Advertisement

அத்தியாயம் பதினான்கு:

ப்ரீத்தியின் பயம் புரியாதவனாக ஹரி, “ஹேய் ஹனி, ரொம்ப நாளாச்சு வேற பேசுடா”, என்றான்.

“போ, உன்கூட நான் பேச மாட்டேன்”, என்று குழந்தைத் தனமாக அவனுடன் ப்ரீத்தி சண்டையிட,  

“இதை சொல்லத் தான் போன் பண்ணுனியா”,

“நீ போன் பண்ண பெர்மிஷன் குடுக்க எடுத்துகிட்ட டைம்ல நான் என்ன சொல்ல வந்தேன்றது மறந்தே போயிடுச்சு”,

“அப்போ வெக்கட்டுமா, ஞாபகம் வந்ததும் போன் பண்றியா”,

“ம்கூம், ஞாபகம் வந்தாலும் பேச மாட்டேன்”,

“ஏய், இரு, இரு, வெச்சிடாதா, என்னவோ என் முடிவை  நானே ப்ரேக் பண்ணிட்டேன், பேசு, பேசு!”,

“ஒன்னும் தேவையில்லை, நான் வெக்கப் போறேன்”,

“என்னை அடி கூட வெச்சிக்கோ, போனை வெக்காதா பேசு”, என்று ஹரி சற்று கெஞ்சலாக பேசவும் தணிந்தவள்,  

“என்ன பேச?”,

“எப்பவும் உன்னோட ஸ்குவாஷ் கோர்ட்ல நடந்தது, அப்புறம் நீ வண்டில போகும் போது ஒருத்தன் கிண்டல் பண்ணினது, உன் ஃபிரண்ட் விஷ்ணுக்கிட்ட ஒருத்தி ப்ரபோஸ் பண்ணினது, முக்கியமா உன்கிட்ட ஒருத்தன் ப்ரபோஸ் பண்ண வர்ற மாதிரி தெரிஞ்ச உடனே நீ அவன்கிட்ட உன் காதல் கதையை சொல்லி ப்ளேட் போட்டது, இப்படி நிறைய என்கிட்டே எப்பவும் மொக்கை போடுவியே அந்த மாதிரி”,

“என்ன என் பேச்சு மொக்கையா”, என்று ப்ரீத்தி கத்த,       

“சரி, சரி, நான் உண்மையை இப்போதைக்கு சொல்லலை, எதுக்கு போன் பண்ணுனியோ அதை பேசு”, என்று போனால் போகிறது என்பது போல  ஹரி சொல்ல,  

“அது என்னை ஒரு ஆட்ல நடிக்க கூப்பிடறாங்க, நான் நடிக்கட்டுமா”,

“என்ன விளம்பரமா?  என்ன அது?”,

“அது ஒரு எனர்ஜி ட்ரின்க்”,

பெயர் கேட்கவும், ம், பாபுலர் கம்பனி தான் என்று அவனுக்கு தெரிந்தது. “என்ன எடுக்க போறாங்க? என்ன கான்செப்ட்?”,

“நான் நடிக்கறேன்னு சொன்னா தானே அதைக் கேட்பேன்”,

“கேட்கணும் ப்ரீத்தி, கேட்டா தானே நடிக்கலாமா வேண்டாமான்னு தெரியும்”,

“ஓஹ்”, என்று இழுத்தவள், “நான் கேட்கலையே”,

“உங்கப்பா என்ன சொல்றார்?”,

“அவர் யோசிக்கறார்…..”,

“நான் சரின்னு சொல்லி அவர் வேண்டாம்னு சொன்னா நடிப்பியா”,

“அது எப்படி முடியும்?”,

“அப்போ முதல்ல அவர்கிட்ட பெர்மிஷன் வாங்கு, கூடவே என்ன கான்செப்ட்ன்னு கேளு”,

“அதுல என்ன பெரிய கான்செப்ட் இருக்க போகுது”,

“ஹா, ஹா,  நம்ம ஆட் மேனேஜர்ஸ்க்கு எல்லாம் டிப்ஃபரன்ட் திங்கிங்,  நீ பாத்ரூம்ல குளிக்கற மாதிரி ஒரு சீன் வெச்சு, அங்கிருந்து நீ டவளோட வந்தவுடனே, எனர்ஜி ட்ரிங்க் குடிச்சு, பேட் கைல எடுக்கற மாதிரி சீன் வெப்பாங்க”,

“ஆங், அப்போ வேண்டாம், வேண்டாம்”, என்றாள் அவசரமாக ப்ரீத்தி.

