Advertisement

அத்தியாயம் பன்னிரெண்டு:

ஹரி இவளிடம் எப்படி சொல்லி புரியவைப்பது என்பது போல பார்த்தான். ப்ரீத்தியின் முகத்தில் மிகுந்த பிடிவாதம் தெரிந்தது.

இவளிடம் அதட்டல் செல்லாது என்று புரிந்தவன், “ப்ளீஸ், ப்ரீத்தி புரிஞ்சிக்கோ, நான் உன்னை பார்க்க மாட்டேன், பேச மாட்டேன்னு சொல்லியிருக்கேன்….. அதை நான் கீப் அப் பண்ணனும்”,

“உன் பேரன்ட்ஸ்க்கு என் மேல நம்பிக்கை வரணும்”, என்றான் கெஞ்சுதலாக.

“உன்னை பிடிக்குது, பிடிக்கலை சொல்லலாம். பட் நம்பிக்கையின்மை ஏன் வருது?”, என்றாள் கேள்வியாக.

“இவ என்னடா வார்த்தையில கூட படிக்கறா, இன்டெலிஜென்ட் தான்”, என்று மனதிற்குள் பாராட்டிக் கொண்டவன், அதை  வெளியில் காட்டாமல், “தோ பார், எக்ஸாம் கேள்வி பதில்க்கு மட்டும் தான் பதில் சொல்வேன். வேற எதுக்கும் எனக்கு இப்படி பதில் சொல்றது பிடிக்காது”, என்றான் கட் அண்ட் ரைட்டாக.  

ப்ரீத்தி கோபமாக மீண்டும் முறைக்கவும்,

“காலையில எட்டு மணிக்கு நான் எம்பசிக்கு போகணும்னு நினைச்சிருக்கேன். டைம் ஆகுது”, என்றவன், “நான் வர்றது உனக்கு எப்படி தெரியும்? முதல்ல அதை சொல்லு. நிதின்க்கு நான் வர்றது தெரியாது. நான் அவன் கிட்ட பேசியே நாளாச்சு”, என்றான்.

“உன் தங்கச்சி”, என்றாள் பளிச்சென்று ப்ரீத்தி.

“சாதனா வா, அவளை உனக்கு எப்படி தெரியும்?”,

“ம்ம்ம்ம்ம்ம், உனக்காக ஃபிரெண்ட் பிடிச்சேன்”,

“எப்படி?”, என்றான் ஆச்சரியமாக.  

“போன் நம்பர் நிதின் கிட்ட வாங்கி, நல்லா பேசுறா ஸோ ஸ்வீட், உன்னை மாதிரி இல்லை”,   

“என்ன சொன்ன அவகிட்ட”, என்று கலக்கமாக கேட்கவும்,

“அதுவா உன் கேர்ள் ஃபிரண்ட்ன்னு சொல்லி”,

“என்ன கேர்ள் ஃபிரண்டா”, என்று ஹரி வாயைப் பிளக்கவும்……

“இல்லையா என்ன?”,

“இல்லையே, நீ என் லவர் தானே”, என்று ஹரி கண்ணடிக்க,

“அய்யோடா எப்போ சொன்னிங்க என்கிட்டே”,

“சொல்லணுமா என்ன?”, 

“தேவையில்லை, தேவையில்லை, ஆனா நான் இப்போ சொல்றேன் சாதனா கிட்ட”, என்று ப்ரீத்தி போன் எடுக்கப் போக,

“அம்மா, தாயே, ஏற்கனவே உங்க வீட்லயே நான் சொதப்பி வெச்சிருக்கேன். எங்க வீட்லயும் வேண்டாம். அதுவும் இப்போ வேண்டாம். எங்கப்பா இப்போ தான் அவரோட எல்லாத்தையும் எனக்காக வழிச்சு கொடுத்திருக்கார். மெதுவா சொல்லலாம்”, என்றான்.

“ரொம்ப கஷ்டமா நான் ஹெஃல்ப் பண்ணட்டுமா”, என்றாள் தயங்கி தயங்கி.

“நீயா? நீ என்ன பண்ணுவ”, என்றான் சிரிப்போடு.

