Advertisement

அத்தியாயம் இருபத்தி ஒன்று:

ப்ரீத்தி தன்னை முறைப்பதை பார்த்த மாலினி, அங்கே பார் என்பது போல  அவளுக்குக் கண்ஜாடை காட்டினார்.

“வாங்க, வாங்க”, என்று நெடு நாள் தெரிந்தவர் போல ராஜசேகர் ஹரியின் தந்தையை வரவேற்று இவர்கள் இருந்த இடத்திற்கு அழைத்து வந்தார்.

“யார் இவர்? நமக்கு தெரியாதே!”, என்று யோசித்தபடி, மகளை கண்களால் தேடியபடி அந்த பெற்றோர் ராஜசேகரன் பின் வந்தனர்.

சாதனா அங்கே நிற்கவும் தான், “இங்கே தான் இருக்கிறாயா?”, என்பது போல இருவரும் பார்த்து வந்தனர்.

ராஜசேகரன், “இது என் மனைவி மாலினி, என் பொண்ணு ப்ரீத்தி, என் பையன் ரகு”, என்று அறிமுகப்படுத்தினார்.  

ப்ரீத்தியை அடையாளம் கண்டு கொண்டவராக ஹரியின் அம்மா, “சாதனா உன்னை பத்தி நிறைய பேசுவாம்மா, நீ அவளுக்கு ரொம்ப ஸ்னேகிதமாமே, நீ பரிசு வாங்கின போட்டோ, அப்புறம் நீ நடிச்ச விளம்பரம், உன் போட்டோ எங்க வந்தாலும் என் பொண்ணு எடுத்து வெச்சிடுவாம்மா”, என்று ஹரியின் அம்மா புனிதா ப்ரீத்தியிடம் ஆசையாக பேசினார்.  

அவர் சற்று வள வளவென்று பேசுவார் என்று அவர் பேசிய மாத்திரத்தில் ப்ரீத்தியின் குடும்பத்தினருக்கு புரிந்தது.

“அதெல்லாம் உன் பையனோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர் மா”, என்ற மனதிற்குள் சாதனா பதில் கொடுத்தாள்.

“அவ்வளவு நல்லவளா நீ”, என்பது போல ப்ரீத்தி சாதனாவைப் பார்க்க,

“அண்ணா”, என்று சத்தம் வராமல் சாதனா ப்ரீத்தியைப் பார்த்து உதடு அசைக்க….. ப்ரீத்தியின் முகம் சந்தோஷத்தோடு கூடிய வெட்கத்தை பூசியது.

“என் பையன் இப்போ தான் மா இங்கிலாந்துல இருந்து வந்திருந்தான். அவன் இங்க இல்லையா, அதான் உன்னைப் பத்தி தெரியலை? சாதனா தான் வீடு முழுசும் ஒட்டி வெச்சிருக்கிற உன் படத்தைக் காட்டி சொல்லிக்கிட்டிருந்தா. இப்போ ஜெர்மனி போயிருக்கான்”, என்று ஹரியைப் பற்றி பெருமையாக பேசினார்.  

அதன் ஹரியின் அம்மா பேசிய அனைத்தும் ஹரியின் புராணங்களே. மகனுக்கு இங்கே கிடைத்த பெரிய வேலை. இப்போது இங்கிலாந்தில் பெரிய படிப்பு, மகனைக் குறித்து அவருக்கு மிகுந்த பெருமை, கர்வம் என்று புனிதா பேசிய விதத்தில் புரிந்தது.  

அதுவும் ப்ரீத்தியின் புகைப்படங்களை பார்த்து யார் என்று கேட்டான், ப்ரீத்தியை பாராட்டினான் என்றும் மீண்டும் சொல்லி, அவர் மகன் பெண்களையே பார்க்க மாட்டான், அவ்வளவு நல்லவன் என்பது போல பில்ட் அப் கொடுக்க…….   

ப்ரீத்திக்கு சிரிப்பை அடக்குவது பெரும் பாடாக இருந்தது.

மாலினி, ரகு, சாதனா என்று அனைவர் முகதிதிலும் புன்னகை தொற்றியது.

“என்ன இவங்க பையனுக்கு என் பொண்ணைத் தெரியாதா?, இப்படியெல்லாம் அவன் பில்ட் அப் கொடுத்திருக்கிறானா!”,

எல்லா பெற்றோருக்கும் அவரவர் மக்களை போல உத்தமர்கள் உலகில் கிடையாது என்ற நினைப்பு தான். ஆனாலும் ஹரியைப் பற்றிய நம்பிக்கை அவரின் அன்னைக்கு மிகவும் அதிகம் என்பது அவரின் சற்று பேச்சில் அப்பட்டமாக தெரிந்தது.

