Advertisement

கண்ணனின் வார்த்தைகளில் சுந்தரி தோய்ந்து அமர்ந்திருக்க, முதல் தடவை உன்னை பிரியணும்னு டைவர்ஸ் கேட்டு பிரிஞ்சேன், இப்போ நாம சேரணும்னு பிரியறேன் என்றான் தெளிவாய்
ஆனா அது நடக்கும்மானு ன்னும் இருக்கு , உன்கிட்ட நான் எந்த விளக்கமும் சொல்ல இஷ்டப் படலை, சொன்னாலும் நீ அதை கிண்டலா பார்ப்ப இல்லை நக்கல் பண்ணுவ, இதெல்லாம் என்னால இனி பொறுக்க முடியாது இப்படி ஒரு வாழ்க்கை வாழணும்னு எனக்கு அவசியமில்லை அபிக்காக கூட, என்னை அது ரொம்ப டிப்ரஸ் பண்ணுது, என்றான்
அந்த டிப்ரஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் அவளுக்கு புரியவில்லை.
என்ன பண்ணுது என்றாள் கலக்கமாய்
அவனுக்கும் என்ன வார்த்தை போடுவது என்று தெரியவில்லை யோசித்து எனக்கு அது அது ஒரு மன அழுத்தம் கொடுக்குது. மே பீ எனக்கு இந்த கல்யாணம் வாழ்க்கையை ஹேண்டில் பண்ண தெரியலையா இல்லை உன்னை ஹேண்டில் பண்ண தெரியலையா இல்லை எந்த சூழ்நிலையிலும் நான் இப்படி தான் சமாளிக்க தெரியாம குழப்பவாதியா இருப்பேனா என்னென்னவோ தோணுது என்றான் மீண்டும்

 

சில சமயம் அதிக சுய அலசல்கள் தேவையில்லை ஆனால் இங்க கண்ணன் சமீபமாய் அதனை நிறைய செய்திருந்தான் போல,   
சுயலசல்களின் முடிவு அவர்களின் இயலாமையை சுட்டிக் காட்டும் போது எல்லோராலும் அதனை இயல்பாய் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. கண்ணன் அப்படி ஒரு நிலையில் இருந்தான்.      
கொஞ்சம் நாள் பிரிஞ்சு இருப்போம் அப்புறம் சேர்ந்து வாழ ரெண்டு பேரும் இஷ்டப் பட்டா வாழலாம் இல்லை என்னவோ யோசிக்கலாம்
எனக்கு இந்த நம்மோட உறவு உடையறதுல இஷ்டமில்லை எனும் போது தன்னை போல அபியை அவனின் கைகள் தூக்கி அணைத்துக் கொண்டது
பார்ப்போம் வாழ்க்கை எனக்கு என்ன வெச்சிருக்குன்னு தெரியலை
 
எனக்கு அழுகை வருது அழறேன் உங்களை பலவீனப் படுத்த இல்லை என்றாள் ரோஷமாக
பார்த்தியா நம்ம சண்டை ஓயாது சுந்தரி ஒரு கல்யாணம் ஆனா ரெண்டு முறை இப்போ ரெண்டு பிரிவு , எனக்கு இந்த கல்யாணம் கத்து கொடுத்திருக்கிறது ஒரு பாடம் தான் , ஒரு கல்யாணம் நிலைக்கணும்னா முக்கிய தேவை காதல் அன்பு பாசம் புரிதல் கமிட்மென்ட் விட்டுக் கொடுத்தல் பணம் இப்படி மட்டும் கிடையாது, இதையும் மீறி ஒன்னு இருக்கு என்று நிறுத்தினான்
என்ன என்று அவள் கேள்வியை பார்க்கவும் சகிப்புத்தன்மை என்றான் கணவன் மனைவி ன்னா ஒருத்தரை ஒருத்தர் சகிசிக்கணும், அவங்க எப்படி இருந்தாலும்.
சுந்தரி கண்ணீரோடு பார்க்க எஸ் டோலறேன்ஸ் நமக்குள்ள அது இல்லை
எனக்கில்லையா உணகில்லையா நான் பிரிச்சு பார்க்கலை நமக்கில்லை
என்னோட இந்த முடிவுல என்னை விடவும் நீதான் கஷ்டப் படுவ அபியை தனியா சிகிட்டு ஆனா என்கிட்டே வேற வழி இல்லை

 

 

கொஞ்சம் நாள் பிரிஞ்சு இருக்கலாம் அது நம்மை சரி படுதும்மான்னு பார்க்கலாம் நமக்கு இன்னும் வயசு இருக்கு வாழ உனக்கு இருபது தான் ஆகுது எனக்கு இருபத்தஞ்சு தான் கொஞ்ச நாள் பிரிவுல நாம கிழவன் கிழவி ஆகிடப் போறோம என்ன என்றான் கண்ணன்
ஒரு வேலை அப்போவும் சரியாகலைன்னா என்றவளின் கேள்வி உடனே குதித்து விழ
அவளை நேர்கொண்டு பார்த்தவன் இதுக்கு பதில் என்கிட்டே கிடையாது உன்கிட்ட இருக்கா என்றான்
இருக்கு நாம பிரிய வேண்டாம் என்றாள்
இல்லை அது முடியாது என்றவன் மகனை தூக்கிக் கொண்டு வீட்டை நோக்கி நடையை கட்டினான்

 

எங்க போகப் போறீங்க என்றாள்
தெரியலை என்றவனின் குரலில் அவ்வளவு வருத்தம் கூட ஒரு இறுக்கம்
இல்லை நீங்க போக வேண்டாம் என்று அவனின் கை பிடிக்க
ப்ளீஸ் சுந்தரி கை எடு என்னை கொஞ்சம் நானா இருக்க விடு பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கு நீ என்னை படுத்துற அவமானத்துல, நானும் அதை சரி பண்ண முயற்சி எடுக்கறேன் ஆனா நீ மாற மாட்டேங்கற வேண்டாம், எதுவும் சொல்லாத தயவு செஞ்சு என்னை போக விடு என்றான்
அவன் போகிறான் என்பது பாதி மீதி ஊருக்குள் என்னை என்ன சொல்வார்கள் என்பது மீது என்று சுந்தரி முற்றிலும் நிலை குலைந்து போனாள்.
 

 

 

 

Advertisement