கையில் இருந்த கைபேசியை எடுத்து அவள் யாரையோ அழைப்பது தெரிய
மனதில் சுள்ளென்று கோபம் மூண்ட போதும் பார்த்தது பார்த்த படி நின்றிருந்தான்.
அவளின் உதட்டின் அசைவில் வா நீ என்று அவள் தமிழில் யாரிடமோ உரையாடுவது புரிந்தது.
எவ்வளவு நேரம் நிற்பது என்று கடுப்பாக
அந்த புட் கோர்ட்டின் பெண்ணிடம் நான் இங்க உட்கார்ந்துக்கறேன் எதுவும் டேமேஜ் பண்ண மாட்டேன் என்று சொல்லி ஒரு ஓரமாய் அமர்ந்து கொண்டான்
அந்த பெண் திரும்பவும் எதுவும் கலாட்டா செய்வானா என்று தெரியாமல் பார்த்து நிற்க
ஒன்றும் செய்ய மாட்டேன் நீ வேலையை பார் என்று காண்பித்தான்.
===============================
அவளின் தோழி ஒருத்தி அவளை விடாமல் பார்ப்பது புரிந்து ஹி இஸ் ஸ்டேரிங் அட் யு என
அதற்க்கு அர்ச்சனா பதில் பேசவில்லை
அதற்குள் அவள் அழைத்த ஒருவன் உள்ளே நுழைந்தான். அர்ச்சனாவின் அருகில் வந்து நின்று எங்கே என்று கேட்க
அப்போதுதான் அர்ச்சனாவின் அருகில் நின்றவனை கவனித்தான். தோற்றம் நடை உடை பாவனை என்று அத்தனையும் வசீகரமாய் இருந்தது. நிச்சயம் ஆணழகன்.
தோழி தோழர்களிடம் எதோ சொல்லி அவள் விலகி வெளியே போக, இதனை வல்லபன் எதிர்பார்க்கவில்லை. கதவை திறக்கும் போது அர்ச்சனாவின் பார்வை அவளையும் மீறி வல்லபனை பார்த்தது. அதில் தெரிந்தது பயம் மட்டுமே
அதற்குள் அருகில் வந்தவன் ஐ அம ரிஷப் என்று அவனிடம் கையினை நீட்டினான்
அதை பற்றாமல் வல்லபன் பார்த்தபடி இருக்க
எதிரே இருந்த இருக்கையை நகர்த்தி அமர்ந்தான் அவன்
எதிரே அமர்ந்தவனுக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவன் தயங்கி தயங்கி அமர்ந்திருப்பதை பார்த்தவன், அர்ச்சனா பத்தி பேசணும்னா அவ மட்டும் தான் பேசணும் வேற யார் பேசறதையும் நான் அனுமதிக்க மாட்டேன் என்றான் சற்றும் பிசிறாத குரலில்.
அது அர்ச்சனா என்று ரிஷப் ஆரம்பிக்க
நீ கிளம்பு என்பதை போல வல்லபன் சைகை செய்ய
அதுவரை ஒரு தயக்கத்தை முகத்தினில் சுமந்திருந்த ரிஷப் அதனை விட்டு அவ பேசமாட்டா நான் தான் பேசுவேன் என்றான்
நீ பேசறதை எல்லாம் என்னால கேட்க முடியாது.
கேட்டு தான் அகனும் நான் தான் பேசுவேன் என்றான் ஸ்திரமாக
யார் நீ அவளுக்கு என்று மறந்தும் வல்லபன் கேட்கவில்லை அதற்க்கு ஏதாவது ஏடாகூடமாய் அவன் பதில் சொல்லிவிட்டால் தாள முடியும் என்று தோன்றவில்லை
================================
நான் ஒரு லாயர் உனக்கு தெரியுமோ என்னவோ தெரியாது என் மனைவியை கடத்தி வெச்சிட்டு இருக்கான்னு உன் மேல ஒரு கம்ப்ளையின்ட் குடுத்தா போதும் எப்படியும் நீ அவளை என் கண் முன்ன இல்லைன்னு சொல்லவாவது கொண்டு வந்து தான் ஆகணும்
அதுக்கப்புறம் நீ அசிங்கப் படரியோ இல்லையோ அவ ரொம்ப அசிங்கப் படுவா யோசிசிக்கோ அவ அசிங்கப் பட்டாலும் பரவாயில்லை நீ ஆனதை பார்த்துக்கோ ன்னு சொன்னேன் ன்னா , நான் சொன்னது தான் என்னை ஒரு குற்றவாளி ஆக்கப் போற நீ
என்ன முட்டாள் தனம் பண்ணிட்டு இருக்கன்னு உனக்கு புரியலை
ப்ச் உன்னை நான் தப்பு சொல்ல மாட்டேன் ஏன்னா அவ சரியில்லை அதனால் தான் உன்கிட்ட இந்த அளவு பொறுமையா பேசிட்டு இருக்கேன்
போ போய் அவளை அனுப்பு
=============================
அவ பயப் படரா உன்னை பார்த்து, பிடிக்காத பொண்ணு கூட எப்படி வாழ போற பேசாம டைவர்ஸ் குடுத்துடு
என்னது நான் அவளோட வாழப் போறானா வாய் விட்டு சிரித்தான். வாழனும் ன்னு தான் மும்பை வந்தேன் ஆனா எப்போ என்னை பார்த்துட்டு கூட ஒரு வார்த்தை கூட பேசாம போயிட்டலோ அதையும் விட வேற ஒருத்தன் பின்ன ஒளிஞ்சு
ச்சே இந்த மாதிரி பொண்ணு எல்லாம் எனக்கு வேண்டாவே வேண்டாம் என்றான் ஒரு அலட்சிய சிரிப்போடு
அதான் வேண்டாம் சொல்றியே பார்த்து என்ன பண்ண போற
டேய் ரொம்ப நேரம் எல்லாம் என்னால பொறுமையா இருக்க முடியாது எங்க ஊருன்னா இந்த நேரம் நீ ஹாஸ்பிடல்ல இருந்திருப்ப என் பொறுமைய சோதிக்காம மூடிட்டு போடா என்றான் ரௌதிரமாக