தமிழ் செல்வனின் மனதிற்குள் பல முடிவுகள். இருப்பது ஒரு வாழ்க்கை. அதை வாழ்ந்து பார்த்தே ஆக வேண்டும்.

அம்மா இருந்தவரை பெரிதாக இடைவெளிகள் தெரியவில்லை. எல்லாம் தன்னைப் போல நடக்கும். அம்மா சென்ற இந்த ஐந்து ஆண்டுகளாக மனதிற்குள் ஒரு தனிமை தான். அதுவும் ஏதாவது கணவன் மனைவி சிரித்து பேசுவதை பார்த்தாலே இப்போதெல்லாம் ஏக்கமாக இருந்தது.

அவன் பேசியது சத்தியமான வார்த்தைகள், பிள்ளைகள் வளர்ந்து ஒரு வாழ்க்கை அமைந்து விட்டால், இவர்கள் இருவரும் இப்படி தனி துருவமாக நின்றால், வாழ்க்கையில் நிச்சயம் தனிமைப்பட்டு போவர்.

மனதை அலைபாயவிடாத இளைஞன். அதுவும் அந்த செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தைகள் வந்த பிறகு நிலாவின் வைராக்கியம் பார்த்து மனதே விட்டுப் போனது. அது அடுத்த குழந்தைக்கும் ஒன்பது வருடங்கள் கழித்தும் அதுவே தொடர,

முடியவே முடியாது என்ற எண்ணம் தான். அதனை அவளிடம் சொல்லவும் செய்தான். ஆனால் மங்கம்மா இருக்கும் போது இயற்கையாக தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாய் நிலைத்து நிற்க முடியவில்லை.

நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விட்டான்.

இப்போதெல்லாம் மனது வெகுவாக துணை தேடியது.

நடக்குமா தெரியாது ஆனாலும் முயற்சித்து கொண்டே இருப்பது என்ற முடிவிற்கு வந்து விட்டான்.

காலையில் பிள்ளைகள் பள்ளிக்கு தயாராகும் நேரத்தில் தான் கண்விழித்தான்.

எழுந்தவன் முகம் கழுவி வந்து டைனிங் டேபிளில் அமர, இவன் வந்ததை பார்த்து நிலாவின் கைகள் காஃபி விட ஆயத்தமாக.. அவள் விட்டுவிட்டது புரிந்து அவனே கிட்சன் உள்ளே சென்று சற்று தள்ளி  நின்றே கொடு என்றான் இயல்பாக வெகு இயல்பாக

இவன் எதுக்குடா இங்கே வரை வர்றான் என்ற பார்வை பார்த்தாள்.

அவன் சிறிதும் அலட்டவில்லை, கை நீட்டி நின்றான். இப்படியே வெச்சிட்டு போய்டுவோமா அவனே எடுத்துக்கட்டும் என்ற நினைப்பை மனதில் கொண்டு போக கண்டு கொண்டானோ என்னவோ

கைல கொடு கண்ணு என்றான் மீண்டும்

ஜஸ்ட் பிரண்ட்ஸ் ஸாவாவது இருப்போமே என்ற வார்த்தை அவனிடம் இருந்து வெளியே வர பார்க்க, அந்த வார்த்தை கொடுக்கும் ஆபத்தை உணர்ந்து

கைல கொடு கண்ணு என்று மட்டும் சொல்லி விட்டான்.

என்னவோ எல்லாம் புதுசா பண்ற, சரியில்லை என்று சொல்லியே அவனின் கைகளில் வைத்தாள்.

பதிலே பேசவில்லை அவன், மிக இயல்பாக வாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.

பின் மகளின் பின் நிலா பரபரப்பாக சுற்ற, பார்த்திருந்தவன், பாப்பா என்ன பண்றீங்க அம்மாவை எதுக்கு இப்படி ஓட விடறீங்க, நீங்க சமத்து பாப்பா தானே. அம்மா சொல்றதை செய்ங்க என்றான் கட்டளையான குரலில்

ம்ம்ம் சரிப்பா என்று ஸ்ராவணி ஓடி அவனிடம் வர

எனக்கு என் பொண்ணுக்கும் இடையில நீ எதுக்கு என்ற வார்த்தைகளை நிலா உதிர்க்கும் முன்னரே

எஸ் பா அவளை அடக்குங்க அம்மாவை ரொம்ப படுத்தறா நாங்க சொன்னா இவளுக்கு கோபம் வருதோ இல்லையோ அம்மா க்கு வருது என்று சுதர்ஷன் அப்பாவிடம் சொல்ல

எதுக்குடா அடக்கணும் என் பட்டுகுட்டி நாம சொன்னாலே கேப்பாலே அவ ரொம்ப குட் கேர்ள் உனக்கு தான் தெரியலை என்று சுதர்ஷனுக்கு சொல்லி

ஆமாம் தானே பட்டு என்றும் சொல்ல

ஆமாம் பா அண்ணாக்கு தெரியலை என்று சொல்லி

அம்மா நான் என்ன பண்ணனும் என்று நிலாவிடம் சென்று நிற்க

குளிக்கணும் வா என்று அவளை நிலா ரூமின் உள் அழைத்து போனாலும் செல்லும் போது தமிழை பார்த்த பார்வை சொன்னது நீ புடுங்கறது அத்தனையுமே தேவையில்லாத ஆணி தாண்டா என்று

அதையெல்லாம் துடைத்து தூர வைத்தான்.

பின் அவளை குளிக்க வைத்து மகன்களுக்கு தோசை சுட நிற்க

நான் சுடட்டுமா மா என்று வேலை செய்பவர் கேட்ட போது

மா நீ சுடு என்ற கௌரிஷின் குரல் சத்தமாக ஒலித்தது.

சுதர்ஷனோ அக்கா நீங்க சுடாதீங்க, நான் தோசை கேட்டா நீங்க ஊத்தப்பம் சுடுவீங்க என்று