Advertisement

பாடல் – 15
     அன்று மதியமே தனது அலுவலகம் விட்டு வந்த விஷ்வா சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின் இனியாவோடு தயாராகி அவளை அழைத்துக்கொண்டு கீழே சென்றான். கீழே வந்தவள் தங்கள் காரை நோக்கி செல்ல அவளை தடுத்தவன் “நம்ம கார்ல போக போறது இல்ல இதோ இதுலதா போறோம்” என்றபடி அருகில் நிறுத்தி இருந்த தங்கள்  ராயல் என்ஃபீல்டு பைக்கை காண்பித்தான்.
     அதைப் பார்த்ததும் “வாவ் இதுலயா போறோம்” என்றவள், “ஆனா அவ்வளோ தூரம் அந்த ரோட்ல உங்கனால பைக் ஓட்ட முடியுமா விஷ்வா, அதுவும் நம்ம போறதுகுள்ள இருட்டு வேற ஆகிரும்” என்று கேட்க “அதெல்லாம் ஒன்னும் பிரச்சன இல்ல, நா நெறய தடவ இப்டி பைக்ல அக்காவ கூட்டிட்டு அங்க போயிருக்கேன் அதனால நீ இப்போ பயப்படாம வந்து வண்டியில ஏறு” என்று சொன்னவன் தனது வண்டியை ஸ்டார்ட் செய்ய, அவன் பின்னால் ஏறி அமர்ந்த இனியா “அண்ணிய கூப்டுடா, அங்க எதுக்கு போவிங்க” என்று கேட்க “உனக்கு தெரியாதுல்ல, மச்சான் அங்க ஒரு எஸ்டேட்ல கொஞ்ச நாள் முன்னாடி வர வேல பாத்துட்டு இருந்தாரு, அப்போ அவரு கொஞ்சம் பிஸியா இருந்தா அக்காவ நான்தா கூட்டிட்டு போய் விடுவேன்” என்று சொன்னபடி செல்ல ஆரம்பிக்க “அப்பறம் ஏன் இங்க வந்துட்டாங்க” என்று என்ற அவள் கேள்விக்கு “கொஞ்ச மாசம் முன்னாடி அவரு ஒரு வேலை விஷயமா கீழ மேட்டுப்பாளையம் போறப்போ வழில மாமாவுக்கு சின்னதா ஒரு ஆக்சிடென்ட் ஆயிருச்சு” என்று விஷ்வா சொல்ல அவன் சொல்லி முடிக்கும் முன் “அச்சச்சோ, அண்ணாவுக்கு பெருசா எதுவும் அடி படல தான” என்று பதறியபடி இனியா இடைபுக “அதெல்லாம் ஒன்னும் இல்ல, நீயே இப்போ அவர பாக்கர தான நல்லாதான இருக்காரு” என்றவன் தொடர்ந்து “சின்னதாத்தான் அடி பட்டுச்சு இருந்தாலும் அக்கா ரொம்ப பயந்துட்டா அதான் இங்க வந்துட்டாங்க” என்று சொன்னபடியே வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தான்.
      சிறிது நேரம் அமைதியாக செல்ல  “ஆமா விஷ்வா ஊட்டில அண்ணாவும் அண்ணியும் எங்க இருந்தாங்க” என்று இனியா கேட்க “உங்க காலேஜ் இருக்குல்ல அதுக்கு பக்கதுலதான் இருந்தாங்க, நா கூட உங்க காலேஜ் பஸ் ஸ்டாப்க்கு அடிக்கடி வந்திருக்கேன்” என்று சொல்லியபடி புறவழி சாலையில் வண்டியை திருப்பியவன் “அவ்வளோ ஏன் ஒரு நாள் உங்க காலேஜ்குள்ள கூட வந்திருக்கேன்” என்று சொல்ல “எங்க காலேஜ்க்கா, எப்போ வந்திங்க” என்று ஆர்வமாய் கேட்டாள் இனியா.
      “அது ஒரு நாள் எதோ இன்டர் காலேஜ் பங்ஷன் நடந்துச்சுல்ல அப்போ அக்கா வீட்டு பக்கத்துல இருந்த பையன் கூட வந்தேன்” என்று சொல்ல “ஒஹ் சரி சரி” என்றவள் மனமோ அன்று நடந்ததை நினைத்து அந்த நாள் வராமலே இருந்திருக்கலாம் என்று எண்ண, அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டாள். 