“மணி! மணி ப்ராப்ளம்னா என்கிட்டே இருக்கு! நான் குடுக்கட்டுமா!”,

“உங்கப்பா என்னை ஃபிராட்ன்னே முடிவு செஞ்சிடுவார்”,

“இல்லை, இது அப்பா பணமில்லை. என் பேர்ல அப்பாவோட அப்பா போட்டது”, என்றாள்.

“நீ கேட்டதே எனக்கு சந்தோஷம். யூ ஆர் வித் மீ னா. எனக்கு அது போதும். இப்ப எங்கப்பா கொடுத்திருக்கார். கொஞ்ச வருஷத்துல எடுத்துடுவேன். பார்க்கலாம்”, என்றான்.

“என்ன படிப்பு”, என்று ப்ரீத்தி டீட்டைல்ஸ் கேட்கவும் சொன்னான்

“டைம் ஆகுது ப்ரீத்தி, நான் ஏதாவது ஹோட்டல்ல ரூம் போட்டு ப்ரெஷ் ஆகணும்….. நான் அங்க நிதின் வீட்டுக்கு வரலை. உங்கம்மா பார்த்தா அவ்வளவு தான், நான் சொல்றபடி கேளு”, என்றான் பொறுமையாக.

“எதுக்கு ரூம்? அங்க ஒருத்தன் உங்களைக் கூட்டிட்டு போக வெயிட் பண்றான்”, என்று திரும்பி கை காட்ட, அங்கிருந்து ஒரு இளைஞன் வந்தான்.

“இது விஷ்ணு, என் ஃபிரெண்ட், அவன் ரூம் போங்க”, என்றாள்.

“எல்லாரையும் சிரமப்படுத்துவியா”, என்று ஹரி சொல்ல,

“நோ சர், இட்ஸ் மை ப்லஷர், இது கூட செய்யலைன்னா, அப்புறம் என்ன ஃபிரண்ட்ஸ்”, என்று விஷ்ணு புன்னகைக்க,

நிதின் வீட்டிற்கு அவன் வரமாட்டான் என்று தெரிந்து செய்திருந்தாள்.

ஹரி உடனே கிளம்பியவன், “நீ போ ஃபோன் பண்றேன், நிதின் கிட்ட சொல்லிடாத, அப்புறம் நான் இங்க இருக்கேன், அவனை பார்க்கலைன்னா ரொம்ப அப்செட் ஆகிடுவான். நான் தூர இருந்தா தான் அவன் லவ் சக்சஸ் ஆகும்”, என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு சொல்லவும் தான் நகர்ந்தாள்.

“என்னவோ பேச்சே முடியாத மாதிரி ஒரு ஃபீலிங் ப்ரீத்திக்கு”, மனமேயில்லாமல் தான் நகர்ந்தாள்.

“என்னை பார்த்துட்டு தான் போகணும்”, என்ற செய்தியைக் கண்களால் அவனுக்கு அனுப்பி,

ஹரிக்கு இப்போது சிந்தனை முழுவதும் விசாவில் தான்…….

அவன் அந்த ப்ரொசீஜர்ஸ் எல்லாம் முடித்து வெளியே வந்த போது தான் பசியே தெரிந்தது. காலையில் இருந்து சாப்பிடவே இல்லை. மாலையாகியிருந்தது…….

எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்ற கவலை……. சரியாக தான் செய்கிறோமா என்ற கவலை……   

ப்ராக்டிஸ் போகும்போது மீட் பண்றேன் என்று மெசஜ் அனுப்பி, சாப்பிட்டு கொஞ்சம் தூரம் தான் இருந்தாலும் நடந்தே போய் அங்கே போய் ப்ரீத்திக்காக காத்திருந்து,

“நான் கிளம்பறேன் ப்ரீத்தி”, என்று அவளை பார்த்ததும் சொல்ல,

அவளின் முகம் சுருங்கியது. “ப்ளீஸ் ப்ரீத்தி, நான் வார்த்தையை கீப் அப் பண்ணனும். ப்ரீத்தியை பார்க்க மாட்டேன், அப்போவும் உங்க பொண்ணு என்னை மறக்க மாட்டான்னு சொல்லிட்டு இப்படி செய்யறது நல்லாவா இருக்கு. புரிஞ்சிக்கோ”, என்று சொல்ல,

