Advertisement

குளித்து விட்டு வந்த சுந்தரியை இரவு உடையில் பார்த்த போது வித்தியாசமாய் தெரிந்தாள். எப்போதும் புடவையில் மட்டுமே தானே பார்த்திருக்கிறான். இன்னும் சிறிய பெண்ணாய்.
அதுவும் தலைக்கு ஊற்றி இருக்க, நைட் தலைக்கு ஊதினா உனக்கு ஒத்துக்கறது இல்லை தானே உன்னை யாரு ஊத்த சொன்னா, தலைய துவட்டு நல்லா என்று பேசியபடி மகனை தொட்டு பார்க்க, உடல் அனலாய் கொதித்து.
மீண்டும் ஈர துணியை நெற்றியில் பத்து போட்டான்.
அதன் பின்னே எங்கே சுந்தரியை ரசிப்பது கவனிப்பது.
அன்றைய இரவை கழிப்பதற்குள் கண்ணனும் சுந்தரியும் சிரமப் பட்டு போயினர். அபியின் காய்ச்சல் விடவே இல்லை. அபியும் அவ்வப் போது விழித்துக் கொள்ள, அவனை வைத்து மாற்றி மாற்றி நடை பயின்று கொண்டிருந்தனர். 
சுந்தரியின் முகம் அதீத கவலைய காண்பிக்க, கண்ணன் ஒன்றுமில்லை சரியாகிடும் என்று அவளை வெகுவாக தேற்றிக் கொண்டிருந்தான்.
ஒன்று மகனின் காய்ச்சல் இன்னொன்று தனியாய் இந்த சூழலை எப்படி சமாளித்திருப்போம் தனியாய் என
அவனுடைய கல்லூரியில் ஒரு இண்டர்நேஷனல் கான்பிரன்ஸ் அதில் அவன் பேப்பர் ப்ரெசென்ட் செய்கிறான். அதன் பொருட்டே அவர்களை வர சொன்னான். ஆனால் இவ்வளவு காய்ச்சல் இருக்கும் என்று அனுமானிக்கவில்லை. இரவு போக வேண்டாம் என்று தான் நினைத்திருந்தான். இப்போது அவன் காய்ச்சல் சற்று மட்டுப் பட்டிருக்கவும், போகலாமா வேண்டாமா என்று மனம் ஊசலாடியது.
ஏழு மணி அப்போது. சரி இன்னும் நேரமிருக்கிறது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன் பால்கனியில் மகனை வைத்து வேடிக்கை காண்பித்து கொண்டிருந்தான்.
கீழே இருந்து அவனின் சித்தி எட்டிப் பார்க்க, அவருக்கு அபியை காண்பிக்க கீழே இறங்கி அவரிடம் காண்பிக்க அவர் கை நீட்டா ம்கூம் அபியோ அப்பாவின் கழுத்தை கட்டிக் கொண்டவன் அசையவேயளை
என்னை ரொம்ப நாள் கழிச்சு பார்க்கறான் சித்தி அதுதான் என
நீதான் என்ற சாப்பாட்டை சாப்பிட மாட்ட பையனையும் சாப்பிட விடாம இருக்கக் கூடாது , இங்க இருந்து குட்டி போற வரை அவனுக்கு என்ற சமையல் தான் நீயும் உன்ற பொண்டாட்டியும் என்னவோ பண்ணுங்க எட்டு மணிக்கு ரெடியா வெச்சிருப்பேன் வந்து வாங்கிகோணும் என்று சொல்லிப் போனார்
பாருடா அலப்பறையா, ஊருக்கு போனதும் என் கிட்ட தான் வந்தாகணும் தம்பி என்று சொல்லிக் கொண்டே எழுந்து அபியின் கழுத்தை தொட்டுப் பார்க்க, அது வெது வெது வென்று இருந்தது, ஆனால் நேற்று போல இல்லை
அதொண்ணுமில்லை அவனும் எழுந்ததுல இருந்து தேடிட்டு இருக்கான் அவங்கம்மா எங்கேன்னு , இங்க ஒரு சின்ன பொண்ணு கையை நீட்டவும் அவனுக்கு அவங்கம்மாவை தெரியலை என்று புன்சிரிப்போடு கண்ணன் சொல்ல
யாருக்கு அவனுக்கு தெரியலை என்று சொன்னவளின் முகத்தில் தானாய் ஒரு சிறு வெட்கம் கண்ணனின் பேச்சினில்
பரவாயில்லை பையனுக்கு தான் தெரியலை அவங்கப்பா கரக்டா கண்டு பிடிச்சிட்டான் என்று சொல்ல
அய்யே என்று பழிப்பு காட்டியவள் சென்று முகம் கழுவி பல் துலக்கி வர அப்பாவும் மகனும் மீண்டும் படுக்கையில் உருண்டிருந்தனர்
என்ன காலேஜ் போறீங்களா என்றாள்
ம்ம் ஒரு பேப்பர் ப்றேசெண்டேஷன் இருக்கு என்னோடது முதல்ல முடிச்சிட்டு வந்துடறேன் அப்புறம் சாயங்காலம் முடியும் போது போய்க்கறேன்
அதுவரை சமாளிப்பியா இபோ இவனுக்கு காய்ச்சல் இல்லை
அது ரொம்ப முக்கியமா என்றாள்
வேண்டாம்னா விட்டுடலாம் ஆனா இதுக்காக நான் பத்து நாளா ரெடி பண்ணினேன் போனா பரவாயில்லை என
சரி என்ற தலையசைப்பு இருந்த போதும் சுந்தரியின் முகம் சுணக்கம் காண்பிக்க
நேத்து வரைக்கும் நாம தனியா தான் இருந்தோம் என்றான்
அய்யே பெரிய கண்டு பிடிப்பு நாளைக்கும் நாம தனியா தான் இருக்கப் போறோம் என்றாள் நொடித்த வாறே
அவள் ஊட்டி முடித்ததும் மகனுக்கு மருந்து கொடுத்தான் , பின் அவளிடம் அவனை கைல வெச்சிரு கீழ விடாத அழ விடாத வாமிட் பண்ணிடுவான் என்று சொன்னவன்
நான் சாப்பிடறேன் டைம் ஆச்சி என்றவன் வேகமாக வாங்கி வந்திருந்த சப்பாத்தியை உண்டு , உனக்கு பொங்கல் இட்லி வடை இருக்கு என்று சொல்லி வேகமாய் தயாராகி வந்தான்
சுந்தரிக்கு யோசிக்க கூட ஒன்றுமில்லை எல்லாம் வரிசையாய் சொன்னான்
சுந்தரிக்கு அவனை பார்ததும் சிரிப்பு தான் வந்தது ஏதோ கல்யாண மாப்பிள்ளை ரிசப்ஷன் னிற்கு நிற்பது போல புல் கோட் சூட் டை யில் இருந்தான்
அவன் ஷூ அணிய அவனையே குறு குறு வென்று பார்க்க
ஒய் என்ன மனசுக்குள்ள கிண்டல் ஓட்டற மானேஜ்மென்ட் ஸ்டுடண்ட்ஸ் க்கு இது யூனிபோர்ம் என்றவன்
பை என்று சொல்லி நிற்க
உண்மையில் அத்தனை பாந்தமாய் அவனுக்கு பொருந்தியிருக்க சற்று ரசித்தும் பார்த்தாள்

Advertisement