“ஐயோ, நான் அப்படித்தான் வெப்பாங்கன்னு சொல்லலை, நமக்கு பிடிக்காத மாதிரி திடீர்ன்னு வெக்க கூடாது இல்லையா, அதுக்கு தான் ஓகே, நீ தெளிவா கேளு”,

“முதல்ல உங்கப்பாவை கேளு, ஓகே”,

“ம்,  ஆனா எனக்கு தெரியலைன்னா”,

“அது அப்புறம் பார்க்கலாம், முதல்ல கேளுப்பா”, என்றான்.

“சரி”, என்று சொன்னவள், “அப்போ வெச்சிடட்டுமா”,

“என்ன வைக்கறியா உதை, ஒழுங்கா இன்னும் அரை மணி நேரம் பேசு”,

“என்ன பேச?”,

“என்கிட்ட சேட்ல ப்ளேட் போடுவியே, அந்த மாதிரி ஏதாவது”, என்று ஹரி மறுபடியும் ஆரம்பிக்க,  

“என்ன? நான் ப்ளேட் போடறனா”,

“இல்லையா, அப்போ கத்தி போடறியா”,

“ம், நேர்ல இருந்தீங்க, உங்க தலையில தான் போடுவேன்”, என்று ப்ரீத்தி மரியாதை பன்மைக்கு மாறியிருக்க,  

“அந்த தைரியத்துல தானே நான் பேசறேன்”,

“ஸ்கைப் வர்றீங்களா, உங்களை பார்க்கணும்னு ஆசையா இருக்கு”, என்றாள்.

“பார்த்தா, நேர்ல பார்க்கணும் போல இருக்கும்”, என்றான் ஹரி.

“இவ்வளவு நாளா பேசாம ஒன்னும் தெரியலை, இப்போ பேசவும் அடுத்து பார்க்கணும்னு தோணுது, கஷ்டம் ஹனி”, என்றான்.

திரும்பவும் மரியாதையை கை விட்டவள், “நீ இப்படியே பேசிட்டு இரு, அப்புறம் நீ என்னை பார்க்கணும்னு சொல்லும் போது நான் உன்கிட்ட பேசமாட்டேன், பார்க்க மாட்டேன், போ…….”, என்று சொல்லி ப்ரீத்தி போனை வைத்து விட்டாள்.

“ச்சே, இவ என்ன இப்படி அபசகுனமா பேசறா, இதுக்கு தான் நான் பேச மாட்டேன்னு சொன்னேன். இடியட் எப்போ தான் இவ பெரிய பொண்ணு ஆவா”, என்று சற்று எரிச்சலாகி விட்டான் ஹரி.

அவனிடம் பணம் இல்லாததால் கூப்பிட முடியவில்லை. அன்று தான் பெற்றோரிடம் வேறு பேசியிருந்தான். அந்த பேச்சுக்கள் நீண்டுக் கொண்டே போக, அவனின் போன் பேலன்ஸ் தீர்ந்து விட்டது.

இப்போது சிஸ்டம் ஆன் செய்து மறுபடியும் சேட் ஆ , சோர்வாக இருக்க படுத்துவிட்டான்.

ப்ரீத்தி அவன் கூப்பிடுவான், அல்லது சேட்டிலாவது வருவான் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனாள்.

“என்னடா இது? ஒரு சண்டையை கூடத் தொடரமுடியாமல், ஒரு சமாதானம் கூட உடனே செய்ய முடியாமல், இந்த தொலைதூர வாழ்க்கை தனக்கு வேண்டாம்”, என்று மனது இன்னும் ஸ்திரமாக நினைக்க துவங்கியது.    

அப்பாவையும் விளம்பரத்திற்கு கேட்க, அவருக்கு ஒரு மாதிரி இது தேவையில்லாத செயலோ என்று தான் தோன்றியது.