“என்னை அவ்வளவு டென்ஷன் பண்ணின இவங்க பையன், அவன் அப்பா அம்மா கிட்ட அவ்வளவு நல்ல பையன்னு பேர் எடுத்திருக்கிறானா? அவனை என்ன பண்ணலாம்?”, என்று ராஜசேகரன் காண்டு ஆனது அங்கிருந்த ஹரியின் பெற்றோரைத் தவிர அனைவருக்கும் புரிந்தது.

ப்ரீத்தி அவர் டென்ஷனானதை பார்த்து கண்களால் சிரித்தாள். வெகு நாட்களுக்கு பிறகு மகள் தன்னுடன் கண்ணில் பேசவும்……

அவளின் இந்த மகிழ்ச்சி தானே முக்கியம், தனக்கு ஹரியைப் பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை என்று மனதை தேற்றி, 

“உட்காருங்க, அப்புறம்!”, என்று ஹரியின் அப்பாவிடம் ராஜசேகரன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.

“இவர் என்னடா என் பையனுக்கு பொண்ணு கொடுக்கப் போற மாதிரி என்னை இத்தனை கேள்வி கேட்கறார்”, என்று லட்சுமணன் நொந்து போகும் அளவிற்கு ராஜசேகரன் அவரை கேள்வி கணைகளால் தாக்கி கொண்டிருந்தார்.

அவருடைய மூதாதையர்களை முதல் கொண்டு இப்போது லட்சுமணனின் ஒன்று விட்ட அண்ணனுக்கு பிறந்திருக்கும் பேரன் வரை எல்லோரை பற்றி விசாரித்து,

“என்ன சொத்து இருந்தது, இப்போது என்ன இருக்கிறது”, என்று பெரிய படமாக ஓட்ட, பலன் பூஜ்யம். சொத்து என்ன? சொந்த வீடு  கூட கிடையாது. இங்கே எப்படி பெண்ணைக் கொடுப்பது! இப்படி ஒரு இடத்தில் என் மகளைத் திருமணம் செய்து கொடுப்பதற்கா நான் என் மனைவி மக்களை விட்டு அயல் தேசத்தில் ஓடி ஓடி திரவியம் தேடினேன்.

“எப்படிப்பட்ட இடத்தில் மகளை திருமணம் செய்ய நினைத்திருந்தேன். எத்தனை நகைகள் சொத்துக்கள் அவளுக்காக சேர்த்தேன். என் உழைப்பின் பலன்?”,

“அவள் இப்போது எத்தனை சம்பாதித்து இருக்கிறாள். என் பெண்ணின் சம்பாதனை, என் பெண்ணின் சொத்து, ஆனாலும் அதில் பைசா செலவு செய்யாமல் எல்லாம் அவளுக்காக நான் சேமித்து வைக்க, இந்த ஒன்றுமில்லாத பயல்கள் என் பெண்ணைத் திருமணம் செய்வதால் கோடீஸ்வரர்கள், என்ன சொல்ல……”,    

“இதற்கு நான் இங்கேயே இருந்திருக்கலாமே”, என்று அவரின் மனதிற்குள் எண்ணம் ஓடியதை  ராஜசேகரனால் தடுக்க முடியவில்லை. ஆனாலும் முகத்திலோ பேச்சிலோ சிறு சுணக்கம் கூட காட்டாமல் மிகவும் மரியாதையாக லட்சுமணனிடம் பேசிக் கொண்டு இருந்தார்.    

சாதனா அவர்கள் பேசுவதை ஒரு போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் அண்ணனுக்கு அனுப்பியவள், கூடவே மாலினியும் ஹரியின் அம்மா புனிதா பேசுவதையும் எடுத்து அனுப்பி, இதைப் புன்னகையோடு பார்த்திருக்கும் ப்ரீத்தியின் புகைப் படத்தையும் அனுப்பினாள்…….

கூடவே,

நம்தன, நம்தன,                                                                                                         தாளம் வரும், புது ராகம் வரும்,

                     அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்,

                        மணமாலை வரும், சுப வேலை வரும்,

                                      மணநாள் திருநாள்…….

அப்படின்னு பீஜியம் ஒட்டு அண்ணா என்றும் மெசேஜ் அனுப்பினாள்.

ப்ரீத்தி அழுததில் இருந்து, என்ன வாயிற்றோ? ஏதாயிற்றோ? அவளின் தந்தை விட்டால் ஜெர்மனி வந்தே தன்னை உதைப்பாரே, இன்னும் தீவிரமாக தங்களின் காதலை எதிர்பாரோ என்று முற்றிலும் தன்னை தொலைத்து இருந்தவன்…….  இப்போது,

ஹரி சிறகில்லாமல் வானில் பறந்தான். 

