Advertisement

புதிதாக இருக்கும் அவளின் உடையை அவளின் பேச்சை கிரகிக்க முற்பட்டான் கண்ணன். மனைவி கணவனாய் தன்னை தேடுகிறாளோ என்று சரியான பார்வையில் யோசிக்க ஆரம்பித்தான்.  
அதற்குள் உணவுண்ண சென்றவர்கள் வந்து விட, இவன் எழுந்து எல்லோரோடும் நின்று கொண்டான்
இவர்கள் முறையும் உடனே வந்து விட்டது ,
இன்னும் அவனுக்கு தெரியாது அந்த தோப்பு சுந்தரியின் பேரிலும் அவனின் பேரிலும் சேர்த்து வாங்கப் பட இருப்பது
இது சுந்தரியின் ஏற்பாடே மாமனாரிடம் தனியாய் பேசியிருந்தால் கண்ணனிடம் சொல்ல வேண்டாம் என்றும் சொல்லியிருந்தால், சொன்னால் வேண்டாம் என்று சொல்லுவார், அதனால் பத்திரம் பதியும் போது சொல்லிக் கொள்ளலாம் என
அவளுக்கு மனதிற்கு தெரியும் கண்ணன் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பான் மறுப்பான் சண்டை பிடிப்பான் என்று
என்ன என்று அவனையும் மீறி குரல் மிக சத்தமாய் வெளி வந்து விட்டது
சுற்றம் இருந்த எல்லோரும் பார்த்தனர்
பின்பு குரலை சற்று குறைத்தவன் ஆனாலும் சீறினான் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க யார் முடிவு இது யாரை கேட்டு செய்யறீங்க என்று அடிக் குரலில் சீறினான்.
நிலம் கொடுக்க வந்தவர்கள் என்னவோ என்று பார்த்தனர்
சந்திரன் தர்ம சங்கடமாய்  சுந்தரியை பார்த்தார்
என்னோட முடிவு இது என்றாள் தெளிவாய்
எனக்கு பிடிக்கலை எனக்கு தேவையில்லை என்றான் கடினமான குரலில்
நாம அப்புறம் பேசிக்கலாம் உங்களுக்கு தேவையில்லைனா நீங்க எனக்கு அப்புறம் கூட மாத்திக் குடுக்கலாம் இன்னும் ரெண்டு நாள்ல அவங்க அமெரிக்கா போறாங்க அதனால இப்போ பத்திரம் பதிஞ்சிடுவோம் என்றாள் இலகுவாக
இல்லை நம்ம ரெண்டு பேர் பேர்ல இருக்கட்டும் நீங்க ஒத்துக்கணும் இப்படி எதுவும் சொல்லவில்லை
எப்போதும் எல்லோர் முன்னும் காட்சி பொருள் ஆகா விரும்பாதவன் இன்று எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை ‘
அதையும் விட சுந்தரியின் அலட்டாத முகம் அவனை கொதி நிலைக்கு கொண்டு சென்றது
என்னால முடியாது எனக்கு வேண்டாம் என்று அவன் கிளம்ப எத்தனிக்க
நாம தான் பேசிக்கலாம்னு சொல்றேனே என்று அவள் சொல்ல
அதற்குள் அவர்களுக்கு அழைப்பு வர
நீங்க போங்க என்று விற்பவர்களை பார்த்து சொன்னவள் அவர்கள் உள்ளே நகர துவங்கியது வாங்க ப்ளீஸ் என்று அவனின் கைபிடித்து அழைக்க
அவளின் கையை அடுத்த நொடி உதறினான்
அவளவு தான் சுந்தரிக்கு மனம் ஏகமாய் சுணங்கி போனது
அப்போ நான் வேற நீங்க வேற நீங்க எப்போன்னாலும் என்னை விட்டுட்டு போய்டுவீங்க அது தான் வேண்டாம்னு சொல்றீங்க அப்படி தானே என
நீ போ போ ன்னு சொன்னாலும் சூடு சொரணை இல்லாம உன் வீட்ல உட்கார்ந்து இருக்கேன் தானே அதான் இந்த பேச்சு பேசற நீ
இதோ பத்து நாள் ஆகிற்று சுந்தரியிடம் எதற்கும் பேசுவதில்லை உன் பேரில் மாற்றிக் கொள் முழுவதுமாய் அப்போது தான் உன்னிடம் பேசுவேன் என்று சொல்ல
சுந்தரி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை
எல்லாம் விட்டு தனக்காக இப்போது தங்களிடம் வந்திருக்கிறான் இன்னும் எதுவும் சரி வரவில்லை அவளாய் சென்று பணம் கொடுப்பது அவளுக்கு பிடித்தமில்லை
அது இருவருக்குள்ளும் சரி வராது என்று தெரியும்
அதனால் தான் இந்த ஏற்பாடு முழுவதும் அவன் பேரில் தான் வாங்க நினைத்தால் கோபத்தில் அவளை விட்டு மீண்டும் சென்று விட்டாள் அந்த பயத்தில் தான் இருவர் பேரிலும் வாங்கினால் அதில் வருவதை அவன் அப்படியே எடுத்துக் கொள்ளட்டும் என்று
எப்படியாவது வாழ்க்கையை சரி யாக்கி கொள்ள நினைத்தால் ஆனால் அது மீண்டும் சிக்கல் தான் ஆகியது
கண்ணனின் கோபம் அவன் பேரில் வாங்கியதை விட அவனுக்கு பிடிக்காது ஒத்துக் கொள்ள மாட்டான் என்று தெரிந்தும் ஸ்திரமாய் வாங்கியது தான்
இவள் வீட்டிற்கு வந்து விட்டாள் நான் என்ன இவளின் அடிமையா இவள் சொன்னாள் செய்ய வேண்டுமா எனக்கு இது வேண்டாம் இவள் மாற்றினால் தான் மேற்கொண்டு இவளோடு பேச்சு
சொத்துக்காக என் அப்பா இவளை எனக்கு திருமணம் செய்து வைத்திருக்கலாம் ஆனால் நான் சொத்துக்காக செய்யவில்லை அதற்காக போகவுமில்லை இப்போது திரும்ப வரவுமில்லை
என் உணர்வுகளுக்கு ஒரு மதிப்புமில்லையா – பத்து நாளாகியும் இன்னுமே அவன் மனம் அடங்கவே இல்லை – அடங்க மறுத்தது.
என்ன இவள் விலை கொடுத்து என்னை வாங்குகிறாளா , என்ன திமிர்  

Advertisement