     சிறிது நேரம் அவள் எதுவும் பேசாமல் போக “என்னாச்சு இனியா, திடீர்னு அமைதி ஆகிட்ட” என்று அவன் கேட்க “அது ஒன்னும் இல்லங்க, ஃபர்ஸ்ட் டைம் பைக்ல இவ்வளோ தூரம் வர்றது ஒத்துக்கல போல லேசா தல வலிக்குது” என்றவள் வழியில் தெரிந்த ஒரு கடையை காட்டி “அங்க கொஞ்சம் வண்டிய நிறுத்துங்க விஷ்வா, காபி சாப்டு போலாம்” என்று சொல்ல “அந்த கடை முன் வண்டியை நிருத்தியவன் “உனக்கு என்ன அடிக்கடி தல வலி வருது இப்போல்லாம்” என்று கேட்க “அ..அப்படி எல்லாம் இல்ல எப்போவாவது தான் அப்படி வருது,இப்போ உங்களுக்கு டீ வேணுமா இல்ல காப்பியா” என்று பேச்சை மாற்ற “எனக்கு ஒரு கப் காபி போதும் என்றபடி தன் வண்டியை நிறுத்திவிட்டு  அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
     சிறிது நேரத்தில் மீண்டும் தங்கள் பயணத்தை தொடங்கியவர்கள் இரவை தொடும் முன் அவள் அத்தை வீட்டை அடைந்துவிட்டனர். 
     அங்கு அவர்களை கண்டதும் வாசலுக்கு வந்த விஜயா இனியாவின் கைகளில் இருந்த பையை வாங்கியபடி “வாங்க தம்பி” என்று விஷ்வாவை அழைத்துவிட்டு மீண்டும் இனியாவிடம் திரும்பி “என்ன இனியா இது, இன்னும் கொஞ்சம் முன்னமே வந்திருக்கலாம்ல என்று கேட்க”, “இல்ல அத்த அவங்களுக்கு கொஞ்சம் வேலை அதா அத முடிச்சிட்டு கிளம்ப நேரம் ஆயிருச்சு” என்று சொல்லிக்கொண்டே அவனோடு அங்கு ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்தாள்.
     சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தவர்கள் சம்யுவின் தந்தை வந்ததும் அவரோடு சேர்ந்து உணவருந்தி விட்டு பயண களைப்பில் உறங்க சென்றுவிட்டனர். 
     ~~~~
     அந்த காலை நேர குளிரில் தன் போர்வையின் வெதுவெதுப்பில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருந்த இனியாவின் தூக்கத்தை கலைத்தது அவள் கைப்பேசியின் சிணுங்கல். பாதி தூக்கத்தில் யார் அழைத்தது என்று கூட பார்க்காமல் அதை எடுத்து தன் காதில் வைத்து “ஹல்லோ” என்று சொன்னவள் “ஹேய் தூங்க மூஞ்சி இன்னுமா தூங்கிட்டு இருக்க நீ” என்று மறுபுறம் கேட்ட குரலில் வாரி சுருட்டி கொண்டு எழுந்து அருகில் உறங்கிக்கொண்டு இருந்த சம்யுக்தாவை பார்த்தால். 
     சம்யு நன்றாக உறங்கிக்கொண்டு இருக்க அவள் தூக்கம் களையாதவாரு படுக்கையில் இருந்து இறங்கி அவர்கள் குளியலறைக்குள் புகுந்த இனியா “இந்நேரதுக்கு எதுக்கு கால் பண்ணீங்க” என்று கேட்க “இந்நேரமா, மணி என்னனு பாத்தீங்களா மேடம், காலைல 8 ஆச்சு உங்களுக்கு இன்னும் விடியலயா” என்று அவன் கேட்க “எங்களுக்கு விடிய இன்னும் நேரம் ஆகும் இப்போ எதுக்கு கால் பண்ணெனு சொல்லுங்க” என்று அவள் மெதுவாக கேட்க “அது ஒன்னும் இல்ல உன்னோட ஸ்வீட் வாய்ஸ் ல அந்த பாட்ட கேக்கனும்னு தோணுச்சு அதான் உனக்கு கால் பண்ணேன் என்று சொன்னான் அவன். 