ரோடில் நடந்து போய் கொண்டிருந்தவன், “ஹேய்”, என்று உற்சாக மிகுதியில் கத்த……

எதிரில் நடந்து வந்துகொண்டிருந்த ஜெர்மனி நாட்டுப் பாட்டியும் பேத்தியும் நின்று அவனை அதிசயமாக பார்த்தார்கள்.

“வாட்ஸ் தி குட் நியுஸ் கிரான்ட்சன்”, என்பது போல அவர் ஜெர்மனியில் கேட்க……

“ஒஹ், கிரானி!”, என்றவன் அவரை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட, பக்கத்தில் நின்ற அவரின் பேத்தி ஹரியை எனக்கு இல்லையா என்பது போல பார்த்த மாதிரி இல்லை, அப்படியே தான் பார்த்தாள்.

ஹரி அவளைப் பார்த்து கண்ணடித்து, “சாரி! ஐ டோன்ட் ஹேவ் பெர்மிஷன்”, என்று சொல்லிச் செல்ல…

அந்த பெண் பாட்டி அறியாமல் ஒரு பறக்கும் முத்தத்தை பரிசாக கொடுத்தாள்….

சிரித்து பார்த்த ஹரி, ஒரு மோஸ்ட் ஹேண்ட்சம் எலிஜிபில் பேச்சிளர் பெண்களின் கண்களுக்கு,

ஹரி வாய் விட்டு அந்த பெண்ணை நோக்கி பாடினான். 

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா,

அந்த பெண் புரியாமல் பார்க்க…….

“ஃபார் மை கேர்ள்”, என்றான் ஜெர்மனியில், ஜெர்மனி நாட்டில் பணிபுரிய ஜெர்மன் மொழி தெரிந்திருப்பது கட்டாயம்.

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

 

மனமே மனமே……

ஒரு பொண்ணைத் தேடி நான் தொலைஞ்சேன்

மனமே மனமே……

அவ காதலால நான் கரைஞ்சேன்

 

அதே பாடல் அங்கே மாளவிகா மற்றும் நிதினின் திருமணத்தில் ஒலித்தது,

சாதனா ஆர்கெஸ்ட்ராவிடம் சொல்லிப் பாடச் சொல்லியிருந்தாள்..

அது ஆரம்பிக்கும் நேரம், “இது அண்ணா உங்களுக்காக டெடிகேட் பண்ண சொன்னான்”, என்று ப்ரீத்தியின் காதில் ரகசியம் சொன்னாள்……

ப்ரீத்தியின் முகம் ஹரியை நினைத்து மலர்ந்தது.

பெண்ணே எந்தன் கண்ணை பார்,

உள்ளே லட்சம் வெண்ணிலா,

உந்தன் கண்கள் என்னைக் கண்டதும்,

லட்சங்கள் கோடியாய் மாறுதம்மா,

 

அடி போனது போகட்டும் காயங்கள் ஆறட்டும்

எப்போது நான் உன்னைக் கனவில் பார்க்க ,

ஆசைகள் வந்திடும் ஆனந்தம் தந்திடும்,

இன்று முதல் இந்த பாட்டை நீ கேட்க ,

 

முகத்தில் இருக்கும் சிரிப்பு ,

ஆனா உள்ளுக்குள் என்னடி மொறப்பு,

அடி அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ,

இதுதான் என்னோட கருத்து,

 

என்னைத் தான் நீயும் பார்க்க ,

ஆசைகள் வந்தென்னை தாக்க ,

மீண்டும் நான் உன்னையே பாக்க ,

காதல் வந்து நெஞ்சம் மலர்ந்ததேய் ,

 

உலகம் மறந்ததே ,

அடி உன்னால் புதிதாய் பிறந்ததே ,

அட ஏன் இப்படி நிகழ்ந்தது ,

ஆ இரு உயிர் ஒன்றாய் கலந்ததே ,

 

அடியே இப்போ ஏன் சிரித்தாய் 

இதயம் சட்டென நீ பறித்தாய் ,

உன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே

 

மனமே மனமே,                                                                                                         

ஒரு பொண்ணத் தேடி நான் தொலைஞ்சேன்,                                                                       

மனமே மனமே,                                                                                                           

அட காதலால நான் கரஞ்சேன் 

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா,                                                                                    

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா……  

ஹரியின் குரல் ப்ரீத்தியின் மனதோடு ஒலித்தது. ப்ரீத்தியும் சிறகில்லாமல் விண்ணில் பறந்தாள்.

Advertisement