Advertisement

அணைப்பிலேயே வெகு நேரம் நின்றிருந்தவள் அவனிடம் “சாரி” என்றாள்.
அணைப்பை விலக்காமலேயே “எதுக்கு” என்றான். அவனுக்கு உண்மையில் புரியவில்லை.
“முதல் தடவை நீங்க போனதுக்கு நான் எந்த வகையிலும் காரணம் இல்லை. ஆனா இப்போ நீங்க என்னை விட்டு வந்ததுக்கு நான் மட்டும் தானே காரணம்” 
ஒரு பெருமூச்சை வெளியிட்டவன், “அப்படி சொல்ல முடியாது சுந்தரி. ரெண்டு பேர் இருக்கும் ஒரு விளையாட்டுல ஒருத்தர் ஜெயிச்சா மத்தவங்க தோத்து போவாங்க. அப்போ ஒன்னு ஜெயிச்சவன் திறமைசாலியா இருக்கணும் இல்லை தோத்தவன் திறமையில்லாதவனா இருக்கணும்” என்று நிறுத்தியவன்,
“இங்க ரெண்டாவது நான். இந்த சுந்தரி பொண்ணை எனக்கு கையாள தெரியலை, அதனால ஓடி வந்துட்டேன்” என்றான் கணமான குரலில்.
“இல்லையில்லை, நான் தான் துரத்தி விட்டுட்டேன்” என்றாள் வருத்தமான குரலில்.
 “ஆமாம்! முன்னால ஈரம் ஆகுதுன்னு திரும்பி நிக்க சொன்னீங்க. அப்போ பின்னால ஈரம் ஆகாதா?” என்ற அதி முக்கியமான கேள்வியை கேட்க,
கண்ணன் சிரித்து விட்டான், பின் “இதெல்லாம் சொல்லுவாங்களா? பின்னால நான் மட்டும் தான் பிடிச்சிருந்தேன், இப்போ முன்னால நீயும் என்னை பிடிச்சிருக்க தானே!” என்றான் ரசனையாக.  
“ஒரு வேளை, நான் கட்டி பிடிக்கலைன்னா?”
“நானே உன் கையை எடுத்து என்னை சுத்தி போட்டுகிட்டிருப்பேன்”
“என்ன திடீர்ன்னு?” என்றாள் கிண்டல் போல.
“அதானே என்ன திடீர்ன்னு?” என்றான் அவளை போலவே.
“ம்ம், இந்த கட்டிப்பிடிக்கறது”
“சும்மா தான்” என்றான் அவளை விடாமல்.
அமைதியாக பாலை அருந்தியவர்கள் பின் மகனை நடுவில் போட்டு படுத்துக் கொண்டனர்.
இருவரிடமுமே ஒரு தயக்கம்.
நடுஇரவில் அபி எழுந்து கொண்டு சிணுங்க லேசாக ஜுரம் இருப்பது போல தோன்ற , வேகமாக சுந்தரி எழுந்து கொண்டாள். அபி அம்மாவின் மேல் படுத்து சிணுங்கியதால் அவளுக்கு விழிப்பு வந்து விட்டது.
ஆனால் அதிக சத்தமில்லை அதனால் கண்ணன் விழிக்கவில்லை
அவனின் உறக்கம் கலைக்காமல் மகனை தூக்கி கொண்டு வந்து இடுப்பில் வைத்துக் பால் சுட வைத்து ஆற்றினாள்.
பின் சோபாவில் அமர்ந்து மகனை அருந்த வைக்க, கண்ணன் விழித்தவன் இவர்களை காணாமல் வந்து விட்டான்
ஏன் என்னை எழுப்பலை என்று கேட்டுக் கொண்டே
பால் குடித்ததும் தெம்பான அபி , அப்பாவின் கைகளில் இருந்து இறங்க முற்பட
வேறு வழியில்லாமல் கண்ணன் இறக்கி விடவும்
வெளியே போக முற்பட்டு கதவிடம் போய் நிற்க .
டேய் என்ன பகல் ன்னு நினைச்சியா  உள்ள வா என
குழந்தையும் என்ன செய்யும் , கிடைத்த ஒரு பொருளை அவனின் கைகளில் எடுத்துக் கொண்டு அப்பா டுர்ர்ரர்ர்ர்ர் என
டேய் இந்த நேரம் விளையாட்டா என்று கண்ணன் சலிப்பது போல பேச
சுந்தரியின் முகத்தில் ஒரு ரகசிய புன்னகை
எதற்கோ அவள் புறம் திரும்பிய கண்ணனின் கண்களில் அது பட
என்ன சிரிப்பு என்றான்
அதுவா அப்பா தான் எந்த விளையாட்டும் விளையாட மாட்டார் , பையனும் விளையாடக் கூடாது சொன்னா எப்படி சொல்ல
என்ன நான் விளையாட மாட்டேனா நான் எல்லாம் ஸ்கூல் ல காலேஜ் ல எல்லாம் நான் ஸ்போர்ட்ஸ் மென் என்றவன் இந்த நேரம் பையன் விளையாண்டான் அது தான் சொன்னேன் என்று சீரியசாய் பேச
சுந்தரிக்கு அப்படி ஒரு சிரிப்பு பொங்க சிரித்து விட்டாள்
பின்பு தான் அவள் ஏடாகூடமாக ஏதோ பேசுகிறாள் என்று புரிந்து பின் யோசித்து பின்பு பல்பு எரிய
ஒய் என்னடி நக்கலா நான் உன்கிட்ட விளையாடாம தான் உன் பையன் இப்போ இங்க விளையாடுறானா என   

Advertisement