Advertisement

சாருவை பெண் பார்த்து சென்று திருமணமும் முடிவாகிவிட , இன்னும் பொறுப்புகள் கூடின கண்ணனுக்கு. இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் இருந்தன படிப்பு முடிய , அதுவும் இன்னும் ஒரு வாரம் கல்லூரி சென்றால் போதும் , பின் இறுதி பரீட்சைக்கு ப்ராஜக்ட் சப்மிட் செய்ய என்று சென்றால் போதும் .
ஆகா இன்னும் ஒரு வாரத்தில் கோவையை விட்டு சேலத்திற்கு மூட்டை கட்ட முடிவெடுத்து விட்டான். ஆம் பரீட்சையின் போது மீண்டும் சென்று கொள்ளலாம் என்று
அங்கே தனியாய் இருந்து என்ன செய்ய என்று எண்ணம்
ஆனால் வீடு இருக்கும் பரிட்சை முடிந்து காலி செய்து கொள்ளலாம் என்று எண்ணம்
இந்த அவனின் முடிவை ரகசியமாக வைத்திருந்தான் சுந்தரியிடம் சொல்லவில்லை 
எப்படியும் இந்த வாரம் அங்கேயே சென்று விட தானே போகிறோம் என்று நினைத்தவன் , புதன் அன்று இடையில் சென்று வருவான புதன் மாலை சென்று வியாழன் காலை திரும்புவான், இந்த முறை போகவில்லை, அன்று அவனுக்கு தலைவலியும் கூட , எப்போதும் இந்த மாதிரி வலி உணர்ந்ததில்லை. அதனால் வந்ததும் படுத்துக் கொண்டான் சுந்தரியிடம் வரவில்லை என்று கூட சொல்லவில்லை 
சுந்தரி வந்துட்டு இருக்கீங்களா எந்த இடத்துல இருக்கீங்க என்று மாலை ஐந்து மணிக்கு அழைத்தாள் எப்போது நான்கு மணி கல்லூரி முடிந்ததும் காரை கிளப்பியிருப்பான்.
இன்று அவள் கேட்கவும் , இல்லை சுந்தரி வரலை நாளைக்கு முக்கியமான காலேஜ் வேலை , தலை வேற வலிக்குது வந்துட்டு உடனே திரும்பணும்னா சிரமம்,    நான் தூங்கறேன் முழிச்சதும் கூப்பிடறேன் என்று வைத்து விட்டான்
அவனின் குரலும் சோர்வாக தான் ஒலித்தது.
சுந்தரிக்கு அவனை அப்போதே பார்த்தாக வேண்டும் போல தோன்றியது மனதே இல்லை அவளுக்கு
எப்படி கண்ணு நீ இன்னும் பஸ்ல போனதேயில்லை இரு நானு சின்ராசை அனுப்பறேன்
ஒன்னும் வேணாம் நான் போறேன் என
என்ன கண்ணு நீ உனக்கு பழக்கமில்லை , சரி உன் மாமனார் கிட்ட சொல்லு என
என் புருஷனை பார்க்க போக யார் கிட்ட சொல்லணும் முடியாது உனக்கு யார்கிட்ட னாலும் சொல்லிக்கோ என்றவள் வேகமாக ஒரு பையில் மகனுக்கும் அவளுக்கு உடை எடுத்து வைத்து அரை மணி நேரத்தில் தெரிந்த ஆட்டோ ஒன்று வர சொல்லி அதில் ஏறி பை பாஸ் வந்து கோவை செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்த போது ஆறு மணி
பஸ்ஸோ சென்றது சென்றது சென்று கொண்டே இருந்தது அது கோவையை தொட்ட போது ஒன்பதரை மணி
பின்னே வெளியே வந்து மீண்டும் ஒரு ஆட்டோ பிடித்து இவர்களின் வீடு இருக்கும் இடம் வந்த போது பத்து மணி
அப்போது தான் கண்ணன் எழுந்து அமர்ந்து இருந்தான் தலைவலி அதிகாமாகி இருக்க சித்தி யிடம் அவனாக சென்று காபி கேட்டு குடித்து அவர் கொடுத்த மாத்திரையும் உண்டு உறங்கி இருந்தான்
சிங்கக் குட்டி என்ன பண்றீங்க என
பா வெளில வாங்க என்றான் மகன்
இதோ மூன்றரை வயது அல்லவா , பள்ளிக்கு இந்த வருடம் சேர்க்க இருந்தன
எதுக்குடா என
பா வாங்க என்றான் மீண்டும்
ஏதோ உந்த வேகமாக கதவை திறந்து பால்கனியில் நிற்க
கீழே ஆட்டோ விற்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த சுந்தரி தான் பட்டாள்
சித்தியும் அந்த பேச்சில் வந்தவர் வாம்மா என்றவர் என்ன தனியாவா வந்த என்றார்
சுந்தரி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழிக்க
ஆமாம் சித்தி நான் தான் கொஞ்சம் அசதியா இருக்கு வா ன்னு சொன்னேன் என
என்னடா நீ இந்த நேரத்துல புள்ளைய தூக்கிட்டு தனியா வந்திருக்க என்று திட்ட ‘
அட என்ன சித்தி பொண்ணுங்க அமெரிக்கா போறாங்க இது என்ன இங்க தானே என்று சமாளிக்க
இந்த பேச்செல்லாம் வேண்டாம் என்று அவனை கடிந்தவர் இனி இந்த நேரத்துகெல்லாம் ஒத்தையில வரக் கூடாது முன்னமே கிளம்ப என்ன என்று சொல்லி
சாப்ட்டு இருக்க மாட்டீங்க நீங்க போங்க நான் குடுத்து விடறேன் என்றார்
எதுக்கு அத்தை வேண்டாம் என்று அதற்க்கு தான் சுந்தரி வாயை திறக்க
ப்ச் தினமுமா குடுக்கறேன் என்று அதட்ட சரி என்று அவர்கள் மேலே செல்ல

Advertisement