ப்ரீத்தியின் வெற்றி பெற்ற புகைப்படங்கள் வரும்போதே, அவருக்கு ஒரு மாதிரி இருக்கும், ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்று, “போன வருடம் தானே அந்த பையனிடம் பேசி அவனை இங்கிருந்து போக சொன்னோம்”, என்று அவருக்கு தேவையில்லாமல் ஹரியின் நினைவு வேறு.  

ராஜசேகரன், “நீ என்ன நினைக்கற?”, என்று ப்ரீத்தியிடம் கேட்க,

“பண்ணலாம் பா, ஸ்குவாஷ் கேம் எல்லாம் பிரமோட் ஆகும், இது ரொம்ப ஹெல்தி கேம் கூட”, என்று அவள் அவளின் கேமிர்காக சொன்னாள்.

இருந்தாலும் அவருக்கு யோசனையாக இருந்தது.

அவருக்கு மிகவும் யோசனையாகவே இருந்தது. போனில் அவர் வெகு நேரம் பேசாமலிருக்க, “அப்பா”, என்று ப்ரீத்தி கத்திய பிறகே,

“அம்மா என்ன சொல்றா”, என்றார்.

“அம்மா என்ன சொல்லுவாங்க? அம்மா இங்க இருந்தாலும், நீங்க நினைக்கறதைத் தான் சொல்லுவாங்க”, என்றாள் சற்று கடுப்பாக.

ஆம், எப்போதும் ஒரு வார்த்தைக் கூட மாலினி ராஜசேகரனுக்கு மறுத்துப் பேச மாட்டார். எப்போதும் ராஜசேகரனின் வார்த்தைகள் தான் மாலினியின் வாய் மொழியாக வரும்.

ப்ரீத்தி எப்போதும் சொல்லுவாள், “அம்மா நீ நினைக்கறதைச் சொல்லு, அப்பாக்கு வாய்ஸ் குடுக்காத”, என்று.

இப்போது அப்பா கேட்கவும், அம்மாவை பார்த்தாள், “எதுக்கு ப்ரீத்தி விளம்பரம் எல்லாம்”, என்று அவரும் சற்று பயந்து பேச,

“நடி, நடிக்காத, ஓகே! ஆனா ஏன் இப்படி ஒரு பயம்! என்னவாகிடும்?”,

“ஒன்னுமில்லையே”, என்றார் கலவரமாக.

அவர் ஒன்னுமில்லையே என்று சொன்ன விதத்திலேயே, “மா…… எனக்கு தெரியாம ஏதாவது மறைக்கிறியா”, என்றாள்.

“இல்லைடா”,

“சரி அப்போ நான் அதுல நடிக்கறேன்….. ஆளாளுக்கு ஒன்னு சொல்றீங்க”, என்று உடனடியாக முடிவெடுத்தாள்.

“நானும் அப்பாவும் தானே, வேற யாரு”, என்று மாலினி கேட்க,

“ம், என் மனசு”, என்று சொல்லி, அப்பாவிடமும் தான் அந்த விளம்பரப் படத்தில் நடிக்கிறேன் சொன்னாள்.

ப்ரீத்தியின் குரலிலேயே அவளின் பிடிவாதத்தை அறிந்தவர், மேலும் வார்த்தையை வளர்க்காமல்,  அவரும் சரியென்று சொல்ல, அதன் பிறகு  ஹரியை திரும்ப போனிலேயே அழைத்தவள், “நான் அந்த விளம்பரத்துல நடிக்க போறேன், என்ன செய்யணும்”, என்ற மட்டும் தான் சொன்னாள்.

“நடிக்கட்டுமா? வேண்டாமா?”, என்று கேட்கவில்லை.

