Advertisement

பொண்டாட்டின்னு என்ன கவனிக்கணும் உங்களுக்கு எனக்கு சொல்லுங்க எனக்கு நிஜமா தெரியலை கத்துக்கறேன் என்றாள் ரோஷத்தை விடாமல்
மீண்டும் ஒரு சண்டை தேவையில்லை என்று உணர்ந்த கண்ணன்
ப்ச் விடு என்றான் சலிப்பாக
என்ன விடு உங்களுக்கு தான் என்னை பிடிக்கலை அதுதான் எது ல சாக்கு கிடைக்குமோன்னு என்னை சண்டை பிடிக்கறீங்க , நானா பொண்டாட்டியா இருக்க மாட்டேன்னு சொல்றேன் நீங்க தான் புருஷனா இருக்க நினைக்கலை நான் அழகா இல்லைன்னு நீங்க தான் என் பக்கத்துல கூட வர்றதில்லை அதனால தானே முன்ன என்னை விட்டு போனீங்க, விவாகரத்து வாங்கினீங்க என்று ஆத்திரம் மிகுதியில் பேசி விட்டவள் பின்பு தன் நெற்றியிலேயே வேகமாய் தட்டிக் கொண்டு எழுந்து வெளியே நடந்து விட்டாள்.
வேகமாய் சென்று நர்சரியில் அமர்ந்து கொண்டாள்
ஆறு மணி தாண்டியிருக்க சிந்தா நர்சரியை பூட்டுவதற்கான வேலையில் இருந்தாள்.
என்ன சுந்தரி பூட்டற நேரம் வந்திருக்க இன்னும் எதுவும் வேலையிருக்கா
இவளின் ஆயா முன் கேட்டை தாண்டி ரோட்டில் நின்று யாருடனோ அரட்டை
வேகமாய் உள்ளே சென்றவள் லைட் எல்லாம் போட்டு விட்டு இவளின் ரூம் செல்ல
அங்கே அப்பாவும் மகனும் நல்ல உறக்கத்தில் , என்ன மாதிரி உணர்ந்தாள் என்றே தெரியவில்லை
உன்னை தேடினேன் என்று சொல்லியாகி விட்டது அதற்கும் ஒரு பரதிபளிப்பும் இல்லை உனக்கு என்னை பிடிக்கவில்லை போல அதுதான் பக்கம் வரவில்லை என்றும் சொல்லியாகிவிட்டது அதற்கும் ஒரு பிரதிபளிப்பும் இல்லை நிஜத்தில் இவனுக்கு என்னை பிடிக்கவில்லை போல
நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும் என்று நினைத்தவளுக்கு மனம் கனத்து போனது
இவள் விளக்கை போட்டு அப்பாவையும் மகனையும் பார்த்து நிற்கவுமே அபி சிணுங்க , மகனை வந்து தூக்கினால்
அவள் அபியை தூக்கும் போதே , கண்ணன் விழித்து விட , மகனை தூக்கிக் கொண்டு வெளியில் சென்று விட்டாள்.
நீ வர்றியா வரலையா ன்னு நான் கேட்கவே இல்லையே போகலாம்னு சொன்னேன் என்றான் சற்று சத்தமாகவே , அப்போது தான் உள்ளே வந்து டீ வீ பார்த்துக் கொண்டிருந்த வடிவு பாட்டி திரும்பி பார்த்தார்
எப்போதும் அவர்களின் பிரச்சனை வெளியே தெரியக் கூடாது என்று கண்ணன் தணிந்து போய் விடுவான் சுந்தரி அவளின் பேச்சினில் பிடிவாதத்தில் நிற்ப்பாள் , இன்று இப்படி கண்ணன் பேசுவான் என்று நினைக்கவில்லை
மகனுக்கு பாலை காய்ச்சி கொண்டிருந்தாள் ,
அருகில் சென்றவன் காய்ச்சிய பாலை வாங்கிக் கொண்டவன் , மகனையும் வாங்கினான்
பின்னே அவளை பார்த்து டீ போடு என்று அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்து கொண்டான்
இதோ அவளுக்கு கொடுத்த பொருட்களில் சோபாவும் அடக்கம்
வடிவுப் பாட்டிக்கு ஒரு சாய்வு நாற்காலி ஆர்டர் செய்திருந்தான் , இவர்கள் சோபாவில் அமர அவர் கீழே அமருவார் என்று புரிந்து
இதோ அதுவும் அவர்கள் வீடு வந்தவுடன் வந்திருக்க வடிவு பாட்டி அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.
இப்போது சத்தத்தில் இவர்களை பார்க்க
அது ஆயா வெளில போலாம்னு சொன்னார் நான் வேண்டாம் சொன்னேன் என
ஏன் கண்ணு ராசா கூப்பிட்டா போக வேண்டியது தானே என்று சொல்லி பேச்சு முடிந்தது என்பது போல அவர் டீ வீ யில் மூழ்க
சுந்தரியின் முகத்திலும் அவ்வளவு பதட்டம் சிறிது அவமான உணர்வு கூட, அதை சரியாக படித்தவன்,   
அவளின் கை பிடித்து தன்னில் இருந்து விலகியவன் சாரி நான் அந்த அர்த்ததுல சொல்லலை வேற அர்த்ததுல சொன்னேன் போ போய் கிளம்பு என்றான் தணிவாக
சுந்தரி வேறு வழியில்லாமல், மகனை தூக்கி அவனை ரெடியாக்க கிளம்பினான்.
இப்படியாக கிளம்பினர், பைக்கில் செல்லவில்லை, இரவு கவிழுந்து விட்டதால் மகனும் கூட இருப்பதால் காரில் தான் கிளம்பினான்.
காரில் செல்லும் போது இப்போ எதுக்கு வெளில சாப்பிட போறோம்னு நீ கேட்கலை என
சுந்தரி அமைதியாக இருக்க
ஏன்னு கேளு என்றான் அதட்டலாக
ஏன் என்றவளிடம்
என் பர்த்டே க்கு நீ பழைய சாப்பாடு சாப்பிட்ட இல்லையா அதுக்கு என்றான்
அவனை திரும்பி முறைத்து பார்க்க

Advertisement