Advertisement

யாரை பார்ப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றான் துரைகண்ணன்.
ஆம்! ஒரு சிறு அசம்பாவிதம், சிறு வாகப் போய்விட்டதில் கடவுளுக்கு அவன் நன்றி செலுத்தாத நேரமேயில்லை.
இரண்டு நாட்களாய் அப்பாவை காணாத மகன் ஒவ்வொரு வண்டி சத்ததிற்கும் கண்ணனை தேடினான்.
சாரு கூட முதல் தினம் மாலை சொல்லியிருந்தால் அபி உன்னை தேடறான் ண்ணா, நான் இருக்கும் போதே வண்டி ரோட்ல சத்தம் கேட்கவும், அப்பா அப்பா ன்னு ஓடறான் நான் தான் பிடிச்சு தூக்கிட்டேன் என்று சொல்லவுமே
மனதே சரியில்லை
அடுத்த நாள் காலையில் அவள் கல்லூரி கிளம்பும் முன்னமே போய் அபியை தூக்கி வந்து இங்க விட்டுட்டு போ என
அனுப்பக் கூடாது என்பது இல்லை மகனை பார்க்கும் ஆவலில் எப்படியும் கண்ணன் வருவான் அப்போது அவளும் அவனை பார்க்கலாம் என்ற ஒரே காரணம் தான்
அண்ணா அண்ணி அனுப்பலை என்ற தகவலோடு எனக்கு காலேஜ் க்கு டைம் ஆச்சு என்று அவள் கிளம்பிவிட அப்படி ஒரு கோபம் கண்ணனுக்கு
செய்யும் வகை தெரியாது உள்ளுக்குள் பொங்கி கொண்டிருக்க மதியம் போல சிந்தாவின் அழைப்பு
பதட்டமான குரலில் தம்பி நம்ம அபியை வண்டி இடிச்சிடுச்சு என்று சொன்னது தான் போதும் மேலே என்ன என்று கேட்கும் திராணி கூட அற்றவனாக, கைபேசியை கீழே நழுவ விட அது பக்கம் பக்கமாக கழன்றது
ரூமை விட்டு வெளியே வேகமாய் வந்தால், வீட்டில் யாருமில்லை அம்மாவும் சித்தியும் எங்கேயோ போயிருக்க சந்திரனும் சண்முகமும் கூட இல்லை
அவசரமாய் வீட்டை பூட்டினான் , பரவாயில்லை கார் இருக்க அதனை எடுத்துக் கொண்டு அவ்வளவு வேகமாக விரைய, இவன் சென்ற நேரம் யாரோ நூத்தி எட்டிற்கு அழைத்துக் கொண்டிருந்தனர்
கூட்டம் கூடி இருந்தது
இப்போது கேட் திறந்து இருக்க அவர்களும் கவனிக்கவில்லை
அப்படி வரும் போது அந்த இளைஞன் ஹாரன் அடித்துக் கொண்டு வர
அப்பாவோ என்று பார்க்க சில நொடிகளே என்ற போதும் அபி வேகமாய் வெளியில் ஓடினான்
அதனை நொடியில் கவனித்து விட்ட சுந்தரியும் அபி என்று கத்திக் கொண்டே பின்னே ஓட, பைக்காரானும் கவனித்து சடன் ப்ரேக் அடிக்க
என்ன முயன்றும் குழந்தையை வண்டி தட்டி விட அவன் தூக்கி எறியப் பட்டான்
பைக்காரனும் சடன் ப்ரேக் அடித்ததில் அவனுமே வண்டியில் இருந்து தூரமாய் விழுந்திருந்தான் என்ன ஹெல்மெட் அணிந்திருந்தான் அதனால் தலையில் அடி இல்லை
ஆனால் தெய்வாதீனமாக தூக்கி எறியப் பட்ட அபி அங்கே வேலி கேட்டில் சுவரோரமாய் யாரோ எடுத்து செல்வதற்காய் வைத்திருந்த வைக்கோல் போரில் விழ
அவனுக்கு அடி ஒன்றுமில்லை ஆனால் குழந்தை மயங்கியிருந்தான்
அவன் தூக்கி எறியப் பட்டதை பார்த்ததுமே இங்கே சுந்தரியும் மயங்கி இருந்தாள்
வந்து பார்த்தால் வடிவு பாட்டி சுந்தரியை மடியில் போட்டு அழ
சிந்தா அபியை கையில் வைத்து கண் கலங்கி நின்றிருந்தாள்.
அந்த காட்சி அப்பப்பா மனதில் தோன்றிய பயம் ஒரு பிசைவு , அருகில் வந்து அபியை கையில் வாங்கி அபி அபி என்று கன்னத்தை தட்டிக் கொண்டே மனைவியை ஆராய்ந்தான்
பையனை பைக் இடிச்சதை பார்ததும் மயங்கி விழுந்துட்டா என்று சொல்ல  
அந்த பைக் இளைஞனை எல்லோரும் சுற்றி வளைத்திருக்க என் மேல தப்பு இல்லீங்க குழந்தை தான் ஓடி வந்துடுச்சு என்று அவன் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்
அதற்க்கு மேல் நொடியும் தாமதிக்க வில்லை   
இருவரையும் தூக்கி இவன் காரில் வைக்கவும் வடிவுப் பாட்டியும் மயங்கி இருந்தார்
வீட்டின் உள் சென்று பணத்தை எடுத்து, வீட்டைபூட்ட நேரமில்லாமல் சிந்தாவை வீட்டில் விட்டு சுந்தரியின் கைபேசியை எடுத்துக் கொண்டு அங்கிருந்த சின்ராசு மற்றும் வேறு இருவரோடு, ஹாஸ்பிடல் விரைந்தான்
பதட்டம் பதட்டம் பதட்டம் மட்டுமே சுந்தரியினதும் வடிவுப் பாட்டியினதும் மயக்கம் என்று தெரியும் ஆனால் அபிக்கு தூக்கி எறியப் பட்டதில் என்ன வாகிட்றோ என்று பயம்
பாட்டியும் பையனும் கண்முழிசிட்டாங்க எதுக்கும் எங்கயும் அடி இருக்கானும் check பண்றோம் குழந்தை அழறான் உள்ள வாங்க என்று அழைக்க கண்ணன் செல்லவுமே வீரிட்டு அழுது கொண்டிருந்த அபி அவன் அருகில் செல்லவும் அவனை பார்த்ததும் பா என்று தாவ
நிச்சயம் கட்டிலில் இருந்து கீழே விழுந்திருப்பான்
ஓடி சென்று தான் கண்ணன் பிடித்தான்
குழந்தையை அணைத்து பிடித்தவனுக்கு சூழ்நிலையின் கணம் தாங்காமல் கண்கள் கலங்கியது  
சுந்தரி இன்னமும் கண் விழிக்கவில்லை.

Advertisement