“உன்னை யாரு என்னை கேட்காம சொல்ல சொன்னா? அது உன் தப்பு? எப்படியும் நீ இப்போ இங்கிலண்ட் போயிட்டா, என்னால பார்க்க முடியாது, பேசக் கூடாதுன்னு சொன்னா எப்படி”,

“நீ என்னை லவ் பண்றியா என்ன? என்னை மிஸ் பண்ணுவியா?”, என்று ஹரி கேட்க,

“அதை தெரிஞ்சிக்க தான் நம்ம பேசணும்னு சொல்றேன்”, என்றாள் சீரியசாக ப்ரீத்தி.

“பேசலாம், ஆனா இப்போ வேண்டாம், திடீர்னு வேலையை விட்டது எனக்கே ஒரு மாதிரி இருக்கு. இதுல பணம் வேற பிரச்சனை…… புது இடம், நான் போய் அட்ஜஸ்ட் ஆகணும். ஐ அம் ஃபுல்லி டென்ஸ்ட்…..”,

“உங்கப்பா சொன்ன மாதிரி நான் உன்னை பார்க்கலைன்னா என்னை மறந்துடுவியா”,

“உனக்கு என்ன தோணுது?”,

“கண்டிப்பா மாட்ட”, என்றான் புன்னகையோடு.

ப்ரீத்தியும் புன்னகைத்தாள்……. “நேர்ல பார்க்க முடியாது, போன்ல பேசவேண்டாம். ஆனா கண்டிப்பா சேட்லயாவது வரணும்…….”,

ஹரி யோசிக்க,

“நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். அப்பா அம்மாக்கு தெரிய வரவே வராது. ப்ராமிஸ்”, என்றாள் சிறு குழந்தை போல.

“உங்கப்பா இதுக்கு தான் பயப்படறார் போல, சில சமயம் ரொம்ப பெரிய பொண்ணு, சில சமயம் ரொம்ப சின்ன பொண்ணு, நீ ப்ராக்டிஸ் போ, எனக்கு கொஞ்சம் பர்சேஸ் இருக்கு முடிச்சிட்டு, கோயம்பத்தூர் கிளம்பறேன்”, என்று ஹரி கிளம்பினான்.

“நம்ம லவ் பண்றோமா”, என்று ப்ரீத்தி மறுபடியும் ஒரு சந்தேகத்தை கிளப்ப……

“கல்யாணத்துக்கு முன்ன டிசைட் பண்ணிடுவியா”, என்று ஹரி கிண்டலாக கேட்க……

“யார் கல்யாணத்துக்கு முன்னாடி, உன் கல்யாணத்துக்கு முன்னாடியா, என் கல்யாணத்துக்கு முன்னாடியா”, என்று ப்ரீத்தியும் அதே த்வனியில் பதில் சொல்ல,

“ம், நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி”, என்றான் சிரிப்போடு.

“எங்கப்பா பெர்மிஷன் குடுத்தா தானே நடக்கும்”, என்று ப்ரீத்தி அவனை டென்ஷனாக்க முற்பட்டாள்.

“ஐயோ ஹரிய, அவ்வளவு நல்ல பையன்னு நீ நினைச்சிருக்கியா? அதெல்லாம் இல்லை ஹனி, என்னவோ உங்கப்பா பேசினதை கேட்கணும் போல தோணிச்சு, நம்ம பேரண்ட்ஸ் நம்ம நல்லதுக்கு நினைப்பாங்கன்னு. அவர் எதிர்பார்க்குற அளவுக்கு இன்னும் நான் இல்லவும் இல்லை. அதனால தான் இந்த முடிவெடுத்தேன். ஆனா எப்பவும் இப்படியே இருக்க மாட்டேன்”,

“எப்போ வேணா மாறிடுவேன்…….”, 

“எப்போ மாறுவ?”, என்று ப்ரீத்தி ஆர்வமாக கேட்க,

“இப்போ நீ என்ன தான் சொல்ல வர்ற”,

“நம்ம லவ் பண்ணலாம்னு சொல்றேன்”,

“அப்போ……. இன்னும் நீ பண்ணலையா?”,

“ம்கூம், தெரியலை”, என்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே ப்ரீத்தி வந்து நின்றாள்.

