Advertisement

அவன் கீழே அதனை கொட்டி திரும்பவும் சித்தி பிடித்துக் கொண்டார் என்ன உன்ற பொண்டாட்டியை கண்ல காட்டுவியா மாட்டியா நீ , உன்ற  கல்யாணத்துல ஒரு தரம் பார்த்தேன் பின்ன வாணி கல்யாணத்துல ஒரு தரம் என
விடுங்க சித்தி நாங்க சாயந்தரம் காபி குடிக்க உங்க வீட்டுக்கு தான் வர்றேன் என்றான்
காபி மட்டும் தான் குடிப்பியா இல்லை வேற கூட இந்த பஜ்ஜி சொஜ்ஜி எதுவும் சாப்பிடுவியா
நீங்க என்ன கொடுத்தாலும் சாப்பிடுவேன் சித்தி என்றான்
அப்படிங்கற
ஆமாங்கறேன் என்று சொல்லியபடி சிரித்துக் கொண்டே வந்தவன்
சுந்தரி அவனை பார்த்து இடுப்பில் கை வைத்து என்ன ஆட்டங்ககாட்டுறேன் என்று கேட்க
சுந்தரி புடவையில் தான் வந்தாள் புதிது எல்லாம் இல்லை அவள் வீட்டில் இருந்து அவசரத்திற்கு தூக்கி வந்த புடவையில், தனக்கு பொருத்தமாய் இருக்கும் என்று தோன்றிய ஒன்றை கட்டிக் கொண்டு வந்தாள்
தயக்கதொடே தான் வந்தாள் அவளுக்கு அவர்கள் யார் என்று சத்தியமாய் தெரியவில்லை நேரில் பார்த்தால் தெரியுமோ என்னவோ என்று
இன்னும் உறவுகளுடன் அதிகம் கலக்கவில்லை எந்த விஷேஷங்களுக்கு போகவில்லை அல்லவா அதனால் தெரியவில்லை
ஆனால் அவர்களுக்கு தெரியும் முன்பு திருமணமாகி பின்பு விவாகரதானது பின்பு மீண்டும் அவளையே திருமணம் செய்து கொண்டது இப்படி
அவள் வரவுமே ஆர்ப்ட்டமாய் தான் வரவேற்றார் அவனின் சித்தி எப்படியோ உன்ற பொஞ்சாதியை கண்ல காட்டிட்ட என்று சொல்லியபடி
வாம்ம்மா சுந்தரி என்றவர்
என்னை ஞாபகம் இருக்கா என்று கேட்க
சுந்தரி பதில் சொல்லாமல் புன்னகைக்க
அதற்குள் அவரின் பெண்கள் அண்ணி இந்த சாரு எப்பவும் எங்க அண்ணி அப்படி எங்க இப்படி ன்னு ஒரே பேச்சு தான் போங்க என்றனர்
சாரு பேசுவாளா என
ம்ம் எங்களோட பாமிலி கேர்ள் ஸ் க்ரூப் இருக்கே நாங்க நிறைய பொண்ணுங்க , அண்ணா மட்டும் தான் பையன் சோலோ என்று சொல்லி சிரித்தனர்
சுந்தரி புன்னகைக்க
நீங்க அவ்ளோ வேலை பார்பீங்கலாம் அவ்ளோ மேனேஜ் பண்றீங்களாம் நிறைய தோப்பு இருக்காம் இப்போ புதுசா ஒரு பெரிய தோப்பு வாங்கியிருக்கீங்கலாம் பெரிய பூந்தோட்டம் இருக்காம் நர்சரி இருக்காம் , முக்கியமா அவளுக்கும் நித்யாக்கும் நிறைய பேக்கட் மணி குடுப்பீங்கலாம் என்று பேச
இது எப்போ என்ற பார்வை கண்ணன் பார்க்க வேகமாய் பார்வையை திருப்பிக் கொண்டாள்
நான் மட்டும் இல்லைங்க மாமா ஆளுங்க இருக்காங்க மேற்பார்வை தான் நான் இவர் எல்லா வேலைக்கு ஆள் வெச்சிட்டு தான் வந்தாருங்க புது தோப்பையும் காட்டையும் நான் பார்க்கறது இல்லீங்க மாமாவும் சின்ன மாமாவும் தான் பார்க்கறாங்க ,
ஏன்டா கண்ணா பார்க்கறது க்கு இத்தனை வேலை இருக்கு அப்புறம் எதுக்குடா கண்ணா நீ மேல படிக்கன்னு உட்டுபோட்டு வந்த என்றார்
இப்போ படிச்சாதானே சித்தப்பா , என்றான்
அதுக்குன்னு பையனை வெச்சிகிட்டு ஒத்தையா சுந்தரி எப்படி சமாளிப்பா என்று சித்தியும் பேச
நான் தானே அத்தை அனுப்பினேன் என்று சுந்தரி சொல்ல
எங்க அவ தனியா இருக்கா எல்லோரும் இருக்காங்க அதுவுமில்லாம நான் இங்க முதல்ல பழகணும்னு ஒரு மாசம் விட்டேன் , இனி இங்க கொஞ்சம் நாள் அங்க கொஞ்சம் நாள் இருப்பா என்றான்
பின் பூந்தோட்டம் னா என்ன எல்லாம் போட்டிருக்கீங்க அதுல என்ன நிக்கும் என
ஆமாங்கத்தை அதுல ஒன்னும் பெருசா நிக்காது கூலி எல்லாம் போனா ஒரு மூன்றுவா சராசரி ஒரு நாளைக்கு நிக்கும் என
ஏன்டா கண்ணா மூன்றுவான்னா மூணாயிரமா என
ஆமாங்க சித்தி என
ஒஹ் அப்போ சுந்தரி பெரிய பிசினஸ் வுமன் ன்னு சொல்லு என
சித்தி இது அவளோட வேலைல ஒரு பகுதி தான் இது இல்லாம நிறைய இருக்கு என்றவன் , அவ பிசினெஸ் வுமன் இல்லை சித்தி பிசினெஸ் கேர்ள் என்றான் சிரிப்போடு , ஆனால் அந்த நிமிடத்தில் மனைவியை குறித்து மிகுந்த பெருமை
ஆமாம் சின்ன வயசு தானே என்றவர்
இங்க தான் சித்தி இப்படி உட்கார்ந்து இருக்கா அங்க வீட்ல எல்லாம் விடாமா வேலை பாப்பா எங்கம்மா இவ பேன் ஆகிட்டாங்கன்னு பார்த்துக்கோங்களேன் என

Advertisement