Advertisement

ஷர்மிளாவின் மற்றொரு பரிமாணத்தை பார்த்தான் ரவீந்திரன். 
மிக மிக அழுத்தமான குரலில் கேள்விகள் வந்தன அவனை நோக்கி, கோபமில்லை ஆவேசமில்லை அழுகையில்லை வருத்தமில்லை, எதுவுமில்லை.
உன்னுடைய பதில் எனக்கு வேண்டும் என்ற செய்கை மட்டுமே
வீட்டிற்கு வரும் போதே எப்போதும் மகளோடு எதிர்கொள்ளும் ஷர்மி அன்று எதிர்கொள்ளவில்லை. இவன் வந்ததை கண்டு கொண்டதாக கூட தெரியவில்லை. அவனின் கண்கள் வந்ததும் மனைவியை தேட, அவளோ மகளுக்கு உணவு ஊட்டி உடல் துடைத்து உடை மாற்றி கொண்டிருந்தாள்.
இவன் சென்று உடை மாற்றி வர, அப்போதும் மகளோடு தான் இருந்தாள்.
நல்ல பசி அவனிற்கு உணவு உண்ண அமர, அப்போதும் அருகில் வரவில்லை, சீதா வந்து பரிமாற, உண்ண ஆரம்பித்தான்.
அம்மா பரிமாறினாலும் இவன் உணவு உண்ணும் நேரம் மகளோடு வந்து டைனிங் டேபிளில் அமர்ந்து கொள்வாள், இன்று அது போல எதுவும் இல்லை.

 

 

இவன் உணவுண்டு முடிக்கவும், இன்னும் ஷர்மி சாப்பிடலை பார்த்துக்கோ ரவி நான் தூங்க போறேன் என்று சீதா சென்று விட, அவனின் சித்தியும் குழந்தையை அவனிடம் கொடுத்து சென்று விட,
அங்கே இருந்த சசி மாவிடம், நீங்க ஒரு அரை மணி நேரம் கழிச்சு வந்து எடுத்து வைங்க என்று அனுப்பியவன், குழந்தையை தூக்கிக் கொண்டு மேலே போனான்.
இன்னும் சாப்பிடலையா ஷர்மி என்றவனிடம் பசியில்லை என்று முகம் பார்க்காமல் சொல்ல
அவளின் முன் வந்து நின்றவன் என்ன ஆச்சு ஷர்மி உடம்புக்கு ஏதாவது செய்யுதா என்றான் அவளின் வித்தியாசம் புரிந்து
அப்போதும் அவனிடம் சுணக்கம் என்று புரியவில்லை
நல்லாயிருக்கேன்
அம்மா எதுவும் சொன்னாங்களா
இல்லை என்ற தலையசைப்பு
எல்லாம் அவன் முகம் [பார்க்காமல்
அவளின் கை பிடித்து அவளை திருப்பியவன் என்னை பாரு என்றவன் என்ன பிரச்சனை என நான் யார் உனக்கு என்றாள்

 

 

ரவி இருந்த இடத்தை விட்டு அசையவில்லை அவளை தான் தீவிரமாய் பார்த்து இருந்தான், அவனின் துளைக்கும் பார்வை சற்றும் ஷர்மியை பாதிக்கவில்லை. அங்கே ஒருவன் இருப்பது போலவே உணராதவள் போல இருந்தாள். ஷர்மிளாவை பார்க்க பார்க்க விஷயம் பெரிதென்று தோன்றியது. நின்றது நின்றபடி இருந்தான்.  
மகள் உறங்கி விட்டதை உணர்ந்தவன் என்ன சொன்ன எனக்கு புரியலை தெளிவா சொல்லு என்றான் இயலாமையை அடக்கிய குரலில். 
அவனின் முகம் பார்த்தவள் நான் யாரு உங்களுக்கு ன்னு கேட்டேன், 
என்னோட மனைவி என
மனைவின்னா படுக்கையை உங்களோட பகிர்ந்துக்க மட்டுமா நானு என
அவனின் கண்களில் கோபத்தின் தீட்சண்யம் ஏற
சற்றும் அசராதவளாக அவனை பார்த்தாள்
அப்போதும் கூட அவன் நினைத்தது ஒரு பிள்ளை பிறந்து சில மாதங்களில் அவள் மீண்டும் உண்டாகி இருக்க அதற்க்கு யாரோ எதுவோ பேசிவிட்டார் அதனால் இப்படி பேசுகிறாள் என்று
பேபி திரும்ப சீக்கிரம் வந்துடுச்சு அதுகென்ன இப்போ யாராவது ஏதாவது சொன்னா நீ கண்டதும் பேசுவியா

 

 

சோ உன்னோட ஒரு வசதியான வாழ்க்கை வாழ வந்தவ நானு உன்னோட படுக்கையை மட்டும் பகிர்ந்துக்க வந்தவ நானு உன்னோட சுகத்துக்கு மட்டும் நானு கஷ்டத்துல நான் கிடையாது, ஏன் உனக்கு ஒரு கஷ்டம்னு என்கிட்டே சொன்னா நான் உன்னை கீழ பார்பேனா இல்லை உன்னை விட்டு போயிடுவேனா என்னை பத்தி இவ்வளவு உயர்ந்த எண்ணம் எல்லாம் வெச்சு இருக்குறதால என்கிட்ட எதுவும் நீ சொல்றதில்லையா என
என்ன சொல்லணும் என்றான்
ஒன்னுமே சொல்ல இல்லையா என
சொல்ல ஆயிரம் இருக்கும் ஆனா நீ எதை சொல்ற என்றான்
பண விஷயத்தை தான் சொல்கிறாளோ என்று தோன்றிய போதும் என்ன வென்று சரியாய் தெரியாமல் பணத்தை பேச விருப்பமில்லை.
இங்கே வீட்டில் எதுவும் பிரச்சனையோ இல்லை முன்பு எதுவும் திருமணதிற்கு கார்னர் செய்யும் போதும் எதுவும் அதிகமாய் செய்து விட்டேனோ நினைவில் இல்லையோ இப்படியும் எண்ணங்கள் ஓடியது 
என்ன விஷயம்னு சொல்லாம சும்மா வாய்க்கு வந்தபடி பேசக் கூடாது என்னன்னு சொல்லு நானா எதுவும் கெஸ் பண்ண விரும்பலை என்றான் பொறுமையாகவே.

Advertisement