Advertisement

உறங்கியும் உறங்காமலும் இரவை கழித்ததினால் மனது சோர்வை உணர
காலை தோட்ட வேலை முடிந்ததும் நர்சரியை நீ பார்த்துக்கோ நான் கொஞ்சம் நேரம் தூங்கறேன் சிந்தா, யாரும் செடி வாங்க வந்தா நீயே பார்த்துக்கோ என்னை எழுப்பாதே இல்லை மாமாவை கூப்ட்டு விடு  என்று சிந்தாமணியிடம் சொன்னாள்
ஆம் கண்ணனிடம் பேசும் போது மாமா என்ற அழைப்பெல்லாம் இன்னும் வரவில்லை வாங்க போங்க சில சமயம் அபி அப்பா ஆனால் மற்றவர்களிடம் பேசும் போது மாமா என்றோ என் மாமன் என்றோ சொல்லப் பழகியிருந்தாள்
சிந்தாவோ அருகில் ஆள் இருக்கிறார்களா என்று கூட பார்க்கமால் என்னடி நைட்டெல்லாம் ஓவர் டைம் ஓவரா ஓடுதோ அசதியா தெரியற என்று கண்ணடிக்க,
ஏய் ஒழுங்கா வேலைய பாருடி ஆன்னா ஊன்னா இவ ஒருத்தி என்று புலம்பிக் கொண்டே நடந்தவள் ஆமாம் நைட் டு ஓவர் டைம் ஓடுது அது வெளில ஓடாம என் மேல ஓட கதவை பூட்டி வெச்சிருக்கேன் என்று சலித்துக் கொண்டே செல்ல
அங்கே தான் எதோ வேலையாய் கண்ணன் இருக்க அவனின் காதினில் நன்கு விழுந்தது
அடப் பாவிங்களா பசங்களை விட இந்த பொண்ணுங்க பேசுறாங்களே என்று மனதிற்குள் வியந்தவன்
 
 
இவ என் பொண்டாட்டியா என்ன? ஜஸ்ட் ஹவுஸ் மேட், சேர்ந்து வசிக்கறோம் , சேர்ந்து வாழலை என்று மனதிற்குள் நினைத்தவனுக்கு தெரியவில்லை அதெல்லாம் செய்யக் கூடாது என்றில்லை
முதலில் தெரியவில்லை இப்போது கவனித்து பார்த்து செய்ய நினைக்கும் போது இவன் முறுக்கி கொண்டு நிற்கிறான்
என்னவோ அவளின் பேச்சு சுவாரசியமாய் தோன்ற , என்ன செய்கிறாள் என்று பார்ப்போம் என்று நினைத்து வீட்டின் உள்ளே சென்றான்
 
 
நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் இரு கைகளையும் தலைக்கு மேல் நீட்டி, கால்களையும் நன்றாக நீட்டி படுத்து வாய் சற்று பிளந்து இருக்க அதுவே சொல்லியது அவளின் உறக்கத்தின் அளவை
அபி எப்போதும் அப்படி தூங்குவான்    
அருகில் சென்று நின்று பார்த்தான் அவனுடனான திருமணத்தின் போது அவனின் தோள் உயரம் இருந்தது போல தான் இருந்தாள் ஆனால் இப்போது வளர்ந்து விட்டாள்
என்ன பேச்சு பேசுகிறாள் வாய் அதிகம் தான் என்று தோன்ற பார்த்திருந்தான் என்னை திட்டுவதிலும் சரி மற்றவற்றிலும் சரி என்று தோன்ற புன்னகை
நீ இடத்தை என் பேர் ல இருந்து மாத்தாதா வரைக்கும் உன் பேச்சு கா தான் போடி என்று பார்த்தவன்
முன்ன விட கொஞ்சம் பளபள ன்னு இருக்காளோ என்று தோன்றியது
அவள் பெப்பரப்பே என்று தூங்க வயிற்றுப் பகுதி புடவை விலகி வயிறு தெரிய, அதில் அபி பிறந்ததினால் உண்டான ஸ்ட்ரெச் மார்க்ஸ் இருக்க, அதனை பார்த்தவன் , அதை தடவ கை போக , பின்பு அந்த கையை பின் இழுத்து இன்னொரு கையால் புடவையை சரி செய்தான்
உனக்கு ஹார்மோன் அக்ஷன் சரியில்லை போல தம்பி என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டு
எனக்கு இவள் மேல் ஆசையும் மோகமும் வரவில்லையா காதல் அந்த வார்த்தை எங்களுக்குள் வருமா அப்போது எங்களுக்கு இருப்பது என்ன அன்பா இல்லை கணவன் மனைவி என்ற உறவின் கட்டாயமா
என்னென்னவோ யோசனைகள் எல்லாம் அவளை பார்த்த படியே
 
 
 
அவனுக்கு மனதில் அந்த நிலம் வேறு உதைத்துக் கொண்டே இருந்தது. பின்னே பத்து நாட்களாக இவன் முறுக்கி திரிய, இன்னும் நிலத்தில் போய் என்ன என்னென்ன செய்ய வேணும் , ஆட்கள் தனியாய் நியமிக்க வேண்டும் , தினக் கூலி வேண்டாம் மாத சம்பளம் சொல்வோமா என பல யோசனைகள்
இங்கானால் அவர்கள் பக்கம் இருக்கிறார்கள் அது தனியாய் ஒரு இடத்தில இருக்கிறது. அதற்கு பாதுக்கப்பு செய்ய வேண்டும் அதையும் விட அதன் விளைச்சலையும் பார்க்க வேண்டும்   
  இன்னும் சுந்தரிக்கு அந்த யோசனைகள் இருந்த மாதிரி தெரியவில்லை
அவனுக்கு எங்கே தெரியும் அவளுக்கு கணவனை பற்றிய யோசனைகள் மட்டுமே என்று
 

Advertisement