ச பேட்டரி ஏன் நீ சாரி கட்டலன்னு கேட்கிறான் டா…அவன் என்ன வெட்டி சட்டையில வா வந்தான்….டீசண்டா டிரஸ் செய்யலன்னா கேட்கலாம்….ஆனா இவன்,..எனக்கு பிடிக்கவே இல்ல.உன் மாமாவும் தாத்தாவும் வரட்டும் இருக்கு….மாப்பிள்ளை பார்க்குறாங்களாம்…மாப்பிள்ளை”

 

“இந்த சின்ன விசயத்துக்கா ஐரா கோவம்..?” என்று  நல்லவனாய் நாயகன் கேட்டாலும் நாயகி கோபத்தில் இதய நாளங்கள் அத்தனையிலும் இன்னிசை  நர்த்தனம்…

 

மழைச்சாரலும்…தேன் தூறலும் மனமெங்கிலும்….

 

‘ஹூர்ர்ரே’ பத்ரி விக்கெட் காலி….பத்ரியை அவளுக்கு பிடிக்காமல் போனது அவனுக்கு நல்ல விசயமாய்ப் பட்டது.அவன் காதலா என தெரியாத காதலில் அவனுக்குக் கிடைத்த முதல் வெற்றியல்லவா…ஒரு பாசிட்டிவ் சைன்…என்பதில் பையனுக்கு படு குஷி.

 

“இல்லடா அதி…ப்ர்ஸ்ட் டைம் மீட் செய்றவங்கட்ட என்ன பேசனும்னு அவனுக்குத் தெரியல..”

 

“அப்போ இப்போ சொன்ன சேரி மேட்டர அவன் கல்யாணம் முடிஞ்சு சொன்னா ஒத்துப்பியா நீ..?”

 

“ப்ச்..அப்படியில்லடா லூசே…அப்போ அது வேற..ஆனா அவனுக்காகவெல்லாம் நான் மாற முடியாது…” இவள் இப்படியாக சொல்ல,இவளை எப்படி கரெக்ட் செஞ்சு கல்யாணம் செய்றது என்ற யோசனையில் இருந்தவனுக்கு என்ன இப்படி பேசுறா என்ற எண்ணம் வர

 

“மேரேஜ்ல நம்ம கொஞ்சம் மாறித்தான் ஆகனும் ஐரா…அட்ஜஸ்ட்மெண்ட்னு சொல்றதை விட அடாப்டேஷனு சொல்லலாம்…நான் நானா தான் இருப்பேன்னு சொல்றது அவ்வளவா சரி வராது…உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்…மேரேஜ்ன்றது பாசம் காட்டுறது மட்டுமில்ல..சண்டை வரும்.ஈகோ பார்க்காம சமாதானம் செய்யனும்…அங்க ‘நான்’ அப்படின்றதை விட’நாம்’ன்றதுதான் வொர்க் அவுட் ஆகும்….”

 

“புரியுது அதி…ஆனா சொல்ற விசயம்னு ஒன்னு இருக்குல்ல..இதே என் ஹஸ்பண்ட் கல்யாணத்துக்கு அப்புறம் அவருக்குப் பிடிக்கும்னு சாரி கட்ட சொன்னா நான் கட்டுவேன்…ஏன்னா அவர் மேல எனக்கு அன்பு வந்துடும்..ஆனா முதல் தடவ பார்க்கிறபோது அவன் மேல எனக்கு என்ன ஃபீலீங்க்ஸ் இருக்கும் சொல்லு…ஆனா அவன் என்னடான்னா அவனோட வியூஸ்லாம் என் மேல திணிக்க பார்க்குறான்..எனக்கு அவன்ட்ட பேசறப்போதே தெரிஞ்சது அதி..அவன் எனக்கு செட் ஆக மாட்டான்..லீவ் இட் மே பீ அவன் டேஸ்டுக்கு ஏத்த மாதிரி வேற பொண்ணு அமையலாம்..பட் ஐ அம் நாட் ஃபார் ஹிம்…”

 

“எஸ்…எஸ்…” என்றான் உற்சாகமாய்.

 

“உனக்கு என்னடா இவ்வளவு சந்தோசம்…?” என்று அவள் கேள்வி கேட்க என்ன சொல்வான் இவன்..?

 

“அ…அது..ஐரா உனக்குப் பிடிக்கலல..இப்பவே அவன் கேரக்டர் உனக்கு செட் ஆகாதுன்னு தெரிஞ்சது தானே..அதான்….உன் லைஃப் உனக்குப் பிடிச்ச மாதிரி இருக்கனும்….ஐ ரியலி கேர் ஃபார் யூ டி..” என்றான் உள்ளார்ந்த அன்போடு.

 

“ஆஹா……..ன்  நம்பிட்டேன்.” என அவள் குறுஞ்சிரிப்பும் குறும்புப்பார்வையுமாய் பார்க்க,

 

“ நம்பாட்டாலும் அதான் உண்மை  ஐரா….சரி மாமா கேட்டா என்னடி சொல்லுவ?”

 

“உண்மையை சொல்லுவேன் டா….அப்பா கண்டிப்பா புரிஞ்சிப்பார்…என் விருப்பத்தை மீறி அப்பா எதுவும் செய்ய மாட்டார்..” என்றாள் நம்பிக்கையாய்.

 

வீடு வந்த சேர்ந்த பின் ஐரா பத்ரியைப் பிடிக்கவில்லை என சொல்லிவிட,பார்வதி புலம்ப,,விஸ்வநாதன் தான் அவரை சமாதானம் செய்தார்.