    “என்ன இப்போவா என்றவள், அதெல்லாம் முடியாது இன்னைக்கு சமயு என் ரூம்லதான் படுத்திருக்கா ” என்று சொல்ல “ஹெய் பிளீஸ் ஒரே ஒரு லைன் மட்டும் பாடேன்” என்று கேட்க “முடியாது” என்றாள் அவள். “பிளீஸ், பிளீஸ், பிளீஸ்” என்று மீண்டும் அவன் கேட்க “முடியாது, முடியாது, முடியாது” என்று மீண்டும் சொன்னவள்    தன்னை யாரோ தன்னை கூப்பிடுவது போல் இருக்க மெதுவாக கண்களை திறக்க அங்கு அவள் எதிரில் கிளம்பி நின்றிருந்தான் விஷ்வா.
      அவனை பார்த்ததும் ‘ கனவா ‘  என்று நினைத்தவள் தன் தலையை மெதுவாக ஆட்டியபடி விஸ்வாவை பார்த்து “என்ன அதுக்குள்ள கிளம்பிட்டிங்களா” என்று கேட்க “மணி என்னனு பாரு, நீ இவ்வளோ நேரம் தூங்கிட்டு என்ன சீக்கரம்னு சொல்ற” என்றவன் தொடர்ந்து “ஆனா நீ நல்ல தூங்கமூஞ்சிதான் போ” என்று சொல்ல “அப்டி எல்லாம் இல்ல இன்னைக்கு எதோ டையர்ட்ல தூங்கிட்டேன் அவ்ளோதான்” என்று சொன்னவள் எழுந்து தானும் கிளம்ப சென்றாள். 
     அடுத்த அரை மணி நேரத்தில் இனியாவும் கிளம்பிவிட விஜயாவிடம் சொல்லிவிட்டு இருவரும் கல்லூரிக்கு சென்றார்கள்.
     செல்லும் வழியில் எங்கும் அவன் கண்களில் தென்பட்டு விடக்கூடாது என்று வேண்டிய படியே இனியா செல்ல, அவள் வேண்டியதைப்போல கல்லூரிக்கு செல்லும் வரை அவன் எங்கும் தென்படவில்லை. விஷ்வாவும் வேறு எதோ யோசனையில் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்க இவள் அமைதியை அவன் கவனிக்கவில்லை. 
    சிறிது நேரத்தில் கல்லூரியை இருவரும் அடைந்துவிட “நீ போய் உன் சர்டிஃபிகேட் வாங்கிட்டு வா, நா இங்கயே வெயிட் பண்றேன்” என்று விஷ்வா சொல்ல “சரி” என்று அவள் உள்ளே செல்ல அவன் அங்கு இருந்த மரத்தின் அடியில் இருந்த பெஞ்சில் அமர்ந்தான். 
      அவள் வெளியே வரும் வரை தன் காதலை அவளிடம் எங்கே வைத்து எப்படி சொல்வது என்று யோசித்துக்கொண்டு இருந்தவன், கடைசியில் அவளை முதன் முதலில் பார்த்த இடத்தில் வைத்து சொல்ல முடிவெடுத்தான். 
     உள்ளே தன் வேலைகளை முடித்துவிட்டு வெளியே வந்த இனியா அவனிடம் சென்று “விஷ்வா, கிளம்பலாமா” என்று கேட்க “சரி போலாம்” என்றவன் “அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒன்னு சொல்லனும்” என்று சொல்ல “ம்ம் சொல்லுங்க” என்றாள் இனியா. 
    “அத இங்க வச்சு சொல்ல முடியாது, அங்க பஸ் ஸ்டேண்ட் க்கு போகலாமா” என்று கேட்க, அங்கு வைத்து அப்படி என்ன சொல்ல போகிறான் என்று நினைத்தபடி அவனோடு சென்றாள் இனியா. 
     அவனோடு அங்கு சென்றவள் பார்வை எதர்ச்சியாக எதிர்ப்புறம் செல்ல அங்கு புதியதாக அமைந்திருந்த தேனீர் கடையில் அமர்ந்திருந்தான் அவன் – அஜித்.
      அவனை பார்த்ததும் இனியாவின் முகமெல்லாம் பயத்தில் வெளுத்துவிட, இது எதுவும் அறியாத விஷ்வாவோ “இனியா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்று ஆரம்பிக்க அவன் சொல்வது எதையும் கேட்கும் நிலையில் இல்லை அவள். 
