பூவின் வீட்டில் விஷேஷம், விஜயனும் சைந்தவியும் வெகு முன்பாகவே சென்று விட்டனர். அந்த இடத்திலேயே தோற்றத்தில் நடை உடை பாவனைகளில் அவ்வளவு வித்தியாசப் பட்டு தெரிந்தனர்.
எப்போதும் விஜயன் தோற்றத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பான். இப்போது காதல் மனைவி கை கூடியதால் என்னவோ இன்னுமே வசீகரனாய் தெரிந்தான்.
நம்ம விசி யா இவன் என்று அவனின் அப்பா விழி விரித்து பார்க்க, அம்மா வுமே அவனை ஆசையாய் நோக்கினார்.
உடன் சைந்தவி, முன்பே அழகி இப்போது இன்னுமே தேஜஸ் கூடி தெரிந்தாள்.
இருவரையும் பார்த்ததும் அந்த அம்மா அப்பாவிற்கு தோன்றியது இது தான், என் புள்ள நல்லா இருந்தா சரி
அதுவும் அவ்வளவு பெரிய காரில் வந்து இறங்கவும், பெருமை பிடிபடவில்லை அவனின் அப்பாவிற்கு. ஏதோ வேலையாய் வெளியே வந்த அம்மா வும் அப்படியே நின்றார். இருவரும் பூங்கோதையின் வீட்டில் தான் இருந்தனர்.
விஜயன் அவர்களின் வீடு சென்று பூட்டி இருக்கவும், இங்கே வந்தான்.
பெற்றோர் இருவரும் அலுங்கிய தோற்றத்தில் இருக்க, அவர்களை பற்றி தெரிந்ததாலோ என்னவோ, புது உடைகள் அவர்களுக்கு எடுத்து வந்திருந்தான். எப்போதும் பணம் கொடுப்பான், இந்த முறை அவனே எடுத்து வந்திருந்தான்.
விசி கண்ணு என்று அம்மா ஆசையாய் வந்து அவனின் கை பிடிக்க
பதிலுக்கு அவரின் கையை பற்றிக் கொண்டவன், மா என்ன சீலை இது விஷேஷம் இன்னும் நல்லா கட்டணும் இல்லையா, நான் எடுத்துட்டு வந்திருக்கேன், வீட்டுக்கு போய் கட்டிட்டு வரலாம்.
இங்க வேலை இருக்கே கண்ணு
வேலை நான் பார்க்கறேன் நீ போய் மாத்திட்டு பளபள ன்னு வரணும், நைனா நீ யும் போ என்றவன், காரில் இருந்து அந்த பைகளை எடுக்க
எல்லாம் பார்த்து நின்றிருந்தால் சைந்தவி
அவளை சில வருடங்களுக்கு பிறகு இப்போது தானே பார்க்கிறார்
வா கண்ணு என்றார் அவளை யும் பார்த்து தயக்கத்தோடு
பார்த்து நின்றிருந்த கணவரையும் பார்த்து வா ன்னு கூப்பிடு என்றார் அதட்டலாக
வா ம்மா என்றார் அவர்
பதிலுக்கு என்ன பேசுவது இருவரையும் பார்த்து சைதவிக்கு தெரியவில்லை
பார்த்து தலையசைத்து சிரித்தவள் தயங்கி நான் என்ன செய்ய வேண்டும் என்பதாய் விஜயனைப் பார்த்தாள்.
நானும் அவளும் வேலை பார்க்கறோம், நீங்க போய் ஜம்முன்னு தயாராகி வாங்க என்றான்
மகனை மருமகளை பார்த்த சந்தோஷத்தில் அவன் என்ன சீர் கொண்டு வந்தான் என்று கேட்க மறந்தே போனார்.
அவன் சைந்தவியை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல, வழியில் கண்ட அனைவரும் வாங்க அண்ணா விஜி தம்பி என்று என்ன உபயோகித்தாலும், வாங்க அண்ணி வாம்மா என்ற முகமன்கள் சைந்தவியையும் நோக்கி பாய்ந்தது.
உள்ளே சென்றால் குழந்தையின் அழுகை சத்தம் காதை பிளந்தது. பூங்கோதை குளிக்க சென்றிருக்க, அவளின் பாட்டியிடம் அந்த கத்து கத்திக் கொண்டிருந்தாள்
அவர் பதறி வாயிலை பார்த்திருந்தார் விஜயனின் அம்மாவிற்காக
ஏன் ம்மா இந்த கத்து கத்தறா என்று விஜயன் வர…
பசிக்கும் போல கண்ணு, ஆனா பால் குடுத்து தான் பூவு என்கிட்டே குடுத்துட்டு போச்சு என்றார்
இருந்த பதட்டத்தில் சைந்தவியை வா என்று சொல்லக் கூட மறந்திருந்தார்.
ஒரு ஓரமாய் கால் நீட்டி அமர்ந்து குழந்தையை ஆட்டி ஆட்டி சமாதனம் செய்து கொண்டிருந்தார்.
என்கிட்டே குடுங்க என்று சைந்தவி வாங்கி ஃபேன் அடியில் நின்று மொத்தமாய் இருந்த கை துண்டை தவிர்த்து, மெல்லியதாய் இருந்த உடையில் நன்கு காற்றோட்டமாய் பிடிக்க, அழுகை குறைந்தது. அப்போதும் தேம்பல் இருந்தது.
பட்டுக் குட்டிக்கு என்ன வேணும், காத்து வேணுமா என்று பேச
அது தேம்பலை நிறுத்தி உறக்கத்திற்கு கண் மூடியது
நமக்கு பழக்கம் ஓரமா உட்கார்ந்துக்குவோம், காத்து இருந்தாலும் பிரச்சனை இல்லை, இல்லைனாலும் பிரச்சனை இல்லை, குழந்தை அப்படியா பூவு ரூமுக்குள் ஏ சி ல ஏ வெச்சிருக்கும் இங்க குட்டிக்கு வெக்கை தாங்களை என்று அவரிடம் கடிந்த விஜயன்,
ஒரு சேர் எடுத்து ஃபேன் அடியில் போட்டு உட்காரு என்றான் சைந்தவியை