“இதுக்கு உங்கப்பாவே பரவாயில்லை”, என்று சொல்லி நடக்க ஆரம்பிக்க, .ப்ரீத்தியும் அவன் செல்வதை புன்னகையோடு பார்த்திருந்து, நேரமாகிவிட்டதை உணர்ந்து திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

“அறிவுகெட்டவன் இன்னைக்கு ரிசர்வ் செய்யாமையே போறான்”, என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு ப்ரீத்தி நடக்க……

“அதான் ஹனி வந்துட்டேன்”, என்று அவளின் காதிற்குள் பேச்சு சத்தம் கேட்க…… விழிவிரித்து ப்ரீத்தி திரும்பவும், அவளின் மிக அருகில் ஹரி….

“நீ இதுக்கு பக்கம் வர தான் வெயிட் பண்ணினேன்”, என்று பக்கம் இருந்த வேனை காட்டி, “நமக்காகவே இந்த வேன் நிக்குது”, என்று என்று அவளை இழுத்து சென்றவன்,

அவளை அதன் மேல் சாய்த்து நிறுத்த, ஹரி தன்னைக் கண்டுகொண்டதில் முகம் செம்மையுற இமைகள் தானாக தாழ்ந்தது ப்ரீத்திக்கு.

இந்த ப்ரீத்தி இன்னும் ஹரியை ஈர்க்க, “என்னவோ ஹனி, நீ பாய் கட் வெச்சாலும் என்னை அட்ராக்ட் பண்ற, போனி டெயில்லையும் அட்ராக்ட் பண்ற”, என்று அவள் டைட்டாக மேலே தூக்கி போட்டிருந்த ஹேர் பேண்டை எடுத்து விட்டான்.   

கைகள் அவளின் கூந்தலில் அலைப்புற, “அன்னைக்கு நடந்ததுக்கு சாரி, ஐ அம் ரியல்லி சாரி, பட் ஐ லவ்ட் இட்”, என்று சொன்னான்.

இதெல்லாம் ப்ரீத்தியின் காதில் விழுந்தால் தானே, அவள் தான் ஒரு புது உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தாளே ஹரியின் கைகள் அவளின் மேனியில் செய்த மாயாஜாலத்தில். கூந்தல் தொடுவது இவ்வளவு சிலிர்க்க வைக்குமா என்று கூடவே ஆராய்ச்சியில் இருக்க,  

“அதுக்கு தான் எனக்கு பாய் கட் பிடிக்கலை”, என்றான் அவளை உணர்ந்து.  

அவளின் மயங்கிய தோற்றத்தை பார்த்தவன், மெதுவாக அவளின் தாழ்ந்திருந்த இமையில் இதழ் ஒற்றினான்.

அதில் இமை தூக்கி அவனை பார்த்தவள், “நான் பொண்ணு இல்லைன்னு சொன்னீங்க”, என்றாள் சலுகையாக,

“எஸ், என்னவோ உன்னோட ட்ரெஸ்ஸிங் பசங்க மாதிரி, உன்னோட ஹேர் ஸ்டைல் எதுவும் பிடிக்கலை….. ஆனா யாரையும் இப்படி சொன்னது இல்லை….. அப்போவே நீ என்னை கவனிக்க வெச்சிருக்க…”, 

“நீங்க பொண்ணு இல்லைன்னு சொன்னதும், ஐ வாஸ் பேட்லி ஹர்டட், அன்னைக்கு நான் ரொம்ப அழுதேன்…..”, என்றாள்.

“சாரி”, என்றவன், “அது தான் முடி வளர்த்து இருக்கியா”, என்று கூடவே கேட்க,

“ம்ம்ம்”, என்று தலையாட்டினாள்…..