     அவளிடம் இருந்து எந்த அசைவும் இல்லாது போக, திரும்பி பார்த்த விஷ்வா, ஹேய் இனியா என்று அவள் தோள்களை பிடித்து அசைக்க, சட்டென அவன்புறம் திரும்பியவள்  “ஹான், என்ன சொன்னீங்க” என்க, “அது இருக்கட்டும் நீ ஏன் அவ்வளோ யோசனையோட அங்கேயே பாத்துட்டு இருக்க” என்று அவன் கேட்க “அது, அது வந்து அந்த கடைல, அதாவது இதுக்கு முன்னாடி அங்க அந்த கடை இருந்துச்சான்னு யோசிச்சிட்டு இருந்தேன்” என்று சமாளிக்க “அது சரி மூணு வருஷம் இந்த காலேஜுக்கு வந்திருக்க ஆனா இங்க கடை இருந்துச்சானு நியாபகம் இல்லையா”  என்றவன் “சரி அத விடு, இப்போ நா ஒன்னு சொல்றேன் அத நல்லா கேளு” என்க, அவள் கவனமோ எதிரில் இருந்த கடையில் இருந்தவனிடமே இருந்தது. 
     இவள் பார்ப்பது உருத்தவோ என்னவோ அங்கு கடையில் இருந்தவன் லேசாக திரும்ப இங்க ஒரு நிமிடம் இனியாவின் மூச்சே நின்று விட்டது. 
     அவனைப்பார்த்து தான் ஏன் பயப்பட வேண்டும் என்று ஒரு மனம் சொன்னாலும், ஒரு வேளை அவன் தன்னை பாத்து விஷ்வாவிடம் எதாவது சொல்லிவிட்டால் என்ன நடக்குமோ என்று பயந்தது இன்னொரு மனம்.
     இங்கு அவளிடம் இருந்து மீண்டும் பதிலில்லாமல் போக அவளை நோக்கி திரும்பிய விஷ்வா “இனியா என்னாச்சு” என்று அவள் கைகளை லேசாக தட்ட, அவனிடம் தன் பார்வையை திருப்பியவள் “அது, அது, நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்” என்றாள். 
     அவள் வெளிறிய முகத்தை பார்த்த விஷ்வா, என்னாச்சு இனியா ஒடம்புக்கு எதாவது பன்னுதா என்று கேட்க “அதெல்லாம் ஒன்னும் இல்ல, நம்ம கிளம்பலாம் பிளீஸ்” என்று அவள் சொல்ல “என்னாச்சு சொல்லு, ஹாஸ்பிடல் போகலாமா?” என்று விஷ்வா கேட்டுக்கொண்டு இருக்கும் பொழுதே அங்கு கடையில் அமர்ந்திருந்த அஜித் இவளை பார்த்துவிட்டான். இவளை பார்த்ததும் அவன் அங்கிருந்து தன் கைகளை ஆட்ட, அதை விஷ்வாவும் கண்டுவிட்டான். 
     அதை பார்த்தவன் “அங்க பாரு இனியா, அவரு உனக்கு தெரிஞ்சவறா?” என்று கேட்க . “யா…யாரு” என்றாள் அவள் “அந்த கடைல இருந்து இப்போ ஒருதவங்க கை காட்டுனாங்கள்ள” என்று அவன் சொல்ல “அதெல்லாம் எனக்கு யாரையும் தெரியாது, நீங்க வாங்க போகலாம்” என்று சொல்லிவிட்டு அவள் பாட்டிற்கு தங்கள் பைக்கிடம் சென்றுவிட்டாள். அவள் செய்வது எதுவும் புரியாமல் அவள் பின்னாலேயே வந்த விஸ்வாவும் ‘ இன்னைக்கும் சொல்ல ராசி இல்ல போல ‘ என்ற எண்ணத்துடன் அவளோடு கிளம்பிவிட்டான்.
    
     அங்கு இருந்து சிறிது தூரம் வந்த பின்பே அவன் தன்னிடம் எதோ சொல்லவேண்டும் என்றது இனியாவின் நினைவிற்கு வர “ஆமா விஷ்வா நீங்க எதோ சொல்லனும்னு சொன்னீங்கள்ள என்ன அது”  என்று அவனிடம் கேட்க, பைக்கின் கண்ணாடியில் அவளைப் பார்த்தவன் “அத விடு அப்பறமா சொல்றேன்” என்றபடி விஜயாவின் வீட்டிற்க்கு வண்டியை செலுத்த ஆரம்பித்தான் விஷ்வா.

Advertisement