Advertisement

கண்ணனுடன் பைக்கில் செல்லும் போது அத்தனை மன சுணக்கங்களும் குறைந்து மனம் அமைதியாய் உணர்ந்தது.
அவளின் அமைதிக்கு ஆயுசு இன்னும் ஐந்து நிமிடங்கள் என்று புரியாமல் ,
அவன் வீடு சென்று பைக்கை நிறுத்த இவனை பார்த்ததும் நித்யா ஓடி வந்து ஹேப்பி பர்த்டே அண்ணா என்றாள்
பைக்கின் சத்தம் கேட்கவும் அபியை தூக்கி வந்திருந்த கனகாவும் வந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் கண்ணா என்று என்று சொல்ல
பைக்கில் இருந்து இறங்கிய சுந்தரியின் முகம் முதலில் அதிர்ச்சியை தாங்கி பின் ஒரு நிராசையை சுமந்தது
அவளின் முகமே எதோ போல ஆகிவிட்டது
சுந்தரி அங்கேயே நிற்க கண்ணன் அவளை பார்த்துக் கொண்டே தான் இருந்தான்
இவ மட்டும் என்கிட்டே எதுவும் சொல்ல மாட்டா நானே போய் இவ கிட்ட என் பொறந்த நாளுன்னு சொல்லுவேனா போடி என்று நினைத்தவன்
இவள் சோபாவின் பின் சற்று தள்ளி நின்றிருந்தாள் அதனால் சந்திரநிற்கும் தெரியவில்லை ஷன்முகதிர்க்கும் தெரியவில்லை
அபியும் சத்தம் செய்யாமல் காலையில் இருந்து அம்மாவை பார்க்காததினால் அவளின் தோள் சாய்ந்து அமைதியாய் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தான்   
அப்படி நிராதரவாய் நிற்கவும் மனதிற்கு பழையன எல்லாம் ஞாபகம் வந்தது அந்த வீட்டில் திருமணம் முடிந்து அவள் இருந்த நாட்கள்  
விமலா இவர்கள் வந்ததை பார்க்கவில்லை பூஜை அறையில் பூஜைக்கு வேண்டிய சாமான்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார்
கண்ணின் புது உடை அங்கே இருக்க அதை அணிவதற்காக ரூமின் உள்ளே சென்றவன்
பின்னோடு சுந்தரியும் வருவாள் என்று நினைக்க அவள் வரவில்லை
அவள் வரவில்லை என்றதும் அபி என்று குரல் கொடுத்தான், அவனை தூக்கிக் கொண்டு சுந்தரி வருவாள் என்று எதிர்பார்த்து
இதோ அவனின் புது உடை எடுக்க அவனின் பீரோ திறக்கவும் அங்கே அவளுக்கு வாங்கிய பரிசு இருக்க
இன்றைக்கு கொடுக்கலாம் என்று தான் அவளை உள்ளே அழைக்க அபி என்றழைத்தான் ஆனால் அவள் வரவில்லை
மனம் பொறுக்காமல் சுந்தரி என்று அவளையே அழைத்தான்
விமலாவுடன் பூஜை பொருளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் சுந்தரி
போ சுந்தரி அவன் கூப்பிடறான் பாரு என்று விமலா சொல்ல
அவனை பார்க்கும் விருப்பமில்லாது தான் சென்றால்
ஒஹ் அவனின் பிறந்த நாள் என்னிடம் சொல்ல முடியாத படி நான் வேண்டாதவளாகி விட்டேனா, இதோ இந்த வீடு தானே என்னை தப்பாய் பேசி துரத்தி விட்டது , கண்ணீர் வரும் போல இருக்க இல்லை நீ அழக் கூடாது சுந்தரி என்று அவளினுள் ஒரு வைராகியம் வந்தமர்ந்தது.   
முதலில் ஒரு நிராசை இப்போது கோபம்
ஏன் பேச விருப்பமில்லை என்ன பண்ணிட்டாங்க உன்னை என்றான்
அப்போதாவது ஏன் உங்க பொறந்த நாளை என்கிட்டே சொல்லலை என்று சண்டையிடுவாள் என்று நினைத்தான்
அய்யகோ சுந்தரி அதனை கேட்கவில்லை எனக்கு அதை சொல்ல விருப்பமில்லை என்றாள் முறுக்கி
நீ என்னை தள்ளி நிறுத்துகிறாய் என்று சொல்ல முடியவில்லை ஆனால் அந்த நிமிடம் மனம் ஸ்பஷ்டமாய் அப்படி தான் உணர்ந்தது.  
கண்ணனுக்கு ஏனோ கடுப்பாக வந்தது ஏன்டா நீ வேற அவ தான் அப்படின்னு தெரியும் தானே விட்டுட்டு போகவேண்டியது தானே என்று நினைத்தவன்
நான் உனக்கு ஒன்னு வாங்கியிருக்கேன் என்று சொல்லி அதனை பீரோவில் இருந்து எடுக்க திரும்ப
சுந்தரியின் நாக்கினில் சனி தான் புகுந்து கொண்டது
எனக்கு தேவையில்லை என்று சொல்லி அபியை தூக்கி கொண்டு என்ன ஏது என்று உணரும் முன்னமே வெளியில் நடந்து விட்டாள்.
இனி பணம் வந்தாலும் அது அவள் மூலம் தானே அதனால் அவனுடைய சம்பாத்தியத்தில் இருந்த கடைசி பணம் என்பதால் வாங்கியிருந்தான்
இன்று கொடுக்க நினைக்க அவள் என்ன என்று கேட்காமல் நிற்காமல் முகத்தில் அடித்தார் போல சொல்லி சென்றது அவனை என்னவோ செய்தது.
ஏன் நான் பிறந்த நாள் என்று சொல்லாமல் விட்டால் எனக்கு வாழ்த்து கூட சொல்ல மாட்டாளா நான் எதற்கோ சொல்லவில்லை ஆனால் அதை ஒரு சர்ப்ரைஸ் என்று கூட இவளால் எடுத்துக் கொள்ள முடியாதா என்று தோன்ற அவனுக்கு முகம் விழுந்து விட்டது.
அந்த நகையை அவளுக்கு சர்பரைஸ் கொடுக்க வென்று மிகவும் ஆசையாய் வாங்கினான் அன்று வாணி வீட்டுக்கு போகும் போதும் பிடிவாதம் காட்டி நிற்க கொடுக்க மனது வரவில்லை இன்று என்ன என்று கூட பார்க்காமல் வேண்டாம் என்று சொல்லி போகிறாள்   
கையில் எடுத்ததை பீரோவில் எரிந்து பூட்டினான்.

Advertisement