“உங்கப்பா சரின்னு சொல்லிட்டாரா”,

“நான் பெர்மிஷன் கேட்கவேயில்லை, ஜஸ்ட் சொல்லிட்டேன்!”, என்று சற்று திமிராக சொல்ல,  

“ஏன், திடீர்னு இந்த திமிர் உனக்கு?”,

“ம், நீ என்னையே நினைச்சிட்டு இருக்கள்ள, அந்த திமிர் தான்!”,

“அப்போ நான் நினைக்லைன்னு சொல்றியா”,

“நினைச்சிருந்தா நேத்து ஸ்கைப்ல என்னை பார்க்கணும்னு சொல்லியிருப்ப”,

“நான் தான் உன்னை நியூஸ்ல பார்த்தேனே!”,

“எப்போ? அது ஒரு மாசம் முன்னாடி”,

“இப்போ உன் முகம் மாறிடிச்சா”,

“ம், மீசை முளைச்சிடுச்சு”,

“லூசு உளர்றதையே பொழைப்பா வெச்சிருக்கியா நீ”, என்றான் அவனை மீறிய எரிச்சலோடு,  

“நீ என்னை திட்டுற”,

“பின்ன”, என்று இன்னும் திட்டியவன், “எல்லாம் விளையாட்டு இல்லை ப்ரீத்தி……. நடிக்கற, ஓகே, என்ன கான்செப்ட்? என்ன டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்? எல்லாம் யாரு பேசுவா?”,

“நான் தான்!”,

“நீ ஒன்னும் கிழிக்க வேண்டாம், உங்கப்பா கிட்ட சொல்லு! வேண்டாம்! வேண்டாம்! அவர் உனக்கு மேல புத்திசாலி, குதிரைக்கு கடிவாளம் கட்டின மாதிரி ஒரே மாதிரி யோசிப்பார்! புத்திசாலித்தனம் பத்தாது”.

“ஏய், நீ என்ன எங்கப்பாவை திட்டுற”,

அதற்கு பதில் சொல்லாமல், “உன்கிட்ட யார் பேசறாங்களோ? அவங்களை என்கிட்டே பேச வை”, என்றான் கறாராக.

“உன்னை யார்ன்னு கேட்டா என்ன சொல்ல”,

“உன்னோட மேனேஜர்ன்னு சொல்லு, பீ மோர் அஃபிசியல்”, என்றான்.

ப்ரீத்தி வாய் விட்டு சிரித்தவள், “நீ என்னோட மேனேஜர் இல்லை, டேமேஜர்”, என்றாள்.

“இரு, நிஜமான டேமேஜ் எதுன்னு நான் காட்டுறேன்”,

“நீ………. நீ…….. இதை என்ன நம்பச் சொல்ற, புதுசா எங்கப்பா ஏதாவது ரூல்ஸ் போட்டா அப்ஸ்கான்ட் ஆகிடுவ”, என்றாள் நக்கலாக.

“ஏய், என்ன? இவ்வளவு தூரத்துல இருக்கேன்னு பேசறியா……. பக்கம் வந்தேன், அப்புறம் தெரியும்”,

“என்ன தெரியும்?”,

“ம், உன்னோட பியுடிஃபுல் கர்வ்ஸ்”,

“ஆங்! என்ன?”, என்று ப்ரீத்தி வாய் பிளக்க,

அதன் சத்தம் கேட்டு, “என்ன இது சத்தம்! நான் சொன்னதை என்னன்னு நினைச்ச”,

“நீ ஸ்மைல் பண்ணும் போது தெரியற உன்னோட லிப் கர்வ்ஸ் ஹனி, ஒரு பொண்ணோட மிக முக்கியமான அழகான வளைவு, அவளோட உதட்டுச் சிரிப்பு”, என்று ஹரி சொல்ல,

ப்ரீத்தியின் முகம் நிஜமான ஒரு சந்தோஷமான புன்னகையில் விரிந்தது,

“போ! போய் உன் முகத்தை கண்ணாடில பார்! நான் சொன்னது எவ்வளவு நிஜம்னு தெரியும்”.

அவளின் ரூமில் இருந்த ட்ரெஸ்ஸிங் டேபிளில் பார்த்தாள், அவளின் முகம் சந்தோஷத்தில் இருந்தது, உதடுகள் சிரிப்பில் வளைந்து தான் இருந்தது.

“ரசிகன்டா……..”, என்றாள்.

“எஸ், உன்னோட!”, என்று ஹரி மீண்டும் சொல்ல,

“எப்படி தான் என்னை இப்படி ஃபிளாட் ஆக்கறயோ நீ”, என்றாள் கொஞ்சலாக.    