 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

குளிர் பொழுதுகளாய் நாட்கள் நகர,அன்று ரியாவுக்கு ஐந்தாம் மாதத்தில் பூ வைக்கும்  நிகழ்வு.ஐரா அதியனின் மொத்தக் குடும்பமும் சத்ரியனின் வீட்டில் ஆஜர்.இப்போது ரியாவும் சத்ரியனுமே ஐராவின் வீட்டிற்கு வர போக இருந்தனர்,

 

முதன் முறையாய் அன்று ஐராவை புடவையில் பார்த்தான் அதியன்.

அப்போது அவனுக்கு ஒரே எண்ணம் தான்.

 

‘நல்ல காலம் அன்னிக்கு இவ புடவை கட்டல…கட்டியிருந்தா அந்த பத்ரி ஓகே சொல்லியிருப்பான்…அய்யோ என் ரௌடி பேபி எவ்வளவு அழகுடி நீ…?எப்படி இத்தனை நாள் எனக்கு இது தெரியல..’ என்றுதான் யோசித்தான்.

 

ஆனாலும் அவன் பார்வை அதிகமாய் ஐராவைத் தொடரவில்லை.அவன் வீட்டு பெண்கள் அத்தனை பெருமே உறவுகள் என்பதை விட உளவாளிகள்..அதுவும் ஐரா அவள் ஐபியில் இருக்க வேண்டியவள்…சின்னதாய் அவன் பார்வையில் மாற்றம் இருந்தாலும் கண்டுகொள்வாளோ என பயந்தான்.

 

ஐராவோ சத்ரியனிடம்  வாசலில் நின்று தீவிரமாய் ஏதோ பேசிக்  கொண்டிருந்தாள்.

 

“சத்தி…நான் சொல்றேன்ல…இது ஆக்சிடெண்ட் இல்லடா..கொலை தான்…நீ கொடுத்த ரிப்போர்ட்ல அந்த டாக்டர் உடம்புல ஆக்ஸிடெண்டால மட்டும் காயம் இல்ல..யாரோ அடிக்கவும் செஞ்சிருக்காங்க…எல்லாத்துக்கும் காரணம் அனேகமா அந்த எம்பி மகன் தான்னு எனக்குத் தோணுது…”

 

“ஐரா..சொன்னா கேளுடி…இதுல நீ இன்வால்வ் ஆகாத…பெரிய ப்ரச்சனை ஆகிடலாம்..நீ கேட்டப்போ நான் ரீப்போர்ட் வாங்கி கொடுத்து தப்பு செய்துட்டேன் போல….”

 

“ஒன்னும் தப்பு இல்ல…என் நண்பன் ல..நீ…ஐரான்னா என்னனு தெரியுமா..நட்புன்னா என்னன்னு தெரியுமா…? எனக்கு ஒரு பிரச்சனைனா நீ வரமாட்டியா…?” என அவனை ஐரா வம்பிழுக்க,

 

“அப்போ கண்டிப்பா பிரச்சனை வரும்னு சொல்ற…அப்படி தானே”

 

“அடடே கரெக்டா சொல்லிட்டியே…வரலாம்…டா..எதாவது தரமான சம்பவம்லாம் நடக்கலாம்..சொல்ல முடியாது..” என ஐரா சொல்லிக்கொண்டிருந்தாள்.

 

ஐராவைக் காணாமல் அவளைத் தேடி வந்த அதியனின் கண்ணில் இவர்கள் பேசுவது பட,.அதுவும் அவளை புடவையில் பார்த்த பின் மார்கழி  நிலவாய் இருந்தவளைக் கண்ட அதியனின் அகத்தினுள் காதலாய் பெருகியது ஆர்கழி அலைகள்…..

 

அவர்களிடம் சென்றவன்,

 

“ஐரா..இங்க வா…” என்று கூப்பிட

 

“என்னடா..?” என அவள் கேட்க,

 

“வாடி…” என அவன் பல்லைக் கடிக்க,

 

“அத்தை சன் ஆங்க்ரி பேர்டா இருக்கான்  நண்பா..நான் போய் என்ன சொல்றான்னு கேட்குறேன்…” என இவள் போக,

 

“என்னடா”

 

“நான் சத்திட்ட பேசனும்..நீ உள்ளே போ…அத்தை கூப்பிட்டாங்க..” என அவளை போக சொன்னவன் சத்ரியனிடம் சென்றான்.

 

“சொல்லுங்க அதியன்…” என சத்ரியன் சொல்ல

 

“அது..வந்து மாப்பிள்ளை…”

 

“நீங்க…என்னை பெயர் சொல்லியே கூப்பிடுங்க… நான் உங்களை விட சின்னவன் தானே…” என சத்ரியன் புன்னகையோடு சொல்ல

 

அதியனும் சிரிப்புடனே “சத்தி… நான் சொன்னா தப்பா நினைக்க மாட்ட தானே..” என்று சொல்லவும் சத்ரியன்,

 

“சொல்லுங்க அதியன்…நான் எதுவும் நினைச்சுக்க மாட்டேன்…” என்றதும்

 

“அம்மா ரியாவை சென்னை அழைச்சிட்டுப் போகனும்னு ஆசைப்படுறாங்க…அவ இங்க இருந்தா தனியா தானே இருக்கனும்..இந்த சமயத்துல அவளுக்கு இன்னும் கொஞ்சம் கேர் தேவைப்படும் தானே..?! என

 

அதியன் விசயத்தை சொல்ல,சத்ரியனின் முகத்தில் யோசனை.

 

.

 

Advertisement