Advertisement

மலங்க மலங்க விழித்து பார்க்கும் சுந்தரியை பார்த்தவன், “என்ன இப்படி முழிக்கற?” என்றான்.
“எதுக்கு இப்போ என்னை கட்டி பிடிக்கறீங்க, நீங்க என் பக்கத்துல வர்றது இல்லைன்னு சொன்னதுனாலையா?” என்றாள்.  
கண்ணனின் முகம் சுருங்கி விட்டது. அடுத்த நொடி அவளை விடுவித்து விட்டான். மெதுவாய் அவனை விட்டு விலகி எழுந்து சுவர் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
இத்தனை நாட்கள் ஏங்கிய ஏக்கம் தான் ஆனால் இன்று பேசிய பிறகு நடக்கவும் அவளுக்கு பிடிக்கவில்லை.    
நேராய் படுத்த கண்ணன் தன் இரு கைகளையும் தலைக்கு பின் கொடுத்து தளர்வாய் படுத்தவன், “அப்படியும் சொல்லலாம், இல்லை என்னை பக்கத்துல வர்றதுக்கு நீ இப்போ தான் அனுமதி கொடுத்தேன்னும் சொல்லலாம்”
“நான் உங்களை பக்கம் வர வேண்டாம்னு சொன்னேன்னா?”
இதற்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் “அது எப்படி நீங்க வந்தவுடனே உங்க கூட ஒட்டிக்கிட்டு திரிய முடியுமா?” என்றாள்.
அந்த பதில் அவனுக்கு புன்னகையை கொடுக்க “என் கூட உன்னை எங்க ஒட்டிக்கிட்டு திரிய சொன்னேன், என்னை கட்டிக்கிட்டு தானே படுக்க சொன்னேன், அது முடியாதா?” என்றான் இலகுவாக.
“எப்படி முடியும்?”
“அப்போ நான் பக்கத்துல வரலைன்னு ஏன் குறை சொல்ற?”
“நீ ஒன்னும் எங்க வீட்டுக்கு வரலை, நான் தான் உங்க வீட்டுக்கு வந்திருக்கேன், நீ எங்க வீட்ல இருக்கும் போது நான் உன்னை விட்டு தனியா படுத்திருக்கேனா என்ன முன்னையும் சரி, இப்போவும் சரி” என்றான்.
“நீங்க படிச்சவங்கன்னு பேச்சுல காமிக்கறீங்க, அப்போ நீங்க சரி, நான் தப்பா?” என்றாள் காரமாக.
“படிப்புக்கும் பேச்சுக்கும் என்ன சம்மந்தம்? லூசு மாதிரி உளறக் கூடாது! நான் சரி நீ தப்புன்னு எப்போ சொன்னேன்?”
“நீங்க அப்படி தான் பேசறீங்க!” என்றாள் ஸ்திரமாக.
“அது நீயா நினைக்கறது!” என்றான் அதையும் விட ஸ்திரமாக.
பின்பு கண்ணன் தீவிரமாய் பேச ஆரம்பித்தான். “உன் பக்கத்துல வரக் கூடாதுன்னு இல்லை. சில விஷயம் என்னை தடுத்துச்சு. முதல் விஷயம் நீ! நாம சேர்ந்து படுக்க நீ நினைக்கவேயில்லை, சின்ன கட்டில் உனக்கும் அபிக்குமே, அப்போ நான் அங்கே வர முடியாது! ஆனா நீ கீழ வரலாம் இல்லையா, ஆனா வரலை, ஒரு பேச்சுக்கு கூட என்னை நீ கூப்பிடலை!”
“மனக் காயங்கள் பெருசு தான், நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன்! ஆனா அதையே நினைச்சிட்டு இருந்தா வாழ்க்கை எப்படி நகரும் சொல்லு!”
“அதையும் விட எப்பவுமே குத்தி குத்தி பேசற எவ்வளவு தான் பொறுமையா இருந்தாலும் சலிப்பு தான் வருது, சில விஷயங்கள் கசப்பா இருந்தாலும் ஒத்துக்க தான் வேணும்!”
“நான் உன்னை பிடிச்சு கல்யாணம் செய்துக்கலை, அதையும் விட கல்யாணமே பிடிக்கலை, இப்படி இருந்த சூழல் நமக்குள்ள, நான் திரும்ப வந்த பிறகும் அதையே பேசினா நான் என்ன பண்ணுவேன்?”
“இப்போ உன்னை எனக்கு பிடிக்குதா இல்லையான்னு யோசிக்க கூட முடியலை, அப்புறம் எப்படி பக்கத்துல வரத் தோணும்”
“நான் சொல்றதை சரியா புரிஞ்சிக்கணும், ஏறுக்கு மாறா புரிஞ்சிக்க கூடாது”
“எல்லோருக்கும் அவங்க அவங்க வாழ்க்கையை வாழ அவங்களுக்கு உரிமை இருக்கு, கல்யாணம்ன்றது ஒரு புனிதமான உறவு தான். ஆனா யோசிச்சு பார், உன்னை எனக்கு பிடிக்கலை, எனக்கு கட்டாயமா ஒரு கல்யாணம், அந்த வயசுக்குரிய முட்டாள்தனம் ஆண் பெண் உறவு பிடித்தம் குடுக்குமோன்னு, என்னோட ஒரு செயல்! ஆனா நிறைஞ்ச சபையில விமர்சிக்கப் படுத்து. அப்போ நான் எப்படி பீல் பண்ணுவேன் ரொம்ப அசிங்கமா பீல் பண்ணினேன் என்னால இப்போ வரைக்கும் அதுல இருந்து வெளில வர முடியலை
உனக்கே பிடிக்கலையே அப்புறம் எதுக்குடா என் பக்கம் வந்தேன்னு நீ கேட்கலாம் அப்போ எல்லாம் இந்த கல்யாணம் நடந்துருச்சி அது நிலைக்கணும் தான் நினைச்சேன் அதுக்கான என்னோட செயல் தான் அது ஆனா இப்போ அதை நினைச்சா எனக்கே என்னை பிடிக்கலை, நான் பண்ணினது தப்பா தெரியுது  
அவளின் முகம் மாற சரியா புரிஞ்சிக்கணும் அப்போ என் பக்கம் வந்து உனக்கு பிடிக்கலையான்னு கோக்கு மாக்கா நினைக்க கூடாது என்றான் அதட்டலாக
அப்போதும் அவளின் பார்வையில் முறைப்பு தான்.
ஆனா இன்னொரு உண்மையும் நீ ஒதுக்கணும் அப்படி ஒன்னு நடக்கலைன்னா நிச்சயம் நாம திரும்ப சேர்ந்து வாழ்திருக்க மாட்டோம்

Advertisement