 “பெரிய இவ மாதிரி போன் கட் பண்ணிட்டு போன!”,

“அதான் வந்துட்டேன் இல்லை”,

“இன்னும் நீ வளரணும் ப்ரீத்தி”, என்று ஹரி சீரியசாக ஆரம்பிக்க,

“ஐயோ, அட்வைஸ் பண்ணாத, வேண்டாம்!”, என்று நிஜமாகவே போனில் கத்தினாள் ப்ரீத்தி.

“ஏய், கத்தாத!”, என்று ஹரி அங்கு கத்த,

அதற்குள் மாலினியும் ரகுவும் என்னவோ ஏதோ வென்று விரைந்து வந்தனர்.

“என்ன ப்ரீத்தி?”, என்று கேட்ட அம்மாவுக்கு,

“சும்மா போன்ல கத்தினேன் மா! என் ஃபிரண்ட்ஸ் கிட்ட!”, என்று அசடு வழிந்தால் ப்ரீத்தி.  

“என்னவோ ஏதோன்னு பயந்துட்டோம்”, என்று மாலினி சொல்ல,

“இன்னும் நீ டென்ஷன் ஆகற விஷயத்தை நான் சொல்லவே இல்லைமா”,

“எதை?”,

“நான் லவ் பண்றதை”,

“என்ன?”, என்று மாலினி அதிர்ந்து நிற்க,

அவரின் டென்ஷனை பார்த்த ப்ரீத்தி டென்ஷன் ஆகிவிட்டாள், “ஐயோ, அம்மா! சும்மா சொன்னேன்”, என்று மாலினியை தேற்றினாள்.

போனில் எல்லாம் ஹரி கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.

“அப்படி ஏதாவது இருந்தா சொல்லிடு ப்ரீத்தி”, என்று மாலினி கேட்க,

அவரின் கலங்கிய முகத்தை பார்த்த ப்ரீத்திக்கு, சொல்ல வாயே வரவில்லை.

“அதெல்லாம் இல்லை, யூ டோன்ட் வொர்ரி மா”, என்று தேற்றினாள்.

மாலினி அரை மனதாக அங்கேயே அமர்ந்துவிடவும், வேறு வழியில்லாமல் போனை கட் செய்தாள்.

ஹரிக்கு இன்றும் எரிச்சலாக இருந்தது. சொதப்பலின் மொத்த உருவமாக ப்ரீத்தி அவனின் கண்களுக்கு தெரிய, “இவளுக்கு எல்லாம் விளையாட்டு தானா! எதை எப்போது பேசுவது என்று இவளுக்கு தெரியுமா? தெரியாதா? ஐயோ! இவள் எல்லாவற்றையும் கெடுத்து விடுவாளோ!”, என்று மிகவும் கவலையாகி விட்டது ஹரிக்கு.

“இவங்கப்பனைச் சமாளிக்கறதா? இல்லை, இவளைச் சமாளிக்கறதா? உனக்கு ஏண்டா ஹரி இவளைப் போய் பிடிச்சது”, என்று நேற்றிலிருந்து நூறாவது முறையாக அவனுக்கு அவனே கேட்டுக் கொண்டான்.

 

“இவளுக்காக வேலையை விட்டு…… வீட்டை வித்து…… அப்பா அம்மாவைக் கஷ்டபடுத்தி……. இங்க வந்து உட்கார்ந்துகிட்டு…….. எவன் அதிகமா சம்பளம் குடுப்பான்னு அலசி ஆராய்ஞ்சிகிட்டு…. உனக்கு இது தேவையாடா”, என்று அவன் மனம் கேள்வி கேட்டது.

ப்ரீத்தியின் முகம் கண்களில் வர, “தேவை, தேவை, அவள் எப்படி இருந்தாலும் எனக்குத் தேவை. ஐ லவ் ஹெர்”, என்று சொல்லிக்கொண்டான்.

இன்னும் அவளிடம் கூட ஐ லவ் யூ சொல்லாத நிலையில், அதாவது வார்த்தைகளினால், அவனுக்கு அவனே மறுபடியும் கன்ஃபர்ம் பண்ணிக்கொண்டான்.    

 

Advertisement