“அப்போ அங்க இருந்து வந்ததுக்கு அப்புறம் என்னை நினைச்சு இருக்க”, 

“எஸ், ரொம்ப இல்லை, ஆனா கொஞ்சம்”,

“பட், நான் ரொம்ப நினைச்சு இருக்கேன்”, என்று சொல்லிக் கொண்டே மெதுவாக ஒரு முத்த யுத்தத்தை நடத்தினான்………

உடன்பட்டாலும் உடல் மொழியில் சிறு எதிர்ப்பு, நிமிர்ந்து அவள் முகத்தை பார்க்க ஒரு மெல்லிய பதட்டம்,

“என்ன?”, என்றான் கிசுகிசுப்பாக,

அதையும் விட கிசுகிசுப்பாக, “யாராவது வந்துட்டா”, என்று ரகசியம் பேசினாள். ப்ரீத்திக்கு யாராவது பார்த்து விடுவார்களோ என்று டென்ஷனாக இருந்தது.

அவளின் டென்ஷன் பார்த்தவன், “வாய் தான் பேசற, நீ மத்தபடி வேஸ்ட்”, என்று அவளை கடுப்பாக்கி,

“நானும் ரௌடி தான்னு கிளம்பற, ஆனா டம்மி பீஸ்”, எனவும்,

“ஆனா நீங்க அப்படியில்லை, ரௌடிதான்னு கிளம்பாமலேயே, அசல் ரௌடி!”, என்றாள் சற்று முறைப்பாக.

சொல்லிய அவளின் இதழ்களுக்கு அவன் நிஜமான ரௌடி தான் என்று காட்ட ஆரம்பித்தான்,

அவள் இளைப்பாற விலக, “ஆர் வி நாட் பிஃஹேவிங் டூ மச்”, என்று சற்று கவலையாக ப்ரீத்தி கேட்கவும்,

“நோ இதுதான் என்னை சமாதானப்படுத்தும், ஐ நீட் திஸ். ரொம்ப டென்ஷனா இருக்கு. இந்த படிப்பு எங்களோட சக்திக்கு மீறியது…. இதுவரைக்கும் ஃபிளைட் போறதை அண்ணாந்து தான் பார்த்திருக்கேன். i am trying to go up and i should stick to this”, என்று அவனின் முன்னேற்றத்தை கவலையோடு சொல்லவும்,

“கண்டிப்பா”, என்று ப்ரீத்தி நம்பிக்கை கொடுத்தாள். “பணம் பிரச்சனைன்னா கண்டிப்பா சொல்லணும், என்கிட்ட ஹெசிடேட் பண்ண வேண்டாம்”, என்று ப்ரீத்தி மீண்டும் சொல்ல,       

“சரி”, என்பது போல தலையாட்டியவன், “கன்பர்ம் பண்ணிக்கோ, நீ என்னை லவ் பண்ற, எனக்குத் தெரியும், உனக்கும் தெரியும்”, என்றான்.

ப்ரீத்தி புன்னகைக்க,

“நீயும் கண்டிப்பா வின் பண்ணனும்”, என்று சொல்லி சென்றான்.

ப்ரீத்திக்கு மனது மிகவும் சந்தோஷமாக இருந்தது.  

அன்று எல்லா நாட்களையும் விட ப்ராக்டிஸ் செஷன் நன்றாக இருந்தது. நிறைய பாயிண்ட்ஸ் அசால்டாக எடுத்தாள். அவளுக்குமே வின் பண்ணுவோம் என்று நிறைய நம்பிக்கை வந்தது.

வீட்டிலும் நிறைய நாட்களுக்கு பிறகு மிகவும் உற்சாகத்தோடு புன்னகை முகமாய் மகள் வலம் வர……. மாலினிக்கும் கவலைகள் அகன்றது.

அதை ராஜசேகரிடம் சொல்லவும் செய்தார். “நான் தான் சொன்னேனே, அது யங் ஏஜ் ஜோட ஒரு அட்ராக்ஷன் அந்த பையன் போனதும் ஒரு ரெண்டு நாள் முகத்தை தூக்கி வெச்சிருந்தாளா, இப்போ மாறிட்டா”, என்றார் அவரும் சந்தோஷமாக….

அப்பாவும் அம்மாவும் போனில் சிரித்து பேசுவதை பார்த்த ப்ரீத்திக்கு இன்னும் சந்தோஷம்…… வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டாள், அதுவரை ஹரியை பற்றி வீட்டில் பேசவும் வேண்டாம் என்று நினைத்து.       

 

 

Advertisement